Showing posts with label #vishnu #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #vishnu #hindu #india #tamilnadu. Show all posts

Saturday, March 30, 2024

பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் #ஸ்ரீநாராயண தீர்த்தர்

#ஊழ்வினை - அனுபவித்தே தீரவேண்டும்!

 
மண், மனை, வாழ்க்கை துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று, சாஸ்திரம் கூறுகிறது. இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.

பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் #ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற துறவி. ஒருநாள், இவரது சீடர்கள், ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர்.
'இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன...' என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார். அதற்கு சீடர்கள்,

 'குருவே... காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார். அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை...' என்றனர்.

உடனே நாராயண தீர்த்தர், 'இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம்...' என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.
இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார். வலியின் வேதனை தாளாமல், பகவானை நோக்கி, தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். 

அதன் விளைவாக, பெருமான், பூபதிராஜபுரம் எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, 'நாராயண தீர்த்தரே... நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய். அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய். அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய். அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய். நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய்.
'அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய்.
'நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன. அதே சமயம். உணவுப்பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது...' என்றார்.

இதன் பின், பகவான் கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, 'கிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் பாடல்களைப் பாடி, தன் துயரம் தீர்த்தார் நாராயண தீர்த்தர். தவறு செய்தவர்கள், அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இறைவன் அருளால் மட்டுமே, துயரம் தீரும் என்பதை விளக்கும் வரலாறு இது.

திருமாலை ஆண்டானும்,திருமலை ஆண்டானும்
இந்த மாசி மகத்தில் தான்,
உடையவரின் ஐந்து ஆசார்யர்களுள் ஒருவரான திருமலை ஆண்டான் என்னும் ஞானபூரணர் அவதரித்தார்.
திருமாலிருஞ்சோலையில் அவதரித்த இவரின் முன்னோர்களில் ஒருவரான
கண்ணுக்கினியான் என்பவர் காலத்தில்,மலையாள நாட்டில் இருந்த மாந்திரீகர்கள் சிலர் தங்கள் கண்களில் மாந்திரீக மையிட்டு
வந்து,அழகரின் சக்தியை அபகரிக்க திட்டமிட்டனர்.இதை அறிந்த கண்ணுக்கினியான் அவர்கள் பிரசாத த்தில் நிறைய மிளகுதூள்
தூவிவிட்டார்.அவர்கள்சாப்பிடும் போது கண்ணில் நீர் வழிந்து மை கரைந்து விட்டது.எனவே அவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இவ்வாறாக அவர் திருமாலைக் காப்பாற்றியதால் திருமாலை ஆண்டான் என்ற பெயர் ஏற்பட்டது.
அவர் சந்த தியினர் அனைவரும் இந்தப் பட்டப் பெயரை வைத்துக் கொண்டனர்.இன்றும் திருமாலை ஆண்டான் வம்சத்தவர் தான் அழகர் கோயில் புரோகிதர்களாக உள்ளனர்.
சித்திரைத் திருவிழாவில் அழகர் மதுரைக்குச் செல்லும் போது,அழகர் பல்லக்குக்கு முன்னால்.ஆண்டான் வம்சத்தினர் இன்னொரு பல்லக்கில்
செல்வார்கள்.அங்கு "ஆண்டான் பல்லக்கு முன்னே,அழகர் பல்லக்கு பின்னே" என்று ஒரு சொல்வடையும் உண்டு.
திருமலைத் தெய்வமான திருவேங்கடவரின் அடையாளங்களை மாற்றி,தவறான அர்த்தம் கூறி அவர் பெருமாளே அல்ல என்று பலர் வாதிட்டனர்.அந்த நேரத்தில் தேசிகேந்திரன் ராமானுஜர் தலையிட்டு,திருவேங்கடவர்,பெருமாளின் இலட்சினைகளான சங்கு,சக்கரங்களை ஏந்தச் செய்தார்(ஒரு நாள் இரவு அவர் பெருமாள் அல்ல,வேறு கடவுள் என்று சொன்னவர்களும்,ராமானுஜரும்
வேங்கடவரின் கருவறையில் வேறு,வேறு கடவுளரின் இலட்சினைகளையும்,சங்கு,சக்கரத்தையும் வைத்துப் பூட்டிவிட்டு வந்துவிட்டனர்.மறு நாள் காலையில் கதவைத் திறந்து பார்க்கும் போது,சீனிவாசப் பெருமாள் சங்கு,சக்கரங்களை ஏந்திக்கொண்டு பெருமாளாகச் சேவை சாதித்தார்.
இதனால் உடையவரை அப்பனுக்கு சங்காழி அளித்த ஆசார்யர் என்று கொண்டாடினர்.
எனவே திருமலைப் பெருமாளை நிலைநிறுத்திய உடையவரை
'திருமலை ஆண்டான்'என்றும் போற்றலாமே!! மேலும் கண்ணுக்கினியான் திருமாலை ஆண்டானின் முன்னோர் என்றால்,மனத்துக்கு இனியான்(ஶ்ரீராம பிரான்) இலட்சுமண முனியின் முன்னோர் என்றும் கொள்ளலாமேதிருமாலை ஆண்டானும்,திருமலை ஆண்டானும்
இந்த மாசி மகத்தில் தான்,
உடையவரின் ஐந்து ஆசார்யர்களுள் ஒருவரான திருமலை ஆண்டான் என்னும் ஞானபூரணர் அவதரித்தார்.
திருமாலிருஞ்சோலையில் அவதரித்த இவரின் முன்னோர்களில் ஒருவரான
கண்ணுக்கினியான் என்பவர் காலத்தில்,மலையாள நாட்டில் இருந்த மாந்திரீகர்கள் சிலர் தங்கள் கண்களில் மாந்திரீக மையிட்டு
வந்து,அழகரின் சக்தியை அபகரிக்க திட்டமிட்டனர்.இதை அறிந்த கண்ணுக்கினியான் அவர்கள் பிரசாத த்தில் நிறைய மிளகுதூள்
தூவிவிட்டார்.அவர்கள்சாப்பிடும் போது கண்ணில் நீர் வழிந்து மை கரைந்து விட்டது.எனவே அவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இவ்வாறாக அவர் திருமாலைக் காப்பாற்றியதால் திருமாலை ஆண்டான் என்ற பெயர் ஏற்பட்டது.
அவர் சந்த தியினர் அனைவரும் இந்தப் பட்டப் பெயரை வைத்துக் கொண்டனர்.இன்றும் திருமாலை ஆண்டான் வம்சத்தவர் தான் அழகர் கோயில் புரோகிதர்களாக உள்ளனர்.
சித்திரைத் திருவிழாவில் அழகர் மதுரைக்குச் செல்லும் போது,அழகர் பல்லக்குக்கு முன்னால்.ஆண்டான் வம்சத்தினர் இன்னொரு பல்லக்கில்
செல்வார்கள்.அங்கு "ஆண்டான் பல்லக்கு முன்னே,அழகர் பல்லக்கு பின்னே" என்று ஒரு சொல்வடையும் உண்டு.
திருமலைத் தெய்வமான திருவேங்கடவரின் அடையாளங்களை மாற்றி,தவறான அர்த்தம் கூறி அவர் பெருமாளே அல்ல என்று பலர் வாதிட்டனர்.அந்த நேரத்தில் தேசிகேந்திரன் ராமானுஜர் தலையிட்டு,திருவேங்கடவர்,பெருமாளின் இலட்சினைகளான சங்கு,சக்கரங்களை ஏந்தச் செய்தார்(ஒரு நாள் இரவு அவர் பெருமாள் அல்ல,வேறு கடவுள் என்று சொன்னவர்களும்,ராமானுஜரும்
வேங்கடவரின் கருவறையில் வேறு,வேறு கடவுளரின் இலட்சினைகளையும்,சங்கு,சக்கரத்தையும் வைத்துப் பூட்டிவிட்டு வந்துவிட்டனர்.மறு நாள் காலையில் கதவைத் திறந்து பார்க்கும் போது,சீனிவாசப் பெருமாள் சங்கு,சக்கரங்களை ஏந்திக்கொண்டு பெருமாளாகச் சேவை சாதித்தார்.
இதனால் உடையவரை அப்பனுக்கு சங்காழி அளித்த ஆசார்யர் என்று கொண்டாடினர்.
எனவே திருமலைப் பெருமாளை நிலைநிறுத்திய உடையவரை
'திருமலை ஆண்டான்'என்றும் போற்றலாமே!! மேலும் கண்ணுக்கினியான் திருமாலை ஆண்டானின் முன்னோர் என்றால்,மனத்துக்கு இனியான்(ஶ்ரீராம பிரான்) இலட்சுமண முனியின் முன்னோர் என்றும் கொள்ளலாமே

Wednesday, October 4, 2023

நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் நரசிம்மர்...!

நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் நரசிம்மர்...!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் இருக்கிறது யாதகிரிகுட்டா என்ற இடம்.

இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயம் இருக்கிறது.இந்த ஆலயம் மற்ற நரசிம்மர் ஆலயங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது.

அதாவது பொதுவாக நரசிம்மர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நரசிம்மர் யோக நரசிம்மர் ஆகவோ,உக்கிர நரசிம்மர் ஆகவோ,லட்சுமி நரசிம்மராகவோ எப்படி இருந்தாலும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார்.

யோக நரசிம்மராக இருக்கும் போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையிலும் மற்ற நரசிம்மராக இருக்கையில் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்ட நிலையிலும் காணப்படுவார்.

லட்சுமி நரசிம்மராக இருக்கும் பட்சத்தில் தன்னுடைய மடியில் லட்சுமி தேவியை அமர வைத்து காட்சி தருவார்.

ஆனால் யாதகிரிகுட்டாவில் அருள் பாலிக்கும் லட்சுமி நரசிம்ம பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

லட்சுமி தேவியானவர் நரசிம்மரின் இடது பக்கத்தில் அருகிலேயே நின்ற கோலத்தில் இருக்கிறார்.

ஸ்ரீ நரசிம்ம சுவாமியே சரணம்🙏🏻

Monday, August 21, 2023

மங்காத செல்வம் தரும் சக்கரத்தாழ்வார்

மங்காத செல்வம் தரும் சக்கரத்தாழ்வார்... !
சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களை நடத்தித் தந்திடுவார். மங்காத செல்வங்களை வாரி வழங்கிடுவார்!

சக்கரத்தாழ்வாருக்கு உரிய நட்சத்திரம் சித்திரை. ஆனி மாத சித்திரை நட்சத்திரம் சக்கரத்தாழ்வார் ஜென்ம ஜயந்தித் திருநாள். மாதந்தோறும் வருகிற சித்திரை நட்சத்திர நன்னாளில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

எல்லா பெருமாள் கோயில்களிலும் சக்கரத்தாழ்வாரு க்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும்.

ஸ்ரீரங்கம் கோயிலின் சக்கரத்தாழ்வார் மிகுந்த சாந்நித்தியம் மிக்கவர். அரங்கனைத் தரிசித்து வழிபடுவதற்கு வாரந்தோறும் பக்தர்கள் தொடர்ந்து வருவது போல், வாரந்தோறும் சக்கரத்தாழ்வாரை தரிசித்துப் பிரார்த்திக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சுதர்சனச் சக்கரத்தின் வடிவம் எத்தகையது தெரியுமா? 

சின்னஞ்சிறு துளசி தளத்தில், ஒரு கைப்பிடி அளவு துளசியில் அடங்கக்கூடியது. அதேசமயம், இந்தப் பிரபஞ்சம் அளவுக்கு பரந்து விரிந்துமாகவும் இருக்கிறது.

சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. 

நம் வாழ்வில் நமக்கு வருகிற எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல் லாம் தகர்த்தருள்கிறார் சக்கரத்தாழ்வார்.
சக்கரத்தாழ்வாரை மனதார வேண்டுங்கள். வீட்டில் விளக்கேற்றி, ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். தினமும்

ஓம் சுதர்ஸனாய வித்மஹே.
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரஸோதயாத்:

என்று முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 அல்லது 108 முறை என முடிந்த அளவுக்கு சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். எதிர்ப்புகளையும் தடைகளையும் தகர்த்து அருளுவார்.

Friday, August 11, 2023

கருவறையில் நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடுகிறது.

_மூச்சு விடும் மூலவர்_


கருவறையில் நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடுகிறது.

கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு அகத்தியர் வந்த போது வானில் அசரீரி ஒலித்தது.“அகத்தியரே!நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் நரசநரசிம்மா சிலை ஒன்று உள்ளது.அதைப் பிரதிஷ்டை செய்த பிறகு உமது தீர்த்த யாத்திரையைத் தொடருங்கள்” என்றது.

அதன்படி அகத்தியரும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

நாளடைவில் இங்கு வழிபாடு இல்லாமல் போகவே சிலை மண்ணுக்குள் புதைந்தது.

நான்காம் நுாற்றாண்டில் ரெட்டி ராசுலு என்பவரால் நரசிம்மரின் சிலை மீண்டும் வெளிப்பட்டது.

1377ல் கோவில் கட்டப்பட்டு வழிபாடு தொடங்கியது.

சுவாமி சிலையில் இருந்து மூச்சு வெளிப்படுவதை பூஜை செய்த அர்ச்சகர் உணர்ந்தார். அதை சோதிக்க மூக்கின் அருகில் விளக்கை பிடித்த போது சுடர் அசைந்தது.அதே நேரம் சுவாமியின் பாதத்தில் ஏற்றிய தீபம் அசையாமல் இருந்தது.

இன்றும் விளக்குகள் இப்படி எரியும் அதிசயத்தை
நாம் காணலாம்.

ஆந்திராவிலுள்ள நல்கொண்டா, கிருஷ்ணா, குண்டூர் மாவட்டத்தினர் இங்கு வழிபட்ட பிறகே மற்ற நரசிம்மர் தலங்களுக்குச் செல்கின்றனர்.

ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சுதை சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன.

மகாலட்சுமி தாயார்
தனி சன்னதியில் இருக்கிறார்.

கருடன், அனுமன் வாகனங்கள் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளன.

ஆன்மிக உபன்யாசகரான முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் 1992ல் யாகம் நடத்தினார்.அதன் பின் இக்கோவில் பிரபலமானது.

பஞ்ச நரசிம்ம தலங்களில் இதுவே முதல் கோவில். அளவில் சிறியது என்றாலும் உயிரோட்டமுள்ள நரசிம்ம தரிசனத்தால் பக்தர்கள் பரவசத்தில் மூழ்குகின்றனர்.

வாடபல்லி என்னும் இக்கிராமத்தில் கிருஷ்ணா,முசி நதிகள் இணைந்து எல் வடிவில் உள்ளன.

*அமைவிடம்*
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் வாடபல்லியில் உள்ளது.

ஜெய் ஸ்ரீ நரசிம்மா

Tuesday, July 4, 2023

படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மன்.

*மச்சாவதாரம்...*
இந்த புனிதமான மச்சாவதார கதையை கேட்பவர்கள், படிப்பவர்-களின் பாவங்கள் எல்லாம் நீங்கி அவர்கள் அபிலாஷைகள் நிறை-வேறும் என்பது உறுதி..

படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மன். பிரம்மன் உறங்கும் காலமே உலகத்தின் பிரளய காலமாகும்.

மீண்டும் அவர் விழிக்கும்போது புது உலகம் சிருஷ்டிக்கப்படும். அவர் ஒரு சமயம் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வாயிலிருந்து வேதங்கள் கீழே விழுந்து விட்டன.

அச் சமயத்தில், குதிரை முகம் கொண்ட ஹயக்கிரீவன் என்னும் அசுரன் வேதங்களை அபகரித்துக்கொண்டான். வேதங்களின் உதவியால் தான் பிரம்மன் படைக்கும் தொழிலை் செய்து வருகிறார். அதைக் கெடுக்கவே ஹயக்கிரீவன் அவ்வாறு செய்தான்.

அப்போது மகாவிஷ்ணுவை நோக்கி, சத்தியவிரதன் என்ற ராஜரிஷி நீரையே உணவாகக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார்.

அவர் பூஜைக்காக நதி நீரைக் கையில் அள்ளும் போது, கையில் ஒரு சிறு மீன் காணப்பட்டது.

அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை அறியாத முனிவர், அந்த மீனை மீண்டும் நீரில் விட முயலும் போது, அந்த மீன், " மகரிஷியே, என்னை நீரில் விடாதீர்கள். பெரிய மீன்கள் என்னை இரையாக்கி விடும். என்னைக் காப்பாற்றுங்கள்" என்று வேண்டியது.

அதன்படி முனிவர் அந்த மீனைத் தன கமண்டலத்தில் போட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் அக்கமண்டலம் அளவுக்கு மீன் வளர்ந்து விட்டது. பிறகு, அதை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டார். அதனுள்ளும் பெரிதாக வளர்ந்து விட்டது. பிறகு குளத்திலும், பெரிய ஏரியிலும் விட்டார்.

அது மிகப் பெரிதாக வளர்ந்து விடவே, இறுதியில், சமுத்திரத்தில் கொண்டுபோய் விட முயலும்போது, " மகரிஷியே, இந்தச் சமுத்திரத்தில் பெரிய திமிங்கலம் இருக்குமே. அது என்னைத் தின்று விடுமே " என்று கேட்டது.

அந்த மீன் மகாவிஷ்ணுதான் என்பதை உணர்ந்துகொண்ட முனிவர்," தாங்கள் இந்த உருவம் பெற்றமைக்கும், என்னிடம் வந்ததற்கும் காரணம் என்ன ? " என்று கேட்டார்.

"மகரிஷியே, பிரம்மன் உறக்கத்தில் இருக்கிறார். ஏழாவது நாளில் சகல லோகங்களும் பிரளயம் ஏற்பட்டு மூழ்கப் போகின்றன. அச் சமயம் பெரிய ஓடம் ஒன்று இங்கே வரும். அதில், சப்த ரிஷிகளோடு  (சப்த ரிஷிகள் = முக்கியமான ஏழு முனிவர்கள்) , நீங்களும், மூலிகை வித்துக்களையும் ஓடத்தில் ஏற்றிக்கொண்டு, பிரளய வெள்ளத்தில் சஞ்சரிப்பீர்கள். அப்போது, பிரம்மனின் உறக்கம் முடியும்வரை என் வாயுவால் ஓடம் கவிழ்ந்து விடாதவாறு உங்களைக் காப்பாற்றி வருவேன்.

அப்போது நீங்கள் அதன் காரணத்தையும், என் மகிமையையும் அறிவீர்கள்" என்று கூறிவிட்டு மறைந்தார்.

அதன்பின்னர், மச்ச உருவில் தோன்றிய மகாவிஷ்ணுவை நோக்கி, சத்திய விரதன் தியானம் செய்து கொண்டிருந்தார். ஏழாவது நாளில், பெரிய பிரளயம் (பிரளயம் = மிகப் பெரிய வெள்ளம்) ஏற்பட்டது. அப்போது, பெரியதோர் ஓடம் அங்கே வந்தது.

மகாவிஷ்ணு கூறியவாறே, சப்த ரிஷிகளோடு மூலிகை வித்துக்களையும் அந்த ஓடத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் போது, வாயுவால் அலைக்கழிக்கப்பட்டது.

அப்போது மச்சமூர்த்தி தோன்றிப் படகைத் தன் கொம்புடன் சேர்த்து ஒரு பாம்பால் இறுகக் கட்டி ஓடம் கவிழ்ந்து விடாதவாறு இழுத்துச் சென்றார். பிறகு, மகாவிஷ்ணு மச்ச புராணத்தை உபதேசித்தார். பிரம்மனும் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார்.

அடுத்து சிருஷ்டித் தொழில் செய்ய வேண்டும். அப்போதுதான் வேதங்கள் காணாமல் போனது பிரம்மனுக்குத் தெரிந்தது. அதன்பின், ஹயக்கிரீவன் வேதங்களைக் கொண்டுபோய்த் தன் வாயில் மறைத்து வைத்திருப்பதை அறிந்த மச்சமூர்த்தி, ஹயக்கிரீவனோடு போரிட்டு அவனைக் கொன்று, வேதங்களை மீட்டு வந்து பிரம்மனிடம் கொடுத்தார்.

பிரம்மனும், தடங்கலின்றித் தன் சிருஷ்டித் தொழிலைத் தொடங்கினார்...

தசாவதாரம் - 2. கூர்ம அவதாரம்.....

Friday, June 9, 2023

திருக்கோவலூர் திவ்யதேசத்தில் எம்பெருமான் சங்கு சக்கரத்தை இடம் மாற்றி வைத்திருப்பது ஏன்... ?

திருக்கோவலூர் திவ்யதேசத்தில் எம்பெருமான் சங்கு சக்கரத்தை இடம் மாற்றி வைத்திருப்பது ஏன்... ?
வலது கையில் சங்கம் ஏந்தி இருப்பதன் காரணம் அவன் நம் அனைவருக்கும் ஞானத்தை வழங்குவதாக ஐதீகம்,
வலது கையில் சங்கம் வந்ததால் சக்கரம் இடம் மாறியது,

இன்னொரு கரமோ மூன்றாவது அடி எங்கே என மகாபலியாய் கேட்பதாக அமைகிறது, இதெல்லாம் ஐதீகம் சம்பந்தப்பட்டது.

வாமனனாய் வருகிறார்!
மகாபலியைப் பார்க்கிறார்!
சிறியன்தானே என்று
மூன்றடி மண் தருவதாய்
வரங்களும் கொடுக்கிறான்!

அசுரகுரு தடுத்தும்
அசுரன் அசரவில்லை!
அசுரனைக் கண்டு
பெருமான் அதிசயிக்கிறார்!

அசுரர்கள்
வார்த்தை தவறி விடுவார்கள்,
சும்மா கேட்டுப் பார்க்கலாம்,
என்றுதான் பரமன் கேட்டான்!!
அசுரனின் சம்மதம்
அரங்கனை ஆச்சரியப்படவைத்தது!!

தன் மாயத்தை ஆரம்பித்தார்!
வாமனனாய் இருந்தவர்
திருவிக்ரமனாய் மாறினார்!
இப்போதும் அசுரன் அசரவில்லை!!

அவனது பரம்பரையில்
நாராயண வாஞ்சை
அதிகம் உண்டல்லவா?
பிரகலாதனின் பேரன் அல்லவா
மகாபலிச் சக்கரவர்த்தி!!

வானத்தையும் மண்ணையும்
தாரை வார்த்துக்
கொடுத்த பின்னரும்
தன் தலையைக் 
காட்டினான் அல்லவா அசுரன்!!

பெருமைப்பட்டுப் போனார்
பெருமான்!
ஆனந்தக் கூச்சலிட்டு
சில நாழிகைகள்
ஆடவும் செய்கிறார்!
ஆனந்தத்தின் உச்சியில்
சங்கு சக்கரங்களை
இடம் மாற்றி
அசத்துகிறார் பெருமான்!
ஞானோபதேசம் பெறுகிறான்
அசுரன் மகாபலி...!!!

Friday, May 26, 2023

திருப்பதி கோவில் பற்றிய அரிய தகவல்கள்...

திருப்பதி கோவில் பற்றிய அரிய தகவல்கள்...

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும்...

 ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது...

 அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன...

திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும்...

 பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்...

 ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே...

 ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர்...

 அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்...

இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது...

 இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன...

 இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது...

ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை...

 இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்...

பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது...

 ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும்...

 இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும்...

 பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்...

 உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர்...

 இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள்...

 பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்...

பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்...

ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா ? ...

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன...

 ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும்...

 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்...

தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும்...

 அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்...

பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன...

 ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன...

சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன...

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை...

ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது...

 இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும்...

 சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது...

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர்...

 ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன...

மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார்...

 இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது...

 இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது...

 கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்...

அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப் பட்டதாகும்...

 பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்...

வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது...

மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும்...

 அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார்...

 தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை...

அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது...

திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்...

சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும்...

 ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்...

ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர்...

 இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது...

திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது...

 செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள்...

 தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்று கின்றனர்...

ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது...

 ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது...

1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன...

இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை...

Friday, May 19, 2023

ஸ்ரீரங்கம் கோயில் ரகசியங்கள்

#ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் கோயில் ரகசியங்கள் ... 
பூலோக வைகுண்டம் என்ற பெருமை பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது. 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம். மற்ற திவ்யதேசங்களில் 9ஆழ்வார்களுக்கும் குறைவாகவே பாடியுள்ளனர். 108 வைணவ திருத்தலங்களில் இரண்டு, இந்நிலவுலகில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல். ஸ்ரீரங்கம் பெருமாள், பிரம்மலோகத்தில் பிரம்மதேவனால் தினமும் பூஜிக்கப்பட்டு வந்த திருவாராதன விக்ரமான பெருமாள். பூலோகத்தில் சூரிய வம்சத்தில் வந்த இட்சுவாகு என்ற மன்னன் பிரம்மன் குறித்து கடும்தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மன், இட்சுவாகு வேண்டுகோள்படி தான் தினமும் பூஜித்தவந்த திருவாராதன விக்ரமான பெருமாளை வழங்கினார். 

இந்த பெருமாள் இட்சுவாகு மன்னன் முதல் ராமபிரான் வரை சூரிய குலமன்னர்கள் வழிபட்டு வந்த குலதெய்வம். திரேதா யுகத்தில் ராமாவதாரம் எடுத்த திருமால், ராவணனை அழித்தபின் அயோத்திக்கு பட்டம் சூட்ட தன்னோடு அழைத்து வந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது முன்னோர் பூஜித்த பெருமாள் விக்ரகத்தை விபீஷணனுக்கு அன்பாக கொடுக்கிறார். அதை தலையில் சுமந்தவாறு இலங்கை புறப்பட்ட விபீஷணன் களைப்பால் ஸ்ரீரங்கத்தில் தரையில் வைக்கிறார். பின்னர் விக்ரகத்தை எவ்வளவு முயன்றும் அங்கிருந்து எடுக்கமுடியவில்லை. அப்பகுதியை ஆண்ட சோழமன்னன் தர்மவர்மன் பெருமாளையும் தொழுதுவிட்டு விபீஷணருக்கு ஆறுதல் கூறி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். 

பின்னர் தர்மவர்மன் பெருமாள் விக்ரகத்தை சுற்றி சிறிய கோயில் எழுப்பி வழிபட்டார். பின்னர், காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோயில் மணலால் மூடி இருந்த இடம் தெரியாமல் போனது. தர்மவர்மனுக்கு பின் அவரது வழியில் வந்த கிள்ளிவளவன் காடாக இருந்த ஸ்ரீரங்கத்தில் வேட்டையாட வந்தபோது ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருந்த போது மரத்தில் இருந்த கிளி ஒன்று கோயில் இருந்த இடம் இது தான் என்று தெரிவிக்கிறது. அந்த கிளியின் சேவையை நினைவு கூறும் வகையில் கோயிலில் கிளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

கிள்ளிவளவன் பெருமாளை தொழுது மதில்சுவரும், கோபுரமும் கட்டினான். கிள்ளிவளவனுக்கு பின் வந்த சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்களின் தொடர்பணியால் தற்போது இருக்கும் நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் உயர்ந்தோங்கி நிற்கிறது. வைணவத்தின் மையத் தலைமைச்செயலகமாக ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. ஸ்ரீராமானுஜர் பரப்பிய விசிஷ்டாத்வைதம் நெறிக்கு ஸ்ரீரங்கமே நிலைக்களம். சிலப்பதிகாரம், நாலாயிர திவ்யபிரபந்தத்தில் இக்கோயில் குறித்த வர்ணனைகள் உள்ளன. கோயில் தோன்றிய விதத்துக்கு ஆதாரத்துடன் கூடிய கல்வெட்டு எதுவும் இல்லை. இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளது. கோயிலை சுற்றி 21 கோபுரங்கள் உள்ளது.

ஸ்ரீரங்கத்தில் 1961-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்து உள்ளனர். தற்போது மக்கள் தொகை 3 லட்சத்தை எட்டி உள்ளது. கோயிலின் நாழிக்கேட்டான் வாயிலில் வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர். உள்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி மகாவிஷ்ணுவுக்கு உரியவனாய் முறையே சங்கு, தாமரை வடிவங்களில் சங்கநிதி, பதுமநிதி உருவங்கள் இருபக்கங்களிலும் உள்ளன. மூலஸ்தானம் மேற்கே உள்ள மேடையில் விஜயரங்கசொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை அளவில் செய்து, வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளது.

மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மாமண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய சமைப்பதற்கு மடப்பள்ளியில் மண்பாத்திரங்களே தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரை கொண்டு ஆண்டுக்கு இருமுறை கோயில் ஊழியர்களால் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட தைலம் பூசப்பட்டு(தைலக்காப்பு) உலர்ந்தபின் நீக்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது.
இத்தலத்தில் ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்கநாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.

கோயில் கருவறை மேலே தங்கத்தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன. ஆண்டுதோறும் துலா மாதத்தில் (ஐப்பசி) பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைக்கு தங்கத்தில் செய்யப்பட்ட பொருட்களையே பயன்படுத்தப்படுகிறது. துலாமாதம் 30 நாட்களும் மூலவருக்கும், உற்சவருக்கும் சாளக்கிராம மாலை அணிவிக்கப்படும். கோயில் தல விருட்சம் புன்னை மரம், மூலவர் ஸ்ரீரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், தாயார் ஸ்ரீரங்கநாச்சியார்.

கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய இராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது திருமேனி 5வது திருச்சுற்று எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.

ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமை பெற்றது ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். உயரம் 236 அடி. 13 நிலைகளுடன், 13 கலசங்களுடன் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது. 1987ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெற்கு ராய கோபுரமே பிரதான நுழைவாயில். கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாதிருந்த தெற்குராயகோபுரம் முன்பு மொட்டை கோபுரமாக இருந்தது. ராயர் கோபுரத்தில் திருஷ்டிபரிகாரத்திற்காக முனிக்கு அப்பனான ஸ்ரீனிவாசனை எழுந்தருள செய்தனர். நித்ய வழிபாடுகள் இன்று நடந்து வருகிறது. இந்த ராஜகோபுர வாசலை முனியப்பன் கோட்டை வாசல் எனவும் அழைக்கின்றனர். 

ஆண்டுக்கு ஒருமுறை தான் பெருமாளும், தாயாரும் பங்குனி உத்திரதினத்தன்று தாயார் சன்னதியில் உள்ள சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 2ம் பிரகாரத்தின் நடுவில் பரமபதவாசல் கோபுரம் உள்ளது. இக்கோபுர வாயில்கள் ஆண்டு முழுவதும் மூடப்பெற்றே இருக்கின்றன. வைகுந்த ஏகாதசி விழாவின்போது மட்டும் இதன் கதவு திறக்கப்படுகின்றது. ஸ்ரீரங்கத்தில் எல்லாமே பெரியவை தான். ராமரால் தொழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் பெரிய பெருமாள். கோயில் பெரிதென்பதால் பெரிய கோயில் ஆயிற்று. 7மதில்களும், எண்ணற்ற மண்டபங்களும் பெரிது. 

கோபுரம் ஆசியாவிலேயே பெரிது. இங்கிருந்த ஜீயரும் பெரிய ஜீயர். திருமதில்கள் பெரிது. தாயாருக்கு பெரிய பிராட்டி என்பது பெயர். இங்கு செய்யப்படும் தளிகைக்கு பெரிய அவசரம், வாத்தியத்திற்கு பெரிய மேளம், பட்சணங்களுக்கு பெரிய திருப்பணியாரங்கள் என்று பெயர். ஆண்டாளை வளர்த்தெடுத்து அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்து மாமனார் ஸ்தானம் வகிக்கும் ஆழ்வாரோ பெரிய ஆழ்வார். ஆழ்வார்களின் மங்களாசாசனங்களோ பெரிய மங்களாசாசனங்கள். 108 திவ்யதேசங்களில் 11 ஆழ்வார்களால் 247 பாக்களால் பெரிய மங்களாசாசனம் பெற்றவர் இப்பெருமாள்.

ஸ்ரீரங்கம் கோயில் நகைகளின் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். திருமங்கையாழ்வாரால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரம் தூண்கள் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும். மீதமுள்ள 49 தூண்கள் வைகுண்ட ஏகாதசி விழா காலங்களில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களாக கணக்கிடப்பட்டு விழா நடைபெற்று வருகிறது.


Thursday, May 18, 2023

ஸ்ரீ சக்கர மகிமை...!எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு.

ஸ்ரீ சக்கர மகிமை...!
எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம்.
மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
"ஸ்ரீசக்கரத்தின் மகிமை"

மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள்.

மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.
"மூன்றின் பலம்"
முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர்.

அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.

1) முதல் ஆவரணம்
இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.
2) இரண்டாவது ஆவரணம்
பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும்.

3) மூன்றாவது ஆவரணம்
பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்குஅளிப்பவர்கள்.
4) நான்காவது ஆவரணம்
இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.

5) ஐந்தாவது ஆவரணம்
பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.
6) ஆறாவது ஆவரணம்
அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.

7) ஏழாவது ஆவரணம்
புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.
8) எட்டாவது ஆவரணம்
மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.

9) ஒன்பதாவது ஆவரணம்
பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்.நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்படுத்தினர்.

‘ஸ்ரீவித்யை என்னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்’ என்று சொல்கின்றன, ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள். குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.

ஸ்ரீசக்கரத்தின் மகிமை: மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு  முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும்  லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.
மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும்
விறல் கெழுமு வேழமுகன் விரைமலர்த் தாளினைத் தொழுவாம்.

மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். சக்தி வாய்ந்த இதன் வழிபாட்டுப் பாடலைத் தமிழில் ‘அம்பிகையின் அழகு அலை’ என்று முதன்முதலாக எழுதித் தொகுத்தவர் வீரை கவிராஜ பண்டிதர் ஆவார். ஸ்ரீசக்கர வரைமுறை விதியை லக்ஷ்மீதரரும் கைவல்யாச்ரமரும் சிறு மாறுதல்களுடன் வரைந்து காட்டினர்.

சௌபாக்கியவர்த்தினி என்ற விதி நூலின்படி 11 பாடல்களால் இதை எப்படி சக்தி பொருந்தியதாக வரைவது என்று அறியலாம். அதன்படி, பிந்து, முக்கோணம், எண்கோணம், இருபத்து கோணம், பதினான்கு கோணம், எட்டு தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று வரைகோட்டுப் பூபுரம் என்று ஸ்ரீசக்கர அமைப்பு, ஓலைச்சுவடியின் வாயிலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் பெரியதான இந்தப் பிரபஞ்சத்தில் சக்திதேவி ஸ்ரீசக்கரத்தைத் தன் சொந்த வீடாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வருகிறார். லலிதா சகஸ்ரநாமத்தின் 996-வது நாமாவளியான,’ஸ்ரீசக்ரராஜ நிலயாயை’என்ற நாமாவளியினால் அறியலாம். .
அந்நிய தேசத்தவர் வியந்த ஸ்ரீசக்கரம்: – சில ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோவில் உள்ள கணிதவியல் விஞ்ஞானி அலெக்ஸி குலச்சேவ் என்பவர்  ஸ்ரீசக்கரத்தை வைத்து சிறு ஆய்வு நடத்தினார். மிகச்சரியாக வரைந்த ஒரு சக்கரத்தையும், சரியாக வரையாத ஒன்றையும் வெவ்வேறு நண்பர்கள் வீட்டில் வைத்துச் சில நாட்கள் பொறுத்துப் பார்த்தபோது நல்ல ஸ்ரீசக்கரம் இருந்த வீட்டில் நலனும், அடுத்ததில் நோய் குணமாகாமையும் உள்ள சூழ்நிலையைக் கண்டார். இதுபற்றி ஆய்வுக் கட்டுரை எழுதிய குலச்சேவைப்  பாராட்டிய அவர் நண்பர் உண்மையாகவே ஸ்ரீசக்கரத்தில் சக்தி உள்ளது என்று பத்திரிகைச் செய்தி வெளியிட அனைவரும் இதன் வரைகலையைக் கண்டு அதிசயித்தனர்.

முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில்குறிப்பிட்டுள்ளார்

ஸ்ரீசக்கர வழிபாட்டு முறை: ஸ்ரீசக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீசக்கரம் இருப்பதைக் காணலாம்.

ஆனால், எல்லோருமே செல்வச் செழிப்புடன் நலமோடு இருக்கிறார்களா?  இல்லையே! காரணம் ஸ்ரீசக்கர வழிபாட்டுக்கான விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்காததுதான்.
ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும். பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம்.

பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.

வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காகஉபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும்.

வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும்.
பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.ஸ்ரீ சக்கர மகிமை...!

எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம்.
மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை. காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல், திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
"ஸ்ரீசக்கரத்தின் மகிமை"

மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம். உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள். மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள்.

மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடுவர். இம்மூன்றும் முக்கோணத்தின் மூன்று மூலைகள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீசக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.
"மூன்றின் பலம்"
முக்காலங்கள், மும்மூர்த்திகள் அனைத்தும் அன்னையின் அமைப்புகளே. இதன்பொருட்டே திரிபுரசுந்தரியை மகாமேரு என்னும் மந்திரம், எந்திரம், தந்திரத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் வழிபடு கின்றனர்.

அனைத்து விதமான சக்கரங் களுக்கும் தலையாயது இந்த ஸ்ரீசக்கரம். அதன்பொருட்டே ஸ்ரீசக்கரத்தினை `ஸ்ரீசக்கர ராஜ’ என்றே ஆன்மிகத்தில் சிறந்த மகான்கள் குறிப்பிடுவர். ஒன்பது நிலைகளைக் கொண்ட ஸ்ரீசக்ரத்தினைப் பூஜிக்கும் முறை நவா ஆவரணம் என அழைக்கப்படும்.

1) முதல் ஆவரணம்
இந்த ஆவரணத்தின் கிரகமாக வியாழ பகவான் விளங்குகிறார். முதல் ஆவரணத்தை வணங்குபவர்களுக்கு எல்லா செல்வங்களும் நிலைக்கும். தடைகள் நீங்கும். புத்தி பலம் கூடும்.
2) இரண்டாவது ஆவரணம்
பதினாறு யோகினிகள் வாசம் செய்யும் தாமரைப் பூ ரூபம் இது. மனதின் தீய எண்ணங்கள் நீங்கும். அகம் தூய்மையாகும்.

3) மூன்றாவது ஆவரணம்
பூஜிப்பவரின் மனதை ஒருமுகப்படுத்தும் தேவதைகள் எட்டு தாமரை இதழ்களில் வாசம் செய்வதாக ஐதீகம். இவர்கள் பக்தியின் மேன்மையை பக்தர்களுக்குஅளிப்பவர்கள்.
4) நான்காவது ஆவரணம்
இந்த ஆவரணத்தில் 14 யோகினிகள் வாசம் செய்கின்றனர். சந்திரன் வடிவில் அன்னை காட்சி தருவாள். புத்திர பாக்கியத்தை அளிக்கும் ஆவரணம் இது.

5) ஐந்தாவது ஆவரணம்
பத்து கோணங்களில் பத்து யோகினிகள் வாசம் செய்கின்றனர். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் தரும்.
6) ஆறாவது ஆவரணம்
அன்னை சூரியனின் உருவில் இருக்கும் ஆவரணம் இது. பொறாமை இருளை அகற்றி, அருளின் ஒளியை ஏற்ற உதவும்.

7) ஏழாவது ஆவரணம்
புதன் கிரகம் அமையப்பெற்ற ஆவரணம். இந்த ஆவரணத்தை பூஜிப்பதின் மூலம் ஆத்ம ஞானம் பெருகும்.
8) எட்டாவது ஆவரணம்
மகா திரிபுரசுந்தரியாக அன்னை வீற்றிருக்கும் ஆவரணம் இது. அங்குசம், பாசம், கரும்பு வில் மற்றும் பாணம் ஆகிய அம்பாளின் நான்கு ஆயுதங்கள் இந்த ஆவரணத்தில் வழிபடப்படுகின்றன.

9) ஒன்பதாவது ஆவரணம்
பேரின்பத்தை நிலைபெறச் செய்யும் ஆவரணம் இது. அர்த்தநாரீஸ்வரர் வீற்றிருக்கும் இந்த ஆவரணத்தைப் பூஜிப்பதின் மூலம் சகல நன்மைகளும் ஏற்படும்.நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்படுத்தினர்.

‘ஸ்ரீவித்யை என்னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்’ என்று சொல்கின்றன, ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள். குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.

ஸ்ரீசக்கரத்தின் மகிமை: மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.
மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும்
விறல் கெழுமு வேழமுகன் விரைமலர்த் தாளினைத் தொழுவாம்.

மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். சக்தி வாய்ந்த இதன் வழிபாட்டுப் பாடலைத் தமிழில் ‘அம்பிகையின் அழகு அலை’ என்று முதன்முதலாக எழுதித் தொகுத்தவர் வீரை கவிராஜ பண்டிதர் ஆவார். ஸ்ரீசக்கர வரைமுறை விதியை லக்ஷ்மீதரரும் கைவல்யாச்ரமரும் சிறு மாறுதல்களுடன் வரைந்து காட்டினர்.

சௌபாக்கியவர்த்தினி என்ற விதி நூலின்படி 11 பாடல்களால் இதை எப்படி சக்தி பொருந்தியதாக வரைவது என்று அறியலாம். அதன்படி, பிந்து, முக்கோணம், எண்கோணம், இருபத்து கோணம், பதினான்கு கோணம், எட்டு தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று வரைகோட்டுப் பூபுரம் என்று ஸ்ரீசக்கர அமைப்பு, ஓலைச்சுவடியின் வாயிலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் பெரியதான இந்தப் பிரபஞ்சத்தில் சக்திதேவி ஸ்ரீசக்கரத்தைத் தன் சொந்த வீடாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வருகிறார். லலிதா சகஸ்ரநாமத்தின் 996-வது நாமாவளியான,’ஸ்ரீசக்ரராஜ நிலயாயை’என்ற நாமாவளியினால் அறியலாம். .
அந்நிய தேசத்தவர் வியந்த ஸ்ரீசக்கரம்: – சில ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோவில் உள்ள கணிதவியல் விஞ்ஞானி அலெக்ஸி குலச்சேவ் என்பவர் ஸ்ரீசக்கரத்தை வைத்து சிறு ஆய்வு நடத்தினார். மிகச்சரியாக வரைந்த ஒரு சக்கரத்தையும், சரியாக வரையாத ஒன்றையும் வெவ்வேறு நண்பர்கள் வீட்டில் வைத்துச் சில நாட்கள் பொறுத்துப் பார்த்தபோது நல்ல ஸ்ரீசக்கரம் இருந்த வீட்டில் நலனும், அடுத்ததில் நோய் குணமாகாமையும் உள்ள சூழ்நிலையைக் கண்டார். இதுபற்றி ஆய்வுக் கட்டுரை எழுதிய குலச்சேவைப் பாராட்டிய அவர் நண்பர் உண்மையாகவே ஸ்ரீசக்கரத்தில் சக்தி உள்ளது என்று பத்திரிகைச் செய்தி வெளியிட அனைவரும் இதன் வரைகலையைக் கண்டு அதிசயித்தனர்.

முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில்குறிப்பிட்டுள்ளார்

ஸ்ரீசக்கர வழிபாட்டு முறை: ஸ்ரீசக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீசக்கரம் இருப்பதைக் காணலாம்.

ஆனால், எல்லோருமே செல்வச் செழிப்புடன் நலமோடு இருக்கிறார்களா? இல்லையே! காரணம் ஸ்ரீசக்கர வழிபாட்டுக்கான விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்காததுதான்.
ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும். பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம்.

பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.

வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காகஉபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும்.

வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும்.
பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.

Tuesday, May 9, 2023

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் - பாலாற்றின் கரை - கோயம்புத்தூர்

அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் - பாலாற்றின் கரை - கோயம்புத்தூர்
மூலவர்:-  ஆஞ்சநேயர் 

தல சிறப்பு:
இத்தலத்தில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீரஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. 

கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள இரட்டைமுகத்துடன் கூடிய விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

பொது தகவல்:
இத்தலத்தின் அருகே ஓரிடத்தில் சிறிய தீர்த்தம் போன்று நீர் வடிகிறது. அதில் இரண்டு நாகங்கள் இன்றுவரையிலும் எழுந்து நீராடி அவ்வப்போது சுவாமியின் கருவறைக்கு வந்து செல்வதாக அக்காட்சியை நேரில் கண்ட பக்தர்கள் சிலாகிப்புடன் தெரிவிக்கின்றனர். 

இங்கு யோகநரசிம்மர், சக்கரத்தாழ்வார், இரட்டைமுகத்துடன் கூடிய விநாயகர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

வெள்ளாறு, கோயிலைத் தொட்டுக்கொண்டு தவழ்ந்தோடிக் குளுமை பரப்புகிறது. ஆழியாறு அணை, திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி ஆற்று அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஒன்றாகி காட்டாற்று வெள்ளமாய் வந்து தண்ணீர் கரை புரண்டு ஓடும்போது வெண்ணிறத்தில் கழித்தோடுவதால், வெள்ளாறு என்றழைக்கப்படுகிறது. 

பாலாறு என்ற பெயரும் இதற்கு உண்டு. மலையிலே காய்த்துக் கனிந்து உதிர்ந்த பழங்களை படைத்துக்கொண்டிருந்தன. நாளடைவில் நீர்வரத்து குறைந்து போனதில் சுயம்பான அனுமன் மீது மணல் படிந்து மூடியது. 

காலம் கடந்த நிலையில் ஒருநாள், தன்னை வெளிப்படுத்தி அனுக்ரகம் வழங்க மனம் கொண்டார் மாருதி. இந்நிலையில் 1954-1955-ல் இப்பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மலையிலிருந்து வரும் நீரை தடுத்து நிறுத்தி ஓர் அணை உருவாக்கவும், அதனைகோவை மாவட்டத்து பாசனத்துக்குப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. 

எவ்வளவோ முயன்றும் அணைகட்டுவது தடைப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு அலுவலரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி தான் துணையாக இருந்து அணை கட்ட உதவுவதாகக் கூறி, ஒரு பாறை அருகில் சென்று மறைந்து போனார்.

அந்த அலுவலர் கனவில் வந்த இடத்துக்குச் சென்று சுத்தப்படுத்தியபோது, அனுமன் பாறையில் பிரசன்னமாகி இருப்பதைக் கண்டார். உடனே வாயுபுத்ரனை வழிபட்டு பணியைத் துவக்க, ஆசியாவிலேயே பெரிய அணை (சுமார் 2 கி.மீ) 1962-ல் கட்டி முடிக்கப்பட்டது. 

அனுமனின் அருளால் கட்டி முடிக்கப்பட்ட அந்த அணையே ஆழியார் அணை. அனுமனின் ஆற்றல் அங்கே நிறைந்திருப்பதை அறிந்த பக்தர்கள் அந்த பகுதிக்குச் சென்று பாறையில் பதிந்து கிடந்த அனுமனை வழிபட்டு, தலங்களின் நியாயமான விருப்பங்கள் நிவர்த்தி ஆவதற்காக வணங்கத் தொடங்கினர்.

இங்கிருந்து ஆறு கல் மேற்கில் கோவிந்தன் மலையும், தென்கிழக்கில் தாடகையை ராமர் வதம் செய்த தாடக நாச்சிமலையும், தென்கிழக்குப் பகுதியில் கோபால்சாமி மலையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலபெருமை:

ஆஞ்சநேயர் இலங்கை சென்ற போது பல மலைகளைக் கடந்து பறந்து சென்றார். அவ்வாறு சென்ற போது, அவர் கால் பதித்த இடமாகக் கருதப்படும் கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரத்திலுள்ள பாலாற்றங்கரையின் நடுவிலுள்ள பாறையில் அவருக்கு சிலை வடிக்கப்பட்டுள்ளது.

1996- ல் அபிஷேகம் போன்ற ஆராதனைகளைச் செய்வதற்காக நின்ற வடிவிலமைந்த ஆஞ்சநேயர் திருவடிவம் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டம் மருந்து வாழ்மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

பாலாற்றின் நடுவில் பாறைகளின் மேல் கலை நயம் மிகுந்த தோற்றத்துடன் கட்டப்பட்டுள்ளது. கோயில் மேற்புறம் ராமபிரானின் பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் பாதம் சன்னதியும், கீழ்ப்புறம் ஆஞ்சநேயர் சன்னதியும் அமைந்துள்ளன.

தல வரலாறு:

கூப்பிய கரங்களுடனோ அல்லது வரம் தரும் மூர்த்தமாகவோ அனுமனை பல்வேறு தலங்களில் தரிசித்திருப்பீர்கள். ஒரே சன்னதியில் இரண்டு அனுமன்கள்; அதிலும் ஒரு திருமேனி கிடந்த கோலத்தில் சுயம்பு மூர்த்தமாக அமைந்திருக்க மற்றொரு திருவடிவம் சஞ்சீவி அனுமனாக காட்சியளிக்கிறது.

அனுமன் இரு வடிவில் காட்சி தருகிறார் என்றால், விநாயகரோ இங்கே இருமுகங்களுடன் துவி முககணபதியாக அருள்கிறார். ஆதியான விநாயகரும் அந்தமான அனுமனும் இங்கே இரு வடிவங்களுடன் காட்சி தருவதால், இங்கு வந்து வேண்டினால் இருமடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

சீதையைத் தேடிவந்த அனுமன், அசோகவனத்தில் அன்னையைக் கண்டதும், ராமபிரான் குறித்த விவரங்களைத் தெரிவித்துவிட்டு, கணையாழியைத் தந்து கலக்கம் தீர்த்தான். 

பின்னர் அந்த நற்செய்தியை ராமரிடம் தெரிவிக்கப் புறப்பட்டான். வானில் தாவிப்பறந்தவன், வழியில் வெண்மை நிறைந்த ஆறு ஒன்று ஒரு மலையிலிருந்து இறங்குவதைக் கண்டான். அது தரையைத் தொடும் இடத்தில் பச்சைப்பசேல் என்று வனம் அடர்ந்து செழித்திருந்தது.

இலங்கையை எரித்தபோது, அசோகவனத்தில் இங்கும் அங்கும் தாவித்தாவி குதித்ததாலும், நெருப்பு, புகையினாலும் ஏற்பட்ட அழுக்குப் படிந்த உடலோடு இருந்த அனுமன் சற்றே ஆசுவாசம் கொள்ளவும் தன் தோற்றம் ராமபிரானுக்கு மகிழ்ச்சியான செய்தியை உணர்த்துவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நீராடி அழுக்கினைப் போக்கிக்கொள்ளவும் அந்த இடத்தில் இறங்கிச் செல்ல நினைத்தான். 

அதேசமயத்தில் அவனது வேகம் தடைப்பட்டு மேலும் பறப்பது தடைப்பட்டதால் ஆச்சரியம் அடைந்தான். என்ன காரணம் என அறிய முற்பட்டவன், தன் நிழல் கீழே ஓரிடத்தில் விழுவதையும், அது நகராமல் இருப்பதே தானும் அசைய இயலாமல் இருப்பதற்குக் காரணம் என்பதையும் உணர்ந்தான். 

எவ்வளவு முயன்றும் அவனது நிழல் அந்த இடத்தை விட்டு அகலாமல்  இருந்ததோடு, அவனை மேலே பறக்க விடாமலும் தடுக்கவே, கீழே இறங்கி, ஆர்ப்பரித்துச் செல்லும் அந்த காட்டாற்றை நோக்கி, புண்ணிய நதிகளே, நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்றான். 

நாங்கள், தேவலோகத்து விரஜா நதிகள். அறம் நிலைக்கப் போகும் பூமியை வணங்கி வளப்படுத்த வானிலிருந்து இறங்கி வருகிறோம். ராமபிரான் இத்தலம் வரப்போகிறார். 

அவரது பாதம் பட்டால் எங்களுக்குப் புண்ணியம் சேர்ந்து பாவம் தொலையும். ராமகாரியத்தில் ஈடுபட்டுள்ள உங்கள் திருப்பாதமும் எங்கள் மேல் படவேண்டும் என்பதற்காகவே உங்கள் நிழலைக் கட்டிப் போட்டுத் தடுத்தோம். 

தாங்கள் இங்கே நீராடி ஜபம், தவம் முடித்து சிரம பரிகாரம் செய்துகொண்டு செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டன நதிகள். 

மகிழ்ந்த அனுமன், அவ்வாறே அந்த நதிகளின் ஆசையை பூர்த்தி செய்து அத்தலத்தில் சற்று நேரம் தங்கிப் பின்னர் தன் பயணத்தைத் தொடர்ந்து ராமபிரானிடம் சென்று அன்னை சீதையைப் பற்றித் தெரிவித்தான். 

அனுமன் வெகு வேகமாகப் பறப்பவர் என்பதால் அவரது நிழல் பூமியில் எங்கும் விழுவதில்லை. மாறாக நதிகள் அந்நிழலைச் சற்றுநேரம் இத்தலத்தில் பிடித்து நிறுத்தியதால் அவரது திருவுருவின் நிழல் இங்குள்ள ஒரு பாறையில் பட்டது. 

அது அப்படியே நிரந்தரமாக பதிந்து, சுயம்பு மூர்த்தியாக உருவானது. அந்த சுயம்பு மூர்த்தத்தை நதிகள் தினமும் தூய நீரால் சுத்தப்படுத்தி வழிபட்டு வந்தன. 

சுமார் ஐந்து அடி நீளத்திற்கு சுயம்புவாய் தோன்றியுள்ள அனுமனின் உருவில் வலது கை அபயம் அளிப்பதாகவும், இடது கை இடுப்பிலும் உள்ளது. வலது தோளில் இருந்து தொங்கும் மூட்டையில் சீதாப்பிராட்டியிடமிருந்து பெற்று எடுத்து வரும் சூடாமணி வைக்கப்பட்டுள்ளது. 

வால் பின்புறம் இருந்து புறப்பட்டு வளைந்து தலைக்கு மேல் சென்று சிறிய மணி ஒன்று கட்டப்பட்ட நிலையிலுள்ளது.

இலங்கையிலிருந்து வந்ததால் கால் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நிழல் பதிந்து உருவான வடிவம் ஆதலால், வான் நோக்கிப் படுத்திருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

குருவாயூரப்பனின் உண்மை சம்பவம்....

குருவாயூரப்பனின் உண்மை சம்பவம்
முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி இருந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள்,

ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம்.

ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது.

அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது.

மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச். சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள்.

அப்போது, ஒரு சிறிய பையன் அவள் முன் தோன்றி, “ பாட்டி, கவலைப் படாதீர்கள். உங்களை நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்” என்று சொன்னான்.

மழையில் இருவரும் தெப்பமாக நனைந்து விட்டனர். பேசிக் கொண்டே பாட்டியின் வீட்டை அடைந்தார்கள். 

வீட்டை அடைந்ததும் அந்த சிறுவனுக்கு நன்றி சொல்லி, “உன் பெயர் என்ன?” என்று கேட்டாள். அதற்கு அவன் ‘கோபாலன்’ என்று சொன்னான்.

மூதாட்டி, “ நீ செய்திருக்கும் உதவிக்கு உனக்கு ஏதாவது நான் தர வேண்டும், என்ன வேண்டும்? கேள்” என்று சொன்னாள். அவனும்,  மழையில் என் துணி நனைந்துவிட்டது.

எனக்கு உம்முடைய புடவையிலிருந்து ஒரு கௌபீனம் தாருங்கள் போதும்” என்று கூறினான். அவள் சுற்றிப் பார்த்த பொழுது ஒரு சிவப்புப் புடவை இருந்தது.

அதிலிருந்து ஒரு சிறு பகுதியைக் கிழித்து அவனிடம் கொடுத்தாள். அவனும் பெற்றுக் கொண்டு சென்றான். 

அடுத்த நாள் காலை, நிர்மால்ய தரிசனத்திற்காக ஸன்னிதியின் கதவைத் திறந்தபோது, மூர்த்திக்கு சிவப்பு வர்ணக் கௌபீனம் கட்டியிருப்பதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.   

முதல் நாள்  நன்கு அலங்காரம் செய்யப்பட்ட கண்ணன் இப்போது எப்படி கௌபீனத்தோடு காட்சி அளிக்கிறான்? என்று ஆச்சர்யமடைந்தனர்.. கண்ணனின் திவ்ய மேனி அனைவரையும் மயக்கும் வண்ணம் இருந்தது. 

வழக்கம்போல் தரிசனத்திற்காக வந்திருந்த மூதாட்டியும் மகிழ்ந்து அனைவரிடமும் முந்தைய நாள் நடந்தவற்றைச் சொன்னாள்.

தன்னுடைய சிறிது கிழிந்த புடவையையும் காண்பித்தாள்.  

அதன் கிழிந்த பகுதி, குருவாயூரப்பனின் கௌபீனமாக இருப்பதைக் கண்ட அனைவரும் வியந்தனர். மூதாட்டி, இந்த தெய்வீக நாடகத்தையும், குருவாயூரப்பன் தனக்கு அனுக்ரஹம் செய்ததையும் எண்ணியெண்ணி ஆனந்தித்தாள்.

அன்று முதல் ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு இரவில் சிவப்புக் கௌபீனம் சாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது...

Friday, April 21, 2023

குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை

💢💢💢💢குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.
இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.

குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.

இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விஷேசம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.

இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.

இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.

நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.

இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்திக்ல் பழங்கள் , பொருள், காசுகள் என்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர். கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டி கொள்ளாமல், குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது. இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம். மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.💢

Monday, April 10, 2023

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை

விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை:
 மச்ச அவதாரம்:   தாயின் வயிற்றிலிருந்து ரத்தமோடு ரத்தமாய் நீந்தி பிறப்பது...  
 கூர்ம அவதாரம்: 
மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது...

 வராக அவதாரம்:
ஆறாம் மாதம் முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது...

 நரசிம்ம அவதாரம்:
எட்டாம் மாதம் உட்கார்ந்து கையில் கிடைத்ததை கிழிப்பது...

 வாமண அவதாரம்:
ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது...

 பரசுராம அவதாரம்:
வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது...

 ராம அவதாரம்:
திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் குடும்ப கடமையாற்றுவது...

 பலராம அவதாரம்:
இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர் உலகோர்க்கு கடமையாற்றுவது...

 கிருஷ்ண அவதாரம்:
முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது...

கல்கி அவதாரம்:
இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும் தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.

Om Namo Narayana

Friday, April 7, 2023

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தங்கை பார்வதிக்காக திருமணச்சீர் கொண்டு வந்த வைகுண்டவாசர் கோவில் கொண்டிருக்கிறார்.

தங்கைக்காக திருமணச்சீர்  கொண்டுவந்த 
மாங்காடு பெருமாள்...!
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் தங்கை பார்வதிக்காக திருமணச்சீர் கொண்டு வந்த வைகுண்டவாசர் கோவில் கொண்டிருக்கிறார். 

சீதனத்துடன் வந்த சீனிவாசரான இவரை தரிச்சித்தால் பணத்தடை நீங்கி திருமணம் விமரிசையாக நடந்தேறும் என்பது தலத்தின் ஐதீகம். 

கைலாயத்தில் ஒரு சமயம் அம்பிகை சிவனின் கண்களை விளையாட்டாக மூடவே  உலகம் இருளில் மூழ்கியது. 

அம்பிகை மீது கோபம் கொண்ட சிவன்,அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார் பூலோகம் வந்த அம்பிகைமானிடப் பெண்ணாக சிவன் மீது  பக்தி கொண்டு வாழ்ந்தாள். தங்கைக்கு திருமணச் சீராக மோதிரம் கொண்டு வந்த மாங்காடு பெருமாள்

சிவன் தன்னைத் திருமணம் செய்ய வேண்டுமென தவத்தில் ஆழ்ந்தாள். தங்கை பார்வதிக்காக வைகுண்டத்தில் இருந்து மகாவிஷ்ணுவும் சீர் கொண்டு வந்தார்.

அச்சமயத்தில்அசுரகுருவான சுக்ரச்சாரியரும் சிவனை வேண்டி பூலோகத்தில் தவமிருந்து வந்தார்.தனது குடும்பத்தை விட பக்தனுக்கே முதலிடம் தந்த சிவன், சுக்ராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். 

அம்பிகையும்.சுக்ராச்சாரியாரும்தவம்புரிந்துகொண்டி
ருந்த இடம் இன்றைய மாங்காடு (சென்னை) என சொல்லப்படுகிறது. 

சுக்ராச்சாரியருக்கு வரமருளிய சிவன், அம்பிகைக்கும் காட்சி தந்து, காஞ்சிபுரத்தில் மணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். 

அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தவ வாழ்க்கையைத் தொடர்ந்தாள்  பூலோகம் வந்த மகாவிஷ்ணு, மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்த சமயத்தில், மார்க்கண்டேய மகரிஷி அவரைக் கண்டு நடந்ததைக் கூறினார். 

புண்ணியதலமான மாங்காட்டில் தங்கும்படி கேட்டுக் கொண்ட. பெருமாளும் 
வைகுண்டவாசர்என்னும். 
திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளினார்

சீதனுத்துடன் பெருமாள்

வைகுண்ட பெருமாள் கையில் பிரயோக சக்கரம்  வைத்த நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார். அருகில் மார்க்கண்டேயர் தவம் செய்த நிலையில் இருக்கிறார்.

தங்கைக்கு திருமணச்சீராக பெருமாள் கொண்டு வந்த  மோதிரம் வலது கையில் இருக்கிறது. கனகவல்லித் தாயார் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். 

பிரகாரத்தில்ஆண்டாள், ஆஞ்சநேயர், திருக்கச்சிநம்பிகள்,  நம்மாழ்வார், ராமானுஜர், விஷ்வக்சேனர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபட்டால் பொருளாதாரத் தடை நீங்கி திருமணம் விமரிசையாக நடந்தேறும் என்பது    ஐதிகம். 

வைகுண்டத்தில் இருந்து நேரடியாக பூலோகம் வந்ததால், வைகுண்டவாசர் என்று பெயருடன் விளங்குகிறார்.  

இத்தலமே வைகுண்டமாக திகழ்வதால், சொர்க்கவாசல் தனியாக இங்கு அமைக்கப்படவில்லை ஏகாதசி நாட்களில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். 

கருவறைக்கு எதிரே  கருடாழ்வாழ்வார் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இவருக்கு சிறகு இரண்டும் மூடிய நிலையில் உள்ளது மாறுபட்ட துவாரபாலகர் பெருமாள் கோவில்களில் ஜெயன், விஜயன் ஆகியோரே துவாரபாலகர்களாக இருப்பது வழக்கம். 

இங்கு அவிரட்சகன், அக்னி என்னும் பெயரில் துவாரபாலகர்களாக இருப்பது மாறுபட்ட அமைப்பாகும்.

தலவிருட்சமாக மாமரம் உள்ளது மாங்காடு காமாட்சியம்மன் கோவிலும், சிவன் சுக்ராச்சாரியருக்கு காட்சி தந்த வெள்ளீஸ்வரர் கோவிலும் சற்று தூரத்தில் உள்ளன.

Wednesday, December 28, 2022

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள #நரசிங்கபுரம் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
           🙏#தினம்_ஒரு_திருத்தலம்...🛕*_ 
  #இடது_கையால்_தாயைஅணைத்தபடி  
                      #நரசிம்மர்... 16 நாகங்கள்...!!

#அருள்மிகு_லட்சுமிநரசிம்மர்திருக்கோயில்...!!

🌺 *இந்த கோயில் எங்கு உள்ளது?* 

🍒திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள #நரசிங்கபுரம் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.

🌺 *இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?* 

🌺திருவள்ளூரில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் நரசிங்கபுரம் என்னும் ஊர் உள்ளது. நரசிங்கபுரத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

🌺 *இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?* 

🍂 இத்தல மூலவரான லட்சுமி நரசிம்மர் #ஏழரை_அடிஉயரத்துடன்_வலதுகாலை கீழே வைத்து, இடது காலை மடித்து, சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி, வலது கரத்தை #அபயஹஸ்தமாக காட்டி மிக அழகாக காட்சி தருகிறார்.

#சிரித்த_ முகத்துடன் பெருமாள் காட்சியளிக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பது போல் காட்சியளிப்பது தனிச் சிறப்பம்சமாகும்.

#ஐந்துநிலை_கொண்ட_கிழக்கு_கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், பலிபீடமும், துவஜஸ்தம்பமும் இக்கோயிலில் அமைந்துள்ளது.

🍂கோபுரத்தின் உள்புறம் தெற்கில் சக்கரத்தாழ்வார், வடக்கில் வேதாந்த தேசிகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

🍂பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி ஆகியோர் காட்சி தருகின்றனர்.

🍂மேற்கு பிரகாரத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளையும் தரிசிக்கலாம்.

🍂 *வேறென்ன சிறப்பு?* 

#வசீகரமானசிரிப்புடன்_5அடிஉயரமுள்ளமரகதவல்லித்_தாயார்_அபயஹஸ்த_முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.

🍂இத்தல பிரகாரத்தின் வடமேற்கில் ஆண்டாள் சன்னதியும், வடகிழக்கில் 20 தூண்களுடன் கூடிய கல்யாண மண்டபமும் அமைந்துள்ளது.

🍂4 அடி உயரத்தில் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார், 16 நாகங்களை அணிகலனாக கொண்டு இங்கு காட்சி தருகிறார். இவரை தரிசித்தால் நாகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

🍂மூலவரான நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்களில் வணங்கினால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

🌺 *என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?* 

🌺நரசிம்ம ஜெயந்தி இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

🌺ஆனி பிரம்மோற்சவம் 10 நாட்கள், கருட சேவை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் ஆகியவையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

🌺 *எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?* 

🌺நாகதோஷம் நீங்க, கடன்களை அடைக்க, நோய்களில் இருந்து விடுபட, திருமணத்தடை நீங்க மற்றும் சகல தோஷங்களும் நிவர்த்தியாக இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

🍂இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🍂இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் மூலவர் மற்றும் தாயாருக்கு அபிஷேகம் செய்தும், திருமஞ்சனம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

 🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

Monday, December 26, 2022

ஸ்ரீ கிருஷ்ணர் காலிங்கனை அடக்கி அதன் தலைமீது நின்று நர்த்தனம் ஆடியதே காளிங்க நர்த்தனம் எனப்படுகிறது

_காளிங்க நர்த்தனம்_


ஏழை எளியவர்களின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்த பகவான் 
கண்ணபிரான் ஆயர் மக்களை மிகவும் நேசித்தார். 

காளிங்கன் என்ற   ஐந்து தலைகளைக் கொண்ட  கொடிய விஷநாகமொன்று யமுனை நதியில் இருந்த மடு ஒன்றில் குடும்பத்தோடு   வசித்து வந்தது.  அந்நாகம் அந்த மடுவில் இறங்குபவர்களை எல்லாம் விழுங்கி வந்தது.   கால்நடைகளையும் கொன்று வந்தது.  இதனால் காளிங்கன் இருந்த மடுவில் அருகே யாருமே செல்லாமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையை மாற்றி அந்த மடுவின் நீரை அனைவரும் பயன்படுத்தும்படிச்  செய்ய நினைத்தார் கண்ணபிரான். 
          
தோழர்களோடு விளையாடிக் கொண்டிருந்தக் கண்ணன் திடீரென்று காளிங்கன் இருக்கும் மடுவை நோக்கி வேகமாகச் சென்றார். அந்தமடுவில் இருக்கும்  காளிங்கனின் விஷம் பட்டு கண்ணன் இறந்துவிடுவானென நினைத்து குழந்தைகள் பயத்தில் கத்தினர். ஆனால் கண்ணனோ சற்றும் கலங்காமல்,  காளிங்கனின் மீதே   குதித்தார்.  சினங் கொண்ட காளிங்கன் ஆத்திரத்தோடு  கண்ணனைச் சுற்றி வளைக்க ஆரம்பித்தது. இதைக் கண்ட ஆயர் சிறுவர்கள்  பயந்து அலறினர்.
              
நந்நகோபன்,  யசோதை மற்றும் ஆயர்களும், ஆய்ச்சியர்களும்  கதறி அழுதனர். தனக்காக  எல்லோரும் வேதனையுறுவதைக் கண்ட கண்ணனும் காளிங்கன்,  தன்னை நெருக்காதபடி உடலை மிகவும் பெரியதாக்கினார். எனவே காளிங்கன்,  பகவானை விட்டு விலகியது. எனவே கண்ணன் அதன் தலைகளின் மீது  ஏறி நின்று நர்த்தனம் புரிய ஆரம்பித்தார். இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் காலிங்கனை அடக்கி அதன் தலைமீது நின்று நர்த்தனம் ஆடியதே  காளிங்க நர்த்தனம் எனப்படுகிறது.
             
கண்ணனை கீழே தள்ள முயன்று,  தோற்ற காளிங்கனும் இறுதியில் பகவானிடம் பணிந்தது.  இங்கிருந்து சமுத்திரத்திற்குச் சென்றுவிடு; இங்குள்ள மக்களை வாழவிடு!  என்றார் கண்ணன். கருடனுக்கு அஞ்சியே இந்த மடுவில் தஞ்சம் புகுந்தேன் சுவாமி! என்றது காளிங்கன். எனது பக்தனைக் கருடன் துன்புறுத்தாது!  என கிருஷ்ணரும் அருள் புரிந்தார். பகவானை வணங்கி, குடும்பத்தோடு காளிங்கனும் சமுத்திரத்தை அடைந்தது.  அனைவரும் காளிங்கனின் பயம் நீங்கிற்று என மகிழ்ந்துக் கண்ணனைக் கொண்டாடினர்.
      
இவ்வாறு ஆயர் மக்களை துன்புறுத்தி வந்த காளிங்கன் என்ற விஷ நாகத்தை அடக்கி அதன் தலை மீது நின்று கண்ணபிராரான் நர்த்தனம் ஆடிய புனிதமான  தினம் இன்று என்பதால் இன்றைய தினத்தை கண்ணபிரான் "காளிங்க நர்த்தனம்"  ஆடிய தினமாகப் பக்தர்கள்  கொண்டாடுவர். 
      
பார்த்தனுக்கு,  ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டிய கோலத்திலேயே காட்சி அளிக்கும் தலம்  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  ஆலயம்.  தேரோட்டிக்கு மீசையை கம்பீரத்தை தருவது என்பதால்  இங்கே பார்த்தசாரதிப்  பெருமாள்
மீசையோடு கம்பீரமாகக்  காட்சி அளிப்பார்.   இன்றைய தினம் பகவான் கிருஷ்ணர் காளிங்க நர்த்தனம் ஆடிய தினம் என்பதால் இன்று   திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் பகவான்
 ஸ்ரீகிருஷ்ணர் "காளிக நர்த்தன கோலத்தில்"   பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.
  பார்த்தசாரதிப்பெருமாளே சரணம்.

Thursday, December 15, 2022

25 வகையான ஏகாதசி என்னென்ன🔯*

*🔯25 வகையான ஏகாதசி என்னென்ன🔯*
*🔯திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும்.*

 *🔯ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் . இந்த திதியை புண்யகாலம் என்பர் .*

 🔯இதில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக இருக்கிறது. 

ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்கு பின் மோட்சமும் கிடைக்கும்.

ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. 

அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். 

அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, 

அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. 

முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம்

 சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும்.

 இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம்.

 இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. 

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று “பாரணை ” என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள்.

ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

ஏகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. 

இதனால் மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும்.

 விரதத்தை முடித்த உடன் ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக் கூடாது.

 உபவாசத்தின் போது சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.

*🔯25 ஏகாதசிகள்*

1. சித்திரை வளர்பிறை ஏகாதசி  காமதா ஏகாதசி

2. சித்திரை தேய்பிறை ஏகாதசி  பாப மோசனிகா ஏகாதசி

3. வைகாசி வளர்பிறை ஏகாதசி  மோகினி ஏகாதசி

4. வைகாசி தேய்பிறை ஏகாதசி  வருதினி ஏகாதசி

5. ஆனி வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி

6. ஆனி தேய்பிறை ஏகாதசி அபரா ஏகாதசி

7. ஆடி வளர்பிறை ஏகாதசி விஷ்ணு சயன ஏகாதசி

8. ஆடி தேய்பிறை ஏகாதசி யோகினி ஏகாதசி

9. ஆவணி வளர்பிறை ஏகாதசி புத்திரத ஏகாதசி

10. ஆவணி தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி

11. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி பரிவர்த்தன ஏகாதசி

12. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி அஜ ஏகாதசி

13. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி

14. ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திரா ஏகாதசி

15. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி பிரபோதின ஏகாதசி

16. கார்த்திகை தேய்பிறை ஏகாதசி ரமா ஏகாதசி

17. மார்கழி வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி

18. மார்கழி தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி

19. தை வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்திர ஏகாதசி

20. தை தேய்பிறை ஏகாதசி சபலா ஏகாதசி

21. மாசி வளர்பிறை ஏகாதசி ஜெய ஏகாதசி

22. மாசி தேய்பிறை ஏகாதசி ஷட்திலா ஏகாதசி

23. பங்குனி வளர்பிறை ஏகாதசி ஆமலகி ஏகாதசி.

24. பங்குனி தேய்பிறை ஏகாதசி விஜயா ஏகாதசி.

25.   அதிக ஏகாதசி கமலா ஏகாதசி
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*🔯ஸர்வம் கிருஷ்ணார்ப்பயாமி*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

Sunday, December 11, 2022

திருமாலுக்கு பிடித்த 12 திருநாமங்கள்💖🌀

🌀💖திருமாலுக்கு பிடித்த 12 திருநாமங்கள்💖🌀
❣️அகில உலகங் களையும் காத்து இரட்சிக்கும் பொறுப்பை ஏற்று,நாளும்  நமக்கெல்லாம் நல்வாழ்வு அளித்துக்கொண்டிருப்பவரை ஸ்ரீமன் நாராயணன்,ஸ்ரீ 
மஹாவிஷ்ணு என்றெல்லாம் துதித்து,அவரை 100,1000,லட்சம் அல்லது கோடி திருநாமங்களால் போற்றி கொண்டாடுகிறோம்.

❣️இத்தனை திருநாமங்களில் இவருக்கு மிகவும் பிடித்தமான திருநாமம் எது என்பதையும்,ஏன் அவருக்கு அந்த நாமம் பிடித்திருக்கிறது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

❣️திருமாலுக்கு கோடி நாமங்கள் சொல்லி போற்றுகிறோம்.அவற்றுள் பிடித்தது லட்சம் நாமங்கள்.அவற்றுள் பிடித்தது சஹஸ்ர நாமங்கள்.அந்த சஹஸ்ர நாமங்களில் பிடித்தது அஷ்டோத்தரசத நாமங்கள். இவற்றுள் பன்னிரெண்டு நாமங்கள் சிறந்தவைகளாகும்.அந்த 12 நாமங்கள்:
1)கேசவா,
2)நாராயணா,
3)மாதவா,
4)கோவிந்தா,
5)விஷ்ணு,
6)மதுசூதனா,
7)திரிவிக்ரமா,
8)வாமணா,
9)ஸ்ரீதரா,
10)ரிஷிகேஷா,
11)பத்மநாபா,
12)தாமோதரா.

❣️இந்த பன்னிரெண்டு திருநாமங்களிலும் திருமாலுக்கு மிகவும் சிறந்தது,மிகவும் பிடித்தது என்று சொல்லப் படுவது #கோவிந்தா என்னும் திருநாமம் தான்.

❣️ஏனெனில்,இந்த கோவிந்தா என்ற திருநாமத்திற்கு பல்வேறு பொருள்கள் உண்டு.அவைகள்:
💙கோ-கடலுக்குள்ளே மறைக்கப்பட்ட வேதங்களை மீட்டெடுத்ததால்,கோவிந்தா என அழைத்தனர்.
💙கோ-பர்வத மலை தரையில் புதையாமல் காத்தவர் என்பதால்,கோவிந்தா என அழைத்தனர்.
💙கோ-நிலைமாறிய பூமியை நிலைபெறச் செய்தவர் என்பதால்,கோவிந்தா என்றனர்.
💙கோ-சனகாதிகள் மற்றும் சப்தரிஷிகள் வேண்டுகோளின் படியும்,நரசிம்மர் தோற்றத்தின் போது பக்தனின்  சொன்ன சொல் காக்கவும் வந்தவர் என்பதால்,கோவிந்தா என்றனர்.
💙கோ-விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து மண்ணிலிருந்து விண்ணை அளந்து நின்றதால் கோவிந்தா என்றழைத்தனர்.
💙கோ-க்ஷத்திரியர்களை அடக்கியவர் என்பதால் கோவிந்தா என்று அழைத்தனர்.
💙கோ-ஆயுதங்கள்,50 வகையான அஸ்திரம்,சஸ்திரம் உள்ள வானூர்தியை இந்திரனால் பெறப்பட்டவர் என்பதால்,கோவிந்தா  என்றழைத்தனர்.
💙கோ-சமுத்திரத்தை கலக்கி பூமியைக் கிழித்தவர் என்பதால்,கோவிந்தா என்றழைத்தனர்.
💙கோ-மஹாலட்சுமி திருமாலிடம் கோபித்துக் கொண்டு சென்றுவிட அனைத்து சம்பத்துக்களும் இழந்த நிலையில் திருமால் தன் வைகுண்டத்தை விட்டு ஸ்ரீநிவாசராக பூமியில் எங்கெங்கோ சுற்றி திரிந்து,பசி களைப்பில் ஒரு முனிவரிடத்தில் அவரிடமிருந்த பசுக்களில் ஒரு பசுவை அதன் பாலை அருந்தி தன் பசியை போக்கிக் கொள்ளும் பொறுட்டு தனக்கு தானமாக தரும்படி வேண்ட,முனிவரும் நீங்கள் யார் எப்படி இங்கு வந்தீர்கள் என்பதை  வினவ,மிருந்த பசி களைப்பில் தான் யாரென்றே தெரியாவில்லை என்றபடி பதில் அளிக்க சரி பரவாயில்லை இங்கேயே இருங்கள் என்று உள்ளே சென்று நீர் நிறைந்த செம்பை எடுத்து வருவதற்குள் ஸ்ரீநிவாசர் தன்னை கலி துரத்தி வருவது போல் உணர,அவர் அங்கிருந்து ஓட ஆரம்பிக்கிறார்.அப்போது வெளியே வந்து பார்த்த முனிவர் ஐயா கோ(பசு)
இந்தா,கோ  
இந்தா,கோ இந்தா என்று பின்னாலேயே முனிவர் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே செல்ல அந்த முனிவர் கூறிய வார்த்தை ஸ்ரீநிவாசருக்கு ‘கோவிந்தா’ என்று காதில் விழுந்தது.முனிவரின் கோவிந்தா என்று அழைத்த அந்த வார்த்தையே தனக்கு பிடித்தமானதாக கருதியதால் அனைவரும் கோவிந்தா என அழைத்தனர்.அதுமட்டுமல்ல பசுக்களை ரட்சிப்பவர் என்பதாலும் கோவிந்தா என்றனர்.
💙கோ-கலியுக தோஷம் நீக்குபவர் என்பதால்,கோவிந்தா என்றழைத்தனர்.
💙கோ-விருப்பு,வெறுப்பின்றி அனைவரையும் காத்து ரட்சிப்பவர் என்பதால்,கோவிந்தா என்று அழைத்தனர்.
💙கோ-வல்வினையை போக்கி வருவினையை தடுத்து காத்தருளும் ஆற்றலை உடையவர் என்பதால்,கோவிந்தா என்று அழைத்தனர்.

❣️ஆக இப்படிப்பட்ட மகிமை பொருந்திய மந்திரச் சொல்லான #கோவிந்தா” என்பது அந்த திருமாலுக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

🙏🏻🪷#ௐ #நமோ #நாராயணாய🪷🙏🏻

12 ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ் ந்த தேவராஜன் என்பவருக்குவரதன் என்றொரு மகன் இருந்தார்.

விஷ்ணு சகஸ்ரநாமம்
***************************
தினமும் ஒரு திருநாமம்
****************************
இன்று 211 ஆம்  திருநாமம். 
********************************
🌹குருதமோ குரவே நமஹ:🌹
***********************************
(Guruthamo Gurave namaha)
(211-வது திருநாமமான ‘குருதமோ குரு:’ முதல், 225-வது திருநாமமான ‘ஸமீரண:’ வரையுள்ள 15 திருநாமங்கள் மத்ஸ்ய அவதாரத்தின் பெருமைகளை விளக்க வந்தவை)

12 ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ் ந்த தேவராஜன் என்பவருக்குவரதன் என்றொரு மகன் இருந்தார். 

தேவராஜன், தமது மகனான வரதனுக்கு ராமாநுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம்என்னும் நூலை உபதேசித்து வந்தார். 

வரதன் அவ்வப்போது கேட்கும் கேள்விக ளுக்குத் தந்தையால் சரிவர பதிலளிக்க இயலவில்லை. 

அதனால் தன் மகனிடம், “நீ மிகவும் கெட்டி க்காரனாக இருக்கிறாய். உனக்கு ஏற்றபடி ஸ்ரீபாஷ்யத்தை உபதேசிக்க வேண்டும் என்றால், திருவெள்ளறையில் வாழும் எங்களாழ்வான் என்னும் குருவால் தான் முடியும். நீ அவரிடம் செல்!” என்று சொல்லி வரதனைத் திருவெள்ளறைக்கு அனுப்பி வைத்தார் தேவராஜன்.

திருவெள்ளறையில் உள்ள எங்களாழ்வா னின் இல்லத்தை அடைந்த வரதன், வீட்டி ன் கதவைத் தட்டினார். “யார் அங்கே?” என்று எங்களாழ்வான் கேட்டார்.

 “நான் வரதன் வந்திருக்கிறேன்!” என்று சொன்னார் வரதன்.

“நான் செத்த பின் வாரும்!” என்று உள்ளே இருந்தபடி பதிலளித்தார் எங்களாழ்வான். ஒன்றும் புரியாமல், காஞ்சியிலுள்ள தனது தந்தையிடமே திரும்ப வந்தார் வரதன்.

“தந்தையே! நீங்கள் காட்டிய குருவிடம் சென் றால், நான் செத்தபின் வாரும் என்கி றார் அவர் செத்தபின் யாரிடம்  செல்வது?” என்று கேட்டார் வரதன். 

தேவராஜன், “வரதா! நான் என்று அவர் தன்னைச் சொல்லிக் கொள்ளவில்லை. நீ கதவைத் தட்டியவுடன், நான் வரதன் வந்தி ருக்கிறேன் என்று சொன்னாய் அல்லவா? நான் என்ற அந்த அகங்காரம் செத்த பின் வரும்படி அவர் உனக்கு அறிவுரை கூறியு ள்ளார். அடுத்தமுறை செல்லும் போது, அடியேன் வரதன் வந்திருக்கிறேன் என்று சொல்!” என்று கூறினார் தேவராஜன்.

அவ்வாறே அடுத்தமுறை எங்களாழ்வானி ன் வீட்டு கதவை தட்டிய வரதன், “அடியேன் வரதன் வந்திருக்கிறேன்!” என்று கூற,
“உள்ளே வாரும்!” என்று அழைத்தார் எங்களாழ்வான். 

“ராமாநுஜரின் ஸ்ரீபாஷ்யத்தை அடியேனு க்கு உபதேசித்தருள வேண்டும்!” என்று
வரதன் பிரார்த்தித்தார். 

“இவ்வூரில் எனக்கு உறவினர்கள் அதிகம். ஆகையால் அவ்வப்போது ஜனன-மரணத் தீட்டுச் செய் திகள் வந்து கொண்டே இருக் கும். நமது பாடங்களும் தடைபடும். அத னால் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்வோம்.
அங்கே உமக்கு ஸ்ரீபாஷ்யம் முழுவதையும் உபதேசிக்கிறேன்!” என்று சொன்னார் எங்களாழ்வான்.

இருவரும் திருவெள்ளறையிலிருந்து ஸ்ரீ வில்லிபுத்தூரை நோக்கி புறப்பட்டார்கள். வழியில் மதுரையில் உள்ள கள்ளழகரைத் தரிசனம் செய்தார்கள்.

அப்போது எங்களாழ்வான் வரதனிடம், “வரதா! இந்தக் கள்ளழகர் தான் முன்னொ ரு சமயம் இப்பாண்டிய நாட்டில் மீன் வடி வில் மத்ஸ்யாவதாரம் செய்தார்.வைகை நதியில் மீனாகத் தோன்றி, மதுரையை ஆண்ட சத்தியவிரதன் என்ற மன்னருக்கு நிறைய வேதாந்த விஷயங்களை உபதே சித்தார்..."

"மத்ஸ்ய மூர்த்தி செய்த உபதேசங்களின் தொகுப்பு தான் மத்ஸ்யபுராணம் ஆகும். அப்பெருமாளின் நினைவாகத் தான் பாண்டிய மன்னர்கள் தங்கள் கொடியில் மீன் சின்னத்தை வைத்தார்கள். சத்தியவி ரதனுக்குக் கருணையோடு பல உபதேச ங்கள் செய்த அந்த மத்ஸ்ய மூர்த்தியே
குருமார்களுக்கெல்லாம் குருவாக விளங் குபவர். அதனால் இவருடைய அருள் இரு ந்தால், நீ விரைவில் ஸ்ரீபாஷ்யத்தைக் கற்றுத் தேர்ந்திடுவாய்!” என்று கூறினார்.

வரதனும் கள்ளழகரை வணங்கி விட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகிலுள்ள கொல்லங்கொண்டான் என்னும் இடத்தில்
எங்களாழ்வானோடு தங்கி ஸ்ரீபாஷ்யம் கற்றார். 

அதன்பின் காஞ்சிபுரத்துக்கு வந்து தான் கற்ற பாஷ்யத்தைத் தமது சீடர்களுக்கெ ல்லாம் உபதேசம் செய்தார். ஸ்ரீபாஷ்யத் துக்கு விளக்கவுரையான சுருதப் பிரகாசி கை என்னும் நூலையும் உருவாக்கினார்.

அந்த வரதன் தான் பின்னாளில் ‘நடாதூர் அம்மாள்’ என்று போற்றப்படும் மிகப்பெரி ய வைணவ குரு ஆனார். தாம் இத்தகைய குருவாய் உருவெடுத்தமைக்குப் பாண்டிய நாட்டில் மீனாய் அவதரித்த மத்ஸ்ய மூர்த்தியின் அருளே காரணம் என்பதை
உணர்த்தும் விதமாக, நடாதூர் அம்மாள், தாம் இயற்றிய பிரபன்ன பாரிஜாதம் என்ற நூலில்,

“லக்ஷ்மீ சக்ஷு: அநுத்யானாத் தத் ஸாரூப்யம் உபேயுஷே|நமோஸ்து மீன வபுஷே வேதவேதி விபன்முஷே||”

என்று சுலோகம் அமைத்து மத்ஸ்ய மூர்த்தியைத் துதிசெய்துள்ளார்.

‘குருதமோ குரு:’ என்றால் குருவுக்கெல்லா ம் குருவாக விளங்குபவர் என்று பொருள். அவ்வாறு குருவுக்கெல்லாம் குருவாக விளங்கி நடாதூர் அம்மாள் போன்ற குரு மார்களை எல்லாம் உருவாக்கியபடியால், மத்ஸ்யாவதாரப் பெருமாள் ‘குருதமோ குரு:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 211-வது திருநாமம்.

“குருதமோ குரவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் நல்வழிகாட்டும் சிறந்த குருநாதர்.

ஓம் நமோ நாராயணாய....

Monday, November 14, 2022

கார்த்திகையில் கண் திறக்கும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள்

கார்த்திகையில் கண் திறக்கும் ஸ்ரீ நரசிம்ம பெருமாள்
ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் நாம் தங்கி இருந்தாலே இத்தலம்  நமக்கு முக்தியை அளிக்க வல்லது.

ஆழ்வார்கள் பாடிய நூற்றிஎட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளசிம்மபுரம் எனப்படும் சோளிங்கர்
திருக்கடிகை என்ற திருப்பெயரில் இவ்வூரை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும். ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது. அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள் அழைத்துள்ளார்கள்

நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்கள், சோளிங்கர் மலைக்கு மேல் நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை அறிந்து கொண்டார்கள். 750 அடி உயரம் கொண்ட அந்த மலைக்கு மேல் சென்ற முனிவர்கள், யோகத்தில் இருக்கும் நரசிம்மர் தங்கள் முன்னே வந்து காட்சி அளிக்கவேண்டும் என்று வேண்டி ஒரு நாழிகை தவம் புரிந்தார்கள். ஒரு நாழிகை என்பது இருபத்து நான்கு நிமிடங்கள் ஆகும். 

அந்த இருபத்து நான்கே நிமிடங்கள் செய்த தவத்துக்காக விரைவில் மனம் உகந்து, யோக நரசிம்மப்பெருமாள் அவர்களுக்குக் காட்சி அளித்தார். அந்த யோக நரசிம்மரை அங்கேயே அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள்.மேலும், வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்க விழைந்த விசுவாமித்திரர், இந்த சோளிங்கர் மலைக்கு மேல் இருப்பத்து நான்கு நிமிடங்கள் தவம் புரியவே, வசிஷ்டர் அவரைத்தேடி வந்து பிரம்மரிஷி பட்டத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார் என்றும் இவ்வூரின் தலவரலாறு சொல்கிறது.

மலைக்கு மேல் அம்ருதவல்லித் தாயாரோடு யோக நரசிம்மராகத் திகழும் திருமால், அந்த மலையின் அடிவாரத்தில் பக்தவத்சலப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறார். மேலும் திருக்கடிகை மலைக்கு அருகிலேயே 350-அடி உயரத்தில் சிறிய மலை ஒன்று உள்ளது. அந்த மலையிலே யோக ஆஞ்சநேயர் யோகம் செய்யும் நிலையில் எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கிறார்

திருக்கடிகை யோக நரசிம்மப் பெருமாளை அக்காரக்கனி என்று ஆழ்வார்கள் அழைக்கிறார்கள்

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர்ப் பொலிகின்ற பொன்மலையைத்
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே

என்று பாடினார் திருமங்கை ஆழ்வார்

யோகத்தில் கண்மூடி இருக்கும் நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண்திறந்து பார்த்து அடியார்களுக்கு அருள்புரிவதாக ஐதிகம் உள்ளது. குறிப்பாக, கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தப் பெருமாளைத் தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். இறைவனின் திருமேனி அவயவங்களுக்குள் ஒரு போட்டி வந்ததாம். அவரது திருவடி, என்னிடம் தான் பக்தர்கள் சரணாகதி செய்கிறார்கள், நான்தான் பெரியவன் என்றதாம். 

திருக்கரம், நான்தான் சரண் அடைபவர்களுக்கு அபயம் அளிக்கிறேன், நானே பெரியவன் என்றதாம். இதுபோல் ஒவ்வொரு அவயவமும் போட்டி போட்ட நிலையில், திருமால் தீர்ப்பு தந்தாராம், என் கண்கள் கடாட்சம் புரிவதால் தான் பக்தன் வந்து சரணாகதியே செய்கிறான், எனவே கண்ணே மற்ற அவயவங்களை விட 
உயர்ந்தது என்று.

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

என்று ஆண்டாள் பாடியபடி நரசிம்மப் பெருமாளின் திருக்கண் நோக்குக்கு இலக்காகும் பேற்றினை இந்த ஆண்டு நாமும் பெறுவோமாக.
                    
ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ யோக நரசிம்மர் ஸ்வாமி திருவடிகளே சரணம். *எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்*

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...