Showing posts with label #kubera amavasya #kubera amavasya #Sri Anjaneyar #Kubera Lakshmi #see Hanuman Jayanti #Hindu India #Tamil Nadu. Show all posts
Showing posts with label #kubera amavasya #kubera amavasya #Sri Anjaneyar #Kubera Lakshmi #see Hanuman Jayanti #Hindu India #Tamil Nadu. Show all posts

Wednesday, January 10, 2024

வியாழக்கிழமையில் வரும் அமாவாசைக்கு குபேர அமாவாசை என்ற பெயர். ஸ்ரீ அனுமன் ஜெயந்தி இன்று.

குபேர அமாவாசை : மார்கழி அமாவாசையில் இதை மட்டும் பண்ணுங்க...பணத்திற்கு பஞ்சமே வராது
அமாவாசை என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமான விரத நாளாகும். எந்த நாளை தவற விட்டாலும் அமாவாசை நாளை கண்டிப்பாக தவற விடாமல் இறை வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டினையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைக்கு ஒரு தனிச்சிறப்பு இருப்பது போது மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். மார்கழி அமாவாசை என்பது அனுமான் அவதரித்த நாளாகும். அனுமான், வெற்றிக்கு உரிய தெய்வமாகும். அதனால் அவர் அவதரித்த நாள் மிக முக்கியமான நாளாகும்.
பொதுவாக வியாழக்கிழமையில் வரும் அமாவாசைக்கு குபேர அமாவாசை என்ற பெயர். இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை ஜனவரி 11ம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது. இந்த குபேர அமாவாசையில் சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தால் குபேர யோகம் என்பது அமையும். அதோடு பணத்திற்கு தட்டுப்பாடு, பஞ்சம் என்பது உங்களுக்கு எப்போதும் ஏற்படாது. கடன் சுமையும் படிப்படியாக குறையும்.
​குபேர அமாவாசை :
​குபேர அமாவாசை :

மார்கழி அமாவாசை தினமான  அன்று வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்து, பித்ரு தர்ப்பணம் கொடுத்த பிறகு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். மாலையில் குபேர வேளை என சொல்லப்படும் 06.30 முதல் 8 மணி வரையிலான நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, 3 ஒரு ரூபாய் நாணயங்களை பூஜை அறையில் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். நிதி தொடர்பான உங்களின் குறைகள், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.

​என்ன நடந்தாலும் இந்த ராசிக்காரர்கள் இதை மட்டும் மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள்​


​பணத்தை ஈர்க்கும் பரிகாரம் :
​பணத்தை ஈர்க்கும் பரிகாரம் :

பிறகு அந்த 3 ஒரு ரூபாய் நாணயங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். முதல் ஒரு ரூபாயை கடுகு கொட்டி வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வையுங்கள். வழக்கமாக கடுகு வைத்திருக்கும் அச்சறை பெட்டி இல்லாமல், தனியாக ஒரு டப்பாவில் கடுகை கொட்டி, அதற்குள் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வையுங்கள். கடுகிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. அதனாலேயே பழங்காலம் துவங்கி நம்முடைய வீடுகளில் கடுகு டப்பாவில் பணத்தை போட்டு வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இப்படி செய்வதன் மூலம் பணம் சேர்கிறதோ இல்லையோ, பணத்திற்கு பஞ்சம் என்பது எப்போதும் ஏற்படாது.


​என்ன செய்தால் பணம் வரும்?
​என்ன செய்தால் பணம் வரும்?

அடுத்ததாக மற்றொரு ஒரு ரூபாய் நாணயத்தை, உங்கள் வீட்டில் உள்ள கல் உப்பு ஜாடியில் போட்டு வையுங்கள். கல் உப்பு இல்லா விட்டாலும் இந்த நாளில் சிறிதளவு கல் உப்பு வாங்கி ஒரு ஜாடியில் கொட்டி உங்களின் சமையல் அறையில் வையுங்கள். அந்த ஜாடிக்குள்ளாகவோ அல்லது ஜாடிக்கு அடியிலோ அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். மூன்றாவதாக மற்றொரு ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் வீட்டில் அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் போட்டு வையுங்கள்.



    
தொடர்பான செய்திகள்
ஆருத்ரா தரிசனத்தன்று இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் செல்வம
காலாஷ்டமி செய்ய வேண்டும் ?
இன்றைய ந முதல் ஏகாதசி எப்போது ? பெருமாளின் அருளை பெற என்ன செய்ய 
கோடீஸ்வரனாக எளிய வழி:  இந்த ஆறு கெட்ட பழக்கங்களை கைவிட்டால் பணம் தேடி வரும் -  சாணக்கியர் நீதி
கோடீஸ்வரனாக எளிய வழி: இந்த ஆறு கெட்ட பழக்கங்களை கைவிட்டால் பணம் தேடி வரும் - சாணக்கியர் நீதி
வீட்டில் தோஷம் நீங்க, வெட்டி வேர் மகத்துவம், வசியம் செய்வது எப்படி தெரியுமா?
வீட்டில் தோஷம் நீங்க, வெட்டி வேர் மகத்துவம், வசியம் செய்வது எப்படி தெரியுமா?
நீங்கள் வியாபாரத்தில் ஓஹோன்னு வரனுமா? அதிர்ஷ்டம், செழிப்பை பெறுவது எப்படி?
அடகு வைத்த நகை வீடு வந்து சேர தேய்பிறை அஷ்டமி அன்று இதை மட்டும் பண்ணுங்க
உங்கள் கனவில் இதெல்லாம் வருதா?...நீங்கள் பணக்காரராக போகிறீர்கள் என்று அர்த்தம்
கோடீஸ்வரனாக எளிய வழி: இந்த ஆறு கெட்ட பழக்கங்களை கைவிட்டால் பணம் தேடி வரும் - சாணக்கியர் நீதி
வீட்டில் தோஷம் நீங்க, வெட்டி வேர் மகத்துவம், வசியம் செய்வது எப்படி தெரியுமா?
நீங்கள் வியாபாரத்தில் ஓஹோன்னு வரனுமா? அதிர்ஷ்டம், செழிப்பை பெறுவது எப்படி?
அடகு வைத்த நகை வீடு வந்து சேர தேய்பிறை அஷ்டமி அன்று இதை மட்டும் பண்ணுங்க
உங்கள் கனவில் இதெல்லாம் வருதா?...நீங்கள் பணக்காரராக போகிறீர்கள் என்று அர்த்

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...