Showing posts with label #vashishteshwar #Karuna Swami #Sivan temple #Hindu temple #Thanjavur #Tamilnadu #India. Show all posts
Showing posts with label #vashishteshwar #Karuna Swami #Sivan temple #Hindu temple #Thanjavur #Tamilnadu #India. Show all posts

Thursday, May 30, 2024

தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயில்

தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா, 35 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மீகம்: 35 ஆண்டுகளுக்கு பின் தஞ்சை கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா
பல்லக்கு திருவிழா


தஞ்சாவூர்: தஞ்சாவூர் கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா, 35 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் அருகே கரந்தையில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி கோயில் என்கிற வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது.

தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து உள்ளார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதும், கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 1988ம் ஆண்டு வரை வைகாசி மாத உற்சவம் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கு ஆகியவை ஏழு ஊர்களை சுற்றி வரும் விழா நடைபெற்றுள்ளது.


கால போக்கில் விழா தடைபட்ட நிலை நிலையில் தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா மற்றும் ஏழூர் பல்லக்கு திருவிழா கடந்த மே 20ம் தேதி ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது தொடர்ந்து தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா நடைபெற்றது.




ஆன்மீகம்: 35 ஆண்டுகளுக்கு பின் தஞ்சை கரந்தை கருணாசாமி கோயில் ஏழூர் பல்லக்கு திருவிழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழுர் பல்லக்கு, சுவாமி கண்ணாடி பல்லக்கிலும், வெட்டி வேர் பல்லக்கிலும் உலா வரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ கந்தர் மற்றும் ஸ்ரீ தனி அம்மன் சுவாமிகள் பல்லாக்கில் எழுந்தருளினர், அதைப்போல் வெட்டிவேர் பல்லக்கில் ஸ்ரீ வசிஷ்டர், ஸ்ரீ அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். 


இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது, சிவகணங்கள், மங்கல வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லக்கு மற்றும் வெட்டிவேர் பல்லக்கினை தோளில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின்னர் பல்லக்குகள் ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களான, வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் (கரந்தை), தஞ்சைபுரீஸ்வரர் திருக்கோவில், (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் ( திருதென்குடி திட்டை),  சொக்கநாதர் திருக்கோவில்,( கூடலூர் திருக்கூடலம்பதி),  ராஜராஜேஸ்வரர் திருக்கோவில், (கடகடப்பை,  கைலாசநாதர் திருக்கோவில் (திருப்புன்னை நல்லூர்), பூமாலை வைத்தியநாதர் திருக்கோவில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கு புறப்பட்டு சென்றன.


ஏழூர் புறப்பாடு முடிந்தது சுவாமி கோவிலுக்கு வந்தடைந்ததும் பக்தர்கள் மத்தியில் ஸ்ரீ சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி அதிவிமரிசையாக நடைபெறும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...