Showing posts with label # sivan #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label # sivan #hindu #india #tamilnadu. Show all posts

Thursday, July 6, 2023

_சிவபெருமானின் வாகனமான நந்திதேவர் என்ற நந்திகேஸ்வரர் வரலாறு_

_சிவபெருமானின் வாகனமான நந்திதேவர் என்ற நந்திகேஸ்வரர் வரலாறு_


சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திரு நந்திதேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் நோக்கி நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார்.

சிவபெருமான் தங்குமிடமான கயிலை மலை நுழைவாயிலை பாதுகாக்கும் தெய்வம் ஆகும். இவர் வழக்கமாக ஒரு காளையாக சித்தரிக்கப்படுகிறார். இவர் சிவனுக்கு ஏற்ற வாகனமாகவும் கருதப்படுகிறார். சைவ சித்தாந்த மரபின் படி, நந்திநாத சம்பிரதாயத்தின் எட்டு சீடர்களின் பிரதான குருவாக நந்தி தேவர் கருதப்படுகிறார்; அதாவது சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி, மற்றும் சிவயோகா முனி ஆகிய எட்டு சீடர்களும் சைவ சமயத்தை பரப்புவதற்கு எட்டு வெவ்வேறு திசைகளில் அனுப்பப்பட்டனர்.

 ஏறக்குறைய அனைத்து சிவாலயங்களிலும், சிவன் சன்னதிக்கு முன்பு நந்தியின் சிலை இருக்கும். நந்தி வழிபாடு பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது.
நந்தி ஷிலாதா முனிவரின் மகன். சிவபெருமான் மீது கடும் தவம் செய்து நந்தியை தனது மகனாகப் பெற்றார் ஷிலாதா. சிவபெருமானின் அருளால், ஷிலாதா செய்த யாகத்தில் நந்தி பிறந்தார். நந்தி சிவபெருமானின் தீவிர பக்தர் மற்றும் அவர் கடுமையான தவம் செய்தார், மேலும் அவரது மலை மற்றும் கைலாசத்தின் தெய்வீக வாயில் காவலராக ஆனார்.

நந்தியின் நிறம் வெள்ளை, வெண்மை என்பது தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் தர்மமும் நிறைந்தது.

ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப...’ என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. ‘சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும், சிறப்பு மிகு பெருமையும் கொண்டது என்பது இதன் பொருளாகும்.

செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து
நம் பவமறுத்த நந்திவானவர்”
எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தான் என்பது தெளிவாகின்றது.

சிவபெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவர் மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

சிவபெருமான் நாட்டியக் கலையை பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க.. அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்கு கற்றுக் கொடுத்ததாக அபிநய தர்ப்பணம் என்ற பரத நாட்டிய நூல் கூறுகிறது.

திருமூலருக்கு குருவாக இருந்த நந்தி பெருமான்தான், ஒன்பது வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவபெருமானின் வாகனமும் கொடியும் ரிஷபமே (காளை). தர்மதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறினாள். அவ்வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் – ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால், நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார்.

சிவாலயங்களில் உள்ள நந்தி மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தி யுள்ளதை நாம் காண முடியும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவபெருமானின் ஆணைக்கேற்பவே அவ்வாறு உள்ளது.

சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.

சிவபெருமான் நந்தி புராணத்தில் நானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதற்கு சமமானது ஆகும்.

சிவன் கோயில்களில் உள்ள ஐந்து நந்திகள்:

சிவன் கோயில்களில் சிவ ஆகமங்களின் அடிப்படையில் ஐந்து நந்திகளும் இடம்பெற்றிருக்கின்றன.

அவை பின்வருமாறு...

#கைலாய_நந்தி: 

இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே இருப்பார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாய நந்தி என்ற பெயர்.

அவதார நந்தி: 

அவதார நந்தி என்பது சிவாலயங்களில் கைலாய நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமாலே நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

அதிகார நந்தி: 

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக காணலாம். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

சாதாரண நந்தி: 

சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருக்கும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.

மஹா (பெரிய) நந்தி: 

பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் விஸ்வரூபத்தில் எந்நேரத்திலும் காவலனாக இந்த நந்தி இருப்பார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

புராண வரலாறு:

சிவன் மற்றும் நந்தியின் வழிபாட்டை சிந்து பள்ளத்தாக்கு நாகரிக காலத்தில் கூட காணமுடிகிறது. இங்கு புகழ்பெற்ற 'பசுபதி நாதர்' அமர்ந்திருக்கும் உருவ முத்திரை உள்ளது. இது பொதுவாக சிவன் என்று அடையாளம் காணப்படுகிறது. மேலும் மொகெஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவில் பல காளை முத்திரைகள் காணப்பட்டன. இதனால் நந்தி வழிபாடு பல ஆயிரம் ஆண்டுகள்
 நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்களின் முடிவுக்கு வழிவகுத்தது.

நந்தி ஷிலதா முனிவரின் மகன் என்று வருணிக்கப்படுகிறார். ஷிலாதா ஒரு வரம் பெற கடுமையான தவத்திற்கு உள்ளானார். அதனால், அழியாத மற்றும் சிவபெருமானின் ஆசீர்வாதம் கொண்ட ஒரு குழந்தை நந்தியை அவரது மகனாகப் பெற்றார். நந்தி, ஷிலதா செய்த வேள்வி மூலமாகவும் தோன்றினார் என்றும் கருதப்படுகிறது. அவர் பிறந்த போது அவரது உடலில், வைரங்களால் செய்யப்பட்ட கவசத்தை அணிந்திருந்தார் என்ற கருத்து நிலவுகிறது.
நந்தி தேவர், சிவபெருமானின் தீவிர பக்தராக வளர்ந்தார். அவர் கடுமையாக தவம் செய்து, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள திரிப்பூர் தீர்த்த க்ஷேத்ரா அருகே நர்மதா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இன்றைய நந்திகேஸ்வர் கோவிலில் நுழைவாயில் காவலராகவும், சிவ பெருமானின் முக்கிய சீடராகவும் இருக்கும்படியான நிலையை அடைந்தார் என்பது வரலாறாக உள்ளது.

சிவன் கற்பித்த அகமிக் மற்றும் தாந்த்ரீக ஞானத்தின் தெய்வீக அறிவை பார்வதி தெய்வத்திடமிருந்து நந்தி பெற்றார். நந்திநாத சம்பிரதாயத்தின் முன்னோடிகளாக அடையாளம் காணப்பட்ட தனது எட்டு சீடர்களுக்கு அந்த தெய்வீக அறிவை அவர் கற்பித்தார். அவர்கள் சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி, மற்றும் சிவயோக முனி போன்றோர் ஆவார்கள். இந்த அறிவைப் பரப்புவதற்காக இந்த எட்டு சீடர்களும் நந்தி தேவரால், உலகின் எட்டு வெவ்வேறு திசைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

#பிரதோஷம்:

பிரதோஷ கால நேரங்களில், சிவபெருமான், நந்தியின் தலை மத்தியில் நடனம் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். எனவே நந்திக்கு விசேட பூசைகளும் திருமுழுக்கு வழிபாடுகள் நடைபெறும்.

#அதிகார_நந்தி:

நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. சிவன் ஆலகால விடத்தினை அருந்தி விட்டு உமையாளின் மடியில் மயங்கியிருக்கும் வேளையில், அதிகார நந்தி மற்றோரை உள்ளே விடாமல் தடுத்தார்.

அதிகார நந்தியும் கருடரும்
தொகு
கயிலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக, விஷ்ணு, கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று விஷ்ணு சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய விஷ்ணு திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.

தன்னைக் காக்க விஷ்ணுவை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த விஷ்ணு, சிவனிடம் வேண்ட, நந்தியிடம், கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார் என்பது வரலாறாக உள்ளது.

ஐந்து மிகப்பெரிய நந்திகள்:

பல பெருமைகளை உடைய நந்திதேவருக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் உள்ளன.

இந்தியாவில், புகழ்பெற்ற நந்திகள் ஏராளம் குறிப்பாக, தென்னிந்தியாவில் நந்திகள் அமைந்துள்ள கோயில்கள் நிறைய உண்டு. சிவபெருமான் ஆலயங்கள் என்றாலே சிறிய அளவிலான நந்தியாவது அமைந்திருக்கும்.

இந்தியாவில் உள்ள ஐந்து மிகப்பெரிய நந்தி சிலைகள்

1. பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.

2. வீரபத்ரர் கோயில், லேபாக்ஷி.

ஆந்திரப்பிரதேச மாநிலம் லேபாக்ஷியில் விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயத்தில் இந்த நந்தி சிலை அமைந்திருக்கிறது. இந்த நந்திதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தி சிலையாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் நந்தியாகவும் இது அறியப்படுகிறது. இச்சிலை 15 அடி உயரமும், 27 அடி நீளமும் கொண்டது.

3. சாமுண்டி மலை, மைசூர்

மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் 1664-ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய நந்தி நிர்மாணிக்கப்பட்டது. இது 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்டது.

4. பசவனகுடி பெங்களூர்

பெங்களூரின் தென்பகுதியில் உள்ள பசவனகுடியில் இந்த நந்தி சிலை அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் இருக்கும் நந்தி சிலை 15 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்டது.

5.ஹோய்சாலேஸ்வரர் கோவில்

ஹலேபீடு ஹோய்சாலேஸ்வரர் கோவில் 12-ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நின்று போனது. இந்தக் கோயிலில் 14 அடி உயரம் கொண்ட இரண்டு ஒற்றைக்கல் நந்தி சிலைகள் காணப்படுகின்றன.

நந்தி_பற்றிய சில தகவல்கள்:

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.
ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
தமிழ்நாடு மக்களுக்கு நந்தி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
மதுரை ஆவணி மூல வீதியில் “மாக்காளை” எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை “நந்திமுக தரிசனம்” என்கிறார்கள்.
மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும்.
கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு நான்கு மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.
திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக’ என்று பிரார்த்திக்க வேண்டும்.
நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
தர்மம் இறைவனைத் தாங்குகிறது. அது விடும் மூச்சுக் காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து கும்பிடுவதும் கூடாது என்று சொல்லப்படுகிறது.

சிவ தரிசனத்திற்காக விலகிய நந்திகள்:

நந்தனாருக்காக விலகிய நந்தி - திருப்புன்கூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலில் நந்தனாரை அந்தக் காலத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால் அவர் கோவிலுக்கு வெளியே இருந்து சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். நந்தனார் சிவபெருமானை வேண்டிட, தாம் இருந்த இடத்திலிருந்து சற்று விலகி அமர்ந்தாராம் நந்திகேஸ்வரன். இந்தத் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி, சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம்.

ஞானசம்பந்தருக்காக விலகியிருக்கும் நந்திகள் - பட்டீஸ்வரம், திருப்பூந்துருத்தி சிவாலயங்களில் ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் நந்தி சற்று நகர்ந்தே இருக்கும்.

நந்திகேஸ்வரரின் 
வேறு பெயர்கள்: 

ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், நந்தீசர், நந்தீஸ்வரர், நந்தியெம் பெருமான் என பல்வேறு பெயர்கள் உண்டு.

நந்தியை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:

மூன்று முறை பிரதட்சணம் செய்தால் - இஷ்டசித்தி
ஐந்து முறை பிரதட்சணம் செய்தால் - ஜெயம்
ஏழு முறை பிரதட்சணம் செய்தால் - சற்குணங்கள்
ஒன்பது முறை பிரதட்சணம் செய்தால் - புத்திரப் பிராப்தம்
பதினோரு முறை பிரதட்சணம் செய்தால் - ஆயுள் விருத்தி
பதிமூன்று முறை பிரதட்சணம் செய்தால் - பிரார்த்தனை சித்தி
பதினைந்து முறை பிரதட்சணம் செய்தால் - தனப்பிராப்தி
பதினேழு முறை பிரதட்சணம் செய்தால் - தன விருத்தி
நூற்றெட்டு முறை பிரதட்சணம் செய்தால் - அஸ்வமேதயாக பலன்

நந்தி காயத்ரி மந்திரம்:

ஓம் தத் புருஷாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி ப்ரசோதயாத்

பொருள்:
பரம புருஷனாகிய நந்தி பெருமானே. உங்களை நித்தமும் வணங்குவதன் பலனாக என்னை காத்து என் மனதை தூய்மை படுத்த வேண்டுகிறேன்.

நந்திகேஸ்வரர் துதி:

நந்திஎம் பெருமான் தன்னை நாள் தோறும் வழிப்பட்டால்
புந்தியில் ஞானம் சேரும் புகழ் கல்வி தேடிவரும்
இவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு!
அவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு!
முற்பிறவி வினைகள்யாவும் தீயிட்ட மெழுகாகும்
நந்தியின் பார்வை பட நலங்கள்உடன் கிட்டும்!
ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்
நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே!

நந்தி பகவானை வணங்குவதால் நமது மனதில் இருக்கும் தீமையானவை அனைத்தும் நீங்கி, உங்களின் கோரிக்கைகள், நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற அருள்புரிவார். சிவபெருமானின் பரிபூரண அருளை பெறலாம். அதோடு வாழ்வில் எப்போதும் ஆனந்தம் நிலைத்திருக்கும், குருவின் ஆசி கிடைக்கும் மேலும் மனமானது அமைதிகொள்ளும்.

நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலையை சாற்றி, அரிசிமாவில் வெல்லம் கலந்து நைவேத்தியம் செய்து வழிபட்டால் நோய்கள் மற்றும் வறுமை நீங்கும். பிள்ளை பேரில்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். வேலைவாய்ப்பு தேடுபவர்கள் தங்களுக்கு விருப்பமான வேலைகள் பெறுவார்கள்.

கோயில்களில் நந்தியை தரிசிக்காமல் சிவபெருமானை தரிசிக்க முடியாது. ஆனால் நந்தியை மட்டுமே தரிசனம் செய்தால் கூட சிவபெருமானை தரிசித்த முழுபலனும் கிட்டும். அதேபோல பரமேஸ்வரனிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திகேஸ்வரரிடம் வைத்தால் போதும். அவர் அதை சிவபெருமானிடம் சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

நந்திகேசுவரனே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் நமசிவாய 🙏

Monday, March 13, 2023

#தென்னாடுடைய #சிவனே_போற்றி #என்பதன்_அர்த்தம்_என்ன?

#தென்னாடுடைய 
#சிவனே_போற்றி 
#என்பதன்_அர்த்தம்_என்ன? 
நவகிரகத்தில் உள்ள குரு வடக்கு நோக்கியும்,  குரு தட்ஷணாமூர்த்தி தெற்கு நோக்கியும் அமைக்கப்பட்டிருப்பது ஏன்?

தென் தமிழும், வடஆரியமும் ஆகிய இரு மொழிகளே தாய்மொழியாகவும், தந்தை மொழியாகவும் இருந்து கலந்து பல நூறு குழந்தை மொழிகளை பெற்றெடுத்தனர்.

அப்பர் பெருமான் "ஆரியம் தமிழோடு இசையானவன் "என்று பாடி இக்கூற்றை மெய்ப்பித்துள்ளார்.

பஞ்ச பூதங்களில் நிலமும்,  ஆகாயமும் வெளிப்புறத்தில் இருந்து நம்மை இயக்குகிறது.

மீதியுள்ள நெருப்பு, நீர், காற்று ஆகிய 3பூதங்களும் உள்ளிருந்து நம்மை இயக்குகிறது.

உள்ளிருந்து நம்மை இயக்கும் 3 பூதங்களை ஆண் தன்மை என்றும், வெளியிலிருந்து நம்மை இயக்கும் 2 பூதங்களை பெண்தன்மை என்றும் யோககலாச்சாரத்தில் குறிப்பிட்டனர்.

தமிழில் இதை 3சுழி "ண "என்றும், 2சுழி "ன "என்றும் குறித்துள்ளனர்.

இதை நம் உடலமைப்பில் நுரையீரலிலும், இதயத்திலும் தெள்ளத்தெளிவாக காணலாம்.அதாவது வலது நுரையீரலில் 3பிரிவுகளும் (ண), இடது நுரையீரலில் 2பிரிவுகளும் (ன) அமைந்துள்ளது. 

இதுவே அர்த்தநாரீ எனப்படுகிறது.இடப்புறம் பெண்தன்மையும், வலப்புறம் ஆண்தன்மையும் அமைந்துள்ளது.

பாகம் பெண்ணுரு ஆனாய்போற்றி என சிவனை பாடுவதும் இதன்காரணமாகவே பாடப்பட்டது.

நம் உடலில் இடவலமாக இவ்வாறு பெண் தன்மையும், ஆண்தன்மையும் அமைந்திருக்க மேல் கீழாக தலையிலிருந்து கண்டம் வரை ஆண்தன்மையும்(வடக்கு), கண்டத்திலிருந்து கீழ்பகுதியாகிய உடல் பகுதி பெண்தன்மையும் (தெற்க்கு -பிண்டம்) அமைந்திருக்கிறது.

எனவே நமக்கு உள்ளிருக்கும் நவகிரக குரு வடக்காகிய தலையை (அறிவு)  நோக்கி நம்மை வழிநடத்துகிறார்.

இந்த உள்குரு நன்றாக அமையப்பெற்றவர்களே பிறவிஞானியாகவும், குருவாகவும் வாழ்ந்து சீடர்களை வெளியிலிருந்து வழிநடத்தி அவர்களின் குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து, மேல் நோக்கி செலுத்தி ஞானமடைய உதவுகிறார்.

பொதுவாக வெளியிலிருக்கும் ஸ்தூலகுரு சீடர்களுடனேயே  வாழ்ந்து உடலுடன் (தெற்க்கு) இருந்து வழிநடத்துதுவதால் இவர் தெற்க்கு நோக்கி அமர்ந்திருக்கும் தஷிணாமூர்த்தியாக சித்தரிக்கப்படுகிறார்.

குருவே சிவம் என கூறினான் நந்தி என்ற திருமூலர் வாக்கிற்கிணங்க ஸ்தூல குரு தென்னாடுடைய சிவன் என போற்றப்படுகிறார்.

எந்நாட்டவர்க்கும் குரு இன்றியமையாத இறைவனாகையால் எந்நாட்டவர்க்கும் இறைவாபோற்றி என பாடப்படுகிறது.

- யோகி ஆடலரசன் வாகீசர் தசகாரிய வாசியோக சாகா கல்வி பயிற்சி மையம் மற்றும் அகில உலக சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம் திருக்கோவிலூர்.
செல் - 8675371212

Monday, February 13, 2023

🌹 சிவராத்திரி கதைகள்

🌹 சிவராத்திரி கதைகள்... 

🌻 காந்தன், மகா காந்தன்:
நந்திகேஸ்வரர் இன் வேலை ஆட்கள் காந்தன், மகா காந்தன்... சிவா பூஜைக்காக பூலோகம் சென்று கொன்றை மலர்களை பறித்து வர சொன்னார் நந்தி... பூலோகம் வந்த இருவரும் வேலையை மறந்து நந்தவன நிழலில் படுத்து உறங்கிவிட்டனர்...

நந்தி தேவருக்கு கோபம்... ஒருவனை வேடனாகும் படியும் இன்னொருவனை பூனையாகும் படியும் சாபமிட்டார்... இருவரும் உருமாற பூனையை வேடன் துரத்தினான்... பூனை அருகில் இருந்த சிவன் கோவிலுக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிக் கொண்டது... வேடனின் அம்பு சிவலிங்கம் மீது பட்டு ரத்தம் கொட்டியது...

பூனை அங்கிருந்து பயந்து ஓடிய வேகத்தில் கோவிலின் தீர்த்த குளத்தில் விழுந்தது... வேடனும் சிவலிங்கத்தின் மீது அம்பு எய்தோமே என்ற பயத்தில் தன் பாவம் தீர்க்க தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான்... இருவரும் மீண்டும் காந்தன், மகா காந்தனாக மாறினர்...

அன்றைய தினம் ஒரு சிவராத்திரி தினம்...

🌻 இறைவனுக்காக கட்டிய மனக்கோவில்

ஒரு ஏழை விவசாயி மனதிற்குள் எப்போதும் சிவனை வழிபடுவான்... ஒரு நாள் அவன் காட்டு வழியாக சென்று கொண்டு இருந்த பொது பலத்த மழை பெய்தது...ஒரு பாழடைந்த சிவன் கோவில் இருப்பதைக் கண்டு அங்கே சென்று ஒதுங்கியவன் இடியும் நிலையில் இருந்த கோவிலைக் கண்டு வருந்தினான்... நமக்கு வசதி இருந்தால் இந்த கோவிலை புதுப்பிக்கலாமே என்று நினைத்தவன் மனதில் கற்பனை விரிந்தது....

ராஜகோபுரங்கள், பிரகாரங்கள், மண்டபங்கள், மூல சந்நிதிகள் எல்லாம் அமைத்து கும்பாபிஷேகம் செய்து சிவபிரானுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதாக கற்பனை செய்து கொண்டு இருந்தான்....

திடீரென்று அங்கிருந்த புதரில் இருந்து கருநாகம் சீறியது.... அந்த விவசாயி பயந்து நடுங்கி கோவிலுக்கு வெளியே ஓடினான்... அதற்காகவே காத்திருந்தது போல அப்பாழடைந்த கோவில் தட தடவென்று இடிந்து விழுந்து தரை மட்டமானது...

தான் உயிர் பிழைத கதையை ஊராரிடம் சொன்னான்... அப்போது ஒரு பெரியவர்... அப்பா... இன்று சிவராத்திரி... நீ மானசீகமாக சிவனுக்கு கோவில் கட்டி வழிபட்டதால் பெரிய கண்டத்தில் இருந்து இறைவன் உன்னை காப்பாற்றி இருக்கிறார் என்று சொன்னார்.

🌻 பூஜை பூ...

சிந்து என்ற இடத்தை ஆண்ட குஞ்சரன் என்ற மன்னனிடம் ஒரு பிராமண உத்தியோகத்தர் இருந்தார். அவரது மகனின் பெயர் சுகுமாரன். அவன் பிரமண சாதியைச் சேராத ஒரு பெண்ணைத் திருமணம் செய்தது மட்டுமல்ல பிராமணியத்தையும் முற்றாகத் தலை மூழ்கிவிட்டான். ஒருநாள் அவன் தனது மனைவிக்கு ஒரு பூவை வழங்க எண்ணி அதனைப் பெறுவதற்காக சிவன் கோயிலுக்குப் போனான். அன்று மகாசிவராத்திரி. கோயிலில் அதற்குரிய சிறப்பு பூசை நடந்து கொண்டிருந்தது. பூ ஒன்றைப் பெறுவதற்காகக் கோயிலுக்குச் சென்ற சுகுமாரன் தவிர்க்க முடியாத நிலையில் அந்த விழாவில் கலந்து கொண்டான். அவ்வாறு நடந்து சில காலத்தின் பின்னர் அவன் இறந்த போது அவன் தனது சமயத்தையும் தர்மத்தையும் விட்டிருந்ததால் யமனின் தூதர்கள் நரகத்திலிருந்து அவனை அழைத்துச் செல்ல வந்திருந்தார்கள். அதே நேரம் சிவனது தூதர்கள் அவனைக் கைலாசத்ததுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தனர். அவன் மனைவிக்குப் பூ பெறுவதற்காக கோயிலுக்குப் போய் சிவராத்திரியில் கலந்து கொண்ட காரணத்தால் சிவ தூதர்கள் யம தூதர்களை வென்று அவனை கைலாசத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Saturday, January 28, 2023

ஆரண்யேசுவரர் திருக்கோவில் கோபுரம்.இறைவன் - ஆரண்யேசுவரர்இறைவி - அகிலாண்டேஸ்வரி.ஊர் - திருக்காட்டுப்பள்ளிமாவட்டம் - நாகப்பட்டினம்.

ஆரண்யேசுவரர் திருக்கோவில் கோபுரம்.

இறைவன் - ஆரண்யேசுவரர்
இறைவி - அகிலாண்டேஸ்வரி.

ஊர் - திருக்காட்டுப்பள்ளி
மாவட்டம் - நாகப்பட்டினம்.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு 
காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 12 வது தலம் ஆகும். 

2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது ஆரண்யேஸ்வரர் கோயில். 

“ஆரண்ய” முனிவர் இங்கு வந்து சிவபெருமானை பூஜை செய்து வழிபட்டதால் அந்த முனிவரின் பெயராலேயே ஆரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகிறார் இங்குள்ள சிவபெருமான்.

இந்திரனின் சாபத்தை போக்கி, அவனுக்கு மீண்டும் தேவலோக பதவி கிடைக்கச் செய்த தலம் இத்தலம்.

இக்கோயில் பிரகாரத்தில் 
தச லிங்க சந்நிதி இருக்கிறது. இங்கு ஏழு லிங்கங்கள் இருக்கின்றன. 
மேலும் ஒரே லிங்கத்தில் இரண்டு நாண்கள் இருக்கும் லிங்கம் எங்கும் காணக்கிடைக்காத அம்சமாகும்.
இக்கோயிலில் சுவாமியே பிரதானம் என்பதால் இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது. இங்கு கோயில் கொண்டிருக்கும் “ராஜயோக தட்சிணாமூர்த்தி” வழக்கமான நான்கு சீடர்களுக்கு பதிலாக ஆறு சீடர்களுடன் இருப்பது ஒரு அதிசய அமைப்பாகும்.

அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் திருக்காட்டுப்பள்ளி என்கிற ஊரில் அமைந்துள்ளது. 
இந்த ஊருக்கு செல்ல சீர்காழி, நாகை நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

Thursday, January 12, 2023

ரசிவபெருமானுக்கு நாம் படைக்கும் நைவேத்திய பொருட்களால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-*

ரசிவபெருமானுக்கு நாம் படைக்கும் நைவேத்திய பொருட்களால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-*
1. தயிர் சாதம், நீர் மோர் - மூல பவுத்திரம், எலும்புருக்கி நோய் தீரும்.
2. பால், சர்க்கரைப் பொங்கல் - வயிற்று கோளாறு தீரும்.
3. தேன், திணை மாவு - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
4. தயிர் சாதம் - காரியத் தடை நீங்கும்.
5. எலுமிச்சை, தேங்காய் சாதம் - அடிவயிற்றில் இருந்து தொடை வரை உள்ள நோய்கள் தீரும்.
6. வெண்பொங்கல், கடலை, சுண்டல்-ஆஸ்துமா, மூச்சு சம்மந்தமான நோய் தீரும்.
7. பங்குனி மாத பிரதோஷத்தன்று தேங்காய் சாதம், தக்காளி சாதம்- மணக்கிலேசம், பித்தம், பைத்தியம் தீரும்.

சிவலிங்க வழிபாடும், பலன்களும்

தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம்
ஆற்றுமணல் லிங்கம் - மோட்சம்
வெண்ணெய் லிங்கம் - நல்வாழ்வு
அரிசிமாவு லிங்கம் - சிறப்புகள் சேரும்
அன்ன லிங்கம் - தீர்க்காயுள்
களிமண் லிங்கம் - மனச்சாந்தி
பசுஞ்சாண லிங்கம் - ஆரோக்கியம்

சிவபூஜைக்குரிய மலர்கள்- பலன்கள்

செந்தாமரை- தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி
* மனோரஞ்சிதம், பாரிஜாதம்-பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி
* வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி-மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.
* மாசிப்பச்சை, மரிக்கொழுந்து-நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.
* மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி-கடன் நீங்கும் கன்னியருக்கு திருமண பாக்கியம் ஏற்படும்.
* செம்பருத்தி, அடுக்கு அரளி- புகழ், தொழில் விருத்தி.
* நீலச்சங்கு-அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.
* வில்வம் கருந்துளசி, மகிழம்பூ- சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைக்கூடும்.
தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம்.
ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.
குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்க கூடாது.

சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்

சித்திரை-பலாசம்,
வைகாசி-புன்னை,
ஆனி- வெள்ளெருக்கு,
ஆடி-அரளி,
ஆவணி-செண்பகம்,
புரட்டாசி- கொன்றை,
ஐப்பசி-தும்பை,
கார்த்திகை-கத்திரி,
மார்கழி-பட்டி,
தை- தாமரை,
மாசி- நீலோத்பலம்,
பங்குனி-மல்லிகை.

மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.

சித்திரை-மரிக்கொழுந்து.
வைகாசி-சந்தனம்,
ஆனி-முக்கனிகள்,
ஆடி-பால்,
ஆவணி-நாட்டுச்சர்க்கரை,
புரட்டாசி- அப்பம்,
ஐப்பசி-அன்னம்,
கார்த்திகை-தீபவரிசை,
மார்கழி-நெய்,
தை-கருப்பஞ்சாறு,
மாசி-நெய்யில் நனைந்த கம்பளம்,
பங்குனி- கெட்டித்தயிர்...

Thursday, January 5, 2023

உத்திரகோசமங்கைபச்சைக்கல் நடராசப்பெருமான்வரலாறு

சித்தம் சிவமயம்
உத்திரகோசமங்கை
பச்சைக்கல் நடராசப்பெருமான்
வரலாறு

மங்களநாதசுவாமியும் மரைக்காயரும்

பெருமை மிக்க உத்தரகோசமங்கையில் இந்த மரகத நடராசர் சிலை உருவானதே எதிர்பாராத நிகழ்வாகும். 

இராமேசுவரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற மீனவ கிராமப் பகுதி இருந்தது. அங்கு மரைக்காயர் என்ற மீனவர் வறுமையில் வாழ்ந்து வந்தாலும், மிகுந்த நம்பிக்கையுடன் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமியை அன்றாடம் வழிபட்டு வந்தார். தினந்தோறும் பாய்மரப்படகில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

பாறையில் மோதிய படகு
ஒரு நாள், மரைக்காயர் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென கடலில் சூறாவளிக் காற்றுடன் பேய் மழை பெய்ய ஆரம்பித்தது. அதில் அவருடைய பாய்மரப்படகு நிலைகுலைந்து எங்கேயோ அடித்து சென்றது. அப்படியே வெகு தூரம் போனபிறகு, படகு ஒரு பாசிபடர்ந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. அதில் அந்த பாசி படர்ந்த பாறை அப்படியே சரிந்து மூன்று துண்டுகளாக அந்த படகில் விழுந்து விட்டது. பாறை சரிவதற்காகவே காத்திருந்தது போல், அது வரையிலும் அடித்து துவைத்து வந்த பேய் மழையும் சட்டென்று நின்றது.

உயிர் திரும்பிய மரைக்காயர்
மரைக்காயர் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, திரும்ப மண்டபம் நோக்கித் திரும்பி வருவதற்கு பார்த்தால், அவருக்கு தான் எந்த திசையில் இருக்கிறோம் என்ற தெரியவில்லை. 

உடனே தான் அன்றாடம் கும்பிட்டு வரும் மங்களநாதசுவாமியை மனதில் நினைத்துக்கொண்டு, பல நாட்கள் கஷ்டப்பட்டு படகை செலுத்திக்கொண்டு ஒரு வழியாக மண்டபம் வந்து சேர்ந்தார். கடலுக்கு சென்றவர் இன்னும் திரும்பி வரவில்லை என்று காத்திருந்த மரைக்காயரின் உறவினர்கள், அவரை உயிரோடு பார்த்த உடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

படிக்கல்லாக மாறிய பாறை
மரைக்காயர் படகில் கொண்டு வந்த பாசி படர்ந்த பாறைக் கற்களை என்ன செய்வது என்று தெரியாமல், சரி வீட்டுக்கு படிக்கல்லாக இருக்கட்டும் என்று போட்டு வைத்தார். வீட்டுக்குள் போக வரும் ஆட்கள் அந்த பாறைக் கல் மீது நடந்து நடந்து பாறை மேலிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி, சூரிய வெளிச்சத்தில் பளபளவென்று மின்னத் தொடங்கியது.

பாண்டியன் பரிசு

பாறை மின்னுவதைப் பார்த்த மரைக்காயர், அந்த மங்களநாதசுவாமி தான் தன்னுடைய வறுமையை போக்க அளித்த பரிசு என்று நினைத்து, மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாக அளித்தால் வறுமை நீங்கும் என்ற நல்லெண்ணத்துடன் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு, தனக்கு நடந்த அனைத்தையும் விளக்கிக் கூறி, தன்னிடம் ஒரு பச்சைப் பாறை உள்ளது என்று தெரிவித்தார்.

பொற்காசுகள்
பாண்டிய மன்னரும், 

மரைக்காயர் சொன்னதைக் கேட்டு உடனடியாக ஆட்களை அனுப்பி அந்த பச்சை பாறைக்கற்களை எடுத்துவரச் சொன்னார். கொண்டு வந்த அந்த பாறைக் கற்களை, அது பற்றிய விவரம் தெரிந்த ஆட்களை வைத்து சோதித்து பார்த்தார். பாறையை சோதித்து பார்த்த அவர்கள் மன்னரிடம், நிச்சயம் இது விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக்கல். உலகில் வேறு எங்கு தேடினாலும் நிச்சயம் கிடைக்காது என்று சொன்னார்கள். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சை பாறைக்கற்களுக்கு உரிய பொற்காசுகளை வெகுமதியாக அளித்து வழி அனுப்பி வைத்தார்.

சிலை வடிக்க ஆள் இல்லையே
மரைக்காயரை வழியனுப்பி விட்டு வந்த பாண்டிய மன்னர், இவ்வளவு விலைமதிப்பற்ற அபூர்வ மரகதக் கல்லில் ஒரு நடராசர் சிலை வடித்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு, நடராசர் சிலை வடிக்க பல இடங்களிலும் தேடி கடைசியில், இலங்கை மன்னன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தரான இரத்தின சபாபதியைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை நடராசர் சிலை வடிக்க அனுப்பி வைக்குமாறு இலங்கை மன்னருக்கு ஓலை அனுப்பி வைத்தார்.

மரகத நடராசர்
சிலை வடிக்க சிற்பியும் வந்து சேர்ந்தார். சிலையை வடிக்க அந்த பாறையை பார்த்த உடனேயே மயங்கிச் சரிந்தார். மன்னரிடத்தில் தன்னால் மரகத நடராஜர் சிலையை செய்ய முடியாது என்று பின்வாங்கி சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த பாண்டிய மன்னர், அந்த மங்களநாதசுவாமி சன்னதி முன் நின்று பிரார்த்தனை செய்தார். 

அப்போது, 
நான் மரகத நடராசர் சிலையை வடித்து தருகிறேன் மன்னா கவலை வேண்டாம், என்று ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பிய மன்னர், அங்கே ஒரு மனதை மயக்கும் வகையில் ஒரு சித்தர் நிற்பதைக் கண்டார். அவர் தான் சித்தர் சண்முக வடிவேலர். உடனே மன்னரின் கவலை நீங்கியது.

ஆடல்வல்லான் 
நடராசர் மரகத நடராசர் சிலையை வடிக்கும் பொறுப்பை சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அதோடு அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். 

சித்தரும், 
அந்த பெரிய பாறையில் ஐந்தரை அடி உயர மரகத நடராசரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில், மிகவும் நுணுக்கமாக, நடராசரின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் புடைக்க தெரியும் படி வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர். பின்பு பாண்டிய மன்னரை அழைத்து முதலில் நடராச மூர்த்தியை பிரதிட்டை செய்த, பின்பு கருவறை அமைக்கும் படி அறிவுறை கூறினார். அப்படி செய்ததால் தான்.

உத்தரகோசமங்கை 
நடராசர்
பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என பல படையெடுப்புகளையும் தாண்டி, இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லால் ஆன நடராசர் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார். சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும். இந்த உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் கைலாயம் செல்வது நிச்சயம்.


Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...