Showing posts with label #vishnu # Narasimha #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #vishnu # Narasimha #hindu #india #tamilnadu. Show all posts

Friday, June 9, 2023

சிம்மாச்சலம்விசாகப்பட்டினத்தில் உள்ள நரசிம்ம சேஷத்ரம்!

சிம்மாச்சலம்
விசாகப்பட்டினத்தில் உள்ள நரசிம்ம சேஷத்ரம்!
பிரகலாதன் ஆராதித்த நரசிம்மர். பல ஆண்டுகளாக புற்றினுள் இருந்த இந்த லக்ஷ்மி நாராயண நரசிம்மர், ஒரு பக்தரின் கனவில் தன் இருப்பிடத்தைத் தெரிவித்து, சிம்மாச்சலத்தில் தன்னை ப்ரதிஷ்டை செய்ய நியமித்ததாக வரலாறு!

பின்பு, குளிர் அதிகமாக இருந்ததால், மீண்டும் புற்றினுள்ளேயே தன்னை விடுமாறும், அந்த சீதோஷணத்தை சந்தனம் கொண்டு புற்றை உருவாக்கிவிடவும், வருடத்திற்கு ஒரு நாள் புற்றிலிருந்து வெளியே வந்து தரிசனம் அருளுவதாகவும் நரசிம்மர் ஸங்கல்பிக்க, அன்று முதல் இப்போதும் 500 கிலோ சந்தனத்துடன் மற்ற கலவைகள் 200 கிலோ என 700 கிலோ புற்றினுள் இருக்கிறார் இந்த நரசிம்மர்!

அக்ஷய த்ரிதியை அன்று புற்றினை நீக்கி சேவை சாதிக்கிறார். பின் மீண்டும் 700 கிலோ சந்தனக் கலவை புற்றினுள் புகுந்து புற்றாகவே சேவை சாதிக்கிறார்.

ஸ்ரீ ராமானுஜர் சிம்மாச்சலம் வந்தபோது, அங்கு சில நாட்கள் விஷயார்த்தங்களை உபந்யாஸமாக சாதிக்க, அதை அனுதினமும் கேட்டுக் கொண்டிருந்த இரண்டு அன்னபறவைகள், காலட்ஷேப முடிவில் பறவை சரீரத்தை துறந்து திவ்ய சரீரம் பெற்று, வைகுந்தம் ஏகினதாக வரலாறு! அவ்வாறு ஸ்ரீ ராமானுஜர் அமர்ந்து உபந்யாஸம் சாதித்த இடத்திற்கு "ஹம்ஸ மூலை" என்ற பெயரானது...!

Followers

வியாக்ரபுரீஸ்வரர் திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,  திருப்பெரும்புலியூர்,  தஞ்சாவூர் மாவட்டம்-613204 *மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர் *இறைவி:...