Showing posts with label #Bell sound #manyavasai #Hindu temples #Tamilnadu #India. Show all posts
Showing posts with label #Bell sound #manyavasai #Hindu temples #Tamilnadu #India. Show all posts

Wednesday, October 9, 2024

மணியோசை யும் தெய்வ வழிபாடும்...

துர் தேவதைகளை விரட்ட, வீட்டில் பூஜை செய்யும் போது அவசியம் மணியோசை இருக்கவேண்டும், அந்த மணிக்கும் தனி பூஜை செய்யவேண்டும்.

மணி அடித்து பூஜை செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த ஓன்று ..
அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன ! 

பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டில் எதாவது துர் தேவதைகள் போன்றவை இருந்தால் அது வெளியே ஓடிவிடும்.

துர்தேவதை, போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; 
அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.

ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும்ஒருவேளை வந்து விடலாம். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், 
அவை இருக்குமிடத்தில் தெய்வங்கள் வரமாட்டார்கள்!

தினமும் பூஜா மணி அடிப்பதால் அந்த மணி துர் சக்திகளை முற்றிலுமாக விரட்டியடிப்பதோடு மட்டுமில்லாமல், தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். 

பூஜையின்போது, இறைவனுக்கு படையல் போடுவதை நைவேத்யம், நிவேதனம் என்று சொல்வர். நிவேதனம் என்ற சொல்லுக்கு அறிவித்தல் என்று பொருள். அந்த அறிவிப்பை நமக்கு வெளிப்படுத்துவதே மணியாகும்.

கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். அப்படி கோயில்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் கிராமத்தை விட்டு ஓடி விடும்.

இத்தகைய சிறப்பு மிக்க அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன !

இந்த பூஜா மணியின் அதிதேவதை வாசுதேவர் ! மணியின் நாக்குக்கு அதிதேவதை சரஸ்வதி !

அடித்தல் அல்லது ஒலித்தலுக்கு அதிதேவதை சூரியன் ! நாதத்துக்கு அதிதேவதை ஈஸ்வரன் !

எனவே , மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்

பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் நோக்கம் என்ன?

வழிபாடு நடக்கும் இடத்தில் துஷ்டசக்திகள் அண்டக்கூடாது என்பதற்காகவே பூஜை மணியை பயன்படுத்துகிறோம்.

சிவனுக்குரிய வாகனம் நந்தி. கைலாயத்தின் பாதுகாவலராக இருப்பவர் இவர். சிவபூஜை நடக்கும் இடத்தை நந்திதேவர் பாதுகாப்பதாக ஐதீகம். விஷ்ணு கோயில்களில் பூஜை மணியில் சக்கரத்தாழ்வார் இடம் பெற்றிருப்பார்.

காண்டா மணி பூஜைக்கான மந்திரம்:

ஆகமார்த்தம் து தேவாநாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம் 
காண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ் வானலாஞ்ச நம:

உள்ளத்தில் தூய்மையான உணர்வு எழுவதற்கும், தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன் என்பதே அப்போது சொல்லும் ஸ்லோகத்தின் பொருள்.

மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு,
அந்த இடம் முழுவதும் நல்ல சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம். 

ஓம் நமசிவாய 
படித்து
பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Followers

வியாக்ரபுரீஸ்வரர் திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,  திருப்பெரும்புலியூர்,  தஞ்சாவூர் மாவட்டம்-613204 *மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர் *இறைவி:...