Showing posts with label #Sani Peyarchi palan #Sani Vision #Kodeeswara yogam #sani peyarchi #hindu India #Tamil Nadu #Thirunallar #Pondicherry. Show all posts
Showing posts with label #Sani Peyarchi palan #Sani Vision #Kodeeswara yogam #sani peyarchi #hindu India #Tamil Nadu #Thirunallar #Pondicherry. Show all posts

Tuesday, December 19, 2023

சனி பெயர்ச்சி பலன் 2023: சனி பார்வை யாருக்கு சாதகம்? ஃ

சனி பெயர்ச்சி பலன் 2023: சனி பார்வை யாருக்கு சாதகம்? யாருக்கு சங்கடம்? குபேர யோகம் தரும் சனி
சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார். திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனி பெயர்ச்சி விழா வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. சனி பகவானுக்கு சிறப்பு லட்சார்ச்சனை, அபிஷேக ஆராதானைகள் நடைபெற உள்ளன. சனி பகவானின் பார்வையால் சங்கடங்கள் ஏற்படுமா? இந்த சனி பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது? என்று பார்க்கலாம்.




திருநள்ளாறு சனி பெயர்ச்சி: பொதுவாக சனி பெயர்ச்சி என்றாலே திருநள்ளாறு கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். திருநள்ளாறு கோயில் வழக்கப்படி வரும் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கும்ப ராசியில் இருந்து சனி பகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது.


 

மேஷம்: சனி பகவான் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கிறார். அதே நேரத்தில் சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. தொழில் வியாபாரத்தில் லாபங்களை அள்ளிக்கொடுப்பார் சனிபகவான். அதே நேரத்தில் சனி பகவான் சில மாதங்கள் வக்ர கதியில் பின்னோக்கி செல்வார். அப்போது அவசரப்பட்டு வேலையை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு முயற்சிப்பதோ கூடாது. சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் தடையேற்பட்டுப் பின் இனிதே நடைபெறும்.

கோடீஸ்வர யோகம்: குழந்தைகள் விஷயத்தில் தேவையற்ற மனவருத்தங்கள் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். தடைபட்ட பல வேலைகள் நடைபெறும். அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள். நோய்கள் குணமடையும், வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும். டிசம்பர் மாதத்திற்குப் பிறகு சனிபகவான் உங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தேடி தரப்போகிறார்.



சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. சனிபகவான் கண்டச்சனியாக பயணம் செய்து உங்களை கவலைக்கு ஆளாக்கி வருகிறார். உங்களுக்கு சச மகா யோகம் கை கூடி வருகிறது. மனதையும் உடலையும் ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும்.

ஆரோக்கியத்தில் கவனம்: வெளியூர், வெளிநாடுகளில் வேலை கிடைக்கும். சிலர் வேலை விசயமாக குழந்தைகளை விட்டு பிரிய நேரிடும் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். பணத்தை பத்திரப்படுத்துங்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. அடிவயிற்றில் பிரச்சனை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படலாம்
சனி பெயர்ச்சி பலன் 2023: அள்ளித்தரப்போகும் சனி பகவான்.. 2024ல் சச மகா யோகம் பெறும் ராசிக்காரர்கள்
விருச்சிகம்: சனி பகவான் தற்போது அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்கிறார்.சச மகா யோகம் கைகூடி வரப்போகிறது. சனி பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைக்கிறது. புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும்.

சனி பகவான் தரும் யோகம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். குழந்தைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். அர்த்தாஷ்டம சனியால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைய சனிக்கிழமை சனிபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

Followers

தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..?

சிவன் வீற்றிருக்கும் கயிலாயம்  வடக்கில் இருக்கும் போது ...... தென்னாடுடைய சிவன் என்பது ஏன் ..? .. வடக்கில் இருப்பது பூலோக கயிலாய...