Showing posts with label #vishnu #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts
Showing posts with label #vishnu #hindu #india #tamilnadu #nellikuppam. Show all posts

Monday, October 16, 2023

உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம்

உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். 
துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். உணவு சமைக்கும் இடத்தில் கிருஷ்ணரை எப்படி கைது செய்வது என்று கெட்ட விவாதத்துடன் உணவு சமைக்கப்பட்டது. 

கிருஷ்ணர் உணவு சாப்பிட மறுத்து நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். கிருஷ்ணர் வந்த மகிழ்ச்சியில் எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். 

அதை வாங்கி சாப்பிட்ட கிருஷ்ணர் மகிழ்ந்தார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா நான் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவேன்.

எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி நீர் ஒரு இலை ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் அனாவசிய சண்டைகள், அற்ப விவாதங்கள் இல்லாத இடத்தில் உணவு சமைக்கப்படவேண்டும். சமைக்கும் பொழுது கணவரை குழந்தைகளை நினைத்து வாழ்த்தி, அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்து சமைத்தல் வேண்டும். 

அது மட்டுமன்றி தெய்வீகமான பாடல்களை கேட்டுக் கொண்டே சமைக்கும் பொழுது அதனுடைய அதிர்வுகள் சமைக்கும் உணவில் உள்ள தண்ணீரினால் உள் வாங்கப்படுகிறது. இறைவனை நினைத்துக் கொண்டே சமைக்கும் பொழுது, நம்முடைய குடும்பத்தினருக்கு, குழந்தைகளுக்கு இறை உணர்வு உணவின் வழியாக கொடுக்கப்படுகிறது. 

அசுத்தமான சூழ்நிலையில் நாம் சுவாசிக்கும் பொழுது , அசுத்தமான தண்ணீர் குடிக்கும் பொழுது ,
அசுத்தமான உணவை உண்ணும் பொழுது நம் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

அது போல் நாம் கோபத்துடன் சமைப்பது, வேண்டா வெறுப்புடன் சமைப்பது, டிவியில் வரும் வன்முறை காட்சிகள், அழுகை காட்சிகள் போன்றவற்றை கேட்டுக் கொண்டு சமைப்பது போன்றவை நம் குடும்பத்தினருக்கு, தேவையில்லாத உணர்வுகளை கொடுக்கிறது.

நம் குடும்பத்தில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள், முரட்டுத்தனமாக நடக்கும் குழந்தைகள், கோபப்படும் கணவர், மாமியார் போன்றவர்கள் நாம் அன்புடன் வாழ்த்தி சமைக்கும் உணவினால், தெய்வீக பாடல்களை கேட்டுக் கொண்டே சமைக்கும் உணவை உண்பதினால், அவர்களுடைய எண்ணங்களில் செயல்களில் மாற்றம் ஏற்படுவதை உணர முடியும். 

எனவே அவசர அவசரமாக பரிமாறாமல், டிவி பார்த்துக் கொண்டே பரிமாறாமல், குழந்தைகளும் கணவரும் டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடாமல், அனைவரும் குடும்பமாக ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் பொழுது ஆரோக்கியமான உடல்நிலை மட்டுமல்ல மனநிலை மற்றும் நற்பண்புகள், நற்குணங்கள், தெளிவாக பேசும் தன்மை, தெளிவாக முடிவு எடுக்கும் தன்மை, போன்ற மாற்றங்கள் குடும்பத்தினரிடம் ஏற்படுவதை உணரலாம்.......

Thursday, October 12, 2023

திருமணத்தடை நீக்கும்நித்ய கல்யாணப் பெருமாள்...!

திருமணத்தடை நீக்கும்
நித்ய கல்யாணப் பெருமாள்...!
கைகளை இடப்பக்கம் ஏந்திய திருத்தலம் என்பதால் `திருஇடந்தை' என்ற பெயர் ஏற்பட்டது.
அதுவே திருவிடந்தை ஆக மாறிவிட்டது.

திருவிடந்தை ஸ்தல வரலாறு

முன்னொரு காலத்தில் வாழ்ந்த மேகநாதன் என்ற அசுர மன்னனுக்கு பலி என்ற மகன் பிறந்து நீதிமானாய் அரசு புரிந்து வந்த போது மாலி, மால்யவான், சூமாலி என்ற அசுரர்கள் தேவர்களுடன் போரிட அழைத்ததாகவும், பலி மறுத்து விட்டதாகவும், மூவரும் சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலியிடம் சரணாகதி அடைந்ததாகவும்,

அவர்களுக்காக தேவர்களுடன் போராடி பலி ஜெயித்ததாகவும், தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வராக தீர்த்தக்கரையில் பலி கடும் தவம் புரிந்ததாகவும், அவனது தவத்தை மெச்சிய மெருமாள் ஆதிவராக மூர்த்தியாக அவனுக்கு காட்சியளித்து மோட்சமளித்ததாகவும் புராணம் கூறுகிறது.

கண்ணிகை தவம்
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார்.

அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் வீடுபேறு அடையவே, அவரைப் போலவே வீடுபேறு அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள்.

ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம், "திருமணம் செய்து கொள்ளாமல் வீடுபேறு அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள்.

எல்லாரும் மறுத்துவிட, காலவ முனிவர் அவள்மீது இரக்கம் கொண்டு அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.

முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள்.
360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார் காலவமுனிவர். பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார்கள்.

இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர். சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார்.

அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள்.

இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்து உலகினர்க்கு தேவி மூலமாக சரம சுலோகத்தை உபதேசித்ததாக புராணம் கூறுகிறது.

திவ்ய தேசங்களில் முக்கியமான் ஒன்று திருவிடந்தை
வரலாற்று புகழ்பெற்ற திருவிடந்தை கோயில் திவ்ய தேசங்கள் 108ல் 62வது திவ்யதேசமாகவும்,

தொண்டை நாட்டில் உள்ள திருப்பதிகள் 22ல் சீரும் சிரப்புமாக விளங்குகிறது

திருவிடந்தை கோவில். திருமங்கை ஆழ்வாரால் இத்திருக்கோயில் 'மங்களாசாசனம்' செய்யப்பட்டுள்ளது.

இத்திருக்கோயில் 1000 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் கோயில் என்று வழங்கப்படுகிறது.

ஸ்ரீ ஆதிவராகர்
ஸ்ரீவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று.

இக்கோயிலில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தாயாருக்குக் கோமளவல்லித் தாயார் என்று திருநாமம்.

கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார்.

பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார்.

திருஷ்டி தோஷம் போக்கும் உற்ச்சவர்
உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள்,

ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ரகங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். 

இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள்.

இந்த கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் சட்டென்று திருமணம் முடிந்து விடும்.

அவ்வாறு திருமணம் முடிந்த தம்பதியர், இந்த கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்திக் கொள்வார்கள்.

திருமணம் ஆகாத ஆண், பெண்கள் இந்த கோவிலுக்கு தங்களது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் வர வேண்டும். ஒரு பூ மாலையை வாங்கிக்கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கொடுக்க வேண்டும். 

சுவாமிக்கு அர்ச்சனை செய்து முடித்ததும் அந்த மாலையை கொடுப்பார்கள். அதை கழுத்தில் போட்டுக்கொண்டு, கோவிலை 9 முறை வலம் வர வேண்டும்.

வலம் வந்து முடித்ததும், கோவில் கொடிக்கம்பம் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். பிறகு, அந்த மாலையுடன் நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும். வீட்டு பூஜை அறையில் அந்த மாலையை வைத்துவிட வேண்டும். திருமணம் முடிந்ததும், தம்பதியராக வந்து அந்த மாலையை கோவிலில் சேர்த்துவிட வேண்டும்.

இதற்கென்று கோவில் பின்புறம் ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தில் மாலையை கட்டி வைத்து விடுகிறார்கள். இந்த எளிய பரிகாரத்தை செய்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவர்கள் ஏராளம்.

அமைவிடம் :
  சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலையில், 40 கிலோமீட்டர் தொலைவில் கோவளத்திற்கு முன்னதாக திருவேடகத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல சென்னை, மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.

Saturday, October 7, 2023

கருடன் பற்றிய 12 அரிய தகவல்கள்*

*கருடன் பற்றிய 12 அரிய தகவல்கள்*
மகாவிஷ்ணுவின் இரண்டு திருவடிகளையும் கருடன் தன் கைகளால் தாங்கியபடி வரும் காட்சியே கருட சேவை. மகாவிஷ்ணு, கருடன் அருள் ஒரே நேரத்தில் கிடைப்பது சிறப்பு.

திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வம் கூறுகிறது.

கருடனின் மனைவிகள் ருத்ரா, சுகீர்த்தி.

ஏகாதசி, திருவோண நாட்களில் கருடனை வழிபட்டால் நோய் தீரும்.

கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்று கருடனுக்கு பல பெயர்கள் உண்டு.

வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடியில் உள்ள மூலைக் கருடன் சிறப்பு மிக்கவர். இவருக்கு சிதறுகாய் உடைத்தால் தீமை அகலும். தடை நீங்கும். 

மகாபாரதப் போரில் கடைசி நாளில் கருட வியூகம் அமைத்து போர் நடந்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. 

வைகுண்டத்திலிருந்து கருடனால் கொண்டு வரப்பட்ட வைரமுடி, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலில் உள்ளது. பங்குனி ஏகாதசியில் வைரமுடி சேவை இங்கு நடக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ரெங்கமன்னார், ஆண்டாள், கருடனுடன் ஒரே ஆசனத்தில் காட்சி தருகின்றனர். இங்கு பெருமாளுக்கு, மாமனார் ஸ்தானத்தில் கருடன் இருக்கிறார்.

திருக்கண்ணங்குடி என்ற திவ்ய தேசத்தில் மட்டும் இரண்டு கைகளையும் காட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இந்தக் காட்சி வைகுண்டத்தில் கருடன் எழுந்தருளியுள்ள காட்சியாகும்.

கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளி யங்குடியில் கருடாழ்வார் கைகளில் 
சங்கு, சக்கரம் தாங்கிய நிலையில் இருக்கிறார்.

***சர்வம் கிருஷ்ணார்ப்பணம்***

எல்லோருடைய அன்புக்கும் காரணமாக இருப்பதால் அவர் எம்பெருமனார்.

ராமாநுஜர் ஆற்றில் குளிக்கச் செல்லும்போது நடப்பதற்கு சிரமமாக இருந்ததால், பிராமண சீடர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு நடந்து செல்வார். 
ஆனால், குளித்துவிட்டு கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டுக்கொண்டு நடக்க மாட்டார். 

தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த உறங்காவில்லியின் தோளில் கை போட்டபடியே மகிழ்ச்சியோடு நடந்துசெல்வார். 

ராமாநுஜரின் இந்தச் செயல் அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு நாள் வேண்டுமென்றே ராமாநுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர். 

பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமாநுஜருக்குத் தோள் கொடுத்தனர்.

 ராமாநுஜர் தனது மேல் துண்டை, தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி சீடர்களின் தோள் மேல் போட்டு அதன் மீது கை வைத்து நடந்தார். 

‘ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள்? என்று அவர்கள் கேட்டதும், “ உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான். இப்படிச் செய்தேன்” என்றார்.

“தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த உறங்காவில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த ஜாதியில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா?” என்று குமுறினர்.

“உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் தொட்டால் அது எனக்கு வந்துவிடும். 

உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் இல்லை. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா? என்று முகத்திலடித்தாற் போல் கூறிவிட்டு நடந்து சென்றார்.

இத்தனைத் துணிச்சலுடனான செயலை அவர் 1000 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார் என்றால், அதனால்தான் அவர் எம்பெருமானார் என அழைக்கப்படுகிறார். 

எல்லோருடைய அன்புக்கும் காரணமாக இருப்பதால் அவர் எம்பெருமனார்.

நம்பெருமனார்!!!!!🙏🌹🌈

Thursday, October 5, 2023

திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் தரிசனம் தொடர்பான ஒரு ரகசியம்!

திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் தரிசனம்  தொடர்பான ஒரு ரகசியம்!
திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் தரிசனம் என்றாலே மிக அற்புதமல்லவா?இந்த அற்புதத்தில் இன்னோர் அற்புத ரகசியம் உள்ளது.

அந்த அற்புத ரகசியம் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் உயிரோட்டமுள்ள கண்கள் .

எனவே,அவர் கண்கள் கொடுக்கும்
குழுமையான தரிசனத்தை 
`நேத்திர தரிசனம்' என்பார்கள்.

"நேந்திர தரிசனம்'' செய்வோர்க்கு 
எந்த அளவு கடுமையான கஷ்டங்கள் இருந்தாலும் பெருமாளின் அருள் பார்வையால் முற்றிலும் நீக்கப்பட்டு 
வளமான வாழ்வு எளிதில் கிட்டும் 
என்பது ஐதீகம்.

திருப்பதி - திருமலையில் அருள் பாலிக்கும் அருள்மிகு வெங்கடராஜலபதி சுமார் 12 அடி உயரமுள்ளவராகக் காட்சி தருகிறார்.

விரிந்த தாமரை மலர் மீது நின்ற திருக்கோலம்.இத்திருக்கோலத்தினை `ஸ்தானக் கோலம்' என்று புராணம் சொல்கிறது.

மூலவர் விக்கிரகம் சிவப்புக் கல்வகையைச் சார்ந்த சாளக் கிராமத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.

இவரை வியாழக்கிழமையில் 
தரிசிப்பது மிகவும் நல்லது. 
எளிமையான தோற்றத்துடன் 
மெல்லிய பட்டாடைகளுடன் 
கூடிய திருநாமம் சாற்றப் பெற்று 
அருள் பாலிக்கின்றார்.

எம்பெருமான் திருவேங்கடநாதன், 
ஸ்ரீநிவாசப் பெருமான் திருமலை - திருப்பதியில் மகத்தானதொரு 
சாம்ராஜ்யத்தையே ராஜாதி ராஜேஸ்வர மகாசக்கரவர்த்தியாகப் பரிபாலனம் பண்ணி கொண்டிருக்கிறார்.

எம்பெருமானுக்குள், அவரது வலது புற இதயத்தில் ஸ்ரீ ஆகிய பெரிய பிராட்டியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நிவாசம் செய்கிறார். ஸ்ரீ என்னும் பெரிய பிராட்டியின் சிந்தனையோடு ஸ்ரீக்குள் நிவாசம் செய்பவரே ஸ்ரீநிவாசன் ஆவார். 

திருப்பதி மலையிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஸ்ரீநிவாசப் பெருமாள் பத்மாவதித் தாயாரைக் காணும் பொருட்டு, திருச்சானூருக்கு (கீழத் திருப்பதிக்கு) வந்து விடுகிறார்.

 வியாழன்தோறும் ஸ்ரீ ஆதிபராசக்தி ஸ்ரீநிவாசப் பெருமாளின் சிலைக்குள் பிரதிஷ்டையாகி நின்று திருவருள் புரிந்து வருகிறார். இவ்வாறான ஓர் ஐதீகம் உள்ளது.

இதன்படி வியாழக்கிழமைகளில் ஸ்ரீநிவாசப் பெருமாள் மூலவருக்கு, பட்டுப்புடவை சாற்றி, திருமேனியில் குங்குமத்தின் குழம்பைப் பூசி, நுதலில் சிறிய நாமமிட்டு, திருவிழிகள் தெரியுமாறும் அருள் சுரந்திடும் திவ்ய அலங்காரம் செய்கிறார்கள். இதுவே நேத்திர தரிசனம், திருவிழி அழகான தரிசனம்.

அன்ன நைவேத்யமும்,தாயாருக்கு, அரிசிச் சாதப் புளியோதரை அன்னப் பிரசாதத்தால் பாவாடையையும் அப்பி, அலங்காரம் செய்கிற இந்த அலங்காரத்தில் திவ்ய தரிசனம், தருவதை பூலங்கி சேவை என்று அழைக்கிறார்கள். வியாழக்கிழமைகள் தோறும் நிகழும் நேத்திர தரிசனம் மிகவும்  விசேஷம்.

ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குப் பட்டுப்புடவை கட்டி, தாயாராக அலங்கரித்து அன்ன நைவேத்யம் செய்து, தாயாரின் கருணா உள்ளத்துடன் அந்தப் புளியோதரை அன்னப் பிரசாதம் பெற்றுக் கொள்வதை பக்தர்கள் பெரும் பேறாகக் கருதி வருகிறார்கள்.

பெருமாள் - பிராட்டி ஒன்றாகி அன்னப் பிரசாதம் அருள்கிற இந்த நேத்திர தரிசனத்தை,

"அங்கண் ரெண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழித்தேலோர் எம்பாவாய்' என்று 

ஸ்ரீஆண்டாள் அழகாகப் பாடி உள்ளாள்.

பூலங்கி சேவை புளியோதரை அன்னமும் நேத்திர தரிசனமும் அன்னமூர்த்தி -அன்னலட்சுமி சேவையாக தரிசனமாக ஒருங்கே அமைகிறது.

வரி நிஜ நேத்திர தரிசனம்-அபூர்வமான பழைய புகைப்படம் !

Wednesday, October 4, 2023

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குப் போய் இருப்பீர்கள்.

🛐ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குப் போய் இருப்பீர்கள்.
எல்லாக் கோபுரங்களும் வண்ணமயமாக ஜொலிக்க... ஒரேயொரு கோபுரம் மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

காரணம் இதோ:-

சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்திய படையெடுப்பின் போது ஸ்ரீரங்கம் முகமதியப் படைகளின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது.  ஸ்ரீரங்கத்தையும் ஸ்ரீஅரங்கன் திருக்கோவிலையும் காக்க ஸ்ரீரங்க படைகளும் மக்களும் பல நாள் துலுக்கருடன் போரிட்டனர்.  
 ஆனாலும் கோயிலுக்குள்  புகுந்துவிட்ட முகமதியப் படைகள் கண்ணில் பட்ட அனைவரையும் வெட்டி சாய்த்தது. ஏராளமான  பொன், வைர ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். 

இன்னும் மதிப்புமிக்க பொக் கிஷங்களைத் தேடி அங்கேயே டேரா போட்டு இருக்கிறார்கள். நடந்துவிட்ட திடீர் விபரீதங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் தப்பி பிழைத்த  ஸ்ரீரங்கத்து மக்கள். 

அரங்கனுக்காக கண்ணீர் வடித்த மக்களுக்கு அதைவிட அதிர்ச்சியாக இருந்தது, அரங்கன் கோயில் தேவதாசியான வெள்ளையம்மாள் எடுத்த முடிவு.  கோயில் கொள்ளைக்குத் தலைமை தாங்கி வந்த முகமதியப் படைத் தளபதிக்கு ஆசை நாயகியாக இருக்கச் சம்மதித்து விட்டாள் வெள்ளையம்மாள் என்பதுதான் அது.

'இப்படியொரு முடிவெடுக்க இவளுக்கு எப்படி மனசு வந்தது? அரங்கன் புகழ் பாடியவள் எப்படி மனித அரக்கனிடம் மயங்கிப் போனாள்?’ என்று கோபம் அடைந்தனர். அவளை மயக்கியது பொன்னா... வீரமா... புகழா? என்று புரியாமல் சஞ்சலப்பட்டனர். அவளது சுயரூபத்தை மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இறைவன் நடத்திய விளையாட்டுதான் இந்தக் கொள்ளை நாடகம் என்று மக்கள் தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டனர்.

நடுநிசியைத் தாண்டிய நேரம். வெள்ளையம்மாள் தளபதியை சந்திக்க ஆசைப்பட்டாள். வழக்கத்தை விட தன்னைக் கூடுதலாக அலங்கரித்துக் கொண்டாள். உடன் கிளம்பிய தோழியை இருக்கச் சொல்லிவிட்டு, இருட்டில் தனியாகச் சென்றாள். எப்போதும் அவளது வருகையை முன்னறிவிப்பு செய்யும் கொலுசு, அன்று மௌன கீதம் இசைத்தது. ஆம்... இரவு நேரத்தில் படைத் தளபதியை சந்திக்கப் போவது யாருக்கும் தெரியக்கூடாது என்று, முத்துக்கள் கொஞ்சும் கொலுசுகளைக் கழற்றி விட்டாள்.

ஸ்ரீரங்கம் முழுவதும் முகமதியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், வீதிகளில் உள்ளூர் மக்களின் நடமாட்டம் சுத்தமாக இல்லை. முகமதியப் படை வீரர்கள் மட்டும் ஆங்காங்கே காவல் பணியில் இருந்தனர். இருந்தார்கள் என்று சொல்வதை விட தூங்கி வழிந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.  கோயிலைக் கைப்பற்ற கொடூரமாக போரிட்ட களைப்பில் அதிகமாக மதுஅருந்தி மயங்கிக் கிடந்தனர். அதனால், பலரையும் எளிதில் தாண்டிப் போனாள் வெள்ளையம்மாள்.

ஸ்ரீரங்கம் கோயில் மண்டபப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தூங்கிக் கொண்டிருந்த தளபதியின் குடிலுக்குள் நுழைந்தாள். அந்த நேரத்திலும் சுதாரித்துக்கொண்டு விசுக்கென எழுந்தான்.

''யாரது...'' என்றபடி தீப்பந்தத்தை உயர்த்தினான்.

'வணக்கம் தளபதியாரே!' எழிலாகக் கும்பிட்டாள் வெள்ளையம்மாள்.

''ஓ... நீயா? இங்கே ஏன் வந்தாய்? தகவல் அனுப்பி இருந்தால் நானே உன் இல்லம் வந்திருப்பேனே..?' என்று அவளைத் தொட வந்தான்.

''அரசே இது அரங்கனின் வீடு. இங்கே என்னை நீங்கள் தொடக்கூடாது. என் இல்லம் வாருங்கள். ஆசை தீர இன்பம் பெறலாம். ஆனால், அதைவிட ஒரு முக்கியமான சங்கதி கேள்விப்பட்டேன். அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன்'' என்றாள்.

''அப்படி என்ன செய்தி?''

''இங்கே நீங்கள் எதற்காக படையெடுத்து வந்தீர்கள்?'

'எதிரிகளை வெற்றிகொண்டு, செல்வங்களையும் கன்னிப்பெண்களையும் மற்றும் அழகிகளையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் படையெடுப்பின் ஒரே நோக்கம்'

'வெற்றி அடைந்து விட்டீர்கள். செல்வங்களை எடுத்துக் கொண்டீர்கள். ஆனாலும் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?''

''விலை மதிக்க முடியாத செல்வங்களைப் புதையலாக ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதை எடுக்கத்தான் காத்திருக்கிறோம்''

''நானும் அதற்காகவே வந்தேன்...''

''என்ன... உனக்கு அந்த ரகசியம் தெரியுமா?''

''மெள்ளப் பேசுங்கள். ஐம்பொன் சிலைகளும் வைர மாலைகளும், முத்து மணிகளும் பாதுகாப்பாக எங்கே இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்?''

''எங்கே என்று சொல். உன்னை என் நாட்டுக்கு அழைத்துச் சென்று பொன்னாலேயே அலங்கரிக்கிறேன்'' தளபதியின் முகத்தில் ஆர்வம் மின்னியது.

''அதை சொல்லத்தானே வந்திருக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. அதை நிறைவேற்றுவதாக நீங்கள் சத்தியம் செய்துகொடுத்தால் அந்த இடத்தைக் காட்டுவேன்'' என்று செல்லம் கொஞ்சினாள்.

''சொல் வெள்ளையம்மா. புதையலுக்காக உனக்கு என்ன வேண்டும்?''

''எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால், அந்தப் புதையலை நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால், நீங்களும் நானும் மட்டும் முதலில் சென்று பார்ப்போம். அதன்பிறகுதான், நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்'' என்றாள்.

''ப்பூ... இவ்வளவுதானா? பெண்புத்தி என்பது சரியாகத்தான் இருக்கிறது. சரி வா... நீயும் நானும் மட்டும் போய்ப் பார்ப்போம். ஆசைப்பட்ட அத்தனையையும் நீயே எடுத்துக்கொள். மீதி இருப்பதை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்'' என்று சந்தோஷமாக சிரித்தான்.

''சரி, வாருங்கள். உங்கள் ஆட்கள் யாருக்கும் தெரியாதபடி மறைந்து வாருங்கள்'' என்று அழைத்துச் சென்றாள். ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே வந்து நின்றாள் வெள்ளையம்மாள்.

'இங்கேதான் இருக்கிறது. ஆனால் மேலே போகவேண்டும்'' என்று அண்ணாந்து பார்த்தாள்.

''வா... போகலாம்...''

''வெளவால், புறாக்கள் இருக்குமே...''

''அட, இதற்கா பயப்படுகிறாய். பயம் வந்தால் என்னைக் கட்டிக்கொள். வா... சீக்கிரம் வா... உடனே புதையலைப் பார்க்க வேண்டும்'' என்று அவசரப்பட்டான்.

சில நிமிடங்களில் இருவரும் கோபுரத்தின் உச்சியை அடைந்தனர். இரவின் நிசப்தத்தை கலைத்துக்கொண்டு சலசலத்தபடி தூரத்தில் ஓடிய காவிரி ஆற்றின் இரைச்சல் கேட்டது. குளிர்ந்தக் காற்று கொஞ்சம் நடுக்கம் கொள்ளச்செய்தது. கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி, இரவு நேர ஸ்ரீரங்கத்து அழகை ரசித்துப் பார்த்த தளபதி, வெள்ளையம்மாளிடம் உற்சாகமாகப் பேசினான்.

'ஆஹா... அற்புத தரிசனம். வெள்ளையம்மா, இந்தக் கோபுரத்தின் உச்சியில் இப்போதுதான் முதன் முறையாக ஏறி இருக்கிறேன். இந்த இடத்தில் இருந்து உங்கள் ஊரை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அத்தனை அழகாக மின்னுகிறது, ஆமாம் எங்கே இருக்கிறது பொக்கிஷங்கள்?''

'அதோ... அங்கே பாருங்கள்...' என்று கை நீட்டினாள்.

ஸ்ரீரங்கநாதர் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தைத்தான் காட்டினாள். அவனும் ஆர்வமாய் பார்த்தான்.

''கீழேதான் பொக்கிஷம் இருக்கிறதா... பிறகு ஏன் மேலே அழைத்து வந்தாய்?'' என்று சொல்லி வாய் மூடுவதற்குள் அந்த சம்பவம் நடந்து விட்டது.

சிணுங்கலும் சிருங்காரமுமாக பேசிக்கொண்டிருந்த வெள்ளையம்மாள், திடீரென்று புயலாய் மாறினாள். கோபுரத்தின் உச்சியில் இருந்து தளபதியை கீழே தள்ளி விட்டாள். தளபதி எழுப்பிய அபயக் குரல் கேட்டு முகமதியப் படையினர் கிழக்குக் கோபுரம் பகுதிக்கு ஓடி வந்தனர். அங்கே, தங்களது படைத்தளபதி இறந்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கோபுரத்தின் உச்சியைப் பார்த்தனர். அங்கே, வெள்ளையம்மாள் வெற்றி தேவதையைப் போன்ற பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பிடிக்க வீரர்கள் சிலர் கோபுரத்தின் மீது வேகமாக ஏறினர். அதைக் கண்டு கொஞ்சமும் அச்சம் அடையவில்லை வெள்ளையம்மாள்.

ஸ்ரீரங்கநாதர் புகழை வாய்விட்டு பாடியபடி... குவிந்த கரத்துடன்... நினைத்ததை சாதித்த திருப்தியுடன் கோபுரத்தின் மேலே இருந்து கீழே குதித்தாள்.  அவளுடைய உயிர் பிரிந்தது.

தகவல் கேள்விப்பட்டு ஸ்ரீரங்கத்து மக்கள் ஓடோடி வந்தனர். வெள்ளையம்மாளின் பக்தியைக் குறைவாக  மதிப்பிட்டதை எண்ணி தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர். ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சல் தங்களுக்கு இல்லாமல் போனதே என்று ஆண்கள் வீரம் வரப்பெற்றனர். மேலும் ஸ்ரீரங்கத்தை காக்க வெளியிலிருந்து ஹிந்துப்படைகளும் சேர்ந்துகொண்டன.  தலைவன் இல்லாத படையை சிதறடித்தனர். கொள்ளை அடித்து வைத்திருந்த நகைகள், பொன், பெண்களை அப்படியே விட்டு, உயிர் பிழைத்த வீரர்கள் தப்பி ஓடினர்.

ஸ்ரீரங்கமாநகரையும் கோவிலையும் மக்களையும்  காப்பாற்றுவதற்காக தன் உயிரைக் கொடுத்த வெள்ளையம்மாளின் நினைவாகத்தான், அந்தக் கோபுரம் இன்னமும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. வெள்ளையம்மாளின் தியாக வரலாறு செவிவழிக் கதையாகவே பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அவள் குதித்து உயிர்விட்ட கிழக்கு கோபுரம்தான் இப்போது, 'வெள்ளைக் கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளையம்மாளின் உயிர்த்தியாகம் குறித்துப் பேசுகிறார் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் நண்பரும், வைஷ்ணவப் பெரியவருமான ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி.

'வெள்ளைக் கோபுரத்தில் இருந்து குதித்து உயிருக்குப் போராடிய வெள்ளை யம்மாள், தனது உயிர் பிரியும் தறுவாயில், 'இனிவரும் காலங்களில் என்னைப் போன்ற தேவதாசிகளில் யாரேனும் மரணம் அடையும்போது, கோயில் திருமடப் பள்ளியில் இருந்து நெருப்பும், திருக்கொட்டாரத்தில் இருந்து அரிசி, தீர்த்தம், மலர் மாலை, திருப்பரிவட்டம் ஆகியவற்றைக் கொடுத்தனுப்ப வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அந்த வழக்கம் வெகுகாலத்துக்கு நடைமுறையில் இருந்தது. 1953-ல் தாசிகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பிறகுதான் இந்த வழக்கம் நின்று போயிற்று.

வெள்ளையம்மாள் தியாகம் பக்தியை 
என்னவென்று சொல்வது  ?

தியாகமெழுகுவர்த்தி !!!

படித்து பகிர்ந்தது 
இறை பணியில்
இரா இளங்கோவன்

Tuesday, October 3, 2023

ஸ்ரீரங்கனை வரித்த தேவியர்கள்

🙏ஸ்ரீரங்கனை வரித்த தேவியர்கள் 🙏

அரசன், ஆண் அழகன், கஸ்தூரி ரங்கனைப் பல தேவியர்கள் பக்தியால் உருகி, அவனை வரித்து அழகிய மணவாளனால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். 

ஸ்ரீதேவி: சாட்சாத் மஹாலஷ்மி, பட்ட மகிஷியாம் ஸ்ரீரங்கநாயகி நாச்சியார்.

பூதேவி: இஷ்ட மகிஷியாம் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரங்கனால் ஆட்கொள்ளப்பட்டு, அவர், தன்னை கோதை ஆட்கொண்டதால் 'ஆண்டாள்' என்றார்! 

 எல்லா ஊரிலும், 108 திருப்பதிகளிலும் ஆண்டாளுக்குத் தனி ஸந்நிதி உண்டு.

'உறையூர்' சோழமன்னன் மகள் கமலவல்லி நாச்சியார் மிகுந்த அழகி.  பழைய ஊர்ப்பெயர் 'திருக்கோழியூர்'.  பல நூற்றாண்டுகளாக பழமைச் சோழர்களது தலைநகர்.

இதை ஆண்ட நந்தசோழனின் அருமை மகள் கமலவல்லியை ஸ்ரீரங்கனுக்கே சீர் வரிசைகளுடன் திருமணம் செய்து கொடுத்து நாச்சியாருக்கு கோயிலைக் கட்டினார்.

பங்குனி உத்திரத்தன்று, உறையூரில் ஒரு சேர்த்தியில் சேவை சாதிக்கிறார்கள்.

ஸ்ரீ சுவேதகிரி என்னும் திருவெள்ளரையில், ஸ்ரீ செந்தாமரைக்கண் பெருமாள், தாயார் பங்கயச்செல்வி, செண்பகவல்லித் தாயார் எனவும் கூறுகின்றனர்.

குலசேகர நாச்சியார் என்ற சேரகுலவல்லி சந்நிதி அர்ச்சுன மண்டபம் அருகே உள்ளது.

சேரகுலவல்லி, குலசேகர மன்னனின் திருமகள். பக்தியினால் தன் மனதைத் தந்து, ஸ்ரீரங்கநாதனுடன் ஐக்யமானாள்!

சுல்தானி எனும் துலுக்க நாச்சியாரது சந்நிதியும், அர்ச்சுன மண்டபம் அருகே சித்திரமாக வரையப்பட்டுள்ளது.

இரண்டாம் முகமதிய படை எழுச்சி கி.பி.1327-28ல், முகமது-பின்-துக்ளக் காலத்தில், ஸ்ரீரங்கம் கொள்ளை அடிக்கப்பட்டு, பெருமாளின் 

திருமேனி, டில்லி பாதுஷாவின் அந்தப்புரத்தில் இருக்கையில் அவரது மகள் சுல்தானியின் மனதை ஸ்ரீரங்கன் கொள்ளை கொண்டார்!

அரையர்களின் பெரும் முயற்சியால், அவரது திருமேனி மீட்கப்பட்டு வந்தபோது, கூடவே பாதுஷாவின் மகளான சுல்தானியும் அழகிய மணவாளனோடு தொடர்ந்து வந்து அவருடன் ஐக்யமானார்.  பீபி நாச்சியார் என அழைக்கப்படுகிறார்.  

பக்திக்கும், காதலுக்கும் மத பேதங்களே இல்லை!  
சிறிய, பெரிய மடைப்பள்ளிகளின் நாச்சியார்கள் 'அரவிந்த நாயகியர்களே' இவருக்கு தினப்படி நிவேதனங்களை செய்து அருளுகின்றனர்.

செங்கமல நச்சியாரான, தான்ய லெஷ்மிக்கும் அரங்கனின் அருகிலேயே, 'திருக்கொட்டாரம்' எனப்படும் தனிச் சன்னதி உண்டு. 
பங்குனி உத்திர உற்சவ ஏழாம் நாள், அங்குதான் 'நெல்லளவு' கண்டருளுகிறார்.

ஆகவே ஸ்ரீரங்கன் ஏழு தேவியர்களையும் ஆட்கொண்டு மணந்து அழகிய மணவாளன் என்ற பெயரும் பெற்றார்.  

பக்தி மூலம் முக்தி கண்ட இவர்கள் சரிதம் மிகச் சிறப்பானது!

ஸ்ரீ அழகிய மணவாளன் திருவடி சரணம்! 
படித்து பகிர்ந்தது
இறை பணியில்
இரா. இளங்கோவன். 

Saturday, September 30, 2023

புரட்டாசி சனி விரதம்*

*புரட்டாசி  சனி விரதம்* 
====================
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான். சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.

சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார்.
ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்
🙏🙏🙏🙏🙏.

Friday, September 22, 2023

சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம்.

🌹 புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு..!!
🌟புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே பல பெருமாள் கோவில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை.

🌟புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தான, தர்மம் நிறைய செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும், வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

பெருமாள் வழிபாடு :

🌟திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியத்தை அள்ளித்தரும்.

🌟திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். அல்லது வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவ படத்தை வைத்தும் வழிபடலாம்.

🌟வீட்டில் வெங்கடாசலபதி படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். வழிபாட்டில் வெங்கடாசலபதிக்கு உகந்த நைவேத்தியங்களை வைத்தும் வழிபடலாம்.

ஆஞ்சநேயர் வழிபாடு :

🌟கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றுவார்.

🌟ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

🌟வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.

🌟அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.

🌟அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

சனிக்கிழமை விரதத்தின் பலன்கள் :

🌟சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

🌟சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

🌟சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தை கடைபிடிக்கலாம்.


Wednesday, September 20, 2023

'திருவெள்ளக்குளம்' என்றும் ' என்று அழைக்கப்படும் திவ்ய தேசம்

"யாருக்குமே அகால மரணம் ஏற்பட கூடாது"என்ற அக்கறை நம் மதத்துக்கு எப்பொழுதுமே உண்டு.
'மோக்ஷம் அடையும் வரை, பிறந்து கொண்டே இருக்கிறான்' என்று மறுபிறவியை காட்டும் தர்மம், நம்முடைய தர்மம்.

சில கோவிலுக்கு சென்று வழிபட்டால், அங்கு ரிஷிகளுக்கு ப்ரத்யக்ஷமான தெய்வங்கள், 'நமக்கு அகால மரணம் ஏற்படாமல் இருக்க' அனுக்கிரஹம் செய்வார்கள், என்று அண்ணன் பெருமாள் கோவில்'பலனாக சொல்லப்படுகிறது.

உதாரணத்திற்கு, 'திருவெள்ளக்குளம்'  என்றும் ' என்று அழைக்கப்படும் திவ்ய தேசத்துக்கு சென்று (சீர்காழி அருகில் உள்ளது), அங்கு உள்ள 'ஸ்ரீநிவாச பெருமாளை பக்தியுடன் வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால், அகால மரணம் ஏற்படாது' என்று பலன் சொல்லப்படுகிறது

வட இந்தியாவில், வெளி 
நாட்டில், வெகு தொலைவில் இருப்பவர்களால், வயதானவர்களால், இது போன்ற பிரத்யேகமான கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி, அங்குள்ள தீர்த்தத்தில் நீராட முடியாமல் போகலாம்.

'யாருமே அகால மரணம் 
அடைய கூடாது' என்று வேதம் ஆசைபடுகிறது.

கோவிலுக்கு போக முடியாதவர்களுக்கும், அகால மரணம் ஏறபடாமலிருக்க ஒரு வழி சொல்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.

சீர்காழி அருகில் இருக்கும் திருவெள்ளக்குளம் சென்று பெருமாளை தரிசித்து, அங்குள்ள குளத்தில் நீராட முடியாதவர்கள், பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, சாளக்கிராம மூர்த்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, எடுத்து கொண்டால் கூட 'அகால மரணம் ஏற்படாது' என்று பலனை வேதமே சொல்கிறது.

இதனால் தான், பெருமாள் கோவிலில், தீர்த்தம் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.

எத்தனை அற்புதமானது நம் தர்மம்!!

'நமக்கு அகால மரணம் ஏற்பட கூடாது' என்று பெருமாள் ஆசைப்படுகிறார்.

'நீண்ட நாள் வாழ்ந்து கிருஷ்ண பக்தி இவன் செய்ய வேண்டும்' என்று பெருமாள் ஆசைப்பட்டு நமக்கு நீண்ட ஆயுளை அருளிகிறார்.

கோவிலுக்குள் வரும் நம் அனைவருக்கும், தீர்த்தம் கொடுத்து, கருணையை வர்ஷிக்கிறார்.

அவர் செய்யும் கருணையை நாம் சிறிது நேரமாவது, நினைத்து பார்க்க வேண்டும்.

.நம் வீட்டில் உள்ள ராம, கிருஷ்ண விக்ரஹங்களுக்கும், சாளக்கிராம மூர்த்திக்கும், உண்மையான பக்தியுடன் (அன்புடன்) அபிஷேகம் செய்து,அந்த அபிஷேக தீர்த்தத்தையும் நாம் மரியாதையோடு எடுத்து கொண்டால் கூட, அகால மரணம் ஏற்படாது.
தீர்க்க ஆயுசு பெருமாள் அருளால் கிடைக்கும்.

ஒவ்வொரு ஹிந்துக்கள் வீட்டிலும் தெய்வ விக்ரஹங்கள் உண்டு. இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் அவர்கள் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து வந்தனர். செய்து வருகின்றனர்.

அந்த அபிஷேக தீர்த்தத்தை பக்தியுடன் எடுத்து கொண்டனர்.
இதனால், ஹிந்துக்கள் மனதில் தெய்வ சிந்தனையும் வளர்ந்தது. அகால மரணம் ஏற்படாமல், தெய்வங்கள் அணுகிரஹத்தால், ஆரோக்கியமாக 90 வயது வரை ஆஸ்பத்திரி கால் வைக்காமல் வாழ்ந்தனர்.

கடந்த சில பத்தாண்டுகளாக தான், ஹிந்துக்கள் தடம் புரண்டு ஒடுகிறோம்.

ஒருவரும் தன் வீட்டில் அபிஷேகம் செய்து தெய்வ வழிபாடு செய்வதில்லை.

வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்கள் மரியாதை அற்று இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்களால், இன்று உள்ள ஹிந்துக்களுக்கு மனதில் தெய்வ சிந்தனையை விட, கீழ் தரமான சிந்தனைகள் பல எழும்புகிறது.

அகால மரணத்தை நோக்கி, பல நோய்கள் இளம் வயதிலேயே வருகிறது.

ஹிந்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தெய்வ பக்தி வளர நாம் முயற்சி செய்ய வேண்டும்.

அகால ம்ருத்யு ஹரணம்,
சர்வ வியாதி நிவாரணம்,
சமஸ்த பாபக்ஷய ஹரம்,
விஷ்ணு பாதோதகம் சுபம்

என்கிறது வேத வாக்கு.

விஷ்ணுவின் பாதத்தில் பட்ட தீர்த்தம்
அகால மரணத்தை நீக்க கூடியது,
அனைத்து வியாதியும் போக்க கூடியது,அனைத்து பாபத்தையும் போக்க கூடியது,
 என்று வேதமே சொல்கிறது.

மஹா விஷ்ணுவின் கால் நகத்தில் பட்டு ஓடி வந்ததால் தான், கங்கை நதிக்கே 'புண்ணியநதி' என்று பெயர் கிடைத்தது என்றால்,
நாம் செய்யும் அபிஷேகம் தீர்த்தம்,
நாம் கோவிலில் பெறும் அபிஷேக தீர்த்தம்,எத்தனை மகத்துவம் வாய்ந்தது!!  என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கோவிலில் பெருமாள் தீர்த்தத்தை வாங்கும் போது, 
இடது கையில் துணியை வைத்துக்கொண்டு, அதன் மேல் வலது கையால், ஜாக்கிரதையாக அபிஷேக தீர்த்தத்தை வாங்கி கொள்ள வேண்டும்.

நம்முடைய காலிலேயே தீர்த்தம் சிந்தி விடாமல், பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து வாங்கிக்
கொள்ள வேண்டும்.

பெருமாள் அபிஷேக தீர்த்தத்தை, கொடுப்பவரும் ஜாக்கிரதையாக கொடுக்க வேண்டும்.

அகால மரணத்தை தடுக்கும் அருமருந்து என்ற ஞாபகத்துடன், 
கங்கை நதியே இவர் கால் நகம் பட்டதால் தான், புண்ணிய நதியாக ஒடுகிறாள் என்ற ஞானத்துடனும், அபிஷேக தீர்த்தத்தை எடுத்து கொள்ள வேண்டும்.

பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவன் 'அல்ப ஆயுசாக போக மாட்டான்'.

"சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)" இருந்தால், நீண்ட ஆயுசு உண்டாகும், எந்த நோயும் சரியாகும்.

'நோய்' வருவதற்கு காரணம் - 
நாம் செய்த 'பாபங்களே',
'ஆயுள்' குறைவுக்கு காரணமும் - 
நாம் செய்த 'பாபங்களே'.

'சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு)' இருந்து, பகவானுடைய பாத தீர்த்தத்தை பருகியவனுக்கு, 
அவனிடம் உள்ள பாபங்களும் பொசுங்கி போகும் 
என்று வேதமே சொல்கிறது.

கோவிலில் நாம் பெற்றுக் கொள்ளும் பெருமாள் 'தீர்த்ததுக்கு' இத்தனை மகத்துவம் உண்டென்றால்,  பெருமாளிடம் சரத்தையும் (நம்பிக்கை), பக்தியும் (பெருமாளிடம் அன்பு) வைக்க நமக்கு என்ன தடை இருக்க முடியும்?

பெருமாளின் பாத தீர்த்ததுக்கு அத்துனை பெருமை உண்டு என்று அறிந்து, "நம் பெருமாள்" என்று ஆசையுடன், நாம் அனைவரும் பக்தி செய்வோம்.

அதே சமயம் மரியாதையுடன் தெய்வ சந்நிதியில், பெருமாள் நம்மை பார்க்கிறார் என்ற கவனத்துடன் செயல் படுவோம்.

எனவே பெருமாள் கோவிலில் நாம் தீர்த்தம் பெற்றுக்கொள்ளும்போது

*அகால ம்ருத்யு ஹரணம்*
*சர்வ வியாதி நிவாரணம்*,
*சமஸ்த பாபக்ஷய ஹரம்*
*விஷ்ணு பாதோதகம் சுபம்*

என்ற ஸ்லோகத்தை மனதிற்குள.சொல்லியபடி தீர்த்தத்தை  சிந்தி விடாமல்,நமது அகால மரணத்தை தவிர்க்க கூடிய பெருமாள் அபிஷேக தீர்த்தம் என்ற மகத்துவம் தெரிந்து அருந்த வேண்டும்......

படித்ததில் மனம் கவர்ந்தது.

இறை பணியில் இரா. இளங்கோவன். 

சிங்கிரிக்குடி,பூவரசன்குப்பம் பரிக்கல் தரிசனம் கிடைக்க நரசிம்மர்அருளட்டும்

சுவாதி 16/10/23 & 12/11/2023 தீபாவளி அன்றும் சிங்கிரிக்குடி,பூவரசன்குப்பம் பரிக்கல் தரிசனம் கிடைக்க நரசிம்மர்அருளட்டும்
ஒரே நேர்கோட்டில் அமைந்த 3 நரசிம்மர் தலங்கள் தரிசனம் 
சிங்கிரிக்குடி,பூவரசன்குப்பம் பரிக்கல் தரிசனம்
ஒரே நாளில் 3 நரசிம்மர் தலங்கள் தரிசிக்க  மிக விசேஷம் 
மதுரையில் இருந்து ம் சென்னையில் இருந்தும்  தரிசன முறை , 
முதலில் விழுப்புரம் சென்று விட வேண்டும் 
விழுப்புரம் நகரில் முதலில் சிங்கிரிக்குடி நரசிம்மர் உக்ர நரசிம்மர் தரிசனம் 
விழுப்புரம் நகரில் முதலில் சிங்கிரிக்குடி  
விழுப்புரம் TO சிங்கிரிக்குடி   37 கிமி via NH332
நேரம் கார் 1 மணி நேரம் 
காலை 7 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து கிளம்ப 8 மணிக்கு சிங்கிரிக்குடி அடைந்து நரசிம்மர் உக்ர நரசிம்மர் தரிசனம் 
காலை 9 மணிக்கு சிங்கிரிக்குடியில் இருந்து புறப்பட்டு  பூவரசன்குப்பம்  🌺🌺🌺 🙏🙏லட்சுமி நரசிம்மர் தரிசனம் 
 சிங்கிரிக்குடியில் இருந்து புறப்பட்டு  பூவரசன்குப்பம்  25.7 km வழி மதுக்கரை ரோடு 
 காலை 10 மணிக்கு பூவரசன்குப்பம்  🌺🌺🌺 🙏🙏லட்சுமி நரசிம்மர் தரிசனம் 
காலை 10.30 மணிக்கு  பூவரசன்குப்பம்  🌺🌺🌺 🙏🙏தலத்தில் இருந்து புறப்பட்டு  பரிக்கல் லக்ஷ்மி  நரசிம்மர் தரிசனம்
காலை 10.30 மணிக்கு  40.4 km  பண்ருட்டி வழியாக 🌺🌺🌺 🙏🙏பரிக்கல் 
 காலை 11.30க்கு 🌺🌺🌺 🙏🙏பரிக்கல் லக்ஷ்மி  நரசிம்மர் தரிசனம்
🌺🌺🌺 🙏🙏அங்கே கோயில் 1 .00 மணி வரை மட்டுமே காலையில் திறந்து இருக்கும் 
🌺🌺🌺 🙏🙏மதுரை வர விரும்புவோர் பரிக்கல் தலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக மதுரைக்கும் 
🌺🌺🌺 🙏🙏சென்னை செல்ல விரும்புவோர் உளுந்தூர்பேட்டை வழியாக மீண்டும் விழுப்புரம் மூலம் சென்னை செல்லலாம் 
ஒரே நாளில் 3 நரசிம்ம தரிசனம்

பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள், அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒரே நாளில் 3 நரசிம்ம தரிசனம்
பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக அவதரித்து இரணியனை வதம் செய்த பிறகு, பிரகலாதனின் பிரார்த்தனையின்பேரில் இந்தியாவில் அஹோபிலம் உள்ளிட்ட பல திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி, ஆகிய 8 தலங்களும் அட்ட நரசிம்ம தலங்களாக உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன.

பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பரிக்கல் :

விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில், விழுப்புரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல். பெருமாளின் திருநாமம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. போன் 99438 76272

பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால், அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பூவரசன்குப்பம் :

பரிக்கல்லில் இருந்து பூவரசன்குப்பம் 39 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர். தாயாரின் திருநாமம்: ஸ்ரீஅமிர்தவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.போன்: +91-413 269 8191, 94439 59995.

பூவரசன்குப்பம் நரசிம்மரை வழிபட, உடற்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்களும் நீங்கும்.

சிங்கிரிக்குடி :

பூவரசன்குப்பத்தில் இருந்து சிங்கிரிக்குடி 26 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர் (உக்ர நரசிம்மர்). தாயாரின் திருநாமம்: ஸ்ரீகனகவல்லி தாயார். தரிசன நேரம்: காலை 7.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை; மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை. போன் -0413 2618759

திருமணம் தடைப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிகை. இங்குள்ள உக்ர நரசிம்மரை வழிபட எதிரிகளின் தொல்லைகள் இருக்காது.

காலையில் சிங்கிரிக்குடி உக்ர நரசிம்மர்,(தனிநரசிம்மர் ) நண்பகலில் பூவரசன்குப்பம்,ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்  மாலையில் பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என்ற வரிசைப்படி தரிசிக்கவேண்டும்.

காலையில் சிங்கிரிக்குடி நண்பகலில் பூவரசன்குப்பம், இறுதியாக பரிக்கல்   என்ற வரிசைப்படி தரிசிக்கவேண்டும்.

Friday, September 8, 2023

#திருப்பம்_தரும்_திருப்பதி - #திருமலை_வெங்கடாசலபதிதரிசனம்

🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

          #திருப்பம்_தரும்_திருப்பதி - 
#திருமலை_வெங்கடாசலபதிதரிசனம்
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
 ♻ வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்பட வரம் அருளும் தலம் திருப்பதி-திருமலை . இங்கு ஏழுமலையான் குடியிருக்கும் கோவில் மிகப் பழைமையானது என்கின்றன ஞானநூல்கள். தொல்காப்பியம் போன்ற நூல்கள், இந்தத் தலத்தை '#வேங்கடம்’ என்றும் பெருமாளை #வேங்கடத்தான் என்றும் குறிப்பிடுகின்றன. பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைத்து பிறப்பு – இறப்பு வட்டத்திலிருந்து விடுவித்து, முக்தி அளிக்கக்கூடிய சக்தி படைத்த ஒரே கடவுள் அவர்.

🍁வ்ருஷிபாத்ரி ,  

🍁நீலாத்ரி ,  

🍁அஞ்சனாத்ரி ,  

🍁சேஷாத்ரி ,  

🍁கருடாத்ரி ,  

🍁நாரயணாத்ரி , 

🍁 வேங்கடாத்ரி என்ற ஏழு மலைக்கு மத்தியில் பெருமாள் வாசம் செய்வதால் பெருமாள், “#ஏழுமலையான்” என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். திருப்பதி பெருமாள் தோன்றி சராசரியாக 250 கோடி ஆண்டுகள் மேல் இருக்கும் .

 ⭕ உள்நாடு மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் இந்துக்கள் மனதில் என்றும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருமாளை வாழ்கையில் ஒரு முறையாவது திருப்பதி - திருமலை சென்று சேவிக்க அனைவருக்கும் பேரவா உண்டு . ஆனால் #பெருமாள்அழைப்பின்றி_யாரும்எளிதில் அவரை தரிசித்து விட முடியாது . விடுமுறை கிடைத்துவிட்டது என்று நீங்கள் பல நாள் / மாதம் . ஆண்டு முன்பே முன்பதிவு மேற்கொண்டாலும் அவர் நினைத்தால் மட்டுமே கோவிலுக்குள் நுழைய முடியும் .

⭕நீண்ட கியூ , தலைமுடி காணிக்கை செய்த மனிதர்கள் , ஐந்து விநாடி தரிசனத்துக்கு பல மணிநேர / நாள்கணக்கில் காத்திருப்பு , பெருமாளை கண்டு கண் மூடி திறப்பதற்குள் "ரண்டி , ரண்டி " என்று வெளியேற்றம் , பல கிலோமீட்டர்க்கு முன்பே நாசியை துளைக்கும் நெய் / லட்டு வாசனை என தனிசிறப்புடன் கொண்ட பெருமாள் தரிசனத்தை சரியான திட்டமிடல் இல்லாமல் பலரும் மனகசப்புடன் திரும்புவதை தடுக்கவே இந்த கட்டுரை .

⭕தெருமுனையில் இருக்கும் கோவிலுக்கு சென்று திரும்புவதை போன்று இருப்பதல்ல இந்த திருப்பதி - திருமலை தரிசனம் . சிலருக்கு சில மணி நேரத்தில் கிடைக்கும் தரிசனம் , பலருக்கு பல மணிநேரம் ஆகும் , சில சமயம் நாள்-கணக்கில் ஆகும் . உடுத்திய ஆடை கசையாமல் , யாரும் நெருக்கியடிக்காமல் , கால் கடுக்க நிற்காமல் நிதானமாய் சென்று தரிசனம் செய்யவேண்டும் , என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இது வசதிப்படாது .

⭕ஒரு நாளைக்கு சராசரியாய் 50,000-60,000 பக்தர்களையும் , விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் பக்தர்களை பெருமாள் அழைத்து தரிசனம் தருகிறார் . பிரம்மோற்சவ நாட்களில் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை , வைகுண்ட ஏகதேசி , புரட்டசி சனி போன்ற நாட்களில் இரண்டு லட்சம் , மூன்று லட்சம் , ஐந்து லட்சம் பக்தர்கள் என்ற கணக்கில் தரிசனம் தருகிறார் .
ஒரு நாளைக்கு 86,400 வினாடிகள் , அதில் தரிசன நேரமான 64,800 வினாடிகளில் இத்தனை பக்தர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தருவது சாதாரண விஷயமா என்ன ? .

🌺 திருப்பதி - திருமலை பெருமாளை தரிசனம் செய்ய கீழ்க்கண்ட முறைகள் உள்ளன - இலவச தரிசனம் , 50 ரூபாய் சுதர்சன தரிசனம் , 300 ரூபாய் விரைவு தரிசனம் , நடைபாதை தரிசனம் , VIP தரிசனம் , மாற்று திறனாளி / முதியோர்கள் தரிசனம் , வெளிநாட்டு வாழ் இந்தியர் தரிசனம் , ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையுடன் தரிசனம் .
இதில் எந்த தரிசனத்தில் வந்தாலும் கோவிலுக்குள் நுழைவதற்குள் அனைவரும் ஒரே வரிசையில் சேர்ந்தபின்னரே தரிசனத்துக்கு செல்வார்கள் . அனைவருக்கும் அதிகபட்சம் ஐந்து வினாடிகள் மட்டுமே தரிசனம் .

🍁எல்லோரும் பின்பற்றுவது என்னவேனில் , வரிசையில் நின்றோம் , தரிசித்தோம் , உண்டியலில் காணிக்கை செலுத்தினோம் , பிரசாதம் உட்கொண்டு திரும்பி வந்தோம் அத்துடன் பெருமாள் தரிசனம் முடிந்தது என்று நினைத்து வருகிறார்கள் . ஆனால் அது தவறு . பெருமாளை வழிபட #சில_சாஸ்திரசம்பிரதாய_முறைகள் இருக்கின்றன . அதன் படியே பின்பற்ற வேண்டும் .

🙏🙏🙏 திருமலையில் பெருமாளை சேவிப்பதற்கு முன்னர் கீழ் திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாளை வணங்கிய பின்னர் திருச்சானூர் பத்மாவதி தாயாரையும் வணங்கி விட்டு தான் திருமலை புறப்பட வேண்டும் .

🍂 திருமலையில் வெங்கடாசலபதி கோவில் உண்டாவதற்கு முன்னரே திருப்பதியில் கோவிந்தராஜ பெருமாள் கோவில் உண்டாகி இருக்கிறது . இங்கு ருக்மணி சத்யபாமா சமேதராக பார்த்தசாரதிபெருமாள் உட்கார்ந்த நிலையில் காட்சி தருகிறார் . சில காலம் முன்பு வரை திருமலை உண்டியலில் சேரும் காணிக்கைகள் இங்கு வந்து சேர்ப்பிக்கப்படும் . கால மாற்றத்தால் உண்டியல் கணக்கு மட்டுமே இங்கே படிக்கப்படுகிறது .

🌺"சுவாமி புஷ்கரணி ஸ்நானம், 

🌺வராஹ வேங்கட தரிசனம், 

🌺மஹாபிராசாத சுவீகாரம் த்ரையம் த்ரைலோக துர்லபம்..."

இந்த சாஸ்திர கூற்றுப்படி திருமலையில் இருக்கும் புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடிவிட்டு தீர்த்தக்கரையில் இருக்கும் ஸ்ரீ ஆதிவராஹ சுவாமியை தரிசித்த பின்னரே திருவேங்கடமுடையானை தரிசிக்க வேண்டும் . பின்னர் பகவானின் திருப்பிரசாதத்தை உட்கொண்ட பின்னரே இல்லத்துக்கு திரும்பி செல்ல வேண்டும் .

🍂 திருமலையில் சீனிவாசனுக்கு இடம் தந்தவரே இந்த வராக சுவாமி . அதற்க்கு உபகாரமாக தான் திருமலையில் முதல் ஆராதனம்,முதல் நிவேதனம் முதல் தரிசனமும் ஆதிவராக சுவாமிக்கு செய்யப்படுகிறது.இந்த திருமலைக்கு ஆதிவராஹ ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு .இந்த ஷேத்திரத்தின் அதிபதியாக வராக சுவாமி இருப்பதால் அவரை தரிசனம் செய்துவிட்டே திருவேங்கடமுடையானை தரிசிக்க செல்ல வேண்டும் .

🌺திருமலையில் பெருமாளை பார்க்கும் அந்த ஒரு சில வினாடிகளில் நமது அறிவு செயலற்று போய் நமது பிரார்த்தனைகள் மறந்து விடும் . மேலும் பெருமாளின் அலங்காரமும் திருமேனியும் மறந்து போய்விடும் . கோவிலை விட்டு வெளியே வந்த பின்னரே நமது பிரார்த்தனைகள் நினைவுக்கு வரும் . " அடடா . இதை அவரிடம் கேட்க மறந்துவிட்டோமே " என்ற கவலையும் வரும் . இதற்கு அங்கு தினமும் நடமாடும் தேவதைகள் , சித்தர்களின் பிரார்த்தனை , போன்றவைகளால் உண்டான வளையமே காரணம் .

🌺 மூலவர் வெங்கடாசலபதியை வணங்கும்போது வீடு வேண்டும் , கார் வேண்டும் , பணம் / சொத்து வேண்டும் என்று கூறாமல் , என்றுமே உன் பாதங்களை தொழும் பாக்கியம் போதும் என்றே வணங்க வேண்டும் . கருவறைக்கு மேலே இருக்கும் தங்க கோபுரத்தில் வீற்றிருக்கும் விமான வெங்கடேசபெருமாளிடம்(வடக்கு முகமாய் வெள்ளி கவசத்தால் சிகப்பு அம்பு குறியீடு செய்யப்பட்டு இருக்கும்) மட்டுமே உங்கள் சுய விருப்பங்கள் , பிரார்த்தனைகள் கூறினால் அவர் மூலவரிடம் கூறி விடுவார் . #விமானவெங்கடேசபெருமாளுக்கு அருகே இருக்கும் #பரமபதநாதரையும் வணங்கிவிட்டு வர வேண்டும் . அவ்வாறு பரமபதநாதரை வணங்கும்போது வைகுண்ட ஏகாதேசி அன்று பெருமாளை பரமபத வாசல் வழியாய் சென்று சேவித்த பலன் கிட்டும்.

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

Wednesday, September 6, 2023

கோவிந்தா கோவிந்தா என்றால் மோட்சம் கிடைக்கும்!

கோவிந்தா கோவிந்தா என்றால் மோட்சம் கிடைக்கும்!
*ஓம் நமோ நாராயணா.... நீயே கதி உன் திருவடிகளே சரணம் ஐயா....*
*கோவிந்தா ஹரி கோவிந்தா.... கோகுல நந்த கோவிந்தா..
கோவிந்தா கோவிந்தா என்றால் கொடுத்தது திரும்பவராது என்னும் தவறான கருத்தை கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.

கடவுளின் திருநாமத்தில் ஏமாற்றம் எப்படி அடையமுடியும். கடவுளின் திருநாமத்தை தவறான செயலுக்கு அர்த்தம் வருமாறு சொல்லலாமா? கோவிந்தா என்னும் திருநாமத்தைப் பற்றி சொல் வதற்கும் கேட்பதற்கும் கால அவகாசம் போதுமா என்ன? அவ்வளவு சிறப்புக்கள் பெற்றது கோவிந்தா கோவிந்தா என்னும் திருநாமம்.

காக்கும் கடவுளான ஸ்ரீ வேங்கடமுடையானை பக்தர்கள் கோவிந்தா என்று அழைத்தால் ஓடோடி வந்து அருள் புரிந்துவிடுவார். கோ என்றால் உலகம். விந்தன் என்றால் காப்பாற்றுபவன் என்று பொருள். ஆக கோவிந்தன் என்றால் உலகையெல்லாம் உலகில் உள்ள ஜீவராசிகளையெல்லாம் காக்கும் கடவுள் என்று பொருள்.

பெருமாளுக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமத்தில் ஆயிரம் நாமங்கள் உண்டு. அவற்றிலும் சிறப்புமிக்க நாமங்கள் பன்னிரண்டு. அவற்றிலும் சிறப்பு மிக்க நாமம் கோவிந்தா என்னும் நாமம். ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் கோவிந்த நாமத்தைதான் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.

கோவிந்தா என்றால் போனால் திரும்ப வராது என்னும் அர்த்தத்தையும் கொண் டது. அதாவது பூவுலகில் மனிதப்பிறவியாய் அவதரித்து அவதிப்படுபவன் இத் திருநாமத்தை விடாது பற்றிக்கொண்டால் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டான் என்பதையே குறிக்கும். கோவிந்த நாமம் சொல்ல சொல்ல போன உயிர் மீண்டும் திரும்பாது என்பதே இதன் பொருள். அதாவது மறுபிறவி யில்லாத நிலை என்று சொல்லலாம்.

கோ என்றால் பசு என்பதை குறிக்கும். இது அனைவருக்கும் தெரிந்ததே. விந்தன் என்றால் காப்பவன். ஆக பசுக்களின் தலைவன் என்று பொருள்படும். தானத்தில் சிறந்த பசுதானம் செய்த புண்ணியத்தைத் தருவது கோவிந்தா என்று சொல்லக் கூடிய திருநாமம்.

பக்தர்கள் அபயம் வேண்டி மனம் முழுக்க வேங்கடவனை நினைத்து கோவிந்தா என்று முழங்கினால் செய்யும் பணிகளை விடுத்து தேடிவருவான் கோவிந்தப் பெருமாள். மகாபாரதத்தில் திரெளபதியின் சேலையை துரியோத னன் துகிலுரிந்த போது அதைப் பார்த்து பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், விதுரர், பாண்டவர்கள் தலைகுனிந்தார்கள். ஒன்றும் செய்ய இயலாமல் அமைதியாக இருந்தார்கள். செய்வதறியாமல் திகைத்தார்கள். ஆனால் திரெளபதி கோவிந்தனை மட்டுமே நம்பினாள். கோவிந்தனின் திருநாமத்தை உச்சரித்தாள். இருகைகளையும் மேலே எழுப்பி கோவிந்தா கோவிந்தா என்னை காப்பாற்று என்றாள். கோவிந்தனின் திருநாமத்தால் அவளது ஆடையின் அளவும் நீண்டுக் கொண்டே சென்றது. அவ்வளவு சக்தியைக் கொண்டது கோவிந்தனின் திருநாமம். 🌿♥️
வைணவத்தலங்கள் எங்கு சென்றாலும் அங்கு கோவிந்தா என்ற குரல் உரக்க முழக்கமிடுவதை கேட்கிறோம். கோவிந்தா கோவிந்தா என்னும் முழக்கம் திருமலையில் ஸ்ரீ வேங்கடமுடையானின் தலத்தில் மட்டுமல்லாமல் திருமலை முழுக்க எதிரொலிக்கிறது. கேட்கும் நமக்கு அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் தரும் திருநாமமாய் ஜொலிக்கிறது.
ஒருவர் இவ்வுலக வாழ்வை விட்டு செல்லும் இறுதி நேரத்தில் சுற்றி இருப்ப வர்கள் கோவிந்தா கோவிந்தா என்று சொல்வார்கள். இப்படி சொல்வது அவருக்கு நாம் செய்யும் ஆத்மார்த்தமான ஆன்மிக உதவி. இறந்தவர்களுக்கு மோட்சத்தை தருவது கோவிந்தப்பெருமாள் மட்டுமே தரமுடியும்.
*ஓம் நமோ நாராயணா.... நீயே கதி உன் திருவடிகளே சரணம் ஐயா....*
*கோவிந்தா ஹரி கோவிந்தா.... கோகுல நந்த கோவிந்தா...வைணவத்தலங்கள் எங்கு சென்றாலும் அங்கு கோவிந்தா என்ற குரல் உரக்க முழக்கமிடுவதை கேட்கிறோம். கோவிந்தா கோவிந்தா என்னும் முழக்கம் திருமலையில் ஸ்ரீ வேங்கடமுடையானின் தலத்தில் மட்டுமல்லாமல் திருமலை முழுக்க எதிரொலிக்கிறது. கேட்கும் நமக்கு அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் தரும் திருநாமமாய் ஜொலிக்கிறது.
ஒருவர் இவ்வுலக வாழ்வை விட்டு செல்லும் இறுதி நேரத்தில் சுற்றி இருப்ப வர்கள் கோவிந்தா கோவிந்தா என்று சொல்வார்கள். இப்படி சொல்வது அவருக்கு நாம் செய்யும் ஆத்மார்த்தமான ஆன்மிக உதவி. இறந்தவர்களுக்கு மோட்சத்தை தருவது கோவிந்தப்பெருமாள் மட்டுமே தரமுடியும்.
ஓம் நமோ நாராயணா.... நீயே கதி உன் திருவடிகளே சரணம் ஐயா....
கோவிந்தா ஹரி கோவிந்தா.... கோகுல நந்த கோவிந்தா... 🌿🕉️🚩

Tuesday, September 5, 2023

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள்

🌼கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள்🌼: - 
🌼குருவாயூர் கிருஷ்ணன் அழகிய திருக்கோலம்.🌼
1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.

2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.

3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

5. கிருஷ்ணர் தமிழ்நாட்டில் கண்ணன் என்றும் வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

6. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.

7. கிருஷ்ண இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

8. கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

9. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந் தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ் ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

10. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள்.

11. கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.

12. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.

13. கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

14. கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

15. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.

16. கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர்  சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

17.கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல் வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும்.

20. தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

23. பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
24. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

25. "ஓம் நமோ பகவதே வாசுதேவாய " என்று ஜெபித்தால் கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும்.

26. அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.

27. அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் தனது படைகளுக்கு முன்பு கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.

28. யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தனிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.

29. சிலப்பதி காரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டி யுள்ளனர்.

30. ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூமி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.

Tuesday, August 15, 2023

புண்ணிய தலம்...!மர்ம முடிச்சுகள் கொண்ட பூரிஜெகன்நாதர் ஆலயம் பற்றி அரிய தகவல்கள்...!!

புண்ணிய தலம்...!
மர்ம முடிச்சுகள் கொண்ட பூரிஜெகன்நாதர் ஆலயம் பற்றி அரிய தகவல்கள்...!!
இந்தியாவின், கிழக்கு கடற்கரையில், ஒடிசா மாநிலத்தில், புரி அல்லது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயிலே ஜகந்நாதர் ஆலயமாகும்.

இக்கோயில் ஜெகன்நாதர், பாலபத்திரர் (பலராமர்) மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும்.

புரி ஜெகன்நாதர் கோயில்.

இக்கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கீழைக் கங்கர் குல அரசன் ஆனந்தவர்மன் சோடகங்கனால் கட்டப்பட்டது. இக்கோயிலின் மூலவர்களான ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்திரை தனித் தனியாக மூன்று தேர்களில் ஏறி ஊரை ஊர்வலம் வரும் நிகழ்வான ரதயாத்திரை திருவிழா ஆண்டிற்கு ஒரு முறை, ஆடி பௌர்ணமி அன்று துவங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

சைதன்ய பிரபு, புரி ஜெகந்தாதரால் கவரப்பட்டு பல ஆண்டுகள் புரியில் வாழ்ந்தவர். ஜெயதேவர் மற்றும் சாது ராமானந்தரும் இக்கோயிலுடன் தொடர்புடையவர்களாவர்.

உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் ஒன்பது நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்வார்கள்.

தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பாலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும்( கிருஷ்ணரின் தங்கை மற்றும் அர்ஜுனனின் மனைவி, மாவீரன் அபிமன்யுவைப் பெற்றவள்) எழுந்தருள்வர்.

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் ‘ரத்ன வீதி’யைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் (கிருஷ்ணர்)
எழுந்தருளிய தேர் புறப்படும்.

குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் இரத யாத்திரையின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.

தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் 45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட புதிய தேர் மரத்தால் கட்டப்படுகிறது.

கோவிலின் தல வரலாறு

பல அற்புதங்களையும், மர்மங்களையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் ஆலயம் புரிஜகன்னாதர் ஆலயம்.

துவாபர யுகம் முடிவில் கிருஷ்ணர் பூதஉடலில் இருந்து தனது ஆன்மாவை பிரித்து வைகுண்டம் அடைந்தார். அவரது உடலுக்கு இறுதி சடங்குகளை முடித்து உடலுக்கு தீ வைக்கும் போது, உடலில் அனைத்து பகுதிகளும் சாம்பலானதாம்;

ஆனால் கொப்பூழ் பகுதி மட்டும் அப்படியே இருந்ததாம்; மக்களும் அப்படியே கடலில் கரைக்க, ஆச்சரியம் என்ன வென்றால் கொப்பூழ் பகுதி மட்டும் கடலில் கரையாமல் நீல நிற கல்லாக மாறி பின் கொஞ்சம் கொஞ்சமாக பகவன் விஷ்ணுவின் உருவமாக மாறியதாம். (யுக முடிவில் விஷ்ணுவின் கொப்பூழில் இருந்து ஒரு தாமரைமலர் வர, அதிலிருந்து பிரம்மா தோன்றி மீண்டும் உலகைப் படைப்பாராம். அத்தகைய மகிமை உடையது பகவானின் கொப்பூழ்)

அந்த சிலையைக் கண்ட பழங்குடி இனத்தை சார்ந்த விஸ்வசனன் அந்த சிலையை அங்கு இருந்த காட்டுப். பகுதிக்குக் கொண்டு சென்று யாரும் அறியாத வண்ணம் காட்டு மலர்களால் தினமும் அர்ச்சனை செய்து வந்தாராம். இந்த தகவல் எப்படியோ அங்கு ஆட்சி செய்த இந்திரதுய்மன் என்ற மன்னனுக்குத் தெரியவந்ததாம்.

அதைப் பற்றி அறிந்து வரும்படி மன்னர், வித்யாபதி என்ற அந்தணரை அனுப்பி வைத்தாராம்.

அவரும் விஸ்வசனனை சந்தித்தார்; விஸ்வசனனின் மகள் மீது காதல் கொண்டு திருமணமும் செய்துகொண்டார். அதன் பிறகு அந்த காட்டுக்குள் இருக்கும் சிலையைக் காட்டுமாறு வற்புறுத்தி வேண்டினார் வித்யாபதி. அவரும் வித்யாபதியின் கண்களை கட்டி காட்டிற்குள் அழைத்து சென்றாராம்.

வித்யாபதியும் வழியெங்கும் கடுகுகளை போட்டுக் கொண்டே சென்றாராம். பின்னர் அதிசய கிருஷ்ணர் சிலையைக் கண்டு வணங்கி பூஜைகளை முடித்து இருவரும் வீடு திரும்பினராம்.

குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அந்த கடுகுகள் துளிர் விட ஆரம்பிக்க, சிலையை அடையும் வழி துல்லியமாக தெரியதத் தொடங்கியது. அதை கண்டு வித்யாபதி, மன்னனுக்குத் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த இந்திரத்துய்மன் தன் படையினருடன் அந்த காட்டுப்பகுதிக்கு சென்றான்.

ஆனால் ஏழையின் பக்திக்குக் கட்டுப்பட்ட கிருஷ்ணரோ, மன்னனோடு செல்ல விரும்பாது மாயமாகிப் போனார். அதை கண்டு மனம் உடைந்த மன்னரோ உண்ணாவிரதம் மேற்கொண்டு ஒரு மண்டலத்தில் அசுவமேத யாகத்தை துவங்குகினாராம். தனக்கு அருளும்படி மனமுருகி மன்னன், பகவானை வேண்டினாராம்.

மன்னனின் கனவில் கிருஷ்ணர் தோன்றி , கடலில் மிதந்து வரும் ஒரு மரக் கட்டையைக் கொண்டு சிலையைச் செதுக்குமாறு கூறினாராம். அதைப் போல மறுநாள் ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்ததாம்.

இந்திரதுய்மனும் அந்த மரக்கட்டைக்குப் பூஜைகளை நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலையை வடிக்குமாறு கூறினாராம். ஆனால் யாராலும் சிலையை வடிக்க இயலவில்லை.

அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல தோன்றினார். மன்னனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலை செய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது; தான் உணவும் உண்ண மாட்டேன்! என்றும் கூறினாராம் முதியவரான தச்சர்; அதற்கு மன்னனும் ஒப்புக்கொண்டாராம்.

பதினைந்து நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது! என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் அறையிலிருந்து சத்தமே கேட்கவில்லை. 

இதனால் தச்சருக்கு என்னவாயிற்றோ என எண்ணி, மன்னன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டாராம். உள்ளே யாருமேயில்லை; பெருமாள் மறைந்துவிட்டார்.

ஆனால் ஓர் அசரீரி குரல் கேட்டது. ‘மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய்; எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும்; அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு; 

இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்! என்ற எண்ணத்துடன் செல்வார்கள்! என்று பகவான் அருள்பாலித்தாராம். 

அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகன்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே மன்னரும் பிரதிஷ்டை செய்தார்.

இந்திரத்துய்மனின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. 

தற்போதைய கோயில் ஏறக்குறைய கி.பி. 1135இல் அரசர் அனந்தவர்மனால் துவக்கப்பட்டு, 1200ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் முடிக்கப்பட்டது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும்.

இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் “ஏழைகளுக்கு அருள்பவன்” என்னும் பொருளில் “பதீதபவன் பாவனா” என்று அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணர், ஏழைப் பங்காளன் அல்லவா? அவரது கோயில் கொடிமரத்தை அவ்விதம் அழைப்பது மிகவும் பொருத்தமே. இன்னும் எண்ணற்ற அதிசயங்களைக் கொண்டது புரி ஜகன்நாதர் ஆலயம்.

Friday, August 11, 2023

குபேர யோகம் தரும் பரம ஏகாதசி 2023 இன்று ஆகஸ்ட் 12 ம் தேதி சனிக்கிழமை பரம ஏகாதசி ❤️

3 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாதத்தில் பரம ஏகாதசி வருகின்றது விசேஷம் . ❤️
 குபேர யோகம் தரும் பரம ஏகாதசி 2023  இன்று ஆகஸ்ட் 12 ம் தேதி சனிக்கிழமை  பரம ஏகாதசி ❤️
ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், தனிச்சிறப்பும் உள்ளது. அனைத்து ஏகாதசிகளிலும் திருமாலை உண்மையான அன்புடனும், பக்தியுடனும் வழிபட்டு வந்தால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெற முடியும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருக்க முடியாதவர்கள், வருடத்தின் சில முக்கியமான ஏகாதசிகளில் விரதம் இருப்பதால் அளவில்லாத புண்ணிய பலன்களை பெற முடியும். தொடர்ந்து ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு பிறப்பு இறப்பு இன்றி, இறைவனின் திருவடிகளை அடையும் பெரும் பேறு கிடைக்கும்.

பெருமாளுக்குரிய மிக முக்கியமான விரதம் ஏகாதசி விரதமாகும். மிகவும் புனிதமான விரதமாக கருதப்படும் ஏகாதசி விரதம் நாளில் உணவு, நீர் ஆகியவற்றை தவிர்த்து திருமாலை நினைத்து வழிபட வேண்டும். ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விரத நாட்களில் ஒன்று பரம ஏகாதசியாகும். ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு பரம ஏகாதசி என்று பெயர். திரிக் பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு பரம ஏகாதசி ஆகஸ்ட் 12 ம் தேதி வருகிறது. கிட்டதட்ட 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு பரம ஏகாதசி விரதமானது ஆடி மாதத்தில் இந்த ஆண்டு வருகிறது.

பரம ஏகாதசியை, புருஷோத்தம கமலா ஏகாதசி என்றும் சொல்வதுண்டு. அதுவும் இந்த ஆண்டு வழிபாட்டிற்குரிய ஆடி மாதத்தில் இந்த ஏகாதசி வருவதால் கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது. பொதுவாகவே ஏகாதசி விரதம் என்பது தெரிந்தும், தெரியாமலும் நாம் செய்த பாவங்களில் இருந்து நிவர்த்தி தந்து, வைகுண்ட பதவியை தரக் கூடியதாகம். ஏகாசி விரதம் இருப்பதால் கர்ம வினைகள் அனைத்தும் அகலும் என்பத ஐதீகம். ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு மகாவிஷ்ணுவின் அருளுடன் மகிழ்ச்சி, செல்வ வளம், வைகுண்ட பதவி ஆகியவை கிடைக்கும்.

இந்து புராணங்களின் படி, பரம ஏகாதசி விரதத்தை கடைபிடித்து தான் குபேரர், மகாவிஷ்ணுவிடம் இருந்து செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் பதவியை பெற்றார். பரம ஏகாதசி விரதம் வாழ்வில் இருக்கும் வறுமையை முழுவதுமாக நீக்கக் கூடியதாகும். இந்த விரதத்தை பக்தியுடனும், முழு அர்ப்பணிப்புடனும் இருப்பவர்களுக்கு மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

இந்த ஆண்டு ஏகாதசி திதி  , ஆகஸ்ட் 12 ம் தேதி  . இந்த நாளில் அதிகாலையில் எழுந்து பெருமாளின் படத்துடன், ஸ்ரீயந்திரம் வைத்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். நெய் விளக்கேற்றி, 5 விதமான பழங்கள், வீட்டில் செய்த இனிப்புகள், துளசி, பஞ்சாமிர்தம் படைத்து வழிபட வேண்டும். திருமாலுக்கு நைவேத்தியம், தண்ணீர் படைத்து வழிபடுவதால் அனைத்து விதமான தீமைகளும் வாழ்வில் இருந்து நீங்கும்.
விஷ்ணு வழிபாடு தொடங்கும்போது,  ஸ்ரீ ஹரிவிஷ்ணுவுடன் லட்சுமி சிலையை வைக்க வேண்டும். குங்குமம் கலந்த பால் நிரப்பப்பட்ட தக்‌ஷயவர்த்தி சங்கில் இருந்து அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் செய்யத பின்னர் நீரினால் ஜல அபிஷேகம் செய்ய வேண்டும்

மஞ்சள் வஸ்திரம், சந்தனம், மாலைகள் மற்றும் பிற பூஜை பொருள்களை தெய்வத்துக்கு சமர்பித்து, பிரசாதத்தில் துளசியை அர்ச்சனை செய்ய வேண்டும். இறுதியில் தூபம் ஏற்றி ஆரத்தி செய்ய வேண்டும்

மஞ்சள் வஸ்திரம், சந்தனம், மாலைகள் மற்றும் பிற பூஜை பொருள்களை தெய்வத்துக்கு சமர்பித்து, பிரசாதத்தில் துளசியை அர்ச்சனை செய்ய வேண்டும். இறுதியில் தூபம் ஏற்றி ஆரத்தி செய்ய வேண்டும்

இந்த நாளில் சனிபகவானுக்கு கடுகு எண்ணெய் சமர்பித்து, சனி பகவானின் சக்தி வாய்ந்த மந்திரமான ஓம் சம் ஷனைச்சராய நம என்று சொல்லி தீபம் ஏற்றவும். சனி மஹாராஜாவுக்கு கருப்பு எள்ளினால் செய்யப்பட்ட உணவை வழங்கவும். பின்னர் தூபம் மற்றும் தீபம் ஏற்றி ஆரத்தி செய்யவும். சனி தோஷத்தில் இருந்து விடுபட இந்த நாளில் கருப்பு எள், எண்ணெய் தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்யுங்கள்

இந்த நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீஹரி ஸ்தோத்திரம் ஆகியவற்றை பாராயணம் செய்வது மிகவும் விசேஷமானது. ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை ஜபிப்பது சிறப்பதாகும். முழுமையாக உபவாசம் இருக்க முடியாதவர்கள், சாத்வீகமான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது சிறப்பானதாகும்.

As per Drik Panchang, Parama Ekadashi fast will be observed on August 12, 2023. Many devotees are going to observe Parama Ekadashi fast today i.e., on August 12, 2023. Parama Ekadashi holds a special significance among Hindus. This Ekadashi comes after a long gap of 3 years during Adhik Mas
இந்த ஆடி   மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் ஏகாதசி திதி பரம ஏகாதசி எனப்படும்.
புருஷோத்தம வடிவம் பூஜிக்கப்படுகிறது

இந்த ஏகாதசியின் முக்கியத்துவத்தைப் பற்றி யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்கிறார். கதை கம்பில்யாவில் சுமேதா என்ற ஏழை பிராமணனைப் பற்றியது. அவரும் அவரது மனைவி பவித்ராவும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தாலும், தங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்த அனைவரையும் மிகவும் கவனித்துக் கொண்டனர்

சுமேதா பணம் சம்பாதிக்கவும் மக்களுக்கு சேவை செய்யவும் பெரிய நகரத்திற்கு செல்ல விரும்புகிறாள். ஆனால் பவித்ரா அந்த யோசனையை விரும்பவில்லை, அவர்கள் அங்கேயே மக்களுக்கு சேவை செய்தார்கள்.
ஒரு நாள் கௌதின்ய ரிஷி அவர்கள் வீட்டிற்குச் சென்றார், அவர்கள் முழு மனதுடன் ரிஷியை சேவித்து, அவருடைய ஆசிர்வாதத்தைப் பெற்றனர்.

புறப்படுவதற்கு முன், ரிஷி அவர்களை ஆதிக் மாசத்தின் கிருஷ்ண பக்ஷ ஏகாதசி திதியில் ஒரு விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொன்னார். அவர் சுமேதா மற்றும் பவித்ரா ஆகியோருக்கு புருஷோத்தம பிரார்த்தனை செய்யும்படி அறிவுறுத்துகிறார். அவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்த பிறகு, அவர்கள் பணக்காரர்களாகி, தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்ய சிறந்த நிலையில் இருந்தனர்.

விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு நாராயணனின் பரம பதம் கிடைக்கும். விரதம் இன்றிலிருந்து எடுக்கப்பட்டு துவாதசி நாளில் பரணத்தை எடுத்து முடிக்க வேண்டும். ❤️
Ekadashi thiti in Krishna paksha of this adhik masam is called Parama Ekadashi.
Purushottama form is worshipped

Yudhishthira asks Sri Krishna about the importance of this Ekadashi. Story is about a poor Brahmin named Sumedha in Kampilya. He and his wife, Pavitra were known for their hospitality. Even though they were poor they took great care to of all those who took shelter at their home

Sumedha wishes to move to bigger city to earn money & serve people. But Pavitra disliked that idea and they continued to serve people there itself.
Kaudinya Rishi visited their house one day, They served rishi wholeheartedly and sought his blessings.

Before leaving, rishi asked them to observe a vrat on Ekadashi Tithi, Krishna Paksha of the Adhik Maasam. He also advices Sumedha and Pavitra to pray purushottama. And after they observed this vrat, they became wealthy and were in a better position to serve those in need.

Those who observe vratham will get parama padam of Narayana. Vratham should be taken from today and ending on dwadashi day after taking parana. ❤️

Sunday, July 23, 2023

ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும்.

கருட பஞ்சமி ஸ்பெஷல் !
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும்.
பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஒன்று உண்டு. கருட பஞ்சமி என்ற இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்கானவும் கடைபிடிக்கப்படுகிறது
நாகர்களும், கருடனும் ஒரு தந்தை(தாய் வேறு வேறு) பிள்ளைகள், சகோதரர்கள் என்பதால் நாக சதுர்த்தி மற்றும் நாக பஞ்சமி அல்லது கருட பஞ்சமி  ஆகிய இரு நாட்களும் சகோதரர்களுக்கான  பண்டிகைகளாகக் கொண்டாடப்படுகிறது.
 பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு  மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை  அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து  நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர்.  போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன்  கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது  அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக்  கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன்,  அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான்.  தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன்  வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும்  ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று  அழைக்கப்படுகின்றது.
பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று  அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.  கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம்  இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமியன்று ஆதிசேஷனுக்கு  பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள் தானே நாகங்கள் அவர்கள்  செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவ லோகம் சென்று  அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக  எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை  செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே.
அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், முக்கியமாக எண்ணெய்  கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை,  பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும். இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை  செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற  வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம். அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால்,  பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும்  இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நோன்பு கூடப்  பிறந்த சகோதரர்களின் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு  பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெற வேண்டும்.  சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.
கஷ்யப முனிவருக்கு வினதை, கத்ரு என்று இரண்டு மனைவியர். இவர்களில் வினதை கருடனையும், கத்ரு பாம்புகளையும்  பெற்றெடுத்தனர். கத்ருவுக்கு வினதையைப் பிடிக்காது. அதனால், அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு  அழைப்பு விடுத்தாள். அக்கா...நமக்குள் ஒரு போட்டி... பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட, உச்சைஸ்ரவஸ் என்ற குதிரை என்ன நிறம்  தெரியுமா? என்றாள். இதிலென்ன சந்தேகம்; அது வெள்ளை நிறம்... என்றாள் வினதை. இல்லையில்லை, அதன் வால் மட்டும் கருப்பு...  என்று கத்ரு கூற, வினதை அதை மறுத்தாள். சரி...நாம் ஒரு பந்தயம் கட்டுவோம். யார் சொல்வது தவறோ, அவர் மற்றவர்க்கு  அடிமையாக வேண்டும்... என்றாள் கத்ரு. வினதையும் இதற்கு ஒப்புக் கொண்டாள். கத்ரு, ரகசியமாக தன் பாம்பு குழந்தைகளில்  கருப்பானவற்றை அழைத்து, நீங்கள் போய் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ளுங்கள்... என, உத்தரவு போட்டாள். பாம்புகளும்  அவ்வாறே குதிரையின் வாலில் சுற்றிக் கொண்டன.
வினதை, கத்ருவுக்கு அடிமையானாள். இதை அறியாத கருடன், வினதையிடம், அம்மா... நீ, ஏன் சின்னம்மாவுக்கு எடுபிடி வேலை  செய்கிறாய்? அவள் எங்கு சென்றாலும், அவள் பல்லக்கை சுமந்து செல்கிறாயே... என்று, வேதனையுடன் கேட்டது. நடந்த விஷயத்தைச்  சொன்னாள் வினதை. உடனே கருடன், சின்னம்மா கத்ருவிடம் சென்று,என் தாயை விடுதலை செய்ய நான் என்ன செய்ய வேண்டும்?  என்று கேட்டது. கத்ருவோ கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்தாள். கருடா... நீ தேவலோகம் சென்று, இந்திரனிடம் உள்ள  அமுதக்கலசத்தைப் பெற்று வந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், உன் அன்னையை விடுவிப்பேன்... என்றாள்.  கருடன் தேலோகம் சென்று இந்திரனிடம் போரிட்டது. இந்திரனின் பலம் வாய்ந்த வஜ்ராயுதத்தை செயல்பட விடாமல் செய்து, அவனைத்  தோற்கடித்தது. இருப்பினும், இந்திரா... இந்த வஜ்ராயுதம் முனிவரின் எலும்பால் ஆனது என்பதை நான் அறிவேன். அதற்கு மதிப்பளித்து,  இதை உன்னிடமே திரும்பத் தருகிறேன். அதற்கு பிரதியுபகாரமாக எனக்கு, அமுதம் கொடு. என் தாயை விடுவிக்கவே இதைக்  கேட்கிறேன்... என்றது. மகிழ்ந்த இந்திரன், அமுதத்தை கொடுத்தான். அதை கத்ருவிடம் ஒப்படைத்தது கருடன். அப்போது, குதிரையின்  வாலில் சுற்றியிருந்த கருப்பு பாம்புகள், அமுதத்தை குடிக்கும் ஆசையில் கீழே இறங்கின. வால் கருப்பாக மாறியதன் ரகசியம்  வெளிப்பட்டு விட்டதால் அதிர்ந்தாள் கத்ரு. இருந்தாலும், வினதை அவளை மன்னித்தாள். எதிரிக்கும் அன்பு செய்த வினதைக்கும்,  கருடனுக்கும் திருமால் காட்சி தந்து, தாயைக் காத்த தனயனை, தன் வாகனமாக ஏற்றார். கருடன் பிறந்த நாளை, ஆடி மாதம் பஞ்சமி  திதியில் ஒரு சாரார் கருட பஞ்சமியாகவும், ஆடி சுவாதி நட்சத்திரத்தை ஒரு சாரார் பட்சிராஜர் திருநட்சத்திரமாகவும் அதாவது, கருட  ஜெயந்தியாகவும் கொண்டாடுவர்.
பன்னெடுங்காலமாகவே கருட உபாஸனை பாரத பூமி எங்கும் சிறந்து விளங்கி வந்திருப்பதைப் பண்டைய நூல்களும் சரித்திரச்  சான்றுகளும் மெய்ப்பிக்கின்றன. கருட பகவானின் பெருமைகளாகவும் அடியார்களுக்கு இரங்கும் அருள் உள்ளத்தையும் கருட புராணம்  விரிவாகக் கூறுகிறது. கருட உபாசனை புரிவதில் பல சிறப்புகள் உண்டு. விஷ்ணு அம்சமான கருடனை வழிபடுவதன் மூலம்  திருமாலின் அருள் கிடைக்கிறது. கருடன் திருமாலின் மெய்த் தொண்டர் என்று கூறப்படுபவர். விஷ்ணு பக்தர்கள் கருடோபாஸனையின்  மூலம் தாம் திருமாலின் தொண்டருக்கும் தொண்டர் என்பதை நிரூபிக்கின்றனர். வைணவக் கோயில் பலவற்றில் கருடனுக்குத் தனி  சன்னதிகள் உள்ளன. பூரி ஸ்ரீ ஜகந்நாதர் ஆலயத்தில் தூண் ஒன்றில் உள்ள கருட மூர்த்தம் பிரசித்தி பெற்றது.  அக்கருட மூர்த்தியை  வழிபட்டு விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கி நலம் பெறுகின்றனர். தென்னகத்திலும் பல தலங்கள் கருடனின்  பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றன. தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள திருவகீந்திபுரம் கருட க்ஷேத்திரம் எனப்படுகிறது.  இங்குதான் பகவானின் தாகம் தீர்த்த கருட நதி என்ற பெயர் கொண்ட கெடில நதியை உண்டாக்கினார் என்று கூறப்படுகிறது.   கருடோபாஸனையின் மூலம் ஸ்ரீவேதாந்த தேசிகர் கவித்துவம் பெற்றதாகவும் கூறுவர்.
கருட பகவானுக்கு இரண்டு கரங்கள். இரண்டு கால்களும் உண்டு. அருள் ததும்பும் திருமுகம் கவலைக் குறியே இல்லாதவர். தனது  இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர். சிறகுகளை விட உடல் பருத்திருக்கும். குண்டலங்களைக்  காதுகளில் அணிந்தவர். வளைந்த புருவங்கள். உருண்டை கன்னங்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். கருடனின் நித்திய  வாசஸ்தலம் திருப்பாற்கடலாகும். அவர்க்குரிய மண்டலத்திலும் ஞானிகளின் உள்ளங்களிலும் இருப்பவர். பாமர மக்களைக் காப்பதில்  திருமால் போன்றவர். நாள்தோறும் கருட தரிசனம் ஒவ்வொரு வகையில் பலன் தருமானாலும் வியாழன் மாலையிலும் சனி  காலையிலும் கருட தரிசனம் மிகவும் சிறப்பானது என்று வசந்தராஜ சகுன விஸ்தரம் என்ற நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கருட  தரிசனத்தை விடக் கருடத்வனி மிகவும் மங்கலகரம். காருடம் தர்சனம் புண்யம் ததோபித்வனி ருச்யதே என்பது பெரியோர் வாக்கு.  பதினாறு வகையான மங்கள வாத்தியங்களின் பலன் கருடத்வனியில் உள்ளது சில்பா மிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும்  கும்பாபிஷேக சமயத்தில் விமான கலசாபிஷேகத்தின் போது இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது எனவும். கருட  தரிசனமும் கருடத்வனியுமே கங்காபிஷேகத்திற்கு முகூர்த்தமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது என்பார்கள். கருடத்வனி கேட்கும்போது  மங்களானி பவந்து என்று சொல்வதும், கருட தரிசனத்தின்போது குங்குமாங் கித வர்ணாய குந்தேந்துதவளா யச விஷ்ணு வாஹ  நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம என்ற சுலோகத்தைச் சொல்வதும் வழக்கம்.
ஆயிரக்கணக்கான மந்திரங்களில் கருட மந்திரமான கருட பஞ்சாக்ஷரிக்குத் தனிச் சிறப்பு உண்டு. இது இம்மை மறுமைப் பலன்களை  விரைவில் தரவல்லது. கருட பஞ்சமி  நாளன்று கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லி கருட பகவானை வழிபடலாம்.
கருட காயத்ரி
1. தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
கருட தண்டகம்:
எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பட்சி ராஜனாகிய கருடனைப் பற்றி வேதாந்த தேசிகர் அருளியது இந்த ஸ்தோத்திரம்.
கருட பகவானே! வேதம் படித்த பெரியோர்கள் உம்மை இடைவிடாமல் துதிக்கின்றனர். உம்முடைய சிறகுகளில் இருந்து மிகவும் வலிமையாக காற்று வீசுகிறது. அந்தக் காற்றினால் கடல்கள் கரையை மீறிப் பொங்குகின்றன. அப்போது எழும்பும் அலைகள் பாதாள லோகம் வரையில் பாய்கின்றன. அந்தப் பாய்ச்சல் காற்றோடு கலந்த மிகவும் விசையோடு பாம் என்ற பேரொலியை எழுப்புகின்றன. அந்த சத்தத்தைக் கேட்டதும் பூமியைத் தாங்கும்  திக்கஜங்கள் தங்களுடன் யாரோ போருக்கு வருவதாக நினைத்து கோபத்தோடு எதிர்த்து வருகின்றன. அந்த நேரத்தில் உம்முடைய நாகங்கள் என்ற ஆயுதத்தைக் கொண்டு திக்கஜங்களை அடக்கி விடுகிறீர்.
கருட பகவானே உம்முடைய கூர்மையான வளைந்த அலகு எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. நீர் உமது புருவங்களை நெறிக்கும்போது பாம்பு நெளிவதைப் போல அச்சமேற்படுகிறது. உம்முடைய கோரைப்பற்களைக் காணும் எதிர்கள் இவை தேவேந்திரனின் வஜ்ராயுதமோ என்று கதி கலங்கிப் பின் வாங்குகிறார்கள். இத்தகைய பெருமைகள் கொண்ட உம்மை அடியேன் போற்றுகிறேன். வேதாந்த வித்தைகள் அடியேனுக்கு வசமாகும்படியாக அருள் செய்ய வேண்டும். மேலும் எப்போதும் உமக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் தவறாமல் அடியேனுக்கு தந்தருள வேண்டும் என்கிறார் தேசிகர். 
இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஐந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர்.
கருடாழ்வாரை வணங்குவோம்!
இவரை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது. எம்பெருமான் பள்ளி கொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் சிந்தித்து நல்ல வாழ்வு பெறுவோம்.

Thursday, July 20, 2023

திருப்பதி பெருமாளுக்குகறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்?

திருப்பதி பெருமாளுக்கு
கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்?
திருமலை திருப்பதியில் உறையும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் என்றாலே நம் நினைவுக்கு வருவது, அவருடைய அலங்காரத் திருக்கோலம்தான்.

திருமால் அலங்காரப் பிரியன்தான் என்றாலும், உலகின் பணக்காரக் கோயிலான திருமலையில் அருளாட்சி செலுத்தும் திருமகள் நாயகனாம் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குச் செய்யப்படும் அலங்காரம் உலகப்புகழ் பெற்றது.

ஆபரணங்களைப் பொறுத்தவரை ஸ்ரீநிவாசப் பெருமாளுக்குத் தினமும் 65 முதல் 70 கிலோ வரையிலான தங்க ஆபரணங்கள் சூட்டப்படுகின்றன.

மலர்களும் வாசனைத் திரவியங்களும் மட்டுமே பல லட்சம் ரூபாய் ஆகிறது. ஸ்பெயின் நாட்டின் குங்குமப்பூ, சீனத்துப் புனுகு, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, மைசூரின் சந்தனம், தமிழகத்துப் பச்சைக் கற்பூரம் என வாசனைத் திரவியங்கள் உலகெங்குமிருந்து வருகின்றன.

ஐரோப்பாவின்
ரோஜாக்களும், ஆஸ்திரேலியாவின் துலிப் மலர்களும் அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

 இப்படி உலகெங்கும் பூக்கும் மலர்களும், வாசனாதித் திரவியங்களும் ஸ்ரீநிவாஸனின் திருவடியை வந்தடைகின்றன. எல்லா மலர்களும், வாசனாதிப் பொருள்களும் எம்பெருமானை அடைந்தாலும், கறிவேப்பிலையும், கனகாம்பரமும் மட்டும் திருமலை ஸ்ரீநிவாஸனின் பயன்பாட்டுக்கு வருவதே இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஏன் கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஶ்ரீநிவாஸப் பெருமாளின் பயன்பாட்டுக்கு வருவதில்லை? எல்லாம் திருமாலின்திருவிளையாடல்தான்

மகாமுனிவரும் கோபத்துக்கும் சாபத்துக்கும் பெயர் பெற்றவருமான துர்வாசர், ஒருமுறை வைகுண்டத்துக்குச் சென்றபோது, திருமாலின் திருமார்பில் எட்டி
உதைத்துவிட்டார்.

 திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்யும் திருமகள் கோபித்துக்கொண்டு பூவுலகுக்கு வந்துவிட்டாள். திருமகளை இழந்த திருமால் தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்.

திருமகளை மீண்டும் அடைய ஸ்ரீநிவாஸமூர்த்தியாக பூமிக்கு வந்தார். வகுளாதேவியின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் வேளையில், பத்மாவதி தேவியை ஸ்ரீநிவாஸர் சந்தித்தார். அவளையே மணந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்பினார்.

ராமாவதாரத்தில் தோன்றி சீதாதேவியின் இன்னல்களையெல்லாம் தாங்கிக்கொண்ட வேதவதியின் தியாகத்தைப் போற்றும் வகையில், கலியுகத்தில் தாம் ஶ்ரீநிவாஸனாக அவதரிக்கும்போது திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்தார் ராமபிரான்.

அந்த வேதவதிதான் ஆகாசராஜனின் மகளாக பத்மாவதி என்ற பெயரில் பிறந்திருந்தாள். தாம் முன்னர் அவளை மணந்துகொள்வதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே, ஶ்ரீநிவாஸர் பத்மாவதியை மணந்துகொள்ள விரும்பினார்.

மன்னரின் மகளை, தான் மணந்துகொள்ள வேண்டும் என்பதால், திருமணத்தை விமர்சையாகச் செய்ய விரும்பிய ஶ்ரீநிவாஸர், குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் வராகன்களைக் கடனாகப் பெற்றார். தான் பெற்ற கடனுக்குக் கலியுகம் முடியும்வரை வட்டி செலுத்துவதாகவும் வாக்களித்தார்.

குபேரனிடம் பெற்ற நிதியைக் கொண்டு, நாரதரும் வகுளாதேவியும் ஶ்ரீநிவாஸர் - பத்மாவதி திருக்கல்யாணத்தை மிகவும் விமர்சையாக நடத்தினர்.

 தேவர்களும், முனிவர்களும், சித்த புருஷர்களும் கலந்துகொண்ட திருமண விழாவில், மாப்பிளை வீட்டார் சார்பாகச் செய்யப்பட்டிருந்த அற்புதமான அலங்காரமும், அருமையான அறுசுவை விருந்தும் எல்லோரும் போற்றும்படி இருந்தன.

ஆனால், திருமணம் என்றாலே ஏதேனும் ஒரு தகராறு வரத்தானே செய்யும்? தெய்வத் திருமணம் என்றால் மட்டும் விதிவிலக்கு கிடைத்துவிடுமா என்ன? எந்தக் குறையுமில்லாமல் ஶ்ரீநிவாஸர் - பத்மாவதி திருமணம் நடைபெற்றாலும், கலகம் ஏற்படுத்தும் நாரதர் சும்மாயிருக்கவில்லை.

தன் மகனுக்கு நடத்திய திருமணத்தில் எந்தக் குறையுமே இல்லை என்ற கர்வத்தில் இருந்த வகுளாதேவியாரின் கர்வத்தைப் போக்க நினைத்த நாரதர், பத்மாவதித் தாயாரிடம் சென்று, திருமணத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரப் பூவும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

 அவ்வளவுதான், திருமணத்துக்குப் பின்னர் இது தொடர்பாகப் பெருமாளுக்கும் பத்மாவதி அன்னைக்கும் ஊடல் உண்டானது.

இந்த ஊடலே பெரிதாகி, பத்மாவதி தாயார் பிரிந்து சென்று திருச்சானூரை அடைந்து தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதனால்தான் திருமலை ஆலயத்தில் இன்றும் எந்த விதத்திலும் கனகாம்பர மலரையும், கறிவேப்பிலையையும் சேர்ப்பதில்லை என்கிறார்கள்.

ஒன்றுக்கு இரு தேவியர்களை ஸ்ரீநிவாஸ பெருமாள் கொண்டிருந்தாலும், திருமலையில் மூலவராகத் தனித்தே நின்றிருக்கிறார். இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்ற ஊடலில் திருமகள் கரவீரபுரத்திலும், பெருமாளே தன்னை வந்து பார்க்கட்டும் என்ற ஊடலில் திருச்சானூரில் பத்மாவதியும் தனித்தனியே கோயில் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாக் காரியங்களுக்கும் தகுந்த காரணங்களைக் கற்பிக்கும் கலியுக வரதன், கண்கண்ட தெய்வம், வெங்கடாசலபதியின் லீலைகள் எவரும் அறிய முடியாதவை.

அவர் தேவியர்களைவிட்டுப் பிரிந்திருப்பது நம்மைக் கண்ணும் கருத்துமாகக் காப்பதற்குத்தான் என்று புராணங்களும், ஆன்மிகப் பெரியவர்களும் சொல்லியிருப்பது உண்மைதான் என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஓம் நமோ வேங்கடேசாய!!!

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...