Showing posts with label #sivan #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label #sivan #hindu #india #tamilnadu. Show all posts

Saturday, May 4, 2024

இன்று பிரதோஷம்.. பதவி உயர்வு, வேலை கிடைக்க.. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள்.

இன்று பிரதோஷம்.. பதவி உயர்வு, வேலை கிடைக்க.. சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்யுங்கள்..!!

                  சிவன் பகவானின் அருள்

ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷம் 'ரவி பிரதோஷம்' மற்றும் 'ராகு கால பிரதோஷம்' என்று அழைக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை ராகு காலத்துடன் சேர்ந்து பிரதோஷம் வருவதால் இப்பெயர்கள் ஏற்பட்டன.

இந்த சிறப்பு வாய்ந்த நாளில் வேலை தேடுபவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்கள், அரசு வேலை பெற விரும்புபவர்கள் சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

சூரிய பகவான் அருள் பெற:

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் அன்று சிவபெருமானுடன் சூரிய பகவானையும் வழிபட்டால் வேலை தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

தலைமுறை காக்கும் குலதெய்வத்தின் அருள் பெற வேண்டுமா? 


செய்ய வேண்டியவை :

பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்யுங்கள். இதனால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து நல்ல வேலை கிடைக்க வழி செய்வார் என்பது நம்பிக்கை.

பிரதோஷ நேரத்தில் சிவபெருமானின் சன்னதியில் அமர்ந்து, உங்களுக்கு வேண்டிய வேலை கிடைக்க மனதார தியானம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.

ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் தவறாமல் வழிபாடு செய்யுங்கள். ஒரே ஒரு இளநீர் அபிஷேகம் செய்தாலும் பல மடங்கு பலன்கள் கிடைக்கும்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள்,

வீட்டிலேயே சிவலிங்கம் வைத்திருந்தால் அந்த சிவலிங்கத்திற்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடலாம். 

அபிஷேகம் செய்தபின் சிவபெருமானுக்கு தீபமேற்றி சிவபெருமானின் மூல மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும். பின் வேலை தொடர்பான உங்களுடைய வேண்டுதலை முன்வைத்து மனதார வழிபடுங்கள்.

Friday, March 1, 2024

மகாசிவராத்திரி தோன்றிய தலம்.மகாசிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான்.



 #மஹாசிவராத்திரி🔥
#மகாசிவராத்திரி தோன்றிய தலம்.

மகாசிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலை தனில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது...

இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது. விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒருமுறை தம்முல் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டை யைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். 

அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்பு பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.
அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.

பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது....

ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார்.

நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது.

 அவ்வளவுதான். நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.

விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலராவாய் என்றும் சாபமிட்டார்.

 இந் நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலை யில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.

 அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. மகா சிவராத்திரி தோன்றிய தலமும் திருவண்ணாமலையே.

திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது.... 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 


Thursday, December 14, 2023

ஆண்டாள் கூறும் சில திருப்பாவை மகிமைகளை ரசிப்போம்.



கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் கூறுவார் : மாஸானாம் மார்கசீர்ஷோஹம் & மாதங்களில் மார்கழி என்று. ஏன்? அவர் பிறந்த ஆவணி மாதத்தைக் கூறவில்லை. அவரது பிரியமான ராதை பிறந்த புரட்டாசியைக் கூறவில்லை. திருப்பதி வெங்கடாசலபதி என்று பிரசித்த கோவிந்தனின் முக்கிய திருவோணம் – புரட்டாசியைக் கூறவில்லை. ராமர் பிறந்த சித்திரையைக் கூறவில்லை. ஏன்?

நமது நாட்டில் கோயில்களைப் பார்த்தால், பொதுவாகச் சிறிது நேரம் கழித்துத்தான் திறக்கும். ஆனால் பெருமாள் கோயிலையோ, சிவன் கோயிலையோ, கணபதி, முருகன், தேவி, சாஸ்தா என்ற பிரத்யேகக் கோயில்களையோ எதைப் பார்த்தாலும், விடியற்காலையிலேயே திறந்து அபிஷேக பூஜை ஆராதனைகள் நடக்கும் மாதம் மார்கழி.
ஆஸ்திக மக்களும் பரவலாக மார்கழி மாதம் விடியற்காலை எழுந்து நீராடி ஆன்மிக வழிபாட்டில் ஈடுபடுவர். தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி என்று துதிகள் கேட்டு, துதி செய்து மகிழ்வர். காரணம் என்ன?

பிரதோஷக் காலத்தில் மாலைவேளையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கிறோம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். நமது மார்கழி மாதமே, தேவர்களின் விடியற்காலை. படிக்கும் சிறுவர்களிடம் சொல்வதில்லையா – விடியற்காலை எழுந்து படி, மனதில் நன்கு பதியும், புரியும், மனது தெளிவாக இருக்கும் என்று.

நமது விடியற்காலையும் தேவர்களின் விடியற்காலையும் சேர்வது மார்கழி மாதமே! சிவராத்திரி, நவராத்திரி, பௌர்ணமி என்றெல்லாம் இரவுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் துதி, பூசைகள் செய்வதுடன், மார்கழி மாத விடியற்காலம், தேவ விடியற்காலை சேர்ந்த நேரம், Sound Theory-இல் Resonance என்று சொல்வார்கள். அப்போது ஆன்மிக அதிர்வுகள் (Spritual Vibrations) உன்னதமாகும். மிகுந்த பலனைத் தரும்.

இராணுவச் சிப்பாய்கள் லெப்ட் – ரைட் என்று ஒருவிதமான அதிர்வுகளுடன் நடப்பார்கள். ஏதேனும் பாலம் வந்தால், அவர்கள் சாதாரணமாகத்தான் நடக்க வேண்டும். பாலத்தில் லெப்ட்-ரைட் போட்டால், பாலத்தின் அதிர்வுகளும் சேர்ந்து (Resonance) பாலமே உடைந்து போகலாம்.

ஆன்மிக அதிர்வுகள் ஒன்றி இணையும் மாதம் மார்கழி. ஆகவே மாதங்களில் உன்னதமானது மார்கழி.
ஏகாதசி மகாவிஷ்ணுவை வணங்கிட உகந்த நாள். சிவனுக்குப் பிரதோஷம் சிறந்தது. தேவி உபாசகர்களுக்குப் பௌர்ணமி உகந்தது. நடராஜ அபிஷேகம் ஆண்டுக்கு 6 நாட்கள் நடைபெறுகிறது.
என்றாலும் மார்கழி மாத ஏகாதசி மகா உன்னத ஏகாதசி – வைகுண்ட ஏகாதசி என்று எல்லாப் பெருமாள் கோயில்களிலும் விடியற்காலையில் தரிசனமாக வெளியே வருதலும், மார்கழி மாதத் திருவாதிரை நட்சத்திரப் பௌர்ணமியில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் விடியற்காலை வெளியே உலவி வருதலும் மிகமிக விசேஷமானது.
தொண்டரடிப் பொடியாழ்வார் மகாவிஷ்ணுவுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடினார். ஆண்டாள் வில்லிப்புத்தூர் ரங்கனைக் குறித்துத் திருப்பாவை பாடினாள். மாணிக்கவாசகர் திருப்பெருந்துறைச் சிவனைக் குறித்துத் திருப்பள்ளி எழுச்சி பாடினார். அவரே திருவண்ணாமலைச் சிவனைக் குறித்து திருவெம்பாவை பாடி நெகிழ்ந்தார்.
இவற்றைப் பாடி ஆன்மிகப் பக்தர்கள் மனம் நெகிழ்கின்றனர். மார்கழியில் திருவில்லிப்புத்தூரில் துளசிமாடத்தின் அடியில் பூமியில் கோதை உதித்தாள். அரங்கனுக்கு மலர்க் கைங்கரியம் செய்யும் 
பெரியாழ்வார் கோதையைக் கண்டெடுத்து வளர்த்தார். நாரதர் கூற, ருக்மணி தேவி துவராகைக் கண்ணனே தன் கணவன் என்று மனதில் ஒன்றினாள். கண்ணனே அவளது ஊருக்கு வந்து அவளை மணந்து மகிழ்வித்தார்.
அதே நாரதர் கூற, கந்தனே வேடனாக, கிழவனாக எனப் பல லீலைகள் புரிந்து வள்ளிதேவியை மணம் புரிந்தார்.
பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுத்த மாலையைக் கோதை தான் அணிந்து பெருமாளுக்குத் தான் உகந்த மனைவியா என்று அழகு பார்த்தாளாம். ஒரு நாள் இதனைக் கண்டுவிட்ட பெரியாழ்வார் அம்மாலையை, மாசுபட்டது என்று அணிவிக்கவில்லையாம். 
அரங்கனோ, ஆண்டாள் அணிந்து அழகு பார்த்த மாலைதான் தனக்கு வேண்டுமென்றார். அவ்வாறே நடந்திட, கோதை விடியற்காலை மற்ற தோழிகளையும் எழுப்பி ஊர்வலம் வந்து திருப்பாவையைப் பாடினாள்.
வாரணம் ஆயிரம் என்று அரங்கனுடன் தான் மணம் புரிந்ததாகக் கனாக் கண்டேன் தோழீ நான் என்று பாடினாள். மகாவிஷ்ணுவுக்குப் பல்லாண்டு பாடினாள். பெரியாழ்வார் திகைத்தார். அரங்கனோ, கோதையை மணமகளாக அலங்கரித்துத் திருவரங்கக் கோயிலுக்கு அழைத்து வாரும் என்க, அவரும் அவ்வாறே செய்ய, மணமாலையுடன் திருவரங்கக் கருவறைக்குள் சென்ற ஆண்டாள், அரங்கனுள் மறைந்தாள். என்னே அதிசயம்!
திருவெம்பாவை, திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் நடராஜருள் மறைந்தது போல், மீராபாய் 

துவாரகாதீசனுள் ஒன்றியதுபோல் ஆண்டாள் அரங்கனுள் மறைந்தாள். பக்தனின் ஆழ்ந்த பக்தி பரமனுடன் இணைத்திட துவைதம் (ஜீவாத்மா – பரமாத்மா என்கிற இரண்டு) அத்வைதமாக – ஒன்றாக ஒன்றிவிடுகிறது. அதுவே மார்கழி மாதக் கோதை நோன்புத் தத்துவம்.

நாமெல்லாம் – ஆணோ, பெண்ணோ – யாவரும் பெண்தான். ஆண்டவன்தான் ஆண்! ஜீவன் பரமனுடன் இணைவதையே நாம் முக்தி, கல்யாணம், அனுபூதி நிலை என்கிறோம். மலர்சூடி, பாமாலைப் பாடி ஆண்டாள் அரங்கனுடன் ஒன்றினாள். திருப்பாவை மகிமை அத்தகையதல்லவா!

ஸ்ரீதேவி, பூதேவி அர்ச்சாவதாரமாக & கருவறையிலோ, பஞ்சலோக விக்கிரகமாகவோ இருக்கலாம். தனியே மகாலட்சுமி – ஸ்ரீதேவியாக அமர்ந்த கோலத்தில் இருக்கலாம். ஆனால், தனிக் கருவறையில் பூதேவியைக் காண்பது அரிது. நின்று கொண்டிருக்கும் ஆண்டாளைக் காணலாம். அத்தகைய மகா உன்னத நிலையைப் பெற்றவள் கோதை என்னும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள். தனது பக்தியில் ஆண்டவனையே தனதாக்கியதால் அவள், ஆண்டாள். ஆண்டவனை, பெருமாளை ஆள வரவில்லை. மணம்புரிய ஒன்று சேர்ந்திட விரும்பினாள். ஆகவே அவள் ஆண்டாள்.

ஆண்டாள் கூறும் சில திருப்பாவை மகிமைகளை ரசிப்போம்.

நாராயணனே நமக்கே பறை தருவான் (பறை – வாரி வழங்கும் அருள்).

நோன்பு எவ்வாறு செய்ய வேண்டும்? பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி, மலரிட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம், …. உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி – தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து – வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித் தொழுது வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம், பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி, வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம், உமக்கே நாம் ஆட்செய்வோம், மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
ஆக சரணாகதித்துவ ஆண்டாளின் திருப்பாவையைப் பாடிட நாம் என்றும், எங்கும், ஆண்டவன் திருவருள் பெற்று இன்பமாய் வாழ்வோம் என்பதில் ஐயமுண்டோ?!

Wednesday, October 4, 2023

பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயம்...!

பிரிந்த தம்பதியரை 
ஒன்று சேர்க்கும் சாம்பமூர்த்தீஸ்வரர்  ஆலயம்...!
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரையோரம் உள்ளது சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயம். 

அப்புலிங்கம் என்ற நீர் தலமாகவும் இக்கோயில் போற்றப்படுகின்றது.:  

கருவறையில் மூலவரான சாம்பமூர்த்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்கமாக வீற்றிருக்கின்றார். 

ஒருமுறை பார்வதி தேவியின் தந்தையான தக்சன் சிவபெருமானை புறக்கணித்து யாகத்தை நடத்தியதாகவும், அவருக்குரிய அவர் பாகத்தையும் தர மறுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

அந்த சமயத்தில் ஈசனின் சொல்லை மீறி தந்தையின் யாகத்திற்கு பார்வதி தேவி சென்றதால் தன்னை விட்டு பிரிந்து வாழ கடவாய் என சிவபெருமான் சாபம் அளித்ததாகவும், சக்தியை விட்டு பிரிந்த ஈசனும் தனியாக எங்கு வந்து லிங்க வடிவத்தில் வில்வ மரத்தடியில் அமர்ந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இறைவனை பிரிந்து பார்வதி தேவி எங்கு தேடியும் இறைவனை காணாது துயரத்தில் ஆழ்ந்த நேரத்தில் சிவபெருமானும் அசிரீரியராக தோன்றி பூலோகத்தில் வில்வ விருட்சத்தின் அடியில் சிவலிங்க திருமேனியாக இருப்பதாகவும், சூரியன் போன்று நீயும் வந்து எம்மை வழிபாடு என்று கூறியதாகவும் தல வரலாறு கூறுகின்றது.

அதன்படியே பார்வதி தேவியும் தமது தமையன் பெருமாளுடன் இறைவனை வழிபட்டதாகவும், இறைவனும் அருள் பாலித்து சக்திக்கு தன்னுடலில் சரி பாதி தந்து ஏற்று கொண்டதாகவும் கூறப்படுகின்றது. 

கிபி எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை வில்வ மரத்தின் அடியில் லிங்க திருமேனியாக காட்சியளித்த இறைவனாருக்கு மைசூர் மகாராஜாவின் அமைச்சர்களின் ஒருவரான சேஷசய்யர் மூலம் கோயில் எழுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஆலயத்தில் உள்ள லிங்க மூர்த்தியின் மீது ஐப்பசி மாதம் ஒன்பதாம் தேதி முதல் 15ஆம் தேதி வரையும், மாசி மாதம் ஒன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரையும் சூரியக்கதிர்விழும் அதிசயத்தை காணலாம்.

 உற்சவராக உமா மகேஸ்வரரும், அம்பாளாக மனோன்மணியம் தெற்கு நோக்கியவாறு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். விருட்சமாக வில்வ மரம் காணப்படுகின்றது.

இந்த கோயிலில் பிரிந்த தம்பதியர் வலம் வந்து வழிபாடு செய்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதுடன், சகல செல்வங்களுடனும் வாழ்வார்கள் என பக்தர்கள் நம்புகின்றனர்.

கருவறை சுற்றுப்ரகாரத்தில் அதிசய சண்முகசிலை உள்ளது. முன்புற மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்களுடன் இந்த சண்முகம் காட்சி தருகின்றார்.

Monday, September 11, 2023

பிரதோஷம் ! பிரதோஷ வழிபாடு! சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி !

பிரதோஷம் ! பிரதோஷ வழிபாடு! சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி ! எல்லா அன்பர்களுக்கும் நேரில் சுருட்டப்பள்ளி சென்று தரிசித்த புண்ணியம்கிடைக்கட்டும்  ஓம் ஶ்ரீ பள்ளிகொண்டீஸ்வரரே போற்றி, அரோகரா சிவனே அப்பனே எல்லா சீவராசிகளின் இறைவா போற்றி போற்றி போற்றி. வாழ்க வையகம்🙏🏽🕉🌺🌸🌻💐🌼💮🙏🏽!
ஓம் ஶ்ரீ பள்ளிகொண்டீஸ்வரரே போற்றி, அரோகரா சிவனே அப்பனே எல்லா சீவராசிகளின் இறைவா போற்றி போற்றி போற்றி. வாழ்க வையகம்🙏🏽🕉🌺🌸🌻💐🌼💮🙏🏽

இறைவர் திருப்பெயர் :பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : மரகதாம்பிகை
தல மரம் :வில்வம்
தீர்த்தம் : -
வழிபட்டோர் : வால்மீகி முனிவர் , தேவர்கள்
தேவாரப் பாடல்கள் : -

தல வரலாறு:

பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான்.முதல் முதலில் பிரதோஷ வழிபாடு இங்குதான் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது.

எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும்.
சயனித்த கோலத்தில், சிவபெருமான் பள்ளி கொண்ட ஈஸ்வரராக காட்சி அளிப்பது உலகத்திலேயே சுருட்டப்பள்ளி ஷேத்திரத்தில்தான்.

இரண்டரை உயர பீடத்தில் பதினாறு அடி நீளத்திற்கு படுத்த வண்ணம் ஈசுவரர் காட்சி அளிக்கிறார். ஈசனின் தலைமாட்டில் அன்னை சர்வமங்களாம்பிகை புன்னகை பூத்தபடி வீற்றிருக்கிறாள்.

வழக்கமான விபூதிப் பிரசாதம் இங்கே கிடைக்காது. மாறாக பெருமாள் சன்னதியை போல தீர்த்த பிரசாதமும், தலையில் சடாரி வைத்த ஆசீர்வாதமும் தான்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த தலம் ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு

சர்வேஸ்வரன் சயனித்த ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரராக, திருக்கோல காட்சி தரும் புண்ணியம் பெற்ற ஸ்தலம் தான் சுருட்டப்பள்ளி. விஷத்தை சாப்பிட்ட பகவான் சுருண்டு மயக்க நிலையில் படுத்ததால்தான் சுருட்டப்பள்ளி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தேவர்கள் வாசம் செய்யும் ஊர் ஆகையால் சுருளு பள்ளி, சுருளு: தேவர்கள் பள்ளி, ஊர் என பெயர் பெற்றதாக கூறலாம்.

மகாவிஷ்ணு நிற்பார்-இருப்பார்-கிடப்பார் என்பதை பல தலங்களில் பார்ப்போம். அவர் சயன திருக்கோலத்தை இருபத்தி ஏழு புண்ணிய தலங்களில் காணலாம். ஆனால் சயனித்த கோலத்தில், சிவபெருமான் பள்ளி கொண்ட ஈஸ்வரராக காட்சி அளிப்பது உலகத்திலேயே சுருட்டப்பள்ளி ஷேத்திரத்தில்தான்.

கைலாயத்தில் கூட இக்காட்சியை காண தேவர்கள் பரமனை தரிசிக்க இக்கோவிலுக்கு ஓடோடி வருகின்றனர். தர்மத்தின் ரூபமான நத்தி தேவர் அவர்களை எதிர்நோக்கி அவசரப்படாதீர்கள் பரமசிவன் மயக்கத்தில் இருக்கிறார். மயக்கம் தெளிந்ததும் நீங்கள் தரிசிக்கலாம் என்று தடுத்து நிறுத்துகிறார்.

சிறிது நேரத்திற்குப் பின் மயக்கம் தெளிந்தவுடன் தேவர்களை அழைத்து சிவதரிசனம் செய்ய அனுமதிக்கிறார். மகாவிஷ்ணு, பிரம்மதேவர், தேவாதி தேவர்கள், சந்திரன், சூர்யர், நாரதர், தும்புரு, குபேரன், சப்த ரிஷிக்கள் சேர்ந்து தரிசித்து பரமனை வணங்குகிறார்கள். எல்லோரையும் பார்த்த சிவபெருமான் ஆனந்தத்துடன் அன்று மாலை கூத்தாடுகிறார்.

அதுதான் ஆனந்த தாண்டவம். இப்படி தரிசித்த அனைவரையும் ஆசீர்வதித்த நன்நாள் கிருஷ்ணபட்ச திரியோதசி ஸ்திரவாரம் (சனிக்கிழமை) இதுதான் மகாபிரதோஷம். அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷம் கொண்டாடுவதற்கு இதுவே காரணம். (ஆதாரம் ஸ்கந்த புராணம் உத்திரகாண்ட ரகசியம்).

துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திரனுக்கு பதவி பறிபோகிறது. அப்பதவியை பெற அமுதத்தை உண்டு பலம் பெற வேண்டும். அதற்கு பாற்கடலை கடைந்து அதைப் பெறுமாறு தேவகுரு பிரகஸ்பதி ஆணையிடுகிறார். தேவர்களும், அசுரர்களும் மந்தரகிரியை மத்தாகவும், வாசுகி என்ற பாம்மை கயிறாகவும், கொண்டு பாற்கடலை கடைந்தனர்.

பல நாட்கள், கயிறாக விளங்கிய வாசுகி பாம்பு கொடிய வியத்தை கக்க... அந்த விஷம் கடலோடு கலந்து காலகூட விஷமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் பயங்கரமாக துரத்தியது. பயந்து நடுங்கிய தேவர்களும், அசுரர்களும் தங்களை காக்க வேண்டி கைலாச நாதரான ஸ்ரீபரமேஸ்வரனின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்து தஞ்சம் அடைந்தனர்.

பரமேஸ்வரரின் ஆணைப்படி நந்தி தேவரும், சுந்தரரரும் எடுத்து வர ஒரு நாவல் பழம் போல அந்த காலகூட விஷத்தை உருட்டி ஈசன் உட்கொண்டார். பரமேஸ்வரன் அதை உட்கொண்டால் அவன் உள்ளே இருக்கும் பல கோடி உயிர்களும் அழிந்து விடும் என்பதை உணர்ந்த அன்னை பராசக்தி தன் தளிர்க் கரங்களினால் ஈசனின் கண்டத்தைப் பற்றி விஷத்தை அங்கேயே தங்கச் செய்கிறாள்.

விஷம் உண்ட கழுத்தை உடைய ஈசன் திருநீலகண்டரானார். நீலகண்டரான பரமேஸ்வரன் விஷத்தை உண்டதால் ஏற்பட்ட சிரமத்தைத் தணித்து கொள்வதற்காக, சற்று சயனிக்க விரும்பி அமைதியான இடத்தை தேடி சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை அடைந்தார்.

அமைதி சூழ்ந்த, மரங்கள் நிறைந்த, புங்கை மரங்களும், பூஞ்செடிகளும் நிறைந்த சுருட்டப்பள்ளி என்னும் ஷேத்திரத்தை தேர்வு செய்து அன்னை சர்வ மங்களம்பிகையின் மடியில் படுத்து ஓய்வெடுத்தார்.

சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், "பள்ளி கொண்டீஸ்வரர்' எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கோவில் அமைப்பு:

கிழக்கு நோக்கிய சிறிய கோபுரம். மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடன் ஆலய நுழைவு வாயில் அமைந்துள்ளது. ஐந்து கலசங்களும் இறைவனின் திருமந்திரமான ஐந்து எழுத்துக்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

உள்ளே நுழைந்ததும் எதிரில் முதன் முதலின் நாம் காண்பது அம்பிகையின் சன்னதி. இங்கு ஈஸ்வரனும், அம்பிகையும், ஒரே கோவிலில் தனித்தனியான சன்னதிகளில் கிழக்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளனர். பள்ளிகொண்டீஸ்வரரின் சன்னதி தனித்த திருக்கோவிலாக அமைந்துள்ளது.

அம்பிகையின் சன்னதிக்கு முன் முகப்பு மண்டபத்தில் குபேரனின் செல்வங்களான சங்க நிதியும், பதும நிதியும் துவார பாலகர்களாக, திருஉருவங்களை காணலாம். இத்தலத்திற்கு வந்து இறைவன், இறைவியை வணங்குபவர்களுக்கு அம்மையப்பர், அன்னமும், சொர்ணமும் அளித்து வாழ்வை வளமாக்குவார் என்பது இதன் தத்துவம்.

அம்பிகை இறைவனுக்கு வலது புறத்தில் கோவில் கொண்டுள்ளது தனி சிறப்பு அநேக கோவில்கள் அம்பிகை இறைவனுக்கு இடது புறத்தில் கோவில் கொண்டுள்ளதை காணலாம். வலது புறத்தில் அம்மன் கோவில் கொண்டுள்ளதால் இத்தலத்தை திருக்கல்யாண ஷேத்திரம் என கூறுவர். திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது இதன் பொருள்.

அம்பிகையின் கருவறைக்குள் கேட்டதை எல்லாம் வாரிக் கொடுக்கக்கூடிய, நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்க கூடிய காமதேனுவும், கற்பக விருட்சமும் தன்னகத்தே கொண்டு அருள்பாலிக்கிறார்.

சிவ பெருமான் சயன கோலத்தில் இருக்கும் பள்ளிகொண்டேஸ்வரரின் கருவறை அமைப்பு வித்தியாசமானது. ஆலகால விஷத்தை உண்டு அசதியில் உறங்கும் பரமேஸ்வரனையும், அவருடைய தலைமாட்டில் வீற்றிருக்கும் பரமேஸ்வரியான சர்வமங்களாம்பிகையும் தரிசிக்கலாம்.

அவர்களை சூழ்ந்து நின்றிருக்கும் சந்திரன், சூரியன், நாரதர், தும்புரு, குபேரன், பிரம்மா, விஷ்ணு மற்றும் சப்த ரிஷிகளையும் கண்டு வணங்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். நீண்ட செவ்வக வடிவில் அமைந்திருக்கும் மூலக்கருவறையில் தெற்கே தலை வைத்து மல்லாந்த வண்ணம் நெடுந்துயில் கொண்டிருக்கிறார் பள்ளிகொண்டீஸ்வரர்.

இரண்டரை உயர பீடத்தில் பதினாறு அடி நீளத்திற்கு படுத்த வண்ணம் ஈசுவரர் காட்சி அளிக்கிறார். ஈசனின் தலைமாட்டில் அன்னை சர்வமங்களாம்பிகை புன்னகை பூத்தபடி வீற்றிருக்கிறாள். அன்னையின் குளிர்ந்த திருவடி ஈசனின் திருமேனியை சற்றே தொடுகிற மாதிரி அம்பாள் வீற்றிருக்கிறாள். இப்பொழுது தான் அன்னைக்கு பரம திருப்தி.

ஏனென்றால், உயிர்கள் எல்லாம் அயர்ந்து உறங்குகின்ற வேளையில், உலகம் முழுவதும் ஒழுங்காக இயங்க சதாசர்வ காலமும் நடனமாடிக்கொண்டு இருந்தவருக்கு சற்ற ஓய்வு கிடைத்ததே என மகிழ்ந்தாள். பள்ளி கொண்டீஸ்வரரை வணங்கும் போது, அவன் திருவடி தரிசனத்தை மனத்தின் உள்ளே நிறுத்தி வைத்து தியானிக்க வேண்டும். அவனை உட்கொள்ள வேண்டும்.

அப்பொழுது தான் பலன் கிடைக்கும். இந்த ஒரே எண்ணத்தோடு பள்ளி கொண்டீஸ்வர பெருமானின் திருவடி தாமரைகளை போற்றி பணிந்து வணங்கி, அவன் திருமுக தரிசனத்தை நம்முள் வாங்கிக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாண் கிடையாக படுத்திருக்கும் மூலவருக்கு சாம்பிராணி தைலக்காப்பு மட்டும் தான் உண்டு.

மற்ற அபிஷேகங்கள் கிடையாது. இந்த சன்னதிக்குள் இன்னொரு விசேஷம் உண்டு. சிவன் என்பதால் வழக்கமான விபூதிப் பிரசாதம் இங்கே கிடைக்காது. மாறாக பெருமாள் சன்னதியை போல தீர்த்த பிரசாதமும், தலையில் சடாரி வைத்த ஆசீர்வாதமும் தான்.

பெருமாளின் திருவடி நிலைக்கு தான் சடாரி என்று சொல்லுவார்கள். அந்த பெருமானே நம் தலையில் திருவடி வைத்து ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்.

தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில் தான் தன் மனைவி தாராவுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

சிறப்புக்கள் :

இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும்

பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.

Saturday, September 9, 2023

கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்கிறது.

ஆச்சரியங்கள் நிறைந்த
                    அதிசய கோவில்கள்"!

தலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்!! 
 இந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்கிறது.

   1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவில், கட்டிடக்கலைக்கும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது. இந்த கோவிலைப் பற்றியும், நிழல் தலைகீழாக விழுவதற்கான காரணம் பற்றியும் தெரிந்து கொள்வோம்.....

   உலகம் வியக்கும் கட்டிடங்களில் ஒன்றுதான் சிறப்புமிக்க விருபாட்சர் கோவில். இந்த புகழ்பெற்ற கோவில், கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

   ஏழாம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட  ஹம்பி என்ற இடத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 

  இந்த கோவிலின் ராஜ கோபுரம் சுமார் 165 அடி உயரம் கொண்டது. இதன் நிழல் ஒரு சுவற்றில் இங்கு தலை கீழாக விழுகிறது. இந்த அதிசய நிழலின் ரகசியம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. 

   நிழலானது தலைகீழாக விழவேண்டுமானால் அதற்கு கண்ணாடி போன்று ஏதாவது ஒன்று நிச்சயம் தேவைப்படும். ஆனால், எதுவுமே இல்லாமல் இந்த கோவிலின் நிழல் எப்படி தலை கீழாக விழுகிறது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை.

   இந்த கோவிலில் உள்ள மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபத்தின் நடுவில் ஒரு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்திரை ஆற்றின் நீர் மடப்பள்ளியை அடைந்து பின் வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது. வடிகால் கால்வாய் முதல் வானளாவிய கோபுரம் வரை அனைத்திலும் மிக சிறந்த கட்டிட கலையின் திறன் காண்போரை பிரமிக்கவைக்கிறது. 

  இதை விஞ்ஞானிகள், கோபுரத்திற்கும் சுவருக்கும் இடையே ஒரு துளை லென்ஸ் போல செயல்பட்டு கோபுரத்தின் நிழலை தலைகீழாக விழ செய்கிறது என்று கூறுகின்றனர். இருந்தாலும் அவை நிரூபிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

  இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்ததில் இதை சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதாக தெரிகிறது. ஆனாலும், கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்த கோவிலில் பல பணிகள் நடைபெற்றதற்கான ஆதாரங்களும் அதில் இருக்கிறது.

மூன்று துர்க்கைகள் அருள் புரியும் சிறப்பு கொண்ட கோவில் இது.

ஸ்ரீஞானாம்பிகை உடனுறை             
அ/மி சார பரமேஸ்வரர் திருக்கோயில்,      திருச்சேறை 612605, கும்பகோணம் வட்டம்,     தஞ்சாவூர் மாவட்டம்.     
*மூலவர் : சாரபரமேஸ்வரர்/ செந்நெறியப்பர்
*தாயார் : ஞானாம்பிகை / ஞானவல்லி அம்மை.
*தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம், பிந்துசுத தீர்த்தம், ஞான தீர்த்தம்
*தல விருட்சம் : மாவிலங்கை.    

*பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் துயர்களை போக்கி, அவர்களின் வாழ்க்கையை சரியான வழியில் இட்டு செல்வதால் இத்தல இறைவன் செந்நெறியப்பர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.           

*இத்தலம் கடன் நிவர்த்தி தலமாக விளங்குகிறது. தீராத கடன் தொல்லை   மற்றும் பிறவிக்கடன் இரண்டும் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள்  வழிபட வேண்டிய கோவிலாகும் இது.    

*மார்கண்டேய முனிவர் பூர்வ ஜென்ம கடன்களில் இருந்து விடுபட எண்ணி இத் தலத்திற்கு வந்து, சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவரது பக்தியில் மகிழ்ந்து, சிவ பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து, பிறவிக்கடன்களில் இருந்து அவரை விடுவித்து, மோட்சம் வழங்கினார்.
 
*இறைவன், ருண விமோசன லிங்கேஸ்வரராக, மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கிறார். இவர், கடன் நிவர்த்தீஸ்வரர் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார்.                   

*தீராத கடன்  பிரச்சனையில் சிக்கி இருப்போர் இத்தல இறைவனுக்கு 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது திங்கட்கிழமை அபிஷேகம் செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட கடன் பிரச்சனையாக இருந்தாலும் தீர்ந்து விடும். கடன் பிரச்சனை மட்டுமின்றி திருமணம், குழுந்தை, கல்வி, செல்வ வளம் சேரவும் இத்தல இறைவனை பக்தர்கள் வழிபடுகிறார்கள்.           

*மூன்று துர்க்கைகள் அருள் புரியும் சிறப்பு கொண்ட கோவில் இது. 
இங்கு சிவ துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை ஆகிய திருநாமங்களுடன் துர்க்கா தேவி காட்சி தருகிறாள்.          

*இத்தல பைரவர் கையில் திரிசூலம் மற்றும் மணியுடன் காட்சி தருகிறார்.      

*இந்த பைரவரை தொடர்ந்து எட்டு அஷ்டமி திதியில் அர்ச்சனை செய்து வழிபட்டு, ஒன்பதாவது அஷ்டமி திதி அன்று பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும். 

*இங்குள்ள பைரவருக்கு அப்பர் தமது தேவார பதிகத் தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.     

*இக்கோவில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.    

*இது சம்பந்தர், அப்பர் இருவராலும்தேவாரப் பாடல் பெற்ற, காவிரி  தென்கரையில் அமைந்த தலம்.           

*தல விருட்சமான  மாவிலங்கை, வருடத்தின் முதல் நான்கு மாதங்கள் இலைகளுடனும்,  அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை நிற பூக்களுடனும்,  கடைசி நான்கு மாதங்கள் பூவோ, இலையோ இல்லாமல் காணப்படும் என்று கூறப்படுகிறது  

*இங்கு
ஆண்டுதோறும் மாசி மாதத்தின் 13வ து, 14வது மற்றும் 15வது நாளில் சூரிய ஒளியானது சிவலிங்கத்தின் மீதும், ஞானாம்பிகை மீதும் காலை 06.30 மணிக்கு விழும் காட்சி நிகழும்.  இந்த சமயத்தில் சூரிய பூஜை நடத்தப்படுகிறது.                 

*கும்பகோணத்தில் இருந்து நாச்சியார் கோவில் - குடவாசல் செல்லும் சாலையில் 15 கி.மீ., தொலைவிலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கி.மீ., தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

🙏 சிவாயநம

Wednesday, September 6, 2023

சிவபெருமானின் திருக்கோலங் களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று.

ஸ்ரீ காலபைரவர் - சில குறிப்புகள்
************************************************************************
சிவபெருமானின் திருக்கோலங் களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று.
பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவ ருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ் டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதி யில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசை யில் காட்சி தருவதும் உண்டு.
சிவபெருமான் வீரச்செயல் களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக் கோலம் என்று புராணம் சொல்லும்.
காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
காலபைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.
காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாக வும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.
காலபைரவருக்கு இரண்டு பெயர்கள் உண்டு. "தான்' என்ற கர்வத்தால் பாவம் செய்தவர்களுக்கும் அக்கிர மக்காரர்களுக்கும் தண்டனை வழங்குவதால் "அமர்தகர்' என்றும்; பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களைப் போக்கி அருள்வதால் "பாப பக்ஷணர்' என்றும் அழைக்கப் படுகிறார். காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச் சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது.
திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும்.
திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவ ருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.
தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.
சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது. எதிரிகள் அழிவர். பில்லி, சூன்யம், திருஷ்டி அகலும். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. யமபயம், யமவாதனை தவிர்க்கப்படும். பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
கஷ்டங்கள் அகல காலபைரவாஷ்டமி வழிபாடு
ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது.
சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய காலபைரவரை சிவபார்வதி தம் காவலுக்கு நியமித்தனர். தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய்வாகனம் கருதப்படுகிறது.
நாய்க்கு, வேதஞாளி என்ற பெயர் இருக்கிறது.

Monday, August 28, 2023

27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் இணைந்த கோயில்.

இன்று திருவோணம் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்திருக்கோயில்
27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரியதிருக்கோயில்
27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும்திருவாதிரையும்தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம், வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் அலர்மேல் மங்கா சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்.
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்
27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம், வேலூர் மாவட்டம் திருப்பாற்கடல் அலர்மேல் மங்கா சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில்.

தல வரலாறு : பிரம்மா தன் அகங்காரம் நீங்க, சத்தியவிரதம் எனப்படும் காஞ்சிபுரத்தில் அஸ்வமேத யாகம் செய்தார். அதில் புண்டரீக மகரிஷியும் கலந்து கொண்டார். யாகம் முடிந்ததும் நாராயண சதுர்வேதி மங்கலம் எனப்படும் இத்தலத்திற்கு வந்து, அங்கிருந்த கோயிலுக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஆவுடையையும், அதின் மேலிருந்து லிங்கத்தையும் பார்த்து விட்டு பெருமாள் கோயில் இல்லை என்ற ஏமாற்றத்துடன் வெளியே வந்தார். அப்போது சிவன் ஒரு வயோதிகர் வேடத்தில் அங்கு வந்து, மகரிஷியின் மனக்குறையை அறிந்து, ரிஷியே நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான் என்றார். ஆனால் ரிஷி மறுத்தார். வயோதிகர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு , விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான் என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும், கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து,ரிஷியே ! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன்.உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும்,என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் தானே பிரசன்னமாகி காட்சி தந்ததால், இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார்.

திருவோண நட்சத்திர தலம்: சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். உடனே அவள் இத்தலத்தில் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது. திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோகிணி, அஸ்தம் ஆகிய சந்திரனுக்குரிய நாளிலோ, மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால், கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

இருப்பிடம் : வேலூரிலிருந்து (20 கி.மீ) சென்னை செல்லும் வழியில் உள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மீ. தூரம் சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். இங்கு இரண்டு பெருமாள் கோயில் இருப்பதால் அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்.

திறக்கும் நேரம் : காலை 7.30  மதியம் 12 மணி, மாலை 4.30  இரவு 7.30 மணி

போன் : 04177 254 929, 94868 77896

சிவனுக்கு உகந்த திங்கட் கிழமை பிரதோஷம் தீராத வினையெல் லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன்.


🌹🌹சோமவார பிரதோஷம்
*********************************
சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட் கிழமை பிரதோஷம் தீராத வினையெல் லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். 

அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலக ண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங் களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

சிவ ஆலயத்திற்கு சென்றாலே நந்தியின் காதில் கஷ்டங்களை கூறி வணங்குவது பலரது வழக்கம் பிரதோஷ நாளில் நந்தி யிடம் அதிக வேண்டுகோள் வைப்பார்கள். பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.

நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெ ழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிர தோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ் வர பூஜையிலும் கலந்துகொண்டு இறை வனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும்.

🌹தியானம் செய்ய சிறந்த நேரம்
****************************************
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.

பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற் றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடு கின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராண ங்களில் கூறப்பட்டுள்ளது.

🌹பாவம் விலகி புண்ணியம் சேரும்
*******************************************
பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். 

இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக் கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனை கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

🌹நந்தியிடம் சொன்னால் நிறைவேறும்
************************************************
சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இரு ப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்ப வர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களை யும் சொன்னால் நந்திபெருமான் சிவனிட ம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. 

அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யு ம். நந்தியின் காதில் சொல்லும் நடைமு றை என்பது எல்லா கோவில்களிலும் இரு க்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவே றும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு

🌹அபிஷேக பொருட்கள்
******************************
பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொ டுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். 
தயிர் - பல வளமும் உண்டாகும், 
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், 
நெய் - முக்தி பேறு கிட்டும்.
 இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, 
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

🌹சனி தோஷம் போக்கும் பிரதோஷ விரதம்
**************************************************
பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோ ஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. 

நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும். 

மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒருபிடி வன்னி இலை ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தி யின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணி த்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனை யும் தொழுதால் சனி பகவானால் உண்டா கும் சகல துன்பங்களும் விலகிப் போகும். 

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்பு டையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

🌹ஈசனை வலம் வரும் முறை
************************************
பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்ச ணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈச னை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமா னை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். 

சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழு ம் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிற து. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ள ப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.

🌹சிவ தரிசனம்
*******************
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலய த்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். 

முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராய ணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப் படும் திருமுறை பாராயணத்தையும், மூன் றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையு ம் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும். 

பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதக ங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகி றது. 

பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருக ப்பெருமானோடும் இணைந்த சோமாஸ் கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம். சிவதரிசன ம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்.

🌹நந்தி வழிபாடு
*********************
பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். 

பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவே தனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. நந்தியம்பெருமானு க்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம். 

அதே நேரத்தில் அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் , கொண்டக்கடலை ஆகியவற்றை நிவேத னமாக தரலாம். 

சிவ பெருமான் அபிஷேக பிரியன் என்பத னால் இன்று தூய பசும்பால் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யலா ம். எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர் க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக் தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும்.

🌹நாளை 21.11.2022 
சோமவார பிரதோஷம்
***************************
சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட் கிழமை பிரதோஷம் தீராத வினையெல் லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். 

அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலக ண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங் களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள்.

சிவ ஆலயத்திற்கு சென்றாலே நந்தியின் காதில் கஷ்டங்களை கூறி வணங்குவது பலரது வழக்கம் பிரதோஷ நாளில் நந்தி யிடம் அதிக வேண்டுகோள் வைப்பார்கள். பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும்.

நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெ ழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிர தோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ் வர பூஜையிலும் கலந்துகொண்டு இறை வனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும்.

🌹தியானம் செய்ய சிறந்த நேரம்
****************************************
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.

பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற் றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடு கின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராண ங்களில் கூறப்பட்டுள்ளது.

🌹பாவம் விலகி புண்ணியம் சேரும்
*******************************************
பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். 

இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக் கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனை கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

🌹நந்தியிடம் சொன்னால் நிறைவேறும்
************************************************
சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இரு ப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்ப வர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களை யும் சொன்னால் நந்திபெருமான் சிவனிட ம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. 

அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யு ம். நந்தியின் காதில் சொல்லும் நடைமு றை என்பது எல்லா கோவில்களிலும் இரு க்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவே றும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு

🌹அபிஷேக பொருட்கள்
******************************
பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொ டுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். 
தயிர் - பல வளமும் உண்டாகும், 
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், 
நெய் - முக்தி பேறு கிட்டும்.
 இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, 
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

🌹சனி தோஷம் போக்கும் பிரதோஷ விரதம்
**************************************************
பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோ ஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. 

நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும். 

மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒருபிடி வன்னி இலை ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தி யின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணி த்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனை யும் தொழுதால் சனி பகவானால் உண்டா கும் சகல துன்பங்களும் விலகிப் போகும். 

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்பு டையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

🌹ஈசனை வலம் வரும் முறை
************************************
பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்ச ணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈச னை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமா னை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். 

சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழு ம் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிற து. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ள ப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.

🌹சிவ தரிசனம்
*******************
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலய த்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். 

முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராய ணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப் படும் திருமுறை பாராயணத்தையும், மூன் றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையு ம் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும். 

பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதக ங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகி றது. 

பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருக ப்பெருமானோடும் இணைந்த சோமாஸ் கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம். சிவதரிசன ம் முடித்தபிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்.

🌹நந்தி வழிபாடு
*********************
பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். 

பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவே தனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. நந்தியம்பெருமானு க்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம். 

அதே நேரத்தில் அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் , கொண்டக்கடலை ஆகியவற்றை நிவேத னமாக தரலாம். 

சிவ பெருமான் அபிஷேக பிரியன் என்பத னால் இன்று தூய பசும்பால் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யலா ம். எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர் க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக் தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்க 🙏

Friday, August 25, 2023

_பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்_

_பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்_ 
1 திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக
2 திருச்சிராப்பள்ளி வினை அகல
3 திருநள்ளாறு கஷ்டங்கள் விலக
4 திருவிடைமருதூர் மனநோய் விலக
5 திருவாவடுதுறை ஞானம் பெற
6 திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க
7 திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக
8 திருத்தில்லை முக்தி வேண்ட
9 திருநாவலூர் மரண பயம் விலக
10 திருவாரூர் குல சாபம் விலக
11 திருநாகை (நாகப்பட்டினம் ) சர்ப்ப தோஷம் விலக
12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) முக்தி வேண்ட
13 திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க
14 திருநெல்லிக்கா முன்வினை விலக
15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய
16 திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக
17 திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக
18 திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக
19 திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட
20 திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
21 திருசிக்கல் ( சிக்கல் ) துணிவு கிடைக்க
22 திருச்செங்காட்டங்குடி கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக
23 திருக்கண்டீச்சுரம் நோய் விலக , தீராத புண் ஆற
24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் ) குடும்ப கவலை விலக
25 திருக்கருவேலி ( கருவேலி ) குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க
26 திருவழுந்தூர் ( தேரெழுத்தூர் ) முன் ஜென்ம பாவம் விலக
27 திருச்சத்திமுற்றம் மண வாழ்க்கை கிடைக்க
28 திருப்பராய்துறை ( திருச்சி ) கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற
29 திருநெடுங்களம் ( திருச்சி ) தீரா துயரம் தீர ( இடர் களைய )
30 திருவெறும்பூர் ( திருச்சி ) அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற
31 திருப்பைஞ்ஞீலி ( திருச்சி ) யம பயம் விலக
32 திருவையாறு அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
33 திருவைகாவூர் வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க
34 திருக்கஞ்சனூர் திருமண தோஷம் விலக
35 திருமங்கலக்குடி (சூரியனார் கோவில்) குழந்தை பாக்கியம் பெற
36 திருமணஞ்சேரி திருமண தோஷம் விலக
37 திருமுல்லைவாயில் சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக
38 திருவெண்காடு ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை
39 திருநெல்வேலி பிராமண குற்றம் விலக
40 திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் முக்தி வேண்ட
41 திருவாலவாய் ( மதுரை ) தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட
42 திருப்பரங்குன்றம் ( மதுரை ) வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட
43 திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் தீரா பாவம் விலக
44 திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
45 திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர் ) தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
46 திருவக்கரை செய்வினை தோஷம் விலக
47 திருவேற்காடு வாணிப பாவம் விலக
48 திருமயிலாப்பூர் மூன்று தலைமுறை தோஷம் விலக
49 திருஅரசிலி ( ஒழுந்தியாம்பட்டு ) காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
50 திருவாலங்காடு வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக
51 திருவேட்டிபுரம் ( செய்யாறு ) ஞானம் கிடைக்க
52 திருப்பனங்காடு பந்த பாசத்தில் இருந்து விலக
53 திருவூறால் ( தக்கோலம் ) உயிர்வதை செய்த பாவம் விலக
54 திருப்பாச்சூர் குடும்ப கவலைகள் நீங்க
55 திருவெண்ணைநல்லூர் பித்ரு தோஷம் விலக
56 திருவதிகை நல் மனைவி அமைய
57 திருவாண்டார் கோவில் முக்தி வேண்ட
58 திருமுது குன்றம் ( விருத்தாசலம் ) தீரா பாவம் விலக
59 திருக்கருவூர் ( கரூர் ) பசுவதை செய்வதன் வழிபட
60 திருப்பாண்டிக் ( கொடுமுடி ) பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக
61 திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட
62 திருகோகர்ணம் ( கர்நாடகம் ) தேவ தோஷம் விலக
63 திருப்புகழூர் பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க
64 திருத்தோணிபுரம் ( சீர்காழி ) குல சாபம் நீங்க
65 திருவைத்தீஸ்வரன் கோவில் பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக
66 திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு ) கர்வத்தால் குரு துரோகம்
67 திருப்பனந்தாள் பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக
68 திருப்புறம்பயம் மரண பயம் விலக
69 திருநெய்த்தானம் மோட்ஷம் வேண்ட
70 திருவானைக்காவல் கோவில் கர்மவினை அகல
71 திருவேதிக்குடி தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக
72 திருவலஞ்சுழி வறுமை அகல
73 திருநாகேஸ்வரம் ஸர்ப்ப ஸாபம் விலக
74 திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் ) நவகிரஹ தோஷம் விலக
75 திருநல்லம் (கோனேரிராஜபுரம்) வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக
76 திருத்தெளிச்சேரி ( காரைக்கால் ) சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர
77 திருசெம்பெரின்பள்ளி வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க
78 திருத்தலச்சங்காடு ( தலைச்செங்காடு ) அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக
79 திருவன்னியூர் ( அன்னூர் ) சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட
80 திருநன்னலம் ( நன்னிலம் ) ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட
81 திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் ) கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக
82 திருமருகல் கணவன் மனைவி அன்புடன் வாழ
83 திருச்சிக்கல் பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட
84 திருச்சேறை இல்லறம் மேலும் சிறக்க
85 திருக்கோளிலி ( திருக்குவளை ) நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட
86 திருவாய்மூர் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
87 திருநெல்லிக்கா கல்வி மேன்மை அடைய
88 திருவெண்டுறை ( வண்டுறை ) வறுமையிலிருந்து விலக
89 திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குலம் ) வினைகள் விலக
90 திருஆலங்குடி புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற
91 கொட்டாரம் அமைதி பெற
92 திட்டை சந்திர தோஷம் விலக
93 பசுபதி கோவில் இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட
94 கொட்டையூர் செய்த பாவங்கள் வேயொரு வீழ
95 ஓமாம்புலியூர் சனி தோஷம் விலக
96 தருமபுரம் சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக
97 மயிலாடுதுறை அனைத்து பாவங்களும் விட்டோட
98 உத்தரகோச மங்கை கர்மவினைகள் அல்ல
99 இராமேஸ்வரம் பித்ரு தோஷம் விலக
100 காளையர்கோவில் பிறவி பயன் கிடைக்க
101 பெண்ணாடம் ஊழ்வினை தோஷம் அகல
102 இராஜேந்திரப்பட்டினம் கர்மவினை அகல
103 அவினாசியப்பர் ஏழு தலைமுறை பாவங்கள் விலக
104 குரங்கினில் முட்டம் நினைத்த காரியம் நடக்க
105 பவானி பித்ரு தோஷம் போக்க
106 ஆச்சான்புரம் மண வாழ்க்கை சிறக்க
107 ஆடுதுறை திருஷ்டி தோஷம் விலக
108 சங்கரன்கோவில் ஸர்ப்ப தோஷம் விலக.
💐🌹

Tuesday, August 22, 2023

பரிகார திருக்கோவில்கள் பற்றிய பதிவுகள் :*

*பரிகார திருக்கோவில்கள் பற்றிய பதிவுகள் :*
*திருமணத்தடை நீங்க:* 

1. திருச்செந்தூர், 
2. திருமணஞ்சேரி, 
3. காளஹஸ்தி, 
4. திருப்பதி, 
5. மாயவரம், 
6. மேதா தட்சிணா மூர்த்தி. 

*குழந்தை பாக்கியத்திற்கு:* 

1. ஆலங்குடி, 
2. சென்னை திருவுடை அம்மன், 
3. இருக்கன்குடி மாரியம்மன், 
4. தென்குடித் திட்டை குரு பகவான். 

*மேல் படிப்பில் வெற்றிபெற:* 

1. திருப்பதி மூகாம்பிகை அம்மன், 
2. திருவொற்றியூர் வடிவுடை அம்மன். 

*தொழில் செழிக்க, வியாபாரம்பெருக:* 

1. ஆலங்குடி, 
2. திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி, 
3. பட்டமங்கலம் குரு தட்சிணாமூர்த்தி. 

*வழக்கில் ஜெயிக்க, செய்வினை ஒழிய:* 

1. அனுமந்தபுரம் வீரபத்ர சுவாமி, 
2. வெக்காளி அம்மன், 
3. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி, 
4. பண்ணாரி அம்மன். 

*ஆன்மிகத்தில் தெளிவு வர:* 

1. திருவண்ணாமலை, 
2. திருவாலங் காடு, 
3. பிள்ளையார்பட்டி, 
4. மதுரை மீனாட்சி திருவலிதாயம் தட்சிணாமூர்த்தி. 

*கடன் பிரச்சனை நீங்க:* 

1. மாங்காடு காமாட்சி, 
2. மதுரை பாண்டி கோவில், 
3. சுசீந்திரம் தாணுலிங்கேஸ்வரர், 
4. திருவனந்தபுரம் ஆற்றுகரை அம்மன். 

*புதிய தொழில் கிடைக்க, வருமானம்பெருக:* 

1. திருப்பதி, 
2. சென்னை காளிகாம்பாள், 
3. கீழ ஈரால் காமாட்சி அம்மன், 
4. நெல்லை ஆழ்வார்திருநகரி வாமன அவதார திருக்கோவில்.

நன்றி.

*🤘ஓம் நமசிவாய🙏*

Monday, August 21, 2023

நீரு இல்லா நெற்றி பாழ்""காணஇனியது நீறு கவினைத் தருவது நீறுபேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

"நீரு இல்லா நெற்றி பாழ்"எந்த 
நாட்டில் எந்த இடத்தில் விளையாடினாலும் நெற்றியில் திருநீற்றுடன் பிரகாசிக்கும் பிரக்யானந்தா🔥
அசர்பைஜான் தலைநகர் பாகுவில் நடைபெறும் உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிபோட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்த்தி தகுதிபெற்றுள்ளார்

பிரக்யானந்தாவின் வயது 17, இந்தியாவின் தமிழகத்தை   சேர்ந்த அவர் உலக அரங்கில் புகழ்பெற்ற செஸ் ஆட்டக்காரராக சுயமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.. 

இன்று இறுதிபோட்டியில் அவர் நார்வேவின் 32 வயதான அந்த மேக்னஸ் கார்லெஸை சந்திக்கின்றார், கார்லெஸ் ஐந்துமுறை சாம்பியன் பட்டம் பெற்ற்வவர் 

ஆனால் அவர் இதர ஆட்டங்களில் இதே பிரக்ஞானந்தாவிடம் 3 முறை தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது ...

மிக இளம் வயதிலே  உலக சாம்பியனை மும்முறை வென்றவர் பிரக்யானந்தா என்பதால் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு பிரகாசமான வாய்ப்பு அதிகம் உண்டு...

பிர்க்யானந்தா  இந்துமதம் அதனால் அவர் எப்போதும் திருநீறு அணிந்திருப்பார்,  எந்த நாட்டில் எந்த இடத்தில் விளையாடினாலும் அவர் நெற்றியில் திருநீறு பிரகாசிக்கும்...

இது உலக நாட்டின் மேடைகளில் புதிது

எங்கு சென்றாலும் எவ்வளவு பெரிய அரங்கம் ஆட்டம் என்றாலும் நெற்றியில் திருநீறோடு நிற்கும் அந்த இந்து திருமகனை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்...

, இந்தியாவின் இந்துக்கள் பெரும் அடையாளத்தில் இருந்தும்   பெரும் இடங்களில் திருநீறு பூசுவதில்லை
இந்திய கிரிக்கெட் ஆட்டகாரர்கள் பிரசித்தியாக இருந்தாலும் களத்திலோ அரங்கிலோ திருநீறு பூசியாரும் கண்டதில்லை.

ஆனால் இந்த சிறுவன் அதை செய்கின்றான், சரியாக தான் ஒரு இந்து சிவமைந்தன் என்பதில் கவனமாக இருக்கின்றான்,  பெற்றோர் அப்படி வளர்த்திருக்கின்றார்கள்.

விவேகானந்தருக்கு பின் சர்வதேச அரங்கில் திருநீறு அந்த சிறுவன் நெற்றியில்தான் அரங்கேறியிருக்கின்றது, அதை காணும் உலகம் அவன் ஒரு இந்து, இது இந்துக்களின் அடையாளம் என உற்று பார்க்கின்றது.

இந்து பாரம்பரியம் அறியா பல உலகத்தார் அந்த திருநீற்றை உற்றுபார்த்து, இது என்ன? இந்துக்கள் ஏன் இப்படி பூசிகொள்கின்றார்கள் என கேட்கின்றார்கள்.

கடைசியில் சாம்பலே மிஞ்சும் வாழ்விது, இங்கு எதுவும் நிரந்தரமில்லை, எல்லோர் வாழ்வும் பிடி சாம்பலிலே முடிகின்றது அதனால் அகங்காரமும் ஆணவமும் கொண்டு ஆடகூடாது என்பதற்காக அனுதினமும் நெற்றியில் சாம்பலை வைத்து  வாழ்வின் நிலையற்ற தன்மையினை நினைந்துகொண்டே இருப்பார்கள் அது அவர்கள் மத ஏற்பாடு என பதிலும் கிடைக்கின்றது.

எவ்வளவு அருமையான தத்துவம் கொண்ட மதம் இந்துமதம் என அதனை புதிய நோக்கில் ஏராளமானோர் உற்று பார்க்கின்றார்கள்.

இந்திய அரசியல்வாதிகளும் விஞ்ஞானிகளும் விளையாட்டு வீரர்களும், சினிமாக்காரர்களும் நாகரீகம் என கருதி மறைத்த பெருமையினை கொஞ்சமும் தயங்காமல் ஒரு இந்துவுக்கு இதுதான் அடையாளம் என விவேகானந்தருக்கு அடுத்து கம்பீரமாக நிற்கின்றான் அந்த ஞானசிறுவன்.

அவன் சதுரங்கத்தில் மட்டும் தனிவழி காட்டவில்லை, உலக இந்துக்களுக்கெல்லாம் ஒரு உதாரணத்தை காட்டியிருக்கின்றான்,  அவனை அந்த பரமசிவனும் பார்வதியும் இன்னொரு நாயன்மாராக வழிநடத்தி வரட்டும்.

"அர்ஜூனா உயர்ந்த இடத்தில் இருப்போரை உலகத்தார் உற்றுபார்பார்கள், அதனால் நீ செய்யும் ஒவ்வொரு காரியமும் பல்லாயிரம் பேருக்கு வழிகாட்டலும் பாடமுமாக அமையும், கர்மத்தை சரியாக செய்" என கண்ணன் கீதையில் சொன்ன வரிக்கு சரியாக நிற்கின்றான் அந்த சதுரங்க அர்ஜூனன்.

இந்து அடையாளத்தை தாங்கி, தான் ஒரு இந்து என செல்லும் பக்திமிக்கவர் அவர், அப்படித்தான் எல்லா மேடைகளிலும் அமர்ந்திருப்பார்.

அசர்பைஜானிலும் அப்படித்தான் அமர்ந்திருக்கின்றார்.

இது உலக அரங்கில் கவனிக்கபடுகின்றது.

செஸ் எனப்து அறிவால் கணக்கிட்டு விளையாடும் கணித விளையாட்டு, அது விளையாட கணிப்பிடும் திறனும் கணக்கீடும் அவசியம், மூளை பலத்தால் விளையாடும் விளையாட்டு அது, மனோசக்தி அதிகம் வேண்டும்.

அவருக்கு எல்லா பலத்தையும் அருளையும் வாய்ப்பையும் அந்த ஈசனின் திருநீறு கொடுக்கட்டும்..

"காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே"

என்பார் சம்பந்த பெருமான்.

உலகம் வாழ் இந்துக்களின் அடையாளமாக விளங்கும் அந்த விபூதி சம்பந்தர் வாக்குபடி அவருக்கு பெருமையும் அறிவும் ஞானமும் வெற்றியும் அருளட்டும்💐🔥

Thursday, August 17, 2023

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத #திருவெண்காடு #அகோரமூர்த்தி#அகோரசிவன் வரலாறு:

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் பரம்பொருள் ஈசனின் 
(சிவபெருமானின்)
64 சிவ வடிவங்களில் ஒன்றான 
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத #திருவெண்காடு #அகோரமூர்த்தி
#அகோரசிவன் வரலாறு:
தமிழகக் கோவில் மரபுகளில் இசைக்குத் தனி இடம் உண்டு. ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனி இசை மரபு உள்ளது. உதாரணமாக #திருவெண்காடு கோவிலில் சுவாமி புறப்பாட்டின் போது முதலில் மோகனம் வாசிக்கப்பட்டு அதன்பிறகே #மல்லாரி வாசிக்கப்படும். அந்தக் கோவிலில் உள்ள அகோரமூர்த்திக்கு #மோகனம் உகந்த ராகம்.

ஆகவே இப்படி ஒரு மரபு அங்கே பின்பற்றப்படுகிறது. அதே காரணத்தால் அந்த ஊரில் வேறு எந்த இடத்திலும் மோகன ராகம் பாடப்படுவதுமில்லை வாசிக்கப்படுவதும் இல்லை.

ஹர ஹர...திருவெண்காட்டுக்கோவிலில் ஸ்ரீ அகோரமூர்த்தி புறப்படும் போது மல்லாரியில் தேர் மல்லாரி  வாசிக்கப்பெறுகின்றது. திருச்செங்காட்டாங்குடித் திருவிழாவில் சுவாமி பிக்ஷாடனராக எழுந்தருளும் போது இரண்டே அடிகளைக் கொண்ட மல்லாரி ஒன்று, கண்டகதியில் இசைக்கப்பெறும்

திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது.

சிவபெருமானின் பஞ்சப்பிரம மூர்த்தங்களுள் தென்முகமாக இருப்பது அகோரமூர்த்தியாவர். சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுள் அகோர மூர்த்தி 43-வது மூர்த்தியாவார். இத்திருவுருவம் இத்தலத்தில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது. 

இப்பெரிய கோயிலின் மேலை பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியாக தன் அருள் மாட்சியைத் துலங்க வைத்துக் கொண்டிருக்கிறார் அகோர சிவம். இவரை அடுத்துள்ள சன்னதியில் இப்பெருமானது உற்சவ படிமத்தைக் காணலாம். பக்தர்களைக் காக்க இதோ புறப்பட்டு விட்டேன்! என்று கூறுவார் போன்றும் - அருள் சிறக்க ஓடி வருவார் போன்றும் அமைந்துள்ளது. பெருமானின் முன்காலும், இடது காலும், உருவத்தில் கொஞ்சம் கடுமை காட்டுகிறார் தான் என்றாலும், அருட்கண்ணோட்டத்தில் இவரே சிறந்த வரப்பிரசாதி.

அகோர மூர்த்தியின் திருவுருவைக் காணக்கண்கோடி வேண்டும். இவர் கரிய திருமேனி உடையவர். இவர் இடது காலை முன்வைத்து வலது கால் காட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார். எட்டுக்கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலம் பூண்டுள்ளார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார். 

சிவந்த ஆடைகளை அணிந்தும், தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன் நெற்றிக்கண் நெருப்பைக்கக்க கோரைப்பற்களுடன், பதினான்கு நாகங்கள் திருமேனியில் பூண்டு மணிமாலை அணி செய்யக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். #அப்பர் சுவாமிகள் இத்தலத்தைப் பற்றிப் பாடிய “#தூண்டு_சுடர்_மேனி” எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் அகோரமூர்த்தியின் திருவுருவத்தில் காணலாம்.

இருபத்தெட்டு ஆகமங்களில் உத்தர காரண ஆகமத்தில் இவரை அகோராஸ்திர மூர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தட்ச யாகத்தை அழிக்க சிவபெருமானால் நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட அகோர வீரபத்திரர் வேறு. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அகோரமூர்த்தி வேறு ஆவார். இரு அம்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை  தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அகோரமூர்த்தி எப்படி உருவானார் என்ற வரலாறு வருமாறு:- 

#மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால் தேவர்களுக்கு பல துன்பம் விளைத்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். அசுரன் வெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப்பின் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினார்.

இதுபற்றி நந்தி, திருவெண்காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங் களில் ஒன்றாகிய அகோர முகத்தினின்று அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்டமாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்து தோத்திரம் செய்தான். சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடியில் காணலாம். காயம் பட்ட இடபதேவரை சுவேதாரண்யேசுவரர் ஆட்கொண்டார். இன்றும் இக்கோவிலின் நிருத்த மண்டபத்தில் சிலை வடிவில் இதை காணலாம். 

மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் அகோரபூஜை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் மிக விசேஷமாக பூஜை நடைபெறுகின்றது. 

அகோர சிவமாம் அண்ணலின் சன்னதிக்கு எதிரே அமைந்த சன்னதி ஒன்றில் சுவேதமகாகாளி அழகெல்லாம் திரண்டு வீரக்கோலத்தில் அருட்பொலிவோடு ஐயனுக்கு ஏற்ற அம்மையாக வீற்றிருப்பதையும் காணலாம்.

திருவெண்காடு இத்தலத்துக்குரிய சிறப்பு மூர்த்தியாகிய அகோரமூர்த்தி நின்ற மேனியராய், சூலத்தை இருகைகளிலும் சாய்த்துப்பிடித்து, எண்கரங்களுடையவராய்ச் சற்றுத் தலைசாய்த்து, முன்பின்னாகத் திருவடிகளை வைத்து மிக்க அழகாக - உண்மையிலேயே அகோரராக - அற்புதமூர்த்தியாகக் காட்சி தருகின்றார். கண்களுக்குப் பெருவிருந்தாகக் காட்சிதரும் அகோரமூர்த்தியை விட்டுப் பிரிந்து வரவே மனமில்லை. சலந்தரன்மகன் மருத்துவன். இவன் இறைவனை நோக்கித்தவம் செய்தான். இறைவன் காட்சிதந்து சூலத்தைத்தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்களைத் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். இதை அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார். போர் தொடுக்கையில் மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப்போயிற்று. இஃதையறிந்து இறைவன் தாமே அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்தநாள் ஞாயிற்றக்கிழமை பூரநட்சத்திரம். (மாசி மகத்து மறுநாள்) இதனால் இன்றும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றக்கிழமைகளில் இரவு 10 மணிக்குமேல் (இரண்டாங்கால முடிவில்) அகோரமீர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவெண்காடு வருவோர், ஞாயிறு நாளாக அமைந்தால் அன்றிரவு தங்கி, ஆலயத்தில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிப்பாட்டைத் தரிசிக்கவேண்டும். இவ்வரலாற்றையட்டிச் சுவாமி சந்நிதிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

மூல அகோர மூர்த்தியின் பக்கத்தில் உற்சவ அகோர மூர்த்தி காட்சி தருகின்றார். அற்புதமான வேலைப்பாடு. காணக்காணத் தெவிடடவில்லை. திருவடியில் ஒருபுறம் மருத்துவன் இழிந்து தலைசாய்த்து விழும் அமைப்பும் மறுபுறம் நந்தியும் உள்ளது. காணத்தக்கது.

இவ்அகோர மூர்த்திக்கு இக்கோயிற் பெரவிழாவில் ஐந்தாம் நாள் அன்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வீதிஉலா நிகழ்கிறது. இப்புறப்பாட்டின் போது (மாசிப்பூர அபிஷேகத்தின் போது) இம் மூர்த்திக்கு செய்யப்படும் சிறப்புக்கள் பலப்பல. ஆயிரம் புட்டிகள் பன்னீர் அபிஷேகம், எண்ணற்ற ரோஜா மாலைகள், புறப்பாட்டின் போது அடிக்கொரு பட்டு சார்த்தும் சிறப்பு முதலியனவாக எண்ணற்ற சிறப்புக்கள்.

நாடொறும் ஆறுகால வழிபாடுகள் சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாமத்தின்படியும் அகோர மூர்த்திக்கு காரணாகமத்தின் படியும் இங்குள்ள நடராசப் பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடைபெறுகின்றன.

அகோரமூர்த்தியின் சந்நிதியில் உங்கள் குறைகளை அவரிடம் சொல்லி மனதார வழிபட்டால், பித்ருக்கள் முதலான தோஷங்கள் விலகும். முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம். எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். மனக்கசப்புகளும் மனக்கிலேசமும் நீங்கும்.

திருவெண்காடு திருத்தலத்தின் அகோர மூர்த்தி ரொம்பவே விசேஷமான மூர்த்தம். இவரை ஆத்மார்த்தமாக வணங்கி வழிபட்டு வந்தால், துஷ்ட குணங்களும் எண்ணங்களும் ஏற்படாது. நல்ல தர்ம சிந்தனைகள் பெருகும். முன் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக இவரை வழிபடுவது சிறப்பானது. அகோரமூர்த்தி வடிவில் உள்ள சிவனை வழிபடுவோருக்கு எப்போதும் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அவர் பொழியும் அருள் மழைக்கு எல்லையே இல்லை எனலாம்.

திருச்சிற்றம்பலம் 🙏🙇

திருவண்ணாமலை ஆலயத்தின் ஒன்பது கோபுரங்களின் சிறப்புக்கள்

திருவண்ணாமலை ஆலயத்தின்  ஒன்பது கோபுரங்களின் சிறப்புக்கள்...!
திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும்  ஒரு  பெயர்  உண்டு.  அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

அதில் ஒன்று, திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் இருப்பதாகும். இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். அந்த 9 கோபுரங்கள் விபரம் வருமாறு:-

1. ராஜகோபுரம் (கிழக்கு), 2. பேய்க் கோபுரம் (மேற்கு),
3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு), 4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு), 5. வல்லாள மகாராஜா கோபுரம், 6. கிளி கோபுரம்,
7. வடக்கு கட்டை கோபுரம், 8. தெற்கு கட்டை கோபுரம்,
9. மேற்கு கட்டை கோபுரம்.

1. ராஜகோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த கோபுரம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக திகழ்ந்தது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. 

தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார்.

அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 

ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். 

ஆனால் அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார்.

கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 

ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பவுர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 

அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள். அதேபோன்றுதான் இந்த கோபுரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து அழகுற கட்டி முடிக்கப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

11 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிட கலை அம்சங்களை அதிகமாக காணலாம். கோபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறைய நாட்டிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. 

விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

கோபுரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பூதகணங்களும் கண்களுக்கு விருந்து கொடுப்பதாக உள்ளன. கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. 

விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. அந்த காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன.

அந்த காலத்தில் இறந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சமீப காலமாக இந்த பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. பேய்க்கோபுரம்

ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார். 

இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது.

கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர்.

மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.

3. திருமஞ்சன கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு திசையில் திருமஞ்சன கோபுரம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். 

எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை யார் கட்டியது என்று தெரியவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக இந்த கோபுரம் திகழ்கிறது.

ராஜகோபுரத்திற்கு அடுத்தப்படியாக இந்த கோபுரத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்து செல்வார்கள்.

அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை உள்ளே அழைத்து வருவார்கள். இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைவாணர்கள் சிற்பம் மிகுந்த சிறப்பு பெற்றது. 

4. வல்லாள மகாராஜா கோபுரம்

இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு இந்த கோபுரத்தின் கட்டுமானப்பணி முடிந்ததாக ஒரு தகவல் உள்ளது. 

எனவே இந்த கோபுரத்திற்கு வீர வல்லாள திருவாசல் என்ற ஒரு பெயரும் உண்டு. ராஜகோபுரத்தை தாண்டியதும் அடுத்து வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர் சிற்பங்களுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவபெருமான், காளை மீது அமர்ந்த சிவபார்வதி, சமணரை கழுவேற்றம் செய்யும் சிற்பங்களும் உள்ளன. 

லிங்கத்தை பார்வதி தழுவி நிற்பது போன்ற சிற்பமும் இடம்பெற்றுள்ளது. அண்ணாமலையார் தனது மகனாக வல்லாள மகாராஜாவை ஏற்றுக் கொண்ட சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த கோபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. 

5. கிளி  கோபுரம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரி நாதர் பற்றி சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரோடு தொடர்புடையது இந்த கிளி கோபுரமாகும்.

திருவண்ணாமலை தலத்தில் உள்ள கோபுரங்களில் இது மிக மிக பழமையானதாகும். 1053-ம் ஆண்டு இந்த கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டினார். சுமார் 140 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. 

அருணகிரி நாதர் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற போது அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர் கிளி உருவில் அலைய வேண்டியதாற்று. அவர் கிளி உருவத்தோடு இந்த கோபுரத்தில் அமர்ந்து நிறைய பாடல்களை பாடினார். 

கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி ஆகிய இலக்கியங்கள் இந்த கோபுரத்தில் கிளி உருவத்தில் அமர்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. 

இந்த கோபுரத்தில் 33 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னமும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.

6. தெற்கு கட்டை கோபுரம்

திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன. 

7. மேற்கு கட்டை கோபுரம்

பேய் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. 

8. வடக்கு கட்டை கோபுரம்

அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. 

9. அம்மணியம்மாள் கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் என்ற பெண் சித்தர் உருவாக்கிய கோபுரம் இது.

Friday, August 11, 2023

சரி எப்படி தன் தலையை தானே வெட்டிக்கொள்ள முடியும்? வீரன் ஒருவனின் நவகண்ட சிலை...

செல்பவர்கள் ஒன்று உள்ளது...!

வீரன் ஒருவனின் நவகண்ட சிலை...
மிக சாந்தமான முகம். அறுபட்ட தன் தலை தரையில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவன் தலைமயிரை கொத்தாக கையில் அள்ளி பிடித்திருக்கிறான். 

சாவின் பயம் அவன் முகத்தில் இல்லை. உறுதியான உடற்கட்டும் ஆரோக்கியமும் கொண்டவன் என்பது அவன் உடல்வாகில் தெரிகிறது..சிரித்தபடியான உதடுகள். அழிந்த முகம் அடர்ந்த புருவங்கள். கொண்டையிட்ட கேசம். கழுத்தில் மணியாரத்துடன்..

நவ கண்டம்...

சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்கள் நம் தமிழ் நாட்டை ஆண்டபொழுது, எவ்வளவு வளமாக இருந்தாலும், போர் மற்றும் அதன் இழப்புகள், பற்றிய சிந்தனை எப்பொழுதும் மக்களிடம் இருந்தது. 

ஏதாவது ஒரு காரணத்திற்க்காக, இவ்மூவரும் போரில் ஈடுபட்டனர். ஆனால் எவ்வளவு முறை போர் செய்தாலும், மக்கள் அந்த, அந்த அரசர்களுக்கு மிக விசுவாசமாக இருந்தார்கள். 

எவ்வளவு விசுவாசம்? 

தன் மன்னன், வெற்றி பெறவேண்டும், தன் நாடு செழிக்கவேண்டும் என்பதற்காக தன் உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்கு. 

இந்த தியாகம் போர்முனையில் அல்ல, போருக்கு போகும் முன்பே. 

இதனைத்தான் நவ கண்டம் என அழைத்தார்கள் நமது முன்னோர். 

நவ கண்டம் என்றால், தன் தலையை தானே வாளால் வெட்டி மாய்வது. 

நவ + கண்டம்,என்பதே நவகண்டம் எனப்படுகிறது. நவ என்பது நம் உடலிலுள்ள ஒன்பது துவாரங்களை குறிப்பதாகும். இந்த ஒன்பது துவாரங்களின் நரம்பு முடிச்சுகளும் நம் கழுத்தின் பின்புறத்தில் முள்ளந்தண்டு வடத்தில் அமைத்துள்ளது..

உடலின் ஒன்பது துவாரங்களையும் ஒரே தருணத்தில் செயலிழக்க செய்வது உயிர் துறப்பதற்கான வழிகளில் ஒன்று. எனவே இந்த முக்கிய நரம்புமுடிச்சை கொண்ட கழுத்தை (கண்டத்தை) தன் கையால் தானே துண்டம் செய்வது நவகண்டம் எனப்படுகிறது. ஒரே வீசில் தன் தலை உடலில் இருந்து அறுத்து வீசுவதால் அறிகண்டம் எனவும் கூறப்படும்..

இதற்க்கு எத்தனை துணிவு இருத்தல் வேண்டும்? 

சரி எப்படி தன் தலையை தானே வெட்டிக்கொள்ள முடியும்? 

ஒரு நீண்ட, நன்கு வளையக்கூடிய மூங்கில் கழியை, பூமியில் நன்கு ஊன்றி நட்டு, தன் குடுமியை (அப்பொழுதெல்லாம் எல்லா ஆண்களும் குடுமி வைத்திருந்தார்கள்) அக் கழியில் மாட்டி, நன்றாக தலையை கீழே குனிந்தால், மூங்கில் நன்கு வளையும், பின் வாளால் ஒரே வெட்டு. தலை துண்டாகி, மூங்கில் கழியில் தொங்கும்...இது தான் நவகண்டம்...

இதை அப்படியே எழுத்து சித்தர் பாலகுமாரன் அய்யா அவர்கள் தன்னுடைய நாவலில்.....அரசன் போருக்கு செல்லும் வழியில் நடு சாலையில் அவன் முன் ஒருவன் செய்கிறான் இதே போல...தலை துண்டிக்கப்பட்ட மூங்கில் மேலே தலையுடன் செல்லும் போது அரசனுக்கும் அவர்கள் படையினருக்கும் நெற்றியில் திலகமாக, அவனது தலை மேலே போகும் போது அதிலிருந்த ரத்த துளிகள் அனைவர் மீதும் தெளிக்கும்..தலையில்லா முண்டம் மட்டும் கீழே சாயும்... இதை நாவலாகவே எழுதியுள்ளார்..

இப்படி தன்னை பலியிடுவதன் மூலம், சூட்சம சக்தியாகி, தன் மன்னனுக்கும், நாட்டிற்க்கும், வெற்றி தேடி தருவதோடு, வீர சுவர்கமும் அடையமுடியும் என்பது, அக்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை...

பலியானவர்களுக்கு, நடுகற்கள் நட்டு, அவர்களை தெய்வமாக வழிபடுவதும் நடந்திருக்கிறது. இன்றைக்கும் பல கிராம தேவதைகளின் கதைகளை கேட்டால், அவர்கள் அந்த ஊருக்கு எதோ மிகப்பெரிய தியாகம் செய்து, அதன் விளைவால் உயிர் நீற்று, அதனால் தெய்வம் ஆனவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.

அப்படி ஏதோ ஒரு நோக்கத்துக்காக தனது இன்னுயிரை தந்தவன் சிலையை நீங்க திருவானைக்காவில் காணலாம்...தமிழகத்தில் பல கோவில்களில் இது போன்ற சிலைகள் உள்ளன்...அவை அனைத்தும் யாரோ எங்கேயோ தேசத்துக்காக அரசனுக்காக நவகண்டம் ஆனவர்கள் தான்..

இந்த சம்பவங்களை நீங்களும் அறிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்க...இப்படிபட்ட உன்னதமானவர்கள் வாழ்ந்த மண்ணில் நாமும் வாழ்கிறோம் என ...

ஏதோ ஒரு சிலை தானே என ஒதுங்கி போகாமல் அவர்களுக்காக ஒரு நொடி அந்த சிலை முன் நின்று வணக்கம் செலுத்துங்கள்..

சிலை இருக்குமிடம்-

ஒன்று திருவானைக்கா முதல் நுழைவாயில் இளநீர் கடை வாசலில்..

இரண்டாவது சிவன் சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில்.

ஒரு வேளை அவர்கள் உங்கள் மூதாதையர்களாக கூட இருக்கலாம்....

ரவி வார மகா பிரதோசம்சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் சந்தோசமான பிரதோசம்

♦♦பிரதோச திருவிழா♦♦

சூரியனைப்போன்று உலகில் உயர்ந்தும் உலகினுக்கே பேரொளியாய் இருப்பதைப்போல் நாமும் நலம்பெறலாம் நன்கு உயரலாம்
ரவி வார மகா பிரதோசம்
சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் சந்தோசமான பிரதோசம்

நான்கு யுகங்களில் நடப்பு கலியுகத்தில் ஆண்டுகள் அறுபதில் அதிகசக்திவாய்ந்த சோபகிருது என்னும் இந்த ஆண்டில் ஆடி மாதந்தன்னில்  தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை பிரதோசத்திருநாள்

எப்படிப்பட்ட துன்பங்களாயினும் விலகிட  ஞாயிற்றுக்கிழமை பிரதோசம் உகந்தநாள்

இந்தநாளில் சூர்யதேவனோடு சிவபெருமானோடும் நந்திகேஷ்வரோடும் இன்புற்று அருள்பாலிக்கும் அற்புததிருநாள் 

இந்தநாளில் எவனொருவன் சிவலிங்கதிருமேனியையும் நந்தீஷ்வரனையும் சூர்ய தேவனையும் பூஜிப்பவன் எல்லாதுன்பங்களிலிருந்தும் விலகுகின்றான்

இந்த நாளில் ஆலயங்களில் நெய்யினால் தீபமேற்றிட பல தலைமுறையினர் நலம்வாழக்கூடும்  பல துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்

இந்த ஞாயிற்றுக்கிழமை பிரதோசதிருநாளில் நந்திமற்றும்  சிவலிங்க திருமேனிக்கு  பால் மஞ்சள் பஞ்சாமிர்தம் தயிர் தேன் இளநீர் கரும்புச்சாறு  அபிஷேகம் செய்வது மிக மிக அதிக நற்பலன்களைத்தரும்

இன்றையதினம் கோதுமையினால்  செய்த உணவு வகைகளை நெய்வேத்தியமாக படைத்து பல்லுயிர்க்கு தானம் செய்தால் இருபத்தோரு தலைமுறை சேர்ந்த முன்னோர்கள் அனைவருக்கும் நண்மைகள் அடைந்து பெற்று உங்களுடைய வரும் காலம் இருபத்தோரு தலைமுறையை சேர்ந்த சந்ததியினர்க்கும் நல்ல நற்பலன்களை தரும் 

இன்றைய தினம் எவனொருன் பிரதோசத்திருநாளில் சரியான முறையில் பூஜித்து வழிபாடு செய்து கோதுமையினால் செய்த உணவுப்பொருள்களை பல்லுயிர்க்கு தானம் செய்து பலரின் பசியைபோக்குகின்றானோ அவன் நீண்டகாலம் நல்லவேலையும் கிடைத்து நல்லசெல்வமும் பெற்று நலமாகவும்வாழ்வான் என்று சாத்திரங்கள் கூறுகின்றது

இன்றையதினம் பஞ்சாமிர்தம் நெவேத்தியமாக செய்து படைத்து பல்லுயிர்க்கு தானம்தர எல்லாவிதமான சம்பத்துகளும் உண்டாகும் பதினாறு வகையான செல்வங்களும் பெறலாம்

சிவ சிவ திருட்ச்சிற்றம்பலம் 
சிவ சிவ நமசிவாய சிவ சிவ

ஆயுள்விருத்தி தரும் அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!

ஆயுள்விருத்தி தரும் அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றது போல, என்றும் 12 வயதுடையவராக இருக்க சித்திரகுப்தர் வரம் பெற்ற தலம் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் கோயிலாகும்.

காஷ்யப மகரிஷி ஒருசமயம் சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான். 

இழந்த சக்தி மீண்டும் கிடைக்க, சிவனை வேண்டினான். வருணனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். இவருக்கு ஆதிமூலேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது

தலபெருமை:

சித்திரகுப்தர்: 

சித்திரகுப்தர் சிவனருள் பெற்று, எமதர்மனின் கணக்கராக பணி பெற்ற தலம் இது. இவரது 12ம் வயதில் உயிர் பிரியும் விதி இருந்தது. அவரது தந்தை வசுதத்தன் வருந்தினார்.

அவரைத்தேற்றிய சித்திரகுப்தன், இத்தலத்து சிவனை வழிபட்டார். எமன் அவரை பிடிக்க வந்தபோது, சிவன் அம்பிகையை அனுப்பி எமனைத் தடுத்தார்.

அவள் எமனிடம், "சித்திரகுப்தன் சிவபக்தன். அவனை விட்டுவிடு!' என கட்டளையிட்டாள். எமனும் சித்திரகுப்தனை தண்டிக்காமல் விட்டதுடன், சிவனது கட்டளைப்படி தனது உதவியாளராகவும் ஏற்றுக்கொண்டார். சித்திரகுப்தர் என்றும் 12 வயதுடையவராக இருக்கும்படியான அருள் பெற்றார். அம்பாள் சன்னதி எதிரே சித்திரகுப்தர் சன்னதி உள்ளது.

ஆயுள்விருத்தி தலம்: 

சிவன் கோயில்களில் பைரவருக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை அடைப்பது வழக்கம். இங்கு, பைரவருக்கும், சித்திரகுப்தருக்கும் பூஜை செய்து நடை அடைக்கப்படுகிறது.

அர்த்த ஜாமத்தில் சித்திரகுப்தரே சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தருக்கு விசேஷ அபிஷேகத்துடன், பூஜை நடக்கும். ஆயுள்விருத்தி பெற இவருக்கு தயிர் சாதம் படைத்து வணங்குகிறார்கள். மரணபயம் நீங்கவும், ஆயுள்விருத்தி பெறவும், நோய் தீரவும் இங்கு மிருத்யுஞ்ச ஹோமம் செய்து வழிபடலாம்.

அறுபது, எண்பதாம் திருமணங்களும் செய்து கொள்கிறார்கள்.ஞானம், மோட்சம் தரும் கேதுபகவானுக்கு அதிதேவதை சித்திரகுப்தர். எனவே இவையிரண்டும் கிடைக்க சித்திரகுப்தரை வணங்கலாம்.

கடல் தீர்த்தவாரி: 

மாசி மகத்தன்று சுவாமி, வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று வருணனுக்கு விமோசனம் கொடுக்கும் வைபவம் நடக்கும். 

வருணன் மழைக்குரிய தெய்வமென்பதால், சிவனுக்கு தீபாராதனை செய்தபின், ஆகாயத்தை நோக்கி தீபாராதனை காட்டுவர். தை அமாவாசை, ஐப்பசி கடைமுழுக்கு நாட்களிலும் தீர்த்தவாரி உண்டு.

சூரிய பூஜை: 

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய (வடகிழக்கு) திசையில் அமைந்த கோயில் இது. வேண்டுவோருக்கு அமுதம் போல அருளை வாரி வழங்குவதால் இத்தல அம்பிகைக்கு அமிர்தவல்லி என்று பெயர். 

அம்பிகை சிலையின் கீழ் ஸ்ரீசக்ரம் உள்ளது. சித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சிவன், அம்பிகை மீது சூரிய ஒளி விழும். இந்நாட்களில் இங்குள்ள சூரியனுக்கு முதல் பூஜை நடக்கும்.

துர்க்கையை வலம் வரலாம்: 

வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம். துர்க்கையை சுற்றி வந்து வழிபடும் வகையில் சன்னதி இருக்கிறது.

திருநள்ளாறு போல, கோயில் முகப்பில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கியிருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு எள் தீபமேற்றி வழிபடலாம்.

ஒரே கல்லில் செய்யப்பட்ட சுண்ணாம்புக் களஞ்சியம் என்னும் பாத்திரம் இங்கு அவசியம் காண வேண்டியதாகும். கோயிலுக்கு வெள்ளையடிக்க இந்த பாத்திரத்தில் சுண்ணாம்பு கலக்குகின்றனர்.

மரண பயம் நீங்கவும், ஆயுள்விருத்தி பெறவும், நோய் தீரவும் இங்கு மிருத்யுஞ்ச ஹோமம் செய்து வழிபடலாம். ஞானம், மோட்சம் கிடைக்க இங்குள்ள சித்திரகுப்தரை வணங்கலாம்.

சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.

இருப்பிடம் :

சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்திலுள்ள பரங்கிப்பேட்டையில், சேவாமந்திர் பஸ்ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...