Showing posts with label #patiyammai #ammavasai #hindu #india tamilnadu. Show all posts
Showing posts with label #patiyammai #ammavasai #hindu #india tamilnadu. Show all posts

Sunday, February 4, 2024

அமாவாசைக்கு மறுநாள் பாட்டியமை அன்று எந்த நல்ல‍ காரியங்களையும் செய்ய‍க்கூடாது ஏன்?

பாட்டியமை ஏன் தவிர்க்க வேண்டும்:
பாட்டியம் என்பது என்ன?
அமாவாசைக்கு மறுநாள் பாட்டியமை அன்று எந்த நல்ல‍ காரியங்களையும் செய்ய‍க்கூடாது ஏன்?

🙏🏾#பாட்டியம் என்பது என்ன?
பிரதமை திதியை 
பாட்டியம் என்று சொல்வார்கள்.

🌚🔥#அமாவாசையாக இருந்தாலும், பெளர்ணமியாக இருந்தாலும் அடுத்த நாள் *பிரதமை திதி*. பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை ஒவ்வொரு கிராமத்திலும் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக அழைப்பார்கள்.

👍🏿#கதிர் வீச்சுக் குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார்கள். இருந்தாலும் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமானது.

அன்றைய தினம் எதையும் செய்யக் கூடாது என்பார்கள். போர் தொடுத்தல், ஆநிரை கவர்தல் போன்றவை செய்யலாம் என்று கூறுவார்கள்.

🤔#போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம். நோய்வாய்ப் பட்டிருப்பவர்கள் அமாவாசையைத் தாண்டுவார்களா என்று  வைத்துக் கூறுகின்றனர்.

🌚#அமாவாசையை நாம் அறிவியல் பூர்வமாகவே பார்க்கலாம். *ஆத்ம காரகன் சூரியன். *ஆத்மா என்பது உயிர்.* *உடலுக்குரியவன் சந்திரன்.* சூரியனும், சந்திரனும் இணைவது அமாவாசை அன்று. இரண்டுமே இயல்புநிலை மாறுபட்டவை. அவைகள் ஒன்றாக சேரும்போது சீக்கிரமாகவே ஆவி பிரியும். அதனால்தான் அமாவாசை, அதற்கு முதல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

👍🏿#அதற்கு காரணம், 
ஆத்மகாரகன் சூரியனுடன், மனோகாரகன் உடலுக்கான சந்திரன் நெருங்கும் போது உடலின் வலிமை, உணவு 
உட்கொள்ளும் திறன் குறையும். ஏதோ ஒரு அசெளகரியம் உண்டாகும். திடீர் மாரடைப்பு எல்லாம் உண்டாகும். அதனால்தான் அமாவாசையை தாண்டுமா என்று சொல்கிறார்கள்.

அமாவாசை பவுர்ணமி அடுத்த நாள் பிரதமை. அன்று விரதமிருப்பது விசேஷமானது .

இந்த விரதத்தில் நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். வலக்கையில் ஜபமாலை, கரண்டி, இடக்கையில் கமண்டலம், உத்தரிணி கொண்டு ஜபம் இருக்க வேண்டும்.

🔥🙏🏾#இன்றைய தினம் விரதமிருந்து பகவானுக்குப் பாயச நிவேதனம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் இரவு பொழுது மட்டும் உணவு அருந்தி விரதமிருக்கலாம் அல்லது நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். 🙏🏾

🙏🏾🔥#இந்த_விரதம் இருப்பதன் மூலம் செழிப்பான வாழ்வு, மரணத்துக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும். மாசி மாத பிரதமை உத்தமமானது. 🙏🏾

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...