Wednesday, January 7, 2026

தீராத துயரத்திற்கும் தீர்வு தரும் குலதெய்வ தீப வழிபாடு

தீராத துயரத்திற்கும் தீர்வு தரும் குலதெய்வ தீப வழிபாடு
இந்த தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், 
வாசலில் நிற்கும் குலதெய்வம் கூட வீட்டிற்குள் வந்துவிடும்.

நம்முடைய குடும்பத்தில் இருக்கும் தீராத கஷ்டங்களை கூட உடனடியாக தீர்த்து வைக்கக் கூடிய சக்தி அந்த குல தெய்வத்திற்கு மட்டும்தான் உண்டு. 

குல தெய்வத்தை வழிபாடு செய்யவில்லை என்றால் நமக்கு உதவ மற்ற தெய்வங்கள் கூட வராது என்று சொல்லுவார்கள். 

அது உண்மைதான். 

குல தெய்வத்தை நாம் மறந்து விட்டோம் என்றால், மற்ற தெய்வங்கள் நம்மை மறந்து விடும். 

ஆக ஒரு குடும்பம், குலதெய்வ வழிபாட்டை மறக்க கூடாது. 

காலமும் நேரமும் நமக்கு எதிராக செயல்படும் போது, ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம்முடைய கெட்ட நேரம் நம்முடைய மனதிலிருந்து குலதெய்வ நினைப்பை நீக்கிவிடும்.

குல தெய்வத்தை நாம் சில காலம் நினைவு கூறாமல் விட்டு விட்டால், அந்த இடைப்பட்ட காலத்தில் நம்மை அறியாமலேயே பல சிக்கல்களில் சிக்கி இருப்போம். 

அதன் பின்புதான் 
நமக்கு நினைவிற்கு வரும், நாம் குல தெய்வ வழிபாட்டை மறந்து விட்டோமே என்று! 

இதுவும் நம்முடைய கெட்ட நேரம் செய்யும் சதி தான். 

எனவே எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து குலதெய்வத்தை ஒரு நொடி பொழுது நினைக்க மறக்காதீர்கள்.

சரி, தீராத கஷ்டங்கள் தீராத துன்பங்களில் சிக்கிக் கொண்டீர்கள். 

அதிலிருந்து விடுபட குலதெய்வ வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும்? 

அடுத்தபடியாக சில பேருடைய வீட்டில் குலதெய்வம் 
வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நின்று கொண்டிருக்கின்றது என்றும் சொல்லுவார்கள். 

அந்த தெய்வம் வீட்டிற்குள் வருவதற்கு ஏதோ ஒரு தடை, ஏதோ ஒரு கட்டு உள்ளதாகவும் சொல்லுவார்கள். 

இதை உடைத்தெறிந்து குலதெய்வத்தை வீட்டிற்கு வர வைக்க என்னதான்  வழி?

இலுப்பை எண்ணெய் தீப வழிபாடு தான் அது. 

நிறைய பேருக்கு இலுப்பை எண்ணெய் வீட்டில் தீபம் ஏற்றலாமா?என்ற சந்தேகம் இருக்கிறது. 

கூட்டு எண்ணெயில் கலக்காமல் தனியாக சுத்தமான இலுப்பை எண்ணெய்யை, நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி வீட்டுக்கு எடுத்து வந்து அந்த எண்ணெயில் பஞ்சு திரி போட்டு குலதெய்வத்தை நினைத்து தீபமேற்றினால் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தையும் அந்த குலதெய்வம் விலக்கி விடும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

குலதெய்வத்திற்கு இழுப்ப எண்ணை தீபம் ஏற்றும் போது நம்முடைய வீட்டில் தடைப்பட்டுவந்த மங்களகரமான காரியங்கள் நடக்கும். 

நம்முடைய வீட்டில் தேன் போல இனிமையான விஷயங்கள் நடக்கத் தொடங்கும். 

நம் கண்ணுக்குத் தெரியாத வரக்கூடிய பிரச்சனைகள், எதிரி பிரச்சனை, பணக்கஷ்டம், எதிர்மறை ஆற்றலினால் வரக்கூடிய பிரச்சனைகள் இன்னும் பல கசப்பான விஷயங்களை இந்த கரு மிளகு அழித்துவிடும்

எனவே குலதெய்வத்தை நினைத்து தாராளமாக மேற்கூறிய முறையில தீபத்தை ஏற்றலாம். இதில் தவறு ஏதும் கிடையாது.

இப்படியாக குடும்பத்திற்கு தேவையான ஒட்டுமொத்த நல்லதையும் நம் 
குல தெய்வத்திடம் இருந்து பெற வேண்டுமென்றால் குலதெய்வத்தை நினைத்து வாரம்தோறும் 
ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று  இலுப்பை எண்ணையில் கலந்து பஞ்சு கலந்து தீபம் ஏற்றலாம்

உங்களுடைய குலதெய்வமே உங்களுக்கு தெரியவில்லை என்றால் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தீபத்தை வீட்டில் ஏற்றுங்கள்.

பெயர் தெரியாத என் குலதெய்வம் என் குலத்தைக் காக்க வேண்டும் என்று நினைத்து, தெரியாத குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு தீபமேற்றினாலும் பலன் முழுமையாக கிடைக்கும்.

உங்கள் குல தெய்வத்திற்கு தெரியும். நீங்கள் யார் என்பது! 

குலதெய்வமே தெரியவில்லை என்றாலும், அந்த 
குல தெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். 

நம்பிக்கை உள்ளவர்கள் உங்களுடைய வீட்டில் மேற்கூறிய முறையில் தீபத்தை ஏற்றி குலதெய்வத்தின் மனதை மகிழ்விக்கலாம் 

மேலும் உங்கள் கோரிக்கையை குலதெய்வத்திடம் வைத்து 48 நாட்கள் தொடர்ந்து பிரம்ம முகூர்த்த நேரத்தில், 
2 மண் அகல் தீபங்களில்  பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். 

உங்களுடைய கோரிக்கை எப்பேர்ப்பட்ட கோரிக்கையாக இருந்தாலும் அந்த குலதெய்வம் 48 நாட்களில் நிறைவேற்றித் தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

 மேலும் குலதெய்வ திருப்பணிகள் நடக்கும் போது அதற்கு தேவையான அளவு உதவி செய்ய வேண்டும். இதனால்
குல தெய்வம் பற்றிய விபரம் தெரியாதவர்களுக்கு
 குலதெய்வம் உங்கள் வீட்டிற்குள் வரும் என்பது உறுதி

நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாமே.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

இந்திரன் சாபம் நீங்கிய சக்திபுரீஸ்வரர்

இந்திரன் சாபம் நீங்கிய சக்திபுரீஸ்வரர் ஆலயம் . நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது சக்திபுரீஸ...