Friday, September 29, 2023
சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர்
மிருகண்டு முனிவர் மருத்துவவதியைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாக அவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாமல் இருந்தது. சிவபெருமானை மனமுருகித் தொழ அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயர் சூட்டிமகிழ்ந்தனர் மிருகண்டு முனிவரும் மருத்துவவதியும் ஜோதிடம் பார்க்கப்பட்டபோது மார்க்கண்டேயன் நீண்டகாலம் உயிர்வாழமாட்டான் பதினாறு வயதில் அவன் இறந்துவிடுவான் என்று கூறப்பட்டது. மற்ற ஞானிகளும் அவ்வாறுதான் நடக்கும் என்றனர். பெற்றோர் அழுதனர், புலம்பினர், விதியை வெல்லமுடியாது என்று மனம் சாந்தியடைந்தாலும் பதினாறு வயதில் மார்க்கண்டேயர் இறந்துவிடுவார் என நினைத்து வேதனைப்பட்டனர். மார்க்கண்டேயர் வளந்தார். அவர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது. சிவபெருமானிடம் மார்க்கண்டேயன் பூரணமாகச் சரணாகதி அடைந்தான்.பதினாறு வயது வந்தடைந்து மார்க்கண்டேயர் சிவபூசையில் தன்னை மறந்து உட்கார்ந்து விடுகின்றார். அவரது உயிரை எடுக்க எமதூதர்கள் வருகின்றனர். ஆனால் மார்கண்டேயனிடம் நெருங்கமுடியவில்லை. இறுதியில் எமதர்மனே எருமைக்கடா மீது வருகின்றார். உயிர்வாங்க பாசக் கயிற்றினை வீசுகின்றான். என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார். எமதர்மன் மூர்ச்சையாகி கீழே சாய்கின்றார். பூமாதேவியின் வேண்டுகோளுக்கிணங்க எமதர்மனை சிவபெருமான் மன்னித்து மூர்ச்சை தெளியவைக்கின்றார். என்றும் பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Followers
திருமாணிக்குழி (திருமாணி)வாமனபுரீஸ்வரர் இங்கு பள்ளியறையே கருவறை
#பள்ளியறையே_கருவறையாக_இறைவன்_இறைவியை_விட்டு_இணைபிரியாமல் எப்போதும் சிவசக்தியாக இணைந்திருக்கும் தேவாரம் மற்றும் திருப்புகழ் பெற்ற நடுநாட்டுத...
-
பெண்ணையாறு கர்நாடகத்தில் உருவாகி தென் திசையில் பயணித்து பின் தமிழ் நாட்டில் கிழக்கு நோக்கித் திரும்பி, சுமார் 331.2 கி.மீ. தூரம் பயணித்து வ...
-
ஈசன் வீற்றிருக்கும் தலங்களை முழுமையாக கண்டவருமில்லை நம் வசிப்பிடத்தை சுற்றி உள்ள திருக்கோயில்களை காணாமல் போனால் இப்பிறவி எடுத்து...
-
காஞ்சி காமாட்சி அம்மன் பற்றிய பதிவுகள் தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்ம...
No comments:
Post a Comment