Sunday, August 6, 2023

பொள்ளாச்சி ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு...!

ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் தல வரலாறு...!
பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஆனைமலையில் உள்ள மிக பிரமாண்டமாண ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. 

ஆனை  மலைப்பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தார். அவரைச் சந்திக்க ஒரு துறவி வந்தார். அவரை வரவேற்று பல உபசரிப்புகள் செய்த நன்னனின் உபரசரிப்பில் ஆனந்தமான துறவி அவருக்கு ஓர் மாங்கனியை கொடுத்தார்.

"மன்னா இது அதிசய மாங்கனி இதை எனது குருநாதர் பரிசாக அளித்தார்.  உன்னால் மகிழ்வுற்ற நான் இந்த மாங்கனியை பரிசளிக்கிறேன், முக்கியமான ஒன்று இதை உண்ட பின் இந்த மாங்களி கொட்டையை ஆற்றில் விட்டு விடு. இல்லையெனில் இது ஆபத்தாக முடிந்து விடும்'''.

மன்னர் சரி என்றவாறு துறவியை வழியனுப்பி விட்டு மாங்கனியை சுவைக்கத்துவங்கினார். சுவை நன்றாக இருக்கவே அந்த மாங்கொட்டையை துறவி  சொன்னதை அலட்சியப்படுத்தி தமது நந்தவனத்தில் ஆற்றோரம் நட்டு பராமரித்து வந்தார்.

மரம் பெரியதாகி பழம் விடும் நேரம் வந்ததும் அரண்மணைக் காவலாளிகள் வைத்து மாங்கனியை யாரும் பறிக்ககூடாது. அப்படி சாப்பிட்டால் மரண தண்டனை  என அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட துறவி மன்னரிடம் வந்து ''மன்னா நீங்கள் அந்த மாங்கனி கொட்டையை நான் சொன்னதை கேளாமல் மரமாக்கி விட்டீர்கள். நீங்கள் நினைப்பது போல் அந்த மரத்தில் ஓரே பழம் மட்டுமே பழுக்கும் அதையும் நீங்கள் சாப்பிடக்கூடாது. அதை தெய்வீகப் பெண்மணி ஒருவரே சாப்பிடுவார். நீங்கள் சாப்பிட நினைத்தால் இந்த தேசம் அழிவுறும். என உரைத்து கிளம்பினார் துறவி. ஆனால் மன்னன் துறவி கூறியதை அலட்சியம் செய்தான்.

தாரகன் என்பவர் வியாபார விஷயமாக தன்மகள் தாரணி உடன் ஆனைமலைக்கு வந்திருந்தார். அப்போது அவர்கள் வீட்டின் அருகில் இருந்த தோழிகளுடன் தாரணி நந்தவனத்தில் உள்ள ஆற்றில் குளிக்கச்சென்றார். தாரணி நீராடும்போது அந்த மாமரத்தில் இருந்து தன் அருகே விழுந்த மாங்கனியை எடுத்து  சாப்பிட்டார். இதனை அறிந்த மற்ற பெண்கள், மன்னனின் தண்டனை விவரத்தை எடுத்து கூறினர்.

அதற்குள் விஷயம் அறிந்த மன்னன் காவலாளிகளை விட்டு தாரணியை கைது செய்து, குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனையை அறிவித்தான். ஒரு  மாங்கனிக்காக என் உயிர் பிரிந்தாலும் என் ஆத்மா இந்த மண்ணிலிருக்கும் என்று சூளூரைத்து உயிர் பிரிந்தாள். அவள் உடல் மயானம் எடுத்துச் செல்லப்பட்டது. அவள் உருவத்தைப்போலவே மண்ணால் செய்து வைத்து, மாங்கனிக்காக இறந்த கன்னியை மாங்கன்னியாக மாசாணி அம்மனாக  தொழுதுசென்றார்கள் மக்கள்.

மாசாணி அம்மனாக சிறிதளவில் அவர் சமாதியில் துவங்கிய வழிபாடு அந்த ஆத்மா நம்பி வரும் பக்தர்களை காத்து அருள்பாலிக்கிறது. பல்வேறு  அவதாரங்களில் ஈஸ்வரி அவதாரம் எடுத்து பல அம்மனாக அற்புதங்களை தந்திருக்கிறார் மாசாணி அம்மன். இவர் உக்கிர தெய்வம் ஆவார்.

இங்கு வரும் பக்தர்கள், மாசாணி அம்மனிடம் குறைகளை எழுதி  பூசாரியிடம் பக்தர்கள் தர அதை அம்மன் நிவர்த்தி செய்கிறார். பில்லி சூனியம் போன்ற அமானூஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க உக்கிரதெய்வமான மாசாணி அம்மன வணங்கினால் நலம் பயக்கும் என்பது நம்பிக்கையாகும்.

No comments:

Post a Comment

Followers

மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்.

*மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட ஈசன்* சுந்தரர் 10 சிவாலயங்களைக் கட்டுவதற்காக மணல் எடுத்த இடம், ‘இடமணல்’ எனப் பெயர் பெற்றதாகவும்,...