Showing posts with label #nagalingam Poo #Mano ranjitham Poo #Hindu temple #Kovil flower #Tamilnadu #India. Show all posts
Showing posts with label #nagalingam Poo #Mano ranjitham Poo #Hindu temple #Kovil flower #Tamilnadu #India. Show all posts

Thursday, September 19, 2024

மனோரஞ்சிதம் பூ, நாகலிங்க பூ சக்தி வாய்ந்த மலர்கள்.......

_மனோரஞ்சிதம்_  _நாகலிங்கமரம்._
இந்த பூவின் அமைப்பு பூவின் நடுவில் சிவலிங்கம் சுற்றிலும் நாகங்கள் தேவர்கள் இருப்பது போல் இருக்கும் கூடவே அந்த பூவின் மனமும்  ஒரு மினி கைலாயமே அந்த பூவில் இருப்பது போல இருக்கும்...

இந்த மலரினை பெரும்பாலும் இறைவனுக்கு சூடுவதில்லை எனேன்றால் இந்த பூவிலே இறைவன் இருப்பதால்... ஆனால் இந்த பூவினை மூன்றை எடுத்து சிவலிங்கத்திற்கு வார வாரம் படைத்து வேண்டி கொண்டால் வேண்டுதல் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது...

இந்த பூவிற்கு 21 ரிஷிகள் தங்களின் ஆற்றலை கொடுத்ததாக கூறப்படுகிறது இந்த பூவை தொடவே சிவ பஞ்சாட்சர மந்திரம் சொல்லி தான் தொட வேண்டும் பிறகு 21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் 21 ரிஷிகள் சூட்சும வடிவில் வந்து தானத்தை பெற்றுக் கொள்வார்கள் பிறகு தான் இந்த பூவினை சிவனுக்கு படைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது ...

இந்த பூவில் லிங்கத்திற்கு மேல் உள்ள மகரந்தம் போன்ற பகுதிகளில் இருந்து ஒரு சொட்டு நீர் 24 வினாடிகளுக்கு ஒரு முறை லிங்கத்தின் மீது விழும் பார்த்து இருக்கிங்களா ஆனால் இந்த பூ காலை பூத்து மதியம் 12 மணிக்கு உள் விழுந்து விடும்....

இந்த மரம் பெரும்பாலும் வீடுகளில் வளர்ப்பது இல்லை கோயில்களில் தோட்டத்தில் வளர்க்கலாம்...
இந்த மரத்தில் பெரிய காய்கள் தோன்றும் அந்த காய்களை யாராவது மிதித்தால் பெரிய சவுன்டா கேட்கும் ..‌.
திருடர்களை கண்டறிய முன்னோர்கள் இதை பயன்படுத்தி உள்ளனர்...

இந்த மரம் இருக்கும் நிலத்தின் உரிமையாளர் பெரும்பாலும் கோடிஸ்வரர்களாக.  லட்சாதிபதி யாக  தான் இருப்பார்கள்... அப்படி ஒரு அமைப்பை தரும் மரம் இது...

இந்த மரத்தின் அடியில் அமர்ந்து மரத்தின் எதாவது ஒரு பகுதி நம்மை டச் செய்யுமாறு பார்த்து கொள்ள வேண்டும் பிறகு தியான நிலையில் 

ஓம் ரிங் வசி வசி 

என்று சிவ பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் செல்வ வளம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது....

இந்த மரத்தை தரிசித்தாலே சிவனுக்கு அர்ச்சனை செய்த பாக்கியம் கிடைக்கும்
இந்த பூவை பணம் வைக்கும் இடத்தில் வைக்க செல்வம் சேரும்...

மருத்துவ பயன். 

இந்த பூவை அரைத்து ஆரம்ப நிலையில் உள்ள வெள்ளை தழும்பு நோய்க்கு பூசலாம் தலையில் 
தாடியில் ஏற்படும் புழு வெட்டிற்கு பூச குணமாகும்.
இந்த மரம் ஆன்டிபயாட்டிக் தன்மை கொண்டது இந்த மரத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் எந்த நோயும் அண்டாது...

பல் சொத்தை பல் வலி வாய் நாற்றம் உள்ளவர்கள் இந்த மரத்தின் இலைகளை மென்று துப்பினால் சரியாகும்...

இந்த பூவீன் இதழ்களை அளவாக முறைப்படி சாப்பிட யூரீனரி இன்ஃபெக்ஷன் விஷ பூச்சி கடிகள் ஆறாத பூண்கள் பெரும்பாடு நீர் கட்டிகள் ஆண் மலடு பெண் மலடு நீங்கும் இந்த பூவை பயன் படுத்தும் போது சித்த வைத்தியரிடம் ஆலோசனை பெற்று பயன் படுத்துவோம்...
இந்த பூவை அடிக்கடி முகர்ந்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும் எந்த நோய் தொற்றும் வராது ஆக்ஸிஜன் லெவல்

அதிகரிக்கும்....
இந்த மரத்தை தோட்டத்தில் கோயில்களில் நடும் போதே ஒரு சின்ன பூஜை செய்து பஞ்சகவ்யம் நவதானியங்கள் ஊற வைத்த நீரை ஊற்றி நட வேண்டும் .

இந்த மரத்தை கோவிலில் நட்டு வைத்து வளர்க்க பல பிரதோஷங்களுக்கு சென்று சிவனை வணங்கிய பாக்கியம் மேலும் பெரும் புண்ணியம் செய்த பாக்கியம் உங்கள் குடும்பத்திற்கு 
 கிடைக்கும் மற்றும் சிவனின் அருள் கிடைக்கும்.... 

மனோரஞ்சிதம் பூ
இது அருமையான வாசனை வரும் அற்புதமான மலரை தரும் மரம் சீதா மர வகையை சேர்ந்தது இந்த செடி புதர் போல வளர்ந்து பெரிய கொடி போல வளர கூடியது இரண்டு மீட்டர் உயரம் வளர்ந்ததும் பூக்கள் விட ஆரம்பிக்கும்  இதன் பூக்கள் பார்க்க அவ்வளவு ஒன்றும் அழகா இருக்காது ஆனால் வாசனை இருக்கே அதை உனர்ந்து பார்த்தால் தான் தெரியும்

இந்த மலர் சிவபெருமானுக்கு உகந்த மலர் இதனை கொண்டு சிவனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டியது நடக்கும்.இந்த செடியினை வீடுகளில் வளர்க்க செல்வ செழிப்புடன் வாழலாம்.

இதன் வாசனை சுமார் 200 மீட்டர் வரை வாசனை வீசும் இந்த பூவை கைகளில் வைத்து கொண்டு எந்த வாசனையை நினைத்தாலும் அந்த வாசனை நாம் உனர முடியுமாம்.

இதன் காய் திராட்சை கொத்து போல இருக்கும் காய்களை மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வாசலில் கட்டி வைக்க வீட்டின் வாஸ்து குறைபாடு நீங்கும் பணப் புழக்கம் அதிகரிக்கும்  வியாபாரம் செய்யும்  இடங்களில் கட்டி வைத்தால் வியாபாரம் செழிக்கும் 

இந்த மலரை தினமும் முகர்ந்து வந்தால் அல்லது இந்த மரத்தின் அருகே சில நிமிடங்கள் நின்றால் மன அழுத்தம் குறையும் மணம் தெளிவாக மகிழ்சியாக இருக்கும்.

இந்த பூவை வைத்து உங்கள் வீட்டில் பூஜை செய்தால் கஷ்டம் சோகம் துயரம்  துன்பம் கடன் சன்டை சச்சரவு இன்றி செழிப்புடன் வாழலாம்‌‌‌ என்று சொல்லப்படுகிறது ‌..

வீடுகளில் இந்த பூக்களை  தண்ணீரில் போட்டு அதன் மீது சிறிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடு முழுக்க வாசனையாக இருக்கும் பெருமாள் அந்த வீட்டில் வாசம் செய்வதாக ஐதீகம்.
.
இந்த பூவை தலைக்கு தேய்க்கும் என்னெய்யில் போட்டு வைத்தால் எண்ணெய் வாசனையாக இருக்கும் முடி உதிராது நன்றாக தூக்கம் வரும்.
பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளிக்க உடல் வலி தீரும் ‌. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...