Showing posts with label #Karthigai Deepam #Hindu festival #Tiruvannamalai #Tamil Nadu #India. Show all posts
Showing posts with label #Karthigai Deepam #Hindu festival #Tiruvannamalai #Tamil Nadu #India. Show all posts

Thursday, December 12, 2024

கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

*கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?*
கார்த்திகை தீபம் தமிழர்களின் பழைமையான பண்டிகையாகும். இதைப் பற்றி அகநானூறு போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பண்டிகையை கொண்டாடுவதற்கான முக்கியமான காரணம், சிவபெருமானை ஆராதிப்பதற்காகவும், அவரிடமிருந்து ஆசிகள் பெறுவதற்காகவுமேயாகும். இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் பிரபலமாக திருவண்ணாமலையில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீஅண்ணாமலையார் அருள்புரியும் திருவண்ணாமலையில் மாலை ஆறு மணிக்கு பிரம்மாண்டமான தீபம் ஏற்றப்படுகிறது. இது சிவபெருமானின் அருளை பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வைக் காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் வந்து கூடியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் இந்த தெய்வீக தீபத்தைக் காண்பதன் மூலம் சிவபெருமானை தாங்கள் அருகிலேயே தரிசிப்பதாக உணர்ந்து அவர் அருளைப் பெறுகிறார்கள்.

ஒரு சமயம் மகாவிஷ்ணு, பிரம்மா இருவரும் சிவபெருமானின் அடி, முடியைத் தேடிச்சென்று அதைக் காண முடியாமல் தங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்கின்றனர். அப்போது மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவபெருமான் ஒளிப்பிழம்பாய் காட்சியளித்தார். தாங்கள் கண்ட காட்சியை உலக மக்களுக்கும் காட்டி அருள வேண்டும் என்று இருவரும் கேட்டுக்கொள்ள, திருக்கார்த்திகை நாளன்று சிவபெருமான் பக்தர்களுக்கு ஒளிப்பிழம்பாய் ஜோதி வடிவில் காட்சியளிப்பதாக ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரும் நாளில் தீபம் ஏற்றுவது வழக்கமாகும். இந்த திருநாளில் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி ஒளிரச் செய்வார்கள். இம்மாதம் 13ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் வருகிறது. இந்த நாளில் சரியாக மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றுவது சிறப்பு. வீட்டில் பயன்படுத்தும் காமாட்சி விளக்கை முதல் நாளே நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்வது நல்லதாகும்.

வாசலின் இருமுனைகளில் வைக்கப்படும் இரு விளக்குகள் மட்டும் புதிதாக இருக்க வேண்டியது அவசியமாகும். மற்ற இடங்களில் பழைய விளக்கைப் பயன்படுத்தலாம் தவறில்லை. ஆனால், விளக்குகளை முதல் நாளே சுத்தம் செய்து வைக்க வேண்டும். தீபத்திருநாள் அன்று விளக்குகளை கழுவுவது சரியான முறையல்ல.  சிலர் வாசலில் குத்துவிளக்கு ஏற்றுவார்கள். அவ்வாறு குத்துவிளக்கைப் பயன்படுத்தும்போது அழகாக கோலமிட்டு அதன் நடுவில் வைப்பதே சிறந்தது. 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரும் நாளில் தான்.

 கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான நல்ல நேரம் பற்றிய பதிவுகள் :*
கார்த்திகை தீபத் திருநாள் திருவண்ணாமலை திருத்தலத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன. அவை அனைத்தும் நிகழ்ந்தது கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்து வரும் நாளில் தான். 


அதனால் தான் இந்த நாளில் இறைவனை ஜோதி வடிவமாக கண்டு வழிபட, வீடுகள் தோறும் தீபம் ஏற்றி கொண்டாடுகிறோம். ஈசன் ஜோதி வடிவமாக காட்சி அளித்தது, லிங்க வழிபாடு தோன்றியது, லிங்கோத்பவர் வழிபாடு தோன்றியது என அளவில்லாத பல சிறப்புகளையும், மிக முக்கியமான சிவ வழிபாடுகளும் தோன்றிய திருத்தலமாக திருவண்ணாமலை விளங்குவதால், திருக்கார்த்திகை தீபத் திருவிழா தோன்றிய தலமாகவும் திருவண்ணாமலையை குறிப்பிடுகிறோம்.

*பரணி தீபம்*

திருக்கார்த்திகை தீப வழிபாடு தோன்றிய தலம் என்பதால் திருவண்ணாமலையை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் உற்சவங்களின் அடிப்படையிலேயே வீடுகளிலும் வழிபாடு நடக்கும் வழக்கம் உள்ளது. திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்தன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். பரணி தீபம் என்பது பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படும் தீபமாகும். 

வீடுகளில் ஏற்றப்படும் பரணி தீபம் என்பது நம்முடைய முன்னோர்கள் யம வாதனையில் இருந்து விடுபட்டு, மோட்சம் அடைவதற்கான தீபம் ஆகும். ஆனால் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் பரணி தீபம் என்பது, "ஏகன் அனேகன்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஏற்றப்படுவதாகும்.

ஏகன் என்றால் இறைவன் ஒருவனே என்றும், அநேகன் என்றால் அவனே அனைத்து உயிர்களுக்குள்ளும் பல உருவங்களாக விரிந்து இருக்கிறான் என்றும், மீண்டும் உலக உயிர்கள் அனைத்தும் ஜோதி வடிவமான பரம்பொருளாகிய அந்த இறைவனுள் ஐக்கியமாக வேண்டும் என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்துவதற்காகவே இந்த பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

முதலில் ஒரு விளக்கு ஏற்றுவார்கள். பிறகு அதிலிருந்து 5 பெரிய அகல் விளக்குகளை ஏற்றுவார்கள். இந்த 5 விளக்குகளும் உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் ஒரே தீபமாக மாற்றப்படும். அந்த தீபத்தை எடுத்துச் சென்று பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். இந்த தீபத்தை எடுத்துச் சென்று தான் மாலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவார்கள்.

*அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் :*

பார்வதி தேவி, கடும் தவம் இருந்து, சிவபெருமானின் உடலில் பாதியை பெற்றதும் இந்த தீபத் திருநாளில் தான். இதை கெளரவிக்கும் வகையில் வருடத்திற்கு ஒரே ஒரு முறை வெறும் 3 நிமிடங்கள் மட்டும், ஆனந்தமாக ஆடியபடியே அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்த வேகத்தில் மீண்டும் உள்ளே சென்று விடுவார். 

அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுத்த அடுத்த நொடி, அண்ணாமலையார் மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்."அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க, மகாதீபம் தரிசனம் நடைபெறும். 

*வீட்டில் விளக்கேற்ற நல்ல நேரம் :*

கார்த்திகை தீபத்தன்று மாலை 5 மணிக்கு முன்பாகவே விளக்குகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, திரி போட்டு, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசித்த பிறகு வீட்டில் மாலை 6 மணிக்கு பிறகு விளக்கேற்ற வேண்டும். 

முதலில் வாசலில் விளக்கு ஏற்றி, மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்து வந்து, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். அதற்கு பிறகு வீட்டின் மற்ற பகுதிகளிலும் விளக்கேற்ற வேண்டும். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...