Showing posts with label #mookambigai Temple #Mahalingam Swami #Sivan temple #Hindu temple #thiruvidaimarudur #Kumbakonam #Tamilnadu #India. Show all posts
Showing posts with label #mookambigai Temple #Mahalingam Swami #Sivan temple #Hindu temple #thiruvidaimarudur #Kumbakonam #Tamilnadu #India. Show all posts

Friday, November 29, 2024

கிரகண நேரங்களிலும் மூகாம்பிகை கோவில் அர்ச்சனை, ஆராதனை ஆகியவை நடந்து கொண்டே இருக்கும்.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முப்பெரும் தேவியரும் 
ஒன்றாக அமைந்த 
ஒரே #மூகாம்பிகை தலமான
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான 
#திருவிடைமருதூர்
#மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் உள்ள 
#மூகாம்பிகை_அம்மன் (பிடாரி வடிவம்)
மூலவரைக் காணலாம் வாருங்கள் 🙏🏻 

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் மூகாம்பிகை அம்மனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. இந்தியாவிலேயே கொல்லூரிலும், திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை அம்மனுக்கு சந்நிதியுள்ளது. கும்பகோணத்தின் கும்பேஸ்வரர் கோயில் மேல வீதியில் மூகாம்பிகை கோயில் உள்ளது.

#மூகாம்பிகை:

மூகனின் வேண்டுதலுக்கு இணங்கி அருளும் கருணையும் பொழியும் அன்னையானவள் அந்த அசுரனின் பெயரை சேர்த்து மூகாம்பிகா என வழிபட அருள் தந்தாள். அதிலிருந்து அன்னையை மூகாம்பிகை என்று அழைக்கிறார்கள்.
மூகன் எனும் கம்ஹாசூரன் கொல்லூர் மலைப்பகுதியில் தவம் இருந்து சக்திகளை பெற முயன்றான். இதை அறிந்த தேவர்கள் பயந்தனர். பிரம்மனிடம் வேண்டுகோள் விடுத்து சரஸ்வதி மூலம் அவனை ஊமையாக்கினார்கள். ஊமையன் என்பதை மூகன் என்றும் சொல்வார்கள். மூகன் தனக்கு கிடைத்த சக்தியால் அட்டூழியம் செய்து வந்தான். தேவர்களும் முனிவர்களும் அந்த அசுரனால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர்.

மூகனை அழிக்க விஷ்ணு, சிவன், பிரம்மன், இந்திரன், முருகன், பூவராகன் ஆகிய 6 பேரும் உதவி செய்தனர். அதனால் அம்பிகை மூகனை அழித்தாள். அப்போது தன் ஆணவத்திற்கு வருந்தி மன்னிப்பு கோரினான். மேலும் அம்பாள் பெயருடன் தன் பெயரும் இணைந்து வழங்க அருள் புரிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தான். அவனின் வேண்டுதலுக்கு இணங்கி அருளும் கருணையும் பொழியும் அன்னையானவள் அந்த அசுரனின் பெயரை சேர்த்து மூகாம்பிகா என வழிபட அருள் தந்தாள். அதிலிருந்து அன்னையை மூகாம்பிகை என்று அழைக்கிறார்கள்.

அதன்பின் அன்னையானவள் தனது அனைத்து சக்திகளையும் அங்கே கோலமகரிஷி கண்டெடுத்து வணங்கி வந்த அந்த அற்புத ஜோதிர்லிங்கத்தை மகா வரப்பிரசாத பீடமாக்கிக் கொண்டு அருள்புரிந்து வருகிறாள். அகிலாண்டீஸ்வரியுடன் கலந்து விட்ட ஜோதிர் லிங்கம்தான் யுகங்களைக் கடந்து இன்றும் வீரிய தீட்சண்யத்துடன் கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகையாக சன்னதியில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது. இது ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீசக்கரம் இந்த ஒரு சக்கரத்தில் ஒன்பது சக்ரம் அடங்கியுள்ளது. இதில் 64 கோடி தேவதைகள் அரூபா ரூபமாக ஆரோகணித்துள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள்.

கிரகணத்துக்கு நடைமூட மாட்டார்கள் கிரகண நேரங்களில் மற்ற இடங்களில் கோவில்கள் மூடிக் கிடக்கும். ஆனால் இந்த கோவிலில் அவ்வாறு இருப்பதில்லை. கிரகண நேரங்களிலும் மூகாம்பிகை கோவில் திறந்தவாறு இருந்து அர்ச்சனை, ஆராதனை ஆகியவை நடந்து கொண்டே இருக்கும். இந்த கோவிலின் மற்றொரு விசேஷம் என்னவென்றால் இங்கு பிரம்மசாரிகளுக்கு பூஜை செய்வதற்கும் சன்னதிக்குள் பிரவேசிப்பதற்கும் அனுமதி இல்லை என்பதாகும். தேவி பவனி வரும்போதும் அவர்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை. எதிரிகளை வெல்ல சண்டி ஹோமம் அம்பாளைத் தரிசித்த பின் சன்னதிக்கு எதிராக உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் உட்கார்ந்து ஸ்தோத்திரம் சொல்லித் துதிக்க வேண்டும். அந்தப் பிரார்த்தனை மண்டபத்தில் இருந்து பூஜித்தால் விசேஷ பலன் உண்டு என்பது அத்தலத்தின் ஐதீகம்.

எதிரிகளால் எந்த ஆபத்தும் வராமல் இருக்க இங்கு சண்டி ஹோமம் செய்பவர்கள் ஏராளம். வேறெந்த கோவிலிலும்இல்லாத அளவு சண்டி ஹோமம் ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் இங்கு நடைபெறுகின்றன. ஆனாலும் நாம் நினைத்தவுடன் இங்கு சண்டிஹோமம் செய்து விட முடியாது. ஏனெனில் சில ஆண்டுகளுக்கு அதற்கான முன்பதிவு செய்ய வேண்டும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

வியாக்ரபுரீஸ்வரர் திருப்பெரும்புலியூர், தஞ்சாவூர்

வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,  திருப்பெரும்புலியூர்,  தஞ்சாவூர் மாவட்டம்-613204 *மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர் *இறைவி:...