Showing posts with label #murugan #hindu #india # Tamilnadu#. Show all posts
Showing posts with label #murugan #hindu #india # Tamilnadu#. Show all posts

Monday, August 21, 2023

சென்னைக்கு அருகில் உள்ள #சிறுவாபுரி #பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு:

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலமான சென்னைக்கு அருகில் உள்ள 
#சிறுவாபுரி #பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வரலாறு:
சென்னையிலிருந்து சுமார் 30-40 கிமீ தொலைவில் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. ராமாயண காலத்தில், ராமருக்கும் லவகுசனுக்கும் போர் நடந்த இடம் என்றும் கூறப்படுகிறது.

மூலவர்: பாலசுப்ரமண்யசுவாமி

ஊர்: சிறுவாபுரி

மாவட்டம்: திருவள்ளூர்

மாநிலம்: தமிழ்நாடு

தலபுராணம்: 
 
அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட ராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட அது வால்மீகி  முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வந்தது. அதை அங்கு வளர்ந்து வந்த ராமனின் பிள்ளைகளான லவனும்  குசனும் கட்டிப்போட்டு விட்டனர். இது அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை  வெல்ல முடியவில்லை.ராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. இவ்வாறு சிறுவர்களான லவனும்  குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று வழங்கியது.

கோயில் அமைப்பு:

ஐந்து நிலைகளைக்  கொண்ட ராஜ கோபுரமும் உயரமான கொடிமரமும் இந்தக் கோயிலின் சிறப்பு அம்சங்கள். அருணகிரிநாதர் திருப்புகழில் இந்த திருத்தலம் பற்றி பாடியுள்ளார். மூலவர் பால சுப்ரமணிய சுவாமி  நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

சிறுவாபுரியின்
நுழைவாயிலில் சப்த மாதர் கோயில், நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோயில் மேற்கே பெருமாள்  கோயில் பெருமாள் கோயிலுக்குப் பின்னால் விஷ்ணுதுர்கை கோயில்கள் உள்ளன.வடக்கே வாயு மூலையில்  சிறுவாபுரி பாலசுப்ரமண்ய சுவாமி ஆலயம் கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது. அருணகிரி நாதரால் போற்றி பாடப்பட்ட தலம் சிறுவாபுரி.

இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்ரமண்யர், ஆதி மூலவர், நவகிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் அனைத்தும்  மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை.கோவிலுனுள் உயரமான கொடிமரம் முன் காணப்படும் பச்சை மரகத மயிலின்  காட்சி கண்கொள்ளா அழகு. இது போன்ற சிறந்த வடிவமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது.
 
சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன்  இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல  கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார்.

முருகம்மை என்ற முருக பக்தர், முருகன் மீது தீவிர பக்தியாக இருப்பது பிடிக்காத இவரது கணவர், ஒருநாள் கோபத்தில் இவரின் கரத்தை வெட்டி விடுகிறார்.

முருகம்மை முருகனை துதித்ததால், முருகன் இவரது முன்னால் தோன்றி கரத்தை வெட்டப்பட்ட வடு இல்லாமல், சேர்த்ததாக வரலாறு கூறுகிறது.

வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை  வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை!

பால சுப்பிரமணியரைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை. இதைபோல் வேறெங்கும் காணமுடியாது. கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது. திருக்கார்த்திகை, நவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

 புராண வரலாறு:

ராமாவின் மகன்கள், லாவா மற்றும் குசா ஆகியோர் இந்த இடத்தில் வாழ்ந்தனர். ஒருமுறை ராமன் சிறுவாபுரியை கடந்து சென்றபோது, தனது மகன்களுடன் போரிட நேர்ந்தது, அவர்கள் தந்தை என்று தெரிந்து கொள்ளவில்லை. இளம் குழந்தைகள் இங்கே ஒரு போரை நடத்தியபோது, இந்த இடம் குழந்தைகள் போரை நடத்துவது என்பதே சிறுவாபுரி என அழைக்கப்பட்டது. சிறுவர் அம்பு எடு மறுகி இப்போது சின்னம்பெடு என்று அழைக்கப்படுகிறது.

இங்கே ஸ்ரீ முருகனை ஸ்ரீ ஸ்ரீ பாலசுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர். பக்தர்களின் விருப்பங்களை வழங்குவதால் சக்திவாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த அழகிய கோவிலில் ஸ்ரீ அண்ணாமலை (சிவன்) மற்றும் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் ஆகியோரும் உள்ளனர். முருகனின் உற்சவ மூர்த்தியை வள்ளி மணாளர் எனவும், ஸ்ரீ வள்ளி திருமண திருமணமாகவும் காட்சி தருகிறார். இங்குள்ள முருகப்பெருமான் ஒரு வீட்டை வாங்குவதற்கு அல்லது விரும்பும் ஆசைகளை வழங்குவதாக நம்பப்படுகிறது.

மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை  வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம்.
 
பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும்,  பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பிள்ளைப்பேறு பெறவும், கடன் தொல்லைகள் தீரவும், சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி வருவது  நிதர்சன உண்மையாகும்.

தல சிறப்புகள்:
 
செவ்வாய் கிழமை சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது.
வள்ளியை திருமணம் செய்த முருகன் இங்கே வந்ததால், நீண்ட காலமாகத் திருமணம் தடைப்பட்டு வருபவர்கள் திருமணம் நடக்க வேண்டி வருபவர்கள்.
வீடு, நிலம் வாங்க நினைப்பவர்கள்.
தொடர்ந்து ஆறு செவ்வாய் கிழமை வந்து வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இத்தலம் பற்றி அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.
கொடிமரம் அருகே பச்சைக் கற்களால் உருவாக்கப்பட்ட மயில் சிலை உள்ளது.
நீண்ட கால வேண்டுதல் உள்ளவர்கள் செல்லப் பரிந்துரைக்கிறேன், முடிந்தால் செவ்வாய் கிழமை.

கோவில் நடை திறக்கும் நேரம்:
 
சிறுவாபுரி கோவில் ஞாயிறு தோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து இருக்கும். பிறகு  பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரை நடைதிறந்து இருக்கும். செவ்வாய்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல்  இரவு 9 மணி வரை வழிபாடு செய்யலாம். மற்ற நாட்களில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும்,  மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தான் வழிபாடு செய்ய முடியும்.

ஓம் முருகா 🙏

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...