Showing posts with label #pradosha valipadu #Runa vimotiona pradosham #Sivan #Nandi #Hindu India #Tamil Nadu #thirupadri Puliyur. Show all posts
Showing posts with label #pradosha valipadu #Runa vimotiona pradosham #Sivan #Nandi #Hindu India #Tamil Nadu #thirupadri Puliyur. Show all posts

Tuesday, June 4, 2024

செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும்.

பிரதோஷங்களை நீக்க வல்லது பிரதோஷ வழிபாடு. செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. இன்றைய தினம் சிவனை வணங்கினால் கடன் பிரச்சினை தீரும் என்பது நம்பிக்கை.

🕉இன்றைக்கு காலைச் சுற்றிய பாம்பாக பலரை கடன் பிரச்சினை வாட்டி வதைக்கிறது. பணமாக பெறப்படும் கடன் மட்டுமல்ல. தேவ, பூத,பித்ரு,ஆசார்ய, மனுஷ்ய தோஷம் என்ற வகைப்படும் இவைகளை களைய, இந்நாளில் நந்தியெம்பெருமானுக்கு அருகம்புல் மாலைசாற்றி பிரதோஷ வேளையில் சிவபெருமானை தரிசித்தால் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.

⚛உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்.
செவ்வாய்கிழமையன்று பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

🕉பிரதோஷங்களின் வகைகள்

🕉நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிர தோஷம், மகாப்பிரதோஷம், பிரயைப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும். பிரதோஷ நாட்களில் தவறாது விரதம் இருந்து வழிபட்டால் கடன், வறுமை, நோய், பயம், மரண வேதனை நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🕉சிவ தரிசனம்

🕉பிரதோஷம் விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும்.

🕉கடன் பிரச்சினை

🕉கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. லோன் வேண்டுமா? கிரெடிட் கார்டு வேண்டுமா என்று போனில் பேசி பேசியே பலரை கடனாளியாக்கி நடுத்தெருவிற்கு கொண்டுவந்து நிறுத்திவிடுகின்றனர். கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம்.

🕉வாங்கவே வாங்கதீங்க

🕉சிறு சிறு தேவைக்கு கடன் வாங்கப் போய் இன்றைக்கு கடனே தேவையாகி விட்டது. கடனோடு கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார்.

🕉எப்போது கடன் அடைக்கலாம்

🕉ராகு கேது போன்ற பாம்பு கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது. ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.

🕉ருண விமோசன ஸ்தோத்திரம்

🕉ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும்.

🕉பிரதோஷ கால வழிபாடு

🕉ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும். மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை வினாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும்.

🕉கடன் தீர்க்கும் ருண விமோசன பிரதோஷம்

🕉சிவ ஆலயங்களில் இன்று நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்று சிவபெருமானையும் நந்தியையும் வணங்க கடன் பிரச்சினை தீரும். வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்றைய தினம் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு மஹாபிஷேகம் நடை பெற உள்ளது. மங்களாம்பிகைக்கு மாதுளம்பழ அபிஷேகம் நடைபெறுகிறது.🙏

🕉🙏🌺ஓம் நமசிவாய 🌺🙏🕉
🕉🙏🌺திருச்சிற்றம்பலம்🌺🙏🕉

🕉ருண விமோசன பிரதோஷம்: கடன், நோய், எதிரி தொல்லைகள் தீர்க்கும் செவ்வாய் கிழமை பிரதோஷ விரதம்

🕉: தீராத நோய்களும், கடன் பிரச்சினைகளும் தீர செவ்வாய்கிழமை வரும் பிரதோஷ நாளில் சிவனை விரதமிருந்து வணங்கினால் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை.

🕉மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே மக்களை காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை தனக்குள் ஏற்றுக்கொண்டார் சிவபெருமான். விஷத்தின் வீரியத்தினால் மயக்கமடைந்திருந்த இறைவன் திரயோதசி நாளில் மாலை வேளையில் கண் விழித்தார். சிவ தரிசனம் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

🕉பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

🕉சிவ தரிசனம்

🕉பிரதோஷம் விரதம் இருப்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். இப்போது கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதால் வீட்டிலேயே விரதம் இருந்து சிவபெருமானை வணங்கலாம்.

🕉சிவன் நந்தி வழிபாடு

🕉ருணம் என்றால் கடன். கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நோயினால் பலரும் கடனாளியாகின்றனர்.
செவ்வாய்கிழமையன்று ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை.

🕉பிரதோஷ நாளில் அபிஷேகம்

🕉ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாவிட்டாலும் சிவனுக்கு பிடித்தமான அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அபிஷேகப்பிரியரான சிவனடியார்க்கு கறந்த பாலில் அபிசேகம் செய்வது சிறப்பு. தூய்மையான இளநீரில் அபிஷேகம் செய்வதும் நன்று. இறைவன் இயற்கையை விரும்பக்கூடியவர். இயற்கையான வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக்கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகலதோஷங்களும், பிரம்மஹத்தி தோஷமும், ஏழு ஜென்மங்களில் உண்டான தோஷமும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

🕉கடன் வாங்கக் கூடாது

🕉கடன் வாங்குவதற்கு நேரம் காலம் ரொம்ப முக்கியம். திருப்பி அடைப்பதற்கும் நேரம் ரொம்ப முக்கியம். சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது. முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமைகளில் கடன் அடைக்கலாம்.

🕉பிரதோஷ வழிபாடு

🕉சிவனுக்கு சனிப் பிரதோஷம் எப்படி சிறப்பு வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும். ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும்.

🕉கடன் தீர்க்கும் முகூர்த்தம்

🕉தினம் ருண விமோசன பிரதோஷம் மட்டுமல்ல கடன் தீர்க்கும் மைத்ர முகூர்த்த நாளும் வருகிறது. செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் ஆகும். இதே போல செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தமாகின்றது. நாளைய தினம் 22ஆம் தேதி செவ்வாய்கிழமை அனுஷ நட்சத்திரம் இணைந்து விருச்சிக லக்கினம் வரும் நேரம் கடன் அடைக்க ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமை மாலை 03:52 மணி முதல் 05:58 வரை கடன் அடைக்கலாம். கடன் தொல்லையால் மீளமுடியாமல் தவிப்பவர்கள் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணித்து,அந்தத் தருணத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைக்க முயற்சிப்பது சிறப்பு.

🕉இறை வழிபாடு நல்லது

🕉மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷ விரதம் இருக்க வேண்டும். செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். ருண விமோசன பிரதோஷ நாளில் இருக்கும் மௌன விரதம் கூடுதல் பலன் தரும். காலையில் எழுந்து குளித்து விட்டு சிவபுராணம், நீலகண்டப் பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...