Wednesday, September 6, 2023

கோவிந்தா கோவிந்தா என்றால் மோட்சம் கிடைக்கும்!

கோவிந்தா கோவிந்தா என்றால் மோட்சம் கிடைக்கும்!
*ஓம் நமோ நாராயணா.... நீயே கதி உன் திருவடிகளே சரணம் ஐயா....*
*கோவிந்தா ஹரி கோவிந்தா.... கோகுல நந்த கோவிந்தா..
கோவிந்தா கோவிந்தா என்றால் கொடுத்தது திரும்பவராது என்னும் தவறான கருத்தை கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.

கடவுளின் திருநாமத்தில் ஏமாற்றம் எப்படி அடையமுடியும். கடவுளின் திருநாமத்தை தவறான செயலுக்கு அர்த்தம் வருமாறு சொல்லலாமா? கோவிந்தா என்னும் திருநாமத்தைப் பற்றி சொல் வதற்கும் கேட்பதற்கும் கால அவகாசம் போதுமா என்ன? அவ்வளவு சிறப்புக்கள் பெற்றது கோவிந்தா கோவிந்தா என்னும் திருநாமம்.

காக்கும் கடவுளான ஸ்ரீ வேங்கடமுடையானை பக்தர்கள் கோவிந்தா என்று அழைத்தால் ஓடோடி வந்து அருள் புரிந்துவிடுவார். கோ என்றால் உலகம். விந்தன் என்றால் காப்பாற்றுபவன் என்று பொருள். ஆக கோவிந்தன் என்றால் உலகையெல்லாம் உலகில் உள்ள ஜீவராசிகளையெல்லாம் காக்கும் கடவுள் என்று பொருள்.

பெருமாளுக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமத்தில் ஆயிரம் நாமங்கள் உண்டு. அவற்றிலும் சிறப்புமிக்க நாமங்கள் பன்னிரண்டு. அவற்றிலும் சிறப்பு மிக்க நாமம் கோவிந்தா என்னும் நாமம். ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் கோவிந்த நாமத்தைதான் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.

கோவிந்தா என்றால் போனால் திரும்ப வராது என்னும் அர்த்தத்தையும் கொண் டது. அதாவது பூவுலகில் மனிதப்பிறவியாய் அவதரித்து அவதிப்படுபவன் இத் திருநாமத்தை விடாது பற்றிக்கொண்டால் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்க மாட்டான் என்பதையே குறிக்கும். கோவிந்த நாமம் சொல்ல சொல்ல போன உயிர் மீண்டும் திரும்பாது என்பதே இதன் பொருள். அதாவது மறுபிறவி யில்லாத நிலை என்று சொல்லலாம்.

கோ என்றால் பசு என்பதை குறிக்கும். இது அனைவருக்கும் தெரிந்ததே. விந்தன் என்றால் காப்பவன். ஆக பசுக்களின் தலைவன் என்று பொருள்படும். தானத்தில் சிறந்த பசுதானம் செய்த புண்ணியத்தைத் தருவது கோவிந்தா என்று சொல்லக் கூடிய திருநாமம்.

பக்தர்கள் அபயம் வேண்டி மனம் முழுக்க வேங்கடவனை நினைத்து கோவிந்தா என்று முழங்கினால் செய்யும் பணிகளை விடுத்து தேடிவருவான் கோவிந்தப் பெருமாள். மகாபாரதத்தில் திரெளபதியின் சேலையை துரியோத னன் துகிலுரிந்த போது அதைப் பார்த்து பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார், விதுரர், பாண்டவர்கள் தலைகுனிந்தார்கள். ஒன்றும் செய்ய இயலாமல் அமைதியாக இருந்தார்கள். செய்வதறியாமல் திகைத்தார்கள். ஆனால் திரெளபதி கோவிந்தனை மட்டுமே நம்பினாள். கோவிந்தனின் திருநாமத்தை உச்சரித்தாள். இருகைகளையும் மேலே எழுப்பி கோவிந்தா கோவிந்தா என்னை காப்பாற்று என்றாள். கோவிந்தனின் திருநாமத்தால் அவளது ஆடையின் அளவும் நீண்டுக் கொண்டே சென்றது. அவ்வளவு சக்தியைக் கொண்டது கோவிந்தனின் திருநாமம். 🌿♥️
வைணவத்தலங்கள் எங்கு சென்றாலும் அங்கு கோவிந்தா என்ற குரல் உரக்க முழக்கமிடுவதை கேட்கிறோம். கோவிந்தா கோவிந்தா என்னும் முழக்கம் திருமலையில் ஸ்ரீ வேங்கடமுடையானின் தலத்தில் மட்டுமல்லாமல் திருமலை முழுக்க எதிரொலிக்கிறது. கேட்கும் நமக்கு அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் தரும் திருநாமமாய் ஜொலிக்கிறது.
ஒருவர் இவ்வுலக வாழ்வை விட்டு செல்லும் இறுதி நேரத்தில் சுற்றி இருப்ப வர்கள் கோவிந்தா கோவிந்தா என்று சொல்வார்கள். இப்படி சொல்வது அவருக்கு நாம் செய்யும் ஆத்மார்த்தமான ஆன்மிக உதவி. இறந்தவர்களுக்கு மோட்சத்தை தருவது கோவிந்தப்பெருமாள் மட்டுமே தரமுடியும்.
*ஓம் நமோ நாராயணா.... நீயே கதி உன் திருவடிகளே சரணம் ஐயா....*
*கோவிந்தா ஹரி கோவிந்தா.... கோகுல நந்த கோவிந்தா...வைணவத்தலங்கள் எங்கு சென்றாலும் அங்கு கோவிந்தா என்ற குரல் உரக்க முழக்கமிடுவதை கேட்கிறோம். கோவிந்தா கோவிந்தா என்னும் முழக்கம் திருமலையில் ஸ்ரீ வேங்கடமுடையானின் தலத்தில் மட்டுமல்லாமல் திருமலை முழுக்க எதிரொலிக்கிறது. கேட்கும் நமக்கு அளவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் தரும் திருநாமமாய் ஜொலிக்கிறது.
ஒருவர் இவ்வுலக வாழ்வை விட்டு செல்லும் இறுதி நேரத்தில் சுற்றி இருப்ப வர்கள் கோவிந்தா கோவிந்தா என்று சொல்வார்கள். இப்படி சொல்வது அவருக்கு நாம் செய்யும் ஆத்மார்த்தமான ஆன்மிக உதவி. இறந்தவர்களுக்கு மோட்சத்தை தருவது கோவிந்தப்பெருமாள் மட்டுமே தரமுடியும்.
ஓம் நமோ நாராயணா.... நீயே கதி உன் திருவடிகளே சரணம் ஐயா....
கோவிந்தா ஹரி கோவிந்தா.... கோகுல நந்த கோவிந்தா... 🌿🕉️🚩

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...