திருக்கோவலூர் திவ்யதேசத்தில் எம்பெருமான் சங்கு சக்கரத்தை இடம் மாற்றி வைத்திருப்பது ஏன்... ?
வலது கையில் சங்கம் ஏந்தி இருப்பதன் காரணம் அவன் நம் அனைவருக்கும் ஞானத்தை வழங்குவதாக ஐதீகம்,
வலது கையில் சங்கம் வந்ததால் சக்கரம் இடம் மாறியது,
இன்னொரு கரமோ மூன்றாவது அடி எங்கே என மகாபலியாய் கேட்பதாக அமைகிறது, இதெல்லாம் ஐதீகம் சம்பந்தப்பட்டது.
வாமனனாய் வருகிறார்!
மகாபலியைப் பார்க்கிறார்!
சிறியன்தானே என்று
மூன்றடி மண் தருவதாய்
வரங்களும் கொடுக்கிறான்!
அசுரகுரு தடுத்தும்
அசுரன் அசரவில்லை!
அசுரனைக் கண்டு
பெருமான் அதிசயிக்கிறார்!
அசுரர்கள்
வார்த்தை தவறி விடுவார்கள்,
சும்மா கேட்டுப் பார்க்கலாம்,
என்றுதான் பரமன் கேட்டான்!!
அசுரனின் சம்மதம்
அரங்கனை ஆச்சரியப்படவைத்தது!!
தன் மாயத்தை ஆரம்பித்தார்!
வாமனனாய் இருந்தவர்
திருவிக்ரமனாய் மாறினார்!
இப்போதும் அசுரன் அசரவில்லை!!
அவனது பரம்பரையில்
நாராயண வாஞ்சை
அதிகம் உண்டல்லவா?
பிரகலாதனின் பேரன் அல்லவா
மகாபலிச் சக்கரவர்த்தி!!
வானத்தையும் மண்ணையும்
தாரை வார்த்துக்
கொடுத்த பின்னரும்
தன் தலையைக்
காட்டினான் அல்லவா அசுரன்!!
பெருமைப்பட்டுப் போனார்
பெருமான்!
ஆனந்தக் கூச்சலிட்டு
சில நாழிகைகள்
ஆடவும் செய்கிறார்!
ஆனந்தத்தின் உச்சியில்
சங்கு சக்கரங்களை
இடம் மாற்றி
அசத்துகிறார் பெருமான்!
ஞானோபதேசம் பெறுகிறான்
அசுரன் மகாபலி...!!!
No comments:
Post a Comment