Showing posts with label pas#upathieswerar #pasupathi kovil #Thanjavur #tamilnadu #hindu india. Show all posts
Showing posts with label pas#upathieswerar #pasupathi kovil #Thanjavur #tamilnadu #hindu india. Show all posts

Sunday, June 9, 2024

பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதி கோயில், தஞ்சை மாவட்டம்.

அருள்மிகு ஆலந்துறையார் திருக்கோயில், புள்ளமங்கை, தஞ்சை மாவட்டம்.
திருப்புள்ளமங்கை தற்போது பசுபதிகோவில் என்று வழங்குகிறது.
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதி கோயில், தஞ்சை மாவட்டம்.
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், பசுபதி கோயில், தஞ்சை மாவட்டம்.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மூலவர்   –   ஆலந்துறை நாதர், பசுபதி நாதர், பிரம்புரீசுவரர்

அம்மன்   –   அல்லியங்கோதை, சௌந்தரநாயகி

தீர்த்தம்   –   காவிரி, சிவதீர்த்தங்கள்

புராணப் பெயர்   –   புள்ள மங்கை

ஊர்   –   பசுபதி கோயில்

மாவட்டம்   –   தஞ்சாவூர்

மாநிலம்   –   தமிழ்நாடு

குடமுருட்டி ஆற்றின் கரையில் இந்த ஆலயம் உள்ளது. ஊர்ப்பெயர் பண்டைநாளில் புள்ள மங்கை என்றும், கோயிற் பெயர் ஆலந்துறை என்றும் வழங்கப்பெற்றது. ஆல மரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய நீர்த்துறைத் தலம் ஆதலின் ஆலந்துறை என்று பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. சம்பந்தர் தன் பதிகத்தின் எல்லா பாடலிலும் புள்ளமங்கை என்ற பெயரையும், ஆலந்துறையில் உறையும் இறைவன் என்றும் குறிப்பிடுகிறார். கல்வெட்டுக்களில் “ஆலந்துறை மகாதேவர் கோயில்” என்று இக்கோயில் குறிக்கப்படுகின்றது. இன்றைய நாளில் ஊர்ப் பெயர் மாறி பசுபதி கோயில் என்று வழங்கப்படுகிறது.

இத்தலத்திற்கு அருகிலுள்ள பாடல் பெற்ற தலமான திருச்சக்கரப்பள்ளியை முதலாவதாகக் கொண்ட ஏழு தலங்களுள் இது 5வது தலம். சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை (இத்தலம்), தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்கள் ஆகும். இவற்றுள் பசுபதீச்சரத்து இறைவனை சப்த கன்னியர்கள் மட்டுமன்றி, கேட்ட வரமருளும் தேவலோகப் பசுவான காமதேனு நாள் தோறும் சிவனை தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இத்தலத்திற்குண்டு. ஆகையால் இத்தல இறைவன் பசுபதீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். பாற்கடலை அசுரர்களும், தேவர்களும் கடைந்தபோது முதன் முதலில் வெளிவந்த ஆலகால நஞ்சினை எடுத்துச் சிவபெருமான் உண்டு தன் கழுத்தில் அடக்கிய ஊர் இத்தலம் என்பதால் இதலத்திற்கு ஆலந்துறை என்ற பெயரும், இறைவன் ஆலந்துறைநாதர் என்றும் கூட அழைக்கப்படுகிறார்.

சோழர் காலச் சிற்பச் சிறப்புக்களுடைய இக்கோவிலுள்ள சிற்பங்கள் யாவும் பார்த்து அனுபவிக்க வேண்டியவையாகும். அர்த்த மண்டபத் தூண்களில் அநேக சிற்பங்களைக் காணலாம்.

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் – தஞ்சாவூர் ரயில்பாதையில் உள்ள பசுபதி கோயில் ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 3 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. ஐயம்பேட்டைக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...