Showing posts with label # angalamman #muthanam Palayam# melmalayanur #Tirupur Tamil Nadu# Hindu# India. Show all posts
Showing posts with label # angalamman #muthanam Palayam# melmalayanur #Tirupur Tamil Nadu# Hindu# India. Show all posts

Thursday, October 26, 2023

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம், திருப்பூர்...!

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், முத்தனம் பாளையம், திருப்பூர்...!
அங்காளம்மனின் அவதார ஸ்தலமான மேல்மலையனூரி ல் அம்மனுக்கு முன்புறம் பிரம்மாண்டமான புற்று அமைந்துள்ளது. அதே போல் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் மூலவருக்கு வலது பக்கம் சுயம்புவாக புற்று அமைந்துள்ளது.

அங்காளம்மன் பெயர்க்காரணம்: 

அங்காளம் என்ற சொல்லுக்கு இணைதல் என்று பொருள். இணைதல் என்பதை இருவகைகளில் எடுத்துக்கொள்ளலாம்.

வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவபெருமானிடம் இரண்டு வரங்கள் பெற்றான். ஏழு பிறவி எடுத்து முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும். 

எந்த ஆயுதமும் தன்னை கொல்லக்கூடாது என்பவையே அந்த வரங்கள். இதனால் தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் சர்வாதிகார ஆட்சி செலுத்தினான். 

அது மட்டுமல்ல. வரம் தந்த சிவனையே மறந்து விட்டான். தேவர்களை துன்பப்படுத்தினான். இத்தனை வரங்கள் பெற்றிருந்தாலும் ஒரே ஒரு வரம் மட்டும் அவனுக்கு கிடைக்கவில்லை. அது தான் குழந்தை வரம். 108 பெண்களை மணந்தான். ஆனாலும் பலனில்லை.

குழந்தையில்லாத அவன் மேலும் நெறி கெட்டு திரிந்தான். வல்லாள கண்டனின் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார். 

பார்வதி தேவியை அழைத்து, நீ முதல் பிறவியில் மீனாட்சியாகவும், அடுத்த பிறவியில் காமாட்சியாகவும், மூன்றாவது பிறவியில் விசாலாட்சியாகவும், நான்காவது பிறவியில் காந்திமதியாகவும், 
ஐந்தாம் பிறவியில் மாரியம்மனாகவும், ஆறாவது பிறவியில் காளியாகவும் உருவெடுக்க வேண்டும். ஏழாவது பிறவி பற்றி நான் பிறகு சொல்வேன் என்றார். அதன் படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள்பாலித்தாள்.

காளியாக உருவெடுத்த போது, சிவனையும் மிஞ்சிய சக்தியாக எண்ணி, அவரை நடனப்போட்டிக்கு அழைத்தாள். ஆனால், அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள். அதன் காரணமாக வெட்கம் தாளாமல் தன்னையே எரித்து கொண்டாள். 

அவளது அங்கம் வெந்தது. இப்போதும் யாராவது இறந்து விட்டால், அங்கம் கரைத்தாயிற்றா? எனக் கேட்பது உண்டு. அங்கம் என்றால் சாம்பல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன். 

அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கமாகிய சாம்பலிலிருந்து அவள் பிறந்ததால் அங்காளம்மன் எனப்பட்டாள். இறந்த உடலை ஒன்றிணைத்து பிறந்தவளே அங்காளம்மன். பக்தர்கள் இறைவனுடன் மனம் ஒன்ற வேண்டும். அவருடன் தன்னை இணைத்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலும் தேவிக்கு அங்காளம்மன் என்ற பெயர் ஏற்பட்டது.

அங்காளம்மனின் அற்புதங்கள் : 

மருதுரையான் வலசு என்ற ஊரைச்சேர்ந்தவர் கமலக்கிரிப்புலவர். அவர் நோய்வாய்ப்பட்டு அங்காளம்மன் கோயிலுக்கு வந்து நோய் நீங்கப்பெற்றார். அம்மன் மீது பாமாலை தொடுத்தார்

அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி சிவராத்திரியன்று சிவராத்திரி விழா விமரிசையாக நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னையின் பொன்னடியில் சரணடைய குவிகிறார்கள்.

இந்நாளில் வெற்றிலை பாக்கு பிடித்தல், முகம் எடுத்து ஆடுதல், மயான ருத்ரி பூஜை நடத்துதல், மாப்பிள்ளை அழைப்பு, நந்தி தேவன் அழைப்பு, அலகு தரிசனம், ஆகிய சடங்குகள் நடத்தப்படும். 

வெற்றிலை பிடித்தல் என்ற சடங்கிற்கு நிச்சய தாம்பூலம் என்றும் பெயர். பார்வதி தேவியான இளவரசிக்கும், கைலாய மலையின் பேரரசர் சிவபெருமானுக்கும் நிச்சயதார்த்த விழா நடத்தப்படுகிறது.

இதன்பிறகு மூன்று முறங்களில் பச்சை மாவால் செய்யப்பட்ட வல்லாள கண்டனின் கோட்டை காவலாளிகளான காளி, கூளி, திமிறி ஆகிய தெய்வங்களின் முகங்களை அமைப்பார்கள். 

அதை எடுத்து ஆடுவார்கள். வல்லாள கண்டனிடம் அங்காளம்மன் போர் புரிந்த போது நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வல்லாள கண்டனின் படைகளை எதிர்த்து அம்மனும் அவளது படைகளும் போர் செய்ததை நினைவு படுத்தும் வகையில், அம்மனை பல்லக்கில் வைத்து வீரத்துடன் விளையாடுவார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு அம்மனை பல்லக்கில் வைத்து ஆடுதல் எனப்பெயர். சிவராத்திரியன்று இரவில் மயானருத்ரி பூஜை நடத்தப்படும். 

வல்லாள கண்டனை அம்பாள் சம்ஹhரம் செய்யும் நிகழ்ச்சி இது. மண்ணால் செய்யப்பட்ட ருத்ரியின் உருவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும்.

அங்காளம்மனின் மற்றொரு பெயர் காளராத்திரி. வல்லாளனை அழிக்கும் முன்பு மூன்றாம் ஜாமத்தில் அம்பாள் சிவபூஜை செய்தாள். அதை நினைவு படுத்தும் விதத்தில் மயான ருத்ரி பூஜை நடத்தப்படுகிறது.

இந்த பூஜைக்கு பிறகு அம்மன் வெற்றிக்கோலத்தில் திகழ்வார். பூஜாரிகள் குளித்து விட்டு சிவபெருமானை திருமணத்திற்கு அழைத்து வருவார்கள். 

இது மாப்பிள்ளை அழைப்பு எனப்படும். பின்னர் நந்தி தேவரை திருமணத்திற்கு அழைக்கும் சடங்கு நடக்கும். தம்பதி சமேதராக பக்த கோடிகளுக்கு சிவனும் பார்வதியும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியை அழகு தரிசனம் என்பர்.

ஓம் சக்தி 🙏

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...