Showing posts with label #Kandha Sashti Kavasam #Sasti song #Murugan valipadu #Hindu festival #Thiruparankundram #Tamil Nadu ₹₹India. Show all posts
Showing posts with label #Kandha Sashti Kavasam #Sasti song #Murugan valipadu #Hindu festival #Thiruparankundram #Tamil Nadu ₹₹India. Show all posts

Monday, October 7, 2024

கந்த சஷ்டி கவசத்தை படிக்கும்போது நம் துன்பங்களும் நீங்கும்...

_கந்த சஷ்டி கவசத்தின் முழு பலனை அனுபவிக்க தவறாமல் செய்ய வேண்டிய விஷயம்_
கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் பொழுது எவ்வித துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம், இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் கந்த சஷ்டி கவசத்தை படிக்கும் முன்னர் சொல்ல வேண்டிய மந்திரம் உண்டு. அம்மந்திரத்தை ஜெபித்து பின் கந்த சஷ்டி கவசம் வாசிப்பது முறையான பலன்களைக் கொடுக்கும். அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் .

கந்த சஷ்டி கவசம் தீமைகளில் இருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றும் கவசம் ஆகும். கந்த சஷ்டி கவசத்தை அடிக்கடி உச்சரிப்பவர்களுக்கு அந்த முருகனே நேரில் வந்து அவதாரம் புரிந்து காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. அத்தகைய சக்தி வாய்ந்த கந்த சஷ்டி கவசத்தை படிப்பதன் வாயிலாக கிடைக்க வேண்டிய பலன்களை முறையாக அனுபவிக்க வேண்டும்.

முருக கவச பாடல்:

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்!! 

மேற்கண்ட இந்த மந்திரத்தில் இருக்கும் பொருளானது 36 முறை கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும் என்பது அல்ல! இதனை தவறாக புரிந்து கொண்டவர்கள் 36 முறை கந்த சஷ்டி கவசம் படிப்பதால் கிடைக்கும் பலன்களை கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் சண்முக கவசத்தில் ஆறு அட்சரங்கள் உண்டு. அச்சரம் என்றால் எழுத்து என்கிற பொருள் உண்டு.

‘ ஓம் சரவணபவ’

 என்கிற இந்த ஆறு அட்சரங்களை உச்சரிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானவை.

இது போல 36 உரு கொண்ட அட்சரங்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ளன. உங்களை சுற்றி இருக்கும் எதிரிகள் தொல்லைகளிலிருந்தும், தீராத நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை தரும் ஆற்றல் இந்த மந்திரத்திற்கு உண்டு. முருகன் போர் புரிந்த திருப்போரூர் ஸ்தலத்திலும், மதுராந்தகம் அருகாமையில் அமைந்துள்ள பெரும்பேர் கண்டிகை என்கிற ஊரில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானுடைய கோவிலிலும் 36 அக்ஷரங்கள் கொண்ட மந்திர சக்தி வாய்ந்த யந்திரம் உள்ளது.

இந்த எந்திரத்திற்கு அபிஷேகம் செய்வதன் மூலம் தீரா பிணிகளும், கஷ்டங்களும் அகலும் என்பது நம்பிக்கை.
கிரக தோஷம் நீங்கவும், ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கவும், ஆரோக்கியம் அதிகரிக்கவும் சொல்ல வேண்டிய இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு பின்னர், சஷ்டி கவசத்தை வாசிக்கும் பொழுது அதனுடைய முழு பலனும் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். 36 தடவை கந்த சஷ்டி கவசத்தை உச்சரிக்க வேண்டிய அவசியம் இல்லை!

இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு கந்த சஷ்டி கவசம் பாடினால் பெறற்கரிய பேறு கிட்டும். ஒரு வீட்டில் காலை, மாலை இரு வேளையும் கந்த சஷ்டி கவசத்தை படிப்பதும் அல்லது அதனை ஒலியாக கேட்பதும் அந்த வீட்டில் நல்ல அதிர்வலைகளை உண்டு பண்ணும். எந்த அளவிற்கு அதிகமாக கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வருகிறீர்களோ! அந்த அளவிற்கு உங்களுக்கு பலன்களும் உண்டு.

முருகனுக்கு உகந்த திதியாக இருப்பது சஷ்டி ஆகும். சஷ்டி திதி அன்று இந்த மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வேண்டிய வரங்களைப் பெறுவதாக சாஸ்திரங்கள் எடுத்துரைக்கிறது. நீங்கள் நினைத்தது நடக்க, வேண்டியது பலிக்கவும் மேற்கூறிய இம்மந்திரத்தை உச்சரித்து விட்டு தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை உச்சரித்து வாருங்கள்.... 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Followers

ஒரே கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள்

*ஒரே கோவிலில் நான்கு திவ்ய தேசங்கள் எந்த கோவிலில்?* பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவத் தலங்கள் திவ்ய தேசங்கள் ...