Showing posts with label #vadalur vallalar #thaipusam #jothi darshan #cudalur #tamilnadu #hindu #india. Show all posts
Showing posts with label #vadalur vallalar #thaipusam #jothi darshan #cudalur #tamilnadu #hindu #india. Show all posts

Monday, January 22, 2024

வடலூர் வள்ளலார் பற்றி முழு வரலாறு பற்றிய குறிப்புகள்.. ஃ

தை பூசம் 
வள்ளலாரின் அற்புதங்கள் 
********************************
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அன்பு உருவம் பெற்று அருள் நிலை அடைந்து இந்த மண் உலகினில் உயிர்கள் எல்லாம் வருந்தும் வருத்தத்தைப் போக்க வும் அகத்தே கருத்து புறத்தே வெளுத்திரு க்கும் மக்கள் அனைவரையும் உலகத்தில் திருத்துவதற்காக இறைவனால் வருவிக் கவுற்றவர் திருவருட் பிரகாச வள்ளலார்.

வாழையடிவாழையாக வந்த திருக்கூட்ட மரபில் வந்தவர் வள்ளலார்.  அன்றைய தென்னாற்க்காடு மாவட்டம் இன்றைய கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மருதூ ர் என்ற ஊரில் 05-10-1823 ஆம் வருடம் தமிழ் சுபானு வருடம் புரட்டாசி மாதம் 21 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தில் பிறந்து முத்திரைப் பதிக்க வந்தவர் வள்ளலார். இவர் இயற்பெயர் இராமலிங்கம்.

பெற்றோர்கள்:

தந்தையார்     :    இராமையா பிள்ளை
தாயார்             :    சின்னம்மையார்

உடன் பிறந்தோர்  :    

சபாபதி                 -    அண்ணன்
சுந்தரம்மாள்        -    அக்கா
பரசுராமன்           -    அண்ணன்
உண்ணாமலை  -     அக்கா
ஐந்தாவது மகனாக வள்ளலார் பிறந்தார்.

வள்ளலார் வாழ்ந்த இடங்கள்:

மருதூர்            :    1823    -    1824
சென்னை        :    1825    -    1858
கருங்குழி         :    1858    -    1867
வடலூர்             :    1867    -    1870
மேட்டுக்குப்பம் :   1870    -    1874

வள்ளலார் இந்த உலகத்துக்கு வந்ததின் நோக்கம்:

மனிதன் மாமனிதனாக வாழ்ந்து மரணமி லாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பது தான் வள்ளலார் நோக்கம்.  அதற்காகத் தான் அகம் கருத்தவர்களையும் புறத்தில் வெளுக்கச் செய்யும் நோக்குடன் கருணை நிறைந்த திருவருட்பா பாடல்களையும் உரைநடைப் பகுதிகளையும்திருமுகங்கள் (கடிதங்கள்) மூலமும்  பேருபதேசம் மூலமா கவும் ஆன்ம நேயத்துடன் இந்த மனித குலத்தை வாழ்விக்க தேனினும் இனிய திருவருட்பாக்கள் அளித்து மனிதன் நீடுழி வாழ நமக்கு அருள் புரிந்தார்கள்.

வள்ளலார் கொள்கைகள்:

1. எத்துணையும் பேதமுறாது எல்லா உயிரும் தம் உயிர்போல் எண்ணும் உயர்ந்த நோக்கம் வேண்டும்.
2. ஜீவகாருண்யம் தான் மோட்ச வீட்டின் திறவுகோல்.
3. கடவுள் ஒருவரே: அவர் ஒளி வடிவானவர் (அருட்பெருஞ்ஜோதி).
4. ஜாதி சமய மதங்கள் எல்லாம் கடந்து ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமை உணர்வாளராக இருக்க வழி செய்ய வேண்டும்.
5. கண்மூடி வழக்கெல்லாம் மண்மூடி போக வேண்டும்.
6. தானம் தவம் இரண்டும் இரு கண்கள் அதன் நுட்பங்களை விளக்கினார்.
7. புலால் மருப்பு உயிர் ஓம்புதல் பசித்தவர்க ளுக்கு பசித்தவிர்த்தல் புரிய வேண்டும்.
8. கடவுள் பெயரால் பலியிடக் கூடாது.
9.  சிறு தெய்வ வழிபாடு கூடாது.
10. கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க வேண்டாம்.
11. மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்ய வேண்டாம்.
12.  இறந்தவர்களை புதைக்க வேண்டும்.  எரிக்கக் கூடாது.
13. கருமாதி திதி முதலிய சடங்குகள் செய்ய வேண்டாம்.
14. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

வள்ளலார் அருளிச் செய்தவைகள்:

தேனினும் இனிய திருவருட்பாக்கள் 5818 பாடல்களை அருளியுள்ளார்கள். இவை ஆறு திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளன.  

இவற்றில் முத்தாய்ப்பானது அருட் பெருஞ்ஜோதி அகவல்.
 உரை நடை நூல்கள்:
1. மனுமுறை கண்ட வாசகம்
2. ஜீவ காருண்ய ஒழுக்கம்  
3. வியாக்கியானங்கள்
4. மருத்துவக் குறிப்புகள்
5. உபதேசங்கள்
6. திருமுகங்கள் (கடிதங்கள்)
7. அழைப்பிதழ்கள் அறிவிப்புகள் கட்டளைகள்
8. விண்ணப்பங்கள்

வடலூரில் வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையங்கள்

1. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 1865
2. சத்திய தருமச்சாலை 1867
3. சத்திய ஞான சபை 1872
4. மேட்டுக்குப்பம் சித்தி வளாகம்

வள்ளலார் ஒரு பன்முக படைப்பாளி:

1.  நூலாசிரியர்
2.  உரை ஆசிரியர்
3.  பதிப்பாசிரியர்
4.  பத்திரிகை ஆசிரியர்
5.  போதகாசிரியர்
6.  ஞானாசிரியர்
7.  சித்த மருத்துவர்
8.  வியாக்கியான கர்த்தர்
9.   அருள் கவிஞர்
10. அருள் ஞானி

வள்ளலார் மணி ,மந்திரம்,  மருந்து இந்த மூன்றிலும் கைத்தேர்ந்தவர். இந்த தேகம் நீடிக்க வேண்டி பல்வேறு மருந்துகளை நமக்கு வள்ளலார் வழங்கியுள்ளார்.

485 வகையான மூலிகைகள் மற்றும் அதன் குணங்களை அட்டவணைப் படுத்தியுள்ளார்.

ஞான மூலிகைகள் என ஐந்து மூலிகைக ளை கூறியுள்ளார். அவை 1.கரிசலாங்க ண்ணி 2.தூதுவளை 3.வல்லாரை 4.முசுமுசுக்கை 5.பொன்னாங்கண்ணி 

இவையல்லாமல் ஐந்து சஞ்சீவி மூலிகை கள் அதன் குணம் பற்றி கூறியுள்ளார்.

இந்ததேகம் நீடிப்பதற்கு நித்திய கருமவிதிகள் கூறியுள்ளார்.
 
உபதேசங்கள் பேருபதேசங்கள் செய்துள்ளார்.

1.  ஆகாரம் அரை
2.  நித்திரை அரைக்கால்
3.  விந்து வீசம்
4.  பயம் பூஜ்ஜியம்

நான்கு விதமான ஒழுக்கங்கள் கூறியுள்ளர்
1.  இந்திரிய ஒழுக்கம்
2.  கரண ஒழுக்கம்
3.  ஜீவ ஒழுக்கம்
4.  ஆன்ம ஒழுக்கம்

மனிதன் துர்மரணம் அடைவதற்கான காரணத் தை வள்ளலார் கூறியுள்ளார்.
1.  அருந்துதல் (அதிகமான சாப்பாடு)
2.  பொருந்துதல் (அதிகப்படியான உடல் உறவு)

வள்ளலார் ஒரு வெள்ளாடை துறவி:

துறவியான வள்ளலார் பசித்த அனைவரு க் கும் சத்திய தருமச்சாலையை நிறுவி 152 ஆண்டுகளாக அவர் மூட்டிய அடுப்பு இன்று வரை எரிந்து வருகிறது. சத்திய ஞான சபை யில் வள்ளலார் ஏற்றிவைத்த ஜோதி தரிசனம் 148 ஆண்டுகளாக நடந்து வருகிறது.  சித்தி வளாகம் மேட்டுக்குப்பத் தில் வள்ளலார் திருக்கரங்களால் ஏற்றப் பட்ட திருவிளக்கு 146 ஆண்டுகளாக சுடர் விட்டு பிரகாசித்து கொண்டு வருகிறது.

" சாலை நடந்து வருகிறது, சங்கம் செயல் பட்டு வருகிறது, சபையில் ஜோதி தரிசனம் நடந்து வருகிறது, நானே சன்மார்க்கம் நடத்துகிறேன்
எனக்குள் தனித்து.." என்றார் வள்ளலார்..

அவர் சொல்படியே இன்றளவும் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது.  இந்த செயல் பாடு களே வள்ளலாரால் தான் நடைபெறு கிறது என்பதற்கு வேறு சான்று வேண்டா ம்.  “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” இந்த ஒற்றை வரி தான் வள்ளலார் வழிபாடு. உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறுகள் எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக் மகிழ்கசுத்த சன்மார்க்க சுக நிலைப் பெறுக உத்தமன் ஆகுக: ஓங்குக என்பதே வள்ளலார் திருவாக்கு.

கருங்குழி 1858 – 1867
*************************
வடலூரின் தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு சிற்றூர் கருங்குழி.  இந்த ஊரில் தான் வள்ளலார் தந்தையார் இராமையாப் பிள்ளை கிராம கணக்கராக பணி செய்தார். இந்த ஊரி ன் கிராம மணியக்காரர் வேங்கடா ரெட்டியார் இல்லத்தில் தான் வள்ளலார் 9 ஆண்டுகள் தங்கியிருந்தார். வேங்கடா ரெட்டியார் துணை வியார் பெயர் முத்தாலம்மை.

இங்கிருந்து செய்த அருள் செயல்கள்:
*****************************************
1. தண்ணீர் விளக்கெரித்த இடம்
2. சன்மார்க்க சங்கம் 1865ல் ஆரம்பிக்கப்பட்ட இடம்
3. சத்திய தருமச்சாலையை இங்கிருந்து தான் துவக்கினார்
4. செம்பருக்கை கற்களில் நடந்து வந்து இறைவன் வள்ளலாரை ஆட்கொண்டது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 1865: 
***********************************************
வள்ளலார் 1865-ம் ஆண்டு சன்மார்க்க சங்கத்தை ஆரம்பித்தார். சங்கத்திற்கென்று சில கொள்கை நெறிகளை வகுத்தார்.

சத்திய தருமசாலை:
**********************
40 அன்பர்கள் வடலூரில் வள்ளலாருக்கு 80 காணி நிலம் தானமாக தந்தார்கள். அந்த இட த்தில் தான் 23-05-1867 தமிழ் பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாள் சத்திய தருமச் சாலையை நிறுவினார்.  அவர் ஏற்றிவைத்த அடுப்பு 152 ஆண்டுகளாக அணையா அடுப்பா க எரிந்து கொண்டு வருகிறது.  பசித்து வருபவர்களுக்கு பசிப்பிணி நீக்கும் அட்சயப் பாத்திரமாக தருமச் சாலை விளங்குகிறது.

தருமச் சாலையின் சிறப்பு:
*****************************
ஒரு மனிதன் கருவறைத்; தொடங்கி கல்லறை வரை தொடரும் பெரும் பிணி பசிப்பிணி.  உலகத்தில் புண்ணியம் செய்ய விரும்புபவர் கள் 32 வகையான தானங்களை செய்கிறார் கள்.  இதில் தலையாய தானம் அன்னதானம்.

தருமம் என்றால் என்ன?
**************************
* ஒருவனுக்கு வேண்டியது உணவு மட்டும் அன்று
* உடுக்க உடை
* இருக்க இடம்
* உழுவதற்கு நிலம்
* செலவிற்குப் பணம்
* பொருந்துவதற்கு மனைவி

இத்தனையும் இருப்பவர்கள் இல்லாதவர்களு க்கு கொடுப்பதே தருமம் என்று பெயர்.

பசி வேதனை:
***************
நரக வேதனை ஜனன வேதனை மரண வேத னை இந்த மூன்று வேதனையும் கூடி முடிந்த வேதனையே பசிவேதனை. பசி இறைவனால் கொடுக்கப்பட்ட ஓர் உபகார கருவியாகும். இவைகளில் முக்கியமான து பசியே ஆகும். பசி தவிர மற்றவர்களால் வருந்துவோர் எல்லாவற்றையும் மறந்து உணவு தேட முற்ப டுவர். மனிதனின் உடலில் இருந்து உயிரைப் பிரிகின்ற விதம் 8 வகையாகும் அவை:

1.    பசி
2.    தாகம்
3.    இச்சை
4.    எளிமை
5.    பயம்
6.    ஆபத்து
7.    பிணி
8.    கொலை

அன்ன தருமம் செய்வதால் வரும் நன்மைகள்
*************************************************
1. சூலை குன்மம் குட்டம்  போன்ற நோய்கள் நீங்கும்.
2. பல நாட்கள் சந்ததியில்லாதவர்களுக்கு பசித்தவர்களுக்கு அன்னதானம் செய்வதை விரதமாக கொண்டவர்களானால் நல்ல அறிவுள்ள சந்ததி பிறக்கும்.
3. அற்ப வயது என்று அஞ்சி இறந்து போவத ற்கு விசாரப்படுபவர்கள் அன்னதானம் செய்தால்  ஆயுள் நீடிக்கும்.
4. பசித்த ஜீவர்களுக்கு உணவு கொடுப்பதை யே விரதமாகக் கொண்ட சம்சாரிகளுக்கு கோடை வெய்யில் வருத்தாது.  இயற்கை பேரிடர்களால் துன்பம் செய்விக்க மாட்டார் கள்.  விளை நிலத்தில் பிரயாசம் இன்றி விளைவு மென்மேலும் உண்டாகும் வியாபார த்தில் தடையில்லாத இலாபங்கள் கிடைக்கும்.  உத்தியோகத்தில் கெடுதி இல்லாத மேன்மை உண்டாகும்.ஊழ்வினையாலும் அஜாக்கிரதை யாலும் சத்தியமாக ஒரு துன்பமும் நேரிடாது.

வள்ளலார் பசித்தவர்களுக்கு உணவு கொடுக் கும் சம்சாரிகளுக்கு எத்தகைய நன்மைகள் கிடைக்கும் என்று மேற்கண்ட செய்திகள் மூலம் அறியலாம்.

சத்திய ஞான சபை:
*********************
வள்ளலார் பார்வதிபுரம் பகுதியைச் சார்ந்த நாற்பது அன்பர்கள் கொடுத்த 80 காணி நிலத்தில் சத்திய தருமச் சாலையைக் கட்டின பின்பு 1871ல் சத்திய ஞான சபையை கட்ட ஆரம்பித்து 1872ல் முடிக்கிறார்.

உலகத்தில் உள்ள அனைத்து சாதி சமய மக்கள் எல்லாம் பொதுவாக வழிபடக்கூ டிய ஓர் சபைதான் ஞான சபை.  எண் கோள வடிவம் தலைத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.  தெற்கு நோக்கி வாயிலை உடை யது ஞான சபையில் சிற்சபை பொற்சபை என இருப்பிரிவுகளை உள்ளே அமைத்துள்ளார்.

பன்னிருகால் மண்டபம் மற்றும் நாற்கால் மண்டபம் ஒன்றினுள் ஒன்றாக உள்ளன. நாற் கால் மண்டபம் நடுவே அருட்பெருஞ் ஜோதி இறைவன் உள்ளார்.

இந்த அருட் பெருஞ் ஜோதி இறைவனை மறைத்து கொண்டு ஏழுதிரைகள் வெவ்வேறு வண்ணங்களில் தொங்கவிடப்பட்டடுள்ளது.

திரை விளக்கம்:
******************
1. கருப்பு திரை    -    மாயா சக்தி
2. நீலத்திரை    -    கிரியா சக்தி
3. பச்சைத் திரை    -    பராசத்தி
4. சிவப்புத் திரை    -    இச்சா சக்தி
5. பொன்மைத் திரை  -    ஞான சக்தி
6. வெண்மைத் திரை  -    ஆதி சக்தி
7. கலப்புத் திரை    -    சிற்சக்தி

25-01-1872 ஆம் ஆண்டு தமிழ் பிரஜோற்பதி தை மாதம் 13-ந் தேதி சத்திய ஞான சபையில் முதல் ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.

சத்தி வளாகம்:
****************
வள்ளலார் மேட்டுக்குப்பத்திற்கு 1870-ல் சென்று 1874 வரை நான்கு ஆண்டுகள் உறை விடமாகக் கொண்டார். மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் தங்கி இருந்த இடத்திற்கு சித்தி வளாகம் என்று வள்ளலார் பெயர் இட்டார்.

சித்தி   -   வீடுபேறு
வளாகம்   -  இடம்.

வீடு பேறு அளிக்கும் இடம் சித்தி வளாகம் என்று பெயர். இந்த இடத்தில்தான் பல முக்கிய நிகழ்வுகள் நடந்த இடம் ஆகும்.

1. சமாதி கட்டளை அறிவித்தது.
2. சமரச வேத பாடசாலை நிறுவியது
3. சத்தி ஞான சபை நிறுவி முதல் ஜோதி தரிசனம் கட்டப்பட்டது.
4. ஒரே இரவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் எழுதப்பட்டது.
5. சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டது.
6. உள்ளே உள்ள விளக்கை வெளியே வைத்து வழிபடச் சொன்னது
7. ஞான சரியை பாடியது
8. முத்தேக சித்தி பெற்றது.

முத்தி என்பது முன்னூறு சாதனம். சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்று முத்தி சித்திகள் பற்றி வள்ளலார் விளக்குவார்.

சித்திகளின் வகைகள்:
*************************
1. கரும சித்தி
2. யோக சித்தி
3. ஞான சித்தி

முத்தி வகைகள்:
******************
1. பத முத்தி: பதவி பெற நம்மை தகுதியாக் குவது
2. பர முத்தி: இறைவனுடன் இரண்டறக்கலக்க நம்மை தகுதி செய்து கொள்வது.

அட்டமா சத்திகள்:
*******************
1. அணிமா    -    துரும்பை மேருவாக்குவது
2. மகிமா        -    மேருவை துரும்பாக்குவது
3. கரிமா        -    மேருவை ஒன்றும் இல்லாமல் செய்வது
4. இலகிமா    -    ஒன்றுமில்லாத இடத்தில் பல வகைகளை செய்தல்
5. பிராத்தி    -    வேண்டுவன செய்தல்
6.  ஈசத்துவம்    -    குளிகை வல்லபத்தால் எங்கும் செல்வது
7.  பிரகாமியம்    -    பரகாயப் பிரவேசம்
8.  வசித்துவம்    -    ஏழுவகை தோற்றங்களையும் தன் வசப்படுத்துவது.

கரும சித்தி:
*************
இறந்த உயிரை மூன்றே முக்கால் நாழிகை முதல் மூன்றே முக்கால் வருடத்திற்குள் எழுப்பு வது.

யோக சித்தி:
*************
இறந்த புதைத்த உடலை 12 வருடம் முதல் 108 வருடத்திற்குள் உடலை நாசம் அடையாமல் உயிர்ப்பித்தல் ஆற்றல் படைத்தவர் யோகசித் தர் ஆகும்.

ஞான சித்தர்:
**************
64 ஆயிரம் சித்திகளையும் தன் வசத்தால் நடத்துவது வள்ளலார் முத்தேக சித்தி பெற்றது

ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19-ஆம் நாள் ஆங்கி லம் 30-01-1874ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை புனர்பூசமும் பூசமும் கூடிய நன்நாளில் நள்ளி ரவு 12 மணிக்கு வள்ளலார் முத்தேக சித்தி பெற்றார். அருட்பெருஞ்ஜோதி இறைவனுடன் உடம்போடே ஒளி உடம்பு பெற்றார்.

முத்தேகம்:
***********
1. சுத்த தேகம்        -    ஒளி உடம்பு
2. பிரணவதேகம்   -   ஒலி உடம்பு
3. ஞான    தேகம்    -   அருள் உடம்பு

இதுகாறும் நாம் கூறிவந்தபடி ஒழுகி அருட்பெ ருஞ் ஜோதி ஆண்டவரை வழிபட்டு உய்யுங்க ள் என்று வாழ்த்தி தமது திரு அறைக்குள் நுழைந்து கதவைத் திருகாப்பிட்டுக் கொண்டு இரண்டரை நாழிகையில் சித்தி பெற்றார்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
சற்குரு நாதா சற்குரு நாதா சன்மார்க்க சங்கம் தழைக்க அருள் தாதா வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே. 

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

தை பூசம்* வடலூர் வள்ளலார் ஜோதி தரிசனம்

 தை பூசம்* வடலூர் வள்ளலார் ஜோதி தரிசனம்  
 
 *‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்”* என்று பாடிய வள்ளலார் மனித சமுதாயத்தை வாழ்விக்க வந்த *மகான் வள்ளலார்* என்று அழைக்கப்படும் *ராமலிங்க அடிகள்* 5.10.1823 அன்று கடலூர் மாவட்டம் மருதூர் என்ற ஊரில் பிறந்து 30.1.1874 அன்றைய நாளில் மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் மாளிகையில் தனது பூதவுடலை சோதியுடன் கலந்து மறைந்தார் என்பது வரலாறு.

எளிய குடும்பத்தில் பிறந்த அவரை உலகம் வள்ளலார் என்று வாஞ்சையுடன் அழைக்கும் என்றும் யாரும் அந்த தருணத்தில் எதிர்பார்க்கவில்லை. அவர் அவதாரகாலம் மனித சமூகத்துக்கு அளித்த மாபெரும் கருணைக்கொடை. அன்போடும் அறம் சார்ந்த உலக வாழ்க்கையை துய்க்க வேண்டும் என்று மாறுபட்ட வழிமுறையில், சித்தாந்தத்தில் மனித சமூகத்தை ஒழுங்குபடுத்த முனைந்த மிகப்பெரிய ஞானி. தமிழுலகம் கண்ட தவசீலர் அவர். மனித சமூகத்திற்கு அவர் அளித்த அறிவுக்கொடைகள் அளப்பரியது.

அறம் சார்ந்த வாழ்க்கை, வாழ்கின்றபோதுதான் மனிதப்பிறவி பெருமை அடைகிறது. அரசன் நீதி தவறினால் அறக்கடவுள் தண்டிக்கும். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். உயிர்களிடத்தில் வேற்றுமை இல்லை. அவற்றை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்று உலகிற்கு ஆணித்தரமாக எடுத்துரைத்தார் வள்ளலார்.

திருமூலர், திருவள்ளுவர், இயற்றிய நூல்களை தனது வழிக்காட்டி நூல்கள் என்று கருதிய அவர் உயிர் வதையை மிகவும் சாடினார். ஜீவ காருண்ய ஒழுக்கமில்லாமல் யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளை செய்கின்றவர்கள் கடவுளின் அன்புக்கு பாத்திரமாகமாட்டார்கள் என்றும், எனவே உயிர்க்கொலைகள் கூடாது என்றும் உலகிற்கு அறைகூவல் விடுத்தார்.

அன்று முதல் இன்று வரை பசிப்பிணியால் மக்கள் வாடுவது அனைவரும் அறிந்த ஒன்று. பசி வந்திட பத்தும் பறந்துபோம் என்று அவ்வைபெருமாட்டியும், உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்று சீத்தலைச்சாத்தனார் கூறிய மணிமேகலை செய்தியும் வள்ளலாரை மிகவும் வாட்டியது அனைவரும் உண்ண உணவு வேண்டும், பசிப்பிணி அகல வேண்டும் என்ற பொதுவுடமை சித்தாந்த கருத்தினை பாமரமக்களும் புரியும் வண்ணம்

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

என்று கூறினார். எனவே அவர் கண்ட லட்சியங்களை நிறைவு செய்ய, குறிப்பாக ஏழைகளுக்கு உணவளிக்க 1870-ம் ஆண்டு எரியூட்டப்பெற்ற சமையல் அடுப்பு இன்றும் அணையாமல் எரிந்து கோடானு கோடி மக்களின் பெரும் பசியை நீக்கிக்கொண்டிருக்கிறது. வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து மக்களுக்கு போதனைகள் செய்தார். நூல்கள் உரைகள் எழுதுதல் பத்திரிகை நடத்துதல், ஞான விளக்கம், சொற்பொழிவு போன்றவை செய்தல், சித்த மருத்துவம் மூலிகைகள் மருத்துவ குறிப்புகள் போன்றவற்றை அருளி சமூகத்தை வழி நடத்திய சீர்திருத்தவாதி.

திருவருட்பாவை மருட்பா என கூறி யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிட்டார். அப்போது வள்ளலார் நீதிமன்றம் வந்தார். அவரைப்பார்த்து ஆறுமுகநாவலர் உள்பட அனைவரும் எழுந்து நின்று வணங்கினர். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிகழ்வு அவருடைய ஞானமார்க்கத்திற்கு உள்ள அரிய எடுத்துக்காட்டு. இறுதியாக திருவருட்பா பாடல்கள் மூலமும், கடிதங்கள் மூலமும், உரைநடை விளக்கங்கள் மூலமும் சமரச சுத்த சன்மார்க்க கருத்துகளை வருங்காலத் தமிழ் சமுதாயத்திற்கு மேலே கண்ட கருத்துகளை சுருக்கமாக அளித்துள்ளார். அவைகளில் சில வருமாறு.

1. எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவித்து தாவரங்கள் முதலான அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுதான் மனிதநேயம். 2. கொல்லாமை நோன்பும், புலால் உண்ணாமையும் ஆன்ம சாதனைக்கு இன்றியமையாதவை. 3. உருவ வழிபாடு தேவையற்றது. அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ஒருவரே தெய்வமாவார். அவர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கிறார். 4. தவமுறையில் “ஓம் சிவாய நம” என்ற மந்திரத்தை ஜெபித்து வந்தால் நமக்குள் உறைந்து வாழும் ஆண்டவரை உச்சந்தலையில் ஒளிவடிவில் காணலாம். 5. தவநெருப்பினால் உடலின் குறைபாடுகளை எரிப்பதன் மூலம் எலும்பு, தசைகளாலான உடம்பு காற்றுடம்பாகும். காற்றுடம்பு பொன்னுடம்பாகும். பொன் உடம்பு ஒளி உடம்பாகும். அந்த ஒளி உடம்போடு இயற்கையுடன் கலந்து அருவமாகி எக்காலத்திலும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

இதுபோன்ற அறிய செய்திகளை அளித்துச்சென்ற வள்ளலார் தைப்பூசத்தன்று ஆன்மஜோதியில் மறைந்து கலந்து விட்டார். அப்பெருமகனாரின் கோட்பாடுகளை வாழ்க்கையில் பின்பற்றுவது அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் மட்டுமல்ல மனித சமூகம் உய்ய வழியும் அதுதான். அவருடைய திருநாமத்தை போற்றுவோம்

தை பூசம் என்றதுமே பெரும்பாலும் நமக்கு வள்ளல்பெருமானின் வடலூர்மட்டுமே நினைவுக்கு வரும்

தை பூசம் என்றதுமே பெரும்பாலும் நமக்கு வள்ளல்பெருமானின் வடலூர்மட்டுமே  நினைவுக்கு வரும்  .
"என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே "என இறவாமைக்கு வழிகூறிய வள்ளலாரை நினைவுறுத்தும் நாள் .இது .

இறவாமையை ஏன் ஒழிக்கவேண்டும் என்றால் அப்போதுதான் பிறவாமை கிடைக்கும் .

பிறவாமை கிடைக்க நம்மிடம் சேர்ந்திருக்கும் கர்ம வினைகள் தீரவேண்டும் .

பிறவாமை எனினில் ஆன்மா உற்பத்தி யாகும் இடத்தில் ஒடுக்குதல் வேண்டும் ,அதுவே தானே இறை ஆகுதல் .நிலை ஆகும் 

இதற்க்கு வேண்டிய சன்மார்க்க மார்க்கங்களை அருளிய வள்ளல் தான் அருட்பெருஞ்சோதி ராமலிங்கர் .அவர்கள் 
வடலூர் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் ஆண்டு வள்ளலார் அமைக்கத் தொடங்கினார்.  அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை‘ என்று பெயர் சூட்டினார்.

25.1.1872, தை மாதம் 13-ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது. அது அவரின் அருளால் இன்றுவரை தொடர்கிறது .

ஆயினும் தை பூசத்திருநாள் வடலூரில்  மட்டும் கொண்டாடப்படுவதில்லை அது முருகனுக்கும் உகந்த நாள் .

சைவ திருத்தலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது .

அவர்களைப்பற்றிய வரலாற்று செய்திகளையும் ,இதர செய்திகளையும் இங்கேகாணப்போகிறோம் .

சந்திரனை  அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் பெயர். 

தை என்ற சொல், திஷ்யம் என்ற சொல்லில் இருந்து வந்தது.எனப்படுகிரது  திஷ்யம் என்றால் பூச நட்சத்திரம். 

திஷ்யம்-தைஷ்யம்- தைசம்- தை என, மாற்றம் கொண்டது. 

தைசம் என்றால் பூச நட்சத்திரம் என, கதிரைவேற்பிள்ளையின் சங்கத்து அகராதி கூறுகிறது. 

பூச நட்சத்திரத்தில், முழு நிலா வரும் நாள் தான், தைப் பூசம். 

அந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான், தை மாதத்திற்கு அந்தப் பெயர் வந்தது. சங்க இலக்கியங்களில், 'தைஇயத் திங்கள்' என, தை மாதம் குறிப்பிடப்படுகிறது. தைசப்பூசத்தன்று, முழுநிலா நாளில், நிலத்தில் நீர் ஊறும் என்பது சங்க கால மக்கள் நம்பிக்கை.

 புஷ்யம் என்ற சொல்லுக்கு புஷ்டி என்று அர்த்தம். அந்த அடிப்படையில், தையில் நீர் வளம் பெருகி, உணவு உற்பத்தி அதிகரித்து நாடு நலமாக இருக்க வேண்டும் என, நோற்பது தான் தைந்நீராடல்.

சந்திரமான கணக்கின்படி, மார்கழிப் பவுர்ணமியில் விரதத்தை துவக்கி, தை பவுர்ணமியில் அதாவது தைசப் பூசத்தன்று முடிப்பது தைந்நீராடல். சங்க இலக்கியம் இதனை 'தவத் தைந்நீராடல்' என, குறிப்பிடுகிறது

இந்த விரதத்தை பெண்கள் தான் இருப்பர்.

    மேலும் தைப்பூசம் பற்றிய குறிப்பு, மகாவம்சம் என்ற இலங்கை வரலாறு பற்றிய நூலில் முதன்மையாக காணப்படுகிறது. புத்தர் வான்வழியாக இலங்கை சென்ற போது, இலங்கையின் பூர்வ குடிகளான யட்சர்கள், மாவலி கங்கையாற்றின் கரையில், தைப்பூச விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் என, மகாவம்சம் குறிப்பிடுகிறது. யட்சர்கள், மங்கோலிய இனத்தவர்கள். அவர்களின் தலைவன் குபேரன். மிகப் பழமையான, தர்ம சூத்திர நூலான ஆபஸ்தம்ப சூத்திரத்தில், தைப்பூசத்தன்று, குபேரனுக்கு பால் பொங்கல் படைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உள்ளது.அதைக்கொண்டு தைப்பூசம் கொண்டாடும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே  வந்திருக்கிறது என்பது தெரியவருகிறது .

தமிழ்  கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.

 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். 

தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. 

தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும்.

தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.

இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும்( பிரகஸ்பதி )குரு பகவான்,பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றதுஇது நிகழ்ந்த இடம் சிதம்பரம் .

அந்த சிதம்பரத்தில் தை  பூசம் சிறப்பாகக்க்கொண்டாடப்பெறுகிறது .

அன்று "திருப்பாவாடை" எனும் மிகுதியான திருவமுது விதவிதமாக செய்து இறைவனை ஆராதிப்பது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது .

அதற்க்கு தேவையான கட்டளைகளை தக்க சாசனங்கள்  மூலம் 

தரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது .சோழர்களின் கல்வெட்டுகளும் இது குறித்து உள்ளதாகக் கூறப்படுகிறது .

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

  இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும் “தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமைந்துள்ளது .

வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் : எவ்வாறு வழிபடுவது?வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் : எவ்வாறு வழிபடுவது?

வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் : எவ்வாறு வழிபடுவது?
கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூச தினத்தன்று நடக்கும் வள்ளலார் ஜோதி தரிசனத்தை காண தமிழகம் முழுவதிலும் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள். ஜோதி தரிசனத்தை நேரில் காண பலரும் வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பா
    
வள்ளலார் தர்ம ஞானசபையில் கண்ணாடிக்கு முன்னாள் உள்ள ஏழு வண்ண திரைகள் நீக்கப்பட்டு, நிலை கண்ணாடிக்கு பின் உள்ள ஜோதி தரிசனம் காட்டப்படும். இந்த ஆண்டு வடலூர் வள்ளலாரின் 153 வது ஜோதி தரிசன விழாவாக நடைபெற உள்ளது. இதனால் வழக்கத்தை விட அதிகமான மக்கள் இதனை காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் : எவ்வாறு வழிபடுவது?
வடலூர் வள்ளலார் வழிபாடு :
வடலூர் வள்ளலார் வழிபாடு : 
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது, உணவே மருந்து என உணவு ஒழுங்கு முறை கட்டுப்பாடு ஆகியவற்றை உலகிற்கு போதித்தவர் ராமலிங்க அடிகளார். யாரும் பசியால் இறக்கக் கூடாது என்பதற்காக சன்மார்க் சங்கத்தை நிறுவி 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் முறையை கொண்டு வந்தவர். அதனாலேயே இவரை அடியவர்கள் வள்ளலார் என அழைக்கின்றனர்.



இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் ஆன்மிக நெறி முறையை வகுத்தவர். வள்ளலார். இறைவனுக்கு உருவம் கிடையாது. அவர் ஜோதி வடிவானவர் என அனைவருக்கும் போதித்தவர். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் அவதரித்தார். வள்ளலார், இறைவனுடன் ஜோதியாக கலந்த தினம் தைப்பூச திருநாள்.
​திருவண்ணாமலை கிரிவலம் : ஆண்கள், பெண்கள் எப்படி செல்ல வேண்டும் தெரியுமா?​

தைப்பூச ஜோதி தரிசனம் :
தைப்பூச ஜோதி தரிசனம் : 

இதன் நினைவாக மாதந்தோறும் வள்ளலார் நிறுவிய வடலூர் தர்ம ஞான சபையில் பூசம் நட்சத்திரத்தன்று 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். இருந்தாலும் வள்ளலார் முக்தி அடைந்த தைப்பூச தினம் என்பதால், அன்றைய தினம் நடக்கும் ஜோதி தரிசனமே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளிலேயே உலகின் பல பகுதிகளில் இருந்தும் வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றும் பலரும் வடலூர் தலத்தில் கூடுகின்றனர். அன்றைய தினம் நாள் ஓயாமல் அன்னதானம் நடந்து கொண்டே இருக்கும்.



ஏழு திரை விலக்கி தரிசனம் :
ஏழு திரை விலக்கி தரிசனம் : 

இந்த ஆண்டு வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன விழா ஜனவரி 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டு, தைப்பூச ஜோதி தரிசனத்திற்கான கொடியேற்றப்படும். இதைத் தொடர்ந்து தைப்பூச திருநாளான ஜனவரி 25ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வடலூர் வள்ளலார் தர்ம ஞான சபையில் ஏழு திரைகள் விளக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்படும். காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 05.30 என ஆறுமுறை ஜோதி தரிசனம் காட்டப்படும். ஜனவரி 27ம் தேதி வரை இவ்விழா நடைபெறும்.


​தைப்பூசம் இன்றா? நாளையா? : தைப்பூச வழிபாட்டிற்கான சரியான நேரம் எது?​


எப்படி வழிபட வேண்டும் ?
எப்படி வழிபட வேண்டும் ?
விளக்கின் ஒளியின் வடிவமாக இறைவனை தரிசித்து மோட்சம் அடைந்தவர் வள்ளலார். இது அவருடைய 200 வது அவதார ஆண்டு என்பதால் இந்த ஆண்டு தைப்பூச விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் வீடுகளில் விளக்கேற்றி நாமும் ஜோதி வடிவமாக இறைவனை வழிபட வேண்டும். வள்ளலாருக்கு விருப்பமான தயிர்சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இப்படி விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் எப்போதும் வளம் பெருகும்.


​தைப்பூசத்தன்று நவகிரக பாதிப்புக்கள் குறைய சொல்ல வேண்டிய பாடல்​

என்ன தானம் வழங்க வேண்டும்?
தைப்பூச நாளில் முடிந்த அளவிற்கு அன்னதானம் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒருவருக்காவது அன்னதானம் வழங்குவது அவசியம். இப்படி வழங்குவதால் வீட்டில் அன்ன தரித்திரியம் என்பது எப்போதும் ஏற்படாது. அன்னதானம் கொடுக்க வசதி இல்லாதவர்கள் வீட்டிற்கு அருகில் ஏதாவது எறும்பு புற்று இருந்தால் அங்கு இனிப்பு கலந்த அரிசி அல்லது அரிசி மாவை தானமாக இடலாம். எத்தனை எறும்புகள் அந்த உணவை சாப்பிடுகிறதோ அத்தனை உயிர்களுக்கு அன்னதானம் வழங்கி பலன் நமக்கு கிடைக்கிறது. 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...