Showing posts with label #murugan # Karthigai #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts
Showing posts with label #murugan # Karthigai #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts

Monday, October 2, 2023

முருகனுக்கு உகந்த நட்சத்திர விரதம் கிருத்திகை.. இன்றய தினம்



🙏இன்று  கிருத்திகை விரதம்🙏
🌹முருகனுக்கு உகந்த நட்சத்திர விரதம் கிருத்திகை.. இன்றய தினம் முருகனை விரதம் இருந்து வணங்க வேண்டும். முருகப் பெருமானை கிருத்திகை, செவ்வாய்க்கிழமைகளில்  விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கவும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும். செவ்வாய் கிழமை என்றாலே முருகனுக்கு உரிய நாள். 

🌹அதனால் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபாடு செய்யவும், அவருக்கான விரதம் இருப்பதற்கும் மிக சிறந்த நாள். இந்த நாளில் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வருவது சிறப்பானது .

🌹ஒருவரின் செல்வ நிலை உயர காரணமான வர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். அந்த செவ்வாய் பகவானுக்குரியவர் தான் நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. அதனால் தான் செவ்வாய் கிழமை முருகன் மற்றும் சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.

🌹முருகனுக்கு உகந்த நட்சத்திர விரதம் கிருத்திகை.. இன்றய தினம் முருகனை விரதம் இருந்து வணங்க வேண்டும். ஞானகுருவான முருகரை வழிபடுவது நீண்ட காலமாக இருந்து வருகிறது. 

🌹முருகர், எதிரிகள்,அரக்கர்கள் மனதில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்த தனது தாய் பார்வதி யிடமிருந்து "வேல்" பெற்று கொண்டார். அந்த சக்தி பொருந்திய வேலை அனைவரும் வழிபாடு செய்கின்றனர்.

🌹கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி சிவபெருமான் ஆசிர்வதித்தார். 

🌹கார்த்திகை விரதத்தை விநாயகர் கூறியவாறு 12 ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர் முருகனருளால் தேவரிஷியாக பதவி பெற்றார். 

🌹ஞானகுருவான முருகப் பெருமானை விரதம் இருந்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும், சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும், நோய்கள் நீங்கும் எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும்.

🌹கார்த்திகை விரதம் இருக்க நினைப்பவர்கள் ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம். மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

🌹முருகனுக்குப் பிடித்த சிவப்பு நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் சிவப்பு நிற கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி வாழ்க்கை சீராகும். அதோடு எதிர்பாராத அளவு புகழும், சக்தியும், நல்ல மங்கல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதே போல் உள்ளத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்.

🌹விரதத்தை தொடங்கும் போது முருகனின் அண்ணனும், முழுமுதல் கடவுளான விநாயகரை வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும். முருகனின் வேலை வணங்குவதே என் வேலை என வீட்டில் வேல் வைத்து வழிபடுவது நல்லது. வீட்டு பூஜை அறையில் வேல் வைத்து அதன் இரு புறமும் அகல்விளக்கு தீபம் ஏற்றி வணங்கலாம்.

🌹இன்றய தினம் செவ்வாய்கிழமை கிருத்திகை நட்சத்திரம் . இந்த நல்ல நாளில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும். நினைத்த காரியம் நடைபெறும். கார்த்திகேயன் அன்னதானப் பிரபு என்பதால், இந்த விரதம் மேற்கொள்ளும் போது உங்களால் முடிந்தளவு அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு.

🌹செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, செவ்வாய் தோஷ தடை, மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்சினைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த செவ்வாய்கிழமை வரும் கிருத்திகை தினத்தில் முருகனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சினைகள், நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும் .

அனைவருக்கும் இனிய செவ்வாய் விடியல் வணக்கங்களுடன் புரட்டாசி மாத கார்த்திகை விரதம் நல்வாழ்த்துக்கள்🙏

🙏ஓம் முருகா சரணம்🙏
இறை பணியில்
 இரா. இளங்கோவன். 

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...