Showing posts with label #shashti Bhojai #Murugan viratam #Murugan temple #Hindu temple #Palani #Thiruparankundram #Tamilnadu #India. Show all posts
Showing posts with label #shashti Bhojai #Murugan viratam #Murugan temple #Hindu temple #Palani #Thiruparankundram #Tamilnadu #India. Show all posts

Saturday, May 31, 2025

வைகாசி வளர்பிறை சஷ்டி சிறப்பு.

வைகாசி வளர்பிறை சஷ்டி
*தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு அடுத்தபடியாக முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட உகந்த மாதம் வைகாசி மாதமாகும்*. *இந்த மாதத்தில் வரும் சஷ்டி திதியும், விசாகம் நட்சத்திரமும் முருகனின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாட்களாகும்*. 

*அனைத்து மாதங்களிலும் வரும் சஷ்டி திதி, முருகனை வழிபடுவதற்கு சிறந்த நாள் என்றாலும் முருகப் பெருமானுக்குரிய வைகாசி மாதத்தில் வரும் சஷ்டி திதி, அதிலும் வளர்பிறை சஷ்டி திதி வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்ததாகும்*.

*வைகாசி மாதம் வளர்பிறை சஷ்டியில் முருகப் பெருமானுக்கு சஷ்டி விரதத்துடன், ஆரண்ய கௌரி விரதமும் கடைபிடிப்பார்கள்*. *இதை ஆரண்ய சஷ்டி விரதம் என்றும் சொல்வார்கள். அம்பிகையையும், முருகனையும் ஒரே நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது*.

*அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு பிறகு ஆறாவது திதியாக வருவது சஷ்டி திதியாகும். இதனால் இது ஆறுமுகனை வழிபட ஏற்ற திதி ஆயிற்று. *அந்த வகையில் வைகாசி மாத வளர்பிறை சஷ்டியானது நாளை ஜூன் 01, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது*. *இந்த நன்னாளில் வெற்றிக் குமரனை தவறாமல் வழிபடுங்கள்*.. 

ஆரண்ய கௌரி விரதம்:

அம்பிகையின் தெய்வீக சக்தி அனைத்திலும் நிறைந்திருக்கிறது. காடு, மலை, மரங்கள், நதி என அனைத்து இயற்கை வடிவங்களையும் தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக எண்ணிப் பூஜிப்பது நம் பண்பாடு.

முருகனது தேவியாகிய தெய்வானையின் அம்சமாக தோன்றியவள் சஷ்டி தேவி. குழந்தைகள் நலம் காக்கும் தாயாக திகழும் சஷ்டி தேவியை இந்நாளில் வழிபடுவது மிகவும் சிறப்பு.

சஷ்டி தேவியை பூஜிப்பதே "ஆரண்ய கெளரி விரதம் அல்லது வன கெளரி விரதம் என்பர்.

இந்த விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். வாழையடி வாழையாகக் குலம் தழைக்கும். குழந்தை செல்வம்கிட்டும் என்பது ஐதீகம்.

கையில் குழந்தைகளுடன் காட்சி தரும் இந்த தேவியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டியுடன், ஆரண்ய கெளரி விரதமும் இணைந்து வருவதால் இந்த நாளில் விரதம் இருக்க முடியாவிட்டாலும் மாலையில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுபவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

விரதம் இருக்கும் முறை :

சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து அவரை வணங்க வேண்டும்.

முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வரலாம். இவ்விரத்தத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.

வேலைக்கு செல்பவர்கள் காலையில் பூஜையை முடித்து விளக்கை மலை ஏற்றி விட்டு, பின்னர் வேலைக்கு தாராளமாக செல்லலாம். மீண்டும் மாலையில் இதே போல் பூஜை செய்து விரதத்தை முடித்து கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.

சஷ்டி அன்று மாலையில் முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம் பக்கத்தாருக்கு வழங்க, வீட்டின் திருஷ்டியெல்லாம் கழிந்துவிடும். கடன் தொல்லைகள் குறையும் என்பது உறுதி.

உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்க வேண்டும். மேலும் நவகிரக சன்னிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும்.

பின்பு வீடு திரும்பியதும் பூஜையறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

சஷ்டி விரதத்தின் பலன்கள் :

திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்.

குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிடைக்கும்.

பொருளாதாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை நீங்கும்.

தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும்.

எந்த ஒரு பிரச்சனையையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனோ பலம் கிடைக்கும்.

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...