Showing posts with label #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #hindu #india #tamilnadu. Show all posts

Monday, May 22, 2023

அக்னியில் தயாரான உணவுப் பதார்த்தங்களை சாதி, மத, இன பேதமின்றி இறைவனை நம்பி வாழும் ஏழைகளுக்கும்

_அக்னி தத்துவமும் அன்னதானமும்_


அக்னியில் தயாரான உணவுப் பதார்த்தங்களை சாதி, மத, இன பேதமின்றி இறைவனை நம்பி வாழும் ஏழைகளுக்கும், இறைவனை வழிபடும் அடியார்களுக்கும் அளித்தல் அற்புதமான அக்னி தத்துவ வழிபாடாகும். 

சிறப்பாக இறைவன் அக்னி வடிவமாக எழுந்தருளிய திருவண்ணாமலையில் அக்னியில் தயாரான ரொட்டி கலந்த பிரிஞ்சி போன்ற உணவு வகைகளையும், திருக்கோயில் தெப்பக் குளங்களில் உள்ள மீன்களுக்கு ரொட்டி தானமும் அளித்தல் நலம்.

நெருப்பு, மின்னல், தீபம், மின்சார விளக்குகள் போன்றவை கண்களால் காணக் கூடிய அக்னி சக்தி வெளிப்பாட்டுப் பொருட்களாக உள்ளன. 

ஆனால், கண்களால் காண முடியாத அக்னி ஒன்று உண்டு. அதுவே ஏழைகளின் வயிற்றில் குடிகொண்டுள்ள பசி என்னும் கொடிய தீயாகும். 

மற்ற அக்னிகளை விட இந்தக் காணா அக்னித் தீயை காணக் கூடிய உணவால் அணைப்பதே அற்புதமான வழிபாடு என்று சித்தர்கள் போற்றுகின்றனர்.

பார்க்க முடியாத அக்னியை, பார்க்கக் கூடிய உணவால் தீர்த்து, தீர்க்க முடியாத கர்ம வினைகளைக் களையலாம் என்பது சித்தர்கள் கலியுக மக்களுக்கு அளிக்கும் நல்லுரை, 

அதாவது, கண்களுக்குத் தெரியாத பசி என்னும் கொடிய தீயை, நிறைய உணவை வாரி வழங்கி அன்னதானத் தரையால் அணைப்பதால் இனந் தெரியாத கர்மங்களும் களையப் பெறும் என்பது பெரியோர்கள் காட்டும் அறப் பாதை.

🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🔥🔥

Friday, April 21, 2023

. யார் குரு பகவான் வடக்கை பார்ப்பவர். தெட்சிணாமூர்த்தி தென்முககடவுள்.

தட்சிணாமூர்த்தி (அல்லது) தென்முகக்கடவுள்
தட்சிணாமூர்த்தி என்றும் தென்முகக்கடவுள் என்றும் போற்றப்படும் இவர் ரிஷிகளுக்கு யோகத்தையும் ஞானத்தையும் குருவாக அமர்ந்து உபதேசிக்கும் நிலை ..

சிவனின் லீலாமுர்த்திகள் இருபத்தைந்தில் சௌமியம் (சாந்தம்) சம்ஹாரம் (வதம்), நிருத்தம் (நடனம்), யோகம் (தியானம்) அனுக்கிரகம் (அருளல்) ஆகிய ஐந்தொழில்களில் யோக நிலையில் இருந்து ரிஷிகளுக்குக் கல்வியையும், ஞானத்தையும், யோகத்தையும் உபதேசிக்கும் மூர்த்தியாகத் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார்.

தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்தில் “தெக்கினான்” என்றும், “ஆலமர் செல்வன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆகவே, தென்திசை அறிவும், ஞானமும் நிறைந்த திசையாகக் கருதப்படுகிறது. இவர் மகாராஜலீலாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், உத்குடிக்காசனம் போன்ற ஆசனங்களில் அமர்ந்திருப்பார்.

வியாக்யான தட்சிணாமூர்த்தி

இமயமலையின் மீது ஆலமரத்தினடியில் அமர்ந்து சாஸ்திரங்களை விளக்குவது போல அமைந்திருக்கும். இவர் புலித்தோலினையோ அல்லது வெள்ளைத் தாமரையிலோ பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். 

வலது காலைத் தொங்கவிட்டும் இடது காலை வலது காலின் மீது அமர்த்தியவாறும் இருக்கும். இவ்வகையான அமைதியினை “வீராசனம்” என்று அழைக்கப்படுகிறது.

தொங்கவிடப்பட்ட வலது காலினை அபஸ்மாறன் அல்லது முயலகன் மீது வைத்திருப்பது போலமைந்திருக்கும். முன்று கண்களையும், (நெற்றிக்கண்) நான்கு கரங்களையும், பெற்றிருப்பார். 

முன் வலது கை ஞான முத்திரை அல்லது சுதர்சன முத்திரையினையும், இடது கை வரத முத்திரை அல்லது தண்ட ஹஸ்தத்தினையும் (முன் கை முழங்காலின் மீது வைத்து நீட்டியவாறு அமைந்திருக்கும்), பின் வலது கை அக்கமாலையும், பின் இடது கை அக்னியும் அல்லது சர்பமும் தரித்திருக்கும். 

தலையில் சடாமுடி தரித்திருக்கும் சடையின் மீது ஊமத்தம் பூ அணிந்திருக்கும் சடாபாரம் அணிந்திருக்குமேயானால் அதன் உள்ளே கங்கையைத் தாங்கியவாறு இருக்கும்.

இவரது மேனியின் நிறம் வெண்ணிறமான ஸ்படிகத்தின் நிறத்தைப் போல அமைந்திருக்கும். சகலாபரணங்களும் அணிவிக்கப்பட்டிருக்கும் மார்பில் திருநீற்றுச்சாந்து பூசியிருப்பார்.

யக்ஞோபவீதம் அணிந்திருப்பார் இடது காதினில் சங்கபத்ர குண்டலமும், வலது காதினில் குண்டலமும் அணிந்திருக்கும். தட்சிணாமூர்த்தியின் பார்வையானது காலின் பெருவிரலினைப் பார்த்தவாறு அமைந்திருக்கும்.

தர்மத்தையும், ஞானத்தையும் கற்கும் ஆவலில் ரிஷிகள் சூழ்ந்திருப்பர். அம்சுமத் பேதாகமம், சபதரிஷிகளான நாரதர் ஜமதக்னி, வசிஷ்டர், பிருகு, பரத்வாஜர், சனகர் மற்றும் அகஸ்த்தியர், ஆகியோர் சூழ்ந்திருப்பதாகக் கூறுகிறது. 

அகஸ்த்தியர், புலஸ்த்தியர், விஸ்வாமித்திரர், மற்றும் ஆங்கீரசர் ஆகிய நான்கு ரிஷிகள் ஞானம் பெறுவதாகக் காரணாகமம் குறிப்பிடுகின்றன. இவர்கள் தலையில் சடாமுடியும் கழுத்தில் ருத்திராட்சமும் அணிந்திருப்பதாகக் குறிப்பிடுகின்றன.

ஞானதட்சிணாமூர்த்தி

வியாக்கியான தட்சிணாமூர்த்தியைப் போன்ற வடிவில் அமைந்திருப்பார் பின் வலது கையில் அக்கமாலையும், பின் இடது கையில் நீலோத்பல மலரும், வலது கையில் ஞானமுத்திரையும், முன் இடது கையில் அபயம் அல்லது தண்டஹஸ்தமும் தரித்துக் காணப்படுவார்.

யோக தட்சிணாமூர்த்தி

1. முதல் வகை

இரண்டு கால்களைக் குறுக்காக மடக்கி ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்திருப்பார். முன் வலது கை மார்பிற்கு நேராக யோகமுத்திரை தரித்து முன் இடது கை தொடையின் மீது அமர்த்தி யோக நிலையில் அமைந்திருக்கும். பின் வலது கை அக்கமாலையும், பின் இடது கை தாமரை மலரினைத் தரித்திருக்கும் இவரின் பார்வை மூக்கின் நுனியைப் பார்த்தவாரமைந்திருக்கும். தோள்களின் மீது பரவலாகச் சடைகள் காணப்படும்.

2. இரண்டாவது வகை

யோக தட்சிணாமூர்த்தியின் இடதுகால் மடக்கி உத்குடிக்காசணத்திலும் இடது காலையும் உடலையும் யோகபட்டையால் இணைக்கப்பட்டிருக்கும் வலதுகால் தொங்கவிடப்பட்ட நிலையிலிருக்கும். முன் இடது கையின் முழங்கை இடது முழங்காலின் மீது அமர்த்தப்பட்டிருக்கும்.

3. மூன்றாவது வகை

இரண்டுகால்ளையும் குறுக்காக மடக்கி ஆசனத்தின் மீது ஊன்றியவாறு அமைந்திருக்கும். இவரது கால்களையும் உடலையும் யோகப்பட்டையால் இணைக்கப்பட்டிருக்கும். முன் கைகள் இரண்டும் ஆசனத்தில் ஊன்றியிருக்கும் முழங்காலில் மீது அமர்த்திய வாறிருக்கும் பின் வலது கையில் அக்கமாலையும், பின் இடது கையில் கமண்டலமும், தரித்திருக்கும் சடைகளை ஒன்றாக இணைத்து சடா மண்டலமாகக் கொண்டு அதன் மேல் பிறைச்சந்திரன் மற்றும் நாகத்தினை அணிந்திருப்பார். வெள்ளை நிற மேனியராய் இருப்பார். கழுத்தின் நிறம் கருப்பாக அமைந்திருக்கும். சகலாபரணங்களும் அணிந்திருப்பார்.

வீணாதர தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல யோகம் மற்றும் ஞானத்தில் தேர்ச்சிபெற்றது மட்டுமல்லாமல் கலையிலும் தேர்ச்சி பெற்றவர். குறிப்பாக இசையில் பிரியர். பல கருவிகளை உபயோகிப்பவர். மிருதங்கம் (வெட்டுவான் கோயில் ), வீணை (லால்குடி) கருவிகளை மீட்டும் வல்லமை பெற்றவர்.

காமிகம் காரணம், அம்சுமத்பேதாகமம் இவரை இசைப்பிரியர் என்று எடுத்துக்காட்டுகின்றது. இடது காலை உத்குடிக்காசனத்தில் இருப்பதாக அமைத்து முன்னிரு கைகளில் வீணையைப் பிடித்தவாறும், பின் இருகைகளில் மான் மற்றும் மழுவினைத் தரித்திருப்பார்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி பலவித விலங்கினங்கள், ஊர்வனவைகள், ரிஷிகள், சித்தர்கள், வித்யாதரர்கள், பூதகணங்கள், கின்னரர்கள் ஆகியோர் சூழ அமைந்திருக்கும். ஆலமரத்தினடியில் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் விரிக்கப்பட்ட புலித் தோலின் மீது சௌமிய தோற்றத்துடன் அமர்ந்திருப்பார்

Sunday, January 22, 2023

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார்.

சனி பகவானும் விநாயகரும்

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார்.
அந்த பரிகாரம் வருமாறு: பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும்.
அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.
அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு....
தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணை ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம்.
* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
* கோமாதா பூஜை செய்யலாம்.
* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.
* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு
* பரிகாரம்,சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.
* சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.
* சனி மூன்றில் இருந்தால்-வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.
* சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு( தானியம்) தானம் செய்யலாம்.
* சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.
* சனி 6-ல் இருந்தால் 40-க்கும் மேல் 48 வாதிற்குள்ள இடைகாலத்தில் வீடுகட்டுதல் கூடாது.
* சனி7-ல் இருந்தால்- கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது.
* சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.
* சனி 9-ல் இருந்தால்-வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.
* சனி 10-ல் இருந்தால்-10-பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.
* சனி11-ல் இருந்தால்- வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும் போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.
* சனி 12-ல் இருந்தால்-வீட்டின் கடைசி இருட்டறையில் 12-ம் பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மையூட்டும்.
சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார்.
ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு.
குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.
சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும் தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான் என்று புலம்புவது உண்டு
அது போன ஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர். சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார், அவரது நேரடிப்பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.
ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும்.
உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ, வைத்து விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும். ச
னி பகவான் கால் ஊனமுற்றவர், ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது. விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும். கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.
வாதம் நீக்குபவர்........
இந்த சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும், கந்தலும் அகப்படாது....
இந்த சனியின் பிறந்த நாளிலிருந்து குடும்பத்தை பாடாய்படுத்துகிறது. இப்படியாக சனியை பல கோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.
குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000 மைல். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலையா கோவிலில் கற்சிலையாக தூணில் பெண் உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்திலும் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார். மனித உடலில் தொடைகளுக்கு உடையவர்.
குடல் வாத நோய் இவரால் ஏற்படும். மேலும் முதுகு வலி, முடக்கு வாதம், யானைக் கால், பேய் தொல்லை, மூலநோய், மன தளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பாதித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்.

குடும்ப சமேதராக மங்கல சனி பகவான்! - மாந்தி-குளிகன் தரிசனம்

கும்பகோணம் - திருவாரூர் சாலையில், கும்பகோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில், அரசலாறு மற்றும் திருமலைராஜன் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில்.

108 வைணவத் தலங்களில் ஒன்றான இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், சித்தநாத சுவாமி திருக்கோயில் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது ஸ்ரீபர்வதவர்த்தனி உடனுறை ஸ்ரீராமநாத ஸ்வாமி திருக்கோயில்.கும்பகோணம் - திருவாரூர் சாலையில், கும்பகோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில், அரசலாறு மற்றும் திருமலைராஜன் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில்.

சனி பகவானின் அம்சத்தைத் தன்னுள் தாங்கி அருள்பாலிக்கும் பெருங்குளம் ஸ்ரீவேங்கடவாண பெருமாள்
தம்மை வேண்டும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் இந்த தீனதயாளன், இங்கு சனிபகவானின் அம்சத்தை தன்னுள் தாங்கி அருள்பாலிக்கிறார். இதனால் இங்குள்ள பெருங்குள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால், சனி தோஷங்கள் முற்றிலும் விலகும்; திருமணத்தடை நீங்கும்; பிள்ளை பாக்கியம் உண்டாகும்; பாவங்கள் யாவும் நீங்கி, பிறப்பிலாத பேரின்பத்தோடு பெருமாளின் திருவடியை அடையலாம் என்கிறது திருத்தல புராணம்.சனி பகவானின் அம்சத்தைத் தன்னுள் தாங்கி அருள்பாலிக்கும் பெருங்குளம் ஸ்ரீவேங்கடவாண பெருமாள்

'நவகிரகங்களுக்கு சந்நிதி இல்லாத கோயில்கள் எப்படி நவகிரக பரிகாரத் தலமாகத் திகழுமா?' என்ற கேள்விக்கு, 'ஆம்' என்றே பதில் சொல்வதுபோல் அமைந்திருப்பவைதான், தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி நதிதீரத்தில் அமைந்திருப்பதும் நவதிருப்பதிகள் என்ற சிறப்பினைப் பெற்றிருப்பதுமான ஒன்பது வைஷ்ணவத் தலங்கள். இந்தத் தலங்களில் பெருமாளே நவகிரகங்‌களாக அருள்புரிவதால், நவகிரகங்களுக்கு தனிச் சந்நிதி இல்லை. கிரகதோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்குவது வைணவர்களின் நம்பிக்கை. இந்த ஒன்பது நவகிரக ஆலயங்களில் சனி கிரக பரிகாரத் தலமாக இருப்பது பெருங்குளம் ஸ்ரீவேங்கடவாண பெருமாள் ஆலயம் என்னும் மாயக்கூத்தர் கோயில்.

பெருங்குளம் என மக்கள் வழக்கில் அழைக்கப்படும் இந்த ஊர் இரட்டைத் திருப்பதியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. பிருகஸ்பதிக்கு காட்சி தந்த பெருமாள் வீற்றிருக்கும் இந்தத் தலத்தின் பெயர் திருக்குளந்தை என இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் பெருமாளின் திருப்பெயர் ஸ்ரீவேங்கடவாண பெருமாள். ஆலய உற்சவரோ அழகிய ஸ்ரீமாயக்கூத்தர். தேவி ஸ்ரீகமலாவதி தாயார். அவர் ஸ்ரீகுழந்தைவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த ஊரில், வேதவிற்பன்னராக சிறந்து விளங்கிய வேதசாரன் என்பவர், அவரது மனைவி குமுதவதியுடன் வாழ்ந்து வந்தார். எந்நேரமும் பெருங்குளத்து பெருமானை கார்வண்ண வேங்கட வணனை வணங்குவதையே முதன்மையான கடமையாகக் கருதி வாழ்ந்து வந்தார். இதனால் அந்த தம்பதிகளுக்கு அன்னை பத்மாவதியே மகளாக அவதரித்தார்.

கமலாவதி என்ற பெயரோடு அன்னை வளர்ந்து வந்தார். பெருமாளின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு, பித்தாகி, அந்த திருமாலையே திருமணம் செய்துகொள்ள விரும்பி தவம் புரிந்தாள். அவளின் தவத்துக்கு இரங்கிய மாயக்கூத்தர் தன் கெளஸ்துப மாலையுடன் கமலாவதியை ஆலிங்கனம் செய்துகொண்டு, தை மாதம் சுக்ல பட்ச துவாதசி பூச நட்சத்திர நாளில் கல்யாணம் செய்து கொண்டார்.

இமயமலையில் தீய குணங்களைக் கொண்ட முனிவன் ஒருவன், 1,000 அழகான பெண்களை திருமணம் செய்துகொண்டால் சாகாவரம் பெறலாம் என்ற நோக்கில் திரிந்துகொண்டு இருந்தான். இப்படி தேடித் தேடி ஒரே சமயத்தில் 998 பெண்களைக் கவர்ந்து சென்றான். அடுத்ததாக வேதசாரனின் மனைவி குமுதவதியை கவர்ந்துகொண்டு சென்றான். இதனால், மனம் நொந்த வேதசாரன் தன் மனைவியை மீட்டுத் தரும்படியாக திருமாலை மனமுருக வேண்டினான். தன் பக்தனின் இன்னலைத் தீர்க்க திருவுள்ளம் கொண்ட பெருமாள், இமயமலைக்குச் சென்றார். தன் துணை இன்றி திருமால் நகரவே முடியாது என்று கருடாழ்வார் ஆணவத்துடன் இருந்தார். அவரின் கர்வத்தை அடக்க நினைத்த திருமால், அவரை தமது கால்களின் இடையில் வைத்துக்கொண்டு, பறந்து சென்றார்.

தமது பக்தனின் மனைவி குமுதவதியை மீட்டுக்கொண்டு திரும்பினார். தோல்வியடைந்த அந்த முனிவன் சீற்றமாகி, இந்தத் தலத்துக்கு வந்து போர் புரிந்தான். பெருமாளும் அவனை அடக்கி அவனுடைய தலையின் மீது கால் பதித்து, நடனம் ஆடினார். பெருமாளின் திருவடி பட்டதால் அந்த முனிவன் விமோசனம் பெற்று கந்தர்வனாக மாறினான். அற்புத நாட்டியம் ஆடிய பெருமாள், தேவர்களால் மாயக்கூத்த பெருமாள் என்னும் திருப்பெயர் பெற்றார்.

தம்மை வேண்டும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் இந்த தீனதயாளன், இங்கு சனிபகவானின் அம்சத்தை தன்னுள் தாங்கி அருள்பாலிக்கிறார். இதனால் இங்குள்ள பெருங்குள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால், சனி தோஷங்கள் முற்றிலும் விலகும்; திருமணத்தடை நீங்கும்; பிள்ளை பாக்கியம் உண்டாகும்; பாவங்கள் யாவும் நீங்கி, பிறப்பிலாத பேரின்பத்தோடு பெருமாளின் திருவடியை அடையலாம். 

Thursday, January 5, 2023

முப்பத்து முக்கோடி தேவர்கள் யார்?.

முப்பத்து முக்கோடி தேவர்கள் யார்?.... 

தெரிந்து கொள்வோம்.....

நம்முடைய தெய்வங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் போது முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று கூறுவது உண்மைதான். 

முப்பத்து முக்கோடி என்பது 33 கோடி ஆகும்.

இங்கே "கோடி" என்பதை எண்ணிக்கையைக் குறிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்
ஆனால் "கோடி" என்ற சொல் சமஸ்க்ருதத்தில் " பிரிவு அல்லது வகை" என்பதைக் குறிக்கும்.

ஆக மொத்தம் 33 வகையான தெய்வங்கள் ஹிந்து சனாதன தர்மத்தில் உள்ளன என்பதை சொல்லவே முப்பத்து முக்கோடி என்கின்றனர்

உதாரனமாக.......
கிராமங்களில் ஒருவர், அந்த தெரு கோடியிலிருந்து வருகிறேன் என்றால் கோடி தெரு என்பதல்ல அர்த்தம் அதாவது அந்த தெருவின் பிரிவிலிருந்து வருகிறேன் என்பதாகும்.

அது போல் கோடி வேஷ்டி என்றால் ஒரு கோடி வேஷ்டி எனபதல்ல அர்த்தம் அது வெண்மையும் அல்லாத மஞ்சளும் அல்லாத ஒரு வேஷ்டி (வெள்ளாவியில் வண்ணார் வைத்தால் வெள்ளையாகி விடும் எனவே அதை கோடி வெளுப்பாக கொடு என்பர் ஊர்களில்)

○ கோடி என்பது எண்ணிக்கை அல்ல அதன் உண்மையான அர்தம் "பிரிவு" என்பதே

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்

வசு, ருத்ர, ஆதித்ய ரூபம் என்று மூன்றாகப் பிரிப்பர்

நாங்களோ அல்லது உங்களை போன்றவர்களோ பொதுவாக அமாவாசை தர்பணத்தில் பித்ரு வசு ரூபமாகவும், பிதாமஹர் ருத்ர ரூபமாகவும், பிதுர்பிதாமஹர் ஆதிதய ரூபமாகவும் உள்ளதாக கூறி தர்பணம் செய்வோம்.

அதில் வசு கீழ் நிலை. ருத்ரர் இரண்டாம் நிலை. ஆதித்யர் மூன்றாம் நிலை. இந்த மூன்று நிலையில் 31 பிரிவுகள் அடங்கும்

அந்த 31 பிரிவுகள் எவை பார்ப்போம்.

31 அதில்....

□ ஆதித்ய நிலையில் 12 பிரிவுகள்

1) விஷ்ணு

2) தாதா

3) மித

4) ஆர்யமா

5) ஷக்ரா

6) வருண

7) அம்ஷ

8) பாக

9) விவாஸ்வான்

10) பூஷ

11) ஸவிதா

12) தவாஸ்தா

□ வசு நிலையில் 8 வகையாவன:

13. தர

14. த்ருவ

15. சோம

16. அனில

17. அனல

18. ப்ரத்யுஷ

19. ப்ரபாஷ

□ ருத்ரன் நிலையில் 11 பிரிவுகள்

21. ஹர

22. பஹூரூப

23. த்ரயம்பக

24. அபராஜிதா

25. ப்ருஷாகாபி

26. ஷம்பூ

27. கபார்தி

28. ரேவாத்

29. ம்ருகவ்யாத

30. ஷர்வா

31. கபாலி

□மற்றும் 2 பிரிவு அஷ்வினி குமாரர்கள்.

ஆக மொத்தம் = 33 வகையான (பிரிவுகளான) தெய்வங்கள்.

முப்பத்து முக்கோடி என்பது இதுதான். புரிந்ததா?....... 
நாம் நினைப்பது போல் 33 கோடியும் இல்லை. முப்பத்து முக்கோடியும் இல்லை.

இனிமேல் கோயில்களில் தெய்வங்களை வழிபடும் போது இதை மனதில் வைத்து கொண்டு வழிபடுவோம்.

வாழ்க வளமுடன் 🙏🙏🙏

Tuesday, December 27, 2022

ஏன் மணி அடித்துக் கொண்டு இறைவனை வணங்குகிறோம்

ஏன் மணி அடித்துக் கொண்டு இறைவனை வணங்குகிறோம்…?
நாம் பின்பற்றும் விஷயங்களில் ஒன்று கோவிலில் மணி அடித்து வழிபடுவது. இன்னும் சிலர், நாம் மணி அடித்து வழிபட்டால் தான் நமது வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்ப்பார் என்று அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தை சொல்வார்கள்.

பொதுவாக மணி அடிக்கும் போது எழுகின்ற ஓசைக்கும், நமது மூளைக்கும் இடையே தொடர்புகள் உள்ளது என்று சாஸ்திரத்தில் நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி மணியிலிருந்து எழும் ஓசைக்குப் பின்னால் ஒரு அறிவியல் நுண்ணறிவும் இருக்கிறது. ஆகம விதிகளின் படி, வெண்கல மணியில் இருந்து எழுப்பப்படுகின்ற ஓசைக்கு எதிர்மறை சக்திகளை விரட்டி, மனதிற்கும், உடலுக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கின்ற வல்லமை உண்டு.

உண்மையில் கோயிலில், செல்ஃபி எடுத்துக் கொண்டும், பிறர் கண்ணீர் கதைகளையும் பிரகாரங்களில் அமர்ந்து பேசுபவர்களின் காதுகளில் மணியின் சப்தம் கேட்டு, அவர்களின் கவனத்தை கடவுளை நோக்கித் திரும்புகிறது கோயில் மணி ஓசை.

மணியில் இருந்து வெளிவரும் ஒலியில் ஒரு தனித்துவம் தெரியும். அதற்கு மணிகளில் உள்ள கேட்மியம், துத்தநாகம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களின் கலப்பு தான் காரணமாகும்.

மணியில் இருந்து வெளிவரும் ஒலியானது, மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களை ஒரு சமநிலைக்கு கொண்டு வர உதவுகின்றது.

கோவில் மணியில் இருந்து வெளிப்படும் சத்தம் உடலில் நேர்மறை ஆற்றல் மற்றும் மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மனதிற்கு நிறைவான அமைதி மற்றும் நிம்மதியை அளிக்கிறது.

பூஜைகள் நடைப்பெறும் நேரங்களில், மணியடித்து, சப்தம் எழுப்பி, “இப்பொழுதாவது இறைவனை நோக்கி மனதை செலுத்தி நற்கதியைப் பெறுங்கள்” என்று பக்தர்களை மனதை ஒருமுகப்படுத்த கோயில் மணி உதவுகிறது.

கோவிலில் உள்ள மணி பொதுவாக (zync, nickel, lead, chromium, copper, manganese) உள்ளிட்ட ஆறு உலோகங்களால் ஆனது. கோவில் மணியை அடிக்கும்போது ஏற்படும் ஓசை நமது மனதை ஒரு நிலைப்படுத்தி நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்களை (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரஹாரம்) சீர்படுத்துகிறது.

மணி அடித்த ஏழு வினாடிகளும் அந்த அதிர்வலைகள் நமது காதுகளில் ஒழிக்கும். அப்போது நமது மனது ஒரு நிலைப்படும். நமது வலது மற்றும் இடப்புற மூளை தெளிவடையும். இந்த நிலையை தான் டிரான் நிலை என்கிறோம்.

Tuesday, December 13, 2022

_தெய்வங்களின் குணமே கிரஹங்களின் குணம்!_

_தெய்வங்களின் குணமே கிரஹங்களின் குணம்!_


சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக உள்ளனர். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.

*சூரியன் – சிவன்*

பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். 

அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.

*சந்திரன் – பார்வதி*

பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.

இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் – நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.

*செவ்வாய் : சுப்ரமண்யர்*

ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.

வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. 

அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.

*புதன் : விஷ்ணு*

ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. 

எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.

*குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)*

ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.

*சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்*

ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். 

ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.

*சனி : எமன், சாஸ்தா*

உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).

*ராகு: காளி, துர்கை*

கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. 

ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.

*கேது : விநாயகர், சண்டிகேஸ்வரர்*

ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். 

நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).

Tuesday, November 1, 2022

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள்93 வருட உலக அனுபவம்.. 73 வருட துறவறம்: 48 வருட காலம் நமக்கெல்லாம் குருவாக விளங்கி நல்வழிகாட்டியவர்

⛩️⛩️⛩️மகான்கள்...
 
🔥சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமி. (2)

🙏🏼ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள்

93 வருட உலக அனுபவம்.. 73 வருட துறவறம்: 48 வருட காலம் நமக்கெல்லாம் குருவாக விளங்கி நல்வழிகாட்டியவர் திருக்கயிலாய பரம்பரையில் 450 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி குரு முதல்வர் குருஞான சம்பந்தரால் தோன்றி அருளிய குருபீடமே தருமை ஆதீனம். இந்த ஆதீனத்தின் 26வது குருமகா சந்நிதானம் அவர்கள் காட்டுமன்னார்குடி வட்டம், சிறுகாட்டூர் என்னும் திருத்தலத்திலே கார்காத்தார் குலம் - முனையதரையன் கோத்திரம் கந்தசாமி பிள்ளை அவர்களுக்கு ஐந்தாவது மகனாக 21.4.1926ம் ஆண்டு அவதரித்தார்.

🔥🙏🏼திருஞானசம்பந்தன் என்ற திருநாமத்தோடு, இவர் உள்ளூர் திண்ணைப்பள்ளியிலும், 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியும் பயின்றார். 1936ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாசி மகோற்சவத்தில் 6ம் திருநாளன்று தந்தையருடன் விருத்தாசலம் சென்று சபாபதி செட்டியார் தேவாரப்பாடசாலையில் சேர்ந்து திருமுறை பயிற்சி பெற்றார்.

பின்னர் திருப்பனந்தாள் காசித்திருமடத்து 20 ஆவது அதிபர் ஸ்ரீலஸ்ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகளால் ஆதரிக்கப்பெற்று திருமுறைகள் பாடியும், தருமையாதீனம் 25 ஆவது குருமகா சந்நிதானம் கயிலை குருமணிகளால் ஆற்றுப்படுத்த பெற்றும், பின்னர் தருமையாதீனத்தில் 1945 ஆம் ஆண்டு ஆனி மாதம் 31 ல் துறவு ஏற்றார்கள். முன்பு செய்த தவத்தின் பயனால் 25வது குருமகா சன்னிதானத்தை தரிசித்து விண்ணப் பம் செய்தார். அடுத்த நாள் குருவாரம் வடக்கு குருமூர்த்தம் சச்சிதானந்த விநாயகர் கோயிலில் காஷாயம் வழங்கச் செய்தருளினார்கள். அது முதல் ஸ்ரீமத் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். திருப்பனந்தாளில் ஓதுவார் பணியில் இருந்தபோதே காசிமடத்தின் சார்பில் தொடங்கிய காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் வித்துவான் புகுமுக வகுப்பிலும் சேர்ந்து பயின்றார். தருமபுரம் வந்தவுடன் தருமை குருமணியின் அருளால் தொடங்கப்பெற்ற புகுமுக வகுப்பில் சேர்ந்து 1946ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றார். 1945ம் ஆண்டு ஆவணி மாதத்தில் கயிலை குருமணிகளிடம் சமய தீட்சை பெற்றார். தீட்சா நாமம் சோமசுந்தரம் என்பது அதே ஆண்டில் ஐப்பசி கந்த சஷ்டியன்று விசேட தீட்சை பெற்று சிவபூசை எழுந்தருள பெற்றார்.

1950ம் ஆண்டு பிப்ரவரியில் சிவராத்திரியன்று உடையவர் பூசை எழுந்தருளப் பெற்றார். 1951ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி நிர்வாண தீட்சை பெற்று 23.9.1951ல் சொக்கநாதர் பூசை செய்யும் பேறு பெற்றார். 1953 மார்ச் மாதம் திருச்சி மலைக்கோட்டை மவுன மடம் கட்டளை விசாரணை பணியில் அமர்ந்தார். பின்னர் சென்னை தியாகராய நகரில் சைவமும் தமிழும் தழைத்து இனி ஒங்கவும் திருமுறைப் பாடல்கள் திக்கெல்லாம் முழங்கவும்” கயிலை குரு மணியவர்கள் ஆதீனத் திருமடம், ஆதீன தேவஸ் தானங்களின் சார்பில் சமயப் பிரசார நிலையம் தொட ங்கினார். அதில் பிராசார நிலைய விசாரணையாக பணியாற்றி வந்தார்.

11.11.1971 ம் ஆண்டு காசிவாசி அருணந்தி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் காசி மடம் இளவரசு காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் குன்றக்குடி அடிகளார் மற்றும் திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள் அனைவரும் சொக்கநாதர் திருமுன்னிலையில் கூடி ஒருமனதாக மவுனமடம் கட்டளை விசாரணையும் சென்னை சமயப்பிரசார நிலைய விசாரணையுமாக இருந்த சோமசுந்தர தம்பிரான் சுவாமிகளை தருமையாதீனம் குருமகா சன்னிதானமாக அறிவித்தனர். அவருக்கு சண்முகதேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் என்று நாமதீட்சை (பெயர்) சூட்டப்பட்டது. கயிலை குருமணிக்கு செய்ய வேண்டிய குருமூர்த்த அமைப்பு கிரியைகளையெல்லாம் சிவாகம முறைப்படி 10 நாட்கள் செய்து குருபூஜையும் சிறப்பாக செய்தார். 19.11.1971 முதல் குருஞான சம்பந்தர் அமைத்தருளிய ஞான பீடத்தில் எழுந்தருளினார். அது முதல் சைவ சமயப் பரிபாலனம் செய்து வந்தார். இவருக்கு கடந்த 5.5.2006ல் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சதாபிஷேக விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சைவமும் தமிழும் தழைத்து இனி ஓங்குக என்பது தருமை ஆதீனத்தின் குறிக்கோள் உரை. அதை நடைமுறைப்படுத்தி வாழ்ந்து வந்தார்.

🔥திருக்கோயில் குடமுழுக்கு, பன்னிருத்திருமுறை வெளியீடு, கல்வி நிறுவனங்கள் தொடங்கல் என பல்வேறு சிறப்புகளுடன் தமது ஆட்சி காலத்தை பொற்காலமாக நிகழ்த்தினார். இவரது வயது மூப்பின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2019 டிசம்பர் 4ம் தேதி முக்தியடைந்தார். 

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக, திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற 27 ஆலயங்கள் தமிழகம் மட்டுமின்றி, காசி உள்ளிட்ட இடங்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை திக்கு நோக்கி மனம் மொழி மெய்களால் வணங்கி மகிழ்வோம்.

திருச்சிற்றம்பலம்..🙏🏼 நற்பவி 🙏🏾 நற்பவி

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...