Showing posts with label #Nataraja Statue Explained #Sivan temple #Chidambaram #Tamil Nadu #Hindu temple #India. Show all posts
Showing posts with label #Nataraja Statue Explained #Sivan temple #Chidambaram #Tamil Nadu #Hindu temple #India. Show all posts

Tuesday, January 7, 2025

நடராஜர் திரு நடனக் காட்சி கண்டு அருள் பெற்ற பக்தர்கள்...

ஊழி முதல்வன்  ஐந்தொழில் ஆடல் அரசன்  இயக்க நாதர்  திருக் கோயில்களும் திரு நடனக் காட்சி கண்டு  அருள் பெற்ற  பக்தர்களும்*  :    
     🌷1. சிதம்பரம் *நடராஜர் கோயில்* . பொன்னம்பலம் -- பதஞ்சலி வியாக்கிர பாத முனிவர்கள், அரி அயன்  ருத்திரன்  சக்தி லட்சுமி சரஸ்வதி  முதலான எல்லா தெய்வங்கள், 
     🔥2. மதுரை *சுந்தரேசர் கோயில்*.  வெள்ளியம்பலம் ---  பதஞ்சலி வியாக்கிர பாத முனிவர், கல்யாணத்திற்கு  வந்திருந்த அனைவரும் 
      ⚜ 3. திருநெல்வேலி *நெல்லை யப்பர் கோயில்*.  தாமிரச் சபை –--  பிரம்மன் விசுணு ருத்திரன் அம்பாள்  முதலான தெய்வங்கள்  
      🕉 4. திருவாலங்காடு   *ஆலங்காட்டீசர்  கோயில்*. இரத்தினச் சபை  --- பத்ர காளி , காரைக்கால் அம்மையார் 
      ⚛5.குற்றாலம்   *குறும்பலா நாதர்  கோயில்* . சித்திரச் சபை  ---- கடல் வாணன் என்ற பாண்டியன் அவனது இரண்டு தேவியர் 
      🔯 6. திருவுத்தர கோச மங்கை  *மங்களேசுவரர்  கோயில்* . மரகத நடராசர் ----அறுபத்தாறு  முனிவர்கள்.
      🐂7. திருவிடைவாய்   *புண்ணிய கோடீசுவரர்  கோயில்* . நந்தி மேல் சந்தியா  தாண்டவர். பிரதோஷ நாட்டியம் ---  அரி அயன்  ருத்திரன் சக்தி லட்சுமி சரஸ்வதி  முதலிய  தெய்வம் தேவர்கள் அனைவரும்.  
      ⚜️ 8 .கோனேரி  ராச புரம் *உமா  மகேசுவரர்  கோயில்* (திருநல்லம், நல்லன்) . சுயம்பு நடராசர் ----  உமையவள்     
     🏵️  9. சித்தாய்மூர் (திருச்சிற்றேமம்) *பொன் வைத்த நாதர் கோயில்*.  ---–    சக்தி லட்சுமி சரஸ்வதி 
     ☀ 10. திருத் தலையாலங்காடு *ஆட வல்ல வரதர் கோயில்* –--- உமையவள்   
     🍀 11. வட திருமுல்லை வாயில் *மாசிலா மணீசர் கோயில்*   ----- உமையவள். 
*கொடி இடை உமை அவள் காண ஆடிய அழகா* (சுந்தரர்) 
என *கொடி இடை* என்பது  *பூஜை செய்து நடராஜரது தரிசனம் பெற்ற  பக்தை உமையைக் குறிக்கும் பெண் இனச் சொற்களே தவிர *எந்த அம்மனும் அல்ல, எந்த அம்மன் பெயரும் அல்ல*.   

*மாசிலா மணியுடன்* *பிறப்பு இறப்பு உள்ள மாசு மல உடல் கொண்ட எந்த  அம்மனும்* இருக்க முடியாது.

  *தாயான சிவமே இறைவி*.
     
         🌏  12. கும்ப கோணம் *நாகேசுவரன்  திருக் கோயில்* (குடந்தைக் கீழ்க்கோட்டம்) ---– ஆதி சேஷன். (இங்கு ஆடல் நாயகனது  பெரிய சந்நிதி குதிரை இழுக்கும் தேர் வடிவில் உள்ளது.)
         💥 13.திருவாதவூர் *மறை நாதர் கோயில்*    ---- மாணிக்க வாசகர் 
         🍁 14. திருவதிகை  *புரம் எரித்த வீரட்டேசுவரர் கோயில்* ----  சம்பந்தர்
        🌳  15.  பேரூர் பட்டீசுவரம் *பட்டீசுவரர் கோயில்*  ---  அரி அயன் சுந்தரர் 
        🌷  16. திருவாய்மூர் *வாய்மூர் நாதர் கோயில்* –---- அப்பர் சம்பந்தர்      
         🔯 17.திருமருகல் *மாணிக்க வண்ணர்  கோயில்* –---- சம்பந்தர் 
         💥 18.  தீர்த்தன கிரி ( திருத்தினை நகர்)   *சிவக்கொழுந்தீசர் கோயில்*  --- அரி அயன்      
         ⚜ 19. இராமேஸ்வரம் *இராம நாதர் கோயில்* ----  பார்வதி                                                     💥     20.  திருக்கடாவூர் (திருக்குருகாவூர்)  *வெள்ளடை நாதர் கோயில்* --- சம்பந்தர்                                                                                                                                                       🕉️    21.  திருவடுகூர் *வடுக நாதர் கோயில்* ------  பைரவர்.                                                                           🛑    22. திருப் புனவாயில் *பழம்பதி நாதர் கோயில்*   --  பரா சக்தி.                          
🟡      23.        திரு நாகேஸ்வரம்  *நாக நாதர்  கோயில்* ---- பார்வதி .   
  🔴      24.    குடவாசல் (திருக் குட வாயில்)  *குழகர் கோயில்*  -----  பராசக்தி                             .                                               🔥      25. திரு வேட்களம்     *பாசுபதேஸ்வரர் கோயில்*-----  பார்வதி .    

   இவ்வாறு  இன்னும் பல தலங்கள்... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்...

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...