Showing posts with label #Bologa nadar kovil #Hindu india #tamilnadu #nellikuppam. Show all posts
Showing posts with label #Bologa nadar kovil #Hindu india #tamilnadu #nellikuppam. Show all posts

Thursday, February 8, 2024

வாழ்க்கையில் சொந்த வீடு அமைய பரிகார தலங்கள்

சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருப்பதென்பது மனநிறைவை தரக்கூடியதுதானே. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது.
சொந்த வீடு அமைய :
 சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் நிறைவேறுமா? வீடு வாங்குவதற்கு வசதி இருந்தாலும் ஜாதகத்தில் அவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற யோகம் வேண்டும்.
 சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில்தான் இருக்கவேண்டும். 

 சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்துக் கொண்டு சொந்த வீட்டில் வாழும் யோகத்தைப் பெறுகிறார்கள். ஒரு சிலர் சிறுக சேமித்து ஒரு சொந்த வீட்டிற்கு அதிபதியாகவும் ஆகிவிடுகிறார்கள்.

பரிகாரங்கள் :

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும். அத்தடை நீங்க, சிவப்பு நிற மலர்களால் செவ்வாயை பூஜித்து வர விரைவில் சொந்தவீடு அமையும்.

 மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பூலோக நாதர் ஆலயத்திற்கு செவ்வாய் கிழமை அன்று காலை 6 to7 மணிக்கு நடக்கின்றது பூஜையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்ய சொந்தமான வீடு அமையும். 
 

 நிலம் அமைந்து, வீடு அமைய தாமதமாக ஆகும்போது ஒரு முறை 'திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை" வணங்கி 'ஓம் சரவண பவ" எனும் மந்திரத்தை உச்சரித்து, ஆலயத்திலே ஆறு மணி நேரம் தங்கி, அந்தக் கடல் நீரை எடுத்து வந்து மஞ்சளுடன் கலந்து, நீங்கள் வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி நீங்கள் தௌpக்க வேண்டும். 

வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் ஒரு முறை 'சிறுவாபுரி முருகனை" ஒன்பது செவ்வாயன்று வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும்.

நிலம், வீடு வாங்கும் யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரவேண்டும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்

Followers

ஒரே கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள்

*ஒரே கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள் எந்த கோவிலில்?* பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் தலங்கள் திவ்ய தேசங்கள் ...