Showing posts with label #sivan #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts
Showing posts with label #sivan #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts

Tuesday, May 7, 2024

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன ?

உன்னையன்றி வேறுதெய்வம் உள்ளம் எண்ண வில்லையே
ஓசைகொண்ட தமிழினாலே பாடுவேன் உன் பிள்ளையே
அன்னை, பிள்ளை மழலையிலே அகம் குழைதல் போலவே
அணிய வேண்டும் எனது சொல்லும் ஆதி வைத்தியநாதனே. 1
தேசமெங்கும் கோயில்கள் திறந்து வைத்த வாயில்கள்
தேடும் அன்பர் யார்க்கும் இன்பம் கோடிநல்கும் மூர்த்திகள்
பூசைகொள்ளும் தேவர்கள் யாவையும் நின் கோலமே
போற்றும் என்னை வாழ்விலேமுன் னேற்றுவைத்ய நாதனே 2

ஓதும் நாலு வேதமும் உலாவு திங்கள், ஞாயிறும்,
உகந்த கந்தவேள், சடாயு உண்மை அன்பின் ராமனும்
பாதபூசை செய்யவே பலன் கொடுத்த ஈசனே
பாதிகொண்ட தையலோடு வாழி வைத்ய நாதனே 3

ஆலகால நஞ்சை நீ அமிர்தமாய் அருந்தினாய்
அடித்துவைத்த பன்றியின் இறைச்சியும் விரும்பினாய்
பாலன் நஞ்சு தேடவோ? பன்றிவேட்டை ஆடவோ?
படைத்தபா சுவைத்தருள் பராவும் வைத்ய நாதனே. 4

வாத, பித்த, சிலேட்டுமம் வகைக்கு நூறு நோய்க்குலம்
மனிதராசி அறிகிலாத புதிய நோய் தினம், தினம்
வேதனை வளர்ந்ததன்றி வென்றதோ மருத்துவம்?
மேலும் என்ன கூறுவேன்? கண் பாரும், வைத்ய நாதனே 5

ஆயுர்வேதம் ஆங்கிலம் அமைந்த சித்தவைத்தியம்
ஆனவேறு வகையிலும் அனேகமான பத்தியம்!
பாயும் நோயும் போனதே? பலித்து நன்மை ஆனதோ?
பாவியேன் என் கூட்டத்தோடுன் பாரும் வைத்ய நாதனே. 6

அங்குமிங்கும் ஓடிஎன்ன? அகலவில்லை நோய்களே
ஆடி என்ன? பாடி என்ன? விலகவில்லை பேய்களே
மங்கைபாகன் நீயிருக்க எங்கு செல்வோம் சேய்களே?
மனமிரங்கி அருள்வழங்கு வாழி வைத்யநாதனே. 7

கண்ணில்லாத குருடருக்கும் கண்கொடுக்கும் ஈசனே
கால் இலாத முடவருக்குக் கால் கொடுக்கும் போஜனே
எண்ணிலாத நோயின் கூட்டம் இடமிலாமல் ஓடவே,
என்னுளே எழுந்தருள்வாய் அண்ணல் வைத்ய நாதனே. 8

சிந்தையில் இருந்த நோய் செயல்களால் விளைந்த நோய்
திசுக்குள், தோல், நரம்(பு), எலும்பு, குருதியில் செறிந்த நோய்
எந்த நோயும் போக்குவாய் எதிர்வராமல் ஆக்குவாய்
இசைந்தகந் புரியிலே அமர்ந்த வைத்யநாதனே. 9

நாம, ரூப பேதமற்ற ஞான ஜோதி மூர்த்தியே
நாளும் உன்னை அன்புசெய்து பாடுகின்றேன் வாழ்த்தியே
சாமவேத கீதனே சடாயு போற்றும் பாதனே
தஞ்சம், தஞ்சம், தஞ்சம் என்னைத் தாங்கு வைத்ய நாதனே.
வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தியநாதர் திருவடிகளே சரணம்

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன ?

சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... 

ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... 

என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.

சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். 

வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

Monday, March 11, 2024

இனிய ஈசன் சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்.

🌺இனிய ஈசன் சிவனை பற்றி நாம் அறியாத உண்மைகள்.🌺
🌹அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவமே என் வரமே 🌹

ஆலவாயர் அருட் பணி மன்ற எம் குருவான தந்தையை பணிந்து 🙏

சிவனின்றி ஓர் அணுவும் அசையாது

*10000 வருட பழமை மிக்க தமிழர்களின் சிவலிங்கம் அமெரிக்காவில் கண்டு பிடிப்பு .

தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.

அதெப்படி *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்பது வரும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்திருக்கும் அதனுடைய விளக்கங்கள்.

சிவபூமிதான் நாம் வாழும் பூமி .

இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.

தில்லி பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர்

இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.

தமிழகத்திலுள்ள ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.

பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.

நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி,இந்தசிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)

திருக்கேதீஸ்வரம்,

திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)

ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப் போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.

உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில் சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்

புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப் போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.

படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,

ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய உலகங்களையும்,

வாழ்க்கையையும்,

பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து மும்மூர்த்தி நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில் உள்ள திரிநாடு(த்ரிநாட்).

வட அமெரிக்காவில்கொலராடா என்றஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.

இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிவலிங்கத்தின் வடிவத்தில் வத்திக்கான் சிட்டி டாப் வியூ சிவலிங்கம் வடிவத்தில் வத்திக்கான் நகரம் கட்டப்படுவதை ஒருவர் கவனிக்க முடியும் (மேல் பார்வையில் இருந்து பார்க்கப்படுகிறது)

அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம் பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.

பாபிலோனியா களிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.

சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.

சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.

எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.

எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்

சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.

சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.

நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே தவம் எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்

அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Saturday, December 23, 2023

சிவபெருமான் பற்றிய 50 தகவல்கள்.

சிவபெருமான்  பற்றிய
தகவல்கள்.
1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை

19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)..

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)

25. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்

38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது..

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்

53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்.
1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை

19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)..

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)

25. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்

38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது..

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்

53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்.

Friday, November 10, 2023

குங்கிலயக்கலயனாருக்காக நிமிர்ந்த தாடகைஈச்வரர்...!#

குங்கிலயக்கலயனாருக்காக நிமிர்ந்த  தாடகைஈச்வரர்...!
அந்த பெண்ணுக்கு தாடகை என்று பெயர் திருமணமாகி வெகு காலமாகியும் குழந்தை இல்லை .

உற்றாரும் ,சுற்றத்தாரும் முணுமுணுக்க ஆரம்பிக்க ,மன உளைச்சல் ஏற்பட்டு அதனை தவிர்க்க தினமும் அருகில் மரத்தடியில் வீற்றிருந்த சிவன் கோவிலுக்கு மனஅமைதிக்காக செல்ல ஆரம்பித்தாள் .

மனிதர்கள் செவி சாய்க்காத நிலையில் இறைவனை தவிர வேறேது புகலிடம் .விளக்கேற்றுவது ,மாலை சூட்டுவது , மனக்குறைகள் சொல்லி புலம்புவது என தினசரி வழக்கமாகிறது .

ஒரு நாள் மிக அழகாக ,முல்லை ,செவ்வந்தி ,மரிக்கொழுந்து ,பன்னீர் பூ என பலவித மலர்களால் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவிக்க புறப்பட்டு செல்கிறாள் .

இறைவன் திருமுன் அருகே வந்து மாலை அணிவிக்க முற்படுகையில் சேலையின் மாராப்புசரிகிறது .இயல்பாக சரி செய்து கொள்ளும் கைகளில் மாலை இருக்க , சுற்றி யாரும் இல்லையெனினும் சிவன் ஆண் தானே என்ற ஒரு நொடிப்பொழுது தயக்கம் ஏற்படுகிறது .

அதே நொடியில்

(சிவலிங்கமாக உள்ள இறைவன் தலையை வளைத்து)

இறைவன் தலை வணங்கி மாலையை ஏற்றுக்கொள்கிறார் .

அதிர்ந்த தாடகை என் சிவனே என்று மனம் நெகிழ்ந்து பணிந்து வேண்டியவையும் விரும்பியவையும் அடைந்து நல்வாழ்வு பெற்றாள்.

இந்த நிகழ்வுக்கு வெகு காலத்திற்கு பின் அரசர்களால் அந்த மரத்தடியில் உள்ள சிவபெருமானுக்கு கோவில் கட்டப்படுகிறது .

கோவில் முழுமை அடைந்த பின் அரசர் ஏன் இந்த சிவலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது என யோசித்து அதனை நிமிர்த்த குதிரை ,யானை இவற்றில் கட்டி இழுத்து முயற்சி செய்கிறார் .ஒன்றும் இயலவில்லை .

இறைவனின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனாருக்கு தகவல் அறிந்து அங்கு வருகிறார் .சிவலிங்கத்தின் மீது ஒரு நுனியும் , தனது கழுத்தில் ஒரு நுனியும் கயிற்றை இறுக்கி கொண்டு ஐயனே நீங்கள் நிமிர வேண்டும் அல்லது எனது உயிரை தங்கள் திருவடி சேர்ப்பிக்க வேண்டும் என கூறி இழுக்க சிவலிங்கத்தின் பாணம் நேராகியது .

இருப்பினும் தாடகைக்காக தாழ்ந்து ,குங்கிலயக்கலயனாருக்காக நிமிர்ந்ததால் இன்றும் அந்த சிவலிங்க வடிவின் பாணம் ஒரு முறுக்கிய துணியின் வடிவிலே இருப்பதை காணலாம் .

தாடகைஈச்வரம் என்று அழைக்கப்படும் திருப்பனந்தாள் கும்பகோணம் அருகில் உள்ளது .

ஓம் நமசிவாய..!!!

Friday, October 20, 2023

சுடுகாட்டில் சிவன் ஏன் ???

🔥🕉️ #சுடுகாட்டில் சிவன் ஏன் ???
 🔥🙏🏼#மாபெரும் கருணையை உணரவேண்டி !!!!

#நமசிவாய

🕉️🔱🔥 #சிவன் சுடுகாட்டில் ஆடும் சாமி !!! ?? என்று இன்று பலர் குழம்பி !!! மற்றவர்களையும் குழப்பி ??? மெய் உணராமல் இருப்பவர்கள், மெய் உணரவேண்டி ஈசன்  திருவருளால் இப்பதிவு.

🙏🏼#மெய் உணர்ந்து, மெய்யை பற்றி இன்புறும் அடியார்கள் பாதம் பணிகிறேன்,

👹#சுடுகாடு :

உயிராகிய மெய், இருந்த கூடுஆகிய உடலை விட்டு பிரிந்த பின், கூடுஆகிய உடலை ( பயனற்ற கூட்டை ) நெருப்பு கொண்டு எரிக்கும் இடம்.

👹🔥 #சுடுகாட்டில் உயிரின் நிலை :

உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம், உயிர்யற்ற உடல் பிணம் ( சவம் ),
50 – 60 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும்போது, தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் பரிதவிக்கும், ( 1 ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு பிரியும்போது ஏற்படும் உணர்வு போல -  50 – 60 ஆண்டு காலம் இருந்த கூடு )

🙏🏼#தமக்கு என்றும் நிரந்தரம் நினைத்து பேணி காத்த உறவுகள் அனைத்தும் உடலை எரித்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டனர், இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமது இல்லை என்று மெய்யை உணர்ந்து  பரிதவிக்கும் போது.

🔥#சுடுகாட்டில் சிவம் :

உயிர் பரிதவிக்கும் போது மாபெரும் கருணையாளன் நம்பெரும் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அபயம் அளிக்கிறார்,

🙏🏼#இதை_உணர்த்தவே அப்பர் பெருமான் “ திருஅங்கமாலை “ தேவாரத்தில்

“”உற்றார் ஆருளரோ - உயிர் கொண்டு போகும்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ. “”

🔥🙏🏼#மிக_தெளிவாக கூறியுள்ளார்.

யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்ப்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் கருணையுடன் அடைக்கலம் தந்து அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று கூறுவது எவ்வளவு சிறுமை !!! என்று உணருங்கள் .

👹🔥🙏🏼#சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை, அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன், நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெருமும் கருணையோடு காக்கிறான் என்று உணர்த்தவே, ஈசன் திருவருளால் இப்பதிவு.

🔥#உய்வு_பெறவேண்டிய உயிர்கள் உய்யும் பொருட்டு

🔥#திருச்சிற்றம்பலம்🔥

Thursday, October 19, 2023

தீராத நோய் தீர்க்கும்ஆதிரத்னேச்வரர்...!வருண விநாயகர் - திருவாடானை

தீராத நோய் தீர்க்கும்ஆதிரத்னேச்வரர்...!
வருண விநாயகர் - திருவாடானை
சூரியனுக்கு ஒளி கொடுக்கும்படியாக ஆதிரத்னமாக இருந்து இறைவன் அருளிய திருத்தலம் திருவாடானை.

ஆடு - யானை சேர்ந்த விநோத உருவம் வழிபட்ட கோயில்.

இறைவன், `ஆதிரத்னேச்வரர்’ என்றும் அம்பிகை, `அம்பாயிரவல்லி’, `சிநேகவல்லி’ என்றும் அழைக்கப்பெறுகிறார்கள்.

முற்காலத்தில் இந்தத் தலத்துக்கு, `பாரிஜாத வனம்’ என்றும், `ஆதிரத்னபுரி’ என்றும் பெயர்கள் இருந்தன. புஷ்ப பத்திரை என்னும் நதிக்கரையில் துர்வாச முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது வருணனுடைய மகன் வாருணி என்பவன் அவருடைய தவத்துக்கு இடையூறு செய்தான். துர்வாசர் கோபத்தில் அவனைச் சபித்தார்.

அதனால், ஆட்டுத்தலையும் யானை உடலும் கொண்ட விநோத வடிவத்தைப் பெற்றான். யானையில் உடல் ஏற்பட்டதால், பசியால் மிகவும் துன்பப்பட்டான். துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டினான். 12 ஆண்டுகள் இதே வடிவத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டு மென்று தீர்மானமாகக் கூறிவிட்டார் துர்வாசர்.

வருணனும் அவரிடம் வேண்டி பணிந்தான். அதன்பின்னர் அவர் காட்டிய வழியில் பல தலங்களையும் தரிசித்து. தன் மகனுடன் பாரி ஜாத வனத்துக்கு வந்தான். அந்தத் தலத்திலுள்ள சூரிய தீர்த்தத்தில் இருவரும் நீராடினார்கள். முதலில் விநாயகரைப் பூஜித்தான்.

வருணன் பிரதிஷ்டை செய்து பூஜித்த வருண விநாயகர் இங்கே பிராகாரத்தில் அருள்பாலிக்கிறார்.

வாருணி, ஆதிரத்னேச்வரரை முறைப்படி வழிபாடு செய்து சாபம் நீங்கப் பெற்றான்.

ஆடும் யானையுமாக இருந்த வாருணி பூஜித்து சாபம் நீங்கியதால், ஆடானை என்று இந்தத் தலத்துக்குப் பெயர் ஏற்பட்டது. இதனால் இந்த இறைவனுக்கு, `அஜகஜேச்வரர்’ (அஜம் - ஆடு; கஜம் - யானை) என்ற பெயரும் உண்டு.

காரைக்குடியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், தேவக்கோட்டையில் இருந்து 28 கி.மீ தொலைவிலும் இந்தத் தலம் அமைந்துள்ளது. `இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும்’ என்று திருஞானசம்பந்தர் அறுதியிட்டுக் கூறுகிறார்.

சிவ_லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சி

🔥#நன்னெறி கருத்துக்கள்...🙏🏼

🔥🕉️ #சிவ_லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சி..🙏🏼
#ரஷ்ய விஞ்ஞானி டாக்டர் விளாதி மீரின் என்பவரின் ஆராய்ச்சியில் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கூறுகிறார். லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து. 

🕉️🔥#ஒரு_ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் தனக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார். லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒரு பொருள் தருவதாகவும் இருக்கிறது என்கிறார். குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது. லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால் அது மழை தரும் நெருப்புத் தரும் காற்று தரும் கேட்ட எல்லாம் தரும் என்றும் கூறுகிறார்.

🙏🏼🔥#சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரம் என்கிறார். டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியது. இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளம். அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறது. ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும் ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த கூட்டுறவோடும் செயல்படுகிது. சிவமூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார். இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன. மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன. 

🙏🏼🔥#இவை_சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார். சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை. காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக்கிறார்கள் என்று கூறும் விளாதிமீர் மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார். 

🙏🏼🕉️🔥 #சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்.

🔥#இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும் இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன் நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப்புராணங்கள். இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது. இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா ஐரோப்பா கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து. அமெரிக்காவில் கிராண்ட் கன்யான் என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் சிவம், விஷ்ணு, பிரம்மன் மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படுகின்றன. ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.🙏🏼

🔥#உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம். ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது. அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும் அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது. ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது. இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட அல்லது உணர்ந்து விட ஏதுவாகிறது. அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து. இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...🙏🏼

Monday, October 16, 2023

*தாமிரபரணி தவழும் நவகைலாயங்கள்.!!*

*தாமிரபரணி தவழும் நவகைலாயங்கள்.!!*
தோஷங்களை விலக்கும் ஆலயங்கள் பல்லாயிரம் உள்ளபோதிலும் 
நவகைலாய வழிபாடு தோஷங்களை விலக்கவும் நலம் பெறவும் உதவும் என்பது நம்பிக்கை.! 

பொதிகைமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர் சிவமுக்தி நிலையை அடையவேண்டி சிவபெருமானை வணங்கினார்.! 

சிவபெருமான், 
மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார்.

 அகத்திய மாமுனிவர்
தன்சீடரிடம் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்தமலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடு. நீ வணங்கும் சிவலிங்கம் ஸ்ரீகைலாசநாதர் என்றும், உமையாள் ஸ்ரீ சிவகாமி அம்மை என்றும் விளங்கும். அதன்பின்பு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் சிவமுக்தி பேறு அடையலாம் என்றார்.! 

*பாபநாசம்:*
இதுமுதல் கோயில்   ஸ்ரீபாபநாசநாதர் என்ற ஸ்ரீகைலாசநாதர்  உலகம்மை கோயில் உள்ளது. சூரியபகவான் அம்சம் கொண்டது.!

*சேரன்மகாதேவி:* ஸ்ரீஅம்மைநாதர் என்ற கைலாசநாதர் ஆவுடைநாயகி திருக்கோயில் சந்திரபகவான் அம்சம் கொண்டதலம்.!

*கோடகநல்லூர்:* ஸ்ரீகைலாசநாதர்
சிவகாமி அம்மை திருக்கோயில்.  செவ்வாய்பகவான் அம்சம் கொண்டதலம்.!

*குன்னத்தூர்:* அருள்மிகு ஸ்ரீகோதை பரமேஸ்வரன் என்ற கைலாசநாதர் சிவகாமசுந்தரி திருக்கோயில் ராகுபகவான் அம்சம் கொண்டதலம்.!

*முறப்பநாடு:*  அருள்மிகு ஸ்ரீகைலாசநாதர் சிவகாமி அம்மை திருக்கோயில்.  குருபகவான் அம்சம் கொண்டதலம்.!

*ஸ்ரீவைகுண்டம்:* அருள்மிகு கைலாசநாதர்-சிவகாமி அம்மை திருக்கோயில்.  சனிபகவான் அம்சம் கொண்டதலம்.!

*தென்திருப்பேரை*:  அருள்மிகு ஸ்ரீகைலாசநாதர்
அழகிய பொன்னம்மை திருக்கோயில். புதன்பகவான் அம்சம் கொண்டதலம்.!

*ராஜபதி:* அருள்மிகு ஸ்ரீகைலாசநாதர் பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். 
 கேதுபகவான் அம்சம் கொண்டதலம்.!

*சேர்ந்தபூமங்கலம*: அருள்மிகு ஸ்ரீகைலாசநாதர்-
அழகிய பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். 
 சுக்கிரன்பகவான் அம்சம் கொண்டதலம்.!

*நவகைலாய நாயகனை*
*வலம்வருவோம்.!!*

வாழ்க வளமாக 
.

Thursday, October 12, 2023

தேவார வைப்புத் தலங்கள், 276

சிவ சிவ

நமசிவாய வாழ்க 
தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும். இவை சைவர்களால் போற்றப்பெறுகின்றன. இவ்வாறான தேவார வைப்புத் தலங்கள், 276 தேவாரத்தலங்களிலிருந்து வேறுபட்டனவாகும். [1] கீழுள்ள பட்டியலின்படி வைப்புத்தலங்கள் 147 ஆகும். 

வரிசை எண் தலப்பெயர்/இன்று வழங்கும் பெயர் (மாவட்டம்)

101 நல்லக்குடி/நல்லத்துகநாடு) #அப்பர்

 
103 நாகளேச்சரம்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

104 நாங்கூர்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) #சுந்தரர்

105 நாலூர்/- (தஞ்சாவூர், சோழ நாடு) #அப்பர்

106 நியமம்/நேமம் (தஞ்சாவூர், சோழ நாடு) #அப்பர்

107 நெடுவாயில்/நெடுவாசல் (நாகப்பட்டினம், சோழ நாடு) #சம்பந்தர்_அப்பர்

108 நெய்தல்வாயில்/நெய்தவாசல் (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

109 பஞ்சாக்கை/- (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

110 பன்னூர்/பண்ணூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) #சுந்தரர்

111 பரப்பள்ளி/பரஞ்சேர்வழி (ஈரோடு, கொங்கு நாடு) #அப்பர்

112 பழையாறை/கீழப்பழையாறை (தஞ்சாவூர், சோழ நாடு) #சம்பந்தர்

113 பிடவூர்/திருப்பட்டூர் (திருச்சி, சோழ நாடு) அப்பர், சுந்தரர்

114 பிரம்பில்/பெரம்பூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

115 புதுக்குடி / (திருவாரூர், சோழ நாடு) #அப்பர்

116 புரிசைநாட்டுப் புரிசை/புரிசை (திருவண்ணாமலை, தொண்டை நாடு) #சுந்தரர்

117 புலிவலம்/- (திருவாரூர், சோழ நாடு) #அப்பர்

118 பூந்துறை/சிந்து பூந்துறை (திருநெல்வேலி, பாண்டிய நாடு) #அப்பர்

119 பெருந்துறை/- (புதுக்கோட்டை, சோழ நாடு) #அப்பர்

120 பேராவூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

121 (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர்-கோயம்புத்தூர் (கோயம்புத்தூர், கொங்கு நாடு) #அப்பர்_சுந்தரர்

122 பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் (திருநெல்வேலி, பாண்டிய நாடு) #அப்பர்

123 பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் (திருவண்ணாமலை, தொண்டை நாடு) #சுந்தரர்

124 பொய்கைநல்லூர்/பொய்யூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

125 மணற்கால்/மணக்கால் (திருவாரூர், சோழ நாடு) #அப்பர்

126 மணிக்கிராமம்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

127 மந்தாரம்/ஆத்தூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

128 மாகாளம்/ஆனை மாகாளம் (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

129 மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம், வட நாடு) #அப்பர்

130 மாகுடி/மாமாகுடி (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

131 மாட்டூர்/சேவூர் (கோயம்புத்தூர், கொங்கு நாடு)  #அப்பர்_சுந்தரர்

132 மாட்டூர்/மாத்தூர் (நாகப்பட்டினம், சோழ நாடு)  #அப்பர்_சுந்தரர்

133 மாந்துறை/திருமாந்துறை (தஞ்சாவூர், சோழ நாடு) 

134 மாறன்பாடி/இறையூர், எறையூர் (விழுப்புரம், நடு நாடு) #சம்பந்தர்

135 மிழலைநாட்டு மிழலை/ தேவமலை (புதுக்கோட்டை, சோழ நாடு) #சுந்தரர்

136 முழையூர்/- (தஞ்சாவூர், சோழ நாடு) #அப்பர்

137 மூலனூர்/- (ஈரோடு, கொங்கு நாடு) #சுந்தரர்

138 மூவலூர்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) #சம்பந்தர், #அப்பர்

139 மொக்கணீச்சுரம்/- (கோயம்புத்தூர், கொங்கு நாடு) 

140 வடகஞ்சனூர்/- (விழுப்புரம், நடு நாடு) #சுந்தரர்

141 வளைகுளம்/வளர்புரம் (வேலூர், தொண்டை நாடு) #அப்பர்

142 வழுவூர்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

143 வாரணாசி/காசி (உத்தரப்பிரதேசம், வட நாடு) #சம்பந்தர்

144 விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி (நாகப்பட்டினம், சோழ நாடு) #அப்பர்

145 விளத்தொட்டி/ (தஞ்சாவூர், சோழ நாடு) #அப்பர்

146 விவீச்சுரம்/பீமாவரம் (ஆந்திரம்) #அப்பர்

147 வெற்றியூர்/திருவெற்றியூர் (சிவகங்கை, பாண்டிய நாடு) சம்பந்தர், #அப்பர், #சுந்தரர்

ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன்
9443548747 நெல்லிக்குப்பம்..

விஜயதசமியில்_வேண்டியவை_கிடைத்திடகடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு வாங்க.

#விஜயதசமியில்_வேண்டியவை_கிடைத்திட
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் முவ்வாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான வன்னி மரம் உள்ளது. இங்கு வசித்து வந்த விபசித்தி முனிவரால் கட்டப்பட்ட கோயில் இது.  அவர் சிவாலயம் கட்ட உத்தேசித்து, வேலையாட்களை திருப்பணியில் ஈடுபடுத்தினார். வேலையாட்களுக்கு கூலியாக, இங்குள்ள வன்னி மரத்தின் இலைகளை உருவி கொடுப்பார். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அதற்குத் தகுந்த பொன்னாக அந்த இலைகள் மாறும். இது கல்வெட்டுச் சான்றுகளிலும் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை இந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் இந்த பழமையான வன்னி மரமும் இதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் உள்ளது. இதனை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். 
இத்தகைய பெருமை வாய்ந்த இந்த வன்னி மரத்தையும் விருத்தகிரீஸ்வரையும் விஜய தசமி நன்னாளில் பூஜித்தால் செல்வம் பெருகும் என்பது தெய்வீக நம்பிக்கை.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Wednesday, October 11, 2023

குஞ்சிதபாதம் என்றால் என்ன?

குஞ்சிதபாதம் என்றால் என்ன?
குஞ்சிதபாதம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு;

தில்லைக் கூத்தப்பிரானின் வளைந்த தூக்கிய திருவடி.

தூக்கிய திருவடிக்கு குஞ்சிதபாதம் என்று பெயர்.

மற்றொரு பொருள் சிதம்பரத்தில் தயாரிக்கப்படும் மூலிகை வட்டமாகும். இது நடராஜர் காலை அலங்ரிக்கும்; 

வெட்டிவேர் மற்றும் மூலிகைப் பொருளைக் கொண்டு வட்டமாகத் தயாரித்து இருப்பர். அதை நடராஜனின் காலில் அணிவிப்பர்.

சிவபெருமானின் இடது பாகத்தில் சக்திதேவி இருக்கிறார்.
சிதம்பரத்தில் சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ? என்பது அதில் ஒரு வரி.

நடராஜரின் துணைவியான சிவகாமி, அவர் அருகில், இரண்டு கால்களையும் நன்றாக ஊன்றித்தான் நிற்கிறாள். ஆனால்,
அவளுக்கு பாதம் வலிக்குமென இவர் காலை தூக்கிக் கொண்டாராம். அதாவது சிவனே, நடராஜர் என்னும் பெயரில் நடனம்
ஆடுகிறார். 

அவரது இடது பாகத்தை, தன் மனைவிக்கு கொடுத்து விட்டார். இவர் நடனமிடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் வலிக்குமே என, காலை உயர்த்திக் கொண்டார்m

 எமதர்மராஜன், மார்க்கண்டேயனைத் துரத்திப் பாசக்கயிற்றை வீசிய போது மார்க்கண்டேயன், சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் கோபம் அடைந்து எமனை இடது காலால் எட்டி உதைத்தார் ஈசன். 

தாயும்-தந்தையுமான சிவ-சக்தியை மார்க்கண்டேயன் சரண் அடைந்ததால் சிவபெருமான், சக்தி தேவியின் அம்சமான தனது இடது பாகத்தில் உள்ள பாதத்தால் எமனை எட்டி உதைத்தார். அந்த இடது கால் சக்தி தேவியின் அம்சம் என்கிறது புராணம்.
அதனால் ஆடல் நாயகனைத் தரிசிக்கும் போது கண்டிப்பாக இடது காலைத் தரிசிக்க வேண்டும். 

அப்படித் தரிசித்தால் செய்வினை பாதிப்பு, சனீஸ்வரால் ஏற்படும் தொல்லை மற்றும் பொதுவாக ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், வியாதிகள் நீங்கும். மோட்சம் கிடைக்கும். உடல் வலிமை பெறும் என்கிறது சாஸ்திரம்.

*ஓம் சிவாய நம"

Tuesday, October 10, 2023

திருக்குற்றாலம் குற்றாலீஸ்வரர் ஆலயம்.

சிவாயநம
நமசிவாய

திருக்குற்றாலம் குற்றாலீஸ்வரர் ஆலயம். 
எல்லாம்வல்ல எம்பெருமான் ஈசன் திருவருளால் உலக சிவனடியார்கள் திருக்கூட்ட சிவனடியார்களுடன் திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலயதரிசனம்.

திருநெல்வேலி மாவட்டத்தில்  சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த,
பாண்டியநாட்டு தலங்களில் 13 வது தலமாக விளங்கும்
    
திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதை சமப்படுத்த சிவன் அகத்தியரை அழைத்து,""நீ ஒருவன் மட்டும் தென்திசை சென்றால் போதும், உலகம் சமநிலைக்கு வந்துவிடும். அத்துடன் இதுநாள் வரை குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜை செய்தால் எங்களது திருமணத்தை இங்கிருந்தபடியே தரிசிக்கலாம்,'' எனக்கூறி அனுப்பிவைக்கிறார்.

சிவனின் கட்டளைப்படி அகத்தியர் குற்றாலம் வந்து, விஷ்ணு வடிவில் அருள்பாலிக்கும் சிவனை தரிசிக்க செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலகர்கள் சைவ சமயத்தை சேர்ந்த அகத்தியரை கோயிலுக்குள் விடவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள இலஞ்சிக்குமாரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வெண்மணலில் லிங்கம் பிடித்து, சிவனை வழிபட்டார்.

தான் குற்றாலத்தில், சிவதரிசனம் செய்ய அருளும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த முருகன், ""அகத்தியரே! தாங்கள் சிவக்கோலத்தை கலைத்துவிட்டு, வைணவக்கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவலிங்கமாக்கி வழிபாடு செய்யுங்கள்,''என யோசனை கூறுகிறார்.

முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், ரத்தினம் இருந்த இடத்தில் பாம்பு என அனைத்தும் மாறியது.

அத்துடன் உயரமாயிருந்த திருமாலின் தலையில் கைவைத்து, திருமேனி குறுக குறுக என சிவனை வேண்டி பிரார்த்தனை செய்ய, நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறி விடுகிறார். அந்த இடத்திலேயே அகத்தியருக்கு திருமண காட்சி கிடைக்கிறது. இன்றும் கூட இத்தலத்தில் பகலில் தேவர்களும், இரவில் அகத்தியரும் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அகத்தியர் தன் கைவிரல்களால் சிவலிங்கத்தில் தலையில் வைத்து அழுத்தியதால் இன்றும் கூட லிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதை காணலாம்.

இலஞ்சியில் அகத்தியர் பூஜித்த சிவன், "இருவாலுக நாயகர்' என்ற பெயரில் அருளுகிறார். குற்றாலநாதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் இந்த சிவனை தரிசித்துவிட்டு இங்கு வருவது விசேஷ பலனைத் தரும். இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதைக் காணலாம். திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி, கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து இந்த வடிவத்தை பார்க்கலாம்.

மகாலட்சுமியின் அம்சமான சங்கு, ஆற்றலின் வடிவமாகும். இதன் ஒலி, சக்தியைத் தருவதாகும். எனவேதான், சிவபூஜையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் உண்டு. இதன் அடிப்படையிலும், இக்கோயில் சங்கின் அமைப்பில் அமைந்திருப்பதாகச் சொல்வர். இங்கு 8 கால பூஜையிலும், சிவன் சன்னதியில் சங்கு ஊதுகின்ற
தலமாக திகழும்

 திருஞானசம்பந்தர், பட்டினத்தார்,அருணகிரிநாதர் மற்றும் மாணிக்கவாசகரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும் 
 
பஞ்சசபைகளில் ஒன்றான சித்திரசபையாக திகழும் 
திருக்குற்றாலம் (திரிகூடமலை) என்னும் ஊரில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் குழல்வாய் மொழியம்மை, (பராசக்தி) அம்பாள் உடனுறை அருள்மிகு குற்றாலீஸ்வரர் (குற்றாலநாதர்) சுவாமி ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் அடியேனுக்கு அளித்தார்.

மேலும் அனைத்து அடியார்பெருமக்களும் இங்குவந்து இந்த இறைவனை தரிசனம் செய்து இவரின் பரிபூர்ண திருவருளை பெறவேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்கின்றோம்.

திருச்சிற்றம்பலம்.

பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோவில்திருவிடைமருதூர்

முன்னோர்கள் சாபம் நீங்க – கோவில் பரிகாரம் -பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோவில்
திருவிடைமருதூர்
உலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது இதற்கு உரிய பரிகாரங்கள் என்ன 

''பிரம்மஹத்தி தோஷம் என்பது,  கொடுமையான பாவங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது, பசுவைக் கொல்வது, குருவை உதாசீனப்படுத்துவது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது, தெய்வச் சொத்தைத் திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் ஏற்படும். குறிப்பாக நன்றி மறப்பதால்தான்  இந்த தோஷம் ஏற்படுகிறது. 

இந்த தோஷம் இருந்தால், ஜாதகர் தனது பிறவியில் என்ன உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல், வறுமையும் தோல்விகளையுமே சந்தித்து  வாழ்வார். வேலை கிடைக்காது, வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது. இந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல. பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிய வண்ணம் இருப்பார்கள். ஏன் சிலவேளைகளில் அவர்களது குடும்பத்திலே கூட அவர்களுக்கு மரியாதை இருக்காது.  இதற்கு அவர்கள் பெரிய அளவில் செலவில்லாத முறையான எளிய  பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.

பிரமஹத்தி தோஷம் ஒருவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி அறிந்து கொள்வதெனப் பார்ப்போம்.

லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும்,  5, 9 - ம் வீடுகளுக்கு  அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம். 

*  ராகுவின் இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 - ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும்  (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.

பரிகாரங்கள்: 

* சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் உள்ள தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்த வேண்டும். இது தவிர  ஒரு பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது  அல்லது வயது முதிர்ந்த ஏழைத் தம்பதியருக்கு வீட்டில் உணவளித்து அவர்களுக்கு புதிய துணிமணிகள் வாங்கிக்கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொள்ள வேண்டும். 

* உத்தமர்கோவில், கொடுமுடி, கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் கோயில்களுக்கு புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சென்று தோஷ நிவர்த்தி பூஜை செய்துகொள்வது நல்லது.

* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எள்ளுச் சாதம் நைவேத்தியம் செய்து எல்லோருக்கும் கொடுத்தால் நல்ல பலன் அளிக்கும்.

* திருபுல்லாணி சென்று, இறந்த மூத்தோருக்கு (தகப்பனார் இல்லாதவர்கள்) பித்ருக் கடன் செய்து அதற்கு அருகே உள்ள தேவிப்பட்டினத்தில் உள்ள நவ பாஷாணத்திலான நவகிரகங்களின் வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.

முன்னோர்கள் சாபம் நீங்க – கோவில் பரிகாரம் -பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோவில்

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு போட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். ஒரு சிலருக்கு உடல்நல ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டேயிருக்கும். வேறு சிலர் வசதியின்றி, வறுமையில் கஷ்டப்பட்டு வருவர். அது மட்டுமில்லாமல் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போதல், குழந்தை பேறின்மை, திருமணமான தம்பதியரிடையே பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள், துன்பங்கள் போன்றவைகள் வருவதற்கு தலைமுறை, தலைமுறையாக ஏற்படும் முன்னோர்களின் சாபங்கள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது. அதையடுத்து, முன்னோர்களின் சாபங்களை போக்குவதற்கான கோயில் குறித்து பார்க்கலாம்.

* பிரம்மஹத்தி தோஷம் :

• சாபங்களிலேயே மிகவும் கொடிய சாபமாக முன்னோர்களின் சாபமே பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படுகிறது.
• பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோயிலாக கும்பகோணம் அருகே உள்ள திருவுடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
• 1200 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் போன்றோர்களால் பாடப்பட்டதாகும்.
• முன்பொரு சமயம் மதுரையை அரசாட்சி செய்து வந்த வரகுண பாண்டியன் என்ற மன்னன் வேட்டைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தான்.
• அப்போது சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்த அந்தனன் மீது குதிரையின் கால்பட்டு இறந்து விட்டான்.
• இந்த செயல் பாண்டிய மன்னனுக்கு தெரியாமலே நடந்தது என்றாலும் மன்னனை, பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.
• பெரிய சிவபக்தனான வரகுண பாண்டியன் இதிலிருந்து விடுபட மதுரை சோமசுந்தரரை வணங்கினான்.
• அப்போது வரகுண பாண்டியன் கனவில் தோன்றிய சிவபெருமான், சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் என கூறினார்.

* திரும்பி வரும் போது…

• எதிரி மன்னனாக திகழும் சோழ நாட்டிற்குள், எப்படி செல்வது என நினைத்துக் கொண்டிருந்த போது, பாண்டிய நாடு மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருப்பதாக செய்தி கிடைத்தது.
• அதையடுத்து, போரில் வென்ற வரகுண பாண்டியன், சோழ படைகளை அவர்களது எல்லைக்கு விரட்டினான்.
• அப்போது திருவிடைமருதூர் கோயிலில் கிழக்கு வாயில் வழியாக சென்று மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்து பாண்டிய மன்னன் வழிபட்டான்.
• வரகுண பாண்டிய மன்னன் கோயிலுக்குள் நுழையும் போது, அவரை பற்றி இருந்த பிரம்மஹத்தி தோஷம் வெளியே நின்றது.
• வரகுண பாண்டியன் திரும்பி வரும் போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம் என நினைத்து காத்திருந்தது.
• அப்போது சிவபெருமான், நீ மேற்கு வாயில் வழியாக வெளியே போ என கூறினார். அதனால் வரகுண பாண்டியனை தொற்றி இருந்த பிரம்ஹத்தி தோஷம் நீங்கியது.
• அதையடுத்து, பாண்டிய மன்னன் சென்றது போலவே, இன்றும் இந்த கோயிலுக்கு செல்லும் சிவ பக்தர்கள் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து, மேற்கு வாயில் வழியாக வெளியே செல்வது வழக்கமாக உள்ளது.

* சிறப்பு :

• உலகளவில் மருத மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டிருக்கும் 3 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீசைலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவை மற்ற 2 கோயில்களாகும்.
• திருவுடைமருதூர் கோயிலில் இருக்கும் 3 பிரகாரங்களை வலம் வருவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

* அஸ்வமேதப் பிரகாரம் :
முதலாவதாக இருக்கின்ற இந்த வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* கொடுமுடிப் பிரகாரம் :
இரண்டாவதாகவும், மத்தியிலும் இருக்கும் இப்பிரகாரத்தை வலம் வருவது. சிவபெருமான் குடியிருக்கும் கைலாய மலையை வலம் வருவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

* பிரணவப்பிரகாரம் :
மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்.

7 தலைமுறை முன்னோர்களின் பாவத்தை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம்..

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மல்லேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ

ஓம் நம சிவாய…

Saturday, October 7, 2023

சென்னைக்கு #சென்னப்பட்டிணம் எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த திருக்கோயிலான"#பட்டணக்கோவில்"

தமிழகத்தின் தலைநகரான #சென்னை மாநகரில் உள்ள புராதன திருக்கோயிலான, சென்னைக்கு #சென்னப்பட்டிணம் எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த திருக்கோயிலான
"#பட்டணக்கோவில்"
அல்லது 
"#பூக்கடை_கோயில்" என்று அழைக்கப்படும் 
#சென்னமல்லீஸ்வரர்
#பிரம்மராம்பிகை_அம்மன் 
மற்றும் #சென்னகேசவப்பெருமாள் 
#கமலவல்லி_தாயார் 
திருக்கோயில் வரலாறு:

சென்னையின் பரபரப்பான வியாபாரம் நடைபெறும் பூக்கடை மற்றும் மின்ட் பகுதியில்   கட்டடங்களோடு கட்டடமாக இக்கோயில் அமைந்துள்ளது . இக்கோயிலுக்கு ராஜகோபுரம் கிடையாது . உயர்நீதி மன்றத்தை பார்த்தாற்போல் கோயிலின் நுழைவாயில் அமைந்துள்ளது .சைவ, வைணவ ஒற்றுமையை உலகறியும் வண்ணம் இங்கே சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவப் பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

அன்றைய 
மெட்ராஸ் பட்டணத்தைச் சுற்றி இருந்தது இரண்டே பகுதிகள்தான். ஒன்று பெத்தநாயக்கன்பேட்டை. மற்றொன்று முத்தியால்பேட்டை!இவை இன்று ஜார்ஜ் டவுன், பார்க் டவுன், பாரிஸ் என்ற பெயர்களில் பரபரப்பான ஏரியாவாக மாறிவிட்டன.

இதில் ஜார்ஜ் டவுன் பெயர், 1911ம் வருடம் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடியதன் நினைவாக வைக்கப்பட்டது. பாரிஸ் என்பதற்கு பாரி அண்ட் கோ பீச் ரோட்டில் தங்கள் நிறுவனத்தை நிறுவியதும், பார்க் டவுன் பெயருக்கு சென்ட்ரல் அருகே பீப்பிள்ஸ் பார்க் இருந்ததும் காரணங்கள்.

இந்தப் பகுதிகளில் இருக்கும் கோயில்கள் அனைத்தும் பழமையானவை.
குறிப்பாக, சென்னகேசவப் பெருமாள் கோயில், சென்ன மல்லீஸ்வரர் கோயில், ஏகாம்பேரஸ்வரர் கோயில், ஆர்மேனியன் தெருவிலுள்ள கச்சாலீஸ்வரர் கோயில், சைனா பஜாரில் வீற்றிருக்கும் கந்தகோட்டம் முருகன் கோயில் ஆகியவை சுமார் முந்நூறு வருடங்கள் பழமையானவை. இதேபோல் தம்புச் செட்டித் தெருவிலுள்ள காளிகாம்பாள் கோயிலும் பழமையானதே! ஒவ்வொரு கோயிலுக்குமான சரித்திரம் சுவாரஸ்யம் நிறைந்தது.

#தல_வரலாறு :

தற்போதைய சென்னை  உயர்நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் இருந்த சென்னகேசவப் பெருமாள் கோயில் மற்றும் சென்னமல்லீசுவரர் கோயில் , ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில்  தங்களது வணிக வசதிக்காக 1757ஆம் ஆண்டில் இடித்த போது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் . பின்னர் ஆங்கிலேயர் , மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு இடமும் பொருளும் கொடுத்து, 1762ஆம் ஆண்டில் தற்போது உள்ள இடத்தில் சென்னகேசவப் பெருமாள் கோயிலும்.சென்னமல்லீசுவரர் கோயிலும் அடுத்தடுத்து மீண்டும் கட்டப்பட்டன. இந்த இரண்டு கோயில்களையும் இணைத்து பட்டணம் கோவில் என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறனர்.

#சென்னகேசவப்பெருமாள்:

இக்கோயிலின் மூலவரான சென்னகேசவப் பெருமாளின் பெயரில், இந்நகரத்திற்கு சென்னப் பட்டிணம் என்று பெயர் வந்தது.

சென்னகேசவப் பெருமாள் கோயில் முதலில் 1646ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

தற்போதைய மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இருக்கும் வளாகத்தில் இருந்த சென்னகேசவப் பெருமாள் கோயில் மற்றும் சென்னமல்லீசுவரர் கோயில் , பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தங்களது வணிக வசதிக்காக 1757ஆம் ஆண்டில் இடித்த போது, பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். பின்னர் கம்பேனி நிறுவனத்தார், மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு இடமும் பொருளும் கொடுத்து, 1762ஆம் ஆண்டில் தற்போது உள்ள இடத்தில் சென்னகேசவப் பெருமாள் கோயிலும்.
சென்னமல்லீசுவரர் கோயிலும் அடுத்தடுத்து மீண்டும் கட்டப்பட்டன. இந்த இரண்டு கோயில்களையும் இணைத்து பட்டணம் கோவில் என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறனர்.

#சென்னகேசவப் பெருமாள் மற்றும் சென்னமல்லீஸ்வரர் கோயில்:

பட்டணம் கோயில் அல்லது பூக்கடை கோயில் என்றழைக்கப்படும் இவை இரண்டும் இரட்டைக் கோயில்கள்.

அதாவது, சென்னகேசவப் பெருமாள் கோயிலும், சென்னமல்லீஸ்வரர் கோயிலும் ஒன்றாக இணைத்துக் கட்டப்பட்டவை.இன்று பூக்கடை பஜார் அருகே பிசியான தேவராஜ முதலித் தெருவில் வீற்றிருக்கும் இந்தக் கோயில்களில் ஒன்றான சென்னகேசவப் பெருமாள் கோயில், தொடக்கத்தில் உயர்நீதிமன்றம் உள்ள இடத்தில் இருந்தது.

1710ம் வருடம் அன்றைய மெட்ராஸ் கவர்னர் தாமஸ் பிட் வெளியிட்ட நகரின் வரைபடத்தில் இதைத் தெளிவாகக் காணலாம். அதில், இந்தக் கோயில், ‘Great pagoda’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று கோயில்கள் பகோடா எனக் குறிப்பிடப்பட்டன. நாணயங்களும் கூட பகோடாக்கள் என்றே அழைக்கப்பட்டன.

பிறகெப்படி சென்னகேசவர் பெத்தநாயக்கன்பேட்டை பகுதிக்குள் வந்தார்?
பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த போரே காரணம். கோட்டையின் அருகிலுள்ள கருப்பர் நகரில்தான் சென்னகேசவப்பெருமாள் கோயில் இருந்தது. இதனாலேயே, 
கருப்பர் நகர் சென்னப்பட்டணம் என அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

1746 முதல் 1749ம் வருடம் வரை மெட்ராஸ் பிெரஞ்சுக்காரர்கள் வசம் இருந்தது. இந்நேரம் பிரஞ்சுப்படை கருப்பர் நகரில் சில இடங்களை அழித்துவிட்டது. பின்னர், மீண்டும் மெட்ராஸ் ஆங்கிலேயரிடம் வந்ததும் முதல் வேலையாக பாதுகாப்பை பலப்படுத்தினர்.

ராணுவ நடவடிக்கைகளுக்காக கருப்பர் நகரை மொத்தமாக அப்புறப்படுத்தி முத்தியால்பேட்டைக்கும், பெத்தநாயக்கன்பேட்டைக்கும் கொண்டு சென்றனர். இதனால், 1757ம் வருடம் சென்னகேசவப் பெருமாள் கோயில் இடிக்கப்பட்டது.இதற்கு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்ப, பிரச்சனை அன்றைய மெட்ராஸ் கவர்னர் பிகாட்டின் துபாஷியாக இருந்த மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் மூலம் பேசித் தீர்க்கப்பட்டதென குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அன்று துபாஷிகள் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கினர். அதனால், இந்தத் தகவல் உண்மையாக இருக்கலாம்தான். ஆனால், ஆங்கிலேயர்களின் பதிவில் எதிர்ப்புகள் பற்றி எந்தப் பதிவுகளும் இல்லை.

இந்நேரம், ஆங்கிலேயர்களும் இந்து சமயக் கோயில்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இருந்தனர். இதனால், 1762ம் வருடம் இடிக்கப்பட்ட கோயிலுக்கு இழப்பீடாக பழைய கோயில் பரப்பிற்குச் சமமாக அரை ஏக்கர் நிலத்தை சைனா பஜார் பகுதியில் தந்தனர். பின்னர், 1777ம் வருடம் கோயில் கட்டுமானப் பணிக்கு 1,173 பகோடாக்களையும் கொடுத்து உதவினர்.  

இதேபோல் முத்துக்கிருஷ்ண முதலியார் தன் பங்காக 5,202 பகோடாக்கள் கொடுத்தார். தவிர, மக்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடைகள் என மொத்தம் 15,652 பகோடாக்கள் வசூலானது. இதை வைத்து மீண்டும் கோயிலை பெத்தநாயக்கன்பேட்டையில் கட்டி முடித்தனர்.

இப்போது சென்னகேசவப் பெருமாள் கோயிலுடன், சைவ வழிபாட்டு பக்தர்களுக்காக சென்னமல்லீஸ்வரர் கோயிலும் சேர்த்துக் கட்டப்பட்டது. இந்த இரண்டு கோயில்களையும், ‘Town Temple’ என்றே மக்கள் அழைத்தனர்.கோயிலுக்கு வாடகைகள் மூலமும், ஆங்கிலேய அரசு தந்த ஐநூறு பகோடாக்கள் மூலமும் மற்றும் காளஹஸ்தி ராஜா தந்த நூறு பகோடாக்கள் வழியாகவும் ஆண்டு வருமானமாக 800 பகோடாக்கள் கிடைத்து
வந்தன. இதைக் கொண்டு நிர்வாகம் செய்யப்பட்டது.  

ஆரம்பத்தில், கோட்டையை ஒட்டியிருந்த கருப்பர் நகரில் கோயில் கட்டியவர் பேரி திம்மண்ணா என்பவர். இந்தப் புதிய கருப்பர் நகரில் கோயிலை முன்நின்று கட்டியவர் மணலி முத்துக்கிருஷ்ண முதலியார். இதனால், இவரே கோயிலின் முதல் காப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் 1792ம் வருடம் இறந்தார். இதன்பிறகு, இவரின் வாரிசுகள் கோயிலைப் பாதுகாத்துவந்தனர்.

இந்தத் தகவல்களை எல்லாம் கோயில் நிர்வாக உரிமை யாருக்கு என்பது பற்றி அன்று கோர்ட்டிற்கு வந்த இருவேறு வழக்குகள் மூலம் அறிய முடிகிறது. முதல் வழக்கு 1831ம் வருடம் தொடரப்பட்டது.தொடுத்தவர்கள் மணலி முத்துக்கிருஷ்ண முதலியாரின் மகனும், பேரனும். நிறைவில், மணலி முத்துக்கிருஷ்ண முதலியாரின் பேரன்தான் கோயிலின் காப்பாளர் என்றது கோர்ட்.

பின்னர், 1898ம் வருடம் இன்னொரு வழக்கு வந்தது. இதில், உண்மையான ஆவணங்கள் சில தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி, 1646ம் வருடம் நாகபட்டனும் 1648ம் வருடம் பேரி திம்மண்ணாவும் நாராயணப்ப அய்யர் என்பவருக்கு கோயில் நிர்வாகப் பொறுப்பை அளித்துள்ளனர்.

நாகபட்டன் ஆர்மகானில் இருந்து வந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் துப்பாக்கி வெடிமருந்து தயாரிப்பாளராக இருந்தார். பேரி திம்மண்ணா மெட்ராஸ் நிலத்தைப் பெற ஃபிரான்சிஸ் டேவிற்கு உதவியவர். கம்பெனியின் வணிகராக ஆரம்ப நாட்களில் இருந்தவர்.

இவர்கள் இருவரும் கோயிலுக்கு அறக்கட்டளை ஏற்படுத்தி இருந்தனர். இதில், பேரி திம்மண்ணா பொறுப்பை அய்யருக்கு வழங்கிய போது எழுதிய குறிப்பில், ‘நான் சென்னப்பட்டணத்தில் சென்னகேசவப் பெருமாள் கோயிலைக் கட்டியிருக்கிறேன். அதற்காக மானியமும், சிறு நிலமும் கொடுத்ததுடன் மற்ற வசதிகளும் செய்து தந்துள்ளேன். சூரியன் சந்திரன் உள்ளவரை வழிவழியாக கோயிலில் சேவை செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறினால் கங்கை நதிக்கரையில் ஒரு கருப்புப் பசுவைக் கொன்றதற்கு இணையான பாவத்தைச் செய்தவர்கள் ஆவர்...’ என உள்ளது.

இதேபோல நாகபட்டன் எழுதித் தந்ததிலும் இந்தச் செய்திகள் உள்ளன. ஆனால், அவர் நாராயணப்ப அய்யருக்கு பரிசாக அளிப்பதாக கையெழுத்திட்டுள்ளார்.இப்படியாக சென்னகேசவப் பெருமாள் கோயில் நிர்வாகம் பற்றிய குறிப்புகளை கர்னல் லவ் தன்னுடைய, ‘Vestiges of Old Madras’ நூலில் தந்துள்ளார். இன்று இரண்டு கோயில்களும் அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.

சென்னகேசவப் பெருமாள் கோயிலின் உற்சவர் சிலையிலும் ஒரு கதை இருக்கிறது. ஹைதர் அலியின் படையெடுப்புக்குப் பயந்து இங்கிருந்த உற்சவர் சிலையை திருநீர்மலைக்குக் கொண்டு சென்றதாகவும், அங்குள்ள உற்சவர் நால்வருடன் ஐந்தாவதாக சென்னகேசவரையும் சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சிலையைக் கொண்டு சென்ற பட்டாச்சாரியார் இறந்துவிட, பின்னர் சிலையை எடுத்து வரச் சென்றவர்கள் சென்னகேசவர் சிலை எதுவென அறியமுடியாமல் அங்கிருந்த நரசிம்மர் சென்னகேசவராக இருக்கலாம் என்று நம்பி எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கின்றனர்.

இங்கே தாயார் செங்கமலவல்லிக்கும், கோதண்ட ராமர், ஆஞ்சநேயர், ஆண்டாள் முதலிய தெய்வங்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் திருப்பதி திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவத்திற்கு இங்கிருந்து பதினோரு அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்றன.

இந்தக் குடைகள் யானைக்கவுனி தாண்டும் நிகழ்வு இன்றும் அங்குள்ள மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதேபோல், சென்னமல்லீஸ்வரர் கோயிலில் அம்மன் பிரம்மராம்பிகை சன்னதி மேற்குப் பிரகார கோடியிலும் பிரசன்ன விநாயகர், முருகர் உள்ளிட்ட சன்னதிகளும் அமைந்துள்ளன. பரபரப்பான, சத்தங்கள் நிறைந்த சாலையில் இந்தக் கோயில்கள் அமைந்திருந்தாலும் உள்ளே அத்துணை பேரமைதி.

#கோயில்_அமைப்பு :

வடக்கு நோக்கிய தனிச்சன்னிதியில் பிரசன்ன விநாயகர் திருக்காட்சி புரிகிறார்.இதற்கு பக்கத்தில் மேற்கு நோக்கிய தனிச்சன்னிதியில் சிவசூரியன் வீற்றிருக்கிறார். மேற்குப் பிரகார முடிவில் கிழக்கு நோக்கிய வண்ணம் கருணைத் திருமுகம் கொண்ட பிரமராம்பிகை அருட்காட்சி தருகிறாள்.

வடக்குப் பிரகாரத்தில் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமானை நோக்கி வணங்கும் கோலத்தில் அருணகிரி சுவாமிகள் காட்சி தருகிறார். இவரது வலப்புறமாக வில்வ மரமும், வடக்கு மற்றும் மேற்கு நோக்கிய வண்ணம் நாக கன்னிகைகளும் காட்சி அளிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தின் கிழக்குக் கோடியில்  பைரவர் தெற்கு நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். பைரவருக்கு அடுத்ததாக ஆதிசங்கரர் காட்சி தருகின்றார்.

உட்பிரகாரத்தின் உள் நுழையும் முன் நந்தி தேவர் இருக்கிறார். இவரை வணங்கி உள்ளே சென்றால் இடப்புறத்தில் நவக் கிரக சன்னிதி இருக்கிறது. இதற்கு எதிரில் சோமாஸ்கந்தர், கணபதி, இரு திருக்கர பிரமராம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.

கருவறை வாசலின் தென்புறத்தில் கிழக்கு நோக்கியபடி சோமஸ்கந்தர் உற்சவ மூர்த்தியும், வடபுறத்தில் சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியும் உள்ளன. துவார பாலகர்களை கடந்து செல்கையில் உள்ளே  சென்றால் இறைவன் ஈசன்  சென்ன மல்லீஸ்வரர் என்ற திருநாமதோடு நம்  அனைவருக்கும்  திருக்காட்சி தருகிறார்.

#வரலாறு மற்றும் கல்வெட்டுகள்:

பழைய கோவில் தற்போதைய உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தால் துறைமுகத்தில் இருந்து தெளிவான பார்வைக்காக கோயில் இடிக்கப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கோவிலை புனரமைக்க நிலம் ஒதுக்கி பணத்தை நன்கொடையாக வழங்கியது. 1762 ஆம் ஆண்டு மணலி முத்துகிருஷ்ண முதலியாரால் இக்கோயில் புனரமைக்கப்பட்டது. 1762 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியால் இரண்டு கோவில்களின் புனரமைப்புக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தைத் தவிர, மணலி முத்துகிருஷ்ண முதலியார் 5202 பகோடாக்களையும் வழங்கினார். 

பிரதோஷ வேளையில் நந்தி தேவருக்கு அருகம் புல்லை மாலையாகக் கட்டி சாத்துகிறார்கள். வில்வம், மல்லிகை, மருக்கொழுந்து முதலிய மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவதுண்டு. இவருக்கு காப்பரிசி (பச்சரிசி, பச்சைப்பயறு ஆகியவற்றை ஊறவைத்து அதனுடன் வெல்லம் கலந்து) நிவேதனம் செய்கிறார்கள். பிரமராம்பிகை சமேத மல்லீஸ்வரரை, தரிசனம் செய்வதால் செல்வ வளம் சேரும்; தொழிலில் நஷ்டம் ஏற்படாது.
ஆனி திருமஞ்சனம், ஆடி சுவாதி, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, விஜயதசமி, கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், ஐப்பசி-அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை, மார்கழி மாத திருவெம்பாவை உற்சவம், ஆருத்ரா தரிசனம், அரைக்கட்டு உற்சவம், ரதசப்தமி, தை கிருத்திகை, மகா சிவராத்திரி, மாசி மகம், பங்குனி உத்திரம், வசந்த உற்சவம், வைகாசி விசாகம், அறுபத்து மூவர் விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

இதே ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது சென்ன கேசவப் பெருமாள் கோயில். இங்கு பெருமாள், தாயார் சன்னிதிகள் தவிர, ராமர், ஆஞ்சநேயர், ஆண்டாள் உட்பட பல்வேறு சன்னிதிகளும் அமைந்துள்ளன.
தோஷம் தொடர்பான பரிகாரங்களுக்கு தாயாரை வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி பகல் பத்து, இராப் பத்து, சித்திரை பிரமோற்சவம், வைகாசி வஸந்த உற்சவம், மார்கழி ஆண்டாள் நீராட்டு உற்சவம், ஆவணி பவித்ர உற்சவம், ஸ்ரீராமநவமி உற்சவம் போன்ற வைபவங்கள் இங்கு சிறப்பாக நடத்தப்படுகின்றன"

#கோவில்_நேரங்கள்:

கோவில் 07.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், 17.00 மணி முதல் 20.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

#செல்லும்_வழி:

பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும், பூக்கடை காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவிலும் கோயில் உள்ளது.
கோட்டை புறநகர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ.

திருச்சிற்றம்பலம் 🙏🙇

வித்தியாசமான சிற்பம் படேஸ்வர் சிவாலயத்தில் நந்தியின் மீது சிவலிங்கத்தின் பாணம்

அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய 
 வித்தியாசமான சிற்பம் படேஸ்வர் சிவாலயத்தில் நந்தியின் மீது சிவலிங்கத்தின் பாணம் மட்டும் அமைந்த அமைப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சதாரா அருகே, சதாராவில் இருந்து கோல்காபூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, படேஸ்வர். இங்குள்ள சிவன் கோவில் அபூர்வமான சிற்ப வடிவமைப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. 

அதில் ஒன்றுதான் இங்கே நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தி மீது அமைந்த சிவலிங்கம். பொதுவாக சிவலிங்கமான ஆவுடையாரின் மீது அமைக்கப்பட்டிருக்கும். தனியாக பாணம் மட்டும் அமைந்த லிங்கங்களும் நிறை இடங்களில் இருக்கின்றன. ஆனால் இந்த படேஸ்வர் சிவாலயத்தில் ஆவுடையார் மீது நந்தி ஒன்று படுத்திருக்க, அந்த நந்தியின் மீது சிவலிங்கத்தின் பாணம் மட்டும் அமைந்த அமைப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. தர்மத்தின் வடிவமான நந்தியின் மீது அமர்ந்துதான், சிவபெருமான் அனைத்து உலகையும் சுற்றி வருகிறார். அவரது வாகனமான நந்தியை, தர்மத்தின் மறு உருவமாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அதனை மெய்ப்பிக்கும் வகையில்தான் இந்த நந்தி மீதுதான சிவலிங்க அமைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Friday, October 6, 2023

காசி கயா போன்ற புன்னிய ஷேத்திரங்கள்



காசி கயா போன்ற புன்னிய ஷேத்திரங்களில்  ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது. 
கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர்  தனது தாயின் கடைசி காலத்தில் தான்  வாக்கு கொடுத்தபடி  அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு  அவளது அந்திம கிரியைகளை செய்து  இயற்றிய  மனம் நெகிழும்  மாத்ரு பஞ்சகம்    5 ஸ்லோகங்கள்

விஷ்ணு பாதம் 

பித்ரு ஸ்ரார்தம் கயாவில்  செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே  பிண்ட பிரதானம் செய்வது ஒரு  வழக்கம்.  
 
''கயா  கயா கயா. என்று  சொல்வது  நமது பித்ருக்களுக்கு  ஸ்ரத்தையோடு  அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம்  செய்யும்  கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும்  வாழ்வில்  ஒரு தடவையாவது செல்ல வேண்டிய  இடம் கயா.  குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும். 

ஜீவதோர்  வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்  
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

'' அடே பயலே,  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .
 
 “அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம். 
ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத'  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு -  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”. 
 
1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2.   மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே. 

4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  -- ஒரு பரிசு --  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன். 

5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ'' .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''

6.   ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்''  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'

7.    அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..\

8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9.  ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம். 
.
10.   திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ''கடிக்காதேடா..'' .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.''  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.'

12.   புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.

13.   யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா. 

14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
 தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது. 

15.   ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ''தன்னலமற்ற''   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே. 

16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
  தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.

 மஹா பூதாந்தரங்கஸ்தோ
மஹா மாயா மயஸ்ததா
ஸர்வ பூதாத்மகச்சைவ
தஸ்மை ஸர்வாத்மனே நமஹ
எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையையுடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன். 

Monday, October 2, 2023

மருந்தீஸ்வரர் திருவான்மியூர்...!

மருந்தீஸ்வரர் திருவான்மியூர்...!
தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு, சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். அப்போது, வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே இத்தலம் விளங்குகிறது. 

பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இவ்விடத்தில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. 

நடராஜர், அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமரர், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளன. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. 

சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது.அகத்திய முனிவர் இங்கு வந்து சுவாமியை வணங்கி தவம் செய்தார். 

அவருக்கு, வன்னி மரத்தடியில் காட்சி தந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகளைக்
குறித்தும், மூலிகைகளின் தன்மைகள் குறித்தும் உபதேசம் செய்தார். எனவே, இத்தலத்து ஈசன் மருந்தீஸ்வரர் எனப்படுகிறார்.

அபயதீட்சிதர் எனும் பக்தர் ஒருவர், சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. 

அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டும்தான் தரிசிக்க முடிந்தது. வருத்தம்கொண்ட அவர், சிவனே! உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ? என வேண்டினார். 

அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால், இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

ஓம் நமசிவாய

இறை பணியில்
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

திருவாரூா் அருள்மிகு தியாகராஜா் சுவாமி திருக்கோயில் சிறப்புகள்

:
திருவாரூா் அருள்மிகு தியாகராஜா் சுவாமி திருக்கோயில் சிறப்புகள் 
1, திருமுறைப் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் சீர்காழிக்கு அடுத்து அதிகம் பாடல் பெற்ற ஸ்தலம் திருவாரூர்.

2, சோழ மன்னர்களின் தலைநகரங்கள் ஐந்தனுள் மிகவும் தொன்மையானது திருவாரூர் – சங்க காலச் சோழர்களின் தலைநகராகவும் பிற்கால சோழர்களின் தலைநகராகவும் பிற்கால சோழர்கள் முடிசூடிக் கொள்ளுமிடமாகவும் விளங்கிய நகர்.

3, பஞ்சபூதத் ஸ்தலங்களில் பிருதிவித் ஸ்தலம் திருவாரூர். தேவேந்திரன் அமைந்த அயிர் எனும் ஒருவகை நுண்மணலான புற்றில் தானே தோன்றியவர் மூலவர் வன்மீகநாதர். அயிர் எனும் நுண் மணலி உண்டு வாழும் மீன் அயிரை மீன் என்பர். “அயிராவணமே எம் அம்மானே” என்பது அப்பர் அருள் வாக்கு.

4, ஆறு ஆதாரத்தலங்களுள் திருவாரூர் மூலாதாரத் ஸ்தலமானதால் வன்மீகநாதர் இருக்கும் கறுவறை மூலட்டானம் என்றும் பூங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆகாசத்தலமான சிதம்பரமும் பிருதிவித் ஸ்தலமான திருவாரூருமே மூலட்டானம் எனப்படும்.

5, காலத்தால் மிகவும் பழைமையான திருக்கோயில் திருவாரூர் கோயில். “திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே” என்பது அப்பரடிகள் அருள் வாக்கு.

6, பிறக்க முக்தி தரும் திருத்தலம் திருவாரூர். “திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்பது சுந்தரர் திருவாக்கு. பிறக்க முக்தி தரும் சிவ கணங்களே இவ்வூர் மக்களாதலால் யமன் வேதனை செய்பவனாக இன்றி சண்டீஸ்வர்ராக அருள்பாலிக்கிறார். “உதித்தவர் உதித்திடா ஆரூர்”

7, நமி நந்தி அடிகள் எனும் சிவனடியார் கனவில் சிவபெருமான் தோன்றி திருவாரூரில் உள்ளவர்கள் எல்லாம் சிவ கணத்தவர்கள் எனக் காட்சி கொடுத்தார். “ஞான மறையோய்! ஆரூரில் பிறந்தாரெல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்”  என்றருளிச் செய்தார் – பெரிய புராணம்.

8, திருவிடை மருதூர் மகாலிங்க ஸ்வாமிகள் பரிவாரத் ஸ்தலங்களுள் திருவாரூர் சோமாஸ்கந்தர் ஸ்தலமாகத் திகழ்கிறது.

9, பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் திருமலைச் சிறப்பாக கயிலை மலையையும் திருநாட்டுச் சிறப்பாக சோழ நாட்டையும் பாடியவர் திருநகரச் சிறப்பாக திருவாரூரையே பாடியருளியுள்ளார்.

10, ஒரு குலத்துக்கு ஒரு மகன் உள்ளான் என்பதையும் ஓராது ஒரு பசுவின் கன்றுக்காக தன் மகனது உயிரைப் போக்கிய மனு நீதிச் சோழன் ஆண்டது திருவாரூர்.

11, தியாகராஜர் எழுந்தருளி உள்ள ஏழுவிடங்கத் ஸ்தலங்களில் முதன்மையானதும் முக்கியமானதும் திருவாரூர்.

12, பாடல் பெற்ற திருவாரூர் பூங்கோயிலின் உள்ளே அறநெறி, வெளியே (கீழ வீதி) பரவை உண் மண்டளி எனும் இரண்டு பாடல் பெற்ற திருக்கோயில்கள் உள்ளன.

13, நமி நந்தி அடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயில் திருவாரூர் அறநெறி திருக்கோயிலாகும். இதற்கு அப்பரடிகள் அருளிய பதிகங்கள் இரண்டு.

14, பரவையுண் மண்டலி எனும் கோயில் சுந்தரர் அருளிய பதிகம் பெற்றது. பரவை நாச்சியார் மண்ணால் கோயில் கட்டி வழிபட்ட ஸ்தலம். ஒரு காலத்தில் வருணன் ஏவிய கடலை உண்டமை பற்றி இத்தலத்திற்கு பரவியுண் மண்டலி எனும் பெயர் பெற்றது.

15, திருவாரூர் திருத்தலத்தின் தேரும் திருவிழாவும் திருக்கோயிலும் திருக்குளமும் இவ்வூர்த் தேவாரங்களில் வைத்துப் பாடப் பெற்றுள்ளன.

16, திருவாரூர் திருவாதிரைத் திருவிழாவை அப்பரடிகள் கண்டு வணங்கி அதன் சிறப்பை முத்து விதானம் என்று தொடங்கும் ஒரு தனித் திருப்பதிகத்தினால் சம்பந்த பெருமானுக்குக் கூறியருளியிருக்கிறார்கள்.

17, திருவாரூர் பங்குனி உத்திர விழா நினைவிற்கு வரவே திருவொற்றியூரிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் சூளுறவையும் மறந்து திருவாரூர் புறப்பட்டார் என்று பெரியபுராணம் செப்புகின்றது.

18, திருவாரூர் பூங்கோயில் திருக்கோயிலும் கமலாலயம் திருக்குளமும் செங்கழுநீர் ஓடையும் தனித்தனி ஐந்து வேலிகள் பரப்புடையன.

19, திருவாரூரில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் தேவாசிரிய மண்டபம் எனப்படும். சிவனோடொக்கும் அடியார்கள் உறையும் இடம் தேவாசிரிய மண்டபம். பூங்கோயில் பெருமானும் தேவாசிரிய மண்டப அடியார்களும் ஒன்றே என்பதால் தேவர்களும் அடியார்களை வணங்கிச் செல்வதால் இது தேவாசிரிய மண்டபம் எனப்பட்டது.

20, தேவாசிரிய மண்டபம் சைவத்தைக் காத்த இடம். சுந்தரர் பெருமான் அவதார நோக்கம் நிறைவேறிய இடம். பெரிய புரணத்திற்கு வித்திட்ட இடம். ஆண்டவன் சிறப்பும் அடியார்கள் பெருமையும் விளங்கிய இடம். சிவபெருமான் “தில்லை வாழ் அந்தணர்” என அடியெடுத்துக் கொடுக்க சுந்தர மூர்த்தி ஸ்வமிகள் திருத்தொண்டத் தொகை பாடியருளிய இடம். தியாகராஜப் பெருமான் ஆழித்தேர் விழா முடித்து இங்கு எழுந்தருளி மகாபிஷேகம் கொண்டு செங்கோல் செலுத்துவதால் இது ராஜதானி மண்டபம் எனப்படும்.

21, சுந்தரமூர்த்தி நாயனார் விருத்தாசலத்தில் மணிமுத்தா நதியில் இட்ட பொன்னை மிகப் பெரிய கமலாலயம் எனும் திருக்குளத்தில் இருந்து எடுத்து பரவை நாச்சியார்க்குக் கொடுத்த திருத்தலம் திருவாரூர்.

22, திருவாரூர் திருவீதியில்தான் சுந்தரர் பொருட்டு சிவபெருமான் பரவை நாச்சியாரிடம் இருமுறை நள்ளிரவில் தூது நடந்தார். திருவடிப் போது நாறிய திருவீதி.

23, காஞ்சிபுரத்தில் ஒரு கண் பெற்ற சுந்தரர் மீளா அடிமை என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண் பார்வையும் பெற்றது திருவாரூரில்தான்.

24, நமி நந்தி அடிகள், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், கழற்சிங்க நாயனார், விறன்மிண்ட நாயனார் போன்றோர் திருத்தொண்டு செய்து முத்தி பெற்றதும் திருவாரூரில்தான்.

25, திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் வழிபடப் பெற்று முசுகுந்த சக்ரவர்த்தியால் திருவாரூரில் பிரதிஷ்டை செய்யப் பெற்றவர். இங்கு தியாகராஜர் அஜபா நடன மூர்த்தியாக விளங்குகிறார்.

26, தியாகராஜ மூர்த்தம் சிவ வடிவங்கள் இருபத்தைந்து எனக் கூறும் ஆகமங்களுக்கு அப்பாற்பட்ட்து. “ஆரூரில் கண்ட்டியேன் அயர்ந்தவாறே”என்றும் “ஐயந்தின் அப்புறத்தான்” என்று அப்பரடிகளும் “இன்ன தன்மையன் என்ற்றிவொண்ணா எம்மான்” என்று சுந்தரரும் குறிப்பிடுகின்றனர்.

27, சிவபெருமான் உலகை காத்து உய்விப்பதற்காக ராஜ ராஜேஸ்வர உருவில் ரத்ன சிம்மாசனத்தில் இருபுறமும் வீரவாளுடன் கொழு வீற்றிருக்கும் நிலையே தியாகராஜ திருமேனி அமைப்பு. தியாகராஜர் திருமேனியோடு கொண்டி என்ற பிரிவற்ற சக்தி உள்ளது. இவரும் கொண்டியும் முகம் தவிர முழுத்திருமேனி தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளனர். 

இவர் மூலாதாரத்திற்கு மேல் உள்ள சுவாதிஷ்டான நிலையை விளங்குபவர். இவருடைய பூஜை முறைகள் சிருங்காரமாக போக மூர்த்தி தொடர்பு கொண்டதாக இருக்கும்.

28, தியாகராஜர் எழுந்தருளி இருக்கும் இடம் தேவ சபை என்றும் இவருக்குத் தென்றல் காற்று வரும் கல் சன்னல் திருச்சாலகம் என்றும் இவர் கொடி தியாகக் கொடி என்றும் இவருடைய தேருக்கு ஆழித்தேர் என்றும் இவரை எழுந்தருளப்பண்ணும் திருவாடு தண்டு மாணிக்கத் தண்டு என்றும் பெயர் பெற்றுள்ளன.

29, திருவாரூர் தியாகராஜர் சந்நிதியில் திரு நந்தித் தேவர் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருடைய வழிபாட்டுக் காலங்களில் திரு வந்திக்காப்பு மிக்க விஷேடமானது.

30, தியாகராஜர் முழுதும் மறைக்கப்பட்ட ரகசியத் திருமேனியில் வலது பாத தரிசனம் மார்கழி திருவாதிரையின்று இட்து பாத தரிசனம் பங்குனி உத்திரத்தன்று மட்டுமே கண்டு மகிழலாம்.

31, தியாகராஜர் சந்நிதியில் வலப்பால் ஒரு பீடத்தில் பெட்டகத்தில் வீதி விடங்கராகிய மரகத சிவலிங்கம் உள்ளது. இவருக்குத் தான் நாள்தோறும் காலை மாலை அபிஷேகம் நடைபெரும்.

32, எல்லா சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரட்க்ஷை எனப்படும் திருவந்திக் காப்பு நேரத்தில் திருவாரூரில் விளங்குவதாக ஐதீகம் சாயரக்ஷை பூஜையின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூஜிப்பதாக ஐதீகமாதலால் அர்ச்சகர் நீண்ட அங்கி, தலைப்பாகை அணிந்துதான் எதிரில் நின்று பூஜை செய்கிறார்.

33, மற்ற திருக்கோயில்களில் பிரதோஷ காலம் மாலை 4.30 முதல் 6.30. வரை ஆகும். ஆனால் திருவாரூரில் 6.30க்கு சாயரக்ஷை முடிந்த பின்னர்தான் பிரதோஷ பூஜை நடைபெறும். ஆகவே நித்ய சாயரக்ஷை பூஜையே நித்ய பிரதோஷ பூஜையாகும்.

34, ஸ்ரீ தியாகராஜர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் விருப்பப்படி வைகாசி ஆயில்யம் நண்பகல் திரு அம்பர் மாகாளத்தில் சோமாசி மாறநாயனார் சோமாசி யாகத்திற்கு எழுந்தருளுகிறார். எனவே வைகாசி ஆயில்யம் நாளன்று உச்சிகால பூசை திருவாரூரில் இல்லை.

35, திருவாரூரில் உள்ள தேர் தமிழ்நாட்டில் பெரிய தேர். ஆழித்தேர் என்றே அழைப்பர். “ஆழித்தேர் வித்தகன்” என்றே திருமுறை பேசும். மாசி மாத அஸ்த நாளில் கொடியேற்றி பங்குனி மாத ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெறும்.

36, திருவாரூரில் உள்ள பஞ்சமுக வாத்யமும் வாசிக்கப்படும் பாரி நாயனமும் கண்டு மகிழ வேண்டியவர்கள்.

37, வன்மீக நாதரின் சந்நிதியில் நந்தியின் மேற்பரப்பில் உள்ள கல்லில் 27 நட்சத்திரங்களும் இராசிச் சக்கரமும் அமைந்து உள்ளன.

38, அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷர பீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தொரு எழுத்துக்கள் எழுதப் பெற்ற திருவாசியுமே உள்ளன. தியானித்து மகிழ வேண்டியது.

39, திருவாரூரில் உள்ள அம்பாள் கமலாம்பாள். பராசக்தி பீடங்களுள் ஒன்று. நான்கு கரங்களுடன் தாமரை பாசம், அக்கமாலை ஏந்தி இட்து கரத்தைத் தொடை மீது ஊறு ஹஸ்தமாக வைத்துள்ளாள். வாசலில் உச்சிஷ்ட கணபதி உள்ளார். கமலாம்பிகையுடன் உற்சவ மூர்த்தி மனோன்மனி. கமலாம்பாள் ஆடிப்பூர விழா நாயகி. ஆடிப்பூர நாளில் தீர்த்தம் வழங்குவாள். அன்றிரவு அம்பாளுக்கு வெள்ளை சாத்தி மகிழ்வார்கள்.

40, மற்றொரு அம்பாள் கோயில் அல்லியங்கோதை எனப்படும். நீலோத்பலாம்பாள் சந்நிதியாகும். வலக்கரத்தில் நீலோத்பல மலர் ஏந்தி இட்து கரத்தால் தோழி இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் முருகனின் தலையை தொட்டுக்கொண்டிருக்கும் கோலத்தில் நான்கு கரங்கள். இந்த மாதிரி அமைப்பு வேறெங்கும் காணக் கிடையாது.

41, திருவாரூர் திருக்கோயிலில்தான் தருமபுர ஆதீன குரு முதல்வர் ஸ்ரீ ஞான சம்பந்த ஸ்வாமிகள் கமலை ஞானப் பிரகாசரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டு உபதேசம் பெற்று சொக்கலிங்க மூர்த்தி பூஜையினை ஏற்றுக் கொண்டார்கள்.

42, இக்கோயிலில் கமலை ஞானப் பிரகாசருக்குத் தஞ்சை மன்னனும் கிருஷ்ண தேவராயனும் வீதி விடங்கப் பெருமானுக்கும் வன்மீக நாதப் பெருமானுக்கும் ஆராதனைக்காக அளித்த தேவ தானங்கள் இராஜாங்கக் கட்டளை என்ற பெயரோடு விளங்கி வருகின்றன. இது இப்பொழுதும் தருமை ஆதீன நிர்வாகத்திலேயே நடைபெற்று வருகிறது.

43, திருவாரூரில் பூங்கோயில் அமைந்துள்ள முதல் சுற்றில் மூலாதார கணபதி வேறு எங்கும் இல்லாத விதத்தில் காட்சி தருகிறார். ஐந்து தலை பாம்பு சுருண்டு படுத்துக் கிடக்க அதன் நடுவில் தாமரையின் மேல் பாசம் அங்குசம் மோதகம் தந்தத்துடன் நர்த்தன கணபதி காட்சி தருகிறார்.

44, திருவாரூர் திருக்கோயிலில் வீதி விடங்க விநாயகர், ஐங்கலக்காசு விநாயகர், வாதாபி கணபதி, கமலாலயக் குளக்கரையில் மாற்றுரைத்த பிள்ளையார், ஆசை விநாயகர், உச்சிஷ்ட விநாயகர், பொற்கம்ப விநாயகர் முதலியன சிற்பச் சிறப்பாலும் தெய்வீக பக்திச் சிறப்பாலும் சிறப்புற்றவைகள்.

45, திருவாரூர் பூங்கோயிலின் உள்ளே பல்வேறு சிறப்பு சந்நிதிகள் உள்ளன. ஓட்டு தியாகர் கோயிலில்தான், சுந்தர மூர்த்திகளைக் கோயிலுள் போகாதவாறு விறண்மிண்டர் தடுக்க இறைவன் இங்கு வந்து ஆட்கொண்டான்.

46, ஆருர் அறநெறி தனிக்கோயில் அப்பரடிகள் பாடல் பெற்றது. நமி நந்தி அடிகள் வழிபட்டது. கண்டராதித்த சோழ தேவரது மனைவியாகிய செம்பியன் மாதேவி திருப்பணி செய்தது. இக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மேற்கு முகமாக உள்ளது.
·       
  பரவையுண்மண்டளி – இது தெற்கு கோபுரத்திற்கு அருகில் உள்ளது. பரவை நாச்சியார் வழிபட்டது. சுந்தரர் பாடப் பெற்றது. கிழக்குப் பார்த்த தனிக்கோயில்.
திருவாரூர் கோயிலில் இரண்டு சண்டேசர் சந்நிதிகள் உள்ளன. எம சண்டர், எமனே சண்டீசராக அமர்ந்துள்ளார்,

ஆதி சண்டேஸ்வரர்.
ஏராளமான சந்நிதிகள் உள்ளதால் குவித்த கரம் விரிப்பதற்கு வழியே இல்லை என்பதனை மகா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை “குவித்தகரம் விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்” என்று புகழ்கிறார்.
ஓம் நமசிவாய
இறை பணியில்

படித்ததை பகிர்ந்தது
இரா. இளங்கோவன். 
 


Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...