Wednesday, December 13, 2023

திருவொற்றியூர் அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் ஆலயம்.*


*சென்னை மாவட்டம் தமிழ்நாடு திருவொற்றியூர் அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் ஆலயம்.*
*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

ஆதிபுரீஸ்வரர்

*தீர்த்தம்:*

பிரம்மதீர்த்தம்

*பழமை:*

1000-2000 வருடங்களுக்கு முன்

*புராண பெயர்:*

ஆதிபுரி

*ஊர்:*

திருவொற்றியூர்

*மாவட்டம்:*

சென்னை

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை.*

*தல சிறப்பு:*

*இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். பட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில்,திருவொற்றியூர் - 600 019,சென்னை மாவட்டம்.*

*பொது தகவல்:*

*இத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருத்தலங்கள்:*

*அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில், அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்.*

*பிரார்த்தனை:*

*இத்தலத்தில் 27 நட்சத்திரங்களும் சிவபெருமானை வழிபட்டன. அந்த நட்சத்திரங்களை லிங்கங்களாக மாற சிவன் அருள்பாலித்தார்.*

*அந்தந்த நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் லிங்கத்தை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.*

*நேர்த்திக்கடன்:*

*சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.*

*தலபெருமை:*

*வரிவிலக்கு:மாந்தாதான் என்ற மன்னனுக்கு அதிக வயதாகிவிட்டது. ஆனாலும் இறப்பு வரவில்லை. பாவம் செய்தாவது இறந்துபோவோம் என கருதினான். அவனது ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் அநியாய வரி விதித்தான். இது சம்பந்தமான ஓலை சிற்றரசர்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த ஓலையில் யாரும் அறியாமல், ""ஒற்றியூர் நீங்கலாக'' என திருத்தி எழுதினார் சிவன். இதன் பிறகு அந்த மன்னன் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு வரியை விலக்கினான். நீண்டகாலம் பூமியில் வாழ்ந்தான். எந்தச்சூழ்நிலையிலும் விரக்தி அடையக்கூடாது என்பதை இத்தலம் காட்டுகிறது.*

*திருவொற்றியூர் கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான பிரம்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை தலையில் தெளித்தாலே பாவங்கள் நீங்கிவிடும். பாவ மன்னிப்பு கேட்காமலேயே பாவங்களை தீர்க்கும் தலம் திருவொற்றியூர்.*

*இவ்வூரில் உள்ள கற்கள் அனைத்தும் லிங்கங்கள் என்றும், சிதறிக்கிடக்கும் மண் திருநீறு என்றும் சொல்லப்படுகிறது. பட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார். இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். மாசி மக திருவிழாவின் பத்தாம் நாளில் இந்த சன்னதியில் 18 வகை நடனகாட்சி நடக்கிறது.*

*தல வரலாறு:*

*வைகுண்டத்தில்எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்த பிரம்மன் உலகைப் படைக்க துவங்கினார். அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒருநகரம் அமைந்திருந்தது. ""நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார்? எனக்கும் மேலே ஒருவரா? யார் அவர்'' என்று பரந்தாமனிடம் கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு, ""அந்நகரை ஆதிபகவானான சிவன் உருவாக்கினார். அவர் ஆதிபுரீஸ்வரர் எனப்படுவார். அந்நகரத்தின் பெயர் ஆதிபுரி. திருவொற்றியூர் என்றும் அது அழைக்கப்படும். அந்நகருக்கு சென்று ஆதிபுரீஸ்வரரை வணங்கிவிட்டு, படைக்கும் தொழிலை தொடர்வாயாக'' என்றார் பெருமாள்.பிரம்மனும் திருவொற்றியூர் வந்து சிவனை வழிபட்டார்.*

*உலகை பிரம்மன் படைப்பதற்கு வசதியாக ஆழி சூழ்ந்த கடல் நீரை "ஒத்தி' (விலகி) இருக்க சிவன் உத்தரவிட்டார். எனவே இவ்வூர் "ஒத்தியூர்' எனப்பட்டது. காலப்போக்கில் "ஒற்றியூர்' என மாறியது.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். பட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார்.*

*அமைவிடம்:*

*சென்னை பாரிமுனை, திருவான்மியூர், எழும்பூர், சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களிலிருந்து திருவொற்றியூருக்கு அடிக்கடி பஸ்கள் உண்டு. சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மின்சார ரயிலிலும் திருவொற்றியூருக்கு செல்லலாம்.*

*அருகிலுள்ள ரயில் நிலையம்:*

சென்னை

*அருகிலுள்ள விமான நிலையம்:*

சென்னை

*தங்கும் வசதி:*

சென்னை

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ள கனகசபாபதி சுந்தரேசுவரர்....

*கனகசபாபதி* கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ளது கனகசபாபதி திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகிலுள்ள கரிசூழ்ந்தமங்கலத்தில் அமைந்துள்ளது கனக...