Showing posts with label #murugan #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #murugan #hindu #india #tamilnadu. Show all posts

Monday, August 21, 2023

வளர்பிறை சஷ்டி 🌷வேலனை போற்றுங்கள்... 🌷வேதனைகள் விலகி ஓடிவிடும்...

வளர்பிறை சஷ்டி 

🌷வேலனை போற்றுங்கள்... 
🌷வேதனைகள் விலகி ஓடிவிடும்...
சஷ்டி, அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்து ஆறாம் நாள். எல்லா தோஷத்தை போக்கும் வள்ளல் திருமுருகப்பெருமான்.

சஷ்டி கவசத்தை தினம் காலை, மாலையி ல்  ஓத, முருகனே காட்சி தந்துவிடுவான்.

எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி.

🌹சஷ்டி என்றால் ஆறு முருகனுக்கோ ஆறு முகங்கள் சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர். 

🌹நாம் அந்தத் திருவடியை விடாது பிடித் தால் எந்த  கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

🌹இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.

கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? 

இந்திரன் மற்ற எட்டு திசைகளில் இருந்து ம் பலர் போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வே ண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னி ரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.

🌹அவர் அழகை வர்ணிக்கும் போது பரமே ஸ்வரி பெற்ற மகனே முருகா, 

உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், 
நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங் க நகைகளும், பதக்கங்களும், 
நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, 
மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

🌹அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை?
🌹உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? 

🌹காக்க என்று வேலை அழைக்கிறார். 

வதனத்திற்கு அழகு வேல், 
நெற்றிக்குப் புனிதவேல், 
கண்ணிற்குக் கதிர்வேல் 
நாசிகளுக்கு நல்வேல், 
செவிகளுக்கு வேலவர் வேல், 
பற்களுக்கு முனைவேல், 
செப்பிய நாவிற்கு செவ்வேல்,                           கன்னத்திற்கு கதிர்வேல், 
கழுத்திற்கு இனிய வேல், 
மார்பிற்கு ரத்தின வடிவேல், 
இளமுலை மார்புக்கு திருவேல்,                           தோள்களுக்கு வடிவேல், 
பிடறிகளுக்கு பெருவேல், 
அழகு முதுகிற்கு அருள்வேல், 
வயிறுக்கு வெற்றிவேல் 
சின்ன இடைக்கு செவ்வேல்,                       நாண்கயிற்றை நால்வேல், 
பிட்டம் இரண்டும் பெருவேல்,                     கணைக்காலுக்கு கதிர் வேல்,                           ஐவிரல்களுக்கு அருள்வேல், 
கைகளுக்கு கருணை வேல், 
நாபிக்கமலம் நல்வேல், 
முப்பால் நாடியை முனை வேல்,                     எப்போதும் என்னை எதிர் வேல், 
பகலில் வஜ்ர வேல், 
இரவில் அனைய வேல், 
காக்க காக்க கனக வேல் காக்க. 

அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன.

🌹அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப் பட்டுள்ளது.

பில்லி, சூன்யம், 
பெரும் பகை, 
வல்லபூதம், பேய்கள், 
அடங்காமுனி, 
கொள்ளிவாய்ப் பிசாசு, 
குறளைப் பேய்கள், 
பிரும்ம ராட்சசன், 
இரிசி காட்டேரி, 

இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

🌹அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய் ய உபயோகிக்கும் பொருட்கள் 

பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயா ஜால மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.

🌹பின் மிருகங்களைப் பார்ப்போம், 

புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான் இவைகளால் ஏற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலே யே இறங்கி விடும் என்கிறார். 

🌹நோய்களை எடுத்துக்கொண்டால் 

வலிப்பு,சுரம், சுளுக்கு, ஒற்றை தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச் சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.

இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும்.
நவ கிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். 
சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. 

எனவே தினம், தினம் கந்தசஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.


Friday, June 9, 2023

குரு போகர் பெருமானை பற்றியும் அவரின் தனித்துவத்தை பற்றியும் உள்ள அபூர்வ ரகசியம் .....!

குரு போகர் பெருமானை பற்றியும் அவரின் தனித்துவத்தை பற்றியும் உள்ள அபூர்வ ரகசியம் .....!
      சித்தர்கள் பூமியான பழனியின் ஆச்சரியம் மற்றும் அதிசயம் அங்கு நிறுவப்பட்டிருக்கும் சிலையே.

      அப்படிப்பட்ட அற்புதச்சிலையை பிரதிஷ்டை செய்ததோடு மட்டுமல்லாமல் அதை செயல்பட வைக்க குரு பெருமான் தன ஜீவ மற்றும் ஆத்ம சக்தியை அதற்குள் பிரதிஷ்டை செய்தார்.

     ஒரு நாள் இரண்டு நாள் அல்ல 200 வருடங்கள் அந்த மாபெரும் தவத்தை செய்து நிறைவேற்றினார்.ஒரு துளியும் அளவு தப்பாத துல்லியம் என்பது  அந்த சிலையின் நிர்மாணத்தில் இருந்தது.பதினெட்டு சித்தர்களின் திறன்களும் அதில் அடங்கி இருந்தது.இந்த உலகின் பெரும்பகுதி அழிவு என்பது இந்த சிலையினால் காப்பாற்றும் அளவிற்கு அந்த சிலையானது அமைக்கப்பட்டது.

     இந்த சிலை என்ன செய்யும் என்று கேட்டால் ஆச்சரியம் கொள்வீர்கள்.

     நாம் சூப்பர் மார்க்கெட் 
போன்ற பகுதிகளுக்கு
சென்றோமேயானால் கவனித்திருப்போம் ஒரு பொருளை வாங்கியவுடன் அதை பணம் செலுத்தும் இடத்திற்கு கொண்டு  சென்று அதை காட்டினால் அதில் உள்ள மின்னணு குறியீட்டை அந்த சிஸ்டம் படித்து பார்த்த உடனே அது தொடர்பான அனைத்துவிதமான தகவல்களையும் வெளியே கொண்டு வந்துவிடும்.. 

அந்த நுணுக்கம் தான் இந்த சிலையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த சிலையின் முன்பாக யார் சென்றாலும் அது உடனே அவர்களின் எண்ணஅலைகளை படித்துவிடும். 

அதை அப்படியே திருப்பி பல மடங்காக தந்துவிடும்.அதை தவிர அதற்கு வேறு எதுவும் தெரியாது.நாம் அந்த சிலையின் முன்பாக சென்று கடந்துவிட்ட அந்த நொடியே நாம் மாறியிருப்போம்.அந்த மாற்றத்தை மட்டும் நாம் புரிந்திருக்கவே மாட்டோம்.

     இன்னும் சொல்வதானால் அதை நாம் தான் புரிந்துகொள்ளாமல் அதை பயன்படுத்த தெரியாமல் விழிப்புணர்வுத்தன்மை இல்லாத காரணத்தால் வாழ்வில் உடல் மற்றும் மனநோயால் அவதிப்பட்டு வருகிறோம். 

செவ்வாயின் கதிரை உள்வாங்கும் மைக்ரோ ரிஸீவரான இந்த சிலை மட்டும் இந்த பூமியில் நிறுவப்படவில்லை எனில் நாமெல்லாம் இப்படி பேசிக்கொண்டிருக்க இந்த பூமி இருந்திருக்காது.  

     உலகமெங்கும் தன்னுடைய ஆன்மீக ஆய்வுகள் அனைத்திலும்  வெற்றி கண்ட நம் போகர் பெருமான்மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி பூமி மற்றும் ரத்தம் சம்பந்தபட்ட கிரகமான செவ்வாயின் கதிர்வீச்சு இந்த பூமிக்கு சீராக கிடைத்தால் இந்த பூமிக்கு சுபிட்சம் கிடைக்கும் என்று எண்ணினார் என்றும் அதன் விளைவாகத்தான் தண்டாயுதபாணி சிலை நிர்மாணம் . 

ஏனெனில் இந்த பூமியில் நடக்கும் இயற்கை மாற்றங்கள், போர் மற்றும் உடல் ஆரோக்கியம் என்பது செவ்வாயின் கதிர்வீச்சை பொறுத்தே தான் அமைகிறது. 

ஏனெனில் செவ்வாய் தான் அதற்கு அதிகாரி போல்.அதனால் தான் அதனை சீர் செய்வதன் மூலம் பூமிக்கு நன்மைகள் செய்ய முடியும் என எண்ணினார்.

     உலகம் எங்கும் சுற்றி ஆய்வு செய்து பார்த்ததில் செவ்வாயின் கதிர்வீச்சு பூமியில் வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் பழனி தலத்தில் மட்டுமே அதிகமாக விழுகிறது என்பதை கண்டறிந்தார். 

இந்த இரண்டு தலத்திலும் பழனி மலையின் மேல் பகுதியில் மட்டும் சுமார் 95  சதவீதற்கும் மேலாக விழுவதை கண்டுணர்ந்தார். 

அதன் பின்னர் தான் அணைத்து சித்தர் பெருமக்களையும் கூட்டி செவ்வாயின் கதிர்வீச்சை செம்மை படுத்த என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தார்.

     அந்த ஆராய்ச்சியின் முடிவில் தான் இந்த யோசனை அவர்களுக்கு உதித்தது.பாஷாணங்கள் மொத்தம் 64 . இதில் இயற்கையாக 32 ம் செயற்கையாக 32 பூமியில் கிடைக்கிறது.   

அதில் அவர்கள் எடுத்ததோ வெறும் ஒன்பதை மட்டுமே. அந்த ஒன்பதிலும் 4448 மூலிகைகளின் சாரம் அடங்கியுள்ளது.81 வகை உபரேஷன்களின் தன்மை அதில் அடங்கி உள்ளது.

     இந்த ஒன்பது வகையான பாஷாணங்கள் தனித்தன்மைகள் ஆராயப்பட்டன.ஒவ்வொரு பாசனத்தில் அளவுகள் தீர்மானிக்கப்பட்டன.செய்யப்போகும் முறைகள் தீர்மானிக்கப்பட்டன. இத்தனைவிதமான மாபெரும் ஆய்வுகளுக்கு பின்னரே அந்த சிலை நிர்மாணம் செய்யப்பட்டது.

.     ஒன்பது பாஷாணங்களும் அதன் விகிதாச்சாரப்படி கலக்கும்போது அது செவ்வாயின் கதிர்வீச்சை அப்படியே உள்வாங்கும் திறனை பெரும்  அளவிற்கு செய்யப்பட்டது. 

சிலை மொத்தம் மூன்று அடுக்குகளை கொண்டு செய்யப்பட்டுள்ளது.மேலடுக்கு செவ்வாயின் கதிர்வீச்சை ஈர்க்கும் விதமாகவும் அதன் அடுத்த அடுக்கு அதை கடத்தி உள்ளே கொண்டு செல்லும் விதமாகவும் உள் அடுக்கானது அதை சேமிக்கும் விதமாகவும் உருவாக்கினார்கள். மேலும் அதிசயமாக அது கதிர்வீச்சின் தன்மையை சீர்படுத்தி வெளியற்றவும் செய்தது.

     இதன் அடிப்படை தத்துவம் எளிதாக சொல்வதானால் செல்போன் டவர்.அது எவ்வாறு வெளியில் இருந்து அலைகளை பெற்று நமக்கு கிடைக்க செய்கிறதோ அந்த சூத்திரம் தான்.

     தான் கற்றுணர்ந்த வித்தைகளை மொத்தம் தன் குருவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த சிலை செய்வதற்காக போகர் பயன்படுத்தினார் என்று சொன்னாலும் மிகை ஆகாது.

    சிலை செய்து முடித்தபின்னர் தன்னுடைய ஜீவசக்தியை கொண்டு பிராண பிரதிஷ்டையும் செய்தார். தற்போது அந்த சிலை நூறு சதவீதம் செவ்வாயின் கதிர்வீச்சை உள்வாங்கும் ரிசீவராகவே மாறிவிட்டது.

ஒழுங்கில்லாமல் வரும் கதிரலைகளை ஒழுங்கு படுத்தி வெளியேற்ற ஆரம்பித்தது.போகர் சாதனையும் நிறைவேறியது.

Friday, June 2, 2023

#முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்புரியும் கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற #திருமுதுகுன்றம் என்ற #விருத்தாசலம் அருகே உள்ள #மணவாளநல்லூர்#கொளஞ்சியப்பர் (சுயம்பு முருகன்

#முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்புரியும் 
கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற #திருமுதுகுன்றம் என்ற #விருத்தாசலம் அருகே உள்ள #மணவாளநல்லூர்
#கொளஞ்சியப்பர் (சுயம்பு முருகன்)
#சித்திவிநாயகர் 
திருக்கோயில் வரலாறு:

ஆண்டவனின் நீதிமன்றத்தில் தவறுகளுக்கு நிச்சயம் தண்டனை உண்டு, தவறு செய்து வருந்துபவர்களுக்கு மன்னிப்பும் உண்டு. அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற நீதியின் காவலனாகத் திருக்கோயில் கொண்டு உள்ளவரே கொளஞ்சியப்பர்.

மணவாள நல்லூர் விருத்தாசலம் - சேலம் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொளஞ்சியப்பர் அருள்பாலிக்கும் மணவாள நல்லூர் திருத்தலம். இங்கே கொளஞ்சியப்பர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.

எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த இறைவன், தன்னை மனமுருகி மெய்யுருகி வேண்டுவோருக்கு வேண்டியதை அருள்பவன். அந்த அருளாளன் உருவமாகவும் அருவமாகவும் அருள்பாலிக்கும் ஆலயங்கள், நம்முடைய ஆன்மாவுக்கு சக்தி அளிக்கும் கேந்திரங்களாகும். இதை வலியுறுத்தும் விதமாகவே அவ்வை பிராட்டி ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று பாடினார். பண்டைய அரசர்கள் இத்தகைய ஆலயங்களை மையமாக வைத்தே ஆட்சி செய்தனர். இதனால் நாடும் சுபீட்சமாக இருந்தது; நல்லாட்சியும் நடந்தது. அதற்காக எந்த மன்னரும் தன்னிச்சையாக எந்த ஆலயத்தையும் உருவாக்கிவிடவில்லை. புராண வரலாறு அல்லது வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆலயத்தையும் உருவாக்கினர்.

இப்படிப்பட்ட வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றே ‘கொளஞ்சியப்பர் திருக்கோவில்.’ சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காடாக இருந்த பகுதியில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கொளஞ்சியப்பர் என்ற பெயரில் அருள்பாலிப்பவர் சாட்சாத் முருகப்பெருமானே ஆவார். 

மூலவர்: கொளஞ்சியப்பர் (சுயம்பு முருகன்), சித்தி விநாயகர்
தல 
விருட்சம்:கொளஞ்சிமரம்
தீர்த்தம்: மணிமுத்தாறு
ஊர்: மணவாளநல்லூர் (விருத்தாசலம்)
மாவட்டம்: கடலூர்
மாநிலம்: தமிழ்நாடு 

#தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு ஒன்று, கொளஞ்சி செடிகள் புதராய் மண்டிக் கிடந்த ஒரு இடத்தை தன் கால்களால் தேய்த்து, பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொரிந்தது. அனுதினமும் இதை வழக்கமாக மேற்கொள்ள இதை கண்ணுற்ற பொதுமக்கள், அந்த பலிபீடம் புனிதத்துக்குரியது என்று கருதி அதை வெளியே எடுத்து வழிபடத் தொடங்கினர். 
உருவ அடையாளம் இல்லாததால் அது என்ன தெய்வம் என்று தெரியாமல் வணங்கி வந்தனர். காலப்போக்கில் இதற்கான தேடல்களை மேற்கொண்டபோது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் இருந்து விடை கிடைத்தது.

ஒரு சமயம் தம்பிரான் தோழன் (இறைவனின் தோழன்) என்று போற்றப்படுகின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லைக்கு மேற்கேயுள்ள தலங்களை தரிசித்தவாறு விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்துக்கு வந்தார். அப்படி வந்தவர் ஊர் மற்றும் சுவாமியின் பெயரை கேள்விப்பட்டு முதுமையை எட்டியுள்ள இவ்வூரையும் இப்பெருமானையும் பாடினால் பொன்பொருள் கிடைக்காது என்று முடிவுசெய்து பண் பாடாது பயணத்தைத் தொடர்ந்தார். இதுபுரிந்த திருமுதுகுன்றீசுவரபெருமான், அவரோடு விளையாட விரும்பி தன் மைந்தன் முருகனிடம், ‘சுந்தரர் எம்மை மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச்செய்’ என்று வாய்மொழியாக வேண்டுகோள் வைத்தார். (இதை எழுத்து வடிவமாக தரும்போது அது ‘பிராது’ எனப்படும். பிராது என்பது முறையீடு செய்தல் அல்லது நியாயம் வேண்டி புகார் அளித்தலாகும்).

அதை ஏற்ற முருகப்பெருமான், கள்ளர் வடிவில் சென்று சுந்தரரின் கைவசம் இருந்த பொன் பொருளை அபகரித்தார். பதறிய சுந்தரரிடம், ‘நீ உன்பொருளை திரும்பப் பெறவேண்டுமானால் திருமுதுகுன்றீஸ்வரரிடம் சென்று முறையிடு’ என்று கூறி அனுப்பிவைத்தார். சுந்தரரும் அதை ஏற்று திரு முதுகுன்றீசுவரரிடம் வந்து நின்றார். அவரிடம் ஈசன், ‘எம்மை மதியாமல் சென்ற உமக்கு பாடம் புகட்டவே முருகனை விட்டு களவாடச்செய்தோம். இதோ உமது பொன்னும் பொருளும். எடுத்துக் கொள்’ என்று கூறி தந்தார். மனமகிழ்ந்த சுந்தரர் தன் தவறுக்கு மன்னிப்புக் வேண்டியதுடன், இத்தலப் பெருமானை பாடவும் செய்தார். அதற்காக ஈசன் பன்னிராயிரம் பொற்காசுகளைத் தர, ஏற்கனவே வழிப்பறிக்கு ஆளான அனுபவத்தில் ‘இவ்வளவு பொற்காசினை எப்படி எடுத்துச் செல்வேன்’ என்றார், சுந்தரர்.

அதற்கு சிவன் ‘இப்பொற்காசினை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு திருவாரூர் கமலாலயம் குளத்தில் சென்று எடுத்துக் கொள்’ என்று கூறினார். சுந்தரரும் அதன்படியே செய்தார். சுந்தரர் மீது ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரியவந்தது. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கே பலிபீட உருவில் அமர்ந்திருப்பவர் சாட்சாத் முருகன் என்று உறுதி செய்யப்பட்டது. கொளஞ்சி செடியின் ஊடேயும், பசுவின் குளம்புகளின் மூலமும் வெளிப்பட்ட அவருக்கு ‘கொளஞ்சியப்பர்’ என்னும் திரு நாமத்தை சூட்டி வழிபடலாயினர்.
தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஒரே திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது. பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாகவும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் ஜீவசமாதி (வாய்மொழிக் கூற்று) அடைந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.

ஸ்ரீ கொளஞ்சியப்பர் இங்கே சுயம்பு திருமேனியாகக் காட்சியளிக்கிறார். தங்களின் பிரார்த்தனைகள் கைகூட ஏராளமான பக்தர்கள் இங்கே வருகிறார்கள். வேண்டிக்கொண்டு குழந்தை பாக்கியம் வாய்ந்ததும் அந்த குழந்தையைப் பெருமானின் சன்னதியில் கொண்டு வந்து அவர் திருமுன் இட்டு நன்றி தெரிவிக்கிறார்கள்.

அவர் சன்னதியிலே காது குத்தும் வைபவத்தையும் நிறைவேற்றி மகிழ்கிறார்கள். திருமணம் கைகூடினால் அவர் சன்னிதிக்கு வந்து மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.

இவ்வாலயத்தில் முருகப்பெருமான் நீதி வழங்குபவராகவும், வைத்தியராகவும் இருந்து அருள்பாலித்து வரு கிறார். எனவே தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம், அரை மண்டலம் என அவரவர்களுக்கு வசதிப்படும் நாட்கள் தங்கி கொளஞ்சியப்பரை தரிசிப்பதுடன், அவரது சன்னிதியில் பூஜித்து வழங்கப்படும் வேப்ப எண்ணையைப் பெற்று உடம்பில் பூசியும், அருந்தியும் பூரண குணமடைந்து செல்வதும் இத்திருக்கோவிலின் மகிமையாகக் கூறலாம். தங்களது குறை நீங்கப் பெற்றவர்கள் திருக் கோவிலுக்கு தங்கம், வெள்ளி, பித்தளை, ரொக்கப்பணம், தானியங்கள் கால்நடைகள் ஆகியவற்றை நேர்த்தி காணிக்கையாகச் செலுத்துவதும் வழக்கமாக உள்ளது.

#வேப்பெண்ணெய்:

இத்திருத்தலத்தில், பூசித்து விபூதியிடப்பட்ட வேப்பெண்ணெய் மருந்தாக வழங்கப்படுகின்றது.

#சூறை விடுதல்:

விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்க இக்கோயில் வேண்டிக்கொள்கிறார்கள். அறுவடைக்குப் பிறகு வரும் பங்குனி உத்தர திருவிழா அன்று தாங்கள் விளைவித்த பயிர் விளைச்சலில் ஒரு பங்கினை கோயிலுக்கு கொண்டு வந்து மக்கள் கூட்டத்தில் மேலே எறிவார்கள் இது சூறைவிடுதல் எனப்படுகிறது. பொதுவாக சூறைவிடுதலில் முந்திரிக் கொட்டைகள் முக்கிய இடம்பெறும்.

#கோயிலின் சிறப்பு:

முருகப் பெருமான் வேண்டுதல் கடவுளாக உள்ளார். பக்தர்களின் கோரிக்கைகள் பிரார்த்தனை சீட்டில் எழுதப்பட்டு இங்குள்ள தல விருட்சத்தில் வேண்டுதலாக கட்டப்படுகிறது.நியாயமான கோரிக்கைகள் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் முருகக் கடவுள் நிறை வேற்றி வைப்பார் என பக்தர்களால் நம்பப் படுகிறது.

பிரார்த்தனை சீட்டு விபரம்:

கோவில் நிர்வாகம் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொண்டு காணிக்கை சீட்டை விநியோகிக்கிறது. பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியவுடன் திரும்ப காணிக்கை செலுத்தி பிரார்த்தனை சீட்டை எடுத்து விட வேண்டும் என்பது கோவில் ஜதீகம்.

#பிராது கட்டுதல்:

பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டுகோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்பிப்பார்கள். சமர்பித்த மூன்று நாட்களுக்குள்ளோ, மூன்று வாரங்களுக்குள்ளோ, மூன்று மாதங்களுக்குள்ளோ, மூன்று வருடங்களுக்குள்ளோ முறையிடப்பட்ட குறை, புகாரின் தன்மையைப் பொறுத்து கொளஞ்சியப்பரே ஆய்ந்து நல்ல முடிவை தந்து, குறையை தீர்த்து, வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதாக நம்பப்படுகிறது. வெளியூர்களில் இருந்தும் கூட பலரும் இங்கு வந்து இந்த பிராது பிராத்தனையை மேற்கொள்கின்றனர்.

பிராது கட்டுதலில் பின்பற்றப்படும் வழிமுறைகள்
மக்கள் காகிதத்தில் எழுதி கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சியப்பர் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சன்னிதானத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும். தங்கள் வேண்டுதல், கோரிக்கை நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக்கோயிலுக்கு வந்து தங்கள் பிராதினை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். பிராது கட்டும் வேண்டுதலுக்கு வசூலிக்கும் கட்டணத்திலும் ஒரு புதுமையான முறைமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் பொதுவான கட்டணத்திற்குப் பிறகு, பிராது கட்டும் நபர் எங்கிருந்து வருகிறாரோ அந்த இடத்திற்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது.

#சிறப்பு_வழிபாட்டு முறை:

இங்கே முக்கியமாக நடைபெறும் அதிசயம் என்னவென்றால் மக்கள் ஆண்டவரிடமே பிராது கொடுக்கலாம். உடைமைகள் திருடு போனாலோ, மாட்டாரால் அபகரிக்கப்பட்டாலோ காவல் நிலையத்தில் எழுத்து மூலம் புகார் செய்வது போலவே கொளஞ்சியப்பரிடம் முறையிட வேண்டும்.

குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய்தான். தங்கள் ஊரிலிருந்து கோவில் வரை உள்ள தூரத்தைக் கிலோமீட்டருக்கு பத்து பைசா வீதம் கணக்கிடுகிறார்கள். கட்டணத்தைக் கணக்கிட்டு அலுவலகத்தில் செலுத்தி விட்டு ஒரு வெள்ளைத் தாளில் பிராதுகளை எழுதித் தர வேண்டும்.

#எப்படி எழுதுவது:

அருள்மிகு கொளஞ்சியப்பரின் திருப்பாத கமலங்களைப் பணிந்து என்னுடைய குறைகளைப் பிராது மூலம் திருவடிகளுக்கு விண்ணப்பிக்கிறேன் என்று துவங்கி முகவரியோடு தங்கள் குறையைக் கூற வேண்டும்.

இந்த கடிதத்தைக் கோவில் பூசாரி தட்டில் வைத்து கொளஞ்சியப்பரின் பாதங்களில் வைத்து வழிபட்டு அதனை மடித்து பக்தர்களிடம் தருவார். அதனை முனியப்பனின் சன்னதியில் உள்ள வேலில் கட்டி விடுவர்.

மணவாள நல்லூரில் கோவில் கொண்டுள்ள கொளஞ்சியப்பரை அற்புதம் நிகழ்த்தும் ஆனந்த மூர்த்தியை கண்ணாரக்கண்டு, மனமாரத் துதித்தால் இன்பங்களும் ஆறாகப் பெருகும் என்பது ஐதீகமாகும்.

திருக்கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஒரே கருவறையில் இடுபடும் கடம்பனும் நின்ற காலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குரு அகப்பை சித்தர் இந்த திருத்தலத்தில் ஜீவசக்தி பெற்றுள்ளார். இக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது மட்டுமல்லாமல் நான்கு கால பூஜைகளும் சிறப்புடன் நடந்து வருகின்றது.

இந்த ஆலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றது. பவுர்ணமி, கிருத்திகை போன்ற மாத பூஜைகள் தவிர, சித்திரை பவுர்ணமிஅன்று பால்குட அபிஷேக விழா, வைகாசி விசாகத்தன்று புஷ்பாஞ்சலி மற்றும் ஏக தின லட்சார்ச்சனை, கந்தசஷ்டி லட்சார்ச்சனை, ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ்புத்தாண்டு வழிபாடு, பங்குனி மாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் என வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தின் போது நேர்த்திகடன் செலுத்த இவ்வாலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் வடக்கு கோபுரம் என இரு கோபுரங்களுடன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் என அனைத்தும் சமீபகால கட்டிடமாக, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. மகாமண்டபத்தின் வலது பக்கத்தில் அலங்கார மண்டபம் இருக்கிறது. அதனுள் கொளஞ்சியப்பரின் உற்சவ திருமேனி இடம்பெற்றுள்ளது. இடதுபுறத்தில் குதிரை வாகனத்துடன் கூடிய சுதைவடிவ முனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அலங்கார மண்டபத்தின் பின்பகுதியில் காணிக்கை தானிய களஞ்சியமும், கிழக்குப் பகுதியில் அகப்பேய் சித்தரின் மண்டபமும் உள்ளது.

கருவறையில் விநாயகரும், மூன்றடி உயரத்தில் பலிபீட வடிவிலான முருகப்பெருமானும் தனித்தனி சன்னிதியில் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர். வடக்குகோபுரம் அருகில் மகாமண்டபத்தை ஒட்டி பிராது கொடுக்கும் முனீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் பின்பகுதியில் ஏரழிஞ்சி மரங்களுக்கு இடையே இடும்பன் கடும்பனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சமான கொளஞ்சி செடி நந்தவனத்தில் வளர்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்த ஆலயம், தினமும் காலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும்.

பிராது கொடுக்கும் வழிபாடு : 

பக்தர்கள் தங்களின் அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும், எழுத்து மூலம் சுவாமியிடம் பிராது செலுத்தும் நடைமுறை இங்கு வழக்கத்தில் உள்ளது. அப்படி பிராது செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள், அந்த கோரிக்கை முழுவதுமாக நிவர்த்திப் பெறுவதும், வேண்டுதல் பலித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகும். இதற்கு சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு கோரிக்கை உள்ள ஊரின் தொலைவினை கணக்கிட்டு, கிலோமீட்டர் ஒன்றுக்கு இருபத்தைந்து பைசா கட்டணமாகவும், சம்மன் மற்றும் தமுக்கு பணமாக இருபது ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோன்று கோரிக்கை நிறைவேறியவர்கள், பிராது வாபஸ் கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்தி பிராதினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய இவ்வழிபாடு இவ்வாலயத்தின் பிரசித்திப் பெற்ற வழிபாடாகும்.

முருகா 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

Thursday, March 30, 2023

*பங்குனி உத்திரம் 2023 எப்போது? விரத முறை.. வழிபாடு பலன்கள் முழுதகவல்கள்.!*

*பங்குனி உத்திரம் 2023 எப்போது? விரத முறை.. வழிபாடு பலன்கள் முழுதகவல்கள்.!*
 *2023: பங்குனி உத்திர திருநாளில் முருகனுக்கு விரதமிருந்து வழிபட்டால் வீட்டுக்கு சுபிட்சம் வரும். கடன் நீங்கி தனம் பெருகும்*. 

*பங்குனி உத்திரம் என்றால் நம் நினைவுகளில் முருகப்பெருமானுக்கு தான் முதலிடம் இருக்கும். ஏனெனில் அன்றைய தினம் முருகப்பெருமானுக்குரிய விரத நாள். தமிழ் மாதத்தில் பன்னிரண்டாவது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவதாக உள்ள உத்திரமும் இணையும் நாள்தான் பங்குனி உத்திரம். எல்லா மாதங்களிலும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாத உத்திர நட்சத்திரத்திற்கு தனி சிறப்புகள் உண்டு. இந்த நாளில் தான் முருகபெருமானுக்கு பக்தர்கள் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்வார்கள்*

*பெளர்ணமி விரத சிறப்பு* 

*வைகாசியில் வரும் பெளர்ணமி தினத்தை விசாகம் எனவும், தை மாதத்தில் வரும் பெளர்ணமி தைப்பூசம் எனவும் சொல்வது போலவே பங்குனியில் வரும் பெளர்ணமி பங்குனி உத்திரம் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதம் வரும் பெளர்ணமி நாளும் விரத நாள் தான். அப்போது விரதமிருந்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக தை, வைகாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வரும் பெளர்ணமி முருகனுக்கு உகந்த விரத நாட்களாகும்*. 

*பங்குனி உத்திரம் 2023 | எப்போது?*

*இந்த ஆண்டு பங்குனி உத்திரம் அடுத்த மாதம் ஏப்ரல் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உத்திர நட்சத்திரத்தை பொறுத்தவரை ஏப்ரல் 4ஆம் தேதி காலை 10.29 மணி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி பிற்பகல் 12.09 மணி வரை இருக்கிறது. முந்தைய நாளே உத்திரம் நட்சத்திரம் தொடங்கினாலும் பெளர்ணமியும், உத்திர நட்சரத்திரமும் சேரும் தினம் தான் பங்குனி உத்திரம் என கருதப்படுவதால் ஏப்ரல் 05ஆம் தான் பங்குனி உத்திரமாக ஆன்றோர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெளர்ணமி திதி காலை 10.17 மணிக்கும் தொடங்கி ஏப்ரல் 06ஆம் தேதி காலை 10.58 மணி வரைக்கும் இருக்கும்.*

*பங்குனி உத்திரம் புராணக்கதை*

*சிவனுடைய மோன நிலையை கலைத்து விட்ட மன்மதன் எரிக்கப்பட்டார். அப்போது தேவர்கள் கலங்கி நின்றனர். அவர்களுக்கு ஆறுதலாக தேவியை இந்த நாளில் தான் சிவன் மணந்து கொண்டார் என்பது புராணம். பங்குனி உத்திர தினத்தில் தான் சிவனுக்கும் பார்வதிக்கும் அலங்காரம் செய்து, மந்திரங்கள் ஒலிக்க திருமணம் நடத்தி, பல்லக்கில் ஊர்வலமாக பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்களாம். இப்படி சிவன் தேவி மண நாள் பங்குனி உத்திரம் என புராணங்கள் சொல்லுகின்றன*

*இதே நாளில் தான் முருகன்- தெய்வானைக்கும், ராமன் - சீதைக்கும் ரங்கமன்னார் - ஆண்டாளுக்கும் திருமணங்கள் நடந்துள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. தெய்வங்களின் திருமணங்கள் நடந்த அற்புதமான நாள் பங்குனி உத்திரம்.*

*பங்குனி வழிபாடு பலன்கள்* 

*பங்குனி உத்திர நாளில் வழிபாடு செய்தால், கடன் தொல்லை நீங்கும். உங்கள் வீட்டில் சுபிட்சம் வரும். தனம் (செல்வம்) தானியம் வீட்டில் பெருகிவிடும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் சுமுகமாக முடியும் என ஆச்சார்யப் பெருமக்கள் கூறுகின்றனர்*

Thursday, March 23, 2023

திருப்பம் தருவான் திருவிடைக்கழி முருகன்நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள திருவிடைக்கழி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்.

திருப்பம் தருவான் திருவிடைக்கழி முருகன்
நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள திருவிடைக்கழி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்.
தமிழ்கடவுள் முருகப்பெருமானை தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாகக் கூறலாம். இந்து மதத்தினர் ஒரு காலகட்டத்தில் தங்களுக்குள் ஆறு பிரிவாக பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் ஒவ்வொருவரை கடவுளாக வரித்துக்கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். இவர்களில் முருகப்பெருமானை கடவுளாக வழிபட்ட அமைப்புக்கு ‘கவுமாரம்’ என்று பெயர். பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு திருவேரகம் என்னும் பழனி மலையேறிய பெருமானுக்கு அவரது பக்தர்கள் குன்றுதோறும் கோவில்களை கட்டி வழிபட்டனர். குன்றுகள் இல்லாத இடங்களிலும் கூட முருகப்பெருமானுக்கு சிறப்பு மிக்க பல ஆலயங்கள் அமைந்துள்ளன. அதில் ஒன்றுதான் திருவிடைக்கழி முருகப்பெருமான் கோவில்.
முருகப்பெருமான், தான்செய்த பாவத்திற்கு விமோசனம் பெறுவதற்காக, சிவனை வழிபட்டு பேறுபெற்ற தலம் இதுவாகும். இந்தத் திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடவூர் மற்றும் தில்லையாடிக்கு அருகிலுள்ளது. புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை சிதம்பரத்தில் இருந்து பாதயாத்திரையாக இந்த முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபடும் வழக்கம் கடந்த 38 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

முசுகுந்த சக்கரவர்த்தி என்னும் சோழ மன்னன் இவ்வாலயத்தைக் கட்டியதாக தலவரலாறு கூறுகிறது. ஆனால் காலத்தை சரியாக கூறமுடியவில்லை. இத்தலம் முற்காலத்தில் ‘மகிழ்வனம்’ என்றும், ‘குராப்பள்ளி’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் பல கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் வாயிலாக இந்தப் பகுதியில் பல மடங்கள் இருந்த விவரமும், அதன்மூலம் நாள்தோறும் அன்னதானம் பல ஆண்டுகள் நடைபெற்று வந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டதும் செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டில் முருகப்பெருமானுடைய பெயர் ‘திருக்குராத்துடையார்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது.
தலவரலாறு
திருச்செந்தூர் சூரனை வதம் செய்வதற்கான பணியில் இருந்தார் முருகப்பெருமான். அப்போது சூரனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரன், பித்ரு கடன் செய்ய வேண்டி போரில் இருந்து பின் வாங்கி, தரங்கம்பாடி கடலில் மீன் உருவம் எடுத்து மறைந்தான். இதையறிந்த முருகப்பெருமான், அவனைத் தேடிப்பிடித்து சம்ஹாரம் செய்தார். ஹிரண்யாசுரன் சிறந்த சிவபக்தன் என்பதால், அவனைக் கொன்ற முருகப்பெருமானுக்கு பாவம் உண்டானது.

அந்தப் பாவத்தில் இருந்து விமோசனம் அடைவதற்காக தரங்கம்பாடி அருகில் உள்ள சிவாலயத்தின் குரா மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். இதையடுத்து அவருக்கு பாவ விமோசனம் கிடைத்தது. தன் மகனான குமரனை, இந்தத் தலத்திலேயே இருந்து அருள்புரியும்படி சிவபெருமான் கேட்டுக் கொண்டார். மேலும் அவருக்கு பின்புறத்திலேயே தானும் அமர்ந்தார் என்பது தல வரலாறு. ஹிரண்யாசுரனை கொன்ற பாவம் கழிந்த தலம் என்பதால், இதற்கு ‘விடைக்கழி’ என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகப்பெருமான் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. முருகனின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அறுபடை வீடுகளைத் தவிர, கந்தனின் காலடிபட்ட தலங்கள் இரண்டு மட்டுமே. அதில் ஒன்று முருகப்பெருமான் வள்ளி யை மணம்புரிந்த வள்ளிமலை. மற்றொன்று பாவ விமோசனம் பெறுவதற்காக முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி என்பது சிறப்புக்குரிய விஷயமாகும்.
முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து, ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார். இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகிவிடும் என்கிறார்கள்.

இத்திருத்தலத்தில் ‘சர்வமும் சுப்ரமணியம்’ என்ற வகையில் பிரதோஷ நாயகர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும், வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்ரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சிஅளிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னிதியில் உள்ள சிவசண்டிகேஸ்வரரும், குக சண்டிகேஸ்வரரும் தங்கள் திருக்கரத்தில் மழுவை ஏந்தாமல், வஜ்ர வேலை ஏந்திக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தில் 16 விநாயகர் மூர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக, கோவில் கொடி மரத்தின் அடியில் விநாயகர் மட்டுமே காட்சி தருவார். ஆனால், இங்குள்ள கொடி மரத்தின் கீழ் விநாயகப்பெருமானுடன் வேலவனும் காட்சி தருவது தனிச்சிறப்பு.
கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் நான்கு எல்லைகளிலும் ஐயனார் கோவில்கள் இருப்பதும், இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் கண்ணுக்கு விருந்தாகக் காட்சி தருகிறது. உள்ளே சென்றால் கொடிமரமும், பலிபீடமும், அடுத்து விநாயகரையும் தரிசிக்கலாம். முன்மண்டபத்தில் திருப்புகழ் பாடல்கள், வேல் விருத்தம் முதலியவை கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
வலதுபுறம் தெய்வானை தனி சன்னிதியில் தவக்கோலத்தில் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் விநாயகர் சன்னிதி. தலவிருட்சம் ‘குராமரம்’ தழைத்துக் காட்சி தருகிறது. முருகப்பெருமான் சிவபெருமானை சிந்தித்துத் தவம் செய்த இம்மரத்தடியில் பலிபீடம் (பத்ர லிங்கம்) அமைந்துள்ளது. இதற்கு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது. குராமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் மனமும் ஒன்றி, சாந்தமான குணத்தை அடையலாம். தனிச் சன்னிதியில் திருக்காமேஸ்வரர் சிவலிங்க வடிவில் தரிசனம் தருகிறார். கருவறையைச் சுற்றி முன்புறம் ஸ்படிக லிங்கமும், தெற்கில் தட்சிணாமூர்த்தியும், பின்புறம் பாபநாசப் பெருமானும், வடக்கில் வசிஷ்ட லிங்கமும் காட்சி தரும் அமைப்பினை இத்தலத்தில் மட்டுமே தரிசிக்கலாம்.
பிரகார வலம் முடித்து உள்வாசலைத் தாண்டி இடதுபுறம் செல்லும்போது சந்திரன், அருணகிரிநாதர், சேந்தனார் மூர்த்தங்களை வழிபடலாம். உட்சுற்றில் நவசக்திகளும், விநாயகரும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். அடுத்தாற்போல் நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர் உற்சவமூர்த்தம் ஆகியவற்றை வணங்கி தொழலாம்.
இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ்உள்ள இவ்வாலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. சிவன் மற்றும் முருகனுக்கான ஆலயங்களில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் மிகவும் விமரிசையாக நடத்தப்பெறுகிறது. தில்லையில் பொன்னம்பலக் கூத்தனுக்குத் திருவாதிரை நாளில் களி நிவேதனம் செய்தவரும், திருப்பல்லாண்டு அருளி திருத்தேரினை தில்லை திருவீதிகளில் ஓடவைத்தவருமான சேந்தனார் இத்தலத்தில் திருக்குரா மரத்தின் அடியில் முக்தி பெற்றது ஒரு தைப்பூச நன்னாள். அன்றைய தினம் இவருக்கு அபிஷேக, ஆராதனை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக திருவிடைக்கழி அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து மேற்குறிப்பிட்ட வழியாகவும், செம்பொன்னார்கோயில் வழியாகவும் இயக்கப்படும் பேருந்துகள் ஆலய வாசல் வரை செல்லும்.
தில்லையில் இருந்து திருக்குராவடி
சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் புறப்படுகிறது. வெள்ளிக்கிழமை புறப்படும் பாதயாத்திரை, சனிக்கிழமை இரவு திருவிடைக்கழி முருகன் கோவிலை அடையும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் எதிரில் உள்ள மண்டபத்தில் இருந்து பால் காவடி எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்கு, குராமரத்தடியில் வைத்து மகா அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும்.

Wednesday, March 15, 2023

கந்த சஷ்டி கவசம் படிப்பவரா நீங்கள்?கந்தசஷ்டி கவசத்தின் பாடலிற்கான விளக்கத்தை உணர்ந்து படியுங்கள்!!

#சஷ்டி #ஸ்பெஷல்...
#முதலும் #முடிவும் முருகனே...

வேலும் மயிலும் துணை

கந்த சஷ்டி கவசம் படிப்பவரா நீங்கள்?
கந்தசஷ்டி கவசத்தின் பாடலிற்கான விளக்கத்தை உணர்ந்து படியுங்கள்!!

கந்தசஷ்டி கவசத்தில் கவசம் என்றால் நம்மைத் தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றக்கூடிய ஒரு பொருள் என்று கூறலாம். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது. கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீ தேவராய ஸ்வாமிகள் அதீத முருக பக்தர். இவர் ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார்.

இந்த சஷ்டி கவசத்தை தினம் இரு வேளையிலும் அதாவது காலையிலும், மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். 

ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு ஆகியவைகளைக் குறிக்கும். நாம் அந்தத் திருவடியை விடாது படித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்றும் எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறார்கள்.

முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும். அவர் அழகை வர்ணிக்கும் போது, பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்தின மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் முருகனை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல், நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு ரத்தின வடிவேல். இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிற்றுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐந்து விரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல் போன்ற பல்வேறு விதமான வேல்கள் நம்மைக் காக்கின்றன.

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்ல பூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அனைத்தும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்து, புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும், பாம்பும் செய்யான், பூரான், ஆகியவைகளால் ஏற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்றும் கூறுகிறார்.

வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் கந்த சஷ்டி கவசத்தைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். மேலும் இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். 

பின் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் என்றும் முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்றும் அப்பாடலில் கூறப்பட்டுள்ளது. எனவே, நாள்தோறும் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றி வணங்குங்கள்!! நீங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் விலகி ஓடிவிடும்.

முதலும் முடிவும் முருகன் என்பதை என்றோ நான் உணர்ந்து விட்டேன்....
நீங்களும் உணர அவனே வழி செய்வான்....

#ஓம் முருகா....

Friday, February 10, 2023

மயிலம் முருகனின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்....!

மயிலம் முருகனின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்....!
மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். மயிலம் முருகன் கோவிலின்  சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.

தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் மயிலத்தில் வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்கு உள்ள மயில் வாகனத்துக்குக் கிடைத்திருக்கிறது.

முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன.

மயிலம் கோவில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இதனால் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை.

மயிலம் ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது.

மயிலம் முருகன் கோயில் திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது.

பாலசித்தர் தவம் புரியும் காலம் வரையிலும் சூரபத்மன் மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

தல புராணத்தின்படி ‘சங்ககுணா’ ஒரு அசுரன். அழகில்லாத, நிலையில்லாத அசுரன். ஆகவே தான் அவன் பெயரில் உள்ள சங்க மற்றும் சங்கு என்ற வார்த்தை கள் ஒலி தரும் சங்கைக் குறிக்கும்.

சங்கு ஊதும் பல பூத கணங்களிலும் அவரும் ஒன்றாக இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட உருவ சிலைகள் அங்குள்ள தேர்களில் நிறையவே செதுக்கப்பட்டு உள்ளன.

ஆலயத்தின் திருவிழாவில் பங்கேற்க இரண்டு தேர்கள் செய்யப்பட்டு உள்ளன. அவற்றை பங்குனி பிரும்மோத்ச வத்தில் உபயோகிக்கின்றார்கள்.

மைலத்தில் உள்ள சிற்பத்தில் கிருத்திகைகள் ஆறு குழந்தைகளாக தாமரையில் இருந்த முருகனை தங்களுடைய கரங்களில் எடுத்துக் கொள்வதைப் போன்ற காட்சி உள்ளது.

இதற்கு பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் எல்லாவற் றையும் தரிசிக்கும் ஏற்பாடுகளோடு பக்தர்கள் வரலாம்.

வாகனங்களில் வருகிறவர்கள் நேராக மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல சாலை வசதி உள்ளது. 

இது தவிர நடந்து வருகிறவர்களுக்காக நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டு வழி உள்ளது.

எப்போதும் அமைதி நிலவும் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.

ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்...
வழிபட்டால் நிச்சயமாக மன அமைதி கிடைக்கும்...

ஓம் முருகா.....!!!

Sunday, January 29, 2023

தை கிருத்திகையில் கஷ்டங்கள் போக்கும் கிருத்திகை வழிபாடு.*

* தை கிருத்திகையில் கஷ்டங்கள் போக்கும் கிருத்திகை வழிபாடு.*
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
தை கிருத்திகையில் வேலவனைத் தரிசிப்போம். வேதனைகளையும் வினைகளையும் தீர்த்தருளுவான் கந்தகுமாரன்.
🌟
சிவ வழிபாடு, கணபதி வழிபாடு, வைணவ வழிபாடு, சக்தி வழிபாடு என வழிபாட்டு தெய்வங்களும் வழிபடும் முறைகளும் ஏராளம். இந்த வழிபாட்டு முறைகளில் முருக வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் பக்தர்கள்.
🌟
முருக வழிபாடு என்பது மிக மிக எளிமையானதாகவே சொல்கிறார்கள் முருக பக்தர்கள். முருகப்பெருமானை வழிபடுகிற விதங்களில்தான், காவடி எடுத்து பக்தர்கள் வருகிறார்கள். அலகு வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பால் குடம் ஏந்தி வந்து ஆறுமுகப் பெருமானை தரிசிக்கும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
இன்னும் முக்கியமாக, முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து தரிசித்துச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள்.
ஆறுபடை வீடுகள் முருகக் கடவுளுக்கு அமைந்திருக்கின்றன. தை மாதம் என்பது வழிபாட்டுக்கான அற்புதம். தை மாதத்தில் இயற்கையையும் வணங்குகிறோம். கால்நடைகளையும் வணங்கி வழிபடுகிறோம். தை மாதத்தில்தான் முருகக் கடவுளுக்கு பூசத்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.
🌟
திதியில் சஷ்டி திதி முருகக் கடவுளுக்கு உகந்த நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டியில் விரதம் மேற்கொண்டு முருகக் கடவுளை தரிசித்து வணங்கிச் செல்வார்கள் பக்தர்கள். அதேபோல், நட்சத்திரங்களின் அடிப்படையிலும் முருகக் கடவுளுக்கு உரிய தினங்கள் இருக்கின்றன.
🌟
பங்குனி மாதத்தின் உத்திரம் நட்சத்திரநாளில் முருகக் கடவுள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதேபோல் வைகாசி மாதத்தில் வருகிற விசாகம், கந்தனுக்கு உகந்தநாள். இந்தநாளிலும் வேலவனை தரிசித்து வணங்குவார்கள்.
🌟
அதேபோல், நட்சத்திரங்களில் கிருத்திகை நட்சத்திரம் மிக மிக முக்கியமான நட்சத்திர நாள். மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாள் விசேஷமானது. குறிப்பாக, கார்த்திகேயனை வணங்குவதற்கு உரிய மிக முக்கிய தினமாக தை கிருத்திகை நட்சத்திர நாளும் ஆடிக்கிருத்திகை நட்சத்திர நாளும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளக் கூடிய நாட்கள். உத்தராயன புண்ய காலத்தின் தொடக்க மாதத்தில் வருகிற கிருத்திகையும் தட்சிணாயன புண்ய காலத்தில் வருகிற கிருத்திகையும் மும்மடங்கு பலன்களைத் தரக்கூடியது.
🌟
நாளைய தினம் 30 ம் தேதி திங்கட்கிழமை தை மாத கிருத்திகை. இந்த அற்புதமான நாளில், அருகில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கோ, முருகப்பெருமான் சந்நிதி கொண்டிருக்கும் கோயிலுக்கோ சென்று மனம் குளிர தரிசியுங்கள். மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
🌟
வீட்டில் சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுவதும் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும் இல்லத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும்.
🌟
உங்கள் வேதனைகளையெல்லாம் போக்கி அருளுவான் வேலவன். கஷ்டங்களையெல்லாம் அகறி அருளுவான் கந்தகுமாரன். குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்து தந்தருளுவான் தணிகைவேலன்.

Tuesday, January 24, 2023

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்
திருச்செந்தூர் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் திருவடிகள்    போற்றி 
திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.

1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.

2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.

3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.

6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.

17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.

20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.

21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.

23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ள.ன

25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.

27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.

28. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.

31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.

34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.

35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.

36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, «பரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.

40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.

41. சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.

சித்திரை, ஐப்பசி, தை    - 3
ஆடி, தை அமாவாசை    - 2
ஆவணி, மாசித் திருவிழா    - 10
ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம்    - 2
மாத விசாகம்    - 12
ஆனி தை வருடாபிஷேகம்    - 3
தீபாவளி, மகாசிவராத்திரி    - 4
மொத்தம்         36

42. திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.

43. திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.

44. திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

45. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.

46. திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.

47. சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.

48. திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன. சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்.பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.

49. ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

50. திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.

51. மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.

52. கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமைத்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.

53. திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.

54. சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.

55. திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும். நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.

56. கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.

57. மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும் கொண்டருள்பவன் திருமுருகன்.

58. சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.

59. யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.

60. திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர் என்று சூதம முனிவர் உரைத்தருளி உள்ளார்.

Tuesday, December 6, 2022

_ஆறுபடை வீடு ரகசியம்

_ஆறுபடை வீடு ரகசியம்
சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா?
மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆஉண்டாகட்டும்க இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன. ஆரோக்கியத்திற்கு சுவாமிமலை, உறவுக்கு திருப்பரங்குன்றம், பொருளாதார வசதிக்கு சோலைமலை, பாதுகாப்புக்கு திருச்செந்தூர், ஆளுமை திறனுக்கு திருத்தணி, ஞானம் பெற பழநி ஆகிய தலங்களை தரிசிக்கலாம்.

அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது? இதைப் புரிந்து கொள்ள நாம் நக்கீரரைத்தான் துணைக்கு அழைக்க வேண்டும். அவர்தானே தமிழில் முதன்முதலாக கடவுளைப் போற்றி நூல் எழுதியவர்.

புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள். அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள். இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர்.

ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.

பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.

செந்தமிழ்க் கடவுளாம் செந்திலங்கடவுளின் செம்மையான பண்புகளைப் பாராட்டி அவனிடம் அருள் பெறலாம் என்று எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை. தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.

ஆற்றுப் படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.

அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.


*சரி. நக்கீரர் எந்த வரிசையில் ஆற்றுப்படை வீடுகளை பட்டியல் இடுகிறார்?*

முதற் படைவீடு – திருப்பரங்குன்றம்

இரண்டாம் படைவீடு – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

மூன்றாம் படைவீடு – திருவாவினன்குடி (பழனி)

நான்காம் படைவீடு – திருவேரகம் (சுவாமிமலை)

ஐந்தாம் படைவீடு – குன்றுதோறாடல் ( திருத்தணி )

ஆறாம் படைவீடு – பழமுதிர்ச்சோலை


மேலே குறிப்பிட்டிருப்பதுதான் நக்கீரர் பாடிய ஆற்றுப்படை வீடுகளின் வரிசை. கந்தன்கருணை பாடலில் ஒவ்வொரு படைவீட்டுக்கும் சொல்லப்பட்ட முருகன் வாழ்க்கை நிகழ்வுகளை நக்கீரர் ஆற்றுப்படை வீடுகளோடு தொடர்பு படுத்தவில்லை. பின்னாளில் ஆறுபடை வீடுகளோடு முருகனின் வாழ்க்கை நிகழ்வுகளும் தொடர்புபடுத்தப்பட்டன.

காலங்கள் மாறினாலும் கருத்துகள் மாறினாலும் கந்தப் பெருமான் தமிழர்களுக்குச் சொந்தப் பெருமானாய் ஆறுபடைவீடுகளிலும் வீற்றிருந்து அன்பு மாறாமல் அருள் புரிந்து கொண்டிருக்கிறான். கால மாற்றத்தில் தமிழ்நாடு என்று மாநிலம் உருவான போதும் ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அமைந்ததும் தற்செயல் அல்ல முருகனின் தமிழ்த் தொடர்பே என்பதும் கருதத்தக்கது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரனின் ஆற்றுப்படை வீடுகளுக்கு நாமும் செல்வோம். நல்லருள் பெறுவோம்.

*திருப்பரங்குன்றம்:* தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

*திருச்செந்தூர்:* அலை ஆடும் கடலோரம் அமைந்துள்ள இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் கடலில் புனித நீராடி பின்னர் முருகப்பெருமானை தரிசனம் செய்தால், மனிதர்கள் மனதில் உள்ள ரோகம், ரணம், கோபம், பகை போன்றவை நீங்கி, மனம் தெளிவு பெறும்.

*பழனி:* ஞானப்பழம் கிடைக்காததால் ஆண்டிக் கோலத்தில் இங்கு வந்து அமர்ந்துள்ள பழனியாண்டவரை தரிசனம் செய்தால், தெளிந்த ஞானம் கைகூடும்.

*சுவாமிமலை:* தந்தைக்கு உபதேசம் செய்து தகப்பன்சாமி என்று முருகப்பெருமான் பெயர் பெற்ற இந்த சிறப்பு மிக்க தலத்திற்கு வந்து ஆறுமுகனை தரிசனம் செய்தால், ஞானம், ராகம், உபதேசம் ஆகியவை கைகூடும்.

*திருத்தணி:* சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, மனம் சாந்தியடைய வேண்டி முருகன் தனித்து அமர்ந்த தலம் இந்த திருத்தணிகை. இந்த குன்றில் அமர்ந்த குமரனை திருத்தணிகை வந்து தரிசனம் செய்து சென்றால், எப்போதும் உடன்பிறந்தது போல் மனிதனின் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் கோபமானது மறையும்.

*பழமுதிர்ச் சோலை:* தமிழுக்கு தொண்டாற்றிய அவ்வையாருக்கு, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, அவரையே திகைக்கச் செய்த முருகப்பெருமான் திருவிளையாடல் நடந்த தலம் இதுவாகும். இங்கு வந்து அழகன் முருகனை வழிபட்டால், பக்தர்களுக்கு பொருள் வருவாய் பெருகும். 
எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்

Friday, November 11, 2022

_முருகனின் பலவிதமான தோற்றங்களும் (16) அவரை வணங்குவதால் உண்டாகும் அனுகிரகங்களும்_

_முருகனின் பலவிதமான தோற்றங்களும் (16) அவரை வணங்குவதால் உண்டாகும் அனுகிரகங்களும்_

*ஸ்ரீ பால சுவாமி*

இவர் உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் குப்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.


*ஸ்ரீ தேவசேனாதிபதி.*

இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.


*ஸ்ரீ பிரம சாஸ்தா.*

இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.


*ஸ்ரீ கந்தசுவாமி.*

இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.


*ஸ்ரீ கஜவாகனர்.*

இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது  திருவுருவம் உள்ளது.


*ஸ்ரீ கிரவுஞ்சபேதனர்*

இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.


*ஸ்ரீ கார்த்திகேயா.*

இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.


*ஸ்ரீ குமாரர்.*

இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம்  
இருக்கிறது.


*ஸ்ரீ சேனானி.*

இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.


*ஸ்ரீ சரவணபவர்.*

தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.  


*ஸ்ரீ சக்திதரர்.*
இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

ஸ்ரீ சிகி வாகனர்.
மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.


*ஸ்ரீ சோமாஸ்கந்தர்.*

இவரை வழிபட்டால் சிவசக்தியை சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும். ஆலயப் பெருந்திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளில் முதல்வராகவும் திருத்தேரில் மீது எழுந்தருளி அருள் தருபராகவும் உள்ள அற்புத வடிவம்.


*ஸ்ரீ சுப்பிரமணியர்.*

இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை  
மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.


*ஸ்ரீ வள்ளி கல்யாண சுந்தரர்.*

இவரை வழிபட்டால் திருமணத்தடைகள்  விரைவில் அகலும், கன்னிப்பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.
 ஸ்ரீ தாரகாரி.
ஹதாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

Friday, October 28, 2022

. கந்தசஷ்டி... சூரசம்ஹாரம்... கொண்டாடப்படுவது ஏன்?

கந்தசஷ்டி.. சூரசம்ஹாரம்.. கொண்டாடப்படுவது ஏன்? வாங்க பார்க்கலாம்...!!
                கந்தசஷ்டி... சூரசம்ஹாரம்... கொண்டாடப்படுவது ஏன்?


முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்தசஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.

மும்மூர்த்திகளின் அம்சம் :

முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர். 

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர். 

சூரனை சம்ஹாரம் செய்து, பின் இந்திரனின் மகளை மணந்து கொண்டவர்.

இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

👆👆👆
கந்தசஷ்டி கொண்டாடப்படுவது ஏன்?

சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

முதல் காரணம் :

ஒரு சமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

இரண்டாவது காரணம் :

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள செய்து நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார்.

இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்?

காசியப்ப முனிவர், மாயை என்ற தம்பதியருக்கு பிறந்தவன் சூரபத்மன். இவர் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான்.

இந்த வரத்தால் தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான் சூரபத்மன். இதை தடுக்க அவதாரம் எடுத்த முருகன், பார்வதியிடம் வேலை பெற்று, சூரபத்மனை போரில் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய கோவில்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்l

கந்த சஷ்டி சிறப்பு பதிவு

🚩கந்த  சஷ்டி  சிறப்பு பதிவு🚩
🕉️திருப்பரங்குன்றம் 
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி 
திருக்கோயில் முருகனின்
ஆறுபடை வீடுகளில் முதலாவது 
படை வீடாகத் திகழ்கின்றது. 

🕉️மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன்தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

🚩தல வரலாறு

கயிலாயத்தில் சிவபெருமான், 
பார்வதி தேவி க்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

🕉️முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

🚩இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் - பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

🕉️முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

🚩முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

🕉️திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

யாமிருக்க பயமேன் 🌺🙏
ஓம் சரவண பவ 🌺 🙏
முருகா சரணம் 🌺🙏

Thursday, October 13, 2022

நாகப்பட்டினம்திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார்.

திருவிடைக்கழி முருகன் !
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரை தரிசித்தால் பாவம் நீங்கும்.

தல வரலாறு: சூரபத்மனை முருகன் கொன்றார். சூரபத்மனின் மகனான இரண்யாசுரன், முருகனுக்கு பயந்து தரங்கம்பாடி கடலுக்குள் ஒளிந்தான்.

சிவபக்தனான அவனையும், பராசக்தியின் அருளால் முருகன் கொன்றார். அசுரனாக இருந்தாலும், சிவபக்தனைக் கொன்றதால் முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க இங்குள்ள குராமரத்தின் அடியில் தவமிருந்தார். இதனால் 'திருக்குராவடி' என இத்தலத்திற்கு பெயர் வந்தது. இவரை தரிசித்தால் பாவம் நீங்கும்.

சிவனுடன் முருகன்: இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடதுகை தொடையில் வைத்தபடி உள்ளன. கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்தி லும், மற்றொரு லிங்கம், முருகனின் முன்புறமும் உள்ளது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது, முருகன் பூஜித்த பத்ரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும். குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக்கூர்மை உண்டாகும். சரவண தீர்த்தம், கங்கை கிணறு என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஏழுநிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது.

நிச்சயதார்த்த தலம்: முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம். முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் 'விடைக்கழி' எனப்படுகிறது.

நடைப்பயணம்: திருமணத்தடை நீங்க வைகாசி, புரட்டாசியில் நடைப்பயணம் வருகின்றனர்.

செல்வது எப்படி:

திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ., மயிலாடுதுறையில் இருந்து 21 கி.மீ.,

விசேஷ நாட்கள்

தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை

நேரம்: காலை: 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு
04364 - 285 665, 95666 23777

அருகிலுள்ள தலம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...