Monday, December 16, 2024

பெண்ணை ஆற்றின் விஸ்வநாதபுரம் அணைக்கட்டு பகுதியில் ஆராத்தி விழா.

பெண்ணையாறு கர்நாடகத்தில் உருவாகி தென் திசையில் பயணித்து பின் தமிழ் நாட்டில் கிழக்கு நோக்கித் திரும்பி, சுமார் 331.2 கி.மீ.  தூரம் பயணித்து வங்கக் கடலை சென்றடைகின்றது.
ஆண்டின் பெரும்பாலான காலங்களில் இந்த ஆறு வறண்டே இருக்கும். இதன் நீர்ப்பிடிப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்தே இந்த ஆற்றில் நீர் இருக்கும். 

ஆனாலும் இந்த ஆற்றின் நீரோட்டத்தினால் ஆற்றுப்படுகை முழுவதிலும் வழி நெடுகிலும் உள்ள அணைக்கட்டுகள், குளங்கள், கிணறுகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துவிடும்.

இந்த ஆற்றின் மூலம் தமிழ் நாட்டின் 5 மாவட்டங்களில் (கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர்) சுமார் 36000 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று சிறப்பான விவசாயம் நடைபெற்று வருகிறது. 

மேலும் வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான ஊர்களுக்கு குடிநீர் ஆதரமாகவும் விளங்கிவருகிறது.

 தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தென் பெண்ணையாற்றின் உப நதிகளாக சின்னார் (மார்கண்ட நதி), வாணியாறு, பாம்பாறு ஆகிய நதிகள் உள்ளது. சின்னார் மைசூர் பீடபூமிப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் உருவாகி தீர்த்தம், வேப்பணபள்ளி வழியாகப் பாய்ந்து தென் பெண்ணையாற்றில் கலக்கிறது.

 வாணியாறு சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலைப்பகுதியில் உருவாகி தருமபுரி அரூர் வட்டம், பூங்காரம்பட்டி காப்புக்காட்டில் தென் பெண்ணையாற்றுடன் இணைகிறது.

 பாம்பாறு வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், ஜவ்வாது மலையில் ஆலங்காயத்தில் உற்பத்தியாகி திருப்பத்தூரில் தெற்கு நோக்கிச் சென்று பின் ஊத்தங்கரை வழியாக ஓடி தென் பெண்ணையாற்றில் இணைகிறது.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அனை நிரம்பிய பின் இந்த ஆற்றில் திறந்து இது கடலூர் மாவட்டம் உப்பலவாடியில் கடலில் கலக்கிறது. 

இவ்வாறு சிறப்பு மிக்க ஆற்றின் மரியாதை செய்யும் விதமாக கங்கா ஆரத்தி விழா நடைபெறும். 

*சென்ற வருடம் பெண்ணை ஆற்றின் விஸ்வநாதபுரம் அணைக்கட்டு பகுதியில் ஆராத்தி விழா நடைபெற்றது*. 

*இந்த ஆண்டும் அதே இடத்தில் மிகவும் சிறப்பாக ஆராத்தி விழா நடைபெற்றது*. 
*நிகழ்ச்சி ஏற்பாடுகள்*
*ஆலய வழிபாட்டு* *குழு*
*இ ராஜசேகர்*

*மற்றும் அம்சா பாஸ்கரன் செய்தனர்*

*ஆராத்தி திருக்கண்டேஸ்வரம் குருக்கள் சேனாதிபதி தலைமையில் நடைபெற்றது*.

No comments:

Post a Comment

Followers

முப்பத்து முக்கோடி தேவதைகள் யார் தெரியுமா?

முப்பத்து முக்கோடி தேவதைகள் யார் தெரியுமா? பக்கத்து கோவிலில் பசுமாட்டுக்கு  பூஜை செய்தபோது தீபாராதனை காட்டி பசுவை வணங்குங்கள்.  ...