Wednesday, October 4, 2023

பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயம்...!

பிரிந்த தம்பதியரை 
ஒன்று சேர்க்கும் சாம்பமூர்த்தீஸ்வரர்  ஆலயம்...!
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரையோரம் உள்ளது சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயம். 

அப்புலிங்கம் என்ற நீர் தலமாகவும் இக்கோயில் போற்றப்படுகின்றது.:  

கருவறையில் மூலவரான சாம்பமூர்த்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புலிங்கமாக வீற்றிருக்கின்றார். 

ஒருமுறை பார்வதி தேவியின் தந்தையான தக்சன் சிவபெருமானை புறக்கணித்து யாகத்தை நடத்தியதாகவும், அவருக்குரிய அவர் பாகத்தையும் தர மறுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

அந்த சமயத்தில் ஈசனின் சொல்லை மீறி தந்தையின் யாகத்திற்கு பார்வதி தேவி சென்றதால் தன்னை விட்டு பிரிந்து வாழ கடவாய் என சிவபெருமான் சாபம் அளித்ததாகவும், சக்தியை விட்டு பிரிந்த ஈசனும் தனியாக எங்கு வந்து லிங்க வடிவத்தில் வில்வ மரத்தடியில் அமர்ந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இறைவனை பிரிந்து பார்வதி தேவி எங்கு தேடியும் இறைவனை காணாது துயரத்தில் ஆழ்ந்த நேரத்தில் சிவபெருமானும் அசிரீரியராக தோன்றி பூலோகத்தில் வில்வ விருட்சத்தின் அடியில் சிவலிங்க திருமேனியாக இருப்பதாகவும், சூரியன் போன்று நீயும் வந்து எம்மை வழிபாடு என்று கூறியதாகவும் தல வரலாறு கூறுகின்றது.

அதன்படியே பார்வதி தேவியும் தமது தமையன் பெருமாளுடன் இறைவனை வழிபட்டதாகவும், இறைவனும் அருள் பாலித்து சக்திக்கு தன்னுடலில் சரி பாதி தந்து ஏற்று கொண்டதாகவும் கூறப்படுகின்றது. 

கிபி எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை வில்வ மரத்தின் அடியில் லிங்க திருமேனியாக காட்சியளித்த இறைவனாருக்கு மைசூர் மகாராஜாவின் அமைச்சர்களின் ஒருவரான சேஷசய்யர் மூலம் கோயில் எழுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஆலயத்தில் உள்ள லிங்க மூர்த்தியின் மீது ஐப்பசி மாதம் ஒன்பதாம் தேதி முதல் 15ஆம் தேதி வரையும், மாசி மாதம் ஒன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரையும் சூரியக்கதிர்விழும் அதிசயத்தை காணலாம்.

 உற்சவராக உமா மகேஸ்வரரும், அம்பாளாக மனோன்மணியம் தெற்கு நோக்கியவாறு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். விருட்சமாக வில்வ மரம் காணப்படுகின்றது.

இந்த கோயிலில் பிரிந்த தம்பதியர் வலம் வந்து வழிபாடு செய்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதுடன், சகல செல்வங்களுடனும் வாழ்வார்கள் என பக்தர்கள் நம்புகின்றனர்.

கருவறை சுற்றுப்ரகாரத்தில் அதிசய சண்முகசிலை உள்ளது. முன்புற மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்களுடன் இந்த சண்முகம் காட்சி தருகின்றார்.

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...