Showing posts with label #amman #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts
Showing posts with label #amman #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts

Thursday, November 30, 2023

புகழ்மிக்க நூற்றியெட்டு மாரியம்மனின் வரலாற்றையும், சிறப்பையும் இந்த நூலில் காண்போம்.

ஸ்ரீ முத்து மாரியம்மன் பராசக்தியின் அம்சம் என்பதைத் தெரிந்து கொண்டோம். அத்தகைய மாரியம்மன்களில் சிறப்புமிக்க. புகழ்மிக்க நூற்றியெட்டு மாரியம்மனின் வரலாற்றையும், சிறப்பையும் இந்த நூலில் காண்போம்.

108 அம்மன் பெயர்கள்
செல்லூர் ஏழை மாரியம்மன்
கீரந்தங்குடி மாரியம்மன
நிறைமதி ஸ்ரீவிஷமீடை மாரியம்மன்
கன்யாகுறிச்சி வடிவழகி அம்மன
கொங்கானோடை பாம்புவியம்மன்
எடையூர் – சங்கேந்தி பொன்வார்த்த அம்மன்
தேத்தாகுடி குளுந்தாளம்மன
அய்யம்பேட்டை பச்சைக்காளியம்மன்
பேராவூர் ஸ்ரீகாமாட்சியம்மன்
முடிகொண்டான் ஸ்ரீமாரியம்மன்
தென்குடி ஸ்ரீமாரியம்மன்
தஞ்சை புன்னை நல்லூர் ஸ்ரீமாரியம்மன்
சமயபுரம் ஸ்ரீமாரியம்மன்
பூவனூர் ஸ்ரீசாமுண்டேஸ்வரி அம்மன்
அம்பகரத்தூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன்
கருவாழக்கரை ஸ்ரீகாமாட்சி அம்மன்
கூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன்
பிட்டா புரத்தி அம்மன்
திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன்
வெள்ளை வேம்பு மாரியம்மன்
பாம்பாளம்மன் ஆலயம்
திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை அம்மன்
திருமீயச்சூர் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அம்மன்
விருகம்பாக்கம் சந்தோஷி மாதா அம்மன்
சென்னை ஸ்ரீ காளிகாம்பாள்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன்
மாங்காடு ஸ்ரீகாமாட்சி அம்மன்
திருவல்லிக்கேணி அருள்மிகு எல்லை அம்மன்
மயிலாப்பூர் அருள்மிகு கோலவிழி அம்மன்
தியாகராயநகர் முப்பாத்தம்மன்
திருவேற்காடு கருமாரி அம்மன்
கடும்பாடி மாரி சின்னம்மன்
கொன்ரையூர் மாரியம்மன்
தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன்
தொட்டியம் ஸ்ரீமதுரை காளியம்மன்
பேரூர் அங்காளம்மன்
வலங்கைமான் ஸ்ரீ சீதளாதேவியம்மன்
கருப்பூர் காவாத்தம்மன்
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்
மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி
நார்த்தாமலை மகாமாரியம்மன்
தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன்
சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன்
மாகாளிக்குடி உஜ்ஜயினி காளியம்மன்
இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன்
கட்டளை மாரியம்மன்
பரமக்குடி அருள்மிகு முத்தாலம்மன்
பட்டுக்கோட்டை ஸ்ரீ நாடியம்மன்
வேலூர் ஸ்ரீ செல்லியம்மன்
பூதங்குடி தீப்பாய்ந்த அம்மன்
அன்பில் மகமாயி அம்மன்
விஜயவாடா கனக துர்கேஸ்வரி அம்மன்
காரைக்குடி ஸ்ரீகொப்புடைய நாயகி அம்மன்
நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள்
தாயமங்கலம் அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன்
திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மன்
அரியாக்குறிச்சி கொல்லங்குடி ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன்
தில்லைக் காளி
நல்லூர் காளி
மடப்புரம் காளி
சென்னை ராஜகீழ்ப்பாக்கம் ஸ்ரீ பிரத்யங்கிராதேவி அம்மன்
தெத்துப்பட்டி ஸ்ரீஇராஜ காளியம்மன்
புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன்
வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன்
திருவக்கரை ஸ்ரீ வக்ர காளியம்மன்
மாசாணி அம்மன்
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன்
படவேட்டம்மன்
மத்தூர் மகிஷாசுரமர்த்தனி அம்மன்
பள்ளிக்கரனை ஆதிபராசக்தி
பூமாத்தம்மன்
பெரிய பாளையத்து அம்மன்
திருச்சி வெக்காளி அம்மன்
மதுக்கரை அருள்மிகு செல்லாண்டியம்மன்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்
கோயமுத்தூர் ஸ்ரீ கோனியம்மன்
ஈரோடு பெரிய மாரியம்மன்
சேலம் கோட்டை மாரியம்மன்
சேலம் ஸ்ரீராஜமாதங்கி அம்மன்
அருள்சக்திபுரம் அன்னை மூகாம்பிகை அம்மன்
கல்கத்தா காளி அம்மன்
ஆட்டுக்கால் பகவதி அம்மன்
செங்கன்னூர் ஸ்ரீபகவதி அம்மன்
சோட்டாணிக்கரை பகவதி அம்மன்
கொடுங்கல்லூர் பகவதியம்மன்
மண்டைக்காடு பகவதி அம்மன்
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்
வாழைபந்தல் அருள்மிகு பச்சையம்மன்
வேலூர் சைதாபுரி அம்மன்
பொள்ளாச்சி மாரியம்மன்
நெல்லுக்கடை மாரியம்மன்
கோடிப்புதூர் பத்ரகாளியம்மன்
அர்ச்சனாபுரம் நல்லதங்காள் அம்மன்
சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மன்
வல்லம் எகௌரியம்மன்
வெட்டுவானம் எல்லை அம்மன்
மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன்
சேந்தமங்கலம் தட்சிணகாளியம்மன்
கொல்லூர் ஸ்ரீ தாய் மூகாம்பிகை
கீவளூர் அஞ்சுவட்டத்தம்மன்
மாதானம் ஸ்ரீ முத்து மாரியம்மன்
மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக் கண்ணியம்மன்
குடவாசல் காளியம்மன்
மருதூர் ஸ்ரீ செல்லாயி அம்மன்
திருவாலங்காடு ஸ்ரீமகாமாரி அம்மன்
நமச்சிவாயபுரம் ஸ்ரீவீரமாகாளியம்மன்
குரங்கணி முத்துமாலை அம்மன். 

படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன்

Monday, October 9, 2023

சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் மிகவும் பிரபலமானது கன்னியாகுமரி

சப்த கன்னிகைகளுக்கும்
ஶ்ரீ கன்னியாகுமரி பகவதி 
அம்மனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
———————————-
சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் மிகவும் பிரபலமானது கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் இருக்கும் இடம் முன் காலத்தில் தானியங்கள் விளையும் காடாக இருந்தது. ஸ்ரீமூலம் திருநாள் மன்னர் காலத்தில் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரி பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. மன்னர் ஆட்சி நடந்தது. தாராசூரன் என்ற அரக்கன் தனக்கு நிகர் யாருமில்லை என்ற அகம்பாவத்தில் வாழ்ந்து வந்தான்.

அவன் சிவபெருமானை வழிபட்டு கடும் தவம் செய்து இறைவனை வணங்கி நிற்க சிவபெருமான் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அரக்கன் நான் கடலுக்கு அப்பால் கோட்டை கட்டி அங்கே தேவர்கள், முனிவர்கள் அனைவரும் என்னை வணங்கி பணிவிடை செய்து ஏவல் செய்ய வேண்டும். மேலும் எனக்கு தேவர்களாலும் மனிதர்களாலும் மற்றுமுள்ள விலங்குகளாலும் மரணம் ஏற்படக் கூடாது என்று ஈசனிடம் கனிந்து கேட்டுக் கொண்டான். அவன் கேட்டது போல் பகவான் அவனுக்கு வரங்களை அளித்தார். வரங்களைப் பெற்ற மமதையில் அன்னை உமாதேவியை மதிக்காமல் வணங்காமல் ஏளனமாக பேசினான்.

7 கன்னியர்கள் போரிட்டனர் :

இதைக் கண்ட தேவி கடும் கோபமுற்று சாபமிட்டாள். அன்னையின் சாபத்தை ஏளனமாக கருதிய அவன் கடும்கோபத்துடன் தேவர்கள், முனிவர்கள், நவக்கிரகங்கள் மற்றுமுள்ள அனைவரையும் கொடுமைகள் செய்து துன்புறுத்தி வந்தான். இந்த நிலையில் தாராசூரனின் கொடுமைகள் தாங்காமல் அன்னை பார்வதிதேவியிடம் அனைவரும் தங்கள் துன்பங்களை சொல்லி கண்கலங்கி நின்றனர். 

இதை கேட்ட உடன் அன்னை கொதித்து எழுந்து ஈஸ்வரனை வணங்கி தாரகனின் அக்கிரமங்களை எடுத்து சொல்லி இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு வேண்டினாள். இதைக் கேட்ட இறைவன், தேவி! இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஆணினாலும் அவர்களது படைகளாலும் என்னை கொல்லக்கூடாது என்ற வரத்தை பெற்றவன் அவன்.

ஆதலால் அவனை அழிப்பதற்கு என்னால் இயலாது. தேவி உன்னுடைய அம்சத்தில் 7 கன்னியர்களை உருவாக்கி அனுப்புவோம். இதைக் கேட்ட தேவி சர்வசக்தியுமான 7 கன்னியர்களை பிறப்பித்து அவர்களுக்கு தகுந்த ஆயுதங்களையும் கொடுத்து அனுப்பினாள். அவர்கள் 7 பேரும் பூலோகம் வந்து தாராசூரனின் படைகளோடு போர் செய்தனர். கடுமையான போர் நடைபெற்ற போதிலும் தாரகனின் படைகளை அழிக்க முடியவில்லை. தாரகனின் படைகள் தரையில் சாய்ந்தாலும் அடுத்த நிமிடம் மீண்டும் உயிர்பெற்று எதிர்த்து நின்றனர்.

தவக்கோலத்தில் தேவி :

தெய்வ கன்னியர்களால் தாராசூரனை அழிக்க முடியவில்லை. இதைக் கண்ட தெய்வ கன்னியர்கள் 7 பேரும் துயருற்று என்ன செய்வது? என்று தடுமாறி நின்றனர். தேவலோகம் சென்றாலும் அவமானம் என்று நினைத்து அவர்கள் பூலோகத்தில் சோட்டாணிக் கரை, கொடுங்கல்லூர், செங்கண்ணூர், மண்டைக்காடு ஆகிய பல இடங்களில் கோவில் கொண்டனர். தெய்வ கன்னியாகிய பராசக்தியின் அம்சமான குமரி பகவதி தேவலோகம் செல்ல மறுத்து கடலின் அருகில் இருக்கும் சீவலப்பாறை என்னும் இடத்தில் வந்து மறைவாக பல வருடங்களாக கடும் தவக்கோலத்தில் இருந்து வந்தாள். வருடங்கள் பல கடந்தது.

வாணாசூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்கு தக்க தருணங்களை எதிர்பார்த்து நின்றாள். குமரியை அடுத்த பக்கத்து ஊரான கடற்கரையை அடுத்த வாவத்துறை என்ற ஊரை சேர்ந்த மீனவ தாயார் ஒருவர் அந்த சீவிலிப் பாறைக்கு சென்ற போது அந்த தாயாருக்கு பகவதி அன்னை சிறுமியாக காட்சி கொடுத்தாள். 

தேவி அந்த அம்மாளை பார்த்து அம்மா! என்னை உன் பெட்டியில் எடுத்துக் கொண்டு கரையில் விடுவாயா? என்று கேட்டாள். அதற்கு அந்த தாயார், நான் உன்னை கூடையில் வைத்து எடுத்து செல்கிறேன். இப்போது ஆலயம் இருக்கும் இடமானது அப்போது பருத்தி விளையும் இடமாக இருந்தது. அந்த இடத்தில் இருப்பதற்கு எண்ணம் கொண்ட தேவி சுமையை உண்டாக்கினாள். தான் சுமந்து வந்த கூடையை அந்த இடத்தில் இறக்கி வைத்து குழந்தையை இறக்கினாள். தான் சுமந்து வந்தது குழந்தையல்ல தேவி என்பதை புரிந்து கொண்ட பெரியவள் அன்னையை வணங்கி நின்றாள்.

சூரன் வதம் :

அன்னை அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டாள். குமரி பகவதி மறைந்த பருத்தி விளையானது. தேவி அந்த விளையின் உரிமையாளரான சான்றோருக்கு தான் வந்திருப்பதை காட்சி கொடுத்தாள். அவரால் அன்னைக்கு பணிவிடை செய்யப்பட்டு அங்கு அன்னை கோவில் கொண்டாள். 

வாணாசூரன் முதலானவர்களை வதம் செய்வதற்கு அதற்கு இசைந்த புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் நவமி வரை உள்ள 9 நாட்களில் முன் பகவானால் வதம் செய்வதற்கு கொடுத்து அனுப்பிய ஆயுதங்களை பூஜையில் வைத்து விஜயதசமி அன்று பூஜை செய்த பின் தனக்கு துணையாக அம்பும் வில்லும் சுமப்பதற்கு சான்றோர்களின் பரிவாரங்களும் நாதஸ்வர இசை முழங்க மேளதாளங்களுடன் அன்னை ஆண் போல் உடை அணிந்து குதிரை மேலேறி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஆக்ரோசத்துடன் மகாதானபுரம் கிராமத்தின் அருகில் வைத்து கொடியவன் சூரனிடம் போர் புரிந்து அவனையும் அவனது ஆய பலங்களையும் சில நிமிடங்களில் அழித்து வெற்றிக்கொடி புனைந்து கடலில் நீராடி முன் போலவே வந்து நின்று தவக்கோலம் கொண்டாள். 

மேலும் சீவிலிப் பாறையில் தேவி சின்னக் குழந்தையாக உருவத்தில் வாழ்ந்த போது தவம் செய்து ஓடி ஆடி விளையாடிய அம்பிகையின் கால் தடம் உள்ளது. அந்த கால் தடம் விவேகானந்தா கமிட்டியினரால் விளக்கேற்றி பூஜைகள் செய்யப்பட்ட் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சூரன் வதம் முடிந்து வாகனத்தில் வெற்றி நடை போட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறாள்.

Sunday, August 6, 2023

பொள்ளாச்சி ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு...!

ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு...!
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் உள்ள மிக பிரமாண்டமாண ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 

ஆனை  மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் ஆனந்தமான துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார்.

"மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார்.  உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில் விட்டு விடு. இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்'''.

மன்னர் சரி என்றவாறு துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைக்கத்துவங்கினார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி  சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார்.

மரம் பெரியதாகி பழம் விடும் நேரம் வந்ததும் அரண்மணைக் காவலாளிகள் வைத்து மாங்கனியை யாரும் பறிக்ககூடாது. அப்படி சாப்பிட்டால் மரண தண்டனை  என அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட துறவி மன்னரிடம் வந்து ''மன்னா நீங்கள் அந்த மாங்கனி கொட்டையை நான் சொன்னதை கேளாமல் மரமாக்கி விட்டீர்கள். நீங்கள் நினைப்பது போல் அந்த மரத்தில் ஓரே பழம் மட்டுமே பழுக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது. அதை தெய்வீகப் பெண்மணி ஒருவரே சாப்பிடுவார். நீங்கள் சாப்பிட நினைத்தால் இந்த தேசம் அழிவுறும். என உரைத்து கிளம்பினார் துறவி. ஆனால் மன்னன் துறவி கூறியதை அலட்சியம் செய்தான்.

தாரகன் என்பவர் வியாபார விஷயமாக தன்மகள் தாரணி உடன் ஆனைமலைக்கு வந்திருந்தார். அப்போது அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தோழிகளுடன் தாரணி நந்தவனத்தில் உள்ள ஆற்றில் குளிக்கச்சென்றார். தாரணி நீராடும்போது அந்த மாமரத்தில் இருந்து தன் அருகே விழுந்த மாங்கனியை எடுத்து  சாப்பிட்டார். இதனை அறிந்த மற்ற பெண்கள், மன்னனின் தண்டனை விவரத்தை எடுத்து கூறினர்.

அதற்குள் விஷயம் அறிந்த மன்னன் காவலாளிகளை விட்டு தாரணியை கைது செய்து, குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனையை அறிவித்தான். ஒரு  மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என் ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் என்று சூளூரைத்து உயிர் பிரிந்தாள். அவள் உடல் மயானம் எடுத்துச் செல்லப்பட்டது. அவள் உருவத்தைப்போலவே மண்ணால் செய்து வைத்து, மாங்கனிக்காக இறந்த கன்னியை மாங்கன்னியாக மாசாணி அம்மனாக  தொழுதுசென்றார்கள் மக்கள்.

மாசாணி அம்மனாக சிறிதளவில் அவர் சமாதியில் துவங்கிய வழிபாடு அந்த ஆத்மா நம்பி வரும் பக்தர்களை காத்து அருள்பாலிக்கிறது. பல்வேறு  அவதாரங்களில் ஈஸ்வரி அவதாரம் எடுத்து பல அம்மனாக அற்புதங்களை தந்திருக்கிறார் மாசாணி அம்மன். இவர் உக்கிர தெய்வம் ஆவார்.

இங்கு வரும் பக்தர்கள், மாசாணி அம்மனிடம் குறைகளை எழுதி  பூசாரியிடம் பக்தர்கள் தர அதை அம்மன் நிவர்த்தி செய்கிறார். பில்லி சூனியம் போன்ற அமானூஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க உக்கிரதெய்வமான மாசாணி அம்மன வணங்கினால் நலம் பயக்கும் என்பது நம்பிக்கையாகும்.

Thursday, August 3, 2023

🙏🏼🌷ஆடியில் கூழ் வார்த்தலுக்கும் அம்மனுக்கும் என்ன தொடர்பு?

🌷🙏🏼🌷ஆடியில் கூழ் வார்த்தலுக்கும் அம்மனுக்கும் என்ன தொடர்பு?
ஆடி மாதம் வந்து விட்டால் போதும், சின்னஞ்சிறிய அம்மன் கோயிலில் கூட கூழ் வார்த்தல் என்பது விமரிசையாக நடக்கும். 
கூழ் வார்த்தலுக்கும், அம்மனுக்கும் என்ன தொடர்பு? 

ஜமதக்னி முனிவரும் அவர் மனைவியான ரேணுகா தேவியும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர். தன்னுவன், அனுவன், விஸ்வாவசு, பரசுராமன் என நால்வர் பிறந்தார்கள். அதன்பின்...ஒருசமயம், கார்த்தவீரியனின் பிள்ளைகள் ஜமதக்னி முனிவரிடம் பகை கொண்டு அவரைக் கொன்று விட்டார்கள். கணவரை இழந்த ரேணுகா தேவி உயிர் வாழ விரும்பாமல் தீயில் இறங்கினாள். 

அப்போது, இந்திரன் வ ருணனை அழைத்து மழை பொழியச் செய்தான். தீ அணைந்தது. ஆனால், அதற்குள் ரேணுகாதேவியின் ஆடைகள் எல்லாம் எரிந்து போய், உடலில் தீக்கொப்புளங்கள் உண்டாயின. அவள் ஆடை இல்லாதநிலையில் காட்டில் இருந்த வேப்பிலையைப் பறித்து ஆடை போல் அணிந்து கொண்டாள். இதுவே, அம்மனுக்கு வேப்பிலை ஆடை அணியும் வழக்கம் உருவானவரலாறு. வேப்பிலை ஆடையில் புறப்பட்ட ரேணுகா தேவி, காட்டில் வாழ்ந்தவர்களிடம், ‘பசிக்கிறது’ என உணவு கேட்டாள்.அங்கிருந்தவர்கள் சற்று விலகி நின்று, “அம்மா! நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள். நீயோ, அந்தணப் பெண்ணைப் போலத் தோற்றமளிக்கிறாய்.

உனக்கு எங்கள் உணவைத் தரக் கூடாது. அதற்குப் பதிலாக பச்சரிசி மாவு, வெல்லம், பானகம், இளநீர் இவற்றைப் பெற்றுக் கொள்” என்று அளித்தனர். இந்த பச்சரிசிமாவையே திருநெல்வேலி மாவட்டகிராமங்களில் ‘துள்ளு மாவு’ என்கிறார்கள். 
உரலில் இட்டு இடிக்கும் போது துள்ளிக்குதிப்பதால் இந்தப் பெயர் வந்தது. அரிசிமாவு கொண்டு ரேணுகா கூழ் காய்ச்சிக் குடித்து பசியாறினாள்.

 அவர்கள் தந்ததைக் கொண்டு பசி யாறிக் கொண்ட ரேணுகாதேவி, சலவைத் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கு வந்து அவர்கள் அளித்த ஆடைகளை அணிந்து கொண்டாள்.அப்÷ பாது ரேணுகாதேவியின் மனதில் மீண்டும் துயரம் எழுந்தது. கணவரை எண்ணிக் கண்ணீர் சிந்தினாள்.சிவபெருமான் அவளுக்கு காட்சியளித்து,“ரேணுகாதேவி! சக்தியின் அம்சம் நீ! மனித குலத்தை தீமையில் இருந்து காப்பாற்றும் சக்தியை உனக்கு அளிக்கிறேன்.

 நீ கொண்ட கொப்புளங்கள், மக்களுக்கு அம்மைக் கொப்புளங்களாக ஆகும். நீ அணிந்த வேப்பிலை ஆடையே, அந்த துன்பத்தை நீக்கும் மருந்தாக அமையும். நீ உணவாகக் கொண்ட பானகம், இளநீர், பச்சரிசி மாவு, வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் நைவேத்யமாகப் படைப்பார்கள். உன்னை நாடி வழிபடுவோரின் துயரத்தை நீக்கு!” என்று வரம் அளித்து மறைந்தார். 

அதன் பின், ரேணுகா தேவி முத்துமாரி எனப் பெயர் பெற்றாள்.இந்த நிகழ்ச்சி மழைக்காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தில் நடந்தது. அதன் காரணமாகவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் கூழ் வார்த்தலும், பெண்கள் வேப்பிலை ஆடை கட்டி வலம் வரும் வேண்டுதலும் நடக்கின்றன. ஆகாய மழையும், அருள் மழையும் பொழியுமாறு அன்னை மாரியை, புனிதமான ஆடி மாதத்தில் வேண்டுகோள்.
வாழ்க வளமுடன் !!

Sunday, July 30, 2023

*சமயபுரம் மாரியம்மனின் 7 சகோதரிகள்* 🌹



*சமயபுரம் மாரியம்மனின் 7 சகோதரிகள்* 🌹
 தமிழக அம்மன் கோவில்களில் பெரும்பேறும் தலைமைப் பண்பும் கொண்டு அருளாட்சி நடத்தும் பெருமை சமயபுரம் அம்பாளுக்கு மட்டுமே உண்டு என்பதை உணரலாம். இத்தகைய நிலையில் பெருமக்கள் வழக்கின்படி சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகள் இருப்பதாக கூறுகின்றனர். அவர்களை பற்றிச் சுருக்கமாக பார்ப்போம்... 

1.சமயபுரம் முத்துமாரியம்மன்

திருச்சி மாவட்டம் சமயபுரம் ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும் தொடர்ந்து அங்கு அம்மன் கோவில் உருவானதாகவும் கூறப்படுகிறது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள்.

2.அன்பில் மாரியம்மன்

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு உட்பட்ட உபகோவில் ஆகும். மகா மாரியம்மன் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கோவிலாக விளங்குகிறது. இக்கோவிலில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வரும்பொழுது வேப்பமரத்தடியில் அம்மன் தங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இத்திருக்கோவிலை முதலாங்க சக்கரவர்த்தி கட்டியதாகக் கூறப்படுகிறது. சமயபுரம், நார்த்தான் மலை, வீரசிங்க பேட்டை, கண்ணனூர், புன்னை நல்லூர், திருவேற்காடு, அன்பில் மாரியம்மன் ஆகிய சிறப்பு மிக்க அம்மன் தலங்களில் அன்பில் மாரியம்மன் மற்ற அனைத்து அம்மனுக்கும் மூத்தவள் என்ற கருத்தும் உண்டு. அன்பில் மாரியம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. மற்ற கோவில் களில் அம்மனுக்கு குழந்தை கிடை யாது. நண்ப கல் 12.00 மணியளவில் கண்குறைபாடு உள்ளவர்களுக்கு பூசாரியால் பச்சிலை மூலிகைகளால் ஆன சாறு கண்களில் பிழிந்து விடப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கண் நோயில் இருந்து குணமடைவதாக நம்பப்படுகிறது. 

3.புன்னை நல்லூர் முத்துமாரியம்மன்

தஞ்சைக்குக் கிழக்கே உள்ள இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலவரான அம்பாளுக்கு திருமுழுக்கு செய்யப்படுவதில்லை தைலக்காப்பு சாற்றப்படுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு திருமுழுக்கு நடைபெறும். அம்மையால் பாதிக்கப்பட்ட வர்கள் பிராத்தனைக்காக இங்குத் தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர். தஞ்சை ஆண்ட சோழ பேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எண்வகைச் சக்திகளைக் காவல் தெய்வமாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்குக் கீழ்ப்புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னை நல்லூர் மாரியம்மன் என்று "சோழ சம்பு" என்னும் நூல் கூறுகிறது. 

4.நார்த்தமலை முத்துமாரியம்மன்

முத்துமாரியம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தமலை என்கிற ஊரில் அமைந்துள்ளது. நார்த்தமலை கோவில் மேலமலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கர் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை என 9 மலைகள் சூழ அமைந்துள்ளது. இந்த நார்த்தமலை முத்துமாரியம்மன் சந்நிதியில் வடக்குபுறம் அமைக்கப்பட்டிருக்கும் முருகன் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பங்குனி மாதத்தில் இக்கோவிலில் நடக்கும் பங்குனி திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுகின்றனர். நீண்ட காலமாக உடலில் பல வியாதிகள் ஏற்பட்டு அவதிபடுபவர்கள் இக்கோயிலில் "அக்னி" காவடி எடுத்து வழிபட நோய்கள் தீருவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழிந்தும் குழந்தை பேறில்லாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து கரும்பு கொண்டு தொட்டில் செய்து வைத்து அம்பாளை வழிபடுவதால் நிச்சயம் குழந்தைப் பாக்கியம் கிடைப்பதாகக் கூறுகின்றனர். தல புராணங்களின்படி இலங்கையில் ராவணனுடனான யுத்தத்தின் போது ராம - லட்சுமணர் மற்றும் காயம்பட்ட வானர வீரர்க ளைக் குணமாக்கும் பொருட்டு, இமயத்தில் இருந்து ஆகாய மார்க்க மாக சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கி வந்து கொண்டிருந்த போது, அதிலிருந்து கீழே விழுந்த பாறைகளே இங்கிருக்கும் மலைகள் எனக் கருதப்படுகிறது. 


5.தென்னலூர் முத்துமாரியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமே "திருநல்லூர்" என அழைக்கப்படும் "தென்னலூர்" ஆகும். இந்த கிராமத்தின் அதிதேவதை "முத்துமாரியம்மன்" ஆகும். இந்த அம்மன் தானாக உதித்த சுயம்புவடிவான காவல்தெய்வம் ஆகும். மிக எளிமையாக கூரையிலே குடிகொண்ட குலதெய்வம் இந்த "முத்துமாரியம்மன்" ஆகும். தென்னலூர் முத்துமாரியம்மன் தலவரலாறு கர்ணபரம்பரை கதைகளாக (செவிவழிக் கதைகள்) அறியப்படுகின்றது.

இதற்கென கல்வெட்டு குறிப்புகளோ, ஓலைசுவடிக் குறிப்புகளோ, பட்டயங்களோ இல்லை எனலாம். 

6.கொன்னையூர் முத்துமாரியம்மன்

தற்போதைய புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகில் உள்ள கிராமம் கொன்னையூர். இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் பொன்னமராவதியில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது. மையப்பகுதியில் கோவில் கொண்டு, நாலாத் திசையிலும் உள்ள மக்களையும், காடு கரைகளையும் கால்நடைகளையும் காத்து வருகிறாள் முத்து மாரியம்மன். 

7.வீரசிங்கம்பேட்டை முத்துமாரியம்மன்

திருவையாற்றிற்கு அருகில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் கிராமம் வீரசிங்கம்பேட்டை. வீர சோழன் என்னும் மன்னனால் ஆளப்பட்ட வீரணன்சோலை என்ற இடமே நாளடை வில் வீரசிங்கம்பேட்டை ஆகியுள்ளது. சுற்றிலும் திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருப்பழனம் ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. பொதுவாக மாரியம்மனின் அக்காள், தங்கை, ஏழு பேர் என்பர். அவர்களில் கடைசி தங்கை வீரசிங்கம்பேட்டையில் வீற்றிருப்பவள் இந்த இள மாரியம்மன் என்பது தல வரலாறு. மேற்குறிப்பிட்ட செய்திகளால் மாரியம்மன் வழிபாட்டில் தமிழ்மக்கள் ஒன்றியிருப்பதும் அருளாட்சியால் ஈர்க்கப்பட்டு பக்தி பரவசத்தில் இருப்பதும் அம்மன் மீது மக்கள் கொண்டுள்ள ஈடுபாடும் மாரியம்மனின் அருஞ்செயல்களும் வெளிப்பட்டு நிற்கின்றன. அந்தந்த பகுதி மாரியம்மன் பூச்சொரிதல் விழாவின் போதும் திருவிழாக்காலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியும் காவடிதூக்கியும் அலகு குத்தியும் பெருமை செய்கின்றனர். தமிழகத்தில் அம்மன், அம்பாள் என்று சொல்வதைக் கர்நாடகத்தில் சாமுண்டி, கேரளாவில் பகவதி,வங்காளத்தில் காளி, உத்தரபிரதேசத்தில் விந்தியாவா கினி, அசாமில் காமாக்யா, காஷ்மீரில் ஷீர்பவானி, மராட்டி யத்தில் துலஜா பவானி, பஞ்சாப்பில் ஜவாலாமுகி, குஜராத்தில் அம்பாஜி என்று அழைக்கின்றனர். 🙏🌹

Saturday, July 22, 2023

ஆடி மாதம் என பெயர் வந்ததற்கான 👉 காரணம் தெரியுமா

🪻ஆடி.. பெயர் வந்தது ஏன்?
🙏 ஆடி மாதம் என பெயர் வந்ததற்கான 👉 காரணம் தெரியுமா?

💫 தமிழ் மாதத்தின் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. அதன்படி, அம்மனுக்கு உகந்ததும், விழாக்களுக்கும் பஞ்சமில்லாத ஆடிமாதத்திற்கு என தனிச் சிறப்பு உண்டு. அப்படி சிறப்பு வாய்ந்த இந்த மாதத்திற்கு ஆடி என பெயர் வந்தது ஏன்? என்று தெரிந்து கொள்வோமா? 

💫 பெளர்ணமியன்று சந்திரன் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறாரோ அந்த நட்சத்திரமே மாதங்களின் பெயராக அமைந்திருக்கும். சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாகத்திலும், ஆனியில் அனுஷத்திலும் பெளர்ணமி அமையும். ஆடியில் ஆஷாட நட்சத்திரத்தில் பெளர்ணமி இருக்கும். ஆஷாடத்தில் இரண்டு உண்டு. முதலில் வருவது பூர்வ ஆஷாடம். பின்னர் வருவது உத்தர ஆஷாடம். பூர்வ ஆஷாடம் என்பது பூராடம் என்றும், உத்தர ஆஷாடம் உத்திராடம் என்றும் சொல்லப்படுகிறது. 

💫 உத்திர ஆஷாடத்தில் பெளர்ணமி வரும் ஆடி மாதத்தை வடமொழியில் ஆஷாடீ என்று கூறப்பட்டது. அதுவே தமிழில் ஆடி என்று மருவி விட்டது. இவ்வாறு ஆடி மாதம் பிறந்ததாகச் சொல்வர்.

புராணக் கதை :

💫 ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர். ஒரு சமயம் பார்வதி தேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள்.

💫 அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க முயன்றார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.

💫 அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான், என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப் போல உருமாறி வந்தது தவறு. எனவே, பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.

💫 அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிடைக்கும். சக்தியை வழிபடுவது போல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார்.

💫 ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை. இவ்வாறு ஆடி என்ற பெயர் வந்தது என்பதை புராணக் கதை கூறுகிறது.

Friday, July 21, 2023

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம்


தமிழ் மாதமான ஆடியில் வெள்ளிக்கிழமைகள் பல்வேறு இந்து தெய்வங்களை, குறிப்பாக சக்தி தேவியின் அவதாரங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி நாகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பூஜைகள் செய்வதற்கும் உகந்தது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் அம்மன் பக்தர்களுக்கு மிகுந்த மத முக்கியத்துவம் வாய்ந்தது. அக்கம் பக்கத்து பெண்களும் நண்பர்களும் வெள்ளிக்கிழமைகளில் சந்தித்து பூஜைகள் செய்து தாம்பூலம் பரிமாறிக்கொள்வார்கள்.

லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட வரலக்ஷ்மி பூஜை ஒரு முக்கியமான சடங்கு ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று செய்யப்படுகிறது. பக்தி கொண்ட இந்துக்கள் வெள்ளிக்கிழமைகளில் கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். ஆடி வெள்ளி என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் ஏராளமான சடங்குகள் செய்யப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் இந்த மாதத்தில் பாம்புகளை வணங்குகிறார்கள். பாம்பு சிலைகளுக்கு பால், சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை வழங்குகின்றனர்.

 தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம்

Wednesday, July 19, 2023

அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.

அங்காளம்மன் கையில் கத்தி ஏன் ?
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில்  அரி ய தகவல்...அறிந்து கொள்வோம்
1. அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும், அன்னைக்கு மேல்மலையனூர் ஆலயமே தலைமை ஆலயமாகும்.

2. மூலவர் சுயம்பு புற்று மண்ணால் உருவானவள். அங்காளம்மன் நான்கு திருக்கரங்களுடன் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறாள்.

3. நான்கு காரங்களில் உடுக்கை, சூலம், கிண்ணம், கத்தி உள்ளது. தலைக்கு பின்னால் தீப்பிளம்பு உள்ளது.

4. இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு, காலுக்கு அடியில் கபாலம் உள்ளது. ஐந்து தலை நாகத்தின் கீழ் அன்னை அருளாட்சி புரிகிறாள்.

5. கோயிலுக்கு நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. பக்தர்கள் வடக்கு நுழை வாயிலை பிரதான நுழைவு வாயிலாக பயன்படுத்தி வருகின்றனர்.

6. கோபால விநாயகர் தென்பகுதியில் அமைந்துள்ள பெரியாயி சன்னதி கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு மற்றும் ஏரிக்ரையில் அமர்ந்துள்ள துர்கையம்மன் ஆலயம் போன்றவைகளாகும்.

7. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அங்காளம்மன் புற்றாக அமர்ந்ததாக நம்பப்படுகிறது. இப்புற்றானது அளவில் பெரியதாக உள்ளது.

8. இக்கோவிலில் இருக்கால பூஜை நடைபெறுகிறது. அப்படி நடைபெறும் போது அவ்வபோது இப்புற்றில் அம்மன் வடிவமாக நாகத்தை  பலர் பார்த்ததாக சொல்லப்படுகிறது.

9. பூஜையின் போது சக்தி வாய்ந்த புற்று மண்னை பூஜை தண்ணீரில் கலந்து பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்.

10. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூஜையில் கலந்துக் கொண்டு புற்றுமண் கலந்த நீரை அருந்தினால் புத்ரபாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது.

11. திருக்கோயிலின் தெற்கு பகுதியில் மலாந்து படுத்து பெரிய உருவமாக பெரியாயி அருள் புரிகிறாள்.

12. பெரியாயி அம்மனை வழிபடும் பக்தர்களுக்கு தீய சக்திகள் விலகுவதுடன் வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

13. சிவபெருமானுக்கே பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கிய இடமாக கருதப்படும் சுடுகாட்டானது மயானக் கொள்ளை நடைபெறும் பகுதியாகும்.

14. இந்த இடத்தில் வழிபடும்  பக்தர்களுக்கு பிடித்திருக்கும் அனைத்து பிணிகளும் நீங்கி அம்மன் அருளால் நலம் பெறுவார்கள் என்பது ஐதிகம்.

15. அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். பௌர்ணமி தினங்களில் ஆலயம் இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டுகிறது.

16. சிறந்த பரிகார ஸ்தலமாக  விளங்குகிறது. அம்மனை குலதெய்வமாக வழிபடுவோர், பொங்கல் வைத்து படையலிட்டு வேண்டுகின்றனர்.

17. வேண்டிதல் நிறையவேறிய பக்தர்கள் கோவில் உட்பிரகாரத்தில் ஆடு மாடு மற்றும் கோழிகளை வடக்கு வாசலில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில் சுற்றி விடப்படுகிறது.

18. ஆண்டுதோறும் திருவிழாவில் புதிய தேரில் அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

19. எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

20. மாசி மாதம் மயானக் கொள்ளை திருவிழா பெரிய அளவில் நடக்கும். பக்தர்கள் தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அம்மனுக்கு அர்ப்பணிக்கின்றார்கள்.

21. மயானத்தில் அன்னையே ஆராதிக்கின்றார்கள், பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். காண்போர் வியக்கும் வண்ணம் பூஜை செய்கிறார்கள்.

22. இதனால் ஏவல் பில்லி சூனியம் போன்ற தீய சக்திகள் விலகும் என்பது பதில் பக்தர்களின் அசைக்க முடியாது நம்பிக்கையாக உள்ளது.

23. பிரம்மனின் ஐந்தாம் தலையை கொய்ததால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்தத் தலை சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டது.

24. என்ன முயற்சி செய்தும் கையை விட்டு அகலாததுடன், சிவனுக்கு இடப்படும் உணவு வகைகளையும் அத்தலையே உண்டு வந்தது.

25. மஹா விஷ்ணு அறிவுரைப்படி பார்வதி தேவி, மூன்று கவளம் அன்னத்தை எடுத்து, இரண்டு கவளத்தை சிவன் கையில் இட, பிரம்ம கபாலமே வழக்கம் போல் உண்டு விடுகிறது.

26. மூன்றாம் கவளத்தை தவறுதலாக போடுவது போல் மண்ணில் போட்டுவிடுகிறாள் பார்வதி தேவி.

27. உணவின் ருசியில் மயங்கிய கபாலம், மண்ணை நோக்கிப் பாய, விஸ்வரூபம் எடுத்த அங்காளம்மன் அந்த கபாலத்தைக் காலில் போட்டு மிதித்து அடக்கிவிடுகிறாள்.

28. பின்னர் கோபம் தணிந்த தனது சுய உருவம் எடுத்து அங்காள பரமேஸ்வரியாக மேல் மலையனூர் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

29. இதுவே ஸ்தல வரலாறு ஆகும். அங்காளம்மனை மகா மண்டபத்தில் புற்றாகவும், மூலஸ்தானத்தில் திருவுருவத்துடனும் காட்சி அளிக்கிறாள்.

30. அமாவாசையன்று அங்காள பரமேஸ்வரிக்கு ஊஞ்சல் விழா நடத்தப்படுகிறது. இதனைக் காண லட்சோப லட்சம் பக்தர்கள் குவிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...