Showing posts with label #48 days #one mandalam #Indu festival #Hindu temple #kumbabishekam #Chidambaram #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #48 days #one mandalam #Indu festival #Hindu temple #kumbabishekam #Chidambaram #Tamil Nadu #India. Show all posts

Thursday, April 17, 2025

48 நாட்கள் ஒரு மண்டலம் அறிவியல் சார்ந்த விசயம்.

_48 நாட்கள் ஒரு மண்டலம்_.


எண்ணங்களின் ஆற்றல்.

இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். 

மதம் சம்பந்தமான விசயம் மட்டும் அல்ல.

சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம் ஏற்றுகொள்கிறோம் அல்லவா ? 

அது போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திர கூட்டங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.

அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும் பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும் பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ? 

அதே போல் தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின் மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர் வீச்சுக்களும் நம் மீது தொடர்பு கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள வேண்டும்.

என்ன, அவை இருக்கும் தூரத்தின் காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு காரணமாகவும் அவை வெளியிடும் கதிர் வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 

12 ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர கூட்டங்களாகவும் மற்றும் நம் சூரிய மண்டலத்தில்9 கோள்களாகவும் 

நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி வைத்துள்ளனர்.

நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டு இருப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ? 

அது போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.

ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில் வந்துவிடும்

எப்படி என்கிறீர்களா...? 

கிரகங்கள் 9, 
ராசி கூட்டங்கள் 12, 
நட்சத்திர கூட்டங்கள் 27 
இந்த மூன்றையும் கூட்டி பாருங்கள் 9+12+27=48

எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல் உலகில் விவசாயமும் இன்னும் பல விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல் இந்த மூன்று கூட்டமைப்புகளின் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி நம்முடைய செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக நடக்கின்றன.

இதனால் தான் சித்த மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுவார்கள். 

அப்படி செய்தால் அந்த நோய் நிரந்தரமாக குணமாகும். 

அதே போல் எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் 
செய்யும் வேண்டுதல்களும் (மற்றவர்களுக்கு தீமைகள் இல்லாத ) கை கூடுகின்றன.

நம்முடைய முன்னோர்களான 
சித்தர்களும், முனிவர்களும்
மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.

ஏதாவது ஒரு செயலயோ அல்லது வேண்டுதலயோ 
48 நாட்கள் நம்பிக்கையோடு செய்தால், அவை ஆழ் மனதில்
 Sub Conscious mindல் பதிவாகி விடும். 

மீண்டும் மீண்டும் எழும் எண்ணம், பிரபஞ்சமெல்லாம் பரவி எண்ணம் செயலாக 
மாற தகுந்த சூழ்நிலைகளை ஏற்படுத்தும். Basic Concept.

இதை எளிய மக்களுக்கு 
புரிய வைப்பது சிரமம்.

எனவே நம் முன்னோர்கள் 
பக்தி மார்க்கத்தில் 48 நாள் விரதம் இருந்தால், அந்த செயல் கைகூடும் என்று எளிமையாக உணர்த்தி இருக்கிறார்கள்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...