Showing posts with label #thulasi #vishnu #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts
Showing posts with label #thulasi #vishnu #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts

Wednesday, October 25, 2023

துளசி எங்கிருந்து வந்தது மற்றும் 🌿🌿 அதன் சிறப்புக்கள் என்ன...

துளசி எங்கிருந்து வந்தது மற்றும்      🌿🌿      அதன் சிறப்புக்கள் என்ன...?🌿
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

சிவன் கோவிலுக்கு செல்லும்போது வில்வ மாலை சார்த்தி வழிபடுவதுபோல பெருமாள், கிருஷ்ணர், ராமர், லட்சுமி, அனுமன் மாதிரியான வைணவ கடவுள் கோவிலுக்கு செல்லும்போது துளசி மாலையை சார்த்தி வழிபடுவது வழக்கம். 

தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதிலிருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்போது பாற்கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன், சங்கு ஆகியவை வெளிவந்தது. 
 
ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர்  துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அக்கலசத்தின்றும் பச்சை நிற மேனியுடன் ஸ்ரீ துளசி மகாதேவி  தோன்றினாள். மகாவிஷ்ணு துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார்.
 

துளசி துண்டில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர். இலையின் நுனியில் பிரம்மன்,  மத்தியில் மாயோன்  மற்றும் லட்சுமி சரஸ்வதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா  ஆகின்றான். 
 
துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ்,  செல்வம், மக்கட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப்  பருகினவர் பரமபதம் செல்வர்.

 🌿🌿 🌿   துளசி வழிபாடு  🌿🌿🌿

🌿🌴   சகல தோஷங்களையும், துயரங்களையும் விரட்டும் வல்லமை வாய்ந்தது துளசி. புராணங்களும் ஞானநூல்கள் பலவும் இதன் மகிமைகள் குறித்து விவரிக்கின்றன.*

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

 துன்பங்கள் நீக்கும் துளசி வழிபாடு!
துன்பங்கள் நீக்கும் துளசி வழிபாடு!

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

சகல தோஷங்களையும், துயரங்களையும் விரட்டும் வல்லமை வாய்ந்தது துளசி. புராணங்களும் ஞானநூல்கள் பலவும் இதன் மகிமைகள் குறித்து விவரிக்கின்றன. இந்த உலகில் ஓரிடத்தில் வகை வகையாக மலர்ச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தாலும் அங்கு துளசிச் செடி இல்லையெனில், அந்த இடத்தை நந்தவனமாக ஏற்க இயலாது. துளசி படர்ந்த இடத்தை ‘பிருந்தாவனம்’ என்பர். துளசிக்கு ‘பிருந்தா’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு.
வாழ்நாளின் அந்திமத்தில் துளசி தீர்த்தம் உட்கொள்பவர், மகா விஷ்ணுவுடன் ஐக்கியமாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை என உறுதிபடத் தெரிவிக்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார். .

பூஜைக்காக துளசியைப் பறிக்கும்போது, அதிகாலை வேளையி லும், விரல் நகம் படாமல் விஷ்ணுவின் பெயரை உச்சரித்தவாறும் துளசியைப் பறிப்பதே முறை. துளசியைப் பறித்து மூன்று நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம். தனித்தனி இலையாகப் பறிக்காமல் நான்கு இதழ், ஆறு இதழ்களாகப் பறிக்கலாம்.
முன்னோர் திதிநாள், விரத நாள், தெய்வப் பிரதிஷ்டை தினம், மகாவிஷ்ணுவை வழிபடும் வேளை, தானம் கொடுக்கும் நேரங்களில் துளசியை உபயோகிப்பதால், பன்மடங்கு பலன் கிடைக்கும்.

சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒரே இடத்தில் பூஜை செய்பவர்களுக்கு, முக்காலத்தையும் உணரும் சக்தி ஏற்படும் என்பது சாஸ்திரக் கருத்து.
ஒரு துளசி தளத்தில் 33 கோடி தேவர்களும், பன்னிரு சூரியர்களும், அஷ்ட வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கின்றனர். அதன் நுனிப்பகுதியில் பிரம்மனும், நடுவில் மகாவிஷ்ணுவும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரீ, பார்வதி ஆகியோரும் வசிக்கின்றனர்.

துளசியை வளர்த்து வழிபடுபவதால் ஆயுள் பலம், புகழ், செல்வம், குழந்தைப்பேறு ஆகியன கிட்டும். துளசி காஷ்டம் என்ற மணிமாலையைக் கழுத்தில் அணிபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகும்; மற்ற பாபங்களும் அகன்று விடும்.

எந்த இடத்தில் துளசிச் செடி உள்ளதோ அங்கே அகால மரணம் ஏற்படாது. துளசியை பூஜை செய்து வந்ததன் பலனாகவே சீதாதேவி ராமபிரானைக் கணவராக அடைந்ததாக துளசி ராமாயணம் கூறுகிறது. சிலர், கருந்துளசியைப் பயன்படுத்தக் கூடாது என்பார்கள். இது தவறு. கருந்துளசிக்குக் ‘கிருஷ்ண துளசி’ என்ற பெயர் உண்டு. இதை, கிருஷ்ணருக்கு மட்டுமல்ல, எல்லா தெய்வங்களுக்குமே பயன்படுத்தலாம். விநாயகர், சக்திதேவி, சிவனுக்குப் போடாமல் தவிர்க்கலாம். பச்சையும், சிறிது வெண்மையும் கலந்ததே வெண் துளசி. இதை ராமபிரானுக்கும் அனுமனுக்கும் சூட்டலாம். இவை தவிர, செந்துளசி என்றும் வகையும் அரிதாகக் கிடைக்கிறது.

அமாவாசை அன்று யாக்ஞவல்கியரின் மனையாளான காத்யாயினி சக்தியை துளசியால் வழிபட்டால், பிரிந்த தம்பதியர் மீண்டும் இணையும் பாக்கியம் கிடைக்கும்.

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...