Showing posts with label #yaga Salai #Hindu temples #temples things #kumbabishekam #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #yaga Salai #Hindu temples #temples things #kumbabishekam #Tamil Nadu #India. Show all posts

Friday, September 20, 2024

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி
ஹோமங்களின் ரகசியம்

(1)சமித்துவகைகள் _13 
(2)ஹோமதிரவியம் _45
(3) ரஸவர்க்கம்.           _8
(4) பழவர்க்கம்.            _7
(5) கிழங்கு வகையறா_5
(6) உலோகம்                _2
(7) வாசனாதிரவியம் _5
(8) அன்னவர்க்கம்     _ 4
(9) பக்ஷ்யம்.                 _5
(10) பட்டுவஸ்திரம்     _1
(11) தாம்பூலம்             _1
               
          மொத்தம்_       (96)

இதன் விளக்கம்.
===============

(1) 13:சமித்து
-----------------------
           அரசன், ஆல், அத்தி, முருங்கை, கருங்காலி, சந்தனம், மா, மூங்கில், வன்னி, வில்வம், எருக்கன், பலா, பாதிரி சமித்து மேற்கண்ட சமித்தை தவிர வேற எந்த சமித்தும் ஹோமத்தில் போடக்கூடாது...  
(2) 45:ஹோம திரவியம்
---------------------------------------
             அரிசி மாவு,  மூங்கில் அரிசி, வெல்லம்,
பச்சை கற்பூரம், நாட்டுச்சக்கரை, சத்துமாவு, பேரிச்சை, வால்மிளகு, வலம்புரிக்காய், இடம்புரி காய், மாசிக்காய், நாயுருவி, சீந்தில்கொடி, நெல்லி வத்தல், வெள்ளறுகு, சுக்கு , ஜட மஞ்சரி, களிப்பாக்கு, ஓமம், அகில்_குகில், அதிமதுரம், செண்பக மொட்டு, வெட்டி வேர் , ரோஜா மொட்டு, கிராம்பு, கோரோஜனை, அவல், நெல்லு பொரி, கொப்பரை தேங்காய், குங்குமம், விரளிமஞ்சள், வங்காளமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், கோதுமை, காராமணி, துவரை, பயறு, கருப்பு கொண்டை கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, இந்த 45 பொருட்கள் மட்டுமே.....
(3) 8:ரஸ வர்க்கம்
-----------------------------
                நெய், பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், வெண்ணெய், சந்தனாதிதைலம்,

(4) 7:பழ வர்க்கம்
----------------------------
             வில்வம் பழம், பலாபழம், திராட்சைபழம் ,
அன்னாசிபழம், மலைப்பழம், விளாம்பழம், மாம்பழம்.

(5) 5:கிழங்கு வகையறா
-------------------------------------------
சக்கரவள்ளி, சேப்பங்கிழங்கு,
கருணை கிழங்கு, தாமரை கிழங்கு நீலோத்பல கிழங்கு, கரும்பு

(6) 2:உலோகங்கள்
---------------------------------
           ஸ்வர்ணம், வெள்ளி

(7) 5:வாசனாதிரவியம்
----------------------------------------
                ஜாதிபத்திரி, ஜாதிக்காய், ஏலக்காய், புனுகு, ஜவ்வாது,

(8) 4:அன்னவர்க்கம்
-----------------------------------
         சக்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம்

(9) 5:பக்ஷ்யம்
-------------------------
            லட்டு, பாயசம், வடை, அப்பம், மோதகம்

(10) பட்டு வஸ்த்திரம்.

(11) தாம்பூலம் 

மேற்கண்ட பொருட்கள் அனைத்து ஹோமத்திலும் அவசியம் பயன் படுத்த பட வேண்டியவை...

ஒருசில யாகத்தில் சில பொருட்கள் மாறும் ....

ஹோம நெறிகளை  கடைபிடிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், ‌நீங்கள் ஹோமம் செய்யும் பொழுது 54,108 ஹோம திரவிய பொட்டலம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதில் உள்ளதில் பல பொருட்கள் பூஜைக்கு கிடையாது. தயவுசெய்து  நீங்கள் செய்ய கூடிய பூஜை பயன்உள்ளதாக அமைய மேற்கண்ட பொருட்கள் பயன்படுத்துங்கள்.. 

Followers

பாரிஜாத வனேஸ்வரர் திருக்களர் திருவாரூர்.

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்,  திருக்களர்,  திருவாரூர்.  திருவாரூர் மாவட்டம். +91- 4367 – 279 374 (மாற்றங்களுக்குட்பட...