Showing posts with label #Ashtami #Navami #Vishnu #Sriram #Thanjavur #Tamil Nadu #Hindu India. Show all posts
Showing posts with label #Ashtami #Navami #Vishnu #Sriram #Thanjavur #Tamil Nadu #Hindu India. Show all posts

Wednesday, July 17, 2024

அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தை செய்யலாம்...

 அஷ்டமி நவமி பற்றிய பதிவுகள் :*
நவமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட கால கணிப்பு முறையில், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளை குறிக்கும்.

அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகாவிஷ்ணுவிடம் சென்று தங்களின் கவலையை கூறினார்கள்.

அப்போது விஷ்ணு பகவான், உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும் என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர் - தேவகி ஆகியோருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

நவமி திதியில் தசரதர் - கௌசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராமநவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். நவமி திதியில் தான் ஸ்ரீராமர் அவதரித்தார். அவர் அரியணை ஏற்கும் நேரத்தில் காட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதுமட்டும் இல்லாது சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்தது தான் காரணம். எனவே, நவமி திதியில் நல்ல காரியங்கள் தொடங்கப்படுவதில்லை. ஆனால், நவமி திதி தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும்.

பொதுவாக அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும்.

ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால் நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும்.

நவமியில் தெய்வங்களுக்கு உயிர் பலிக்கொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்யலாம்.

நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் நமக்கு வெற்றி நிச்சயம். மேலும், இந்த திதி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கிய வேலையில் ஈடுபட்டால், அனைத்து காரியமும் சுபமாக நடைபெறுகிறது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. க்ஷ

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...