Showing posts with label #Kediliappar #shivanTemple #Hindu temple #Kilvelur #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Kediliappar #shivanTemple #Hindu temple #Kilvelur #Tamil Nadu #India. Show all posts

Wednesday, January 22, 2025

முருகன் வேலை ஊன்றிஅதிலிருந்து தீர்த்த நீர் பீச்சி வந்த சிவன் தலம்.

சோழவள நாடான 
#நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 
தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான , 
மாடக் கோயில்களில் ஒன்றான
#கீழ்வேளூர் என்ற #கீவளூர் 
#கேடிலியப்பர் என்ற #அட்சயலிங்கசுவாமி 
#வனமுலையம்மன் (சுந்தரகுஜாம்பிகை)
திருக்கோயிலில் உள்ள வடக்கு திசை நோக்கி அமர்ந்த 
#அஞ்சுவட்டத்தம்மன்
திருக்கோயில் பற்றிய ஒரு சிறு பதிவு:

"அஞ்சு வட்டம் ஆடி நிற்கும் காளி அல்லவோ - அவள்
அடங்காத ஆவியர்க்கும் சூலி அல்லவோ.. 
நெஞ்சு கொண்ட நீதியர்க்கு நீலி அல்லவோ - தமிழ்த்
தடங்கொண்டு வாழ்பவர்க்கு வேலி அல்லவோ !!
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் புகழ்பெற்ற சுந்தரகுசாம்பிகை உடனுறை அருள்மிகு அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
 
திருச்செந்தூரில் சூரபத்மனை அழித்து,அவனை ஆட்கொண்டு தேவர்களை காத்து அபயம் அளித்தான் முருகப்பெருமான்.
சூரபத்மனை அழித்ததால் முருகப்பெருமானை 
#வீரகத்தி தோஷம்(கொலைபாவம்)சூழ்ந்தது.
இதனால் முருகப்பெருமானின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருந்துவந்தது.
இதனை விலக்க முருகப்பெருமான் சிவாலயங்களில் சிவபூஜை செய்து வழிபட்டு வந்தார்.அங்கெல்லாம் அவருடைய சிவபூஜை நிறைவுறாத வண்ணம் முருகப்பெருமானின் மனதை வாட்டிவந்தது வீரகத்தி தோஷம்.

அதுமட்டுமல்ல முருகப்பெருமான் சிவபூஜை செய்யும் இடங்களில் எல்லாம் மாயமாய் இருந்து வீரகத்தி துர்சக்திகள் சிவபூஜையை நிறைவேற விடமால் தடுத்தன.
முருகனைச் சுற்றிப்பல பயங்கர முகங்கள்
தாண்டவமாடின.எல்லாம் பார்க்க முடியாதபடி கோர உருவங்கள்.
இதனால் பொறுத்துப்பார்த்த முருகப்பெருமான் சிவபெருமானிடம்,
''அய்யனே!சிவபூஜை நிறைவேற்றிட துணை புரிய வேண்டும்''என்று கோரிக்கை வைத்தார்.
உடனே சிவபெருமான் தோன்றி,''முருகா! உந்தனுக்கு அம்மை அருளிய நமது சிவசக்தி வேல் பெற்ற சிக்கல் திருத்தலம் அருகில் உள்ள இலந்தை வனத்திற்கு வந்து சிவபூஜை செய்திடுக! அங்கே உந்தன் சிவபூஜை நிறைவேற சிக்கலில் சிவசக்திவேல் அளித்து,சூரபத்மனை அழிக்க உந்தனுக்கு துணைபுரிந்த அம்மை இலந்தைவனத்தில் சிவபூஜை செய்யும் போது உந்தனுக்கு துணைபுரிவாள்''என அருளி மறைந்தார்.

அதற்கேற்ப முருகப்பெருமானும் தாம் சூரனை வதைக்க சிவசக்தி வேல் பெற்ற சிக்கல் திருத்தலத்திற்கு வந்து அதன் அருகில் உள்ள இலந்தைவனம் வந்து அங்கு சுயம்புவாய் அரும்பியிருந்த சிவலிங்கத்திற்கு சிவபூஜை செய்தார்.
அபிஷேகத்துக்கு தீர்த்தம் வேண்டி அருகில் பூமியில் தன் வேலை ஊன்ற,அதிலிருந்து தீர்த்த நீர் பீச்சி வந்து,அதுவே 

இத்தல சரவணப்பொய்கை தீர்த்தமானது.
முருகப்பெருமான் ஈசன் கூறியபடி தமக்கு சூரனை வதைக்க சிவசக்திவேல் கொடுத்த அன்னையை தம் சிவபூஜை இலந்தைவனத்தில் சிறப்புடன் நிறைவேறிடத் துணைக்கு அழைத்தார்.சிவபூஜை செய்யத் துவங்கினார்.
அப்போது அவரை சுற்றி மாயமாய் வீரகத்தி துர்சக்திகள் தோன்றி சிவபூஜைக்கு இடையூறு செய்தன.
இதனைக்கண்ட  அன்னை உமையவள் மனம்
கொதித்தாள்.
தாம் கொடுத்த சிவசக்தி வேல் கொண்டு சூரபத்மனை அழித்து தேவரைக் காத்த முருகனை இந்த துர்சக்திகள் சுற்றி நின்று சிவபூஜை நிறைவேற விடாமல் ஆர்பரிக்கின்றனவே எனக் கொதித்து,அக்கொடிய வீரகத்தி துர்சக்திகளை அழித்து ஒழிக்க தம்மிலிருந்து மிகப்பெரிய தோற்றத்தில் காளியை உதிர்த்தாள்.

சிவபூஜைக்கு இடையூறு செய்யும் வீரகத்தி துர்சக்திகளை நோக்கி தம் கண்களை சுழற்றினாள் காளி.நான்கு புறமும் முருகனைச் சுற்றி இடைஞ்சல் கொடுத்த துர்சக்திகளை அகற்ற காளியானவள் சிவபூஜை செய்யும் முருகனை அந்த வீரகத்திகள் அண்டாமல் இருக்க நான்கு புறமும் ஒரு கவசம் ஏற்படுத்தினாள் காளி.

அப்போது வீரகத்தி துர்சக்திகள் நான்கு பக்கமும் அன்னையின் கவசத்தால் புகமுடியாமல் நிற்க,ஆகாயம் வழிவந்து இடைஞ்சல் கொடுத்தன.இதனைக் கண்ட காளி நான்கு  பக்கமும் மற்றும் ஆகாயம் என ஐந்து கோணத்திலும் முருகப்பெருமானைச் சுற்றிலும் வட்டமாய் ஒரு கவசம் ஏற்படுத்தினாள்.

காளியின் அதிகோர உருவையும்,உக்கிரத்தையும் கண்ட வீரகத்தி தோஷ துர்சக்திகள் ஓட்டமெடுத்தன.முருகப்பெருமானின் சிவபூஜையும் சிறப்புற நிறைவேறியது.தம்மை சுற்றி நான்கு புறமும் மற்றும் ஆகாயம் என ஐந்து கோணத்திலும் வட்டமாய் கவசம் ஏற்படுத்தி அருளிய தமது அன்னையை '#அஞ்சுவட்டத்தம்மா'' எனப்போற்றித் துதித்தார்
முருகப்பெருமான்.

முருகப்பெருமானை வீரஹத்திதோஷங்களில் இருந்து காத்த காளிஅன்னை இத்தலத்தில் ''அஞ்சு வட்டத்தம்மன்'' என்னும் திருநாமத்திலேயே அருள்பாலிக்கிறார்.அஞ்சு வட்டத்தம்மன் இங்கு சுதைவடிவில் பெரிய திருஉருவுடன் பத்து திருக்கரங்களுடன் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.இங்கு அமாவாசை மற்றும் ராகு காலங்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி,கருவறை தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து,
9 உதிரி எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து,குங்குமார்ச்சனை செய்து அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை வழிபட்டு வர 

நம்மை
பீடித்த நோய்கள்,தீராதநோய்கள்,
தரித்திரம்,வறுமை,ஏவல்,பில்லி,சூன்யம்,மாந்திரீகம் என அத்தனை பீடைகளும்,தீவினைகளும்,
தோஷங்களும் விலகி ஓடும்.

கருக்கலைப்பு செய்ததால் வந்த கொடிய பாவம் மற்றும்  பிறரது சாபங்கள்,பிற தோஷங்கள் யாவும் அஞ்சுவட்டத்துக் காளியம்மனை தொடர்ந்து நாம் வழிபட்டு வர விலகும்.

தொடுவதால்,காற்றுமூலம் பரவுவதால் என பரவும் தொற்றுக்கிருமிகளையும்,தொட்டு தொடரும்,பற்றிப்படரும் தொற்றுநோய்களையும் அடியோடு துடைத்தெறியும் வல்லமைபடைத்தவள் அஞ்சுவட்டத்து அம்மன்.

அஞ்சுவட்டத்துக் காளியம்மனை வழிபட்டு வந்தால் அந்த தடங்கல்கள் விலகும்.இதனால் வாழ்வின் சகல தோஷங்களும் அகலும்.

பித்ரு தோஷம்,குலதெய்வ சாபம் உள்ளவர்களும் இத்தல அஞ்சுவட்டத்துக் காளியம்மனை கெட்டியாகப் பிடித்து கொண்டால் சகல சாபங்கள்,தோஷங்களையும் விலக்கி கொள்ளலாம்.

மூலவர் கேடிலியப்பர் #சுயம்பு மூர்த்தி ஆவார்.இவருக்கு புனுகுசட்டம்,சாம்பிராணித் தைலமுமே சார்த்தப்படுகிறது.இவர் தம்மை அண்டியவர்களின் தீவினைகள்,கெடுதல்கள்,கிரக தோஷங்கள்,கர்மவினைகள் ,கேடுகள் அகற்றி இன்பம் அருள்வதால் கேடிலியப்பர் ஆனார்.''கீழ்வேளூர் ஆளும்கோவைக் கேடிலியை நாடும்
அவர்கேடு இலாரே'' என்கிறார் அப்பர் திருநாவுக்கரசர்.ஆம்!இத்தல கேடிலியப்பரை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் எந்தஒரு கேடும் அண்டாது என தமது பதிகம் மூலம் உறுதிபட கூறுகிறார் அப்பர்.

இத்தல வழிபாடு செய்யும் முன் அருகில் உள்ள சிக்கல் வேல்நெடுங்கண்ணி உடனுறை வெண்ணை நாதர் திருக்கோயில் வழிபாடு செய்து,இத்தலம் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகக் கூறுகிறார்கள்.தொற்று நோய்களையும்,கொள்ளை நோய்களையும்,தீராத நோய்களையும் விரட்டும் அதிசக்தி படைத்தவளாக கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் அருள்பாலிக்கிறார்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...