Showing posts with label #Yama Deepam #Deepavali #Deepavali festival #Hindu temple #Tamilnadu #India. Show all posts
Showing posts with label #Yama Deepam #Deepavali #Deepavali festival #Hindu temple #Tamilnadu #India. Show all posts

Monday, October 28, 2024

யமதீபம் என்றால் என்ன யம தீபம் ஏற்றினால் என்ன பயன்....



சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் யம தீபம் எல்லோரும் ஏற்றினார்கள் ஆனால் இப்போது ஒருசில வீடுகளில் மட்டுமே ஏற்றி வருகின்றனர்.

 || யமதீபம் என்றால் என்ன 
யம தீபம் ஏற்றினால் என்ன பயன் ||

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் கலாச்சாரம்.
நம் கடமையும் கூட

யம தீபம் ஏற்றினால் நம் குடும்பம் பித்ருக்களின் பரிபூர்ண ஆசிர்வாதத்தை பெற முடியும். 

தொழிலில் முன்னேற்றம் தெரியும். 

திருமணத் தடை மற்றும் தாமதம் விலகும், 

சொத்துகள் பிரச்சினை மற்றும் முடக்கம் நல்ல முடிவுக்கு வரும். 

வீட்டில் செல்வம் சந்தோஷம் பெருகும்.

முக்கியமாக தரித்திரம் ஒழியும்.

அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, நல்லது தானாகவே நடக்கும்.

மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.

அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது 
"யம தீபம்" மட்டுமே.

யம தீபத்தை நீங்கள் தீபாவளியில் 
வருகிற திரயோதஸி திதியில் தான் ஏற்ற வேண்டும்.

இது எப்போதும் ஒவ்வொரு தீபாவளிக்கும் முதல் நாள் அன்று வரும்.

யம தீபம் ஏற்றி நம் முன்னோர்களுக்கு வழிகாட்ட உதவும்.

அந்த வருடம் முழுவதும் 
நல்ல பலன்களைத் தரும்.

யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. 

அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களை கண்டிப்பாக செய்வார்கள்.

சாஸ்திரப்படி யம தீபம் ஏற்றும் முறை:

1. உங்கள் வீட்டின் வெளிப்புறமோ அல்லது உள்ளேயும் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். 

வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம்.

2. தெற்கு திசை எமனுக்கு உகந்ததாக இருப்பதால் யமதீபம் தெற்கு நோக்கி எரிய வேண்டும்.

3.ஒரு விளக்கு ஏற்ற வேண்டும்., 

4.பின்னர் யமதர்மராஜா அஷ்டோத்ரம் பாராயணம் செய்யவும்.

5.மலர்களால் அந்த விளக்கை சுற்றி அலங்கரிக்க வேண்டும்.

6.இது உங்கள் பித்ரு தேவர்களை மனதில் ஓரிரு நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டும்.

7.பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்வதாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை
 நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

மேலேயுள்ள ஸ்லோகத்தை 9 முறை பாராயணம் செய்து முன்னோர்களை நினைத்து சாஷ்டாங்கமாக ஒரு முறை நமஸ்காரம் செய்யுங்கள்.

அவ்வளவே தான்.

இதற்காக ஒரு 20 நிமிடங்கள் வரை தான் ஆகும்.

சில பேர் செய்யும் தவறு என்ன என்றால்

ஸ்வாமிக்கு ஏற்றும் தீபத்தில் பித்ருக்களுக்கு ஏற்றக் கூடாது.

ஸ்வாமிக்கு தனியாக 
பித்ருக்களுக்கு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தீபாவளி அன்று தட்ப வெப்பத்தாலோ ஏற்படும் மாற்றங்களாலோ
வித விதமான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உற்பத்தியாகி 
மக்களை தாக்கும் அதற்குத்தான் பட்டாசு வெடிக்க சொன்னாங்க பிரதர்ஸ் & சிஸ்டர்ஸ்.

அப்படி செய்தால் புகையில் அவை இறந்து விடும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 


Followers

வியாக்ரபுரீஸ்வரர் திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,  திருப்பெரும்புலியூர்,  தஞ்சாவூர் மாவட்டம்-613204 *மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர் *இறைவி:...