Showing posts with label #Sada Shiv Ashtami ashtami #Kala bhairavar #Sivan temple #Hindu temple #thirukanteeswaram #nellikuppam#Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Sada Shiv Ashtami ashtami #Kala bhairavar #Sivan temple #Hindu temple #thirukanteeswaram #nellikuppam#Tamil Nadu #India. Show all posts

Monday, May 19, 2025

செவ்வாய்க்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமி சதாசிவாஷ்டமி மிக மிக விசேஷமானது.



#வைகாசி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். செவ்வாய்க்கிழமை வரும் இந்த தேய்பிறை அஷ்டமி மிக மிக விசேஷமானது🦋🙏

⚛️சிவன் சந்நிதிகளில் ஏன் காலபைரவர்  ? பைரவரின் சிறப்புகள்..
*****************************************************
🕉காலபைரவர் சிவன் சந்நிதிகளில் ஏன்
சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று.

🕉பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள்.

🕉அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. வைகாசி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். செவ்வாய்க்கிழமை வரும் இந்த தேய்பிறை அஷ்டமி மிக மிக விசேஷமானது.

🕉ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார்.

🕉சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு.

🕉சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.

🕉பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன.

🕉தலையில் மேஷ ராசியும், 
வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், 
கைகளில் மிதுனமும், 
மார்பில் கடகமும், 
வயிற்றுப் பகுதியில் சிம்மமும், 
இடையில் கன்னியும், 
புட்டத்தில் துலாமும், 
லிங்கத்தில் மகரமும், 
தொடையில் தனுசும், 
முழந்தாளில் மகரமும், 
காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், 
அடித்தளங்களில் மீன ராசியும்
அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.

🕉பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது.

🕉ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின்,
புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும்.

🕉அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது.
திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது  ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும்.

🕉மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும்.

🕉திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும்.

🕉செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்;
தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.

🕉தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

🕉வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.

🕉சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

🕉பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது.
எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், தவிர்க்கப்படும்.

🕉பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும்.

🕉சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. *

🕉பைரவரின்_வழிபாடும்_அதன்_சிறப்புகளும்
படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் இந்த பைரவரின் வழிபாடு வடக்கே இருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும் அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வ வழிபாடாக வழிபடப்படும் இந்த பைரவ வழிபாடு இல்லங்களில் திரிசூல வழிபாடாகவும் போற்றப்படுகிறது.

🕉வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து  வழிபடுவதற்குப் பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.

🕉அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது.

🕉இரவு அர்த்தசாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.

🕉பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர்.
ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது.

🕉அந்த விசேஷ தின பூஜையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும் நைவேத்தியப் பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன.
இன்னும் எட்டுவித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.

🕉வழிபாட்டிற்கு_உகந்த_நேரம்......

🕉பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும்.
இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம்.
அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்.

🕉நட்சத்திரங்களுக்குரிய பைரவர்களும் வழிபட வேண்டிய இடங்களும்:

1. அசுவினி ஞான பைரவர் போரூர்
2. பரணி மகா பைரவர் பெரிச்சியூர்
3. கார்த்திகை அண்ணாமலைபைரவர் திருவண்ணாமலை
4. ரோகிணி பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
5. மிருகசீரிஷம் ஷேத்திரபால் பைரவர் ஷேத்திரபால புரம்
6. திருவாதிரை வடுக பைரவர் வடுகூர்
7. புனர்பூசம் விஜயபைரவர் பழனி
8. பூசம் ஆவின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி
10. மகம் நர்த்தன பைரவர் வேலூர்
11. பூரம் பைரவர் பட்டீஸ்வரம்
12. உத்திரம் ஜடாமண்டல பைரவர் சேரன்மாதேவி
13. அஸ்தம் யோகாசன பைரவர் திருப்பத்தூர்
14. சித்திரை சக்கர பைரவர் தர்மபுரி
15. சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை
16. விசாகம் கோட்டை பைரவர் திருமயம்
17. அனுஷம் ஸ்வர்ண பைரவர் சிதம்பரம், ஆடுதுறை,
18. கேட்டை கதாயுத பைரவர் சூரக்குடி,
19. மூலம் சட்டைநாதர் சீர்காழி
20. பூராடம் வீரபைரவர் அவிநாசி, ஒழுகுமங்கலம்
21. உத்திராடம் முத்தலைவேல் வடுகர் கரூர்
22. திருவோணம் மாரித்தாண்டபைரவர் வயிரவன்பட்டி
23. அவிட்டம் பலிபீட மூர்த்தி சீர்காழி, ஆறகளூர் (அஷ்டபைரவர்கள் உறையும் பலிபீடம்)
24. சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில்
25. பூரட்டாதி அஷ்டபுஜ பைரவர் கொக்கரையான்பேட்டை
26. உத்திரட்டாதி வெண்கல ஓசை பைரவர் சேஞ்ஞலூர்
27. ரேவதி சம்ஹார பைரவர் தாத்தையங்கார்பேட்டை

🕉வெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி* 

    
🕉வெற்றி தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி
தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.

01. ஓம் பைரவனே போற்றி
02. ஓம் பயநாசகனே போற்றி
03. ஓம் அஷ்டரூபனே போற்றி
04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
05. ஓம் அயன்குருவே போற்றி
06. ஓம் அறக்காவலனே போற்றி
07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
09. ஓம் அற்புதனே போற்றி
10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
15. ஓம் உக்ர பைரவனே போற்றி
16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
21. ஓம் எல்லை தேவனே போற்றி
22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
23. ஓம் கபாலதாரியே போற்றி
24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
25. ஓம் கர்வ பங்கனே போற்றி
26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
27. ஓம் கதாயுதனே போற்றி
28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
29. ஓம் கருமேக நிறனே போற்றி
30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி
31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
33. ஓம் கால பைரவனே போற்றி
34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
37. ஓம் காசிநாதனே போற்றி
38. ஓம் காவல்தெய்வமே போற்றி
39. ஓம் க்ரோத பைரவனே போற்றி
40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
41. ஓம் சண்ட பைரவனே போற்றி
42. ஓம் சட்டை நாதனே போற்றி
43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
45. ஓம் சிவத்தோன்றலே போற்றி
46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
47. ஓம் சிக்ஷகனே போற்றி
48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி
51. ஓம் சிவ அம்சனே போற்றி
52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
53. ஓம் சூலதாரியே போற்றி
54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
55. ஓம் செம்மேனியனே போற்றி
56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
63. ஓம் நவரச ரூபனே போற்றி
64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
67. ஓம் நாய் வாகனனே போற்றி
68. ஓம் நாடியருள்வோனே போற்றி
69. ஓம் நிமலனே போற்றி
70. ஓம் நிர்வாணனே போற்றி
71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
72. ஓம் நின்றருள்வோனே போற்றி
73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
74. ஓம் பகையளிப்பவனே போற்றி
75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
78. ஓம் பால பைரவனே போற்றி
79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
80. ஓம் பிரளயகாலனே போற்றி
81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
82. ஓம் பூஷண பைரவனே போற்றி
83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
84. ஓம் பெரியவனே போற்றி
85. ஓம் பைராகியர் நாதனே போற்றி
86. ஓம் மல நாசகனே போற்றி
87. ஓம் மகோதரனே போற்றி
88. ஓம் மகா பைரவனே போற்றி
89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
90. ஓம் மகா குண்டலனே போற்றி
91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
92. ஓம் முக்கண்ணனே போற்றி
93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
94. ஓம் முனீஸ்வரனே போற்றி
95. ஓம் மூலமூர்த்தியே போற்றி
96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
98. ஓம் ருத்ரனே போற்றி
99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
100. ஓம் வடுக பைரவனே போற்றி
101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...