Friday, November 10, 2023

குங்கிலயக்கலயனாருக்காக நிமிர்ந்த தாடகைஈச்வரர்...!#

குங்கிலயக்கலயனாருக்காக நிமிர்ந்த  தாடகைஈச்வரர்...!
அந்த பெண்ணுக்கு தாடகை என்று பெயர் திருமணமாகி வெகு காலமாகியும் குழந்தை இல்லை .

உற்றாரும் ,சுற்றத்தாரும் முணுமுணுக்க ஆரம்பிக்க ,மன உளைச்சல் ஏற்பட்டு அதனை தவிர்க்க தினமும் அருகில் மரத்தடியில் வீற்றிருந்த சிவன் கோவிலுக்கு மனஅமைதிக்காக செல்ல ஆரம்பித்தாள் .

மனிதர்கள் செவி சாய்க்காத நிலையில் இறைவனை தவிர வேறேது புகலிடம் .விளக்கேற்றுவது ,மாலை சூட்டுவது , மனக்குறைகள் சொல்லி புலம்புவது என தினசரி வழக்கமாகிறது .

ஒரு நாள் மிக அழகாக ,முல்லை ,செவ்வந்தி ,மரிக்கொழுந்து ,பன்னீர் பூ என பலவித மலர்களால் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவிக்க புறப்பட்டு செல்கிறாள் .

இறைவன் திருமுன் அருகே வந்து மாலை அணிவிக்க முற்படுகையில் சேலையின் மாராப்புசரிகிறது .இயல்பாக சரி செய்து கொள்ளும் கைகளில் மாலை இருக்க , சுற்றி யாரும் இல்லையெனினும் சிவன் ஆண் தானே என்ற ஒரு நொடிப்பொழுது தயக்கம் ஏற்படுகிறது .

அதே நொடியில்

(சிவலிங்கமாக உள்ள இறைவன் தலையை வளைத்து)

இறைவன் தலை வணங்கி மாலையை ஏற்றுக்கொள்கிறார் .

அதிர்ந்த தாடகை என் சிவனே என்று மனம் நெகிழ்ந்து பணிந்து வேண்டியவையும் விரும்பியவையும் அடைந்து நல்வாழ்வு பெற்றாள்.

இந்த நிகழ்வுக்கு வெகு காலத்திற்கு பின் அரசர்களால் அந்த மரத்தடியில் உள்ள சிவபெருமானுக்கு கோவில் கட்டப்படுகிறது .

கோவில் முழுமை அடைந்த பின் அரசர் ஏன் இந்த சிவலிங்கம் சாய்ந்த நிலையில் உள்ளது என யோசித்து அதனை நிமிர்த்த குதிரை ,யானை இவற்றில் கட்டி இழுத்து முயற்சி செய்கிறார் .ஒன்றும் இயலவில்லை .

இறைவனின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனாருக்கு தகவல் அறிந்து அங்கு வருகிறார் .சிவலிங்கத்தின் மீது ஒரு நுனியும் , தனது கழுத்தில் ஒரு நுனியும் கயிற்றை இறுக்கி கொண்டு ஐயனே நீங்கள் நிமிர வேண்டும் அல்லது எனது உயிரை தங்கள் திருவடி சேர்ப்பிக்க வேண்டும் என கூறி இழுக்க சிவலிங்கத்தின் பாணம் நேராகியது .

இருப்பினும் தாடகைக்காக தாழ்ந்து ,குங்கிலயக்கலயனாருக்காக நிமிர்ந்ததால் இன்றும் அந்த சிவலிங்க வடிவின் பாணம் ஒரு முறுக்கிய துணியின் வடிவிலே இருப்பதை காணலாம் .

தாடகைஈச்வரம் என்று அழைக்கப்படும் திருப்பனந்தாள் கும்பகோணம் அருகில் உள்ளது .

ஓம் நமசிவாய..!!!

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...