விநாயகர் சதுர்த்தி!
முழு முதற் கடவுள், மூலப்பொருளோன் என்று சொல்லி அனை வரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். கணபதியை வணங்கினால் காரிய தடைகள் யாவும் நீங்கும்.
விநாயகர் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களை பொழிகின்றார். சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடலாம்.
விநாயகருக்கு எளிதாக கிடைக்கக்கூடிய அறுகு வைத்து வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர்.
தும்பை பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மாவிலை, அறுகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகருக்கு மாலையாக அணிவிக்க உகந்தவையாகும்.
வசிஷ்டரின் மனைவியான அருந்ததி முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டார்.
வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து ஒன்பது கன்னிப்பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.
சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், துன்பம் விலகி இன்பம் பெருகும்.
விநாயகர் விரத முறை:தொழிலில் லாபம் வேண்டும் என்று விரதம் இருப்பவர்கள் குயவர் மண்ணால் செய்த மண் பொம்மையை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும்.
கடன் தீர விரதம் இருப்பவர்கள் சிறு தொகையை பூஜையில் வைத்த பிறகு உரிய நபருக்கு கொடுக்க முயற்சித்தால் அந்த ஆண்டிற்குள் படிப்படியாக கடன் அடைந்து விடும்.
கல்வியில் முன்னேற்றம், வேலை கிடைக்க வழிபாடு செய்பவர்கள் வலம்புரி கணபதியை பூஜையில் வைத்து வழிபட்டு மறுநாள் காலையில் அரச மரத்து விநாயகரை சுற்றி வந்து வணங்குதல் வேண்டும்.
திருமணமானவர்கள் விரத நாட்களில் பாயில் படுத்தல் கூடாது. காலையில் எழுந்து குளித்து விட்டு விநாயகரை நினைத்து தீபம் ஏற்றி ஒரு பொழுது விரதம், ஒரு வேளை உணவு உண்டு இருக்க வேண்டும்.
விநாயகர் விரதம் தொடங்குங்கள்.
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.