Showing posts with label # chithirai Pournami #sivan #hindu #india #tamilnadu. Show all posts
Showing posts with label # chithirai Pournami #sivan #hindu #india #tamilnadu. Show all posts

Sunday, April 30, 2023

சித்திரையில் வரும் பௌர்ணமியை சிறப்பாக கொண்டாட வேண்டும்

மாதங்களில் முதல் மாதமாக வருவது சித்திரை.நமது வாழ்க்கையை நித்திரையிலேயே

கழிக்காமல் முத்திரை பதித்த வாழ வேண்டுமானால் சித்திரையில் வரும் பௌர்ணமியை சிறப்பாக கொண்டாட வேண்டும். அது மட்டுமல்ல நாம் செய்யும் பாவ புண்ணியங்களை பதிந்து வைக்கும் சித்திரகுப்தனையும் சிந்தையில் நினைத்து வழிபட்டால் அத்தனை காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். திதி பார்த்து வழிபட்டால் விதிமாறும் என்று சொல்வார்கள் நமக்கு விதிக்கப்பட்ட விதியை மாற்ற முடியாவிட்டாலும் விதியின் வலிமையை கொஞ்சம் குறைக்க வழிகாட்டுவது திதியின் அடிப்படையில் நாம் செய்கின்ற வழிபாடுகள் தான்.

சதுர்த்தி திதியில் ஆனைமுகப்பெருமானை வழிபட்டால் சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். சஷ்டி திதியில் முருகப்பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் விலகும். ஏகாதசி திதியில் பெருமாளை வழிபட்டால் பெருமைகள் வந்து சேரும். அஷ்டமி திதியில் கிருஷ்ணரை வழிபட்டால் கீர்த்திகள் உண்டாகும். நவமி திதியில் ராமபிரானை வழிபட்டால் நல்ல இல்லறம் அமையும் .அமாவாசை திதியில் முன்னோர்களை வழிபட்டால் முன்னேற்றம் கூடும். பௌர்ணமி திதியில் மலைவலம் வந்து சிவன் உமையவள் மால்மருகன் ஆகியோரை வழிபட்டால் மலைக்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும்.

மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியை மட்டும் சித்ரா பௌர்ணமி என்று சிறப்பு பெயரிட்டு நாம் அழைப்பது வழக்கம். அந்த நாள் சித்திரை 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை வருகிறது .அன்றைய தினம் நாம் மலை அளவு செய்த பாவத்தை கடுகளவு குறைத்து எழுது என்றும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாக உயர்த்தி எழுது என்றும் சித்தரகுப்தனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். அதோடு சித்திரகுப்தனுக்கு பொங்கல் படைத்து இனிமேல் நான் செய்யும் செயல்கள் அனைத்தும் புண்ணியம் தருவதாக அமைய வழிகாட்டு. வாழ்க்கை பாதையை சீராகவும் நேராகவும் ஆக்கிக் கொடு. ஆயுள் வளரவும் ஆற்றல் பெருகவும் செல்வம் பெருகவும் வழிகாட்டு என்று வேண்டிக் கொண்டால் வாழ்க்கை பயணம் சிறப்பாக அமையும்.

ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் பலம் பெறும் மாதம் என்பதால் சித்திரை மாத பௌர்ணமி *சித்ரா பௌர்ணமி* என புகழப்படுகிறது.

🌕 சித்ரா பௌர்ணமி...


🌺 சித்ரகுப்தன் !!

ஆயுள் விருத்தி தரும் சித்ரகுப்தனை மனதார வழிபடுங்கள்..!!

சூரியன் உச்சம் பெறும் மாதமாக சித்திரை மாதம் உள்ளது. அந்த மாதத்தில் வரும் பௌர்ணமியில் சந்திரன் முழு மதியாக பலம் பெறுகிறார். இப்படி ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் பலம் பெறும் மாதம் என்பதால் சித்திரை மாத பௌர்ணமி *சித்ரா பௌர்ணமி* என புகழப்படுகிறது.

சித்ரகுப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்ரகுப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது மக்களின் நம்பிக்கை.

சித்ரகுப்தரின் பிறப்பு :

பார்வதி அம்பாள் சித்ரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்ரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்ரகுப்தா என பெயர் பெற்றார் என்று சிலர் கூறுகின்றனர்.

காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும், அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைவேத்தியம் செய்யக்கூடாது. எருமைப்பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர்.

சித்ரகுப்தன் கதைச் சுருக்கம் :

தனியொரு நபராக கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருப்பதாக ஈசனிடம் எமதர்மன் வேண்டிக்கொண்டார். அதன் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது உமது பொறுப்பு என்றார்.

இதனை எமனின் தந்தையான சூரியபகவானுக்கு தெரிவித்தார் பிரம்மதேவர். அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிரில் பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீனாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார். அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்ர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார்.

சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும், எல்லா சித்திகளும் கிடைத்தன. ஆகவே தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். பிரம்மா உட்பட அனைவரும் அதிர்ந்தனர். இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு, பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல் நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத்தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார்.

தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

சித்ரகுப்தருக்கான கோயில்கள் :

தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சித்ரகுப்தர், எமன், பிரம்மா உடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்ர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கைகள் :

உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துக் கணக்குகளையும் எழுதிப் பராமரித்து வருபவர் சித்ர புத்திர நாயனார்தான் என்பது நம்பிக்கை. மேலும் ஒருவருடைய இறப்புக்குப் பின் இவருடைய கணக்கைப் பார்த்துத்தான் சொர்க்கம் அல்லது நரகம் போன்றவற்றில் இடமளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகள் சித்ரகுப்தனால் எழுதப்படுகிறது. எனவே, சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

கதை சொல்வதன் முக்கிய நோக்கம் :

மக்கள் பாவச்செயல் செய்யும் எண்ணத்தை விட்டு, புண்ணியச்செயலில் ஈடுபட வேண்டும் என்ற நல்ல எண்ணம் மேலோங்கவே. எனவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து நற்பலன்களை பெறுவோமாக.

Friday, April 7, 2023

சித்திரகுப்தர் வழிபாடு சித்திரா பௌர்ணமி அன்று வெள்ளிக்கிழமை வருகின்றது (05, 05, 2023)

_சித்திரகுப்தன் வழிபாடு.. சித்திரா பௌர்ணமி_


சித்திரகுப்தர் வழிபாடு சித்திரா பௌர்ணமி அன்று வெள்ளிக்கிழமை வருகின்றது (05, 05, 2023) 

சேவித்தேன் நான் சித்திரகுப்தா, பக்தி துதி, சேவித்தேன் நான் சித்திரகுப்தா, பக்தி துதி

*ஸ்ரீ சித்திரகுப்தர் வழிபாடு துதி..*

சித்திரகுப்தா!   சித்திரகுப்தா!
சேவித்தேன் நான் சித்திரகுப்தா,
நானே செய்த பாவங்களனைத்தும் 
நல்லவனே நீ கடுகளவாக்கு.
நானே செய்த புண்ணியமனைத்தும் 
நல்லவனே நீ மலையள வாக்கு.
வானும், நிலவும் உள்ள வரைக்கும் 
வாழ்க்கைப் பாதையை வளமாய் 
மாற்று!   உணவும், உடையும், 
உறைவிடம் அனைத்தும் தினமும் 
வழங்க திருவருள்காட்டு. 

நாம் செய்த பாவ புண்ணியங்களை பதித்து வைக்கும் சித்ரகுப்தனை கொண்டாடும் விழாவாக இந்த பக்கம் மலையளவு செய்த பாவங்களை கழுவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மறைவாக மாற்றவும் கும்பிட வேண்டிய நபர் இந்த சித்திர குப்தனை தான் இந்த சித்திர குப்தனை வழிபட்டு அளவைக் குறைத்து புண்ணியக் கணக்கை அதிகமாக்க வேண்டும்.

சித்ரகுப்தனுக்கு  காஞ்சிபுரத்தில் தனிக் கோவில் ஒன்று உள்ளது, அங்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே சித்திர குப்தனை நினைத்து விரதம் இருக்கலாம்.

அன்றைய தினம் காலையில் சூரியனை பார்த்து கிழக்கு நோக்கி பொங்கல் வைத்து பொங்கல் பொங்கும் போது சித்ரகுப்தனை வழிபட வேண்டும் சித்ரகுப்தனுக்கு நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பச்சரிசி, கொழுக்கட்டை, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை வைத்து நுங்கு, மாம்பழம், இளநீர், நீர்மோர் போன்றவற்றை வைத்து படைக்க வேண்டும்.

பச்சரிசி சாதத்திற்கு தட்டைப்பயிர் மாங்காய் குழம்பு வைக்க வேண்டும். பருப்பு நெய்யும் வைத்து சித்ரகுப்தரை வழிபட வேண்டும். 

அப்படி வழிபடும் பொழுது *“சித்திரகுப்தா சித்திரகுப்தா சிரித்தேன் சித்திரகுப்தா நானே செய்த பாவம் அனைத்தும் நல்லவனே நீ கலக்கு நான் செய்த புண்ணியம் அனைத்தும் நல்லவனே நீ மறவாதே வானும் நிலவும் உள்ளவரைக்கும் வாழ்க்கை பாதையை மாற்று உணவும் உடையும் உறைவிடமும் அனைத்தும் தினமும் பழங்கள் கூட்டு”* என்று பாடி சித்ரகுப்தரை வழிபட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 16 பௌர்ணமிகள் நாம் வழிபட்டு வந்தால் 16 பேரும் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம் சித்ரகுப்தனுக்கு உகந்த சித்ரா பௌர்ணமி நாட்களில் நாம் இவ்விரதத்தை மேற்கொண்டு தொடர்ந்து நாம் செய்து வந்தோமானால், சித்ரகுப்தனின் அருள் நமக்கு கிடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை வரக்கூடிய சித்ரா பௌர்ணமி சித்திர குப்தரை நாம் வழிபட்டு நம் பாவம் அனைத்தையும் போக்கி புனிதர்களாக மாறுவோம்.

 
சகல தோஷ தடைகள் நீங்க சித்ரா பவுர்ணமி நாளில் சிறப்பும் மற்றும் எதற்காக இந்நாளில் சித்ரகுப்தனை வழிபட வேண்டும் மேலும் யார் இந்த சித்ரகுப்தர் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற பல அரிய தகவல்களை விரிவாக காண்போம்.

சித்திரை மாதம் வரும் பௌர்ணமி திதியே சித்ரா பவுர்ணமி நாளாக போற்றப்படுகின்றது சித்திரை மாதம் முழுவதும் சூரியன் மேஷத்தில் இருப்பார் மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெறுவதால் சூரியனுக்கு இம்மாதத்தில் பலம் அதிகம் பௌர்ணமி நாளில் சந்திரனும் பலம் பெறுவதால் இந்த சக்தி வாய்ந்த சிறப்புமிக்க நாளாக கருதப் படுகின்றது. இந்த சித்ராபவுர்ணமி நாளில் பெண்கள் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு நடத்துவதை நாம் அனைவரும் அறிவோம் ஆனால் சித்ரா பவுர்ணமி நாளுக்கு வேறு ஒரு சிறப்பு உள்ளது இந்த நாளில்தான் தர்ம ராஜாவின் உதவியாளர்

 சித்திரகுப்தன் அவதரித்த ஒவ்வொரு ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை பராமரிக்கும் பணிகளை சித்திர குப்தரை செய்கின்றார் அவரை பொதுவாக நாம் வழிபட மாட்டோம் ஆனால் சித்ரா பவுர்ணமி அன்று இவரை வழிபட்டால் நம் வாழ்வில் சில விசேஷ பலன்களை நாம் அடையமுடியும் சித்ரா குப்தர் பார்வதி அம்மாளுக்கு மகனாக ஒரு சித்தர் வடிவமாக பிறந்தார் பின்னர் அவர் கோமாதா காமதேனுவின் கருதி அவதரித்து சித்ரா பவுர்ணமியன்று பிறந்ததுதான் சித்திரகுப்தன் ஆக அழைக்கப்பட்டால்

 சித்திரகுப்தர் கேது பகவானுக்கு அதிதேவதையாக விளங்குகிறார் எனவே இவரை சித்ரா பவுர்ணமியன்று வழிபட்டால் கேதுவால் ஏற்படும் நாக தோஷம் மற்றும் திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கும் சித்திரகுப்தருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனி ஆலயம் உள்ளது.

     இந்த ஆலயத்திற்கு கேதுதிசை நடப்பவர்களும் அல்லது ஜாதகத்தில் கேது தோஷம் பெற்றவர்கள் வந்து வழிபட்டுச் சென்றால் அவர்களுக்கு தோஷ நிவர்த்தி ஆகிறது குறிப்பாக சித்ரா பவுர்ணமி நாளன்று இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன இந்த விசேஷ மிக்க சித்திரகுப்தர் ஆலயம் எங்கு உள்ளது என்று எப்படி சித்ரகுப்தரை வழிபட வேண்டும் 

என்பதை விரிவாக காண்போம் சித்திரகுப்தர் கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்தக் கோவில் அனைவரும் அறிந்த பிரசித்திபெற்ற காஞ்சி காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பொதுவாக கேது திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திர நாளன்று இங்கு வந்து சித்திரகுப்தர் வழிபட்டு செல்வது வழக்கம் இங்கு வந்து சித்ரகுப்தனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு உண்டு. 

அதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் எனது இந்நாளை தவறவிடாதீர்கள், முன்னதாகத் திட்டமிட்டு இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்லுங்கள் கோவிலுக்கு வர இயலாதவர்கள் கவலைப்பட வேண்டாம் அவர்கள் இல்லத்தில் சித்திரகுப்தர் என நினைத்து வழிபடலாம் சித்ரகுப்தர் கோமாதாவின் கருவில் அவதரித்ததால் அந்நாளில் பால் சம்பந்தப்பட்ட உணவு பொருட்களை தவிர்த்து விரதம் இருங்கள் பூஜை அறையில் பழங்களை படைத்து சித்ரகுப்தரை வணங்கினால் உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷங்களிலிருந்து நீங்கள்

 விடுபடலாம் மேலும் இந்நாளில் சித்ரகுப்தனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் கிடைக்கப் பெறுவீர்கள்.

Followers

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் என்றால் என்ன❓

பிள்ளையார் விரும்பும் 'மோதகம்' நைவேத்தியம் மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக்...