Showing posts with label # thruvaurai #nadarajar #Chidambaram #Hindu temple #Tamilnadu #India. Show all posts
Showing posts with label # thruvaurai #nadarajar #Chidambaram #Hindu temple #Tamilnadu #India. Show all posts

Friday, January 10, 2025

திருவாதிரை தரிசனத்தை ஆருத்ரா தரிசனம் என்று கூறுவார்கள்..

திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும் . கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா நட்சத்திரங்களை நான் திருவாதிரை என்று கூறியிருப்பதில் இருந்து அந்த நட்சத்திரத்திற்கான  சிறப்பை அறியலாம் .    மார்கழி மாதம் என்பது சிறப்பான மாதம்தான்  மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.  மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் சிவபெருமானின் திருக்குவளங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம் ஐந் தொழில்களையும் ஒருங்கேபுரிந்து பிரபஞ்சத்தை இயக்கும் நடராஜபெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும் அதில்  மார்கழி திருவாதிரை வசியம் விசேஷமானது .  திருவாதிரை விரதம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதினாவில் உபவாசம் இருந்து  நோக்கும் ஒரு நோன்பாகும் அத்துடன் திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய 10 தினங்களில் இறுதி நாளாகும்  மார்கழி திருவாதிரை அமைகிறது . மார்கழி மாதத்தில் வரும் திருவாதி நட்சத்திரத்தை அன்று காட்சி தரும் கடவுளைக் கண்டு களித்தால்   வீழ்ச்சியில வாழ்க்கை அமையும் திருவாதிரை தரிசனத்தை  ஆருதரா தரிசனம் என்று கூறுவார்கள்     சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும் இவ்வரதம் சிவனுக்கு மிகவும்  உகந்தது இதனை  கொண்டு தான் சிவபெருமானை   ஆதிரையின்   முதல்வன் என்றும்   ஆதிரையான்  என்றும் கூறுவர்     மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர  நாளில் உத்தரகோசமங்கை கோவில்   கொண்டு  அருளிய மரகத நடராஜ  பெருமானை  அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம்  அன்றைய தினமே ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது . திருவாதிரை விரதம் இருப்பவர்கள் உபவாசம் இருந்து  கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும்  அன்று வீட்டில் முறைப்படி இறைவனை  வழிபட்டு நெய்வேத்தியமாக களி படைக்க வேண்டும் வேண்டும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பாரிஜாத வனேஸ்வரர் திருக்களர் திருவாரூர்.

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்,  திருக்களர்,  திருவாரூர்.  திருவாரூர் மாவட்டம். +91- 4367 – 279 374 (மாற்றங்களுக்குட்பட...