Showing posts with label #Chakravageswarar Temple #Chakkarappalli #Sivan temple #Hindu temple #Thanjavur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Chakravageswarar Temple #Chakkarappalli #Sivan temple #Hindu temple #Thanjavur #Tamil Nadu #India. Show all posts

Monday, May 5, 2025

மிருகம் பறவைகள் வழிப்பட்ட சிவாலயங்கள்..

2 ஐராவதத்தை  அழகாக்கி முக்தி  அருளிய  திருவிளையாடல்*:     
                                       
திரு ஆடானை, திரு ஆனைக்கா, ஆவூர்ப் பசுபதீசுவரம்,  திரு ஆவடு துறை,  திரு ஈங்கோய் மலை (திருவிங்க நாத மலை),   திரு எறும்பியூர்,  திருக் கரவீரம் (கழுதை),  கச்சபேசம் (ஆமை), திருக் கச்சூர்  ஆலக் கோயில் (ஆமை), திருக்கற்குடி (நண்டு), திருக் கழுக்குன்றம், திருக்காளத்தி, குரங்கணில் முட்டம்,  வட குரங்காடு துறை,  தென் குரங்காடுதுறை,  திருக் குருகாவூர் வெள்ளடை  (திருக்கடாவூர்),  கோகழி (பசு),  திருக் கோழம்பம்  (குயில்), சக்கரப் பள்ளி  (சக்கர வாகப் பறவை),  சிங்கபுரி  (சிங்கப்பூர்),  சேவூர் (காளை),   திரு நாரையூர், திரு நாகேசுவரம்,  திருநாகைக் காரோணம்,  பட்டீசுவரம், திருப் பாம்புரம், திருப் பாம்பணி,  புலியூர், புள்ளிருக்கு வேளூர் (வைதீசுவரன் கோயில்- சடாயு சம்பாதி எ‌ன்ற இரு கழுகுகள் வழிபட்ட தலம்),  மயிலாடு துறை, மயிலாபுரி, திருவலிதாயம்  (குருவி) என்பன போன்றும்   மற்றும்  பல்வேறு *சீவராசிகளின் பெயர்களால்* புகழ் பெற்றுள்ள திருத்தலங்கள் பல்வேறு  உள்ளன. 
இவையே அன்றி மதுரை, திருவெண்காடு, சிவபுரம் (பன்றி),  திருந்து தேவன் குடி (நண்டு)  போன்று *பறவை மிருகங்கள்  செய்த சிவ வழிபாட்டிற்குப் புகழ் பெற்ற திருத் தலங்களும்* பல உள்ளன.  

மிருகம் பறவை ஆகிய பல சீவராசிகள்   சுந்தரேசரின் பேரருளைப் பெற்றுத் திருவிளையாடல்களை அனுபவித்து முக்தி அடைந்த  திருத் தலம்  மதுரை.  

அவற்றில் முதலிடம் பெறுவது தேவ லோகத்து  வெள்ளை   யானையாகிய     ஐராவதம்.  

 தேவேந்திரனது    வாகனமான வெள்ளை யானைக்கு ஐராவதம் என்று பெயர்.

 அசுரர்களை  வென்ற வெற்றிக்  களிப்புடன் இந்திரன் பெரு மகிழ்ச்சியுடன் தன்  யானை  வாகனத்தில் ஏறி  தேவ லோகம் சென்ற போது முனிவர்களும் தேவர்களும் வரவேற்று  வாழ்த்திப் பல்வேறு பொருட்களை வழங்கி உபசரித்தனர்.  

துர்வாச முனிவரும்  இந்திரனை  வாழ்த்தச்  சென்றார்.            
                                                                                                         🌷🙏. *தடங் கொண்டதோர்  தாமரைப்  பொன்முடி தன் மேல்* 
        *குடம் கொண்டு அடியார் குளிர் நீர் சுமந்தாட்ட*  (சம்பந்தர்)             
                                                                                                     என அபிடேகம் செய்து தாமரை மலர்களால்  லிங்கப் பரம்பொருளைப் பூசித்த  துர்வாசர்   அர்ச்சனை ஆராதனை செய்யும் போது பரமன் திருமுடியிலிருந்து கரத்தில் விழுந்த பிரசாதமான தாமரையை எடுத்துக் கொண்டு  இந்திரனை வரவேற்கச் சென்றார்.  

தாமரைப் பூவை  இந்திரனுக்கு அளித்து  வாழ்த்தினார்.         
                                                                               🌷.    *தவனச்  சடை முடித்  தாமரையானே*      (திருமந்திரம்)         
                                                                         🌷 *தாமரைச் சைவனுக்கு*   (திருவாசகம்)         
                                                                                                             என ஈசன் திருமுடியில் இருந்த தாமரையின் அருமை பெருமை புனிதம் தெரியாமல், 
        கண்களில் ஒற்றிக் கொண்டு  உச்சியில் வைத்துப் போற்ற வேண்டிய  அர்ச்சனைப்  பூவை இந்திரன் வெற்றி  மமதையில் தன்  வாகனமான யானையின் மீது வைத்தான்.

சிவப்பிரியா

படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...