Showing posts with label #shivan #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts
Showing posts with label #shivan #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts

Monday, October 16, 2023

108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்!*

*🕷️108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்!* 

 *1 திருகுடந்தை* ஊழ்வினை பாவம் விலக

 *2 திருச்சிராப்பள்ளி* வினை அகல

 *3 திருநள்ளாறு* கஷ்டங்கள் விலக

 *4 திருவிடைமருதூர்* மனநோய் விலக

 *5 திருவாவடுதுறை* ஞானம் பெற

 *6 திருவாஞ்சியம்* 
 தீரா துயர் நீங்க

 *7 திருமறைக்காடு* கல்வி மேன்மை உண்டாக

 *8 திருத்தில்லை* 
முக்தி வேண்ட

 *9 திருநாவலூர்* 
மரண பயம் விலக

 *10 திருவாரூர்* 
குல சாபம் விலக

 *11 திருநாகை* ( *நாகப்பட்டினம்* ) 
சர்ப்ப தோஷம் விலக

 *12 திருக்காஞ்சி* ( *காஞ்சிபுரம்* ) 
முக்தி வேண்ட

 *13 திருவண்ணாமலை* நினைத்த காரியம் நடக்க

 *14 திருநெல்லிக்கா* முன்வினை விலக

 *15 திருச்செங்கோடு* *அர்த்தநாரீஸ்வரர்* *கோவில்* மணவாழ்க்கை சிறப்புடைய

 *16 திருகருக்காவூர்* கர்ப்ப சிதைவு தோஷம் விலக

 *17 திரு* *வைத்தீஸ்வரன்* கோவில் நோய் விலக

 *18 திருகோடிக்கரை* பிரம்ம தோஷம் விலக

 *19 திருக்களம்பூர்* சுபிட்சம் ஏற்பட

 *20 திருக்குடவாயில்* ( *குடவாசல்* ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய

 *21 திருசிக்கல்* ( *சிக்கல்* ) 
துணிவு கிடைக்க

 *22* *திருச்செங்காட்டங்குடி*
 கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக

 *23 திருக்கண்டீச்சுரம்* நோய் விலக , தீராத புண் ஆற

 *24 திருக்கருக்குடி* ( *மருதாநல்லூர்* ) குடும்ப கவலை விலக

 *25 திருக்கருவேலி* ( *கருவேலி )* 
குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க

 *26 திருவழுந்தூர்* ( *தேரெழுத்தூர்* ) 
முன் ஜென்ம பாவம் விலக

 *_27 திருச்சத்திமுற்றம்_* மண வாழ்க்கை கிடைக்க

 *28 திருப்பராய்துறை* ( *திருச்சி* ) 
கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற

 *29 திருநெடுங்களம்* ( *திருச்சி )* 
தீரா துயரம் தீர
 ( இடர் களைய )

 *30 திருவெறும்பூர்* ( *திருச்சி* ) அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற

 *31 திருப்பைஞ்ஞீலி* ( *திருச்சி )* 
யம பயம் விலக

 *32 திருவையாறு* அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

 *33 திருவைகாவூர்* வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க

 *34 திருக்கஞ்சனூர்* திருமண தோஷம் விலக

 *35 திருமங்கலக்குடி* ( *சூரியனார் கோவில்* ) 
குழந்தை பாக்கியம் பெற

 *36 திருமணஞ்சேரி* திருமண தோஷம் விலக

 *37 திருமுல்லைவாயில்* சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக

 *38 திருவெண்காடு* ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை

 *39 திருநெல்வேலி* பிராமண குற்றம் விலக

 *40 திருக்குற்றாலம்* *குற்றாலநாதர்* *கோவில்* 
முக்தி வேண்ட

 *41 திருவாலவாய்* ( *மதுரை )* 
 தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட

 *42 திருப்பரங்குன்றம்* ( *மதுரை* ) 
வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட

 *43 திருவாடானை* *ஆதிரத்தினேசுவரர்* *கோவில்* 
 தீரா பாவம் விலக

 *44 திருமுருகன் பூண்டி* *திருமுருகநாத* *சுவாமி கோவில்* 
மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

 *45* *திருப்பாதிரிப்புலியூர்* ( *புட்லூர்* ) 
தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக

 *46 திருவக்கரை* செய்வினை தோஷம் விலக

 *47 திருவேற்காடு* வாணிப பாவம் விலக

 *48 திருமயிலாப்பூர்* மூன்று தலைமுறை தோஷம் விலக

 *49 திருஅரசிலி* ( *ஒழுந்தியாம்பட்டு)*  காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

 *50 திருவாலங்காடு* வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக

 *51 திருவேட்டிபுரம்* ( *செய்யாறு )* 
ஞானம் கிடைக்க

 *52 திருப்பனங்காடு* பந்த பாசத்தில் இருந்து விலக

 *53 திருவூறால்* ( *தக்கோலம்* ) உயிர்வதை செய்த பாவம் விலக

 *54 திருப்பாச்சூர்* குடும்ப கவலைகள் நீங்க

 *55* *திருவெண்ணைநல்லூர்* 
பித்ரு தோஷம் விலக

 *56 திருவதிகை* 
நல் மனைவி அமைய

 *57 திருவாண்டார்* *கோவில்* 
 முக்தி வேண்ட

 *58 திருமுது குன்றம்* ( *விருத்தாசலம்* ) 
தீரா பாவம் விலக

 *59 திருக்கருவூர்* ( *கரூர்* ) 
பசுவதை செய்வதன் வழிபட

 *60 திருப்பாண்டிக்* ( *கொடுமுடி* ) 
பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக
 
 *61* *திருக்கொடுங்குன்றம்* ( *பிரான்மலை* ) மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட

 *62 திருகோகர்ணம்* ( *கர்நாடகம்* ) 
தேவ தோஷம் விலக

 *63 திருப்புகலூர்* பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க

 *64 திருத்தோணிபுரம்* ( *சீர்காழி )* 
குல சாபம் நீங்க

 *65 திருவைத்தீஸ்வரன் கோவில்* 
பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக

 *66* *திருக்கருப்பறியலூர்* ( *தலைஞாயிறு*)
 கர்வத்தால் குரு துரோகம்

 *67 திருப்பனந்தாள்* பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக

 *68 திருப்புறம்பயம்* மரண பயம் விலக

 *69 திருநெய்த்தானம்* மோட்ஷம் வேண்ட

 *70* *திருவானைக்கா*  கர்மவினை அகல

 *71 திருவேதிக்குடி* தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக

 *72 திருவலஞ்சுழி* வறுமை அகல

 *73 திருநாகேஸ்வரம்* ஸர்ப்ப ஸாபம் விலக

 *74 திருநாகேஸ்வர* *சுவாமி* ( *கும்பகோணம்* ) நவகிரஹ தோஷம் விலக

 *75 திருநல்லம்* *(கோனேரிராஜபுரம்)*  வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக

 *76 திருத்தெளிச்சேரி* ( *காரைக்கால் )* 
சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர

 *77* *திருசெம்பொன்பள்ளி*
 வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க

 *78 திருத்தலச்சங்காடு* ( *தலைச்செங்காடு)* 
அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக

 *79 திருவன்னியூர்* ( *அன்னூர்* ) சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட

 *80 திருநன்னலம்* ( *நன்னிலம் )* 
 ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட

 *81 திருராமனாதீச்சுரம்* ( *திருக்கண்ணாபுரம்* ) 
கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக

 *82 திருமருகல்* கணவன் மனைவி அன்புடன் வாழ

 *83 திருச்சிக்கல்* பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட

 *84 திருச்சேறை* இல்லறம் மேலும் சிறக்க

 *85 திருக்கோளிலி* ( *திருக்குவளை* ) நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட

 *86 திருவாய்மூர்* செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

 *87 திருநெல்லிக்கா* கல்வி மேன்மை அடைய

 *88 திருவெண்டுறை* ( *வண்டுறை* ) வறுமையிலிருந்து விலக

 *89 திருக்கடிக்குளம்* ( கற்பகநாதர்குளம் ) வினைகள் விலக

 *90 திருஆலங்குடி* புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற

 *91 கொட்டாரம்* 
அமைதி பெற

 *92 திட்டை* 
சந்திர தோஷம் விலக

 *93 பசுபதி கோவில்* இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட

 *94 கொட்டையூர்* 
செய்த பாவங்கள் வேயொரு வீழ

 *95 ஓமாம்புலியூர்* 
சனி தோஷம் விலக

 *96 தருமபுரம்* சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக

 *97 மயிலாடுதுறை* அனைத்து பாவங்களும் விட்டோட

 *98 உத்தரகோச மங்கை* கர்மவினைகள் அல்ல

 *99 இராமேஸ்வரம்* பித்ரு தோஷம் விலக

 *100 காளையர்கோவில்* பிறவி பயன் கிடைக்க

 *101 பெண்ணாடம்* ஊழ்வினை தோஷம் அகல

 *102* *இராஜேந்திரப்பட்டினம்*
 கர்மவினை அகல

 *103 அவினாசியப்பர்*
 ஏழு தலைமுறை பாவங்கள் விலக

 *104 குரங்கினில்* *முட்டம்* 
 நினைத்த காரியம் நடக்க

 *105 பவானி* 
 பித்ரு தோஷம் போக்க

 *106 ஆச்சாள்புரம்* 
 மண வாழ்க்கை சிறக்க
 
 *107 ஆடுதுறை* திருஷ்டி தோஷம் விலக
 
 *108 சங்கரன்கோவில்* ஸர்ப்ப தோஷம் விலக.

Saturday, October 14, 2023

வாய்ப்பு உள்ளவர்கள் இந்த கோவில் தரிசனம் செய்யுங்கள் அனுபவத்தில் உணர்ந்தது..

வாய்ப்பு உள்ளவர்கள் இந்த கோவில் தரிசனம் செய்யுங்கள் அனுபவத்தில் உணர்ந்தது..
🙏👇ஒன்றல்ல, இரண்டல்ல
பல கோடி சூரிய சக்தியை உள்ளுக்குள் கொண்ட  அபூர்வ நடராஜர் சிலையை வழிபட போகின்றோம்!

♦இந்த  அபூர்வ நடராஜர் சிலை ஆசிய கண்டத்தில் வேறு எங்கும் இல்லை. இங்கு மட்டும் தான் உள்ளது!

♦இந்த சிலை மானிடர்களால் உளி கொண்டு செதுக்கப்பட்டது இல்லை..

♦சித்தர்களின் ஆன்மீக சக்தியால் ,  நவ லிங்க பூஜை வழிப்பாட்டிற்கு பின் தானாக  உருவாகிய அற்புதத்திலும் அற்புதமான சிலை இது ஆகும்!

♦10 லட்சம்  கோடி பாறை நம் பூமியில் உருவானால் , அதில் இந்த  நடராஜர் சிலை உருவான
பஞ்சநதான பாறை ஒன்றே ஒன்றுதான் உருவாகும்!

♦இந்தக் கோவிலில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்தால் , ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்று அகத்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்.

♦மாசி மாதம் வளர்பிறையில் இங்கு உள்ள தட்சிணாமூர்த்தியை பஞ்சாட்சர மந்திரம் சொல்லி ஜெபம் செய்யும்போது , பல வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன என்று கூறப்படுகிறது!

♦ஆகவே மாசி மாதம் வளர்பிறை பிரதோஷம் அன்று   இக்கோவில் சென்று , ஒரு கோடி புண்ணியத்தை  ஸ்ரீ அகத்திய சித்தரின் வாக்குப்படி பெறலாம்!

🙏🏽நீங்களும் கட்டாயம் பாருங்கள்🙏🏽

♦பல நோய்களை குணப்படுத்த கூடிய அதிசய பிரம்ம தீர்த்தம் இக்கோவில் உள்ளது!

♦இந்த அபூர்வ நடராஜருக்கு சாத்திய வெட்டிவேரை நீரில் ஊறவைத்து பருகி வர சிறுநீரக கோளாறுகளை அடியோடு குணமாகுகிறது!

👉இங்குள்ள கொடிமரம் அருகில் மேல் விதானத்தில், 27 நட்சத்திரம், 15 திதிகள், 12 ராசிகள், 9 கிரகங்கள் வடிவமைக்க பட்டு உள்ளது! இதன் கீழ் நின்று நாம் வழிபடும் போது நமது ஜாதகமே மீண்டும் ஒரு முறை நற் ஜாதகமாக சிருஷ்டிக்க படுகிறது என்பது காலம் காலமாக உள்ள நம்பிக்கை!

*இக்கோவில் திருச்சி மாவட்டம், திருச்சி to சென்னை வழியில் உள்ள பாடலூரிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள ஊட்டத்தூரில் உள்ள ஸ்ரீ சுத்த ரத்தானேஸ்வரர் ஆலயம் ஆகும்!*
🙏👍✌🏼

Sunday, October 8, 2023

#தட்சிண_காசி என்று அழைக்கப்படும்#நஞ்சன்கூடு #நஞ்சுண்டேஸ்வரர் என்ற #கண்டேஸ்வரர்

கர்நாடக மாநிலத்தில் உள்ள 
மைசூரில் புகழ்பெற்ற மிகப்பழமையான கோயிலான,
#தட்சிண_காசி என்று அழைக்கப்படும்
#நஞ்சன்கூடு  #நஞ்சுண்டேஸ்வரர் என்ற #கண்டேஸ்வரர்
#பார்வதி_தேவி
திருக்கோவில் வரலாறு:
நஞ்சன்கூடு தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது. நஞ்சன்கூடின் பழங்காலப் பெயர் கரலாபுரி மற்றும் குலாபுரா என்றும் அழைக்கப்படுகிறது. மைசூர் நகரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் நஞ்சன்கூடு அமைந்துள்ளது. புகழ்பெற்ற ஸ்ரீகண்டேஸ்வரா அல்லது நஞ்சுண்டேஸ்வரா கோயில் இங்கு அமைந்துள்ளது. கபிலா (கபினி) ஆற்றின் வலது கரையில் அழகாகக் கட்டப்பட்டுள்ள நஞ்சன்கூட் கோயில், இந்தியாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும்.

மைசூர் மாவட்டத்தில் உள்ள கபிலா நதிக்கரையில் (கபினி என்றும் அழைக்கப்படுகிறது) நஞ்சன்கூடில் உள்ள ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா அல்லது ஸ்ரீகண்டேஸ்வரா கோயில் கர்நாடகாவின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் சுமார் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர், இந்த கோயில் பின்னர் புதுப்பிக்கப்பட்டது. ஹொய்சாள மன்னர்கள். ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகிய இருவருக்கும் இக்கோயிலுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. உடையார் மன்னர்கள் கோயிலைப் புதுப்பிக்க பல்வேறு மானியங்களை வழங்கியுள்ளனர். இக்கோயில் இங்குள்ள ஸ்ரீகண்டேஸ்வரா அல்லது நஞ்சுண்டேஸ்வரா என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நஞ்சன்கூடு என்றால் நஞ்சுண்டேஸ்வரர் வசிக்கும் இடம் என்று பொருள். நஞ்சுண்டேஸ்வரர் என்றால் உலக நலனுக்காக விஷம் அருந்திய கடவுள் என்று பொருள்.

மூலவர்:
நஞ்சுண்டேஸ்வரர் என்ற கண்டேஸ்வரர்
உற்சவர்: சந்திரசேகரர்
அம்மன்: பார்வதி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:முந்நதி சங்கமம்
ஆகமம் :காமீகம், காரணாகமம்
ஊர்: நஞ்சன்கூடு
மாவட்டம்: மைசூரு
மாநிலம்: கர்நாடகா

#நஞ்சுண்டேஸ்வரர்:

இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாக தோன்றியவர். இங்கு மூலவராக இருக்கும் சிவலிங்கத்தின் மீது பரசுராமரால் வெட்டப்பட்ட கோடு இருக்கின்றது.  அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் லிங்கத்திற்கு தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட அசுரன் ஒருவனை விழுங்கிய காரணத்தால் சிவன் இங்கு உக்கிரமான நிலையில் இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை  தணிக்க தினம்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இத்திருத்தலத்தில் சுக்கு, வெண்ணெய், சர்க்கரை இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து ‘சுகண்டித சர்க்கரை’ என்ற பெயரில் பிரசாதமாக அந்த சிவனுக்கு நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மகரிஷி முனிவர் உச்சிக்கால பூஜையை செய்ய வருவதாக ஐதீகம் ஒன்று உண்டு. நோய்களை குணப்படுத்தும் சக்தியானது இந்த சுகண்டித சர்க்கரைக்கு உள்ளதால் இந்த சிவபெருமானை ‘ராஜ வைத்தியர்’ என்ற மற்றொரு பெயர் கொண்டும் அழைக்கிறார்கள்.

இந்தக் கோவிலில் இருக்கும் வீரபத்திரர் சுவாமி மிகவும் புகழ்பெற்ற மூர்த்தியாக திகழ்கின்றார். இவரின் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு இவைகளை ஏந்தி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். இந்த வீரபத்திரர் சுவாமியுடன் பத்திரகாளி அம்மன் தான் இருக்கவேண்டும். ஆனால் மாறாக தாட்சாயினி இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வீரபத்திரரின் வலது பக்கத்தில் தட்சன் இருக்கின்றார். அதாவது வீரபத்திரர், தாட்சாயணி, தட்சன் இவர்கள் மூவரும் தாமரை பீடத்தின் மீது நின்றவாறு காட்சி தருகின்றனர். இத்தளத்தில் திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகதம் லிங்கம் இருப்பது மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது.

வீரபத்திரர் உடன் தாட்சாயிணி இருப்பதற்கு என்ன காரணம்? தாட்சாயினியின்(பார்வதி) தந்தைதான் தட்சன். தட்சன் ஒருமுறை தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினார். தன் தந்தையிடம், ‘தன் கணவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்துவது தவறு’ என்று கூறி யாகத்தை நிறுத்தும்படி சொன்னாள் தாட்சாயிணி. இதனால் கோபமடைந்த தட்சன் தாட்சாயணியை அந்த இடத்திலேயே அவமானப்படுத்தி விட்டார். அவமானத்தை தாங்க முடியாத தாட்சாயணி யாககுண்டத்தில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதனை அறிந்து கொண்ட சிவபெருமான் தன் கோபத்தை ஒன்றாக்கி வீரபத்திரரை உருவாக்கினார். அந்த வீரபத்திரர் கோபத்தோடு யாகம் நடந்த இடத்திற்கு சென்று, தட்சனின் தலையை துண்டித்து, யாககுண்டத்திலிருந்து தாட்சாயணியை  தூக்கிக்கொண்டு கோரதாண்டவம் ஆடினார். இந்நிலையில் செய்வது என்னவென்று அறியாமல் இருந்த தட்சனின் மனைவி பிரசுத்தா தேவி, சிவனிடம் தஞ்சம் அடைந்தாள். தன் கணவரையும், மகளையும் உயிர்ப்பித்து தர வேண்டிக் கேட்டுக் கொண்டாள். அவளது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் தட்சனையும், தாட்சாயிணியையும், மீண்டும் உயிர்பெறச் செய்தார். தாய் தந்தையர் இருவரும் சேர்ந்து தாட்சாயணியுடன் காட்சி தந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு வீரபத்திரர், தாட்சாயிணியுடன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார் என்பதாக கூறுகிறது வரலாறு.

#தல_வரலாறு:

கொடுமையான விஷத்தன்மை கொண்ட கேசியன் என்னும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்காக தேவர்கள் சிவனிடம் தஞ்சம் அடைந்தனர். சிவனும் தேவர்களும் சேர்ந்து ஒரு சிறிய நாடகத்தை நடத்தினார். தேவர்கள் கபிலா, கவுண்டினி, மணிகர்ணிகை என்ற பெயர்  கொண்ட மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஒரு யாகம் நடத்தப் போவதாகவும், அந்த யாகத்திற்கு அசுரனை அழைத்து யாக குண்டத்தில் வீழ்த்தி வதம் செய்ய ஒரு நாடகத்தை திட்டம் தீட்டினர். அதுபடியே யாகமும் நடந்தது. அசுரனும் அந்த யாகத்திற்கு வருகை தந்தான். அந்த அசுரனை தேவர்கள் வரவேற்பது போல நாடகம் ஒன்றினை அரங்கேற்றி, தக்க சமயத்தில் யாககுண்டத்தில் உள்ள நெருப்பில் அசுரனை தள்ளி விட்டனர். அப்போது சிவன் அக்னி வடிவில் மாறி, விஷத்தன்மை கொண்ட அசுரனை விழுங்கி விட்டார். இதனால் தேவர்கள் அந்த இடத்திலேயே சிவபெருமானை மக்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டனர். இதன் மூலம் சிவபெருமான் அந்த இடத்திலேயே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி மக்களுக்கு காட்சி தந்தார். விஷத்தன்மை கொண்ட அசுரனை விழுங்கியதால் இந்த ஈஸ்வரனுக்கு ‘நஞ்சுண்டேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது.

சிறிது நாட்களுக்குப் பின்பு இயற்கை சீற்றத்தினால் இந்த லிங்கமானது மறைந்துவிட்டது. தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் வேண்டி பரசுராமர் இந்த லிங்கத்தை தரிசனம் செய்வதற்காக வந்தார். ஆனால் லிங்கம் அந்த இடத்தில் இல்லை. செய்வதறியாது தவித்த பரசுராமர் அந்த இடத்திலிருந்த செடிகொடிகளை எல்லாம் அகற்றி சுத்தம் செய்ய தொடங்கினார். அந்த சமயம் ஓரு இடத்தில் செடியை வெட்டிய போது, அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்தது. பயந்துபோன பரசுராமர் செடிகளை விலக்கி பார்த்தார். அந்த இடத்தில் ஒரு லிங்கம் இருந்ததை அறிந்துகொண்டார். செய்த தவறுக்கு மன்னிப்பை சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டார். அந்த சமயம் சிவபெருமான் பரசுராமருக்கு காட்சி தந்து, பாவ விமோசனம் அளித்தார். அதன்பின்பு பரசுராமரால் இந்த லிங்கம் திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பரசுராமரின் கையால் வெட்டிய காயமானது இன்றுவரை சிவலிங்கத்தில் தெரிகிறது.

திப்பு சுல்தானின் யானை ஒன்று நோய்வாய்ப்பட்டபோது இந்த நஞ்சன்கூடு ஸ்தலத்தில் பிராத்தித்ததன் மூலம் குணமடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.உள்ளூர் மக்கள் இன்றும் இந்த கோயில் தெய்வத்தின் பிணி தீர்க்கும் சக்தியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நஞ்சுண்டேஸ்வர் கோயில் தேர்த்திருவிழாவின்போது பெருமளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். வருடத்தில் இரண்டு முறை நடத்தப்படும் இந்த தொட்ட ஜாத்ரே திருவிழாவின் போது கணபதி, பார்வதி தேவி, ஸ்ரீகண்டேஷ்வர், சுப்ரமண்யர், சண்டிகேஷ்வரர் ஆகிய கடவுளரின் சிலைகள் ஐந்து வெவ்வேறு தேர்களில் வைக்கப்பட்டு விசேஷ பூஜைக்குப்பின் ஊர்வலமாக எடுத்துவரப்படுகின்றன.

#தலபெருமை:

#தாட்சாயணியுடன் வீரபத்திரர்:

தட்சன், சிவனை அவமதித்து யாகம் நடத்தியபோது, தாட்சாயணி (பார்வதி) யாகத்தை நிறுத்தச் சென்றாள். அங்கு தட்சன் அவளை அவமதிக்கவே, யாகத்தை நிறுத்துவதற்காக யாக குண்டத்தில் வீழ்ந்தாள். அவ்வேளையில் சிவன், தனது உக்கிரத்தில் இருந்து வீரபத்திரரை உருவாக்கி, யாகத்தை அழிக்க அனுப்பினார். அவர் தட்ச யாகத்தை அழித்ததோடு, அவனது தலையையும் எடுத்தார். மேலும் உக்கிரம் குறையாத அவர், யாகத்தில் விழுந்த தாட்சாயணியை தோளில் தூக்கிக்கொண்டு நடனமாடினார். அவ்வேளையில் தட்சன் மனைவி பிரசுத்தாதேவி, சிவனிடம் வந்தாள்.

தவறு செய்த கணவரையும், மகள் தாட்சாயணியையும் உயிர்ப்பித்து அருளும்படி வேண்டினாள். அவளது வேண்டுதலை ஏற்ற சிவன் தட்சனையும், தாட்சாயணியையும் உயிர்ப்பித்தார். தட்சன், பிரசுத்தாதேவி இருவருக்கும் தாட்சாயணியுடன் சேர்ந்து காட்சி தந்தார்.

இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் வீரபத்திரர், தாட்சாயணியுடன் அருளுகிறார்.

#தினம் தினம் அன்னாபிஷேகம்!:

சிவலிங்கத்தில், பரசுராமரால் வெட்டப்பட்ட தழும்பு இருக்கிறது. சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான், லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால் இங்கு தினசரி பூஜையின்போது அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

விஷத்தன்மையுடைய அசுரனை விழுங்கியதால் சிவன் இங்கு உக்கிரமாக இருப்பதாகவும், அதனை குறைக்கும் விதமாக இந்த அபிஷேகம் செய்யப்படுவதாக சொல்கிறார்கள். மேலும் இவருக்கு சுக்கு, வெண்ணெய், சர்க்கரை ஆகிய மூன்றும் கலந்த “சுகண்டித சர்க்கரை’ என்னும் மருந்தை பிரதானமாக படைப்பதும் விசேஷம். உச்சிக்காலத்தில் கவுதம மகரிஷி, சிவபூஜை செய்வதாக ஐதீகம். நோய்களை குணமாக்குபவராக அருளுவதால் இவருக்கு, “ராஜவைத்தியர்’ என்றும் பெயருண்டு.

அம்பாள் பார்வதி சிவனுக்கு இடப்புறம் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இருவரது சன்னதிக்கு மத்தியில் நாராயணர், தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆவணி மாதத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. இவரது திருமணத்தை சிவன், முன்னின்று நடத்தி வைப்பார். இதேபோல சிவ, பார்வதி திருமணத்தை இந்த பெருமாள் முன்னின்று நடத்தி வைக்கிறார். கோடை காலத்தில் சிவன், அம்பாள் இருவரும் கோயிலின் மேல் தளத்திற்குச் சென்று, விமானத்தை சுற்றி வருகின்றனர். விமானத்தின் இருபுறமும், இரண்டு வில்வ மரங்கள் இருப்பது சிறப்பு.

#நந்தி சிறப்பு:

இத்தலத்து சிவன், ஈசானிய (வடகிழக்கு) திசையை பார்த்திருப்பதாக ஐதீகம். எனவே நந்தி, இவரது பார்வையில் படும்படியாக வடகிழக்காக சற்றே விலகியிருக்கிறது. இங்குள்ள கோபுரமே லிங்கமாக கருதப்படுவதால், கோயிலுக்கு வெளியிலும் ஒரு நந்தி இருக்கிறது. இதுதவிர, கோயில் பிரகாரத்தில் அலங்கார நந்தி வெளியே பார்த்தபடி, தனிச்சன்னதியில் இருக்கிறது. பிரதோஷத்தன்று இந்த நந்திக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

இங்குள்ள யோக தெட்சிணாமூர்த்தி, 14 சீடர்களுடன் காட்சி தருவது விசேஷம். இவரது பீடத்திலும் நந்தியும் இருக்கிறது. பவுர்ணமிதோறும் இரவில் சுவாமி தேரில் ரதவீதி சுற்றுவதும், அமாவாசைகளில் தீர்த்தவாரி கண்டு, பல்லக்கில் புறப்படுவதும் விசேஷம்.

சிவனின் விசேஷமான 24 மூர்த்தங்கள், திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகத லிங்கம், வெண்ணெய் கணபதி, நாகத்தின் மத்தியில் சுப்பிரமணியர், நின்ற கோலத்தில் சண்டிகேஸ்வரர், பத்மாசனத்தில் ஆயுதங்களுடன் நவக்கிரக சன்னதி ஆகியோர் இங்கு அவசியம் தரிசிக்க வேண்டியவர்கள் ஆவர்.

#தல_சிறப்பு:

இங்குள்ள வீரபத்திரர், மிகவும் பிரசித்தி பெற்ற மூர்த்தியாவார். இவர் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு வைத்திருக்கிறார். வீரபத்திரர் கோயில்களில் சுவாமியுடன், பத்திரகாளிதான் பிரதான அம்பிகையாக இருப்பாள். ஆனால் இங்கு தாட்சாயணி இருப்பது விசேஷமான அமைப்பு. இவள் வலது கையில் தாமரை மொட்டு வைத்தபடி நின்றிருக்கிறாள். சுவாமிக்கு வலப்புறம் தட்சன் இருக்கிறார். இம்மூவரும் தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கின்றனர். திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகத லிங்கம் அமைந்துள்ளது சிறப்பு.

#பொது தகவல்:

சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜையும், செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ அபிஷேக, பூஜைகளும் நடக்கிறது.

இந்த பெரிய கோவில் மற்றும் பரிமாணத்தில் 385 அடி 160 அடி. கோயிலின் வெளிப்புறச் சுவர்கள் சுமார் 12 அடி உயரம் கொண்டவை. பிரதான நுழைவாயிலின் மேல் அழகாக செதுக்கப்பட்ட பெரிய கோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. அதன் மேல் ஏழு தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் இரண்டு கொம்புகளால் சூழப்பட்டுள்ளன. கோவிலின் உட்புறம் சிவன், சுப்ரமணியர், பார்வதி, சண்டிகேஸ்வரர் மற்றும் கணபதி ஆகியோரின் பல சிற்பங்களுடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. தூண்களில் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் கூட அழகிய சிற்பங்கள் உள்ளன.

#பிரார்த்தனை:

முன்வினை பாவம் நீங்க, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இவருக்கு பஞ்சாமிர்தம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் செய்து, வில்வ இலை, வெற்றிலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள் கின்றனர்.

விஷக்கடி பட்டவர்கள், தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, குணமாவதாக நம்பிக்கை.

#நேர்த்திக்கடன்:

சிவன், அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து வைத்தும், அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

#திருவிழா:

கார்த்திகை, பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடியில் சிவன், ஆவணியில் பெருமாள் திருக்கல்யாண விழா.

செல்லும் வழி:

மைசூரில் இருந்து கோவை செல்லும் வழியில் 23 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

ஸ்ரீகண்டேஸ்வரா அல்லது நஞ்சுண்டேஸ்வரா கோவிலின் அபிஷேகம், ஆரத்தி மற்றும் திறக்கும் நேரம் :

காலை நேரங்கள்
உஷாகலா அபிஷேகம் - 6:30 AM
பிரத கல அபிஷேகம் - 9:00 AM
சங்க கால அபிஷேகம் - 11:00 AM
மத்யான கால அபிஷேகம் - 12:00
மதியம் 12:00 மதியம்
பிரதோஷகால அபிஷேகம் - மாலை 6:30 AM
பிரதோஷகால அபிஷேகம் - 6:00 PM - 6:30 PM சிறப்பு நாட்கள், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 8:30 மணி வரை பிரதமர்
கோவில் திறந்திருக்கும்.

தரிசன நேரம்:
காலை 06.30AM – 12.30PM
மாலை 04.00PM – 08.00PM

முகவரி:

அருள்மிகு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்,
நஞ்சன்கூடு-571 301.
மைசூர்,
கர்நாடக மாநிலம்.

ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Friday, October 6, 2023

திருச்சிற்றம்பலம்! எனக் கூறுவதால் என்ன பயன்?

அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய 
திருச்சிற்றம்பலம்! எனக் கூறுவதால் என்ன பயன்?
தெரிந்து கொள்வோம்!

இரு சிவனடியார்கள் சந்தித்துக் கொண்டால் திருச்சிற்றம்பலம் எனச் சொல்லிவிட்டே பேசத் தொடங்குவர்.

சித்+அம்பலம் = சித்தம்பலம் என்பதே சிற்றம்பலம் என்றானது. அடியவரின் மனமாகிய அம்பலத்தில் ஆடும் இறைவனே சிவபெருமான். 

அம்பலம்= வெளி ஆகாயம். நமது இதயத்தில் ஒரு சிறு இடத்தில் கட்டைவிரல் அளவில் ஆன்மா இருப்பதாக வேதங்கள் கூறுகின்றன.

மனிதனின் உள்ளம் பெருக்கோயில்! நமது உடம்பே ஆலயம்.
திருச்சிற்றம்பலம் என்பது நம்முள் இருக்கும் ஆன்மாவே.

நமது ஜீவனே (உயிர்) சிவம்; உடலே சிவன் குடியிருக்கும் ஆலயம்.
இதை உணர்ந்த சைவப் பெரியோர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது “திருச்சிற்றம்பலம்” என்று ஒருவர் கூற, அதற்கு மற்றவர் தில்லையம்பலம் என்று கூறுவார்.

இதன் பொருள் “உன்னுள் இருக்கும் உன் ஆன்மா நிறைவு பெறட்டும்” என்பதாகும்.
நம்மைப் பார்த்து யாராவது “திருச்சிற்றம்பலம்” என்று சொன்னால் “உன் ஆன்மா நிறைவு பெறட்டும்” என வாழ்த்துகிறார்! என்று தெரிந்துக் கொள்வோம்.

உடனே பதிலுக்கு நாமும் “தில்லையம்பலம்” எனக் கூற வேண்டும்.
அத்துடன் தில்லையம்பலத்தில் கோயில் கொண்ட ஆனந்தக்கூத்தனை மனதால் தரிசிக்க வேண்டும்.
உருவத்தில் தினமும் அருவமாக உன் ஆன்மா கரைய வேண்டும் என்றால், தில்லைக்குப் போக முக்தி கிடைக்கும்! எனப் பொருள்.

இதனை உணர்த்தவே திருச்சிற்றம்பலத்தில் நடராஜ பெருமான், மனித ரூபத்தில் ஆனந்தக் கூத்தாடுகிறார்.
மனித உடலே கோயில் தான்! அதிலுறையும் உயிரே சிவம் என்பதைத் தில்லையம்பலம் உணர்த்துகிறது.

நடராசப் பெருமானின் விமானக் கூரையில் 21,600 பொன் ஏடுகளை 72,000 ஆணிகளால் அடித்துப் பொருத்தியிருக்கிறார்கள் .
மனிதன் நாள்தோறும் 21, 000 தடவை மூச்சுவிடுவதையும் , அவன் உடலில் 72,000 நரம்புகள் உள்ளதையும் குறிக்கவே அப்படிச் செய்திருக்கிறார்கள் .
மனித உடலும் கோயில்தான் என்பதை உணர்த்துவதே சிதம்பர ரகசியம் .!
சிதம்பரகசியம் என்றால் வேறு ஒன்றுமில்லை,எல்லாம் மனக் கண்ணால் பார்க்கவேண்டியது .

திரை ரகசியம் . திரை விலகினால் ஒளி தெரியும் . மாயை விலகினால் ஞானம் பிறக்கும்
திருச்சிற்றம்பலம் என்று சொல்லச் சொல்ல நாம் அறியாமல் பார்க்கும் பேசும் செய்யும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கி நம் ஆன்மாவிற்குப் புண்ணியம் சேர்க்கிறோம்.

அப்போது அறியாமையால் ஏற்படும் தவறு எவ்வளவு என்பது நமக்குத் தெரியாது
அதனால் நாம் திருச்சிற்றம்பலம் என்று நித்தமும் எவ்வளவு முறை சொன்னாலும் போதாதல்லவா?
மேலும் திருச்சிற்றம்பலத்தைத் தரிசிக்க வாய்ப்பு கிடைக்காமலும் உணராமலும் பலர் வாழ்வு முடிந்து விடுகிறது.

ஆனால் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி சொல்லியாவது அடுத்த பிறவியிலாவது சிவகதி அடைய வேண்டும் என்பதற்காக ஒருரகசியமந்திரமாக  இதைஇறைவனே திருச்சிற்றம்பலமுடை
யான் என்று தன்பெயரை குறிப்பிட்டான்.

எனவே திருச்சிற்றம்பலம் என்று சொல்லச் சொல்ல, நம்மை அறியாது செய்யும் பாபங்கள் எல்லாம் நீங்கி, நமது ஆன்மா புண்ணியம் பெறும்.
எனவே தினமும் “திருச்சிற்றம்பலம்” என இயன்றவரை அடிக்கடி சொல்ல வேண்டும்.

Wednesday, October 4, 2023

இன்று வியாழக்கிழமை திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில்

இன்று  வியாழக்கிழமை திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தனிச்சந்நிதியில் கோலோச்சும் ஸ்ரீபிரம்மாவை, கண் குளிரத் தரிசிப்போம்; மனம் குளிரப் பிரார்த்திப்போம். 
"ஓம் பரமேஸ்வராய வித்மஹே பர தத்வாய தீமஹி தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத் "

பிரம்மதேவனை வழிபடும்போது, அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை சொல்வது நன்மைகளை வழங்கும்.

பிரம்மா காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹரண்ய கர்ப்பாய தீமஹி
தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்

வேதங்களை உருவாக்கியவரை நாம் அறிந்து கொள்வோம். ஹிரண்யன் என்னும் பெயர் பெற்ற அந்தப் பரம்பொருளை தியானம் செய்வோம்.

பிரம்மதேவனாகிய அவர், நமக்கு நன்மை அளித்து, காத்து அருள்வார் என்பது இதன் பொருள்.

⚜️இந்த காயத்ரி மந்திரத்தை, பிரம்மதேவனை வழிபடும் போது தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கேட்ட வரம் கிடைக்கும்.

⚜️வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக அமையும்…
நம் பாவங்களையும் கிரகங்களால் உண்டான தோஷங்களையும் போக்கி அருளுவார். பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடச் செய்வார் பிரம்மா
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் பிரம்மா  வெள்ளைத் தாமரை சாத்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும். 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் சேரும்
பிரம்மா  காயத்திரி 
திருப்பட்டூர் பிரம்மா     திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், சமய புரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பட்டூர் திருத்தலம் உள்ளது. இங்கு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
* இத்தலத்தில் 3001 வேதம் ஓதுபவர்கள், அனு தினமும் வேதங்களை பாராயணம் செய்ததால் ஏற்பட்ட அதிர்வலைகள் அனைத்து இடங்களிலும் பரவிக் கிடந்ததால் ‘திருப்பிடவூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ ஆனது.
* புலியின் கால்களைப் பெற்றிருந்தவர் ‘வியாக்ர பாதர்’. இவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய தேர்வு செய்த திருத்தலம் இதுவாகும்.
* இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
* இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணரை வணங்கி தொழுததால், ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.
* திருக்கயிலாய ஞான உலா என்னும் நூல் அரங்கேறிய இந்தத் தலத்தில், கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், பின் அவர்களே இறைவனாக மாறிப்போவதும் நிகழும் என்பது ஐதீகம்.
* சிவபெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.
* சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர். அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக் கொண்டது திருப்பட்டூர் என்ற இந்த திருத்தலத்தில் தான்.
* பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளமும், சிவலிங்கச் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
* பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பிரம்ம சம்பத் கவுரி என்ற திருநாமத்துடன் அம்பாள், கனிவு ததும்ப.. கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புடவை சாத்தி வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் இனிதே நடைபெறும்.
* பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.
* குரு பகவானுக்கு அதி தேவதையான பிரம்மா, இந்த ஆலயத்தில் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். பிரம்மாவை வணங்கும் போதே, குரு தட்சிணாமூர்த்தியையும் கண்டு தரிசிக்கலாம்.
* இங்குள்ள சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
* தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடிகொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.
* தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
* இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் வீற்றிருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வரியம் கிடைக்கும்.
* 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட திருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்து பெங்களூரு, ஆந்திரா முதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.
* இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வ நாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து வணங்குபவர்களுக்கு புத் துணர்ச்சி கிடைக்கும்.
* திருப்பட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள்.
* இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சன்னிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சாத்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
* வெள்ளைத் தாமரை சாத்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும். 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் சேரும்

Sunday, October 1, 2023

சிவசின்னங்களாக போற்றப்படுபவை…..திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

சிவ   சிவ

   ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்  
********************************************
1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை…..

திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்….

ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்…..

தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?

திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்…..

திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்……

பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்………

திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்…….

திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது………..

துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது………

கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்…..

கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்….

நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்…

சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்…

காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்…

திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்…

மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை
 மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்…

சின்முத்திரை

19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்…

சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்…

ஸ்ரீசைலம்(ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்…

ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்….

திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்….

திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்….

பரணிதீபம் (அணையா தீபம்)

25. அருணாசலம் என்பதன் பொருள்…

அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை…

ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்…

பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு…

1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்…

திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ….தெய்வங்களுக்கு உரியது

சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்…..

24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்….

அனுமன்

33.நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?

திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்….

அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?

108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்…

காரைக்காலம்மையார்

38.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர்……

அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..

ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்….

குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்…

சங்கார தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?

வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்…

பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்….

திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்….

களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்…

தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்….

காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்…

பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ….திருமுறையாகும்

பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்…

திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

 நமச்சிவாய வாழ்க
 இறை பணியில்
இரா. இளங்கோவன்

இதுதான் நெல்லை! தாமிரபரணி நதிக்கரையை சுற்றியுள்ள கோவில்கள் !

🔥🙏🏼🕉️ #இதுதான் நெல்லை! தாமிரபரணி நதிக்கரையை சுற்றியுள்ள கோவில்கள் !
🙏🏼🔥#தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.

🙏🏼#அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர். 🙏🏼

1. 🔥🔱#காந்திமதி நெல்லையப்பர் கோவில்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்
இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பபெற்றதுக்கது.
இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

2. சபை சிவாலயங்கள்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 🙏🏼

* சித்ர சபை - திருக்குற்றாலம்
* தாமிர சபை- திருநெல்வேலி

3. முப்பீட தலங்கள்
* அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்
* ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
* வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

4. பஞ்ச ஆசன தலங்கள்
* ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
* களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
* நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்
* விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
* செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்
* தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்
* சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
* கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
* தாருகாபுரம் - நீர் தலம்
* தென்மலை- காற்று தலம்
* தேவதானம் - ஆகாய தலம்

5. காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்
* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
* ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
* கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
* திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
* பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

6. ராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்
* களக்காடு- சத்யவாகீசர்
* பத்தை - குலசேகரநாதம்
* பதுமனேரி - நெல்லையப்பர்
* தேவநல்லூர் - சோமநாதம்
* சிங்கிகுளம் - கைலாசநாதம்

7. நவ சமுத்திர தலங்கள்
* அம்பாசமுத்திரம்
* ரவணசமுத்திரம்
* வீராசமுத்திரம்
* அரங்கசமுத்திரம்
* தளபதிசமுத்திரம்
* வாலசமுத்திரம்
* கோபாலசமுத்திரம்
* வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
* ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

8. பஞ்ச பீட தலங்கள்
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
* கூர்ம பீடம் - பிரம்மதேசம்
* சக்ர பீடம் - குற்றாலம்
* பத்ம பீடம் - தென்காசி
* காந்தி பீடம் - திருநெல்வேலி
* குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

9. சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)
* பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
* அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
* திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
* கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
* முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
* தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)
* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
* வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
* கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்
* சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்
* மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
* ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
* தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்
* அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்
* காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)

10. வாலி வழிபட்டத் தலங்கள்
* திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்
* பாபநாசம் - சூரியன்
* சேரன்மகாதேவி - சந்திரன்
* கோடகநல்லூர் - செவ்வாய்
* குன்னத்தூர் - இராகு
* முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

11. வேறு சில ஆலயங்கள்
* இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
* நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.
* நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.
* சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்ற
தாமிரபரணி மஹா புஷ்கர் வைபவம் அக்டோபர் 11 ஆம் தேதி முதல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நடக்கிறது. வாருங்கள், தாமிரபரணி அன்னையின் அருள் பெறுங்கள்🙏🏼

Friday, September 29, 2023

சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர்

மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் ஜோதிடம் பார்க்கப்பட்டபோது மார்க்கண்டேயன் நீண்டகாலம் உயிர்வாழமாட்டான் பதினாறு வயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறுதான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது. சிவபெருமானிடம் மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தான்.பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகின்றார். அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வருகின்றனர். ஆனால் மார்கண்டேயனிடம் நெருங்கமுடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைக்கடா மீது வருகின்றார். உயிர்வாங்க பாசக் கயிற்றினை வீசுகின்றான். என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைக்கின்றார். என்றும் பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார்

Wednesday, September 27, 2023

அருள் தரும் ஸ்படிக லிங்கங்கள்...!

அருள் தரும் ஸ்படிக லிங்கங்கள்...!
ஆதிசங்கரர் கயிலாய மலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வழியில் காட்சி தந்த சிவபெருமானால், அவருக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்கள் தரப்பட்டன.

அவை முக்திலிங்கம், வரலிங்கம், மோட்சலிங்கம், போகலிங்கம், யோகலிங்கம் என்பனவாகும்.

அவற்றை பெற்ற ஆதிசங்கரர், சிவபெருமான் அருளியபடி, ஐந்து தலங்களில் பிரதிஷ்டை செய்தார். 

அவற்றில் முக்தி லிங்கம் கேதார்நாத்திலும், வரலிங்கம் நேபாளத்தில் உள்ள நீலகண்டத்திலும், மோட்ச லிங்கம் சிதம்பரத்திலும், போக லிங்கம், கர்நாடகா சிருங்கேரியிலும், யோக லிங்கம் காஞ்சீபுரத்திலும் அமைக்கப்பட்ட
சிதம்பரத்தில் சந்திர மவுலீஸ்வரராகவும், மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலிலும், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும், ராமேஸ்வரத்திலும் ஸ்படிக லிங்கங்கள் அருளாட்சி செய்து வருகின்றன.

முக்கியமாக ராமேஸ்வரம் தலத்தில் அதிகாலை நான்கு மணிக்கு ஸ்படிக லிங்க தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் இருக்கும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

விபீஷணனால் கொண்டு வரப்பட்டதோடு, ராமரும் சீதையும் பூஜித்த விஷேச லிங்கமாகவும் இது கருதப்படுகிறது.

திருவெண்காடு தலத்திலும், திருநெல்வேலி சங்கரன்கோவிலிலும் ஸ்படிக லிங்க வழிபாடு பிரசித்தம்.

தன்னருகில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை பிரதிபலிக்கக்கூடியதால், ஸ்படிகமானது மங்களகரமான ஒன்றாக கருதப்படுகிறது.

ஓம் நமசிவாய

இறை பணியில்
இரா. இளங்கோவன்

Tuesday, September 26, 2023

செல்வத்தை ஈர்க்கும் புதன்கிழமை பிரதோஷம்!

செல்வத்தை ஈர்க்கும் புதன்கிழமை பிரதோஷம்! 
சிறப்பு : புதன்கிழமை பிரதோஷம்,

வழிபாடு : சிவாலயங்களில் மாலை   வேளையில் நந்தீஸ்வரருக்கு , சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வில்வமாலை அணிவித்து வழிபடுதல்.

புதன்கிழமை பிரதோஷம்! புத்திசாலி பிள்ளைகள் பிறக்க சிவ தரிசனம் செய்யுங்க!
புதன்கிழமை நாளில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது. இன்று மாலையில் சிவ ஆலயம் சென்று அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி இறைவனை தரிசிக்க வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். 16 வகை செல்வங்கள் கிடைக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். புத்திர பாக்கியம் கிடைக்கும். 

சிவன் நந்தி அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித்தர நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி மளமளவென்று நடைபெறும்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும்.

செல்வம் என்பது பணம் மட்டுமல்ல... அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன் கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாடு தான் சிறந்த நாள்.
 புதன்கிழமையில் பிரதோஷம் அமைந்திருப்பது நற்பலன்களைத் தந்தருளக்கூடியது.இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள்.

புதன் கிழமையில் வரும் பிரதோஷ விரதம் இருப்பவர்கள், செவ்வாய்கிழமை மாலையிலேயே நன்றாக குளித்து சிவ ஆலயத்திற்கு சென்றோ அல்லது வீட்டிலிருந்தோ சிவனை வழிபட்டு  'ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து 108 முறை உச்சரிக்க வேண்டும். பின்னர் இரவு எளிய உணவு எடுத்து உறங்கிவிடுங்கள்.

புதன்கிழமை காலையில் எழுந்து குளித்து, அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு செருப்பு போடாமல் நடந்து சென்று சிவ பெருமானையும், நந்தி பகவானையும் வழிபட்டு, நான் புதன்கிழமை பிரதோஷ விரதம் இருக்கின்றேன், என் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை செல்வ தடைகளும் காணாமல் போக வேண்டும் என வேண்டி கோயிலில் அமர்ந்து 108 முறை ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை கொடிமரத்திற்கு அருகில் அல்லது, தல விருச்சத்திற்கு அருகில் அல்லது நந்தி பகவானுக்கு அருகில் அமர்ந்து உச்சரிக்கவும்.

பிரதோஷ வேளையில் சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு கண் குளிரத் தரிசியுங்கள். நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலை அணிவித்தால் தொழில் தடைகள் நீங்கும். 

சிவ வழிபாடு செய்து, சிவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள்.
கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களை யெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.

பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். புதன் கிழமையன்று வரும் பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.

இறைவழிபாடு எதற்கு ?

#இறைவழிபாடு எதற்கு ?? நாம் சிறுவயதில் இருந்தே இறைவழிபாட்டுக்குள் கொண்டுவரப்பட காரணம் ??
எப்போதும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளவும் !! 
தேவையற்ற பயத்தில் இருந்து விடுபடவும் !!
எதிலும் துவண்டு விழாது தைரியத்துடன் எதிர்கொள்ள !!
நமக்கு என்று ஒருவன் எப்பொதும் உடன் இருக்கிறான் என்ற நிதர்சனத்தை அனுபவிக்கவும் !!
எந்த முயற்சியையும் ஓர் உத்வேகத்தோடு செய்ய இருக்கும் இணையை உணரவும் !!
மனசோர்வு ஏற்படும்போது எல்லாம் இறைவன் இருக்கிறான் என்ற தெம்பை பெறவும் !!
எதிலும் தெளிவை பெறவும் !! 
 இதற்க்கு தான் இறைவழிபாடே !!

இதற்க்கு மாறாக எதையாவது சொல்லி !!
பயத்தை நீக்குபவனையே காட்டி பயமுறுத்துவது !!
இதை செய்தால் என்று பரிகாரம் சொல்லை காசு பார்ப்பது !!
இதை தந்து அதை பெற்றுக்கொள்ள என்று பேரம் பேசுவது !!
இதை உடனே ஷேர் செய்தால் என்று மடத்தனத்தை விளைவிப்பது !!
இப்படி எதையாவது செய்து எதிர்மறையான எண்ணத்தை கொண்டுவருவது இறைவழிபாடே அல்ல ..

இறைவன் கருணைவடிவாய், ஆனந்த ரூபமாய், அங்கு இங்கு என்று பிரித்து பார்க்க நினைக்க முடியாதபடி எதிலும் எப்போதும் கலந்திருந்தது அருளாலை பொழிந்து கொண்டே இருக்கும்  நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட நிதர்சனமானவனே இறைவன் ..

அப்படியானவனின் துணை இணை என்று நம்மோடு கலந்தே இருந்து எதுவுமான அரவணைத்து காத்து அருளிக்கொண்டே இருக்கிறான் !!
அத்தகையவன் இருப்பால் இருந்து வாழ்ந்து இறைவனால் ஆனந்தமாக வாழ்வதை உணர்வே இறைவழிபாடு 

ஓம் நமசிவாய

இறை பணியில் இரா. இளங்கோவன். 

Sunday, September 24, 2023

இறை நம்பிக்கை அவசியமா?

இறை நம்பிக்கை அவசியமா?
சீடன் ஒருவன், "குருவே! இறை நம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா?" என்று சந்தேகம் கேட்டான்.

''சமயம் வரும் போது சொல்கிறேன்" என்றார்.

சில நாட்கள் கழித்து அந்தச் சீடன், ஆசிரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான். அச்சமயம் அங்கு வந்த குருநாதர்,

''சீடனே... பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா?" எனக் கேட்டார்.

குழம்பிய சீடன், "சுவாமி என்ன சொல்ல வருகிறீர்கள்?" எனக் கேட்டான்.

'இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய்? இது உன் பேச்சைக் கேட்காதா? ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய்? கயிறை விட்டால் அது ஓடிவிடும்!. அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லைதானே? ''

''குருவே, பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன், என்றாலும், அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன்.''

''உன்னைப் போலத்தான் இறைவனும், மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து, சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக, இறை நம்பிக்கையையும் மதக் கடமைகளையும் கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்துகிறார். உனது அன்றைய கேள்விக்குப் பதில் இதுதான்! ''

குரு சொல்ல, ஆசிரியரின் மேன்மை உணர்ந்தான் சீடன்.

வளரும் விநாயகர் சிலை🙏 சிவ-பார்வதி கைலாயக்காட்சி...!!

🐘 அருள்மிகு ஆனைகுட்டே விநாயகர் திருக்கோயில்...!!
🙏 வளரும் விநாயகர் சிலை🙏 சிவ-பார்வதி கைலாயக்காட்சி...!!

அருள்மிகு ஆனைகுட்டே விநாயகர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

🙏 கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கும்பாசி என்னும் ஊரில் அருள்மிகு ஆனைகுட்டே விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

🙏 சம்ஸ்கிருதத்தில் கஜகிரி என்றும், கன்னடத்தில் ஆனைகுட்டே என்றும் வழங்கப்படுகிறது இத்தலம்.

🙏 ஆனை என்றால் யானை, குட்டே என்றால் குன்று, அதனால் இந்த இடத்திற்கு ஆனே குட்டே என்று பெயர் வந்தது.

🙏 யானை முகத்துடன் நின்ற நிலையில் இங்கு சுயம்புவாய் விநாயகர் காட்சி அளிக்கிறார்.

🙏 ஆனைகுட்டே விநாயகர் 12 அடி உயரம் உடையவர். ஒரே கல்லில் (யானை ரூபத்தில்) உள்ளார்.

🙏 இங்கு அமைந்துள்ள விநாயகருக்கு திருநீறுக்கு பதிலாக நெற்றியில் நாமம் அணியப்பட்டுள்ளது.

வளரும் கணபதி : வரம் தரும் வர ஹஸ்தம், சரணடைந்தோரைக் காக்கும் அபய ஹஸ்தம் என இங்கு அமைந்துள்ள விநாயகர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். தினமும் இவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்படும். இந்த விநாயகர் சிலை வளர்ந்து வருவதாகவும் பக்தர்களிடம் நம்பிக்கையுள்ளது.

வேறென்ன சிறப்பு?

🙏 இங்கு அமைந்துள்ள விநாயகரை விஷ்ணு ரூப கணபதி, விஷ்ணு ரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்கின்றனர்.

🙏 இக்கோயில் வாசலில் சிவ-பார்வதி கைலாயக் காட்சியை தரிசிக்கலாம்.

🙏 இங்கு, அருகில் அமைந்திருக்கும் மகாலிங்கேஸ்வரர் கோயில் பிராகாரத்தில் உள்ள கிணற்றில் இருந்துதான் விநாயகரின் அபிஷேகத்துக்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

🙏 விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி, மார்கழி பிரம்மோற்சவம் ஆகியவை இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

🙏 கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திர பாக்கியம், வியாபாரத்தில் லாபம் கிடைக்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🙏 பிரார்த்தனைகள் நிறைவேறியவுடன் 400 கிலோ அரிசி, 1008 அல்லது 125 தேங்காய்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதனை மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை என்கின்றனர்.

🙏 கு பண்பரசு

Wednesday, September 20, 2023

சனி யாரை பாதிப்பதில்லை ?'சனி கொடுக்க எவர் தடுப்பார்'

சனி யாரை பாதிப்பதில்லை ?
'சனி கொடுக்க எவர் தடுப்பார்'
1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.
2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.
3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.
4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.
5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.
6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.
7. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி. அதாவது சத்தியம் தவறாதவரை.
8. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.
9. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.
10. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.
11. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.
தீமை தரும் சனி பார்வை
1. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.
2. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.
3. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.
4. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.
5. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவம் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.
6. பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனிக்கு பிடிக்கும்.
7. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.
8. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும்.
9. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில்¢ ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.
10. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.
11. தாயிக்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.

சிவன் கோவில்களில் நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா?

அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய 

சிவன் கோவில்களில் நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா? 
சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும்.

அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி.

இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார்.

தவத்தால் மனம் குளிர்ந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.

காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார்.

அதில் தங்க விக்ரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது.

அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார்.

நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார்.

இவர் மீது பற்று கொண்டு நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார்.

நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது.

சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார்.

தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர்.

இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர்.

அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு.

இதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார்.

இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்.

இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார்.

#புரிந்துவிட்டதா..?

இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள்.

அப்படி நீங்கள் சொன்னால் , அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும்.

Saturday, September 9, 2023

விதியை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்.

விதியை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்.
தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மன். அவருக்கு திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. திருப்பட்டூரில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு பிரம்ம நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் அருள்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மணடபம் ஆகியவற்றைக் கடந்ததும் அர்த்த மண்டபம் வரும். அதை அடுத்து கருவறை இருக்கிறது. இங்கு லிங்கத் திருமேனியில், பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ‘மண்டூகநாதர்’, ‘கயிலாசநாதர்’ போன்ற பெயர்களும் உள்ளன. இங்குள்ள அன்னை பிரம்ம நாயகிக்கு, ‘பராசக்தி’, ‘பிரம்ம சம்பத் கவுரி’ என்ற பெயர்களும் உண்டு. பல்லவர்கள் காலம் தொடங்கி, நாயக்க மன்னர்கள் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் இது.

இந்த ஆலயத்தில் பங்குனி மாதத்தில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணியளவில், சூரியனின் பொற்கதிர்கள், பிரம்மபுரீஸ்வரர் மீது விழும். கோவில் உட்பிரகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தியான நிலையில் ஆறடி உயரத்தில் கமண்டலத்துடன் தாமரை மீது பத்மாசன கோலத்தில் அருள்பாலிக்கிறார் பிரம்மன். இவருக்கு முன்பக்கம் மூன்று முகம் உள்ளது. பின்புறம் ஒரு முகம் ஆக நான்கு முகங் களுடன் காட்சியளிக்கிறார். வலது கையில் ருத்ராட்ச மாலையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்தியிருக்கிறார். இந்த பிரம்மதேவனுக்கு, பக்தர்கள் தாங்களே அரைத்து தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக அலங்காரம் செய்யப்படுகிறது.

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னிதி பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தல வரலாறு படைக்கும் கடவுள் பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மன். அழிக்கும் ஈசனை விட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். ஈசனையும் மதிக்கத் தவறினார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கொய்து, படைப்பு தொழிலை தனதாக்கிக் கொண்டார்.

தன் தவறை உணர்ந்த பிரம்மன், பல தலங்களுக்குச் சென்று சிவலிங்கம் அமைத்து பூஜித்தார். பிரம்மன் வழிபட்ட பல தலங்களில், இறைவனின் திருநாமம் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்றே அழைக்கப்படுகிறது. அதன்படி திருப் பட்டூரில், துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், அவருக்கு மீண்டும் படைப்பாற்றலை வழங்கினார். அதோடு, இத்தலம் வந்து பிரம்மனை வழிபடுவோருக்கு, கூடுதல் பலன் கிடைக்கும் என்றும் ஆசி வழங்கினார். பிரம்மனுக்கு வரம் வழங்கியதால் இத்தலத்து இறைவன், ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜயை வழங்கியதால், இத்தல அன்னைக்கு ‘பிரம்ம சம்பத்கவுரி’ எனப் பெயர். பதஞ்சலி சித்தர் வாழ்ந்த திருத்தலம் திருப்பட்டூர். இவர் இந்த தலத்தில் லிங்க உருவில், பிரம்மாவின் அருகில் உள்ளார்.
வடக்கு பிரகாரத்தில் சண்டீகேஸ்வரர் சன்னிதியும், அதன் அருகே பாதாளகேஸ்வரர் சன்னிதியும் உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாளகேஸ்வரர் சன்னிதிகள் இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று. கோவில் உட்பிரகாரத்தில் கற்பக விநாயகர், பழமலை நாதர், கந்தபுரீஸ்வரர், கஜலட்சுமி, நடராஜர், கால பைரவர், சூரியன் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அம்மன் சன்னிதிக்கு அருகே தாயுமானவர் சன்னிதி, பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம் உள்ளன. அம்மன் சன்னிதியை அடுத்துள்ள வெளிவட்டத்தில் சப்தரிஷீஸ்வரர், காளத்திநாதர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேசுவரர், ஏகாம்பரேஸ்வரர், மண்டூக்யநாதர் ஆகியோரது தனித் தனி சன்னிதிகள் உள்ளன.
ஆலயத்தின் தல விருட்சம், மகிழ மரம். இந்த ஆலயத்தில் உள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களை தட்டினால் மனதை வருடும் மெல்லிய நாதம் வந்து நம்மை சிலிர்க்க வைக்கும். இங்கு அருள்பாலிக்கும் தன்னை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு இங்குள்ள பிரம்மதேவன் வழிகோலுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.அமைவிடம் திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இத்தலம்.

Wednesday, August 23, 2023

சிவபெருமானை வழிபட்டால் முக்தி நிச்சயமா ? கண்டிப்பாக

சிவபெருமானை வழிபட்டால் முக்தி நிச்சயமா ? கண்டிப்பாக , ஒவ்வொரு ஜீவராசிக்கும் சிவன் முக்தி கொடுக்கவே அவற்றையும் நாம் முக்திபெறவே நம்மையும் படைத்துள்ளார் உண்மை உணர்ந்தாள் தீய எண்ணங்கள் நம்மை அண்டாது பாவச்செயல்கள் செய்ய மனசு இடம் கொடுக்காது அனைவரும் சிவத்தை வழிபாட்டு முக்தி பெற்று வந்த நோக்கத்தை நிரட்டைவேற்றி சிவபெருமான் திருவடிகளில் சரண் அடைவோம் 
அரஹர அரஹர அரஹர லிங்கம்
சிவசிவ சிவசிவ சிவசிவ லிங்கம்

🕉விலங்குகள் இறைவன் சிவபெருமானை வழிபட்டு முக்தி பெற்ற தலங்கள் மற்றும் அதன் வரலாற்றை காண்போம்.

🕉புலி சிவபெருமானை வழிப்ட்ட தல்ம்-திருப்புலிவனம்.

காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் திருப்புலிவனத்தில் திருப்புலிவனமுடையார் என்ற பெயரில் சிவபெருமான் அருள்கிறார்.

சாபத்தால் புலியாக மாறிய முனிவர் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார்.

🕉பசு சிவபெருமானை வழிபட்ட தலம்-சங்கரன் கோவில்

நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன் கோவிலில் அம்பிகை தேவர்கள் சூழ்ந்திருக்க சிவனை வழிபட்டிருக்கிறார்.கோ எனும் பசு வழிபட்ட்தால் அம்பிகை கோமதி என அழைக்கப்படுகிறாள்

🕉சிலந்தி மற்றும் யானை சிவபெருமானை வழிபட்ட தலம்-திருவானைக்காவல்

திருச்சிராப்பள்ளியில் காவிரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள தலம் இது.

இங்கு சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில்,மழையில் கிடந்தது.

சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில்.மழை,மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தில் விழாமல் தடுத்தது.

யானை தன் துதிக்கை மூலம் காவேரி ஆற்றில் நீரும்,பூவும் கொண்டுவந்து வழிபட்டது.யானை சிலந்தி பின்னிய வலையை அழித்துவிட்டு செல்லும்.

சிலந்தி மீண்டும் வலைபின்னி வழிபாட்டை தொடரும்.

யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி அதன் துதிக்கையில் நுழைய இரண்டும் மடிந்தன.

இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவன் யானையை சிவகணங்களுக்கு தலைவனாக ஆக்கினார்.சிலந்தி மறுபிறவில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாக பிறந்தது.

🕉எறும்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம்-திருவெறும்பூர்

அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம்.

திருச்சி மாவட்டம்,திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் பிரசாததை எறும்புகள் எடுத்துக்கொள்கிறது.

🕉 ஈ - வடிவில் அகத்திய முனிவர் சிவனை வழிபட்ட தலம் -திரு ஈங்கோய்மலை.

திருச்சி மாவட்டம், தொட்டியம் to முசிறி செல்லும் வழியில் அமைந்துள்ளது திரு ஈங்கோய்மலை (திருவிங்கநாதமலை)

🕉பாம்புக்ள் சிவபெருமானை வழிபட்ட தலம்-திருப்பாம்புரம்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்து சிவனை ஆதிசேசன் என்ற பாம்பு வழிபட்டுள்ளது.

🕉அணில்,குரங்கு,காகம் -சிவபெருமானை வழிபட்ட தலம்-குரங்கணில் மூட்டம்.

சாபத்தால் காகமாக மாறிய எமனும்,அணிலாக மாறிய இந்திரனும்,குரங்காக மாறிய வாலியும் இங்குள்ள சிவனை வழிபட்டிருக்கிறார்கள். இத்தலம் காஞ்சிபுரம் மாமண்டூர் எனும் இடத்தில் உள்ளது.

🕉மயில்-சிவபெருமானை வழிபட்ட தலம்-மயிலாடுதுறை

சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை சிவனை வழிபட்ட தலம்.

🕉கழுகு சிவபெருமானை வழிபட்ட தலம்-திருக்கழுக்குன்றம்.

நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் கழுகுகள் சிவபெருமானை பூஜித்து வருகின்றன.

🕉வண்டு-சிவபெருமானை பூஜித்த தலம்-திருவண்டுதுறை.

திருவாரூர் மாவட்டம்,திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்தார்.

இன்றும் இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலியை கேட்க முடியும்.

🕉நண்டு-சிவபெருமானை வழிபட்ட தலம்-நண்டாங்கோவில்.

சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன் இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றான்.
இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.

🕉சக்ரவாகப் பறவை-சிவபெருமானை பூஜித்த தலம்-திருச்சக்கராப் பள்ளி.

தஞ்சாவூர் மாவட்டம்,திருச்சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோவில் இது.

🕉யானை-சிவனை பூஜித்த தலம்-திருக்கொட்டாரம்.

துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது.

🕉பசு-சிவனை வழிபட்ட தலம்-பட்டீஸ்வரம்.

தஞ்சாவூர் மாவட்டம்,பட்டீஸ்வரத்தில் காமதேனு என்ற பசுவின் மகளான பட்டி என்ற பசு வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.

🕉ஆமை-சிவபெருமானை பூஜித்த தலம்-திருக்கச்சூர்

இங்குள்ள சிவனை வழிபட்டு திருமால் மந்தார தாங்குவதற்கு( கூர்மமாக)தேவையான சக்தியை பெற்றுள்ளார்.

🕉கிளி வழிபட்ட தலம்-சேலம் சுகவனேஸ்வரர்.

கிளியாக மாறிய சுக முனிவர் வழிபட்ட சிவன் சேலத்தில் சுகவனேஸ்வரராக அருள்கிறார்.

🕉சிட்டுக்குருவி சிவனை பூஜித்த தலம்-வட குரங்காடுதுறை.

தன்னை வழிபட்ட சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்துள்ளார் இங்குள்ள சிவன்.

அதனால் சிட்டிலிங்கேஸ்வரர் என வணங்கப்படுகிறார்.

🕉இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களுக்கு சளைத்தவை அல்ல விலங்குகள்.

அதன் காரணம் தேவர்களோ,முனிவர்களோ தான் பெற்ற சாபத்திற்க்கு விலங்காக மாறி சிவபெருமானை வழிபட்டிருக்கிறார்கள்.

இது வெறும் கதை அல்ல.உண்மையில் நடந்த சம்பவத்திற்கான வரலாறு இருக்கிறது.

சில உயிரினங்கள் தன்னை அறியாமலே இறைவனை பூஜித்து பேறு பெற்றுள்ளன.

🕉 இன்னும் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் விலங்குகள் இறைவனை வழிபட்ட தலங்கள் பலவற்றை அறிய முடியும்.
அரஹர அரஹர அரஹர லிங்கம்
சிவசிவ சிவசிவ சிவசிவ லிங்கம்

கருணையின் வடிவே கைலாச லிங்கம்
காசினி காக்கும் விசுவ லிங்கம்
திருப்பரங் குன்றின் பரங்குன்ற லிங்கம்
திருவா னைக்காவில் ஜம்புலிங்கம்

ஆடல் புரிந்த கூடல்லிங்கம்
🕉ஓம் நமசிவாய🕉

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...