அடிமுடி சித்தர் !
கிரேன் கருவி இந்தியாவுக்குள் வராத காலம்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பல நூறு டன் எடை உள்ள ஒரு சிறிய மலையை போன்ற ராக்ஷத பாறை இருந்தது. அந்த பாறை மக்கள் கிரிவலம் செய்வதற்கு மிக இடையூறாக இருந்தது. 10,15 காட்டு யானைகளை வைத்து அந்த பாறையை அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். ஆனால் பலன் இல்லை. அப்பொழுது அங்கு ஒருவர் வந்தார்.
27 அடி நீளமுடைய தலைமுடியை கொண்டவர் அவர். அந்த பாறையை தனது ஜடாமுடியில் கட்டி தனி ஒருவராக இழுத்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தூக்கி வீசி எரிந்தார். அவர்தான் அடிமுடி சித்தர். மறக்காதிரு, பிறக்காதிரு, இறக்காதிரு என்னும் உபதேசம் செய்தவர் அடிமுடி சித்தர். இறைவனை மறக்காதிருந்தால் நீ இன்னொரு பிறவி பிறக்காது இருப்பாய். இன்னொரு பிறவி நீ பிறக்காது இருந்தால் இறக்காது இருப்பாய் என்பதே இதன் அர்த்தம். அடிமுடி சித்தர் பல அற்புத சித்துக்களை சர்வ சாதாரணமாக செய்தவர். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் ஆகியோருக்கெல்லாம் மூத்தவர். ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகிராம் சுரத் குமார் முதலான மகான்களால் வழிபடப்பட்டவர். மிக குறிப்பாக அடிமுடி சித்தர் ஜீவசமாதி அடைந்தவர்.
அடிமுடி சித்தருக்கு மிகவும் பிடித்த உணவு கேழ்வரகு. கேழ்வரகு கஞ்சி, கேப்பங்கூழை மட்டுமே இவர் உணவாக உட்கொண்டு வாழ்ந்தார். அடிமுடி சித்தருக்கு கேழ்வரகு, பூ, நல்லெண்ணெய் ஆகிய மூன்றை காணிக்கையாக கொடுத்து. முடிந்தால் ஒரு வேட்டி. கொடுத்து நாம் வேண்டி கொண்டால். நமது அணைத்து துன்பங்களும், துயரங்களும் தூள், தூளாகும் என்பது நிதர்சனம்.
அடிமுடி சித்தரின் கோவிலுக்கு நேர் எதிரே கௌதம மகரிஷியின் ஜீவசமாதி இருக்கிறது. அதுவும் அவசியம் தரிசிக்க வேண்டிய கோவில்.
அந்த கௌதம மகரிஷியின் கோவிலுக்கு அருகே தான் சூர்ய லிங்கம் கோவில் இருக்கிறது. இந்த அடிமுடி சித்தர் சித்தியை வெற்றியை தருபவர் சித்தர்கள் மீது சித்தம் வைத்தால் சித்தம் ஆகாதது உண்டோ.
சிவாய நம 🙏