Showing posts with label #murugan #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts
Showing posts with label #murugan #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts

Sunday, October 15, 2023

பழமையான முருகன் கோயில்களில் மிகச்சிறப்பான தலம் கழுகு மலை முருகன் கோயிலாகும்

கழுகுமலை முருகன் கோயில்;
*பழமையான முருகன் கோயில்களில் மிகச்சிறப்பான தலம் கழுகு மலை முருகன் கோயிலாகும்.இந்த கோயில் கோவில்பட்டிக்கும்,சங்கரன் கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ளது.1000 வருடங்கள் பழமை வாய்ந்தது இந்த தலம்.

*இந்த தலமூர்த்திக்கு, கழுகாசலமூர்த்தி என்பர் குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று அதில் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம் கழுகுமலை ஆகும்.

*இத்தலத்தின் மிகச்சிறந்த அம்சம் ‌மலையை குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பதுதான் இந்த குடவரைக்கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. 

*இக்கோயிலை சுற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும்.

*மற்ற தல்ங்களில் முருகனுக்கு அசுரன் மயிலாக இருப்பார்.இந்த தலத்தில் மட்டும்தான் இந்திரன் மயிலாக இருக்கிறார்.

*இத்தலநாயகன் கழுகாசலமூர்த்தி மேற்குபார்த்தும், வள்ளி தெற்குபார்த்தும், தெய்வானை வடக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.க

*கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் ‘கழுகுமலை’ என பெயர் பெற்றது எனவும்,மலை கழுகு போன்ற வடிவம் கொண்டிருப்பதாலும், எப்போதும் கழுகுகள் இம்மலையைச் சுற்றிக் கொண்டிருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.

* இந்த ஆலய மூர்த்தியை வணங்கினால் செவ்வாய் தோஷம்,திருமணத்தடை போன்றவை நீங்குவது மட்டுமல்லாமல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மிகச்சிறந்த பரிகார தலமாகும்.

Monday, October 9, 2023

சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை,

*ஓதிமலைமுருகன்* .
சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது, மலையேற சற்று சிரமமாகத்தான் இருக்கும்.. கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.

🌼 புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..

🌼சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது. 

🌼பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் ஒதிமலையில் முதலில் முருகபெருமானை தரிசித்தார் பின்பு தான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது .
ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது ...

போகர் தவம் செய்த பூதிக்காடு:

🌼இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம்.
இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் "விபூதிக்காடு - தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..

🍁இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன. 

🍁 பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுள்ளது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்
சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்
படுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..

ஓதிமலை குறித்த புராணச் செய்தி : 

🍁படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

🍁 படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”
எனப்பட்டது. 

🍁முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய
ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.

ஓதி மலை அமைவிடம் :

சத்தியமங்கலத்தில் இருந்து புளியம்பட்டி வரவேண்டும். 
புளியம்பட்டி-ல இருந்து 1௦ கீமீ தான்…ஆனா புளியம்பட்டி-ல இருந்து ஒதிமலை போக பஸ் வசதி குறைவு..

🔴1. ஈரோட்டிலிருந்து - ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும் ..

🔴2. கோவையிலிருந்து -கோவை > அன்னூர் > ஒதிமலை வரவேண்டும் . 

🔴3. மதுரையில் இருந்து மதுரை - பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி > புளியம்பட்டி > ஓதி மலை வரவேண்டும்..

ஒருமுறை சென்றுவாருங்கள் சித்தர்களின் அருளும் , முருகபெருமானின் பரிபூரண கடாட்சியமும் ,அருமையான அனுபவங்களையும் பெறுவீர்கள் ..

முருகபெருமான் அருள்புரியும் திருத்தலங்கள் : 

1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன் -- அவினாசி அருகில் உள்ள திருமுருகன்பூண்டியிலும்,

2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன் -- பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,

3. நான்கு முகம் எட்டு கரங்களுடன் திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்.

Sunday, October 8, 2023

தனித்துவம் வாய்ந்த முருகன் திருத்தலங்கள் :-

தனித்துவம் வாய்ந்த முருகன் திருத்தலங்கள் :-
🛕 குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது .

🛕 முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் இடம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.

🛕 ஸ்ரீ முருகப்பெருமானுக்கு இரண்டு முகங்களும் எட்டு கரங்களுடனும் சென்னிமலையில் காட்சி தருகிறார். இந்த சந்நதிக்கு எதிரில் காகங்கள் பறப்பதில்லை.

🛕 முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது.

🛕 கும்பகோணத்தில் உள்ள “வியாழ சோமேஸ்வரர்” ஆலயத்தில் ஸ்ரீ முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி அளிக்கிறார்.

🛕 திருவையாறு ஐயாரப்பன் சன்னதி பின்புறம் கையில் வில் அம்போடு முருகன் அருள்பாலிக்கிறார் தனுசு சுப்ரம்மண்யர்

🛕 திருப்போரூரில் மூல விக்கிரமாக முத்துக்குமார சுவாமியாய் காட்சி தருகிறார் முருகப் பெருமான். கந்தன் இடது காலை தரையில் ஊன்றி வலது காலை மயில் மீது வைத்து இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி தருகிறார்.

🛕 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக் குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடர் வடிவ முருகன் சிலையில் வியர்வை வருவது வியப்பான ஒன்று.

🛕 மகாபலிபுரம் அருகே வளவன் தாங்கல் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் தண்டாயுதபாணியாய் காட்சி தருகிறார். அவர் கண்களிலிருந்து நீர் வருவது வியப்பளிக்கிறது.

🛕 மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார் பாலமுருகன்.

🛕 திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப் பெருமான் மூன்று கண்களுடனும் எட்டு கரங்களுடனும் காட்சி தந்து அருள்புரிகிறார்.

🛕 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேளுக் குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். இந்த வேடர் வடிவ முருகன் சிலையில் வியர்வை வருவது வியப்பான ஒன்று.

🛕 மகாபலிபுரம் அருகே வளவன் தாங்கல் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் தண்டாயுதபாணியாய் காட்சி தருகிறார். அவர் கண்களிலிருந்து நீர் வருவது வியப்பளிக்கிறது.

🛕 புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது ஒற்றைக் கண்ணனூர். இங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த முருகன் கோவிலில் முருகன் ஒரு கரத்தில் ஜெப மாலையுடனும் மறு கரத்தில் ‘சின்’ முத்திரையுடனும் காட்சி தருகிறார்.

🛕 கனககிரி எனும் இடத்தில் உள்ள முருகன் சந்நதியில் கந்த பெருமான் கரத்தில் கிளியை ஏந்தியபடி காட்சி தருகிறார்.

🛕 செம்பனார் கோவில் என்ற இடத்தில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் ஜடாமகுடம் தாங்கி இரண்டு கைகளிலும் அக்கமாலை கொண்டு தவக் கோலத்தில் காட்சி தருகிறார்.

🛕 தனது மாமன் திருமாலைப்போல் திருமுருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்த காட்சி தரும் ஆலயம் கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற இடத்தில் உள்ளது.

🛕 முருகப் பெருமான் பாம்பு வடிவில் காட்சியளிக்கும் கோவில் “காட்டி சுப்ரமணியா” எனும் குக்கே சுப்ரமண்யா தலம். இது கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. இப்பகுதியில் பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை. அதுபோல் பாம்பைக் காணும் யாரும் அதைத் துன்புறுத்துவதில்லை.

🛕 பூம்புகார் அருகே மேலையூரில் திருச்சாய்க்காடு (இலுப்பை வனம்) சாயாவனேஸ்வர்ர் கோவிலில் முருகன் வில் அம்பு ஏந்திய பஞ்சலோக சிலை வடிவில் உள்ளார்.

🛕 ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை எனுமிடத்தில் உள்ள முருகன் கோவிலில் விக்கிரகம் இல்லை. ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. வேல் வடிவில் வேலன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயமிது. 🙏.

Saturday, October 7, 2023

1200 ஆண்டுகள் பழமையான, முருகப்பெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக காட்சி தரும்,நாகம் குடைபிடிக்க நாக சுப்ரமண்யராக காட்சி

1200 ஆண்டுகள் பழமையான, முருகப்பெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக காட்சி தரும்,
நாகம் குடைபிடிக்க நாக சுப்ரமண்யராக காட்சி தரும் தலமான
புண்ணிய பூமியான #திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள #செங்கம் வட்டம் நட்சத்திர கோயில் என்று அழைக்கப்படும் 
#வில்வாரணி_நட்சத்திரகிரி
#சுயம்பு_சுப்ரமண்ய_சுவாமி
#வள்ளி_தெய்வானை திருக்கோயில் வரலாறு:

சுயம்பு முருகனை காண்பது அரிது. அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வில்வாரணி ஊரில் அமைந்துள்ள சுமார் 1200ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம், இங்கு மூலவரின் பெயர் சுப்பிரமணியர், சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். ஆடி கிருத்திகை மற்றும் இதர கிருத்திகை நாட்கள் இங்கு விழாக்கோலம் தான். பங்குனி உத்திரம் பத்து நாள் நடக்கிறது. ஐந்தாம் நாளில் முருகன் மலையில் இருந்து கீழிறங்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் நாளில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக 16 லட்சம் ரூபாய் செலவில் தேர் உருவாக்கப்பட்டுள்ளது.

 
மூலவர் – சுயம்பு சுப்ரமணிய சுவாமி
அம்மன்: வள்ளி தெய்வானை 
பழமை – 1200 வருடங்களுக்கு முன்
ஊர் – செங்கம், வில்வாரணி
மாவட்டம் – திருவண்ணாமலை
மாநிலம் – தமிழ்நாடு

வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவில் தனிச்சிறப்பு பெற்றது. முருகப்பெருமானின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும். 27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை.

வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப்பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க கோவில் எனும் பெருமையும் இத்திருதலத்துக்கு உண்டு. 27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோவில் அமைந்திருக்கிறது. எனவேதான், நட்சத்திர கோவில் எனும் சிறப்புடன் பக்தர்கள் அழைக்கின்றனர்.

இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சல புராணம் வாயிலாக அறியும் இக்கோவில் தொடர்பான ஆன்மிக வரலாறு மிகவும் சுவையானது. வேல் விளையாட்டில் வல்லவனாம் வேலவன், வாழைப்பந்தலில் இருந்து எய்த அம்பு, பருவதமலை மீது பாய்ந்தது. அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன.

அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடு த்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி, செய்நதி எனும் பெயரும் உண்டு. சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது.

எனவே செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார்.

அதேபோல் முருகப்பெருமான், செய்நதியின் வலதுகரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோவில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. முருகப்பெருமான் வழிபட்ட இந்த 14 சிவாலயங்களை யும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்விருவரும் ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.

ஒரு வருடம் ஆடிக்கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. அதனால், மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன், திருத்தணிக்கு செல்லவில்லை என வருந்தவேண்டாம், நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன.

எனவே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து சேருங்கள் என இருவர் கனவிலும் முருகர் அருள்புரிந்தார். திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு, நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அப்போது, சப்பாத்திகள்ளி புதரில் சுயம்பு வடிவாக முருகப்பெருமான் காட்சியளித்தார்.

முருகனே அருள்காட்சியளித்த நட்சத்திரகிரி கோயிலில், சித்திரை பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம், மாதாந்திர கிருத்திகை விஷேசமானவை. கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால், சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். ஜாதகரீதியாக ராகு, கேது தோஷமுள்ளவர்கள் இந்த முருகனை வழிபட்டு துன்பம் நீங்கி இன்ப வாழ்வு பெறுவர் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

#தலப்பெருமை:

நெருப்பு சிவன். அதிலுள்ள வெப்பம் உமாதேவி, நெருப்பின் நிறம் கணபதி, அதன் ஒளி முருகன். இவையாவும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை என்றும், லிங்க வடிவில் முருகன் தோன்றியதால், சிவனே முருகன், முருகனே சிவன் என்றும் இந்த கோயில் மூலம் உணர முடிகிறது. ஒவ்வொரு கிருத்திகையன்றும் 27 நட்சத்திரங்களும், கார்த்திகை பெண்களும் இங்கு வந்து முருகனை வழிபடுவதாகவும் நம்பிக்கை உள்ளது.

#தல_வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் இருந்த கோயில் குருக்கள் ஒருவர் பல கோயில்களுக்கு பூஜை செய்து வந்தார். வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு குதிரையில் சென்று வருவார். அவர், தன் சக குருக்கள் ஒருவருடன் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகையன்று திருத்தணி சென்று முருகனை வழிபடுவார். ஒரு ஆண்டில் சில காரணங்களால் அங்கு செல்ல இருவருக்கும் தடங்கல் ஏற்பட்டது. இதனால் மனம் நொந்த அவர்கள் அன்றிரவு உறங்கும் போது, இருவர் கனவிலும் தோன்றிய முருகன், “”நான் நாக வடிவில் சுயம்புவாக நட்சத்திர மலையில் எழுந்தருளியுள்ளேன். எனக்கு அந்த இடத்தில் கோயில் கட்டி கிருத்திகை நட்சத்திரங்களில் வழிபாடு செய்யுங்கள்,” என கூறினார்.

மறுநாள் முருகன் குறிப்பிட்ட மலையில் சுயம்புவைத் தேடினர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது.

குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால், நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது.

இவ்வாலயத்தில் கிருத்திகைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்க ளின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும்; புதுவாழ்வு பிறக்கும். பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை!

#திருவிழாக்கள்:

அனைத்து மாதாந்திர கிருத்திகை நாட்களும், குறிப்பாக ஆடி (ஜூலை-ஆகஸ்ட்) மாதத்தில் வரும் கிருத்திகைகளும் கோயிலில் திருவிழா நாட்களாகும். 10 நாள் பங்குனி உத்திரம் (மார்ச்-ஏப்ரல்) ஐந்தாம் நாளில் முருகப்பெருமான் மலையிலிருந்து இறங்கி வரும்போது இங்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஏழாம் நாள் தேர் திருவிழா நடக்கிறது. திருவிழாவுக்காக பிரத்யேகமாக கார் ஒன்று ரூ. 16 லட்சம்.

#பிரார்த்தனைகள்

ராகு (நாகத்தின் வால்) மற்றும் கேது (நாகத்தின் தலை) அம்சங்களால் பாதகமான விளைவுகளை எதிர்கொள்பவர்கள் இங்குள்ள முருகப்பெருமானை வழிபடுகின்றனர். பக்தர்கள் அபிஷேகம் மற்றும் வஸ்திரங்கள் (ஆடைகள்) இறைவனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி – திருவண்ணாமலை மாவட்டம்

#இருப்பிடம் :

திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் பஸ்களில் 35 கி.மீ., தூரம் அல்லது வேலூரில் இருந்து 45 கி.மீ., பயணம் செய்து போளூரை அடைந்து, அங்கிருந்து செங்கம் செல்லும் பஸ்களில் 10 கி.மீ., தூரம் சென்றால் வில்வாரணியை அடையலாம். பஸ்ஸ்டாப் அருகிலேயே கோயில் உள்ளது. கோயிலுக்கு செல்ல 300 படிகள் ஏற வேண்டும்.

அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருவண்ணாமலை

முருகா 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

பாம்புக்கு திதி கொடுக்கும் குக்கே சுப்பிரமண்யர் கோவில்...!

பாம்புக்கு திதி கொடுக்கும் குக்கே சுப்பிரமண்யர் கோவில்...!
கர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ளது குக்கே சுப்பிரமணியா கோவில்.

இத்திருத்தலத்திலேயே பாம்புகளுக்கு திதி கொடுக்கும் வழக்கம் உள்ளது.

இப்படி திதி கொடுப்பதன் மூலம் முன்னோர் சாபமும்,சர்ப்ப என்னும் நாக தோஷமும் நீங்கும் என நம்பிக்கை நிலவுகிறது.

தலவரலாறு

கஷ்யப முனிவரின் மனைவியான கத்ரு,வினதை ஆகிய இருவருக்கும் இடையே மாறுபட்ட கருத்தின் காரணமாக சர்ச்சை நிலவியது.

இருவரும் தங்கள் கருத்தே சரியானது என வாதம் செய்தனர்.நிறைவில்,யாருடைய கருத்து சரியானதோ,அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்த நிலையில் கத்ரு தோல்வியுற்றாள்.

ஒப்பந்தப்படி கத்ருவும்,அவளது குழந்தைகளான நாகங்களும் வினதைக்கு அடிமையாகின.

வினதையின் மகனான கருடன்,நாகங்களுக்கு துன்பங்களை விளைவித்தான்.

பாதிக்கப்பட்ட நாகங்கள்,வாசுகி என்னும் ஐந்து தலை நாக அம்மையாரின் தலைமையில் குமாரதாரா நதி அருகிலிருந்த குகையில் வந்து மறைந்து கொண்டன.அங்கே தங்களைக் காக்கும்படி சுப்பிரமணியரை வழிபாடு செய்தன.

சுப்பிரமணியரும் நாகங்களைக் காப்பாற்றினார்.இதற்கு நன்றிக் கடனாக வாசுகி,தனது ஐந்து தலைகளையும் விரித்து சுப்பிரமணியருக்கு
குடையாக்கியது.

இதன் அடிப்படையிலேயே குமாரதாரா நதிக்கரையில் ஆதி சுப்பிரமணியருக்கு கோவில் எழுப்பப்பட்டது.

சேவல் கொடி வைத்துள்ள இத்தலத்தை ஒட்டி பள்ளுஸ் என்னும் இடத்திலுள்ள குகையில் சிவபார்வதி அருள்பாலிக்கின்றனர்.

சமஸ்கிருதத்தில் இத்தலம் குக்ஷி என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின் குக்ஷி மறுவி குக்கி சுப்ரமண்யா என மாறி,தற்போது "குக்கே சுப்பிரமணியா" என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

சிறப்புகள்
கர்நாடகாவில் உள்ள முருகன் வழிபாட்டுத் தலங்களில் இது பிரபலமானது.பல யுகம் கண்ட கோவிலாக இத்தலம் விளங்குகிறது.

முருகப் பெருமான் தரகாசூரனை அழித்த பின்பு,தனது வேலில் படிந்திருந்த ரத்தத்தை கழுவ இக்கோவில் அருகே ஓடும் குமாரதாரா நதிக்கு வந்தார் என தல புராணம் கூறுகிறது.

பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் நீங்க இங்கு நீராடியதாகவும் வரலாற்றில் உள்ளது.

பாம்புகளை காத்து அருள்புரிந்தவர் இத்தல முருகன்.இதனாலேயே ராகு,கேது தோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கால சர்ப்பதோஷ நிவர்த்திக்கு இங்கே சிறப்பு பூஜையும்,நடத்தப்படுகிறது.

இங்கு பாம்புக்கு திதி கொடுத்தால் பித்ரு கடனைச் செலுத்திய பலனைப் பெறலாம் என்கின்றனர் இத்தலத்தில் உள்ள பெரியவர்கள்.

சர்ப்பதோஷ ஹோமம்

குக்கே சுப்பிரமண்யா கோவிலில் சர்ப்ப தோஷ ஹோமம் செய்ய திட்டமிட்டீர்கள் என்றால் இரண்டு நாள் இங்கேயே தங்க வேண்டும்.

முதல் நாள் சர்ப்ப விக்ரகம்,முட்டை,கோதுமை மாவில் செய்யப்பட்ட இரண்டு பாம்புகள்,கலச தீர்த்தம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இரண்டாம் நாள் கங்கா பூஜை செய்து நாகர் சிலைக்கு மஞ்சள்,குங்குமம் வைத்து பால் ஊற்றி வழிபாடு செய்கின்றனர்.

குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு அருகிலேயே ஆதி சுப்ரமணியா கோவிலும் உள்ளது.

வால்மீகா எனும் புற்று இந்தக் கோவிலின் கருவறையிலேயே காணப்படுகிறது.மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன.

மேலும்,இக்கோவிலைச் சுற்றிலும் பசுமையான காடுகளும்,மலை அருவிகளும் காணப்படுகின்றன.இவை இப்பயணத்தை ஆன்மீகப் பயணமாக மட்டுமின்றி பசுமைச் சூழலைக் கண்டு ரசிக்க ஏற்ற தலமாகவும் இருக்கும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது இரா .இளங்கோவன்

Wednesday, September 27, 2023

முருகன் ஆலயங்கள் மாவட்ட வாரியாக !..

முருகன் ஆலயங்கள் மாவட்ட வாரியாக !..
*🔯 அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தக்கோட்டம், சென்னை*

*🔯 அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், குமரன்குன்றம், சென்னை*

*🔯 அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், கந்தாஸ்ரமம், சென்னை*

*🔯 அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில், மடிப்பாக்கம், சென்னை*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொள்ளாச்சி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், ஊதியூர், கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், குமரன் கோட்டம், கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், அனுவாவி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோயில், இரும்பறை, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு வேதாயுத சுவாமி திருக்கோயில், செஞ்சேரி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில், சரவணம்பட்டி, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு முத்துமலை முருகன் திருக்கோயில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மருதமலை, கோயம்புத்தூர்*

*🔯 அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருமலைக்கேணி, திண்டுக்கல்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், பழநி, திண்டுக்கல்*

*🔯 அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி, திண்டுக்கல்*

*🔯 அருள்மிகு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், கதித்த மலை, ஈரோடு*

*🔯 அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோபி, ஈரோடு*

*🔯 அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை, ஈரோடு*

*🔯 அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை, ஈரோடு*

*🔯 அருள்மிகு முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில், மலையப்பப்பாளையம், ஈரோடு*

*🔯 அருள்மிகு பாலதண்டாயுத பாணி திருக்கோயில், கொருமடுவு, ஈரோடு,*

*🔯 அருள்மிகுமுருகன் திருக்கோயில்,வட்டமலை, காங்கயம் திருப்பூர் மாவட்டம்*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில், உத்திரமேரூர், காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வல்லக்கோட்டை, காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், திருப்போரூர், காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம்,*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குன்றத்தூர், காஞ்சிபுரம்*

*🔯 அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், குமார கோயில், கன்னியாகுமரி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர், கன்னியாகுமரி*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வேலாயுதம்பாளையம், கரூர்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வெண்ணெய் மலை, கரூர்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புத்தூர், உசிலம்பட்டி, மதுரை*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை, மதுரை*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நேதாஜி ரோடு, மதுரை*

*🔯 அருள்மிகு குமரன் திருக்கோயில், நாகப்பட்டினம்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர், நாகப்பட்டினம்*

*🔯 அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி, நாகப்பட்டினம்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மோகனூர், நாமக்கல்*

*🔯 அருள்மிகு பழனியப்பர் திருக்கோயில், பேளுக்குறிச்சி, நாமக்கல்*

*🔯 அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குருசாமிபாளையம், நாமக்கல்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், கபிலர்மலை, நாமக்கல்*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், அலவாய்ப்பட்டி, நாமக்கல்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர்*

*🔯 அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை*

*🔯 அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம்*

*🔯 அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில், ராமநாதபுரம், ராமநாதபுரம்*

*🔯 அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில், சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை, சேலம்*

*🔯 அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், கஞ்சமலை, சேலம்*

*🔯 அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில், உடையாபட்டி, சேலம்*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி, சேலம்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை, சேலம்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், கோவனூர், சிவகங்கை*

*🔯 அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், குன்றக்குடி, சிவகங்கை*

*🔯 அருள்மிகு மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி, தேனி*

*🔯 அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி*

*🔯 அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில், சுருளிமலை, தேனி*

*🔯 அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம், திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், வானகரம், திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சிறுவாபுரி, சின்னம்பேடு, திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி, திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அம்மையார்குப்பம், திருவள்ளூர்*

*🔯 அருள்மிகு நதிக்கரை முருகன் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரவயலூர், திருச்சி*

*🔯 அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில், மணக்கால், திருச்சி*

*🔯 அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில், கொழுந்துமாமலை, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், ஆய்க்குடி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவகிரி, திருநெல்வேலி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி, திருவண்ணாமலை*

*🔯 அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், எண்கண், திருவாரூர்*

*🔯 அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், எல்க் மலை, நீலகிரி*

*🔯 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மஞ்சூர், நீலகிரி*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர், வேலூர்*

*🔯 அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், ரத்தினகிரி, வேலூர்*

*🔯 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வள்ளிமலை, வேலூர்*

*🔯 அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருதுநகர்*

*🔯 அருள்மிகு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஹரிப்பாடு, ஆலப்புழா*

*🔯 அருள்மிகு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு, கடலூர்*

*🔯 அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில், மணவாளநல்லூர், விருத்தாசலம், கடலூர்*

*🔯 அருள்மிகு வெற்றிவேல் முருகன் திருக்கோயில், சி.மானம்பட்டி, கடலூர்*

*🔯 அருள்மிகு முத்துக்குமர சுவாமி திருக்கோயில், பரங்கிப்பேட்டை, கடலூர்*

*🔯 அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவண்டிப்பாளையம், கடலூர்*

*🔯 அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், குக்கி சுப்ரமண்யா, தட்ஷின கன்னடா*

*🔯 அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர்*

*🔯 அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகு மலை, தூத்துக்குடி*

*🔯 அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், கிடங்கூர், கோட்டயம்*

*🔯 அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை.*

*முருகா உன் திருவடி சரணம்*
*திருச்சிற்றம்பலம்.*

 இறை பணியில் 
இரா. இளங்கோவன்.

Tuesday, September 26, 2023

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள்

நவபாஷாணம்
நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும். எனவே இதனை முறைப்படி புடம் போட்டு கட்டவேண்டும். வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட பாஷாணத்தின் அணுக்களை சேர்ப்பது மற்றும் பிரிப்பதன் மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்கட்டமைப்பை உருவாக்கி சித்தர்கள் இதனை செய்கின்றார்கள். அதன்படி நவ பாஷாணம் என்பது ஒன்பது வகை கடுமையான விஷங்களைக் கொண்டது. அவை

1. சாதிலிங்கம்.
2. மனோசிலை
3. காந்தம்
4. காரம்
5. கந்தகம்
6. பூரம்
7. வெள்ளை பாஷாணம்
8. கௌரி பாஷாணம்
9. தொட்டி பாஷாணம்

மேற்கண்ட ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதமான தனி வேதியல் இயல்புகளைக் கொண்டதாகும். இந்த ஒன்பது பாஷாணங்களை திரவமாக்கி மீண்டும் திடமாக்க ஒன்பது வகை விறகுகளும் (எரிபொருட்களும்) ஒன்பது தடவை வடிகட்ட ஏதுவாக ஒன்பது வடிகட்டிகளும் கையாளப்பட்டன. சித்தர்கள் பாஷானங்களைக் கட்டும்போது அரைத்து வேகவைத்து எரித்து நுண்ணிய அணுக்களாகப் பிரிக்கப் புடமிடுவார்கள். வறட்டிகளைக் கொண்டு எரிக்கப்படும் தீயின் அளவைக் குறிப்பிடுவது புடத்தின் வகையாகும். வறட்டியின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பெயர் குறிப்பிடப்படும். புடம் ஒன்றுக்கு ஒன்று முதல் ஆயிரம் வறட்டி வரை பயன்படுத்தப்படும். இதற்கு தங்கவாறு பெயர்களும் உள்ளது. அவை

1. காடைபுடம் 1 வறட்டி
2. கவுதாரிப் புடம் 3 வறட்டி
3. குக்குடப் புடம் 8 முதல் 10 வறட்டி வரை
4. வராக புடம் 50 வறட்டி
5. யானை புடம் 500 வறட்டி முதல் ஆயிரம் வறட்டி வரை
6. கன புடம் 700 முதல் 800 வரை 
7. மணல் மறைவுப் புடம் 800 வறட்டி
8. கோபுடம் 1000 வறட்டி

இது தவிர நெருப்பினால் உண்டாகும் வெப்பம் மட்டுமல்லாது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய வெப்பம் தரும் புட வகைகளும் சித்தர்களால் பயன்படுத்தப்பட்டன. அவை

1. கோபுர புடம் - மணல்
2. பாணிடப் புடம் - தண்ணீர்
3. உமிப் புடம் - உமி
4. தானியப் புடம் -நெல்
5. சூரியப் புடம் - வெயில்
6. சந்திரப் புடம் - நிலவொளி
7. பருவப் புடம் - பௌர்ணமி நிலவு
8. இருள் புடம் - அமாவாசை இரவு
9. பனிப்புடம் - பனி
10. பட்டைப் புடம் - மரத்தூள்
11. நிழற்புடம் - சூரிய ஒளி படாத அறை

நவபாஷாணம் சிலைகளை உருவாக்கியவர் போகர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர். சர்வ சாத்திரங்களையும் கற்ற போகியாவார். இவர் சித்தத்தை அடக்கி இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கையை முற்றிலும் அறிந்து இந்த உலக இயக்கத்தையும், பிரபஞ்சத்தையும், இறைஆற்றலையும், உயிர் தத்துவத்தையும், பிரபஞ்ச ரகசியத்தையும் ஆராய்ந்து அறிந்தவர். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் ஆவார். இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும் ஆன்மீகத்தில் ஞான் சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. நவ பாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை நாம் அருந்தினால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். நவ பாஷாணங்களின் சேர்க்கையில் போகர் மூன்று முருகர் நவ பாஷாண சிலைகள் உருவாக்கினார். அதில் 1. பழனி மலைக்கோவில் 2. கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். 3 வது சிலை கலியுகத்தின் இறுதியில் வெளிப்படும் என்று புராண வரலாறுகளில் உள்ளது.

Saturday, September 23, 2023

பழனிமுருகப்பெருமானுக்குசெய்யப்படும்_அபிஷேகமும், #எட்டுவகை_அலங்காரமும்*

⭕⭐⭕⭐⭕⭐⭕⭐⭕⭐⭕⭐⭕⭐⭕⭐⭕ #பழனிமுருகப்பெருமானுக்குசெய்யப்படும்_அபிஷேகமும்,  
            #எட்டுவகை_அலங்காரமும்*
⭕ முருகப் பெருமானின் #நவபாஷாணதிருமேனிபண்டாரசாமியாக_ஆண்டிக்கோலத்தில்_தண்டத்தை தாங்கிய திரு உருவமாக உள்ளது. 

              ♥🔹💚🔸🌀🔔🌀🔸💚🔹♥

⭕மகா சித்தர் போகர் பெருமான் தான் வடித்த விக்ரகம் மனிதகுல சமுதாயம் தொடர்ந்து பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் பழனி மலையில் பிரதிஷ்ட்டை செய்தார்.

⭕இத்திரு உருவச் சிலையில் அபிஷேகம் செய்கின்ற விபூதி, சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சிலையின் 
*"நவபாஷாண கட்டு மருந்தின்"* சத்தைப் பெற்று பிரசாதமாக மாறுகின்றது.

இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள #நாட்பட்ட_கொடியநோய்களையும்_போக்குகின்றது. 

                  🔵💠🌟💠♻🌐♻💠🌟💠🔵

⭕இப்படி ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை கொடிய பிணிகளில் இருந்து மீட்டு வந்த தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனியின் பல இடங்களில் சிதிலம் அடைந்து விட்டதால் இப்போது அபிஷேகங்கள் முன்பு போல் செய்வதில்லை. 

⭕இப்போது தேவஸ்தானம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் கலப்படமில்லா (ஒரிஜினல்) பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது. 

                🌻♦🌻♦🌻♦🌻♦🌻♦🌻

🍂 நவ பாஷாண தண்டாயுதபாணி🍂 #முருகனுக்கு_ஆறுகாலபூசை - 
          #பதினாறுவித_அபிஷேகம் - 
                   #எட்டுவித_வேடம் - 

🍒*1. சாது,*

🍒*2. சன்னியாசி,*

🍒*3. வேடர்,*

🍒*4. விருத்தர்,*

🍒*5. சண்முகர்,*

🍒*6. சுப்பிரமணியர்,*

🍒*7. வேதியர்,*

🍒*8. இராஜ அலங்காரம்,*

என #எட்டுவித_அலங்காரம் செய்யப்படுகின்றது. 

♻ நவபாஷாண முருகனின் திருமேனியில் இராக்கால பூசையின் போது 
#சந்தனக்கட்டையை_அரைத்துசிரசில்__வைத்து_விடுவர். 

⭐அதிகாலை "விழா பூசை"யின் போது *"#கவ்பீன_தீர்த்தம்"* மற்றும் #சிரசில்_வைத்தசந்தனமும்_வழங்குவர்.

               🌹☘🌹☘🌹☘🌹☘🌹☘🌹

♻இது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். இதனைப் பெறுபவர் வாழ்வில் அனைத்து துன்பங்களும் நீங்கி, சந்தோசமும், மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றமும் பெறுகின்றனர்...

🔥*வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா*

🔥*பழனிமலை முருகனுக்கு அரோகரா*

🔥*ஞான தண்டாயுதபாணி முருகனுக்கு அரோகரா*

🔥*ஆறுபடை முருகனுக்கு அரோகரா*

Wednesday, August 23, 2023

_முருகன் அருளும் திருத்தலங்கள்_

_முருகன் அருளும் திருத்தலங்கள்_
🌹 🌿 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள கருநெல்லிநாதர் ஆலயத்தில் பழநி முருகப்பெருமானைப் போலவே தோற்றம் தரும் முருகப் பெருமானை  தரிசிக்கலாம்.

🌹 🌿 வழக்குகளில் சிக்கிய நிரபராதிகளின் வாழ்விற்கு வழி காட்டி அவர்களுக்கு அருளும் முருகனை வழிவிடும் முருகன் எனும் பெயரில்
ராமநாதபுரத்தில் தரிசிக்கலாம். அண்ணன் கணபதியுடன் கந்தன் கருவறையில் அருளும் தலம் இது.

🌹 🌿 கடலூரில் வெற்றிவேல் முருகன் எனும் திருப்பெயரில் முருகப்பெருமான் அருள்கிறார்.  மழலை வரம் வேண்டுவோர் மூன்று எலுமிச்சம்பழங்களை இவருக்கு படைத்து வேண்டிட அவர்களுக்கு மழலை வரம் கிட்டுகிறது. திருமணத்தடை உள்ளோர்கள் வெற்றிலைத் துடைப்பு எனும் முருகனுக்கு அபிஷேகம் செய்த நீரை வெற்றிலையில் தெளித்து முகத்தைத் துடைக்கும் பரிகாரத்தை செய்து தடை நீங்கப்பெறுகின்றனர்.

🌹 🌿 கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள வேளிமலையில் மூலவர் குமாரசுவாமியாகவும் உற்சவர் மணவாளகுமரனாகவும் அருள்புரிகின்றனர். வேடுவ குலத்து வள்ளியை முருகப்பெருமான் திருமணம் புரிந்த தலம் இது. இங்கு வழங்கப்படும் கஞ்சிதர்ம பிரசாதம் சகலநோய்களையும் தீர்ப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

🌹 🌿 கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள கிடங்கூரில் சுப்ரமண்யராக பிரம்மச்சாரி வடிவில் முருகப் பெருமானை தரிசிக்கலாம். கேரள கோயில்களிலேயே உயரான கொடிமரமும் அதன் மேல் மயிலும் இடம் பெற்றுள்ள சிறப்பு பெற்ற தலம் இது. இந்த சந்நதிக்குள் பெண்கள் தரிசிக்க அனுமதியில்லை. கொடிமரத்தருகே நின்றுதான் தரிசிக்க முடியும்.

🌹 🌿 கோயமுத்தூரில் உள்ள சரவணம்பட்டியில் ரத்னகிரி முருகன் திருக்கோயில் உள்ளது. இந்திரனை அசுரர்களிடமிருந்து காக்க அவனை தன் வாகனமாக முருகப்பெருமான் ஏற்றருள் புரிந்த தலம் இது. இங்கு முருகப்பெருமானுக்கு வன்னி இலையால் அர்ச்சனை நடைபெறுவது சிறப்பு.

🌹 🌿 சிவகங்கை மாவட்டம் கோவனூரில் உள்ள பில்லூரில் முருகப்பெருமான் திருவருள்புரிகிறார். சித்த வைத்தியர்கள் சிறப்பாகக் கருதும் பூநீர் உற்பத்தியாகும் தலம் இது. சித்த மருத்துவர்களும், சித்த மருந்துகள் உண்போரும் தரிசிக்க வேண்டிய தலம் இது.

🌹 🌿 சென்னை குரோம்பேட்டை குமரன் குன்றத்தில் சுவாமிநாத சுவாமி எனும் பெயரில் அழகன் முருகனை தரிசிக்கலாம். சித்திரை வருடப்பிறப்பன்று இக்குன்றின் 120 படிகளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இத்தல நடராஜர் வலது பதம் தூக்கி ஆடிய நிலையில் அருள்வதால் தன்பாதம் தூக்கிய நடராஜர் என வணங்கப்படுகிறார்.

🌹 🌿 ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரையில் சுவாமிநாத சுவாமியாக தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை தரிசிக்கலாம். சித்தப்பிரமை உடையவர்கள் இத்தலத்திற்கு வந்து தரிசித்து தீர்த்தப் பிரசாதம் சாப்பிட சித்தப் பிரமை நீங்கிவிடும் அற்புதம் நிகழ்கிறது.

🌹🌿கரூர் மாவட்டம் வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமண்யரை தரிசிக்கலாம். நான்முகனின் கர்வத்தை அடக்க படைப்புத்தொழிலை மேற்கொண்ட காமதேனு வெண்ணெய்மலையை உருவாக்க அதில் முருகப்பெருமான் எழுந்தருளியதாக தலபுராணம் கூறுகிறது. காமதேனுவால் உருவாக்கப்பட்ட தேனு தீர்த்தத்தில் 5 நாட்கள் மூழ்கி முருகனை வழிபட பிள்ளைப்பேறு கிட்டிடும் தலம் இது.

🌹 🌿 காஞ்சிபுரத்தில் காமாட்சி அன்னைக்கும் ஏகாம்பரநாதருக்கும் இடையே சோமாஸ்கந்த அமைப்பில் உள்ள ஆலயம் குமரக்கோட்டம். நான்முகனை சிறையிலடைத்த முருகப்பெருமான் பிரம்ம சாஸ்தா வடிவில் படைப்புத் தொழிலை ஆரம்பித்த தலம் இது. நாகம் குடைபிடிக்கும் இத்தல உற்சவர் குமரக்கோட்ட கல்யாணசுந்தரர் பேரழகுடன் திகழ்கிறார்.

🌹 🌿 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்றக்குடியில் ஷண்முகநாதரை வணங்கி மகிழலாம். சாபத்தால் மலைவடிவான முருகனின் மயில்சாபவிமோசனம் பெற்றதலம் இது. குன்றக்குடிக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் நினைத்தவை நடந்தே தீரும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத அனுபவ நம்பிக்கை.

🌹 🌿 சேலம் மாவட்டம் ஊத்துமலையில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் பால சுப்ரமண்யர் அருள்கிறார். அகத்திய முனிவர் பூஜித்த முருகப்பெருமான் இவர். வணங்குவோர்க்கு தொழில்வளம் சிறக்க இந்த பால சுப்ரமண்யர் ஆசி வழங்குகிறார்.....

Monday, July 3, 2023

நம்முடைய சிக்கல்களைத் தீர்க்கும் சிக்கல் சிங்காரவேலர்

நம்முடைய  சிக்கல்களைத் தீர்க்கும் சிக்கல் சிங்காரவேலர்.⛥⛥⛥
நாகை மாவட்டம் சிக்கலில் புகழ்பெற்ற வேல்நெடுங்கன்னியம்மன் நவநீதேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதேசுவர் சந்நிதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதியும் மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சந்நிதியும் அமைந்துள்ளது.⛥🌻🌻

சமயக் குரவர்களால் பாடல்பெற்ற பழைமைவாய்ந்த இக்கோயிலில் சிங்காரவேலவர் வீற்றிருக்கும் சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தலத்தில் எழுந்தருளும் சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கன்னியிடம் வேல் வாங்கிக்கொண்டு திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.⛥🌻🌻

இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவின்போது அன்னையிடமிருந்து வேல்வாங்கும் வைபவம் நடைபெறுகிறது. வேல் வாங்கியவுடன், சிங்காரவேலவரின் திருமேனி எங்கும் வியர்வை சிந்தும்.⛥🌻🌻

இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.⛥🌻🌻

இந்தக் கோயிலில் முருகப் பெருமான் அம்மை அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். அதனால், சிங்காரவேலர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். சிக்கல் சிங்காரவேலரைத் தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை....🕉🔯✡

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...